வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கலியின் வல்லமை

கலியின் வல்லமை

    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும்.
    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

    9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும்.
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.
     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
   [பாகவத புராணம் 12.3.32]

மரணத்திற்கு பின்

இறப்பிற்குப் பின்

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக
இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள்.

யார் அந்த முன்று நபர்கள்?

அவர்கள் மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள்

யார் இந்தக் கிங்கரர்கள்?
இவர்கள் எப்படி இருப்பார்கள்
இவர்களின் வேலை என்ன

கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும்
பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.

அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச்செய்வதே அவர்களின் பணி
ஆகும்.

இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது.

 உயிர்கள் புரிந்த
நன்மை தீமைகளை விசாரிப்பதும்
அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் என்றும் கூறுகின்றன

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன
நிகழ்கிறது என்பதை
கருடபுராணம் விவரிப்பதைப் பார்ப்போம்.

செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த
இடத்திலேயே விட்டு வரும் படியும்
மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.

உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80,000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.

இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.

காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால்
மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.
செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள்.

 அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள்
பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள்.

அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.

தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.
அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும்.
உடல் மீது விழுந்து அழுத்துவார்கள்.

இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள்.

உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல்
வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து
பதைபதைத்து துடிக்குமாம்

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த
உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.

உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.

வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற வடிவில் இருப்பதாக கூறுகிறது.

முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும்

சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள்
புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.

சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரியும்

மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது.

முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்
எப்படி வந்தமைகிறது என்பதை
கருட புராணம் அழகாகக் கூறுகிறது.

இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.

இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்

மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்

நான்காம் நாளில் வயிறும்

ஐந்தாம் நாளில் உந்தியும்

ஆறாம் நாளில் பிருஷ்டமும்

ஏழாம் நாளில் குய்யமும்

எட்டாம் நாளில் தொடைகளும்

ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி

பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.

பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட
எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.

மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.

கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும்

 பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்
பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.

அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.

அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல்
ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்
செல்லப்படுமாம்.

அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.

மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்
ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம்.

அந்த
நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.

இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம்.

பாவத்தின் தண்டனையும் பாசத்தின்
சோதனையும ஆவியைச்சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக்
கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.

இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில
கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.

அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும்.

அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.

ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற
நதிக்கரையை அடைவார்கள்.

சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது.

அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.

புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள்.

இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.

பக்குவப்பதம் என்ற இடத்தில்
எட்டாம் மாதம் பிண்டத்தையும்
துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும்
நாதாக்தாதம் என்ற இடத்தில்
பத்தாவது பிண்டத்தையும்
அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும்,
சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.

மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும்.

எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப்பார்ப்பார்கள்.

 அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.

இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம்.

தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான்.

நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட
இதே வழியில்தான்
அழைத்து செல்லப்படுவார்களா?
இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.

நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.

இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.

நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்
பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் முக்த ஆத்மாக்களுக்கு இந்த
கஷ்டங்கள் ஏதும் கிடையாது.

ஸ்ரீமன் நாராயணனின் சரணங்களில்
சரணாகதி அடைந்தவர்களுக்கு
வைகுண்டபதவியை கொடுக்கிறார்

நம் உயிர் பிரிந்தவுடன் விஷ்ணு தூதுவர்கள்
வருவார்கள் மிகுந்த தேஜஷ்வுடனும் மிக அழகானவர்களாகவும் இருப்பார்கள்
அவர்கள் அந்த ஆத்மாவை வைகுண்டம்
அழைத்து செல்வார்கள்.

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சம்சாரகடலில் உளன்று கொண்டு இருப்பதிலிருந்து முக்தி கொடுக்கிறார்
பகவான்.

உய்வதற்கு பகவானின் ஆயிரம் நாமங்கள்
இருக்கின்றன

ஆனால் நாமங்கள் சொல்ல நாம்தான் மறுக்கின்றோம்.

இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல

ஜெய் ஸ்ரீமன் நாராயணா இராம் க்ருஷ்ண ஹரி

அஷ்டபதியின் விளக்கம்

அஷ்டபதியின் விளக்கம் 

அஷ்டபதி ஒன்று

நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.
 

அஷ்டபதி இரண்டு 

இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது. 

அஷ்டபதி மூன்று

ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது.
 

அஷ்டபதி நான்கு

கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.
 

அஷ்டபதி ஐந்து

ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும்
 

அஷ்டபதி ஆறு

ராதா அவனுடன் இருந்த  அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.
 

அஷ்டபதி ஏழு

கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி.
 

அஷ்டபதி எட்டு

கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்
 

அஷ்டபதி ஒன்பது

சகி கிருஷ்ணனிடம் ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள்
 

அஷ்டபதி பத்து

ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான்
 

அஷ்டபதி பதினொன்று

சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்
 

அஷ்டபதி பன்னிரெண்டு

சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.
 

அஷ்டபதி பதிமூன்று

ராதை ,  சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்
 

அஷ்டபதி பதினான்கு

சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் மறந்துவிடடான் என எண்ணுகிறாள்
 

அஷ்டபதி பதினைந்து

ராதை கண்ணன் வேறு கோயியையுடன்   இருப்பதால்தான் வரவில்லை என்று எண்ணி துயரமடைகிறாள்
 

அஷ்டபதி பதினாறு

யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவர்கள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த வேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்
 

அஷ்டபதி பதினேழு

ராதை கண்ணனை   நினைத்து  ஏங்குகிறாள்
 

அஷ்டபதி பதினெட்டு

சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள்
 

அஷ்டபதி பத்தொன்பது

அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வரநினைப்பது
 

அஷ்டபதி இருப்பது

 கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான்.
 

அஷ்டபதி இருபத்தி ஒன்று

ராதை,  கண்ணன் இருக்கும் இடம் நோக்கி செல்ல நினைக்கிறாள்
 

அஷ்டபதி இருபத்தி இரண்டு

ராதை கண்ணன இருக்கும் இடம்போய் அவனைக் காண்கிறாள் (கல்யாண அஷ்டபதி)  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணையும் இடம்

#அஷ்டபதி_23

ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.

#அஷ்டபதி_24

கண்ணனுடன் இணைந்த பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

பெருமாளை போற்றும் 108 போற்றிகள்

பெருமாளை போற்றும் 108 போற்றிகள்

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழைப்பங்காளா போற்றி
ஓம் எழில்நிற வண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருடவா கனனே போற்றி
ஓம் கல்யாணமூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா-முகுந்தா போற்றி
ஓம் சர்வலோ கேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்காரமூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி ஓம் தயாநிதி -ராமா போற்றி
ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா- கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் பவளம் போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்குசக் கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் லோலா போற்றி

ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணுகோ பாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் மனநிலை தருவாய் போற்றி
ஓம் விஜயரா கவனே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்தசா ரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி

குறையொன்றுமில்லை கோவிந்தா

புராணங்களில் வலம்புரிச் சங்கு!

புராணங்களில் வலம்புரிச் சங்கு!

அமிர்தம் வேண்டி தேவ- அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக் கொண்டார் என்கின்றன புராணங்கள். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும்? எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்ச ஜன்யம் என்று பெயர். கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தரும்- அனந்த விஜயம்; அர்ஜூனன்-தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்-சுகோஷம்; சகாதேவன் - மணிபுஷ்பகம். கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.

பூஜிப்பது எப்படி?

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 வரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பவுர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொருட்களான ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.

முதலில் சந்தனத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம: ஸ்ரீ குருப்யோ நம: என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும், சங்க பூஜாம் கரிஷ்யே எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

அடுத்ததாக...

மம குபேர நிதி தர்சனார்த்தம்
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி
தந்நோ சங்க ப்ரசோயாத்
குபேர லக்ஷ்மி ரூபாய சங்காய ஸ்வாகதம்... ஸ்வாகதம்...
ஸ்வாகதம்...

என்று மூன்றுமுறை சொல்லி நீர்விட வேண்டும்.

அடுத்த நிலை, எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. அதாவது வலம்புரிச் சங்கை ஆகம முறைப்படி வர்ணித்து அதில் அமரச் செய்வதற்கு ஏதுவாக, 16 கலைகளையும் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதற்குப் பிறகு சங்கை பூஜிக்க வேண்டும்.

ஓம் அம்ருதா கலாய நம:
ஓம் சந்த்ரிகா கலாய நம:
ஓம் மானதா கலாய நம:
ஓம் காந்தி  கலாய நம:
ஓம் பூஷா  கலாய நம:
ஓம் ஜயோத்ஸ்னா  கலாய நம:
ஓம் துஷ்டி  கலாய நம:
ஓம் ஸ்ரீகலாய நம:
ஓம் புஷ்டி  கலாய நம:
ஓம் ப்ரீதி ரங்கதா  கலாய நம:
ஓம் ரதி  கலாய நம:
ஓம் பூர்ணா  கலாய நம:
ஓம் த்ருதி  கலாய நம:
ஓம் பூர்ண முகா  கலாய நம:
ஓம் சசி ஸ்ரீ  கலாய நம:
ஓம் காமதாயிரீ  கலாய நம:

அடுத்ததாக நவநிதிகளை அழைத்து அர்ச்சிக்க வேண்டும்.
ஓம் பத்ம நிதயே நம! எனத்துவங்கி சங்கம், மகரம், சுகச்சபம், முகுந்தம், குந்தாக்யம், நீலம், மகரம், வரம் என்று ஒன்பது நிதிகளையும் (முன்னும் பின்னுமாக ஓம்- நம சேர்த்து) போற்றி வழிபட்டு...

ஓம் நவநிதிதேவதாயை நம; சகலாராதனை சுவர்ச்சிதம்,
ஓம் யக்ஷேஸ்வர ரூபாய மகாசங்காய நம; சகல ஆராதனம் பூஜயேத்
என்று வணங்க வேண்டும். பிறகு குபேரனை தியானித்து, அவரது முக்கியமான 16 நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் க்லீம் குபேராய  நம:
ஓம்  க்லீம் நித்யேஸ்வராய  நம:
ஓம் க்லீம் ஸ்ரீபதயே  நம:
ஓம் க்லிம் நித்யானந்தாய  நம:
ஓம் க்லீம் பூர்ணாய நம:
ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாசாய  நம:
ஓம் க்லீம் அஸ்வாரூபாய  நம:
ஓம் க்லீம் சுகாஸ்ரயாய  நம:
ஓம் க்லீம் நரவாகனாய  நம:
ஓம் க்லீம் மிகதெஸ்வர் ரூபாய  நம:
ஓம் க்லீம் சதா புஷ்பக வாகனாய  நம:
ஓம் க்லீம் சர்வக் ஞாய  நம:
ஓம் க்லீம் சீல பூஜகாய  நம:
ஓம் க்லீம் யக்ஷாய  நம:
ஓம் க்லீம் கட்காறதாய  நம:
ஓம் க்லீம் சீல பூஜ காய  நம:
ஓம் க்லீம் ராஜயோக வராய நம:
ஓம் ஸ்ரீம் க்லீம் பாஞ்ச ஜன்ய ரூபாய  நம:

குபேர அர்ச்சனை முடிந்தபிறகு, அவல் பாயசம், கற்கண்டு பால் வைத்து, தூப-தீப நிவேதனம் செய்யவும். தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்களை எடுத்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டபடி...

ஓம் வடதிசை வல்லவா போற்றி,
ஓம் நவநிதி தேவனே போற்றி,
ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி,
ஓம் பரந்தாமன் கரமே போற்றி,
ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி,
ஓம் திருமகள் நட்பே போற்றி,
ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி,
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி,
ஓம் குபேரனின் இல்லமே போற்றி,
ஓம் தோஷங்கள் விரட்டுவோய் போற்றி,
ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி,
ஓம் ஏற்றம் தருவோய் போற்றி,
ஓம் எளிமையின் சொல்லே போற்றி,
ஓம் நாதத்தைக் கொண்டவா போற்றி,
ஓம் நலமே தருவாய் போற்றி,
என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நிறைவாக.

ஓம் விஷ்ணுப்ரியாய வித்மஹே வேத நாதாய தீமஹி தந்நோ: ஸங்க ப்ரசோதயாத்
சங்கு ரூப லக்ஷ்மி குபேர நாராயண ஸ்வாமினே நம:
கற்பூர நீராஜன தீபம் தரிசயாமி என்று ஆர்த்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொண்டு சங்கு தீர்த்தத்தை வீட்டின் எல்லா பாகங்களிலும் தெளிக்கவேண்டும்.

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.  கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும். ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

மஹா பெரியவா அனுபவங்கள்

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?
 
"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார். காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.
 
"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு! திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.
 


விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!
 
ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....
 
நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள்..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."
 
பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!
 
"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.
 
பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்.... "கர்த்தர்... ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."
 
பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.
 
நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது. சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
 
எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!
 
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் ...
H A V E    A    P L  E  A  S  A  N  T    D A Y  . . .

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் .....

Astonishing facts about Thirupathi

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

We visit Thirupathi to worship Lord Balaji. At the same time, we are unaware of certain facts and practices and secrets which are stranger than fiction. They are as follows.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும்
ரகசியங்கள் உள்ளன.

There are certain astonishing secrets in Lord Venkateswara's statue.
அவைகளில் சில......... few are

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

There are are very rare stones (rocks) within one kilo meter from the temple. They are known as "Silaa thoranam" These stones(rocks) are available  only here in the whole world. The age of these stones(rocks) is 250 crores of years . The image of Balaji is made out of these stones

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

They smear the image of deity with a "type of camphor ". It is a chemical and if a granite stone is smeared with that it will crack in due course. All the 365 days of the year the image is smeared with this chemical. But this image does not show any cracks due to this practice.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்
உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில்நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

Usually any image made of granite or metal will reveal the chisel marks of the sculptor at least at one spot. If it is metal, the places of joint, after they are heated and poured will be visible. No such marks are visible in the Deity's image. Any stone statue will be rough, but in the statue of Lord Venkateswara, even the minute artist works appears as though they are polished. Even the artist work of the sculptor on ornaments such as "chutti, ear ring, Brows, and Naagabarnam are shining like, as though new jeweleries are polished.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்
வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள
குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும்
திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

The image is always kept in 110 degree Fahrenheit. The Thirupathi hills are 3000 ft above sea level. At 4.30 A.M oblations are done with cold water, milk and scented water. After the oblation the image of Balaji sweats and the sweat is wiped with "Peethaambar" cloth. On Thursdays, before oblation, when the jewels are removed the ornaments are felt hot.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

Thirupathi temple, the prayers, Hundi collections, Pooja procedures, Historical incidents are very special and astonishing nature.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்,
தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம்,
போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி,
முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார்
செய்யப்படுகின்றன.

In the kitchen, which is very big, Pongal, curd rice, tamarind rice, chitrannam, Vadai, Murukku, Jilebi, Poli, Appam, Moukaaram, Laddu, Paayasam, Dosa, Rava kesari, Badam kesari, cahewnut kesari are prepared in huge quantity.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில்
தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக்
குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்
எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

Every day the temple purchase a new mud pot for Balaji and only curd rice is offered to the Lord. No other Neivedhyam ( food preparations) will go inside sanctum, crossing "kulasekara padi (step)" and offered to Lord. Even Gold, diamond vessels will not cross this step. A devotee is considered very fortunate if he gets this mud pot and curd rice.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

The dress of the deity consistsd of 10 1/2 yards length and 6 kgs weight and made of silk,  This cannot be purchased in the shop. Rs.12,500/- is to be paid at Thirupathi Dhewasthaanam's office. only once in a week, i.e on Friday alone they decorate the Lord as outer dress with this cloth.  The person who offered the donation for this has to wait for three years for his turn.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

The inner set of cloth set will cost Rs. 20.000/- . Fifteen sets on every Friday is offered to Lord. Those who paid for this service has to wait for ten years for his turn after paying the money.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்
வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது
Apart from the dress offered by devotees, the Government offerings are offered to Lord twice in a year.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

If you want to offer Oblations to Lord, you have to wait for three years after paying the money.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து
கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை
திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

For "Abhishekam" Saffron is ordered from Spain,"Kasthuri"(Musk) from Nepal, Civet, the perfume from China. and many other perfumes from Paris. They are liquidised in a Golden plate with Sandal and 51 braced vessel known as "Vattil" with milk is mixed and then poured on the image of the Lord. After the Musk and Civet is applied , from  4.30 A.M to 5.30 A.M the "Abhishekam" is performed. This cost is about Rs. 1.00 lac.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

The well preserved roses from Amsterdam of Europe are sent by devotees  by plane.  The cost of one such rose is about Rs.80/-

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம்,
இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

Scented articles sch as camphor, Frankincense, sandal, fragrant flowers, cloves, saffron etc., are sent to the temple from China.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை
வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

The worth of jeweleries of Lord Venkateswara is Rs. 1000 crores. There is no space  to store them or  time to decorate the deity with these jewels . They are auctioned after publishing in newspapers.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

The Lord's "Saalagrma" golden necklace weighs 12 kilos and requires three priests to carry and place it on the image. "Surya Kattari" weighs 5 kilos; the covering sheets for the feet weighs 375 kilos. The blue gem in temple is nowhere else in this world and it costs about 100 crores.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர்
போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

Emperors like Raajendra chozhan, Krishna Dhevaraayer, Achutha rayer have donated amply to this temple They also created many charitable trusts and the details of which are engraved in stones and copper plates. The queen of Chola also visited the temple and made offerings.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து
 காணிக்கைசெலுத்திஉள்ளார்.

Since the size of  the deity in the sanctum sanctorum is huge, to make it convenient to perform the oblation and decoration a smaller idol made of silver was installed on 8th June 966 A.D. Kaadavan perundhevi, the queen of Pallava king Sakthi vidangan, donated her jewels to make the idol as well created a charitable trust for the pooja. King Kuloththungan I  visited Thirumalai and made his offering to Lord.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

The paintings in the temple are 300 years old.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

On Fridays the "vilva" (Crat&ae;va religiosa ) leaves are used for "Archana"

மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

It is also used in the month of Margazhi (Dec 15th to  Jan 14).

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.

On sivarathri day a festival called "Kshethra paalikaa" is observed.  The silver idol which is meant to take to procession, is decorated with diamond  sacred ash, and taken out in procession around the temple.

தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை
பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி
ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
 
Thaalappakkam Annamayya has composed songs on Venkatachalapathi in the form of "parabrahmaa", and also in the form of Eaaswara and Shakthi and engraved the songs on copper plates.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு
வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,
மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது
பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
 
Arunagiri Naadhar who sang "Thiruppugazh" has visited Thiruppathi, He is a contemporary of Annamayya. Muthuswamy Dhikshiter, one of the Music Trinity, who practiced "Sri Vidhya" had composed hundreds of songs on many deities, and his "Seshachala Naadham" in "Varaali" raaga is on this Lord.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

 It is believed that Lord Venkateswara opens his "third eye" at the time of oblation.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

The temple tree of Lord Venkateswara is tamarind tree.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

 Any God's statue with grace and tranquility will also have at least one weapon. But, in the statue of Lord Venkateswara you will not find any weapon. He is considered "devoid of any weapon" That is why he was praised in our olden days literatures, as a "hunter with empty hand"

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை
பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்
நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கி றார்.

In the year 1781 the British Cannon army was camping in a place called "Thakkolam". One Mr. Levellian, who belonged to 33rd wing was injured very badly. He prayed to Lord for his cure and after he got well he sent his offering through a Hindu soldier.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

The britishers, Sir Thomas Manroe, Colonel Geo Strottnen are devotees of Lord Venkateswara.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

Considering the divinity of Thirumalai, No English man went to Thirupathi from 1759 to 1874. Some christian preists wanted to place a cross in the mountain, But, even British Commanders did not give permission for the same. They wanted the oblation and poojas should be performed in the temple. They believed and feared, if not, their ruling will be affected.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில்
 வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

The skirt to Alarmel mangai is made of cotton at a place called Gadwaal. The weavers of this dress are from a community called Chenchu with lot of devotion. Since this dress is in direct touch with the deity's idol, the weavers will not consume meat or alcohol and they bathe thrice a day. To perform the oblations on Friday, all scented ingredients are ground on the previous night in a special room meant for this purpose. Saffron is also added for oblations. The devotees from abroad send regularly scented materials worth of Rs.50000?- per week

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்
விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று
வந்துள்ளது.

Lord Venkateswara is treated as "Ambaal" for four days, Vishnu for two days and as Lord Siva for a day in a week, for the purpose of Pooja.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

The water from oblation of Lord,is led by pipes into the temple tank. Since it is considered holy water, the devotees are required to take bath by standing in the water. and take the water in both the hands and leave it back into the tank. This is considered as the special worship.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.
  On Fridays, in the early hours, before oblation, a special prayer will be done. At that time as per vadakalai practice , the paasuram" Venkatamena petra" and "dhaniyans"will be chanted.
சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.
During the prayer the deity will be without any flowers or cloth.
முதலில் ஒரு தீபாராதனை
 எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும்.
 First a lamp worship is done and then the same worship will be repeated as per "Thenkalai" practice.
பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
Then offerings to God and lamp worship is done and at that time the Lord will shine with exquisite beauty.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு
திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம்
தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

Emperor of Vizianagarm, Achutha Royar constructed a temple on 1543 for Padmavadhithaayar. In the year 1764, this was demolished by Muslim army led by Nizam Dhowla and the remains are still there.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள்
திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ
ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

The garlands worn by Sri Aandaal from Thiruvilliputhtur temple are brought to Thirupathi and placed on the God. Sri Aandaal worshipped Balaji with devoton as her deity.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில்
 உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

There are 1180 carvings on stone. In this 236 belong to Pallava, Chola and Pandiyas, 169 to chaalukyaas. 229 toKrishna Dhevaroyar, 251 to Achudha royar, 147 to Sadasivaroyar and 135 to Kondai veedu kings. During the period between Nandh varma Pallava of 830 A.D and 1909, there are only 50 engravings are of Telugu and Kannada language and the rest of 1130 carvings are only inTamil Manavalan




அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்

274 சிவாலயங்கள்: அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
அம்மன்/தாயார் : தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்.)
தல விருட்சம் : பனைமரம் மற்றும் பாலை, (பாலை இப்போது இல்லை )
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம், இந்திரதீர்த்தம், எமதீர்த்தம் முதலியன. (புத்தகத்தில் காவிரியாறு என உள்ளது)
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை
ஊர் : பாபநாசம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,தேவாரபதிகம்

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.-திருஞானசம்பந்தர்,

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 19வது தலம்.

திருவிழா:மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்  
      
தல சிறப்பு:இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி: அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் - 614 205. தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-94435 24410 
     
பொது தகவல்:இக்கோவிலில் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. முதற் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் ராசராசன், மூன்றாம் ராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் இவர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவர் திருப்பாலைத்துறை மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் ஒரு பெரிய நெற்களஞ்சியம் - செங்கல்லால் கட்டப்பட்டது காட்சிதருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளவுடையது.

இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கிய தென்பது நமக்குத் தெரிகின்றது. இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.
     
தலபெருமை:சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணகோலத்தில் விளங்குகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக விநாயர், ஊர்த்துவதாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சன்னதி உள்ளது.

குடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இத்தலம் பாலைத்துறை என வழங்குகிறது.  விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள்  உள்ளன.

அறுபத்துமூவர் மூலவத்திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சன்னதிகளும் உள்ளன. திருமால், பிரமன், அஷ்டதிக்குப் பாலகர் முதலியோர் வழிபட்டதலம். இத்தலத்திற்கு அருகில் பாவநாசத்தில் விளங்கும் 108 சிவலிங்கக் கோவில் கீழைராமேச்சுவரம் என வழங்கப்பெறுவது.

தல வரலாறு:தாருகா வனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த "சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது.

ராமர் சிவபிரானை வழிபட்டுத் தான் செய்த கொலைப் பாவத்தைப் போக்கிக் கொண்ட காரணத்தால் இத்தலம் பாவநாசம் எனப்பெற்றது. தனிமண்டபத்தில் ஆவுடையாரோடு சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன.

Sri Tirumeni Azhagar Temple

274 Sivalayam sri Tirumeni Azhagar temple
 
Moolavar : Tirumeni Azhagar
Amman : Vadivambigai
Thala Virutcham : Kandamaram, Thazhai
Theertham : Mayendra theertham in front of the Temple
Old year : 2000 years old
Historical Name : Mayendirapalli
City : Mahendirapalli, Koiladipalayam
District : Nagapattinam
State : Tamil Nadu
Singers : Saint Tirugnanasambandar has praised the Lord in his Thevaram hymns. The tower is clothed by the clouds, Mayendirapalli has many palaces, tanks with blossoming Lotus flowers where the Lord is on His bull vehicle. Let us all prostrate on His feet. This is the sixth temple on the northern bank of Cauvery River praised in Thevaram hymns.       
              
Festival : Maha Shivrathri in February-March, Margazhi Tiruvadhirai in December-January. Panguni Uthiram in February-March and Tirukarthikai in November-December are the festivals celebrated in the temple.       
              
Temple's Speciality : The rays of Sun fall on the Lord in the month of Panguni, March-April. Generally Lord Vishnu is called Azhagar-handsome, as He is fond of dressing. Lord Shiva in Mahendrapalli is celebrated as handsome-Azhagar.       
              
Opening Time : The temple is open from 9.00 a.m. to 12.00 a.m. and 6.00 p.m. to 7.30 p.m.      
            
Address : Sri Tirumeni Azhagar Temple, Mahendirapalli – 609 101, Nagapattinam district.Phone:+91-4364- 292 309.           
            
General Information : Sri Chandikeswara graces with his consort in the prakara. There is a separate shrine for Lord Sri Vinayaka with Ragu and Ketu on both sides. Lord Muruga graces from His shrine with His consorts Valli and Deivanai. There are shrines of Sri Kasiviswanatha – Mother Visalakshi, Meenakshi Sundareswarar, Bhairavar and Saneeswarar-Saturn, Sun and Moon. There is no shrine for Navagrahas- 9 planets in the temple.
      
Prayers : Those suffering from the evil results of past birth (poorva janma karmas), those facing adverse effects due to Sun, Moon aspects in their horoscopes have a dip in the Brahmma theertha in the temple for remedies. As the holy spring is attributed to Lord Brahmma the Creator, it is the faith of the people that Brahamma would amend the destiny of the devotee favourably. Devotees also pray for relief from snake aspects and to gain excellence in academic pursuit.
     
Greatness Of Temple : Handsome Shiva is praised as Tirumeni Azhagar and Mother as Vadivambikai for their beauty. Saint Tirugnanasambandar addresses the Lord as Azhagar. Lord Vishnu in Madurai is also called Azhagar in Tamil and Sundararajan in Sanskrit. Lord Shiva is Azhagar in this temple. Lord Brahmma, Sun and Moon had worshipped in this temple. During the month of Panguni (March-April) the rays of Sun fall on the Lord. On the side wall of Shriva Shrine, Lord Dakshinamurthy graces.
      
Temple History : For his wrong desire on Akalika wife of Maharshi Gautama, Indira was cursed by the Rishi to have eyes throughout his body. He came to Earth and prayed to Lord Shiva for relief in many places and this is one among them. As Indira – Maha Indira worshipped here the place came to be known as Mahendirapalli. A temple was erected here later.
 

Sri Hara Shaba Vimochana Perumal Temple

108 Divya Desam : sri Hara Shaba Vimochana Perumal temple
 
Moolavar    : Hara Shaba Vimochana Perumal, Kamalanathan
Urchavar  : Kamalanathan                                           Thayar : Kamalavalli Nachiar
Theertham : Kabala Moksha Pushkarini
Agamam Pooja : Vaikanasam
Old year : 2000 years old
Historical Name : Kandana Kshetra, Pancha Kamala Kshetra
City : Kandiyur
District : Thanjavur
State : Tamil Nadu
Singers : The Lord of the temple is praised by Saint Tirumangai Azhwar in his Mangalasasanam hymns      
             
Festival:Panguni Brahmmotsavam in March-April; Aipasi Pavithra Utsav in October-November; Vaikunda Ekadasi in December-January and Karthikai Deepam in November-December are the festivals celebrated in the temple      
             
Temple's Speciality:The temple ranks among the 108 Divya Desas. The noteworthy feature is that all three Lords Brahmma, Vishnu and Shiva grace the devotees together in the temple      
             
Opening Time:The temple is open from 7.00 a.m. to 12.00 a.m. and from 5.00 p.m. to 7.30 p.m     
           
Address:Sri Hara Shaba Vimochana Perumal Temple, Kandiyur-613 202. Thanjavur district.Phone:+91- 93446 08150.     
            
General Information:Lord Perumal appears in a standing posture facing east.  The Vimana above the sanctum is called Kamalakruthi Vimana.  Lord Shiva and sage Agasthya had the darshan of the Lord in this temple
            
Greatness Of Temple:As Perumal granted relief to Lord Shiva (Hara) of a curse, He is named Hara Shaba Vimochana Perumal – Hara-Shiva, Shaba-curse, Vimochana-relief.  This is one of the 108 Divya Desas of Perumal.  According to scriptures, the temple was built by Emperor Mahabali.  Lord Shiva has His temple here and is praised as Kandeeswarar.  The place has the reputation of being honoured as Mum Moorthy (three Lords) Sthala.  Since there is no temple for Brahmma, He has His place in Kandeeswarar temple gracing with Mother Maha Saraswathi.   The author of the celebrated book ‘Sri Krishna Leela Tharangini’ belongs to Tirupoonthuruthi near Kandiyur, a stauch devotee of this temple.
 
 Saint Tirumangai Azhwar compares the glory of the Lord of this temple in his hymns with Perumals of Kanchi and Koiladi – Kanchi Perumal, Koviladi Perumal      
             
Temple History:Lord Shiva has five faces praised as Eeshana, Tatpurusha, Agora, Vamadevam and Satyojatham.  Lord Brahmma too had five faces earlier.  Therefore, he developed pride that He was equal to Lord Shiva.  Angry Shiva simply plucked the centre head of Brahmma.  The head stuck to his hand and did not fall down.  Lord Shiva, to wash off the Brahmmahathi sin wandered places with the head of Brahmma.  Finally, the head fell at a place.  Lord Vishnu was present there.  This is that place where Lord Hara Shaba Vimochana Perumal blesses the devotees with Pooranavalli Thayar-Kamalavalli Nachiar.