வெள்ளி, 6 செப்டம்பர், 2019

விஸ்வாமித்திரருக்கு ப்ராம்மணத்தன்மை கிடைத்த வரலாறு...

பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த சம்பாஷனை. அப்பா குந்தி புத்திரனே! முன்னாள் விஸ்வாமித்ரருக்கு ப்ராமணரானதும் ப்ரம்ம ரிஷியானதும் எப்படி என்பதை சொல்கிறேன் கேள்.

பரதனுடைய வம்சத்தில் தர்மத்தில் சிறந்தவனான மிதிலன் என்ற அரசனுக்கு ஜன்னு என்ற புத்திரன் இருந்தான். அந்த ஜன்னுவுக்கு கங்காதேவி பெண்ணானாள். அவனுக்கு ஸிந்துத்வீபன் என்ற புத்திரன் உண்டானான். மஹா பலசாலியான பலாகாஸ்வன் ஸிந்துத்வீபனுடைய புத்திரன். இவனுடைய மைந்தன் தர்மஸ்வரூபமான வல்லபன். வல்லபனுடைய புதல்வன் இந்திரனு கொப்பான குசிகன். அந்த குசிகனுக்கு சிறப்புற்ற காதியெனும் புதல்வன்.
காதி தனக்கு ஸந்ததி வேண்டி வனத்தில் இருக்கையில் அவனுக்கு ஸத்யவதி என்று ஒரு கன்னிகை பிறந்தாள். ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவனருடைய புதல்வர் ரிசீகரென்பவர் அந்த கன்னிகையை மணம் முடிக்க கேட்க... அந்த காதி இவரை தரித்திரனென்று நினைத்து ஒதுக்க எண்ணினான். அதனால் அவரை நோக்கி ஒற்றை காது கறுத்தவையும் சந்திரகிரகணம் போல வெண்மையாக பிரகாசிப்பவையும் வாயு வேகமுள்ள ஆயிரம் குதிரைகளை கேட்டார். (கிட்டதட்ட வரதட்சணை) அந்த மஹாத்மாவானவர் வருண பகவானை யாசிக்க அவரும் வரமாக குதிரைகளை தந்தார். அந்த குதிரைகள் கங்கா தீர்த்தில் உருவாயின..(கன்னியா குப்ஜ தேசத்தில் அந்த குதிரைகள் உருவான இடம் அஸ்வ தீர்த்தம் என்று கூறப்படுகின்றன). இதனால் பயந்த காதியானவன் உடனே தன் மகளை ரிஷீக்ருக்கு மணம் முடித்து வைத்தார். அவள் திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் தான் ரிஷீகரிடம் இருந்து கேட்டவைகளை தன் தாய்க்கு சொல்லிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் சந்ததி விருத்திக்கான விஷயத்தை ரிஷீகர் கூற அதை தன் தாய்க்கு சொன்னாள். அதனால் அவள் தாயும் சந்ததி விருத்தியை நினைக்க அது ரிஷீக்ருக்கு தெரிந்தது. உடனே அவர் தன் மனைவியை நோக்கி நீயும் உன் தாயும் ஒரு குழந்தைகளை பெறுவீர் என்று கூறி சந்ததி விருத்திக்காக இரண்டு ஹவிஸுகளை கொடுத்து தாயை அரச மரத்தையும் மனைவியை அத்திமரத்தையும் தழுவ சொல்லி சென்றார். ஆனால் தாயானவள் விபரீத புத்தியால் தன் மகளிடம் அவள் வைத்திருகும் ஹவிஸை வாங்கி அரச மரத்துக்கு பதிலாக அத்தி மரத்தை தழுவிணாள். பின்னர் இருவரும் கர்பந்தரித்தனர்.

ஆனால் ரிஷீகர் நடந்ததை கண்டு கொண்டு... மனைவியை நோக்கி சொன்னார். ப்ரியமானவளே! இந்த விபரீத மாறுதலால் நீ சத்திரிய குழந்தையையும் உன் தாய் பிராம்மண புதல்வனையும் பெறுவார்கள். உனக்கு கொடிய செயல் உடைய சத்திரியன் பிறப்பான் என்று கூறினார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அவள் மூர்ச்சையடைந்தாள். பின்பு மூர்ச்சை தெளிந்து ரிசீகரை பிராத்தித்தாள். ரிசீகரே! தயவு செய்து எனக்கு கொடிய செய்கை உடைய சத்திரியனை மகனாக பிறக்க செய்யாதீர் என்று கூற அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னர். இதன் பலனாக ரிஷீகரின் மனைவி சத்தியவதி ஜமதக்னி என்னும் பிள்ளையை பெற்றாள். ஸத்தியவதியின் தாயும் காதியின் மனைவி விஸ்வாத்திரரை பெற்றாள். அதனாலே விஸ்வாமித்ரர் சத்திரியராய் இருந்து பிராமண்ணத்துவத்தை அடைந்து ப்ராமண சந்ததியை உண்டு பண்ணினார் (அவர் சத்திரிய அழுக்கை நீக்க 2000 வருடம் தவம் செய்து"ராஜரிஷி" பட்டம் பெற்று பின் 'ரிஷி' பட்டம் பெற்றார். பின்பு ஆயிரம் வருஷம் உண்ணாமல் தவம் செய்து பிரம்ம தேவரை மகிழ்வித்து ' பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார். ஆக 3000 வருட தவத்தால் பிராம்மணத்துவத்தை பூரணமாக அடைந்தார். ஆதாரம் வால்மீகி ராமாயணம்) அவர்களுடைய புதல்வர்கள் பலர் ப்ரம்ம ஞானிகளும் பல கோத்திரங்களுக்கு முதல் புருஷர்களாக இருந்தனர். பகவானான மதுச்சந்தன், தேவராதன், அக்‌ஷீணன், சகுந்தன், பப்ரூ, காலபதன், யாஜ்ஞவல்க்யன், ஸ்தூணன், உலூகன், யமதூதன், ஸைந்தவாயயென், பர்ணஜங்கன், காலவ மஹரிஷி, வஜ்ர ரிஷி, ஸாலங்காயன், லீலாட்யன், நாரதன், கூர்ச்சாமுகன், வாதூலி, முஸலன், வக்‌ஷேக்ரீவன், ஆங்க்ரி, நைகத்ருக், சிலாயூபன், ஸிதன், சுகி, சக்ரகன், மாருதந்தவ்யன், வாதாக்னன், ஆஸ்வலாய்ன், ஸ்யாமயனன், கார்க்யன், ஜாபாலி, ஸுஸ்ருதன், காரீஷி, ஸ்ம்ஸ்ருத்யன், பரன், பௌரவன், தந்து, கபில் மஹரிஷி, தாடகாயன மஹரிஷி, உபகஹனன், ஆஸுராயண ரிஷி, மார்த்தமரிஷி, ஹிரண்யாக்‌ஷன், ஜாங்காரி, பாப்ரவாயணி, பூதி, விபூதி, ஸூதன், ஸூரக்ருத், அராலி, நாசிகன், சாம்பேயன், உஜ்ஜயனன், நவதந்து, பக நகன், ஸேயனந், யதி, அம்போருதன், சாருமத்ஸ்யன், சிரீஷி, கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேஷி, நாரதி மஹரிஷி  ஆகிய விஸ்வாமித்ரர் மைந்தர்கள் அனைவரும் வேதங்களை வெளியிட்ட மஹரிஷிகள் ஆவார்கள். யுதிஷ்டிரரா! ரிஷீக மஹரிஷியால் வெளியிடப்பட்ட அந்த மந்திரம் பெரிது. பாரத சிரேஷ்டனே சந்திரன் சூர்ய அக்னிக்கொப்பான் விஸ்வாமித்ரர் ஜனனம் முழுவதும் என்னால் உனக்கு சொல்லப்பட்டது என பீஷ்மர் யுதிஷ்டிருக்கு உரைத்தார்.

#யுதிஷ்டிரர்
#விஸ்வாமித்ரர்
#விஸ்வாமித்ரசரிதம்
#பீஷ்மர்
#மஹாபாரதம்
#விஸ்வாமித்ரர்_சரிதம்

(இதே இன்னைக்கா இருந்தா நம்மாளுக பூணூல போட்டு நீயும் பிராமணன் தான் அதற்கு சட்டம் போட்டாச்சி ... அப்படின்னு சொல்லிருப்பானுக... இந்த மனுசன் படாத பாடு பட்டிருக்கார்... இதுக்கு தனி கோர்ஸ் டிகிரி கூட ஆரம்பிச்சிருப்பானுக...)

ராம் ராம்
"ஸ்வஸ்தி வாசனம்"
|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் - ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந - விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் - அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
-----------------------------------------------

காஞ்சி பீடத்தில் அமர்ந்த குருவாம் காமாக்ஷி தாயை பூஜிக்கும் குருவாம்.

காவல் தெய்வமாய் இருக்கும் குருவாம்.

காருண்ய மூர்த்தியாய் வந்த குருவாம்.

துவராடையை உடுத்தும் குருவாம்.
துரிதமாக வந்து காக்கும் குருவாம்.
துணையாக என்றும் இருக்கும் குருவாம்.

துவளா வண்ணம் காக்கும் குருவாம்.

அர்த்தநாரியாய் இருக்கும் குருவாம்.

அற்புதங்கள் பல செய்யும் குருவாம்.

அல்லும் பகலும் காக்கும் குருவாம்.
அழைத்தால் ஓடி வருகின்ற குருவாம்.

ஞானத்திலே உயர்வான குருவாம்.
மோனத்திலே மூழ்கிடும் குருவாம்.
கானம் கேட்டால் மகிழும் குருவாம்.
தானம் செய்திடும் தயாள குருவாம்.

ஊர் ஊராய் நடந்த குருவாம்.
பேர் புகழை விரும்பாத குருவாம்.
பார் முழுதும் போற்றும் குருவாம்.
பார்த்தசாரதியாய் காக்கும் குருவாம்.

குருவே சரணம்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}

ஆசமனம் அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ; ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும் மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.
அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}


யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்.

சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி மாத்யாணிகம் செய்து விட்டு தர்பணம் செய்யவும்.


அமாவாசை தர்ப்பணம்


முதலில் ஆசமனம் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.


பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.


ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி

மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே*

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.


ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.


வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.


இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .


2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


மாத்ரூ வர்க்கம்:


வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.


வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


மாதா மஹ வர்க்கம் தர்பணம்:


1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத


பூணல் வலம் : தேவதாப்பிய: ______


இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.


உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து


கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.


காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

சிராத்த காய்கறி
புடலங்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, கருனைக்கிழங்கு, பாகற்காய், இஞ்சி, மாங்காய், கறிவேப்பிலை, பழங்கள் மா, பலா, வாழை, வாழயிலை, விரட்டி, சிராய், சமித்து, நெய், பால், தயிர், வத்தலை, பாக்கு, பூ, மாலை,

பாயசம்
தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
கொத்தவரங்காய்
அவரைக்காய்
கருனைக்கிழங்கு
வாழைக்காய்
பாகற்காய்
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
மாங்காய் & இஞ்சி
கறிவேப்பிலை துவையல்
வடை
அதிரசம்
தேங்கோழல்
அல்வா
எள்ளு உருண்டை
பயத்த உருண்டை
பழங்கள்
புடலங்கா பொரித்த குழம்பு
வாழை தண்டு மோர் குழம்பு
சீரா ரசம்
தேன்
தயிர்
மஹாளய பட்சம்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மஹாளய பட்சம் : தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும் உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 28 வரை மஹாளய பட்ச காலமாகும். மஹாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மஹாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள்ளை தண்ணீருடன் சேர்த்து  அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும் அஷ்டமி மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மஹாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம், போன்ற தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.  இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.  மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுது போக்கு அம்சங்களை அறவே தவிர்த்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல் பழம் கொடுக்கலாம்.  ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன் : பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாது தான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை. கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில் கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன் : அப்போது அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன் செய்த பொன் நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன ஆனால் அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம் கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும் மணியுமே தானம் செய்தாய் அன்னதானம் செய்யவில்லை. எனவே நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மஹாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும் என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மஹாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளயபட்ச காலத்தில் நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று பதிநான்கு நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மஹாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மஹாளய அமாவாசைக்கு முன்னர் மஹாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அது போல் மஹாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால் ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா அதுவரை அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மஹாளாய பட்சம் ஆகும்.
-----------------------------------------
மெய்கண்டார்

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள்.  சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள்.  ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள்.  சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன.  சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும்.  அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். மெய்கண்டாரின் காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும்.   இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார்.  அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை.  ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார்.  கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்”  என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.”  என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார்.  ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை;  ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.”  என்று அருளுகிறார்.  அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது.  குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது.  குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று.  குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார்.  அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.  பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது.  அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார்.  ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார்.  உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார்.  பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும்.  அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷாதிருநாமமாக  மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார்.  அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார்.  சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார்.  இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது.  அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற  ஒருநாள் அவரைக்காணச் சென்றார்.  அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.  உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார்.  தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது.  வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார்.  ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர்.  அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்;  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார்.  மெய்கண்டார் எவ்வளவு  காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை.  ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது.  அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது.  திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.
திருநெல்வேலி குருக்கு துறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை,  இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

பெரியவா சரணம்.

ஹர ஹர சங்கர                   ஜய ஜய சங்கர


காஞ்சி மஹா பெரியவா தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.