புதன், 28 ஆகஸ்ட், 2019

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!
---------------------------------------------
மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
---------------------------------------------
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
---------------------------------------------
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
---------------------------------------------
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
---------------------------------------------
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
---------------------------------------------
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
---------------------------------------------
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
---------------------------------------------
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
---------------------------------------------
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
---------------------------------------------
மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
---------------------------------------------
கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
---------------------------------------------
மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
*****************************
கணேச நாமாவளிகள்

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய பாஹிமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்

ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

கௌரி நந்தானா கஜவதனா கணேச வரத மாம்பாஹி
அம்பிகைபாலா அன்பர்கள் சீலா தும்புருநாரதர் ஸேவித லோலா

பாரதமெழுதிய பரமசரித்ரா ஆரமுதருளிய ஐங்கர சித்ரா
லம்போதர கங்கா தரபுத்ரா அம்பாமுகபங் கேருகமித்ரா

அரஹர வரஹர வாதியனே அரனருள் விநாயக ஜோதியனே
கஜமுகத்தரசே கணபதியே கற்பகத்தருவே குணநிதியே

பிரணவப் பொருளே பெம்மானே பேசருமறை புகழ்எம்மானே
இபமாமுகனே இகமாவரதா சுபமாகவும் சுமுக அருள்வாய்

ஸ்ரீ ஜயசீல விநாயகனே தேவர் தொழும் தெய்வநாயகனே!
--------------------------
கணேச நாமாவளிகள்

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய பாஹிமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி ஜெயஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ஸ்ரீஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்

ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீலெக்ஷ்மி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

கௌரி நந்தானா கஜவதனா கணேச வரத மாம்பாஹி
அம்பிகைபாலா அன்பர்கள் சீலா தும்புருநாரதர் ஸேவித லோலா

பாரதமெழுதிய பரமசரித்ரா ஆரமுதருளிய ஐங்கர சித்ரா
லம்போதர கங்கா தரபுத்ரா அம்பாமுகபங் கேருகமித்ரா

அரஹர வரஹர வாதியனே அரனருள் விநாயக ஜோதியனே
கஜமுகத்தரசே கணபதியே கற்பகத்தருவே குணநிதியே

பிரணவப் பொருளே பெம்மானே பேசருமறை புகழ்எம்மானே
இபமாமுகனே இகமாவரதா சுபமாகவும் சுமுக அருள்வாய்

ஸ்ரீ ஜயசீல விநாயகனே தேவர் தொழும் தெய்வநாயகனே!
--------------------------
ஸ்ரீ பாலாம்பிகே ஸமேத வைத்தியநாத ஸ்வாமிநே நம:

1. ஸ்ரீ ராம ஸெளமித்ரி, ஜடாயுவேத
ஷடாந நாதித்ய, குஜார்ச்சி தாய
ஸ்ரீ நீலகண்டாய, தாயமயாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய

2. கங்கா ப்ரவாஹேந்து, ஜடாதராய
த்ரிலோச நாய ஸ்மரகால ஹந்த்ரே,
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய:

3. பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிதே, துஷ்ட ஹராய நித்யம்,
ப்ரத்க்ஷலீலாய, மனுஷ்ய லோகே
ஸ்ரீ வைத்ய நாதாய நம: சிவாய.

4. ப்ரபூதவரதாதி, ஸமஸ்த ரோக
ப்ரணாசகர்த்ரே, முநிவந்திதாய,
ப்ரபாகரேந்த்வக்நி, விலோசனாய
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

5. வாக். ச்ரோத்ர, நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ:
வாக் ச்ரோத்ர, நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி, ஸர்வோன்னத ரோக ஹந்த்ரே,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

6. வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய,
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

7. ஸ்வதீர்த்த, ம்ருத், பஸ்மப்ருதங்க பாஜாம்
பிசாச துக்கார்த்தி பயாபஹாய,
ஆத்ம ஸ்வரூபாய சரீர பாஜாம்
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

8. ஸ்ரீ நீலகண்டாய, வ்ருஷத்வஜாய,
ஸ்ரக், கந்த, பஸ்மாத்யபி சோபிதாய,
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய,
ஸ்ரீ வைத்யநாதாய நம: சிவாய.

9. ஸ்வாமின், ஸர்வ ஜகந்நாத்,
ஸர்வரோக சிகித்ஸக
க்ஷúத்ரரோஜ பயார்த்தான்.
நஸ்த்ராஹி மஹாப்ரபோ.

10. அசிகித்ஸா சிகித்ஸாய
சாத்யந்த ரஹிதாயச,
ஸர்வலோகைக வந்த்யாய
வைத்ய நாதாய தே நம:

11.  அப்ரமேயாய மஹதே
ஸுப்ரஸன்ன முகாய ச,
அபீஷ்ட தாயிநே நித்யம்
வைத்ய நாதாய தே நம:

12. ம்ருத்யஞ் ஜாயாய சர்வாய
ம்ருடாநீ வாமபாகி நே,
வேதவேத்யாய, ருத்ராய
வைத்யநாதாய தே நம:

13. ஸ்ரீ ராமபத்ர வந்த்யாய
ஜகதாம் ஹிதகாரிணே
ஸோமார்த்த தாரிணே துப்யம்,
வைத்யநாதாய தே நம:

14. நீலகண்டாய ஸெளமித்ரி
பூஜிதாய ம்ருடாய ச
சந்த்ர வஹ்ந்யர்க்க நேத்ராய
வைத்யநாதாய தே நம:

15. சிசிவாஹந வந்த்யாய
ஸ்ருஷ்டி, ஸநித்யந்தகாரிணே
மணிமந்த்ரௌஷ தேசாய,
வைத்யநாதாய தே நம:

16. க்ருத்ர ராஜாபி வந்ந்யாய
திவ்ய கங்காதராய ச,
ஜகந்மயாய ஸர்வாய
வைத்யநாதாய தே நம:

17. குஜ, வேத, விதீந்த்ராத்யை
பூஜிதாய, சிதாத்மநே,
ஆதித்ய, சந்த்ர வந்த்யாய.
வைத்யநாதாய தே நம:

18. வேதவேத்ய, க்ருபாதார
ஜகந்மூர்த்தே சுபப்ரத,
அநாதி வைத்ய, ஸர்வஜ்ஞ,
வைத்யநாதா நமோஸ்து தே.

19. கங்காதர, மஹாதேவ
சந்த்ர வஹ்ந்யர்க்க, லோசன
பிநாகபாணே, விச்வேச,
வைத்யநாத நமோஸ்து தே.

20. வ்ருஷவாஹந, தேவேச,
அசிகித்சா சிகித்ஸக
கருணாகர கௌரீச
வைத்யநாத நமோஸ்து தே.

21. விதி விஷ்ணு முகைர் தேவை:
அர்ச்யமான பதாம் புஜ.
அப்ரமேய ஹரேசாந
வைத்யநாத நமோஸ்து தே.

22. ராம லக்ஷ்மண ஸூர்யேந்து
ஜடாயு ச்ருதி பூஜித
மத நாந்தக ஸர்வேச,
வைத்ய நாத நமோஸ்து தே.

23. ப்ரபஞ்ச பிஷகீசாந
நீகண்ட மஹாச்வர
விச்வநாத மஹா தேவ
வைத்யநாத நமோஸ்து தே.

24. உமாபதே லோகநாத
மணி மந்த்ரௌஷ தேச்வர,
 தீ நபந்தோ, தயாசிந்தோ
வைத்யநாத நமோஸ்து தே.

25. த்ரிகுணா தீத சித்ரூப
தபாத்ரய விமோசந,
விரூபாக்ஷ, ஜகந்நதா
வைத்யநாத நமோஸ்து தே.

26. பூதப்ரேத பிசாசாதே;
உச்சாடந விசக்ஷண
குஷ்டாதி ஸர்வ ரோகாணாம்
ஸ்ம்ஹர்த்ரே தே நமோ நம:

27. பாதயந்த பங்கு குப்ஜா தேர்
திவ்யரூப ப்ரதாயிநே,
அநேக மூக ஜந்தூநாம்
திவ்யவாக் தாயிநே நம:
--------------------------
கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.
கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம் கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.
கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 - 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது. மேலும் இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.
--------------------------
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது

குடியிருக்கும் வீட்டை க்ருஹ லட்சுமி என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோடு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும்கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை, பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்துபலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்!
--------------------------
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது.  இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
--------------------------
சந்தேகம் தான் தீயை வைக்கும்!

எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், நான் என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.அன்பும் தெய்வமும் ஒன்றே. தெய்வமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும். உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.கடமையை உணர்ந்துசெயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன்கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.உள்ளத்தில் கருணை,உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையேநல்லோரின் அடையாளங்கள்.ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும்கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.

வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும். இன்பம்பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்தசமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது. அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.வாழ்க வளமுடன் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப் படுகிறது.பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும். உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில்எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணங் களும் சந்தேகமும்தான். சந்தேகம் வாழ்வில் தீயை வைக்கும். எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.

நம்பிக்கை வாழ்வில் தீபமேற்றும். மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம்மனதில்தான் இருக்கிறது. தன்னை தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம். வாழ்வில் வெற்றி பெற விரும்பினால் எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும். ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவரை கோபம் அணுகாவிட்டால், அவரது மனம்பக்குவம் அடைந்து விட்டதாக கொள்ளலாம்.
--------------------------
பக்கத்திலே நான் இருக்கேன்!

கவுரவர் சபையில் திரவுபதி நிறுத்தப்பட்டாள். துரியோதனன், தன் தம்பி துச்சாதனனை அழைத்து இவளது ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்து என்று உத்தரவிட்டான். துச்சாதனனும் அவ்வாறே செய்ய முற்பட்டான்.கணவன்மாரோ, பீஷ்மர், துரோணர் போன்றமகானுபவர்களோ உதவி செய்ய முன்வராத நிலையில், அபலையாய் நின்று கதறினாள் பாஞ்சாலி. வேறு யாரும்கதியில்லை என்ற நிலையில், கிருஷ்ண பரமாத்மாவை அழைத்துக் கதறினாள். கண்ணா! மதுசூதனா!திரிவிக்கிரமா! பத்மநாபா! கோவிந்தா! புண்டரீகாக்ஷா, கிருஷ்ணா, கேசவா, சங்கர்ஷணா, வாசுதேவா,புருஷோத்தமா, அச்சுதா, வாமனா, தாமோதரா, ஸ்ரீதரா... என்றெல்லாம் அழைத்தாள். அடுத்து துவாரகா வாசா என்று கூப்பிட்டாள். கண்ணன் வந்தான். ஆடையை வளரச் செய்தான். அவளது மானம் காப்பாற்றப்பட்டது. பின்னொரு நாளில் இது பற்றி திரவுபதி கண்ணனிடம் கேட்டாள். அண்ணா! நான் அன்று அப்படி கதறினேனே! நீ ஏன் வருவதற்கு தாமதித்தாய்? என்றாள். கண்ணன் சிரித்தான். திரவுபதி! எனது எல்லா நாமங்களையும் சொல்லி அழைத்த நீ துவாரகாவாசா என்றும் சொன்னாய் அல்லவா! நான் துவாரகையில் இருந்து வரவேண்டாமா! அதனால் தான் தாமதம் ஆகி விட்டது. அதற்குப் பதிலாக இருதய வாசா என்று அழைத்திருந்தால் உன் இதயத்திலிருந்து உடனே வெளிப் பட்டிருப்பேன் என்றார். பார்த்தீர்களா! இறைவனை நம் நெஞ்சில் குடியமர்த்த வேண்டும். அப்படி அமர்த்தி விட்டால் எந்தக் கஷ்டம் வந்தாலும் அவன் உடனே வருவான்.
--------------------------
முழு மனதுடன் கொடுங்கள்!

பாரசீக மன்னர் ஒருவர் ஆண்டுதோறும் தன் நாட்டு வீரர்களுக்கு போட்டி ஒன்றை நடத்துவார். ஆனால், கஞ்சப்பிரபுவான அவருக்கு பரிசு கொடுக்க மனம் வராது. ஒருமுறை, நவரத்தினங்கள் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு கயிற்றில் கோர்த்து, அரண்மனை மேலுள்ள மினாரில் தொங்கவிட்டார். அந்த மோதிரம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவ்வாறு செய்தார்.மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பதே போட்டி!   அதை எடுக்க பல வீரர்கள் வந்தனர். அதன்மீது அம்பை எய்தனர். ஊஹும்... யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை. அரசருக்கு சந்தோஷம். இன்னும் ஒரே ஒருநாள் தான் பாக்கி! அதற்குள் யாருக்குமோதிரம் கிடைத்து விடப்போகிறது! என்ற நினைப்பில் இருந்தார். அரண்மனையின் எதிரே ஒரு சிறுவன் விளையாட்டு வில் அம்பை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு நேராக மோதிரத்தை அறுத்துத் தள்ளியது. பிறகென்ன! சிறுவனுக்கே மோதிரத்தைபரிசாகக் கொடுக்க வேண்டியதாயிற்று! ஒன்றைக் கொடுக்க நினைப்பவர்கள், நிறைந்த மனதுடன்பிறருக்குக் கொடுக்க வேண்டும். கொடுப்பது போல் நடித்து தாங்களே வைத்துக் கொள்ள நினைத்தால், அந்தப் பொருள் ஏதோ ஒரு வழியில் போய்விடும்.
--------------------------
வைகாசி விசாகம்: விரதமுறையும் பலனும்!

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
--------------------------
#யாக_பூஜையும்_யாக_மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு
பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத்திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திருக்கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளை
யாகபூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்

மூலவர் :  அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
அம்மன் :  ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
தீர்த்தம் :  சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
பழமை :  500 வருடங்களுக்குள்
ஊர் :  பெசன்ட் நகர்
மாவட்டம் :  சென்னை
மாநிலம் :  தமிழ்நாடு

விழா:புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.  
      
சிறப்பு:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், அருள் மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்-600 090, சென்னை.போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763 
     
தகவல்:ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.  
      
பிரார்த்தனை:இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது.உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், தைரியம் பெற தைரியலட்சுமியையும், சவுபாக்கியம் பெற கஜலட்சுமி யையும், குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், செல்வம் பெருக தனலட்சுமியை வணங்குதல் நலம்.
     
ஸ்தல பெருமை : அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள். கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
 
ஸ்தல வரலாறு : சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது.அதோடு சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் "பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
பெரியவா துறவறம் பூண்டு பீடாதிபதியான சம்பவம்

சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதை சொன்னேன். பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே மறந்துட்டியாம்மா? (பூர்வாசிரம பெரியவா) ஸ்வாமிநாதன்.

மஹா பெரியவா சுவாமிநாதனாகப் பிறந்து பாலகனாக வளர்ந்து துறவறம் பூண்டு பீடாதிபதியாக வேண்டும் என்ற நிகழ்வு. இறைவன் ஏட்டில் எழுதி வைத்தது வரி மாறாமல் நிகழ்ந்திருக்கிறது!

1907-ம் வருடம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 66வது பீடாதிபதி வைசூரிகண்டு ஸித்தியடைந்ததும் அதற்கு முன்னால் லட்சுமி காந்தனை 67-வது மடாதிபதியாகப் பீடத்தில் அமர்த்தியதும், பீடம் ஏறிய இளைய சுவாமிகளும் எட்டாம் நாளே தன் பூத உடலைத் துறந்து விட்டதும் விதிக்கப்பட்ட வகையில் நடந்தேறியவை என்றே கருத வேண்டும். அந்த எட்டு பத்து நாள்களும் கலவையில் மடத்தின் சிப்பந்திகளும் பக்தர்களும் சந்தித்திருக்கக்கூடிய உணர்ச்சிமயமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது. இளைய சுவாமிகளின் விருப்பத்தின் படி சுவாமிநாதன் பீடாதிபதி ஆன போது அன்னை மஹாலட்சுமியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க இயலவில்லை.

சுவாமிநாதனைப் பத்து மாதம் சுமந்து பொன்மேனியனாக வளர்த்து உலகுக்காகத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு சற்றுத் தொலைவில் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு பிறகு விடைபெற்ற கணத்தில் அவளின் கண்கள் கலங்கியிருக்கும். தனியாக பஸ் ஏறி தனது ஊர் நோக்கிப் பயணித்த போது அவளது இதயம் படபடத்திருக்கும்.

முதலில் சுவாமிநாதனால் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

“அம்மா… ஏன் கண் கலங்கறே?”

“உன்னைப் பிரிஞ்சு நான் எப்படிடா இருப்பேன்? சதா என் காலைச் சுத்திச் சுத்தி வருவியே… நீ எதுவும் கேட்கமாட்டே... ஆனால் உன் வாய் ருசிக்கு ஏத்த மாதிரி சமைச்சுப் போடுவேனே… இனிமே அதெல்லாம் முடியாதே சுவாமிநாதா...”

“அம்மா… நீ மறந்துட்டியா?”

“எதை?”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு சொப்பனம் வந்ததை உன்கிட்டே சொன்னேனே… அந்தச் சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே… மறந்துட்டியாம்மா?” மகனைப் பார்த்தபடியே மெளனமாக நின்றாள் தாய்.

“இப்போ மடத்துக்கு நான் பொறுப்பேற்கறது தான் அந்த ராஜ யோகம்னு நினைச்சுக்கோயேன்…” என்று மகன் சமாதானம் சொன்னவிதமும் மஹா லட்சுமிக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது! ஆனால் வீடு திரும்பிய பிறகும் மகனை நினைத்துப் புலம்பிய படியே இருந்தாள் மஹா லட்சுமி. எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை. வீட்டில் சுவாமிநாதன் குறுக்கும்நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பது மாதிரியான பிரமை அவளுக்கு. இரவு நித்திரையின்றி தவித்தாள். மஹா லட்சுமியை அமைதிப்படுத்தும் விதமாக ஆதிசங்கரரின் பால்ய நாள்களை நினைவூட்டினார் கணவர் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

சங்கரருக்கு அப்போது எட்டு வயது. ஒரு முறை யோகிகள் சிலர் அவருடைய வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தாய் ஆர்யாம்பாவிடம் சங்கரர் அவதரித்துள்ள சூழ்நிலையையும் காலநிலையையும் விளக்கிச் சொன்னார்கள். அம்மா! உண்மையான தெய்வ சங்கல்பத்துக்கேற்ப இந்தக் குழந்தை எட்டு ஆண்டுகள் தான் இந்த மண்ணுலகில் வாழ வேண்டும். இருப்பினும் அந்த வயது இரு மடங்காகப் பெருகும்’ என்று ஆசி கூறிச் சென்றனர். என்ன தான் இறை விருப்பம் என்றாலும் தன் மகனுக்குக் குறுகிய ஆயுள் தான் என்பதை அறிந்த ஆர்யாம்பா மிகவும் துயருற்றாள். அவளுக்குச் சமாதானம் சொன்னார் மகன்.

அம்மா! அறியாமையுடன் கூடிய இந்த வாழ்க்கை வெறும் தோற்றம் தானே தவிர நிஜமானது அல்ல. தாய், தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற பலவகையான உறவுகளுடன் ஆத்மாக்கள் ஒன்று சேர்வது பயணம் செய்கிறவர்கள் உறவு கொள்வதைப் போன்றது தான்… என்று அன்னைக்கு எடுத்துரைத்தார். மகனிடத்தில் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்டறிந்தாள் ஆர்யாம்பா. சங்கரரைத் துறவியாகத் திரியவிட அவளுக்கு விருப்பமில்லை. சராசரி தாயாரைப் போல் மகனுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

ஆனால் சங்கரரின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன. வாழ்க்கையில் பெரியதாக ஒன்றைச் சாதிக்கும் லட்சியத்துடன் அவதரித்தவர் அவர். தான் பெற்ற பூரணமான அனுபவத்தை உலகம் முழுவதற்கும் வழங்கி ஆனந்தமயமான அருமையான சாந்தி நிறைந்த இன்ப வாழ்வுக்கு மனித குலம் முழுவதையும் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.

இளம் பருவத்திலேயே குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார் சங்கரர். தாய்க்கோ மகனை இழக்கச் சம்மதமில்லை. அவளை மனம் மாறவைக்கும் விதமாக ஒரு தெய்விக அற்புதம் நிகழ்ந்தது... கணவர் விவரித்து கொண்டிருப்பது தனக்குத் தெரிந்த வரலாறு தான் என்றாலும் சுப்ரமணிய சாஸ்திரிகள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா லட்சுமி. நான் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. இந்த ஒட்டு மொத்த உலகுக்கும் குழந்தை. உலகம் பூராவுக்கும் செய்ய வேண்டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக் கொண்டே போவது? கெட்டுப் போய்விட்ட லோகத்தை சீர்படுத்துவதற்கு வந்துவிட்டு அந்தக் காரியத்தில் ஈடுபடாமல் இருந்தால் எப்படி? என்றெல்லாம் சங்கரர் யோசித்திருக்க வேண்டும்... திருக்கதையைச் சற்று நிறுத்திவிட்டு மஹா லட்சுமி என்று அழைத்தார் சுப்ரமணிய சாஸ்திரி.

“சொல்லுங்கோன்னா...”

ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ… ஈஸ்வர லீலை அவதாரம்னு வரும் போது நம்ம மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கறது சகஜம். இப்ப ராமர் கதையையே எடுத்துக்கோயேன்… தசரதரின் புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாகப் பிறந்தவர் ராமன். கொஞ்ச காலம் அப்பாவுக்குப் பிள்ளையா வளர்ந்தார். அப்புறம் அவதார காரியம் அழைப்பு விடுக்க தந்தை அழுது அழுது உயிரை விட்டாலும் வனவாசத்துக்குப் புறப்பட்டு விட்டார். சங்கரர் விஷயத்துல அதுவே வேற மாதிரி நடந்திருக்கு… என்றபடி சுப்ரமணிய சாஸ்திரி சங்கரரின் திருக்கதையைத் தொடர மஹா லட்சுமி ஆர்வமானாள்…

ஒரு பிள்ளை தாயாரின் அனுமதி இல்லாமல் சந்நியாசியாகக் கூடாது. அதன் படியே சங்கரரும் தாயாரின் அனுமதியுடனேயே துறவு மேற்கொள்வது என்று தீர்மானித்தார். தக்க தருணம் வருமென்று காத்திருந்தார். வீட்டுக்கு மிக அருகில் வந்து விட்ட பூர்ணா நதியில் ஒரு நாள் ஸ்நானம் பண்ண இறங்கினார் சங்கரர். அப்போது அவர் காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. பிடித்து ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது. அம்மா… அம்மா…’ சங்கரரின் குரல் எட்டு திக்குகளிலும் ஒலித்து எதிரொலித்தது. கன்றின் குரல் கேட்டுப் பதறியடித்து ஓடோடி வந்தது தாய்ப்பசு. கணவரோ காலமாகி விட்டார். இப்போது மகனும் மரணத்தின் காலடியில் செய்வதறியாமல் திகைத்தாள் ஆர்யாம்பா.

ஆனால் சங்கரருக்கோ தான் காத்திருந்த நேரம் இப்போது வந்து விட்டது என்று தோன்றியது. அம்மா! முதலையின் வாயிலிருந்து நான் தப்பிப்பது என்பது நடக்காத காரியம். இது சராசரியான இறப்பில்லை. துர்மரணம். உனக்கும் புத்ர கர்மாவினால் ஏற்படும் நற்கதி கிடைக்காமல் போய் விடும். இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. உனக்குச் சம்மதம் என்றால் சொல். அதன் படியே செய்கிறேன்’ என்றார் சங்கரர்.

என்னப்பா சொல்றே? குரல் நடுங்கக் கேட்டாள் தாய்.

அம்மா… இப்போது நான் சந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால் எனக்கு வேறு ஒரு புது ஜன்மம் வந்து விட்டது போலாகி விடும். அதன் மூலம் முன் ஜன்மத்தின் கர்மவினையால் ஏற்பட்ட மரணமும் விலகி விடலாம். காலை இழுக்கும் முதலையும் என்னை விட்டு விடலாம். ஒருவன் சந்நியாசியானால் அவனுக்கு முந்தைய இருபத்தியொரு தலைமுறையினருக்கு நற்கதி கிடைக்கும். அதனால் உனக்கும் அப்படி ஸித்திக்கும்… பேச்சற்று நின்றாள் ஆர்யாம்பா. அவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

அம்மா… நீரில் நின்று கொண்டு தான் துறவற தீட்சை மேற்கொள்வதற்கான மந்திரத்தைச் சொல்லி மனதினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் நீரின் நடுவிலேயே இருக்கிறேன்... அதனால் தான் சந்நியாசம் வாங்கிக்கொள்ள இது தான் தக்க தருணமென்று கருதுகிறேன். இருப்பினும் உன் அனுமதியில்லாமல் சந்நியாசம் வாங்கிக்கொள்ள எனக்கு உரிமையில்லை. அதனால் நீதான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று சங்கரர் தீர்மானமாகச் சொல்லவும் குழம்பினாள் ஆர்யாம்பா.

தன்னுடன் வாசம் செய்யா விட்டாலும் மகன் எங்கேயாவது துறவியாக இருக்கட்டும். ஆயுசோடு இருந்தால் எப்போதாவது அவனைப் பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியா விட்டாலும் குழந்தை எங்கேயாவது சௌக்கியமாக இருந்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்தாள். இருப்பினும் சந்நியாசம் வாங்கிக்கோ என்று ஒரு தாயாரால் சர்வ சாதாரணமாக சொல்லி விட முடியாதே!

சங்கரா! உனக்கு எப்படி தோன்றுகிறதோ உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்துகொள்… என்றாள். இப்படி சங்கரர் துறவியான வரலாற்றைக் கணவர் சொல்லி முடிக்க மஹா லட்சுமியின் மனம் லேசானது. முன்ஜன்ம புண்ணியத்தால் தான் ஈன்றெடுத்த மகன் சுவாமிநாதன் ஒரு புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பூரித்துப்போனாள்.

சந்திரசேகரா… என்று உணர்ச்சி மிகுதியால் முணு முணுத்தாள் மஹா லட்சுமி.
பெரியவா துறவறம் பூண்டு, பீடாதிபதியான சம்பவம்

சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே மறந்துட்டியாம்மா?”--(பூர்வாசிரம பெரியவா) ஸ்வாமிநாதன்.



மகா பெரியவா சுவாமிநாதனாகப் பிறந்து, பாலகனாக வளர்ந்து, துறவறம் பூண்டு, பீடாதிபதியாகவேண்டும் என்ற நிகழ்வு, இறைவன் ஏட்டில் எழுதிவைத்தது; வரி மாறாமல் நிகழ்ந்திருக்கிறது!

1907-ம் வருடம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், 66-வது பீடாதிபதி வைசூரிகண்டு ஸித்தியடைந்ததும், அதற்கு முன்னால் லட்சுமி காந்தனை 67-வது மடாதிபதியாகப் பீடத்தில் அமர்த்தியதும், பீடம் ஏறிய இளைய சுவாமிகளும் எட்டாம் நாளே தன் பூத உடலைத் துறந்துவிட்டதும் விதிக்கப்பட்ட வகையில் நடந்தேறியவை என்றே கருதவேண்டும்.

அந்த எட்டு, பத்து நாள்களும் கலவையில் மடத்தின் சிப்பந்திகளும் பக்தர்களும் சந்தித்திருக்கக்கூடிய உணர்ச்சிமயமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும்போது, நெஞ்சம் கனக்கிறது. இளைய சுவாமிகளின் விருப்பத்தின்படி சுவாமிநாதன் பீடாதிபதியானபோது, அன்னை மகாலட்சுமியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க இயலவில்லை.

சுவாமிநாதனைப் பத்து மாதம் சுமந்து, பொன்மேனியனாக வளர்த்து, உலகுக்காகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, சற்றுத் தொலைவில் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பிறகு விடைபெற்ற கணத்தில் அவளின் கண்கள் கலங்கியிருக்கும். தனியாக பஸ் ஏறி தனது ஊர் நோக்கிப் பயணித்த போது, அவளது இதயம் படபடத்திருக்கும்.

முதலில் சுவாமிநாதனால் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

“அம்மா… ஏன் கண் கலங்கறே?”

“உன்னைப் பிரிஞ்சு நான் எப்படிடா இருப்பேன்? சதா என் காலைச் சுத்திச் சுத்தி வருவியே… நீ எதுவும் கேட்கமாட்டே... ஆனால், உன் வாய் ருசிக்கு ஏத்த மாதிரி சமைச்சுப் போடுவேனே… இனிமே அதெல்லாம் முடியாதே சுவாமிநாதா...”

“அம்மா… நீ மறந்துட்டியா?”

“எதை?”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு சொப்பனம் வந்ததை உன்கிட்டே சொன்னேனே… அந்தச் சொப்பனத்துல, ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே… மறந்துட்டியாம்மா?” மகனைப் பார்த்தபடியே மெளனமாக நின்றாள் தாய்.

“இப்போ மடத்துக்கு நான் பொறுப்பேற்கறது தான் அந்த ராஜ யோகம்னு நினைச்சுக்கோயேன்…” என்று மகன் சமாதானம் சொன்னவிதமும் மகாலட்சுமிக்கு ரசிக்கும்படியாகவே இருந்தது!

ஆனால், வீடு திரும்பிய பிறகும் மகனை நினைத்துப் புலம்பிய படியே இருந்தாள் மகாலட்சுமி. எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை. வீட்டில் சுவாமிநாதன் குறுக்கும்நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பது மாதிரியான பிரமை அவளுக்கு. இரவு நித்திரையின்றி தவித்தாள். மகாலட்சுமியை அமைதிப்படுத்தும் விதமாக ஆதிசங்கரரின் பால்ய நாள்களை நினைவூட்டினார் கணவர் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

``சங்கரருக்கு அப்போது எட்டு வயது. ஒரு முறை யோகிகள் சிலர் அவருடைய வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள், தாய் ஆர்யாம்பாவிடம் சங்கரர் அவதரித்துள்ள சூழ்நிலையையும் காலநிலையையும் விளக்கிச் சொன்னார்கள்.

‘அம்மா! உண்மையான தெய்வ சங்கல்பத்துக்கேற்ப இந்தக் குழந்தை எட்டு ஆண்டுகள்தான் இந்த மண்ணுலகில் வாழ வேண்டும். இருப்பினும் அந்த வயது இரு மடங்காகப் பெருகும்’ என்று ஆசி கூறிச் சென்றனர்.

என்னதான் இறை விருப்பம் என்றாலும் தன் மகனுக்குக் குறுகிய ஆயுள்தான் என்பதை அறிந்த ஆர்யாம்பா மிகவும் துயருற்றாள். அவளுக்குச் சமாதானம் சொன்னார் மகன்.

‘அம்மா! அறியாமையுடன் கூடிய இந்த வாழ்க்கை வெறும் தோற்றம்தானே தவிர நிஜமானது அல்ல. தாய், தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற பலவகையான உறவுகளுடன் ஆத்மாக்கள் ஒன்றுசேர்வது, பயணம் செய்கிறவர்கள் உறவு கொள்வதைப் போன்றதுதான்…’ என்று அன்னைக்கு எடுத்துரைத்தார்.

மகனிடத்தில் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்டறிந்தாள் ஆர்யாம்பா. சங்கரரைத் துறவியாகத் திரியவிட அவளுக்கு விருப்பமில்லை. சராசரி தாயாரைப் போல், மகனுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

ஆனால், சங்கரரின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன. வாழ்க்கையில் பெரியதாக ஒன்றைச் சாதிக்கும் லட்சியத்துடன் அவதரித்தவர் அவர். தான் பெற்ற பூரணமான அனுபவத்தை உலகம் முழுவதற்கும் வழங்கி, ஆனந்தமயமான, அருமையான, சாந்தி நிறைந்த இன்ப வாழ்வுக்கு மனித குலம் முழுவதையும் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.

இளம் பருவத்திலேயே குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார் சங்கரர். தாய்க்கோ மகனை இழக்கச் சம்மதமில்லை. அவளை மனம் மாறவைக்கும் விதமாக ஒரு தெய்விக அற்புதம் நிகழ்ந்தது...” - கணவர் விவரித்துக்கொண்டிருப்பது தனக்குத் தெரிந்த வரலாறுதான் என்றாலும், சுப்ரமணிய சாஸ்திரிகள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகாலட்சுமி.

‘` `நான் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. இந்த ஒட்டு மொத்த உலகுக்கும் குழந்தை. உலகம் பூராவுக்கும் செய்ய வேண் டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக் கொண்டே போவது? கெட்டுப் போய்விட்ட லோகத்தை சீர்படுத்து வதற்கு வந்துவிட்டு, அந்தக் காரியத்தில் ஈடுபடாமல் இருந்தால் எப்படி?’ என்றெல்லாம் சங்கரர் யோசித்திருக்க வேண்டும்...’’

திருக்கதையைச் சற்று நிறுத்திவிட்டு, ``மகாலட்சுமி” என்று அழைத்தார் சுப்ரமணிய சாஸ்திரி.

“சொல்லுங்கோன்னா...”

“ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ… ஈஸ்வர லீலை, அவதாரம்னு வரும்போது நம்ம மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கறது சகஜம். இப்ப ராமர் கதையையே எடுத்துக்கோயேன்… தசரதரின் புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாகப் பிறந்தவர் ராமன். கொஞ்ச காலம் அப்பாவுக்குப் பிள்ளையா வளர்ந்தார். அப்புறம் அவதார காரியம் அழைப்பு விடுக்க, தந்தை அழுது அழுது உயிரைவிட்டாலும், வனவாசத்துக்குப் புறப்பட்டுவிட்டார். சங்கரர் விஷயத்துல அதுவே வேற மாதிரி நடந்திருக்கு…” என்றபடி சுப்ரமணிய சாஸ்திரி சங்கரரின் திருக்கதையைத் தொடர, மகா லட்சுமி ஆர்வமானாள்…

``ஒரு பிள்ளை தாயாரின் அனுமதி இல்லாமல் சந்நியாசியாகக் கூடாது. அதன்படியே சங்கரரும் தாயாரின் அனுமதியுடனேயே துறவு மேற்கொள்வது என்று தீர்மானித்தார். தக்க தருணம் வருமென்று காத்திருந்தார். வீட்டுக்கு மிக அருகில் வந்துவிட்ட பூர்ணா நதியில் ஒரு நாள் ஸ்நானம் பண்ண இறங்கினார் சங்கரர். அப்போது, அவர் காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. பிடித்து ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது. அம்மா… அம்மா…’ சங்கரரின் குரல் எட்டு திக்குகளிலும் ஒலித்து, எதிரொலித்தது. கன்றின் குரல் கேட்டுப் பதறியடித்து ஓடோடி வந்தது தாய்ப்பசு. கணவரோ காலமாகிவிட்டார். இப்போது மகனும் மரணத்தின் காலடியில், செய்வதறியாமல் திகைத்தாள் ஆர்யாம்பா.

ஆனால், சங்கரருக்கோ தான் காத்திருந்த நேரம் இப்போது வந்து விட்டது என்று தோன்றியது.

`அம்மா! முதலையின் வாயிலிருந்து நான் தப்பிப்பது என்பது நடக்காத காரியம். இது சராசரியான இறப்பில்லை. துர்மரணம். உனக்கும் புத்ர கர்மாவினால் ஏற்படும் நற்கதி கிடைக்காமல் போய் விடும். இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. உனக்குச் சம்மதம் என்றால் சொல். அதன்படியே செய்கிறேன்’ என்றார் சங்கரர்.

`என்னப்பா சொல்றே?’ குரல் நடுங்கக் கேட்டாள் தாய்.

`அம்மா… இப்போது நான் சந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால், எனக்கு வேறு ஒரு புது ஜன்மம் வந்துவிட்டது போலாகி விடும். அதன் மூலம் முன் ஜன்மத்தின் கர்மவினையால் ஏற்பட்ட மரணமும் விலகிவிடலாம். காலை இழுக்கும் முதலையும் என்னை விட்டுவிடலாம். ஒருவன் சந்நியாசியானால், அவனுக்கு முந்தைய இருபத்தியொரு தலைமுறையினருக்கு நற்கதி கிடைக்கும். அதனால் உனக்கும் அப்படி ஸித்திக்கும்…’

பேச்சற்று நின்றாள் ஆர்யாம்பா. அவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

`அம்மா… நீரில் நின்றுகொண்டுதான் துறவற தீட்சை மேற்கொள்வதற்கான மந்திரத்தைச் சொல்லி, மனதினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் நீரின் நடுவிலேயே இருக்கிறேன்... அதனால்தான் சந்நியாசம் வாங்கிக்கொள்ள இதுதான் தக்க தருணமென்று கருதுகிறேன். இருப்பினும், உன் அனுமதியில்லாமல் சந்நியாசம் வாங்கிக்கொள்ள எனக்கு உரிமை யில்லை. அதனால், நீதான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்று சங்கரர் தீர்மானமாகச் சொல்லவும், குழம்பினாள் ஆர்யாம்பா.

தன்னுடன் வாசம் செய்யாவிட்டாலும் மகன் எங்கேயாவது துறவியாக இருக்கட்டும். ஆயுசோடு இருந்தால் எப்போதாவது அவனைப் பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியாவிட்டாலும், குழந்தை எங்கேயாவது சௌக்கியமாக இருந்துகொண்டி ருந்தால் போதும் என்று நினைத்தாள். இருப்பினும், ‘சந்நியாசம் வாங்கிக்கோ’ என்று ஒரு தாயாரால் சர்வ சாதாரணமாக சொல்லிவிட முடியாதே!

``சங்கரா! உனக்கு எப்படி தோன்றுகிறதோ, உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்துகொள்…’ என்றாள்’’

இப்படி, சங்கரர் துறவியான வரலாற்றைக் கணவர் சொல்லி முடிக்க, மகாலட்சுமியின் மனம் லேசானது. முன்ஜன்ம புண்ணியத்தால் தான் ஈன்றெடுத்த மகன் சுவாமிநாதன், ஒரு புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பூரித்துப்போனாள்.

‘`சந்திரசேகரா…’’ என்று உணர்ச்சி மிகுதியால் முணுமுணுத்தாள் மகாலட்சுமி.
According To Records, In March 24th 1954 Sri JAYENDRA PERIYAVA Got Sanyasam From Maha PERIYAVA. All The Devotees' Living Legend Sri MAHA PERIYAVA Once Explain Himself As ICHA SHAKTHI And JAYENDRA PERIYAVA As KRIYA SHAKTHI. Our JAYENDRA PERIYAVA Was Honoured As The 68th Aacharya of Sri Mutt In 1954. Once After Ten Years Of His Arrival To Sri Mutt He Made A Wonderful Service To Our Society And Hindu Dharma Through Sri Mutt Throughout The World. All The Assets Belongs To Sri Mutt Including Hospitals, Schools, Colleges, Kakyanam Mandapam, Ashramam, Etc In India Belongs To Sri JAYENDRA SARASWATHI ONLY.
ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள், ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ பரமாச்சார்யாள், என்று உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன்னை இச்சா சக்தி என்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கிரியா சக்தி என்றும் போற்றியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது குரு ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அவர்களால் மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்காம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆச்சார்யராக நியமிக்க பட்டதில் இருந்து பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் பல செய்து நமது சனாதன மதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு இங்கே சொல்லி மாளாது. இருப்பினும் அடியேனுக்கு தெரிந்ததை சொல்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னற்ற பாடசாலைகள், சங்கரா பள்ளிகள், சங்கரா சிபிஎஸ் பள்ளி பாடங்களுடன் சேர்த்து வேத பாடசாலைகள், சங்கரா கல்லூரிகள், சங்கரா கண் மருத்துவமனைகள், சங்கரா முதியோர் இல்லங்கள், சங்கரா ஆயூர் வேதா கல்லூரிகள், ஜன கல்யான், சங்கரா சாரிட்டபுள் டிரஸ்ட், சங்கரா மருத்துவமனைகள், பாரத தேசம் முழுவதும் சங்கர மடங்கள் நிருவியது, சங்கரா கல்யாண மண்டபங்கள், காலடியில் ஆதிசங்கரருக்கு கீர்த்தி ஸ்தம்பம்  என்று நம் நம் புது பெரியவாளால் தொடங்கப்பட்டு இன்று வரை  ஏராளமான மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வருவது நம் புது பெரியவாளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு சன்யாசியாக மட்டும் இல்லாமல் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய சேவை இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து. இது போல் இன்னும் ஏராளமான பணிகளை செய்தது காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி ஸ்வாமிகளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையாகாது.