சனி, 10 ஆகஸ்ட், 2019

வரலக்ஷ்மி விரதக் கதை !

ஜெய மங்களா சுப மங்களா
ஜெய மங்களா சுப மங்களா

1. வரலக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட சிருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும்  (ஜெய)

2. கைலா சந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேஸ்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)

3. சொல் ப்ரியே ஈஸ்வரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விரதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)

4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)

5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியளாம் (ஜெய)

 6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லை (ஜெய)

7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)

8. என்னை நீ பூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)

9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டுகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)

 10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் என்று
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள்  (ஜெய)

 11. நித்யமா வரலக்ஷ்மி முக்தி தரும் நாயகி
சித்தத்திலே மறைஞ்சு செல்வமாக்கும்
சித்திரம் எழுதியே சிறப்பாக கிருகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முகூர்த்தம் பார்த்து (ஜெய)

 12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும்
கட்டின பூப்பந்தல் கல்யாணிக்கு
ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள்  (ஜெய)

13. நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜெய)

 14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி சகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள்  (ஜெய)

15. வரலக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாசனங்கள் போட்டு
கற்பூரஹாரத்தி காக்ஷியுடனே எடுத்து
கைபிடித்து கிருகந்தனிலே அழைத்து வந்தார்  (ஜெய)

16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிருதறி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு (ஜெய)

17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜெய)

 18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார்  ஜெய)

19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமாங்கல்யம் புது பவழமாலைகளும்
மட்டில்லா  பூஷணங்கள் எடுத்து நிறைத்தாள்  (ஜெய)

  20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல
நத்து மூக்குத்தியும் நல்ல முத்து புல்லாக்கு
அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள் (ஜெய)

21. மல்லிகை செண்பகம் மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் சூட‌  மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலை மாலை
கட்டிவைத்து மலர் சொரிந்தாள் வரலக்ஷ்மிக்கு  (ஜெய)

22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலக்ஷ்மி புகழ்ந்து கொண்டாள் (ஜெய)

  23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும்  (ஜெய)

 24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலையுடன் தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினார் (ஜெய)

25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலக்ஷ்மி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தார்  (ஜெய)

26.பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா சாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள்  (ஜெய)

 27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க
ரம்பை திலோத்தமை நாட்டியமாட
சந்ததம் பக்தர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
 இந்த விரதம்போல உலகத்தில் இல்லை என்றார் (ஜெய)

  28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை போட்டு
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர்
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான
மங்கையர்கள் சட்டமாக பூஜிக்க வந்திருந்தார்  (ஜெய)

29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார்  (ஜெய)

30. பூவினால் பூஜித்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான  நைவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார்  (ஜெய)

 31. வடையுடனே அதிரசம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய்,
பானகம் வடைப் பருப்பு பஞ்சாமிருதம் தேனும்
 இளநீரும் செங்கரும்பும் எடுத்து நிறைந்தார் (ஜெய)

 32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சர்க்கரைப் பொங்கலுடன் சிறுபருப்பு பொங்கல்
கர்ச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யான்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லக்ஷ்மிக்கு  (ஜெய)

 33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்த க்ஷணம் மேளம் அமர்த்தி கையினால்  (ஜெய)

 34. பந்துக்களோடே பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு  (ஜெய)

 35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரசை வணங்கிக்கொண்டு  (ஜெய)

36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷ்மிஅம்மன் ஆதிலக்ஷ்மி அம்மன்
பொன்னுலக்ஷ்மி அம்மன் புகழும் லக்ஷ்மி அம்மன் (ஜெய)

37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லக்ஷ்மி சகல லக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி அம்மன் எல்லோரும் வந்திருந்து
கஷ்டமெல்லாம் தீர்த்து கண்டவுடனே (ஜெய)

38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாறி  பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜெய)

39. அள்ளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புசிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜெய)

40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துக்கொடுத்தாள் (ஜெய)

41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்ட லக்ஷ்மியுடனே கிருகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி
பவழஹாரத்தி பரதேவதைக்கு (ஜெய)

42. மாணிக்க ஹாரத்தி வரலக்ஷ்மி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இற‌க்கிகொண்டு இருக்கவே
வரலக்ஷ்மி இஷ்டமாய் கிருகந்தனில்
பரிபூர்ணமாகவே இருந்து கொண்டாள் (ஜெய)

43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை  (ஜெய)

44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜெய)

45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷ்மியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபியரை மயங்கவைத்த கோவிந்தருக்கும்  (ஜெய)

46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் கண்ணனான கிருஷ்ணருக்கும்
ஜெய மங்களா சுப மங்களா !
ஜெய மங்களா சுப மங்களா !

இந்தப் பாடலைத் தவறாமல் நோன்பு மறுநாள் சனிக்கிழமை சாயங்காலம், அம்மனை வழியனுப்பும்போது பாடப்படும் பாடலிது. வரலக்ஷ்மி விரதக் கதை முழுவதும் இந்தப் பாடலில் இருப்பதால், கதை படித்த பலனும் கிட்டும்.

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
அக்³நிஸஹஸ்ரநாமஸ்தோத்ரம்

ஶ்ரீகு³ரு: ஶரணம் ।
ஶ்ரீகாஞ்சீகாமகோடீமட²பயதிவரம் ஶங்கரார்யஸ்வரூபம்
ஸுஜ்ஞாநம் ஸார்வபௌ⁴மம் ஸகலமதவிதா³ம் பாலகம் த்³வைதஹீநம் ।
காலே கல்கிப்ரபா⁴வாந்நிக³மகி³ரிமத⁴ஸ்தாத்பதந்தம் வஹந்தம்
வந்தே³ கூர்மஸ்வரூபம் ஹரிமிவ ஸததம் சந்த்³ரமௌளிம் யதீந்த்³ரம் ॥

ஶ்ரீமந்மஹாதே³வயதீஶ்வராணாம்
கராப்³ஜஜாதம் ஸுயமீந்த்³ரமுக்²யம் ।
ஸர்வஜ்ஞகல்பம் விதி⁴விஷ்ணுரூபம்
ஶ்ரீசந்த்³ரமௌளீந்த்³ரயதிம் நமாமி ॥

ஶ்ரீஶங்கராசர்யகு³ருஸ்வரூபம்
ஶ்ரீசந்த்³ரமௌளீந்த்³ரகராப்³ஜஜாதம் ।
ஶ்ரீகாமகோடீந்த்³ரயதிம் வரேண்யம்
ஶ்ரீமஜ்ஜயேந்த்³ரம் ஶரணம் ப்ரபத்³யே ॥

வேதா³க்²யவ்ருʼக்ஷமநிஶம் பரிபாலயந்தம்
வித்³வத்³வரேண்யபததாம் பு⁴வி கல்பவ்ருʼக்ஷம் ।
நித்யம் ஹஸந்முக²மநோஜ்ஞஶஶிஸ்வரூபம்
ஶ்ரீமஜ்ஜயேந்த்³ரமநிஶம் ஶரணம் ப்ரபத்³யே ॥

ஜக³த்³கு³ருப்⁴யாம் விபு³தா⁴ர்சிதாப்⁴யாம்
ஶ்ரீசந்த்³ரமௌளீந்த்³ரஜயேந்த்³ரகாப்⁴யாம் ।
ஶ்ரீகாமகோடீஶ்வரஶங்கராப்⁴யாம்
நம: ஸுவித்³ரக்ஷணதீ³க்ஷிதாப்⁴யாம் ॥

॥ இதி ஶ்ரீகு³ருசரணதா³ஸ: ஸாம்ப³தீ³க்ஷிதஶர்மா ஹரித: -
ஶ்ரீக்ஷேத்ரகோ³கர்ணம் ॥

ஶ்ரீக³ணேஶாய நம: ।

வாங்முக²ம் -
மாதரம் பிதரம் நத்வா லக்ஷ்மீம் தா³மோத³ரம் ததா² ॥

பூர்வை: ஸதே³டி³தம் சாக்³நிம் கு³ரும் க³ணபதிம் விபு⁴ம் ॥ 1॥

அக்³நேர்நாமஸஸ்ராணாம் ஸங்க்³ரஹம் வேத³தோ மயா ।
உத்³த்⁴ருʼத்ய க்ரியதே ப⁴க்த்யா சித்ரபா⁴நுப்ரதுஷ்டயே ॥ 2॥

அத்ர ப்ரமாணம்ருʼக்³வேதே³ ஶுந:ஶேபோ வஸுஶ்ச தௌ ।
யதா³ஹதுர்மந்த்ரவர்ணைர்மர்தா, அக்³நேர்வயம், இதி ॥ 3॥

காண்வோவஸு:
மர்தா அம॑ர்த்யஸ்ய தே॒ பூ⁴ரி॒நாம॑ மநாமஹே ।
விப்ரா॑ஸோ ஜா॒தவே॑த³ஸ: ॥

ஆஜீக³ர்தி: ஶுந:ஶேப: -
அ॒க்³நேர்வ॒யம் ப்ர॑த॒²மஸ்யா॒ம்ருʼதா॑நாம்॒ மநா॑மஹே॒ சாரு॑தே॒³வஸ்ய॒ நாம॑ ।
ஸ நோ॑ ம॒ஹ்யா அதி॑³தயே॒ முந॑ர்தா³த் பி॒தரம்॑ ச த்³ரு॒ʼஶேயம்॑ மா॒தரம்॑ ச ॥

அஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய ருʼஷி: ஶ்ரீப்³ரஹ்மணஸ்பதி: ।
ஸர்வமந்த்ரப்ரபு:⁴ ஸாக்ஷாத³க்³நிரேவ ஹி தே³வதா ॥ 4॥

அநுஷ்டுப் த்ரிஷ்டுப் ஶக்வர்யஶ்ச²ந்தா³ம்ஸி ஸுமஹந்தி ச ।
த⁴ர்மார்த²காமமோக்ஷார்த²ம் விநியோகோ³ ஜபாதி³பு ॥ 5॥

த்⁴யாநம் சத்வாரி ஶ்ருʼங்கே³தி வாமதே³வர்ஷி த³ர்ஶநம் ।
ஆக்³நேயம் தை³வதம் த்ரிஷ்டுப் ச²ந்தோ³ ஜாப்யே ஹி யுஜ்யதே ॥ 6॥

ௐ சத்வாரி॒ஶ்ருʼங்கா॒³ த்ரயோ॑ அஸ்ய॒ பாதா॒³ த்³வே ஶீ॒ர்ஷே ஸ॒ப்த ஹஸ்தா॑ஸோ அஸ்ய ।
த்ரிதா॑⁴ ப்³த்³தோ⁴ வ்ரு॑ʼஷ॒போ⁴ ரோ॑ரவீதி ம॒ஹே தே॒³வோ ம॑ர்த்யா॒ஆவி॑வேஶ ॥

ௐ ஶ்ரீக³ணேஶாய நம: ।
ௐ ஶ்ரீஸரஸ்வத்யை நம: ।

அதா²க்³நிஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ।
ௐ அக்³நிர்வஸுபதிர்ஹோதா தீ³தி³வீ ரத்நதா⁴தம: ।
ஆத்⁴ரஸாசித்பிதா ஜாத: ஶீர்ஷத: ஸுக்ரதுர்யுவா ॥ 1॥  var  ஆத்⁴ரஸ்யசித்பிதா

பா⁴ஸாகேதுர்ப்³ருʼஹத்கேதுர்ப்³ருʼஹத³ர்சா: கவிக்ரது:
ஸத்ய: ஸத்யயஜோ தூ³தோ விஶ்வவேதா³ அபஸ்தம: ॥ 2॥

ஸ்வே த³மே வர்த⁴மாநோঽர்ஹந்தநூக்ருʼந்ம்ருʼளயத்தம: ।
க்ஷேமோ கு³ஹாசரந்நாபி:⁴ ப்ருʼதி²வ்யா: ஸப்தமாநுஷ: ॥ 3॥

அத்³ரே: ஸூநுர்நராஶம்ஸோ ப³ர்ஹி: ஸ்வர்ணர ஈளித: ।
பாவகோ ரேரிஹத்க்ஷாமா க்⁴ருʼதப்ருʼஷ்டோ² வநஸ்பதி: ॥ 4॥

ஸுஜிஹ்வோ யஜ்ஞநீருக்ஷந்ஸத்யமந்மா ஸுமத்³ரத:² ।
ஸமுத்³ர: ஸுத்யஜோ மித்ரோ மியேத்⁴யோ ந்ருʼமணோঽர்யமா ॥ 5॥

பூர்வ்யஶ்சித்ரரத:² ஸ்பார்ஹ: ஸுப்ரதா:² ஸஹஸோயஹு: ।
யஜ்வா விமாநோ ரஜஸா ரக்ஷோஹாঽத²ர்யுரத்⁴ரிகு:³ ॥ 6॥

ஸஹந்யோ யஜ்ஞியோ தூ⁴மகேதுர்வாஜோঽங்கி³ரஸ்தம: ।
புருசந்த்³ரோ வபூரேவத³நிமாநோ விசர்ஷணி: ॥ 7॥

த்³விமாதா மேதி⁴ரோ தே³வோ தே³வாநாம் ஶந்தமோ வஸு: ।
சோதி³ஷ்டோ² வ்ருʼஷப⁴ஶ்சாரூ: புரோகா:³ புஷ்டிவர்த⁴ந: ॥ 8॥

ராயோத⁴ர்தா மந்த்³ரஜிஹ்வ: கல்யாணோ வஸுவித்தம: ।
ஜாமி: பூஷா வாவஶாநோ வ்ரதபா அஸ்த்ருʼதோঽந்தர: ॥ 9॥

ஸம்மிஶ்லோঽங்கி³ரஸாம் ஜ்யேஷ்டோ க³வாம் த்ராதா மஹிவ்ரத: ।
விஶாம் தூ³தஸ்தபுர்மூர்தா⁴ ஸ்வத்⁴வரோ தே³வவீதம: ॥ 10॥

ப்ரத்நோ த⁴நஸ்ப்ருʼத³விதா தபுர்ஜம்மோ மஹாக³ய: ।
அருஷோঽதிதி²ரஸ்யத்³மஸத்³வா த³க்ஷபதி: ஸஹ: ॥ 11॥

துவிஷ்மாஞ்ச²வஸாஸூநு: ஸ்வதா⁴வா ஜ்யோதிரப்ஸுஜா: ।
அத்⁴வராணாம் ரதீ² ஶ்ரேஷ்ட:² ஸ்வாஹுதோ வாதசோதி³த: ॥ 12॥

த⁴ர்ணஸிர்போ⁴ஜநஸ்த்ராதா மது⁴ஜிஹ்வோ மநுர்ஹித: ।
நமஸ்ய ருʼக்³மியோ ஜீர: ப்ரசேதா: ப்ரபு⁴ராஶ்ரித: ॥ 13॥

ரோஹித³ஶ்வ: ஸுப்ரணீதி: ஸ்வராட்³க்³ருʼத்ஸ: ஸுதீ³தி³தி: ।
த³க்ஷோ விவஸ்வதோ தூ³தோ ப்³ருʼஹத்³பா⁴ ரயிவாந் ரயி: ॥ 14॥

அத்⁴வராணாம் பதி: ஸம்ராட்³ க்⁴ருʼஷ்விர்தா³ஸ்வத்³விஶாம் ப்ரிய:
க்⁴ருʼதஸ்நுரதி³தி: ஸ்வர்வாஞ்ச்²ருத்கர்ணோ ந்ருʼதமோ யம: ॥ 15॥

அங்கி³ரா: ஸஹஸ:ஸூநுர்வஸூநாமரதி: க்ரது: ।
ஸப்தஹோதா கேவலோঽப்யோ விபா⁴வா மக⁴வா து⁴நி: ॥ 16॥

ஸமிதா⁴ந: ப்ரதரண: ப்ருʼக்ஷஸ்தமஸி தஸ்தி²வாந் ।
வைஶ்வாநரோ தி³வோமூர்தா⁴ ரோத³ஸ்யோரரதி: ப்ரிய: ॥ 17॥

யஜ்ஞாநாம் நாபி⁴ரத்ரி: ஸத்ஸிந்தூ⁴நாஞ்ஜாமிராஹுத: ।
மாதரிஶ்வா வஸுதி⁴திர்வேதா⁴ ஊர்த்⁴வஸ்தவோ ஹித: ॥ 18॥

அஶ்வீ பூ⁴ர்ணிரிநோ வாமோ ஜநீநாம் பதிரந்தம: ।
பாயுர்மர்தேஷு மித்ரோঽர்ய: ஶ்ருஷ்டி: ஸாது⁴ரஹிர்ருʼபு:⁴ ॥ 19॥

ப⁴த்³ரோঽஜுர்யோ ஹவ்யதா³திஶ்சிகித்வாந்விஶ்வஶுக்ப்ருʼணந் ।
ஶம்ஸ: ஸம்ஜ்ஞாதரூபோঽபாங்க³ர்ப⁴ஸ்துவிஶ்ரவஸ்தம: ॥ 20॥

க்³ருʼத்⁴நு:: ஶூர: ஸுசந்த்³ரோঽஶ்வோঽத³ப்³தோ⁴ வேத⁴ஸ்தம: ஶிஶு: ।
வாஜஶ்ரவா ஹர்யமாண ஈஶாநோ விஶ்வசர்ஷணி: ॥ 21॥

புருப்ரஶஸ்தோ வாத்⁴ர்யஶ்வோঽநூநவர்சா: கநிக்ரத³த் ।
ஹரிகேஶோ ரதீ² மர்ய: ஸ்வஶ்வோ ராஜந்துவிஷ்வணி: ॥ 22॥

திக்³மஜம்ப:⁴ ஸஹஸ்ராக்ஷஸ்திக்³மஶோசிர்த்³ருஹந்தர: ।
ககுது³க்த்²யோ விஶாம் கோ³பா மம்ஹிஷ்டோ² பா⁴ரதோ ம்ருʼக:³ ॥ 23॥

ஶதாத்மோருஜ்ரயா வீரஶ்சேகிதாநோ த்⁴ருʼதவ்ரத: ।
தநூருக் சேதநோঽபூர்வ்யோ வ்யத்⁴வா சக்ரிர்தி⁴யாவஸு: ॥ 24॥

ஶ்ரித: ஸிந்து⁴ஷு விஶ்வேஷ்வநேஹா ஜ்யேஷ்ட²ஶ்சநோஹித: ।
அதா³ப்⁴யஶ்சோத³ ருʼதுபா அம்ருʼக்த: ஶவஸஸ்பதி: ॥ 25॥

கு³ஹாஸத்³வீருதா⁴ம் க³ர்ப:⁴ ஸுமேதா:⁴ ஶுஷ்மிணஸ்பதி: ।
ஸ்ருʼப்ரதா³நு: கவிதம: ஶ்விதாநோ யஜ்ஞஸாத⁴ந: ॥ 26॥

துவித்³யும்நோঽருணஸ்தூபோ விஶ்வவித்³கா³துவித்தம: ।
ஶ்ருஷ்டீவாஞ்ச்²ரேணித³ந்தா³தா ப்ருʼது²பாஜா: ஸஹஸ்க்ருʼத: ॥ 27॥

அபி⁴ஶ்ரீ: ஸத்யவாக்த்வேஷோ மாத்ரோ: புத்ரோ மஹிந்தம: ।
க்⁴ருʼதயோநிர்தி³த்³ருʼக்ஷேயோ விஶ்வதே³வ்யோ ஹிரண்மய: ॥ 28॥  var  ஹிரண்யய:

அநுஷத்ய: க்ருʼஷ்ணஜம்ஹா: ஶதநீதோ²ঽப்ரதிஷ்குத: ।
இளாயா: புத்ர ஈளேந்யோ விசேதா வாக⁴தாமுஶிக் ॥ 29॥

வீதோঽர்கோ மாநுஷோঽஜஸ்ரோ விப்ர: ஶ்ரோதோர்வியா வ்ருʼஷ:
ஆயோயுவாந ஆபா³தோ⁴ வீளுஜம்போ⁴ ஹரிவ்ரத: ॥ 30॥

தி³வ:கேதுர்பு⁴வோமூர்தா⁴ ஸரண்யந்து³ர்த³ப:⁴ ஸுருக் ।
தி³வ்யேந ஶோசிஷா ராஜந்ஸுதீ³திரிஷிரோ ப்³ருʼஹத் ॥ 31॥

ஸுத்³ருʼஶீகோ விஶாங்கேது: புருஹூத உபஸ்த²ஸத்³ ।
புரோயாவா புர்வணீகோঽநிவ்ருʼத: ஸத்பதிர்த்³யுமாந் ॥ 32॥

யஜ்ஞஸ்ய வித்³வாநவ்யத்²யோ து³ர்வர்து ர்பூ⁴ர்ஜயந்நபாத் ।
அம்ருʼத: ஸௌப⁴க³ஸ்யேஶ: ஸ்வராஜ்யோ தே³வஹூதம: ॥ 33॥

கீலாலபா வீதிஹோத்ரோ க்⁴ருʼதநிர்ணிக் ஸநஶ்ருத: ।
ஶுசிவர்ணஸ்துவிக்³ரீவோ பா⁴ரதீ ஶோசிஷஸ்பதி: ॥ 34॥

ஸோமப்ருʼஷ்டோ² ஹிரிஶ்மஶ்ருர்ப⁴த்³ரஶோசிர்ஜுகு³ர்வணி: ।
ருʼத்விக் பூர்வேபி⁴ர்ருʼஷிபி⁴ரீட்³யஶ்சித்ரஶ்ரவஸ்தம: ॥ 35॥

பீ⁴ம: ஸ்தியாநாம் வ்ருʼஷபோ⁴ நூதநைரீட்³ய ஆஸுர: ।
ஸ்தபூ⁴யமாநோঽத்⁴வராணாம் கோ³பா விஶ்பதிரஸ்மயு: ॥ 36॥

ருʼதஸ்ய கோ³பா ஜீராஶ்வோ ஜோஹூத்ரோ த³ம்பதி: கவி: ।
ருʼதஜாதோ த்³யுக்ஷவசா ஜுஹ்வாஸ்யோঽமீவசாதந: ॥ 37॥

ஸோமகோ³பா: ஶுக்த்ரஶோசி ர்க்⁴ருʼதாஹவந ஆயஜி: ।
அஸந்தி³த: ஸத்யத⁴ர்மா ஶஶமாந: ஶுஶுக்வநி: ॥ 38॥

வாதஜூதோ விஶ்வரூபஸ்த்வஷ்டா சாருதமோ மஹாந் ।
இளா ஸரஸ்வதீ ஹர்ஷந்திஸ்த்ரோ தே³வ்யோ மயோபு⁴வ: ॥ 39॥

அர்வா ஸுபேஶஸௌ தே³வ்யௌ ஹோதாரௌ ஸ்வர்பதி: ஸுபா:⁴ ।
தே³வீர்த்³வாரோ ஜராபோ³தோ⁴ ஹூயமாநோ விபா⁴வஸு: ॥ 40॥

ஸஹஸாவாந் மர்ம்ருʼஜேந்யோ ஹிம்ஸ்த்ரோঽம்ருʼதஸ்ய ரக்ஷிதா ।
த்³ரவிணோதா³ ப்⁴ராஜமாநோ த்⁴ருʼஷ்ணுரூர்ஜாம்பதி: பிதா ॥ 41॥

ஸதா³யவிஷ்டோ² வருணோ வரேண்யோ பா⁴ஜயு: ப்ருʼது:² ।
வந்த்³யோத்⁴வராணாம் ஸம்ராஜந் ஸுஶேவோ தீ⁴ர்ருʼஷி: ஶிவ: ॥ 42॥

ப்ருʼது²ப்ரகா³மா விஶ்வாயுர்மீட்⁴வாந்யந்தா ஶுசத் ஸகா² ।
அநவத்³ய: பப்ரதா²ந: ஸ்தவமாநோ விபு:⁴ ஶயு: ॥ 43॥

ஶ்வைத்ரேய: ப்ரத²மோ த்³யுக்ஷோ ப்³ருʼஹது³க்ஷா ஸுக்ருʼத்தர: ।
வயஸ்க்ருʼத³க்³நித்தோகஸ்ய த்ராதா ப்ரீதோ விது³ஷ்டர: ॥ 44॥

திக்³மாநீகோ ஹோத்ரவாஹோ விகா³ஹ: ஸ்வதவாந்ப்⁴ருʼமி: ।
ஜுஜுஷாண: ஸப்தரஶ்மிர்ருʼஷிக்ருʼத்துர்வணி: ஶுசி: ॥ 45॥

பூ⁴ரிஜந்மா ஸமநகா:³ ப்ரஶஸ்தோ விஶ்வதஸ்ப்ருʼது:² ।
வாஜஸ்ய ராஜா ஶ்ருத்யஸ்ய ராஜா விஶ்வப⁴ரா வ்ருʼஷா ॥ 46॥

ஸத்யதாதிர்ஜாதவேதா³ஸ்த்வாஷ்டோঽமர்த்யோ வஸுஶ்ரவா: ।
ஸத்யஶுஷ்மோ பா⁴ருʼஜீகோঽத்⁴வரஶ்ரீ: ஸப்ரத²ஸ்தம: ॥ 47॥

புருரூபோ ப்³ருʼஹத்³பா⁴நுர்விஶ்வதே³வோ மருத்ஸக:² ।
ருஶதூ³ர்மிர்ஜேஹமாநோ ப்⁴ருʼக³வாந் வ்ருʼத்ரஹா க்ஷய: ॥ 48॥

வாமஸ்யராதி: க்ருʼஷ்டீநாம் ராஜா ருத்³ர: ஶசீவஸு: ।
த³க்ஷை: ஸுத³க்ஷ இந்தா⁴நோ விஶ்வக்ருʼஷ்டிர்ப்³ருʼஹஸ்பதி: ॥ 49॥

அபாம்ஸத⁴ஸ்தோ² வஸுவித்³ரண்வோ பு⁴ஜ்ம விஶாம்பதி: ।
ஸஹஸ்ரவல்ஶோ த⁴ருணோ வஹ்நி: ஶம்பு:⁴ ஸஹந்தம: ॥ 50॥

அச்சி²த்³ரோதிஶ்சித்ரஶோசிர்ஹ்ருʼஷீவாநதிதி²ர்விஶாம் ।
து³ர்த⁴ரீது: ஸபர்யேண்யோ வேதி³ஷச்சித்ர ஆதநி: ॥ 51॥

தை³வ்ய:கேதுஸ்திக்³மஹேதி: கநீநாஞ்ஜார ஆநவ: ।
ஊர்ஜாஹுதிர்ருʼதஶ்சேத்ய: ப்ரஜாநந்ஸர்பிராஸுதி: ॥ 52॥

கு³ஹாசதஞ்சித்ரமஹா த்³வ்ரந்ந: ஸூரோ நிதோஶந: ।
க்ரத்வாசேதிஷ்ட² ருʼதசித்த்ரிவரூத:² ஸஹஸ்ரஜித் ॥ 53॥

ஸந்த்³ருʼக்³ஜூர்ணி: க்ஷோதா³அயுருஷர்பு⁴த்³வாஜஸாதம: ।
நித்ய: ஸூநுர்ஜந்ய ருʼதப்ரஜாதோ வ்ருʼத்ரஹந்தம: ॥ 54॥

வர்ஷிஷ்ட:² ஸ்ப்ருʼஹயத்³வர்ணோ க்⁴ருʼணிர்ஜாதோ யஶஸ்தம: ।
வநேஷு ஜாயு: புத்ர:ஸந்பிதா ஶுக்த்ரோ து³ரோணயு: ॥ 55॥

ஆஶுஹேம: க்ஷயத்³கோ⁴ரோ தே³வாநாம் கேதுரஹ்நய: ।
து³ரோகஶோசி: பலித: ஸுவர்சா ப³ஹுலோঽத்³பு⁴த: ॥ 56॥

ராஜா ரயீணாம் நிஷத்தோ தூ⁴ர்ஷத்³ரூக்ஷோ த்⁴ருவோ ஹரி: ।
த⁴ர்மோ த்³விஜந்மா ஸுதுக: ஶுஶுக்வாஞ்ஜார உக்ஷித: ॥ 57॥

நாத்³ய: ஸிஷ்ணுர்த³தி:⁴ ஸிம்ஹ ஊர்த்⁴வரோசிரநாநத: ।
ஶேவ: பிதூநாம் ஸ்வாத்³மாঽঽஹாவோঽப்ஸு ஸிம்ஹ இவ ஶ்ரித: ॥ 58॥

க³ர்போ⁴ வநாநாஞ்சரதா²ம் க³ர்போ⁴ யஜ்ஞ: புரூவஸு: ।
க்ஷபாவாந்ந்ருʼபதிர்மேத்⁴யோ விஶ்வ: ஶ்வேதோঽபரீவ்ருʼத: ॥ 59॥

ஸ்தா²தாம் க³ர்ப:⁴ ஶுக்ரவர்சாஸ்தஸ்தி²வாந் பரமே பதே³ ।
வித்³வாந்மர்தாகு³ம்ஶ்ச தே³வாநாம் ஜந்ம ஶ்யேத: ஶுசிவ்ரத: ॥ 60॥

ருʼதப்ரவீத: ஸுப்³ரஹ்மா ஸவிதா சித்திரப்ஸுஷத்³ ।
சந்த்³ர: புரஸ்தூர்ணிதம: ஸ்பந்த்³ரோ தே³வேஷு ஜாக்³ருʼவி: ॥ 61॥

புர ஏதா ஸத்யதர ருʼதாவா தே³வவாஹந: ।
அதந்த்³ர இந்த்³ர: ருʼதுவிச்சோ²சிஷ்ட:² ஶுசித³ச்சி²த: ॥ 62॥

ஹிரண்யகேஶ: ஸுப்ரீதோ வஸூநாம் ஜநிதாঽஸுர: ।
ருʼப்⁴வா ஸுஶர்மா தே³வாவீர்த³த⁴த்³ரத்நாநி தா³ஶுஷே ॥ 63॥

பூர்வோ த³த்⁴ருʼக்³தி³வஸ்பாயு: போதா தீ⁴ர: ஸஹஸ்ரஸா: ।
ஸும்ருʼளீகோ தே³வகாமோ நவஜாதோ த⁴நஞ்ஜய: ॥ 64॥

ஶஶ்வத்தமோ நீலப்ருʼஷ்ட² ருʼஷ்வோ மந்த்³ரதரோঽக்³ரிய: ।
ஸ்வர்சிரம்ஶோ தா³ருரஸ்ரிச்சி²திப்ருʼஷ்டோ² நமோவஹந் ॥ 65॥

பந்யாம்ஸஸ்தருண: ஸம்ராட் சர்ஷணீநாம் விசக்ஷண: ।
ஸ்வங்க:³ ஸுவீர: க்ருʼஷ்ணாத்⁴வா ஸுப்ரதூர்திரிளோ மஹீ ॥ 66॥

யவிஷ்ட்²யோ த³க்ஷுஷவ்ருʼகோ வாஶீமாநவநோ க்⁴ருʼதம் ।
ஈவாநஸ்தா விஶ்வவாராஶ்சித்ரபா⁴நுரபாம் நபாத் ॥ 67॥

ந்ருʼசக்ஷா ஊர்ஜயஞ்ச்சீ²ர: ஸஹோஜா அத்³பு⁴தக்த்ரது: ।
ப³ஹுநாமவமோঽபி⁴த்³யுர்பா⁴நுர்மித்ரமஹோ ப⁴க:³ ॥ 68॥

வ்ருʼஶ்சத்³வநோ ரோருசாந: ப்ருʼதி²வ்யா: பதிராத்⁴ருʼஷ: ।
தி³வ: ஸூநுர்த³ஸ்மவர்சா யந்துரோ து³ஷ்டரோ ஜயந் ॥ 69॥

ஸ்வர்வித்³க³ணஶ்ரீரதி²ரோ நாக: ஶுப்⁴ரோঽப்துர: ஸஸ: ।
ஹிரிஶிப்ரோ விஶ்வமிந்வோ ப்⁴ருʼகூ³ணாம் ராதிரத்³வயந் ॥ 70॥

ஸுஹோதா ஸுரண: ஸுத்³யௌர்மந்தா⁴தா ஸ்வவஸ: புமாந் ।
அஶ்வதா³வா ஶ்ரேஷ்ட²ஶோசிர்யஜீயாந்ஹர்யதோঽர்ணவ: ॥ 71॥

ஸுப்ரதீகஶ்சித்ரயாம: ஸ்வபி⁴ஷ்டிஶ்சக்ஷணீருஶந் ।
ப்³ருʼஹத்ஸூர: ப்ருʼஷ்டப³ந்து:⁴ ஶசீவாந்ஸம்யதஶ்சிகித் ॥ 72॥

விஶாமீட்³யோঽஹிம்ஸ்யமாநோ வயோதா⁴ கி³ர்வணாஸ்தபு: ।
வஶாந்ந உக்³ரோঽத்³வயாவீ த்ரிதா⁴துஸ்தரணி: ஸ்வயு: ॥ 73॥

த்ரயயாய்யஶ்சர்ஷணீநாம் ஹோதா வீளு: ப்ரஜாபதி: ।
கு³ஹமாநோ நிர்மதி²த: ஸுதா³நுரிஷிதோ யஜந் ॥ 74॥

மேதா⁴காரோ விப்ரவீர: க்ஷிதீநாம் வ்ருʼஷபோ⁴ঽரதி: ।
வாஜிந்தம: கண்வதமோ ஜரிதா மித்ரியோঽஜர: ॥ 75॥

ராயஸ்பதி: கூசித³ர்தீ² க்ருʼஷ்ணயாமோ தி³விக்ஷய: ।
க்⁴ருʼதப்ரதீகஶ்சேதிஷ்ட:² புருக்ஷு: ஸத்வநோঽக்ஷித: ॥ 76॥

நித்யஹோதா பூதத³க்ஷ: ககுத்³மாந் க்ரவ்யவாஹந: ।
தி³தி⁴ஷாய்யோ தி³த்³யுதாந: ஸுத்³யோத்மா த³ஸ்யுஹந்தம: ॥ 77॥

புருவார: புருதமோ ஜர்ஹ்ருʼஷாண: புரோஹித: ।
ஶுசிஜிஹ்வோ ஜர்பு⁴ராணோ ரேஜமாநஸ்தநூநபாத் ॥ 78॥

ஆதி³தேயோ தே³வதமோ தீ³ர்க⁴தந்து: புரந்த³ர: ।
தி³வியோநிர்த³ர்ஶதஶ்ரீர்ஜரமாண: புருப்ரிய: ॥ 79॥

ஜ்ரயஸாந: புருப்ரைஷோ விஶ்வதூர்தி: பிதுஷ்பிதா ।
ஸஹஸாந: ஸஞ்சிகித்வாந் தை³வோதா³ஸ: ஸஹோவ்ருʼத:⁴ ॥ 80॥

ஶோசிஷ்கேஶோ த்⁴ருʼஷத்³வர்ண: ஸுஜாத: புருசேதந: ।
விஶ்வஶ்ருஷ்டிர்விஶ்வவர்ய ஆயஜிஷ்ட:² ஸதா³நவ: ॥ 81॥

நேதா க்ஷிதீநாம் தை³வீநாம் விஶ்வாத:³ புருஶோப⁴ந: ।
யஜ்ஞவந்யுர்வஹ்நிதமோ ரம்ஸுஜிஹ்வோ கு³ஹாஹித: ॥ 82॥

த்ரிஷத⁴ஸ்தோ² விஶ்வதா⁴யா ஹோத்ராவித்³விஶ்வத³ர்ஶத: ।
சித்ரராதா:⁴ ஸூந்ருʼதாவாந் ஸத்³யோஜாத: பரிஷ்க்ருʼத: ॥ 83॥

சித்ரக்ஷத்ரோ வ்ருʼத்³த⁴ஶோசிர்வநிஷ்டோ ப்³ரஹ்மணஸ்பதி: ।
ப³ப்⁴ரி: பரஸ்பா உஷஸாமிகா⁴ந: ஸாஸஹி: ஸத்³ருʼக் ॥ 84॥

வாஜீ ப்ரஶம்ஸ்யோ மது⁴ப்ருʼக் சிகித்ரோ நக்ஷ்ய: ஸுத³க்ஷோঽத்³ருʼபிதோ வஸிஷ்ட:² ।
தி³வ்யோ ஜுஷாணோ ரகு⁴யத்ப்ரயஜ்யு: து³ர்ய: ஸுராதா:⁴ ப்ரயதோঽப்ரம்ருʼஷ்ய: ॥ 85॥

வாதோபதூ⁴தோ மஹிநாத்³ருʼஶேந்ய: ஶ்ரீணாமுதா³ரோ த⁴ருணோ ரயீணாம் ।
தீ³த்³யத்³ருருக்வ்வாந்த்³ரவிணஸ்யுரத்ய: ஶ்ரியம்வஸாந: ப்ரவபந்யஜிஷ்ட:² ॥ 86॥

வஸ்யோ விதா³நோ தி³விஜ: பநிஷ்டோ² த³ம்ய: பரிஜ்மா ஸுஹவோ விரூப: ।
ஜாமிர்ஜநாநாம் விஷிதோ வபுஷ்ய: ஶுக்ரேபி⁴ரங்கை³ரஜ ஆததந்வாந் ॥ 87॥

அத்⁴ருக்³வரூத்²ய: ஸுத்³ருʼஶீகரூப: ப்³ரஹ்மா விவித்³வாஞ்சிகிதுர்விபா⁴நு: । var அத்³ருஹ்வரூத்²ய:
த⁴ர்ணி ர்வித⁴ர்தா விவிசி: ஸ்வநீகோ யஹ்வ: ப்ரகேதோ வ்ருʼஷணஶ்சகாந: ॥ 88॥

ஜுஷ்டோ மநோதா ப்ரமதிர்விஹாயா: ஜேந்யோ ஹவிஷ்க்ருʼத் பிதுமாஞ்ச²விஷ்ட:² ।
மதி: ஸுபித்ர்ய: ஸஹஸீத்³ருʼஶாந: ஶுசிப்ரதீகோ விஷுணோ மிதத்³ரு: ॥ 89॥

த³வித்³யுதத்³வாஜபதிர்விஜாவா விஶ்வஸ்ய நாபி:⁴ ஸந்ருʼஜ:ஸுவ்ருʼக்தி: ।
திக்³ம: ஸுத³ம்ஸா ஹரிதஸ்தமோஹா ஜேதா ஜநாநாம் ததுரிர்வநர்கு:³ ॥ 90॥

ப்ரேஷ்டோ² த⁴நர்ச: ஸுஷகோ² தி⁴யந்தி:⁴ மந்யு:பயஸ்வாந்மஹிஷ: ஸமாந: ।
ஸூர்யோ க்⁴ருʼணீவாந் ரத²யுர்க்⁴ருʼதஶ்ரீ: ப்⁴ராதா ஶிமீவாந்பு⁴வநஸ்ய க³ர்ப:⁴ ॥ 91॥

ஸஹஸ்ரரேதா ந்ருʼஷத³ப்ரயுச்ச²ந் வேநோ வபவாந்ஸுஷுமஞ்சி²ஶாந: ।
மது⁴ப்ரதீக: ஸ்வயஶா: ஸஹீயாந் நவ்யோ முஹுர்கீ:³ ஸுப⁴கோ³ ரப⁴ஸ்வாந் ॥ 92॥

யஜ்ஞஸ்ய கேது: ஸுமநஸ்யமாந: தே³வ: ஶ்ரவஸ்யோ வயுநாநி வித்³வாந் ।
தி³வஸ்ப்ருʼதி²வ்யோரரதிர்ஹவிர்வாட் விஷ்ணூ ரத:² ஸுஷ்டுத ருʼஞ்ஜஸாந: ॥ 93॥

விஶ்வஸ்ய கேதுஶ்ச்யவந: ஸஹஸ்யோ ஹிரண்யரூப: ப்ரமஹா: ஸுஜம்ப:⁴ ।
ருஶத்³வஸாந: க்ருʼபநீள ருʼந்த⁴ந் க்ருʼத்வ்யோ க்⁴ருʼதாந்ந: புருத⁴ப்ரதீக: ॥ 94॥

ஸஹஸ்ரமுஷ்க: ஸுஶமீ த்ரிமூர்தா⁴ மந்த்³ர: ஸஹஸ்வாநிஷயந்தருத்ர: ।
த்ருʼஷுச்யுதஶ்சந்த்³ரரதோ²பு⁴ரண்யு: தா⁴ஸி: ஸுவேத:³ ஸமிதா⁴ ஸமித்³த:⁴ ॥ 95॥

ஹிரண்யவர்ண: ஶமிதா ஸுத³த்ர: யஜ்ஞஸ்ய நேதா ஸுதி⁴த: ஸுஶோக: ।
கவிப்ரஶஸ்த: ப்ரத²மோঽம்ருʼதாநாம் ஸஹஸ்ரஶ்ருʼங்கோ³ ரயிவித்³ரயீணாம் ॥ 96॥

ப்³ரத்⁴நோ ஹ்ருʼதி³ஸ்ப்ருʼக் ப்ரதி³வோதி³விஸ்ப்ருʼக் விப்⁴வா ஸுப³ந்து:⁴ ஸுயஜோ ஜரத்³விட் ।
அபாகசக்ஷா மது⁴ஹஸ்த்ய இத்³தோ⁴ த⁴ர்மஸ்த்ரிபஸ்த்யோ த்³ரவிணா ப்ரதிவ்ய: ॥ 97॥

புருஷ்டுத: க்ருʼஷ்ணபவி: ஸுஶிப்ர: பிஶங்க³ரூப: புருநிஷ்ட² ஏக: ।
ஹிரண்யத³ந்த: ஸுமக:² ஸுஹவ்யோ த³ஸ்மஸ்தபிஷ்ட:² ஸுஸமித்³த⁴ இர்ய: ॥ 98॥

ஸுத்³யுத் ஸுயஜ்ஞ: ஸுமநா ஸுரத்ந: ஸுஶ்ரீ: ஸுஸம்ஸத் ஸுரத:² ஸுஸந்த்³ருʼக் ।
தந்வா ஸுஜாதோ வஸுபி:⁴ ஸுஜாத: ஸுத்³ருʼக் ஸுதே³வ: ஸுப⁴ர: ஸுப³ர்ஹி: ॥

ஊர்ஜோநபாத்³ரயிபதி: ஸுவித³த்ர ஆபி:
      அக்ரோঽஜிரோ க்³ருʼஹபதி: புருவாரபுஷ்டி: ।
வித்³யுத்³ரத:² ஸுஸநிதா சதுரக்ஷ இஷ்டி:
      தீ³த்³யாந இந்து³ருருக்ருʼத்³த்⁴ருʼதகேஶ ஆஶு: ॥ 100॥

॥ இத்யக்³நிஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

அந்திம வாக் -
நாம்நாம் ஸஹஸ்ரஜாபேந ப்ரீத: ஶ்ரீஹவ்யவாஹந:
சதுர்ணாம் புருஷார்தா²நாம் தா³த ப⁴வது மே ப்ரபு:⁴ ॥ 1॥

நாத்ர நாம்நாம் பௌநருக்த்யம் ந சகாராதி³பூரணம் ।
ஶ்லோகாநாம் ஶதகேநைவ ஸஹஸ்ரம் க்³ரதி²தம் த்வித³ம் ॥ 2॥

ஶ்லோகாஶ்சதுரஶீதி: ஸ்யுராதி³தஸ்தா அநுஷ்டுப:⁴ ।
தத: பஞ்சத³ஶ த்ரிஷ்டுபி³ந்த்³ரவஜ்ரோபஜாதிபி:⁴ ॥ 3॥

ஏகாந்த்யா ஶக்கரீ ஸாஹி வஸந்ததிலகா மதா ।
ஸார்தை⁴காத³ஶகை: ஶ்லோகைர்நாம்நாமஷ்டோத்தரம் ஶதம் ॥ 4॥

ஸங்க்³ருʼஹீதாநி வேதா³ப்³தே⁴ரக்³நேரேவ மஹீயஸ: ।
ஓங்காரமாதௌ³ நாமாநி சதுர்த்²யந்தாநி தத்தத: ॥ 5॥

நமோঽந்தாநி ப்ரயோஜ்யாநி விநியோகே³ மநீஷிபி:⁴ ।
வைதி³கத்த்வாச்ச ஸர்வேஷாம் நாம்நாமந்தே ப்ரத³ர்ஶிதம் ॥ 6॥

ஸௌகர்யாய ஹி ஸர்வேஷாம் சதுர்த்²யந்தம் முதே³ மயா ।
நாம்நாம் விஶேஷஜ்ஞாநார்த²ம் மந்த்ராங்கஶ்ச ப்ரத³ர்ஶித: ॥ 7॥

॥ இதி ஶ்ரீகோ³கர்ணாபி⁴ஜநஸ்ய தீ³க்ஷிததா³மோத³ரஸூநோ:
ஸாம்ப³தீ³க்ஷிதஸ்ய க்ருʼதௌ அக்³நிஸஹஸ்ரநாமஸ்த்ரோத்ரம் ॥
மிகவும் அரிதான தகவல்கள் சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்.

1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழர்கள்.


செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நாச்சியார் கோவில்! கல் கருடன்!

கோவில் பெயரே ஊர் பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.

திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கி விட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர் பெயரும் நாச்சியார் கோவில் என்றாகி விட்டது. கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளை விட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம். இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

கருவறையில் பெருமாளோடு பிரம்மா, ப்ரத்யும்னன், பலராமன், அநிருத்தன், புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள் பாலிக்கின்றனர். ஒரு சமயம் மேதாவி என்ற முனிவர் ஒருவர் திருமகள் தனக்கு மகளாகவும் ஸ்ரீமன் நாராயணன் தனக்கு மருமகனாகவும் அமைந்திட வேண்டும் என விரும்பி தவம் செய்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும் இவ்வுலகோருக்கு நாரணின் பஞ்சவியூக திவ்ய தரிசனத்தை காண்பித்திட வேண்டியும் திருமகள் குழந்தை உருவெடுத்து இத்தலத்தில் அவதரித்தார். அழகேயான அந்த குழந்தையை முனிவர் எடுத்து வளர்க்கலானார். குழந்தையும் திருமண பருவம் எட்டியது. அச் சமயம் நாராயணன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், சாம்பன் மற்றும் வாசுதேவன் என தனது பஞ்சவீயூகத் தோற்றமான ஐந்துரு கொண்டு திருமகளை தேடி இத் தலம் வந்தடைந்தார். அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார். முனிவரின் ஆசிரமத்தில் திருமகள் வளர்வதை அறிந்தார். தனது ஐந்துருவில் ஆசிரமம் சென்றார். முனிவர் வந்தோர்க்கு அமுது படைத்தார். வாசுதேவன் கை அலம்ப செல்கையில் முனிவரின் மகளாய் வளரும் திருமகளின் கரம் பிடித்தார்.

திருமகள் அலற முனிவர் அங்கு வர திருமால் தனது ஐம்பொன் திருமேனி காட்டினார். முனிவரிடம் முனிவரே உமது தவம் பலிக்கவே யாம் இந்த நாடகம் நடத்தினோம் என்றார். தன் தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர் ஐயனிடம்  பெருமானே எனக்கு நீர் தரிசனம் தந்தது போல் இத் தலத்தில் யாவரும் தரிசிக்கும் வண்ணம் என்றென்றும் அருள் புரிய வேண்டும். எனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படவேண்டும். இத்தலம் வந்து உம்மை சேவிப்பவர் அனைவருக்கும் முக்தி தர வேண்டும் என வரங்கள் கேட்டார். பரந்தாமனும் அவ்வாறே ஆகட்டும் எனக் கூறி முனிவருக்கு காட்சி தந்த கோலத்திலேயே இத்தல கருவறையில் அனைவருக்கும் காட்சியருள்கிறார். இத்தலம் வந்து சேவிப்போருக்கு பெரும் பேறு அளிக்கிறார். பின்னர் பெருமாள் வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும் நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

இந்த கருடனை தூக்கி செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும். இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம் தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம். இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

நாச்சியார் கோயில் “கருட சேவை” மிகப் பிரசித்தம். மிக விஷேசம் ஆண்டாளின் தகப்பனாரன பெரியாழ்வார் இவரது சொரூபமே. இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாற்றினால் சாற்றுவோர் அனைத்து வித இஷ்ட சித்திகளையும் பெறுவர். இவருக்கு பட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க நன் மகப்பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடைபட்டு வரும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். இவரது ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.

இவரை நினைத்து வணங்கினால் விஷ ஜந்துக்களிடமிருந்து முக்கியமாக பாம்புகளிடமிருந்து காத்தருள்வார். வியாழக்கிழமை மாலை வேளைகளும் சனிக்கிழமை காலை வேளைகளும் இவரை தரிசனம் செய்ய சிறந்த காலங்களாகும். திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள். இரு கரங்களுடம் எளிமையாக காட்சி தருகிறார். இது ஒரு மாடக் கோயில் ஆகும். படிகள் ஏறிச்சென்று பெருமாளை சேவிக்கவேண்டும்.

சிறிதும் பெரிதுமான பதினாறு கோபுரங்களைக் கொண்டது. இராஜகோபுரம் ஐந்து அடுக்குகளும் எழுபத்தி ஆறு அடி உயரமும் உடையது. கருவறைக்கு மேல் உள்ள விமானமும் கோபுரம் போன்றே அமைந்திருப்பது அரிதானது. (இதே போன்ற அமைப்பு உள்ள மற்றொரு கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்!) கண்ணன் காடு (கிருஷ்ணாரண்யம்) எனப்படும் ஐந்து தலங்களில் இதுவே ஆரம்பத் தலம்.

மற்றவை: திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணங்குடி முக்தி அளிக்கும் பன்னிரெண்டு தலங்களில் ஒன்று.

கோச்செங்கண் என்ற சோழ மன்னன் சிறந்த சிவபக்தன். போரில் தோற்ற போது இங்கு நீராடி தெய்வ வாளினைப் பெற்று எதிரிகளை வென்றான். வைணவ பக்தன் ஆனான். இந்த ஆலயத்தை கட்டு வித்தான் என்ற வரலாறும் உண்டு. அதிசயத் தலமாம் திருநறையூர் செல்லுவோம்! திருமாலின் அருள் பெறுவோம்!


திங்கள், 5 ஆகஸ்ட், 2019

திவ்ய தேசங்கள் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : சாரநாதன்
தீர்த்தம் : சார புஷ்கரிணி
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் :  தஞ்சாவூர்

பாடியவர்கள் : பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.திருமங்கையாழ்வார்
 
விழா : தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  
      
ஸ்தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி "திருச்சேறை' ஆனது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விலாசம் : அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்

தகவல் : இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர். கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.
 
ஸ்தலபெருமை : பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர் மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர் சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார்.மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன் இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.
 
ஸ்தல வரலாறு : பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம் அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன் கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்

பரிமுகனாம் ஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். இதை அனுதினமும் படித்து ஹயக்ரீவரை வழிபட கல்வி ஞானம் ஸித்திக்கும்.

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்

கருத்து: ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது.... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும்(1)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும்(2)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.

ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி நான்கு}

ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான் பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப்பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர் மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும் அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார். இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும் சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று தமக்குத் தாமே ஆதாரமாகி ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை. பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி : தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே! உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய் இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! க்ஷேத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டிகர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும் சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும் நீயே அன்றே! பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக லீலார்த்தமாகத் தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரப்பிரமமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்? மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும் கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும் சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே! அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே அவ்வியக்த ரூபனே! உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க! யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ! யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புருஷோத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும் மூர்த்தமான திரவியங்களும் மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும் காணப்படாதவைகளும் நான் சொன்னவைகளும் சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி! இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன். இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத் திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும் கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன் தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான். இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில் வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில் அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன. அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள், தருப்பைப் புற்கள், ஆகையால் யக்கிய ரூபமாய் யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி! இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய் ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத் தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம். கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை. எப்படியெனில் சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால் இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய், உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே! சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள் உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப் பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல் தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள் யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும். கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள் புரிந்தான்.

இவ்விதம் அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல் போல உருக்கு விந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான் பூதேவி பிரார்த்தித்த வண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம் மீண்டும் முன்போலவே படைத்து அருளினான். இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன் ரஜோ குணப்பிரமமாய் ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான். எம்பெருமான் சிருஷ்டிக்கு நிமித்தம் மட்டுமேயாகிறான். அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன. மைத்ரேயரே! எம்பெருமான் நடுநிலைமையானவன் நிமித்த காரணன் ஆகையால் இப்படி அவன் படைப்பதனால் அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. சர்வ சமநிலையாளனும் சாட்சி பூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை. சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும். ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே சிருஷ்டி நானாவிதம் ஆக வேண்டியிருப்பதால் அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!



தொடரும்
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி மூன்று}

காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார் மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அது போலவே எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்து கொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம் அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம் அதாவது ஒரு நாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்திய காலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன் கேட்பீராக...

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும் இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள் அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன் திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால் ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய் முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இது போல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!




தொடரும்
விஷ்ணு புராணம் {பிரபஞ்ச உற்பத்தி} பகுதி இரண்டு

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும் படியான ஜயசாலியான ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும் போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும் போது ஹரி ரூபியாகவும், சங்கரிக்கிற போது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீ வாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும் காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி அனாதியான பிரகிருதி வாசனையாலே கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய் நிமோஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும் அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும் சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதி சூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய் எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய் கல்யாண குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய் அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள் உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும் எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும் யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள் உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால் நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும் தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய் சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய் தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய் தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால் சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய் தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய் ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும் படிப் பிரகாசிப்பவராகையால் ஸ்ரீ வாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரே விதமான சொரூபனுமாய் துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே நிர்மலராய் தோன்றுவதும் தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய் புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான க்ஷேத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும் சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான க்ஷேத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீ விஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின் அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக.

இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள் : எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம் உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில் மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள் பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில் அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீ விஷ்ணு ஸ்வரூபத்தினின்று பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய் அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும் சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும் பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய் சலிப்பிக்கப்படுவது மான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும் வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புருஷோத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீ விஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய் விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால் அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்று வித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது. ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு கந்த தன் மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும் அற்புதப் பிரகாசமும் பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும் வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும் நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும் தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன் மேலும் அதிகமாகப் பெற்று அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய் ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.



இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகா பூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன் மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அது போலவே பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர் பிரமரூபியாகி ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும் பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில் சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி முன் போலவே பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன் அந்தந்தச் சொரூபங்களில் நின்று சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுக முடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் க்ஷேத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல் நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில் படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன் - அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன் சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும் போது பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும் படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான் மைத்ரேயரே! அந்த ஸ்ரீ மகா விஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்! 

தொடரும்
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி ஒன்று}

புராணம் கேட்ட வரலாறு

பதினெட்டு புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது இருத்திமுன்றாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒரு நாள் அதிகாலையில் பராசர முனிவர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள் புரிய வேண்டும்! மேலும் இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மஹா கல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும் சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர் அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலக உற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது முன்பு ஒரு சமயம் விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும் படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர் பிள்ளாய் உன் கோபத்தை விட்டு விடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம், மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால் பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்த விதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்து போனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்தி விடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இது தான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள் பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான் யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின் படி பார்த்தால் உலகமானது ஸ்ரீ விஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரே தான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரே தான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

தொடரும்

சனி, 3 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள்  அருள் மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஜம்புகேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வெண்நாவல்
தீர்த்தம் : நவ தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை  : சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜை
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர் : திருவானைக்கா
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 60வது தலம்.  
      
விழா : பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞான பீடமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 05:30 பகல் 01:00 மணி, மாலை 03:00 இரவு 08:30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 06:00 - 06:30, 08:00 - 09:00, 11:00 - 12:30, மாலை 05:00 - 06:00, இரவு 08:30- 09:00 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

     
முகவரி : நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன் : 91-431- 2230 257.
 
தகவல் : சுவாமி சன்னதிக்கு பின் புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.  
      
பெருமை : சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்! பிரம்மா ஒரு முறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்' உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்! என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறு வேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அகிலாண்டேஸ்வரி இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திரு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை இரண்டு  மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரெண்டு  மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய  அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியே தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சித்தராக வந்த சிவன் : மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச்சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது. அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள் ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும் படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும் படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால் யானைகள் புக முடியாத படி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. திருக்கல்யாணம் இங்கில்லை இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள் பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகன் பாதத்தில் அசுரன் : முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்தல வரலாறு : சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிட பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார்.