திங்கள், 13 ஜனவரி, 2014

விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-1)

பூர்வ பாகம் (முற்பகுதி) விஷ்ணு வணக்கம்

1. ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே

வெண்மையான ஆடையை உடுத்தியவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், நிலவு போன்ற குளிர்ந்த திருமேனி வண்ணத்தைப் பெற்றவரும், நான்கு கைகளை உடையவரும், மலர்ச்சி பொங்கும் திருமுகத்தைக் கொண்டவருமான பகவானை எல்லாத் தடைகளும் நீங்க வேண்டித் தியானிப்போம்.

ஸேனைமுதலியார் வணக்கம்.

2. யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே

யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்ப வருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.

வியாசர் வணக்கம்.

3. வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :பௌத்ர மகல்மஷம்
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்தளித்தவர் வியாச பகவான். அவரை முதலில் வணங்குவோம். ஸ்ரீராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வசிஷ்டர். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. சக்தியின் பிள்ளை பராசரர். பராசரரின் பிள்ளை வியாசர். வியாசரின் பிள்ளை சுகப்பிரம்மம்.

இவ்வாறு திருமாலின் தமராகப் பலதலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாச பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாச பகவானை முதலில் வணங்குவோம்.

4. வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:

விஷ்ணு வடிவமாக உள்ள வியாசராகவும், வியாசர் வடிவமாக உள்ள விஷ்ணுவாகவும், வேதக் களஞ்சியமாகவும் உள்ள வசிஷ்டர் குலத்தோன்றலாகிய வியாச பகவானை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம்.

மகாவிஷ்ணு வணக்கம்.

5. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே

மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

6. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே

சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.

(மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களும் மகா பாரதத்தில் உள்ள ஸஹஸ்ரநாமப் பகுதியில் காணப்படவில்லை. எனவே, பாஷ்யகாரர்களும் (விளக்கவுரையாளர்களும்) இவற்றுக்கு விளக்கவுரை எழுதவில்லை. எனினும், நெடுங்காலமாக இந்த ஆறு ஸ்லோகங்களும் பக்தர்களால் வழிவழியாகப் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது என்பர் அறிஞர்.)

பூர்வ பாகம் (முற்பகுதி)
பாகம் 2

வியாசரின் மாணாக்கர் வைசம்பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைசம்பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி.

ஸ்ரீ வைஸம்பாயந உவாச...

ஸ்ரீவைசம்பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது.
இப்படித் தொடங்குகிறது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம உபதேசம்.

1. ஸ்ருத்வா தர்மா நஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ:
யுதிஷ்டிர : ஸாந்த நவம் புநரே வாப்ய பாஷத

எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறிவந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார்.

யுதிஷ்டிர, உவாச - (தருமர் கூறியது):

2. கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த : ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

3. கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்

சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:

1. சாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக - ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?

2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?

3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.

4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெறமுடியும்?

5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?

6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கேற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையிலிருந்து விடுபட முடியும்? (மோட்ச சாதனத்தைத் தருவது எது?)

(இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.)

ஸ்ரீ பீஷ்ம உவாச:

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்:

4. ஜகத் ப்ரபும் தேவ தேவம் அநந்தம் புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித:

அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கெல்லாம் தேவனும், அளந்து காணமுடியாத பெருமை உடையவனுமாகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்;

5. தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம்
த்யாயந் ஸ்துவந்ந மஸ்யம்ஸ் யஜமா நஸ் தமேவ ச

ஸஹஸ்ரநாமத்துக்குப் பொருளாக உள்ள - மாறுபாடில்லாத அந்தப் பரம்பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக - தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவன்;

6. அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வ லோக மஹேஸ்வரம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வ துக்காதிகோ பவேத்

ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவனும், எங்கும் நிறைந்துள்ளவனும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவனும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவனுமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றிவருபவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பான்.

7. ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்த நம்
லோக நாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்

வேதத்தினிடமும் தவத்தினிடமும் நட்பு கொண்டவனும், எல்லாத் தருமங்களையும் அறிபவனும், உலகங்களால் கொண்டாடப்படும் புகழை வளர்ப்பவனும், எல்லா உலகங்களுக்கும் தலைவனும், உயர்ந்த ஐஸ்வர்யங்களை இயல்பாக உடையவனும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே கருணை காட்டுபவனும், பரம்பொருளாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பிறப்பு இறப்பினைக் கூட்டுவிப்பவனுமாகிய பிரம்மத்தையே ஒருவன் போற்றி வருவானாயின், அவன் எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்பவன் ஆவான்.

8. ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோ மத:
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை ரர்ச்சைந் நர: ஸதா

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான்.

இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

9. பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப:
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம்

சிறந்ததும் பெரியதுமாகிய ஒளி எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய தவமே வடிவாக உள்ளது எதுவோ, சிறந்ததும் பெரியதுமாகிய பிரம்மம் எதுவோ, சிறந்த புகலிடம் எதுவோ ஒப்பற்றதாகிய அதுவே அடையத்தக்க புகலிடம்.

10. பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம்
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா

பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர்தரும் தந்தையாகவும் உள்ளவன் யாரோ, அவனே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறான்.

11. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ் யுக க்ஷயே

12. தஸ்ய லோக ப்ரதா நஸ்ய ஜகந் நாதஸ்ய பூபதே
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம்

உயிர்கள் அனைத்தும் ஆதியுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக.

(இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர் தருமபுத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார்.)

13. யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந:
ரிஷிபி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே

பகவான் அளவிட முடியாத பெருமையுடையவன். அவனே மகாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப்பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். (இந்த இரண்டாம் பகுதியில் உள்ள ஸ்லோகங்கள் பதின்மூன்றும் மகாபாரதத்தில் உள்ளன. பாஷ்யங்களிலும் உள்ளன.)

(பூர்வ பாகம்(முற்பகுதி)

பாகம் 3

1. ருஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேத வ்யாஸோ மஹாந் ரிஷி:
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீ ஸுத:

2. அம்ருதாம் ஸுத்பவோ பீஜம் ஸக்திர் தேவகி நந்தந:
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநி யுஜ்யதே

3. விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புரு÷ஷாத்தமம்

வேதவியாசர் ஆயிரம் திருநாங்களைக் கண்டறிந்த மகரிஷி. இந்த ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்தவை. அநுஷ்டுப் சந்தஸ் என்பது 32 உயிரெழுத்துகளுள்ள ஸ்லோகம். இந்த ஆயிரம் திருநாமங்களுக்குரிய தேவதை, தேவகி புத்திரனான ஸ்ரீகிருஷ்ண பகவான்.

அம்ருதாம் சூத்பவ. என்பது (சந்திர வம்சத்தில் உதித்தவன்) பீஜம் (ஆதாரம்.) தேவகி நந்தனன் என்பது சக்தி. த்ரிஸாமா என்பது (சாம ரிக்குகளால் பாடப்பட்டவன்) இதயம்.

மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப்பெறுகிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும் , பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புரு÷ஷாத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன்.

(இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.)

பூர்வ நியாஸம்

(மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள் உரைநடையாக அநுசந்திக்கும் முறை இனி சொல்லப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவாந் ரிஷி:

அநுஷ்டுப் சந்த:

ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா
ஸ்ரீமந் நாராயணோ தேவதா
அம்ருதாம் ஸுத்பவோ பாநுரிதி பீஜம்;
தேவகீ நந்தந: ஸ்ரேஷ்டேதி ஸக்தி;;
உத்பவ; ÷க்ஷõபணோ தேவ இதி பரமோ மந்த்ர;;
சங்க ப்ருந் நந்த்கீ சக்ரீ தி கீலகம்;
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம்
ரதாங்க பாணி ர÷க்ஷõப்ய இதி நேத்ரம்;
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம்;;
ஆநந்தம் பர ப்ரஹ்மேதி யோநி;;
ருது: சு தர்ஸந: கால இதி திக்பந்த;;
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம்;
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே
ஸ்ரீ ஸஹஸ்ரநாம ஜபே விநியோக;

விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகாமந்திரநாம ஸ்தோத்ர மகா மந்திரத்துக்குப் பகவான் வேதவியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்துதித்த சூரியன் குலவிளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சக்தி; உத்பவ: ÷க்ஷõபனோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பரப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ்ஸுதர்சந: கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; (எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகாமந்திரத்தால் காப்பு); எங்கும் நிறைந்தவன் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவனுடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ர நாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.

(மூன்றாம் பகுதி வசனம் முற்றுப் பெறுகிறது.)

தியான சுலோகங்கள்

த்யாநம்

1. க்ஷீரோ தந்வ ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த : ஸ்படிக மணிநிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க:
கப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந : புநீயா தரிநளிந கதா ஸங்க பாணிர் முகுந்த :

2. பூ : பாதௌ யஸ்ய நாபிர் வியத சுரநிலஸ் சந்த்ர ஸுர்யௌச நேத்ரே
கர்ணா வாஸா : ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி:
அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர ககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம்ரம் யதே தம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணு மீஸம் நமாமி

3. ஸாந்தா காரம் புஜக ஸயநம் பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருஸம் மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்

4. மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்

5. ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ் ஸ்தல சோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம்

6. சாயாயாம் பாரி ஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸநோ பரி
ஆஸீந மம்புதஸ் யாமம், ஆயதாக்ஷ மலங்க்ருதம்

7. சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்ய பாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்ரயே

1. தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளியிருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராக!

2. (இந்தச் சுலோகம் பெருமானுடைய பெரு வடிவத்தை வருணிக்கிறது.)

பூமி, பெருமானின் திருவடிகள், ஆகாயம் அவனது நாபி; வாயு பிராணன்; சந்திரனும் சூரியனும் திருக்கண்கள்; திக்குகள் திருச்செவிகள்; தேவலோகம் திருமுடி; அக்கினி திருமுகம்; சமுத்திரம் வயிறு; தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் எனப்பலரும் உள்ள உலகங்கள் அவனுள் ஆடிக்களிக்கின்றன. மூன்று உலகங்களும் அவனது திருமேனியாக உள்ளன. அனைத்தையும் காப்பவனான இப்படிப்பட்ட விஷ்ணுவை வணங்குகிறேன்.

3. பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப்பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

4. கருமுகில் போன்ற வண்ணத்தையுடைய திருமேனியர், மஞ்சள் பட்டாடை உடுத்தியவர்; ஸ்ரீவத்சம் எனப்படும் மறுவைத் திருமார்பில் அடையாளமாகக் கொண்டவர்; கௌஸ்துப மணியால் பிரகாசிக்கும் அங்கங்களை உடையவர்; புண்ணிய புருஷர்களால் சூழப் பெற்றவர்; தாமரை போன்ற திருக்கண்களை உடையவர். எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

5. சங்கும் சக்கரமும் தாங்கியவராய், முடியும் குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக் கண்ணராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

6. பாரிஜாத மரத்தின் நிழலில் தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்தவரும், மேக வண்ணரும், நீண்டு அகன்ற கண்களை உடையவரும், அலங்கரிக்கப்பெற்றவரும்.

7. சந்திரன் போன்ற முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீகிருஷ்ணரைச் சரணடைகிறேன்.

(இந்த ஏழும் தியான சுலோகங்கள், இவை மகா பாரதத்திலும், பாஷ்யங்களிலும் இல்லை என்பர் அறிஞர்.)
(தியான ஸ்லோகங்கள் முடிவுற்றன.)

தியான முடிவில் பஞ்ச பூஜை செய்தல் நலம். அவையாவன:
1. லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி.
2. ஹம் - ஆகாஸாத்மனே புஷ்பை; பூஜையாமி.
3. யம் - வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி.
4. ரம் - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
5. வம் - அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி.
***********
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்

1. ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு:
பூத க்ருத்பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந:

1. விஸ்வம் - இது மேலான நிலையைச் (பரத்வத்தைச்) சொல்லும் திருநாமம்.
2. விஷ்ணு - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகப் புகுந்திருப்பவன்.
3. வஷட்கார - எல்லாவற்றையும் தம் வசத்தில் வைத்துக் கொண்டு ஆள்பவன் - நியமிப்பவன்.
4. பூதபவ்ய பவத்ப்ரபு - முக்காலத்திலுள்ள பொருள்களுக்கெல்லாம் தலைவன்.
5. பூதக்ருத் - (தனதிச்சையாலே) எல்லாவற்றையும் படைப்பவன்.
6. பூதப்ருத் - எல்லாவற்றையும் தாங்குபவன்.
7. பாவ: எல்லாப் பொருள்களுடனும் கூடியிருப்பவன்.
8. பூதாத்மா - உலகத்துக்கு உயிராயிருப்பவன்.
9. பூதபாவந- எல்லாப் பொருள்களையும் விருத்தியடையும்படிப் பாதுகாத்து வளரச் செய்பவன்.

2. பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி :
அவ்யய : புருஷஸ் ஸாக்ஷீ ÷க்ஷத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச

10. பூதாத்மா-தூய்மையான இயல்புடையவன்.
11. பரமாத்மா- பரமபுருஷன் (மேலானவன்)
12. முக்தாநாம் பரமாகதி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம்.
13. அவ்யய: (முக்தனைத் தன்னைவிட்டு) விலக்காதவன்.
14. புருஷ -(வேண்டியவற்றையெல்லாம்) மிகுதியாகக் கொடுப்பவன்.
15. ஸாக்ஷீ - (தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப்) பார்த்து மகிழ்பவன்.
16. ÷க்ஷத்ரஜ்ஞ - (முக்தர்கள் தம்மை இடைவிடாமல் அநுபவிப்பதற்குத் தக்க) இடமான விபூதியை அறிந்தவன்.
17. அக்ஷர-(அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம்) குறையாதவன்.

3. யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர:
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மாந் கேஸவ : புரு÷க்ஷõத்தம:

18. யோக - மோட்ச சாயுஜ்யத்துக்குத்தானே உபாயமாக இருப்பன்.
19. யோகவிதாம் நேதா - தன்னையை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவன்.
20. ப்ரதாந புருஷேச்வர - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவன்.
21. நாரஸிம்ஹவபு:- மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் பக்தனுடைய பயத்தைப்போக்க எடுப்பவன்.
22. ஸ்ரீமாந் - அழகன். (அழகினால் பக்தர்களை மகிழச்செய்து உலகத்தைக் காப்பவன்)
23. கேசவ:- (உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய) கருங்குழலை உடையவன்.
24. புரு÷ஷாத்தம:- புருஷர்களுள் மிகவும் சிறந்தவன்.

4. ஸர்வஸ் ஸர்வஸ் சிவஸ் தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:

25. ஸர்வ - எல்லாமாயிருப்பவன்.
26. சர்வ - அழிப்பவன் - (தீமையை விலக்குபவன்; மங்களம் தருபவன்.)
27. சிவ-மங்களத்தை அளிப்பவன்.
28. ஸ்தாணு - (அடியார்களுக்கு அருள்புரிவதில்) நிலையாய் இருப்பவன்.
29. பூதாதி - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவன்; எல்லாவற்றையும் சரீரமாக உடையவன்.
30. நிதிரவ்யய: குறைவற்ற நிதியாய் இருப்பவன்.
31. ஸம்பவ - (தேவைப்படும் போதெல்லாம்) அவதாரம் செய்பவன்.
32. பாவந: - வாழ்விப்பவன்.
33. பர்த்தா - ஆதரிப்பவன் (காப்பாற்றுபவன்)
34. ப்ரபவ: சிறப்பாகத் தோன்றுபவன். (தன்னிச்சையால் பிறப்பவன்)
35. ப்ரபு - ஸமர்த்தன். (தனது மேன்மை சிறிதும் குன்றாதவன்)
36. ஈஸ்வர:- ஆளுகின்ற ஈசன்.

5. ஸ்வயம்பூஸ் ஸம்பு ராதித்ய : புஷ்கரா÷க்ஷõ மஹாஸ்வந :
அநாதி நிதநோ தாதா விதாதா தாது ருத்தம:

37. ஸ்வயம்பு - தானே தோன்றியவன்.
38. சம்பு - பேரின்பத்தை விளைவிப்பவன்.
39. ஆதித்ய :- (சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதால்) சூரியன்.
40. புஷ்கராஜ: தாமரைக் கண்ணன்.
41. மஹாஸ்வந: வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவன்.
42. அநாதிநிதந: ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
43. தாதா - படைப்பவன்.
44. விதாதா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவன்.
45. தாது ருத்தம - பிரமனைக் காட்டிலும் சிறந்தவன்.

6. அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ : பத்மநாபோ அமரப்ரபு :
விஸ்வகர்மா மநுஸ் த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ :

46. அப்ரமேய: அறிவுக்கெட்டாத பெருமைகளை உடையவன்.
47. ஹ்ருஷீகேச: இந்திரியங்களை அடக்கி ஆள்பவன்.
48. பத்மநாபன்: நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன்.
49. அமரப்ரபு : தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவன்.
50. விச்வகர்மா: உலக நடைமுறைகளைத்தானே செய்பவன்.
51. மநு: மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவன்.
52. த்வஷ்டா: பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவன்.
53. ஸ்தவிஷ்ட : மிகவும் பெரியவன்.
54. ஸ்தவிர: எக்காலத்தும் நிலைத்திருப்பவன்.
55. த்ருவ : மாறாமல் நிலையாய் இருப்பவன்.

7. அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ : பிப்ரதர்தந:
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம்

56. அக்ராஹ்ய: கிரகிக்க முடியாதவன். (தானே காரணமாகவும் (கர்த்தாவாகாவும் இருப்பவன்)
57. சாச்வத: நிரந்தரமாக இருப்பவன்.
58. க்ருஷ்ண: மிகுந்த மகிழ்ச்சி உடையவன்.
59. லோஹிதாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
60. ப்ரதர்தந: (பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவன்) தன்னுள் மறைத்து வைத்திருப்பவன்.
61. ப்ரபூத: நிறைந்தவன்.
62. த்ரிககுத்தாமா: (த்ரிககுப்தாமா) - பரமபதத்தை இருப்பிடமாக உடையவன். (மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவன்)
63. பவித்ரம்: தூய்மையான வடிவினை உடையவன்.
64. மங்களம் பரம்: சிறந்த மங்களமாய் இருப்பவன்.

8. ஈஸாந : ப்ராணத : ப்ராணோ ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட : ப்ரஜாபதி :
ஹிரண்ய கர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸுதந :

65. ஈசாந: அடக்கி ஆள்பவன்.
66. ப்ராணத: பிராணனைக் கொடுப்பவன். (பலன் தருபவன்)
67. ப்ராண: உயிராக இருப்பவன்.
68. ஜ்யேஷ்ட: முதன்மையானவன்.
69. ச்ரேஷ்ட: மிகவும் மேன்மையுற்றவன்.
70. ப்ரஜாபதி: நித்ய சூரிகளுக்குத் தலைவன். (அமரர்கள் அதிபதி.)
71. ஹிரண்யகர்ப்ப: மிகவும் விரும்பத்தக்க பரம பதத்தில் நித்யவாசம் செய்பவன்.
72. பூகர்ப்ப: பூமிப்பிராட்டிக்கு நாயகன்.
73. மாதவ: திருமகள் கேள்வன்.
74. மதுஸூதந: மது என்னும் அரக்கனை அழித்தவன்.

9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம : க்ரம :
அநுத்தமோ துராதர்ஷ : க்ருதஞ : க்ருதி ராத்மவாந்

75. ஈஸ்வர: அனைத்துக்கும் தலைவன்.
76. விக்ரமீ - மிக்க வலிமையுடையவன்.
77. தந்வீ - சாரங்கம் என்னும் வில்லை உடையவன்.
78. மேதாவீ - அனைத்தும் அறிந்தவன்.
79. விக்ரம: கருட வாகனன்.
80. க்ரம: (அளவற்ற ஐஸ்வர்யங்களால்) செழிப்புற்றவன்.
81. அநுத்தம: தனக்கு மேம்பட்டவர் இல்லாதவன்.
82. துராதர்ஷ: கலக்க முடியாதவன்.
83. க்ருதஜ்ஞ : (சேதநர்களால் செய்யப்படும் புண்ணிய பாபரூபமான) செயல்கள் அனைத்தையும் அறிபவன்.
84. க்ருதி: செய்விப்பவன்.
85. ஆத்மவான் - எல்லா ஆன்மாக்களையும் தன்னுடைய ஆன்மாவாக உடையவன்.

10. சுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா : ப்ரஜாபவ :
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வ தர்ஸன:

86. ஸுரேச: பிரமாதி தேவர்களுக்குத் தலைவன்.
87. சரணம் - உபாயமாய் இருப்பவன்.
88. சர்ம - உயர்ந்த பலனாய் இருப்பவன்.
89. விச்வரேதா: அகில உலகங்களுக்கும் காரணமானவன்.
90. ப்ரஜாபவ: பிரஜைகளுக்கு இடமாயிருப்பவன்.
91. அஹ: பகல் போலத் தெளிவாக விளங்குபவன்.
92. ஸம்வத்ஸர: சேதநரிடம் நன்றாக இருப்பவன்.
93. வ்யால: தன்வசப்படுத்துபவன்.
94. ப்ரத்யய: நம்பிக்கை உண்டாக்குபவன்.
95. ஸர்வதர்சந: தனது மகிமைகளை எல்லாம் பக்தர்களுக்கு முழுமையாகக் காட்டுபவன்.

11. அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதி ரச்யுத :
வ்ருஷா கபிரமேயாத்மா ஸர்வ யோக விநிஸ்ருத :

96. அஜ: தடைகளை விலக்குபவள்.
97. ஸர்வேச்வர: (தன்னைப் பற்றியவரைத்) தானே சென்றடைபவன்.
98. ஸித்த: தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவன்.
99. ஸித்தி: அடைய வேண்டிய பேறாக இருப்பவன்.
100. ஸர்வாதி: எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.

(முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

101. அச்யுத: தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவன்.
102. வ்ருஷா கபி - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவன்.
103. அமேயாத்மா - அறிய முடியாதவன்.
104. ஸர்வயோக விநிஸ்ருத: எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவன்.

12. வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ் ஸம :
அமோக : புண்டரீகா÷க்ஷõ வ்ருஷகர்மா வ்ருஷா க்ருதி :

105. வஸு: சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவன்.
106. வஸுமநா: தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவன்.
107. ஸத்ய: தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன்.
108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவன்.
109. ஸம்மித: (அடியார்க்கு) அடங்கிய பொருளாய் இருப்பவன்.
110. ஸம - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவன்.
111. அமோக: (அடியாரின்) உறவு வீண் போகாமல் காப்பவன்.
112. புண்டரீகாக்ஷ - விண்ணோர்க்குக் கண் போனவன்.
113. வ்ருஷகர்மா - நற்செயல்களைச் செய்பவன்.
114. வ்ருஷாக்ருதி - தருமமே வடிவானவன்.

13. ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வ யோநிஸ் சுசிஸ்ரவா :
அம்ருத்ஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா :

115. ருத்ர: (ஆனந்தக்) கண்ணீர் விடச் செய்பவன்.
116. பஹுசிரா: தலைவன் பலவற்றை உடையவன்.
117. பப்ரு: தாங்கி நிற்பவன்.
118. விச்வயோநி: எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவன்.
119. சுசிச்ரவா: தூய சொற்களையே கேட்பவன்.
120. அம்ருத: ஆரா அமுதன்
121. சாச்வத ஸ்தாணு: என்றும் நிலைத்து நிற்பவன்.
122. வராரோஹ: அடை யத்தக்க மேலானவன் (பரமபரநாதன்)
123. மஹாதபா: எல்லையில்லாத ஞானமுடையவன். (ஞானமூர்த்தி)

14. ஸர்வகஸ் ஸர்வவித் பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந:
வேதோ வேத விதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

124. ஸர்வக: எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
125. ஸர்வ வித் - எல்லாவற்றையும் அடைபவன்.
126. பாநு : விளக்கமாக இருப்பவன்.
127. விஷ்வக் ஸேந: எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
128. ஜநார்த்தந: பகைவர்களை அழிப்பவன்.
129. வேத: வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
130. வேதவித் - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
131. அவ்யங்க - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
132. வேதாங்க: வேதங்களை அங்கமாக (சரீரமாக) உடையவன்.
133. வேதவித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
134. கவி: (அனைத்தையும்) ஊடுருவிப் பார்ப்பவன்.

15. லோகாத்யக்ஷஸ் ஸுராத்ய÷க்ஷõ தர்மாத்யக்ஷ : க்ருதாக்ருத :
சதுராத்மா சதுர் வ்யூஹஸ் சதுர் தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ:

135. லோகாத்யக்ஷ: உலகங்களை நன்கு அறிந்தவன்.
136. ஸுராத்யக்ஷ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
137. தர்மாத்யக்ஷ: தர்மத்தை நன்கு அறிந்தவன்.
138. க்ருதாக்ருத: இகபரபலன்களை அளிப்பவன்.
139. சதுராத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
140. சதுர்வ்யூஹ: நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
141. சதுர்த்தம்ஷட்ர: நான்கு முன்பற்களை உடையவன்.
142. சதுர்புஜ: நான்கு திருக்கைகளை உடையவன்.

16. ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு

143. ப்ராஜிஷ்ணு: நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
144. போஜநம் - உணவு, (அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.)
145. போக்தா - உண்பவன் (அநுபவிப்பவனாக இருப்பவன்,)
146. ஸஹிஷ்ணு: மன்னிப்பவன். (எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.)
147. ஜகதாதிஜ: உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
148. அநக: குற்றமற்றவன்.
149. விஜய: வெற்றியை உடையவன் (வெற்றியை அருள்பவன்)
150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
151. விச்வ யோநி: உலககாரணன்.
152. புநர்வஸு: (எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன்) வாழ்பவன்.

17. உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:
அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:

153. உபேந்த்ர: இந்திரனுக்குத் தம்பியானவன் (வாமனன்)
154. வாமனன்: ஒப்பற்ற குறள்வடிவினன் (குள்ளன்)
155. ப்ராம்சு: உயர்ந்தவன் (திரிவிக்ரமன்)
156. அமோக: பழுது படாதவன்.
157. சுசி - தூயவன் (அமலன்)
158. ஊர்ஜித: வல்லமை படைத்தவன்.
159. அதீந்த்ர: இந்திரனுக்கு மேம்பட்டவன்.
160. ஸங்க்ரஹ: எளிதில் கிரகிக்கப்படுபவன் (எளிவரும் இயல்பினன்)
161. ஸர்க - (தன்னைத் தானே பல உருவங்களில்) படைத்துக் கொள்பவன்.
162. த்ருதாத்மா-ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.
163. நியம: அடக்குபவன். (அடக்கி அருள்புரிபவன்)
164. யம: (அனைத்தையும்) ஆள்பவன்.

18. வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது:
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத் ஸாஹோ மஹாபல:

165. வேத்ய: அறியக் கூடியவன். (யாவரும். அறிதற்கு எளிதானவன்)
166. வைத்ய: வித்தைகளைக் கற்றறிந்தவன், (பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.)
167. ஸதாயோகீ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
169. மாதவ: வித்தைக்கு ஈசன்.
170. மது - தேனைக் காட்டிலும் இனியவன்.
171. அதீந்த்ரிய: புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
172. மஹாமாய: மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
173. மஹோத்ஸாஹ: மிகவும் ஊக்கமுடையவன்.
174. மஹாபல: மிகவும் வலிமை வாய்ந்தவன்.

19. மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி:
அநிர்தேஸ்ய வபு: ஸ்ரீ மாந் அமேயாத்மா மஹா அத்ரித்ருக்

175. மஹாபுத்தி: பேரறிவாளன் (எல்லையில்லா ஞானி)
176. மஹாவீர்ய: மிகுந்த வீர்யம் உடையவன்.
177. மஹாசக்தி: மிகுந்த திறமை உடையவன்.
178. மஹாத்யுதி: மிகுந்த ஒளியுள்ளவன்.
179. அநிர்தேச்யவபு: உவமை சொல்லமுடியாத திருமேனி உடையவன்.
180. ஸ்ரீமாந்: திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
181. அமேயாத்மா-அளவிட்டு அறியமுடியாதவன்.
182. மஹாத்ரித்ருக் - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

20. மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்பதி:
அநிருத்தஸ் சுரா நந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி:

183. மஹேஷ்வாஸ: சர மழை பொழிபவன் (வில்லாளி)
184. மஹீபர்த்தா: பூமியைத் தாங்குபவன்.
185. ஸ்ரீநிவாஸ: அலர்மேல் மங்கை உறைமார்பன்.
186. ஸதாங்கி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
187. அநிருத்த: ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
188. ஸுராநந்த: அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
189. கோவிந்த: தேவர்களால் துதித்தற்குரியவன் (ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்)
190. கோவிதாம்பதி: வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.

21. மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:
ஹிரண்ய நாபஸ் சுதபா : பத்மநாப : ப்ரஜாபதி:

191. மரீசி - கிரணமானவன் (ஒளியானவன்)
192. தமந: அடங்கச் செய்பவன்.
193. ஹம்ஸ: அன்னமாக அவதரித்தவன்.
194. ஸூபர்ண: அழகிய இறக்கைகளை உடையவன்.
195. புஜகோத்தம: திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
196. ஹிரண்ய நாப: அழகிய நாபியை உடையவன்.
197. பத்மநாப: அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
198. ஸூதபா: சிறந்த ஞான முள்ளவன்.
199. ப்ரஜாபதி: நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.

22. அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர:
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா சுராரிஹா

200. அம்ருத்யு: இறப்பில்லாதவன். (நித்ய மூர்த்தி)

(இரண்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

201. ஸர்வத்ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
202. ஸிம்ஹ:- நரசிங்கப் பெருமான்.
203. ஸந்தாதா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
204. ஸந்திமாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
205. ஸ்திர: என்றும் நிலையாய் இருப்பவன்.
206. அஜ: பிறவாதவன். (பிறப்பில்லாதவன்)
207. துர்மர்ஷண: பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
208. சாஸ்தா-பகைவர்களைக் கலக்குபவன் (சாசனம் பண்ணுபவன்)
209. விச்ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம:
நிமி÷ஷா அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ :

211. குருர்குருதம: பரமாசாரியன் (குருவுக்கெல்லாம் குரு)
212. தாம: உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
213. ஸத்ய: அடியார்க்கு நல்லவன்.
214. ஸத்ய பராக்ரம: (வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
215. நிமிஷ: கண்மூடி (பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்)
216. அநிமிஷ: கண்மூடாதவன். (கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்)
217. ஸ்ரக்வீ - மாலையணிந்தவன் (வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.)
218. வாசஸ்பதி - சொல்லுக்கு அதிபதி. (சொல் வல்லான்)
219. உதாரதீ - சிறந்த ஞான முடையவன்.

24. அக்ரணீர் க்ராமணீ : ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்

220. அக்ரணீ - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
221. க்ராமணி - தலைவன்.
222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
223. ந்யாய - நீதிமான்.
224. நேதா - கரைசேர்ப்பவன். (தின்திருவடிக் கீழ் சேர்ப்பவன்)
225. ஸமீரண: சிறந்த செயல்களைச் செய்பவன்.
226. ஸஹஸ்ரமூர்த்தா - ஆயிரம் தலைகளுடையவன்.
227. விஸ்வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
228. ஸஹஸ்ராக்ஷ: ஆயிரம் கண்களை உடையவர். (விராட்ரூபி)
229. ஸஹஸ்ரபாத்: ஆயிரம் கால்களை உடையவர்.

25. ஆவர்த்தநோ நிவ்ருத் தாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ர மர்தந:
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீ தர:

230. ஆவர்த்தந: (உலகச் சக்கரத்தைச்) சுழலச் செய்பவன்.
231. நிவ்ருத்தாத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
232. ஸம்வ்ருத: நன்கு மறைக்கப்பட்டவன்: மறைந்துள்ளவன்.
233. ஸம்ப்ரமர்த்தந: (அஞ்ஞானமான இருளை அழித்து) உள்ளதை உள்ளபடி உணரச்செய்பவன்.
234. அஹஸ் ஸம்வர்த்தக: காலத்தை நடத்துபவன்.
235. வஹ்நி: உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
236. அநில:- வாழச் செய்பவன்.
237. தரணீதர:- தாங்குபவற்றையும் தாங்குபவன்.

26. சுப்ரஸாத : ப்ரஸந்நாத்மா விஸ்வத்ருக் விஸ்வபுக் விபு:
ஸத்கர்த்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராய்ணோ நர:

238. ஸுப்ரஸாத: மிகவும் அருள் புரிபவன்.
239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
240. விச்வத்ருக் - எல்லாவற்றையும் படைப்பவன்.
241. விச்வபுக்விபு:- எங்கும் பரந்திருந்து காப்பவன்.
242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
243. ஸத்க்ருத - நல்லார்களால் (சாதுக்களால்) வழிபடக்கூடியவன்.
244. ஸாது: தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
245. ஜஹ்நு:- அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
246. நாராயண: நாராயணன். (எல்லா உயிர்களையும் தாங்குபவன்)
247. நர: அழியாதவன்.

27. அஸங்க்யேயோ அப்ர மேயாத்மா விஸிஷ்ட ஸ்ஸிஷ்டக்ருச் சுசி:
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்தி ஸாதந:

248. அஸங்க்யேய: எண்ணில் அடங்காதவன்.
249. அப்ரமேயாத்மா: எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
250. விசிஷ்ட:- தனிச் சிறப்புடையவன்.
251. சிஷ்டக்ருத் - (நற்குண நற்செயல்களை உடைய) சிஷ்டர்களை உயர்த்துபவன்.
252. சுசி: தூய்மையுடையவன். (தன்னியல்பான ஒளியுடையவன்)
253. ஸித்தார்த்த: எல்லாவற்றையும் உடையவன்.
254, 255. ஸித்தித:- சித்திகளை அளிப்பவன்.
256. ஸித்தி ஸாதந:- அடையும் உபாயமாக உள்ளவன்.

28. வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ரு÷ஷாதர :
வர்த்தநோ வர்த்த மாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர:

257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
258. வ்ருஷப: கருணையைப் பொழிபவன்.
259. விஷ்ணு: எங்கும் பரந்திருப்பவன்.
260. வ்ருஷபர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
261. வ்ரு÷ஷாதர:- தருமமே உருவான வயிற்றை உடையவன்.
262. வர்த்தந: (வழிபடுவோரை) வளர்ப்பவன்.
263. வர்த்தமாந - வளர்ச்சி அடைபவன்.
264. விவிக்த:- உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
265. ச்ருதி ஸாகர: வேதக்கடல் (வேத முடிவானவன்)

29. கபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸுநைக
ரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட : ப்ரகாஸந:

266. ஸுபுஜ:- அழகிய தோள்களையுடையவன்.
267. துர்த்தர:- தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
268. வாக்மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
269. மஹேந்த்ர: சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
270. வஸுத:- தனமாகவே உள்ளவன்.
271, 272. நைகரூப:- பல உருவங்களை உடையவன்.
273. ப்ருஹத்ரூப: பெரிய உருவத்தை உடையவன்.
274. சிபிவிஷ்ட - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
275. ப்ரகாசந:- விளங்கச் செய்பவன்.

30. ஓஜஸ் தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந:
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி:

276. ஓஜஸ் தேஜோத்யுதிதர:- வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
277. ப்ரகாசாத்மா-ஒளிவடிவானவன்.
278. ப்ரதாபந: பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
279. ருத்த:- சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
280. ஸ்பஷ்டாக்ஷர:- தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன்.
281. மந்த்ர:- மந்திரமாயிருப்பவன்.
282. சந்த்ராம் சு: வெண்மதிபோன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
283. பாஸ்கரத்யுதி:- சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.

31. அம்ருதாம் ஸுத்பவோ பாநு: ஸஸ பிந்துஸ் சுரேஸ்வர:
ஒளஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

284. அம்ருதாம் சூத்பவ:- அமுதமயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாயுள்ளவன்.
285. பாநு:- சூரியன்.
286. சசபிந்து:- தீயவர்களை அழிப்பவன்.
287. ஸுரேஸ்வர:- இமையோர் தலைவன்.
288. ஒளஷதம்:- மருந்தாயிருப்பவன்.
289. ஜகத்ஸேது:- அணையாயிருப்பவன்.
290. ஸத்ய தர்மபராக்ரம:- கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

32. பூதபவ்ய பவந்நாத : பவந : பாவநோ அநல:
காமஹா காம க்ருத் காந்த : காம : காம ப்ரத ப்ரபு :

291. பூதபவ்யபவந்நாத:- முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
292. பவந: சஞ்சரிப்பவன்.
293. பாவந: தூய்மை அளிப்பவன்.
294. அநல: (அருள் புரிவதில்) திருப்தி அடையாதவன்.
295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
296. காமக்ருத் - ஆசைகளை (பக்தர்களுக்கு) வளர்ப்பவன்.
297. காந்த: விரும்பப் படுபவன்.
298. காம:- ஆசைப்படத்தகுந்தவன்.
299. காமப்ரத:- விருப்பங்களைக் கொடுப்பவன்.
300. ப்ரபு:- பிரபுவாய் இருப்பவன்.
(மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

33. யுகாதி க்ருத் யுகா வர்த்தோ நைக மாயோ மஹாஸந:
அத்ருஸ்யோ அவ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜித நந்தஜித்

301. யுகாதிக்ருத் - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
302. யுகாவர்த்த: யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
303. நைகமாய: அநேக மாயைகளை உடையவன்.
304. மஹாசந: (உலகமுண்ட) பெருவயிற்றன்.
305. அதருசய: காணமுடியாதவன்.
306. வ்யக்த ரூப: தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
307. ஸஹஸ்ரஜித் - காலங்களை வெற்றி கொள்பவன்.
308. அநந்தஜித் - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.

34. இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட : ஸிகண்டீ நகு÷ஷா வ்ருஷ
க்ரோதஹா க்ரோத க்ருத் கர்த்தா விஸ்வ பாஹுர் மஹீதர:

309. இஷ்ட அவிசிஷ்ட: வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
310. சிஷ்டேஷ்ட: பெரியோரால் விரும்பப்படுபவன்.
311. சிகண்டி - சிறந்த தலையணியுடையவன்.
312. நஹுஷ: கட்டுபவன்.
313. வ்ருஷ: (எல்லா விருப்பங்களையும்) பொழிபவன்.
314. க்ரோதஹா - கோபத்தை வென்றவன்.
315. க்ரோதக்ருத் - கோபமுள்ளவன்.
316. கர்த்தா - வெட்டுபவன்.
317. விச்வபாஹு: நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
318. மஹீதா: பூமியைத் தாங்கி நிற்பவன்.

35. அச்யுத: ப்ரதித :ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ:
அபாந்நிதி ரதிஷ்டாந மப்ரமத்த : ப்ரதிஷ்டித :

319. அச்யுத: நழுவாதவன்.
320. ப்ரதித: புகழ்பெற்றவன்.
321. ப்ராண: உயிரானவன்.
322, 323. வாஸவாநுஜ: இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
324. அபாம்நிதி: கடல்களுக்கு ஆதாரமானவன்.
325. அதிஷ்டாநம்: ஆசனமாக இருந்தவன்.
326. அப்ரமத்த: ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
327. ப்ரதிஷ்டித: நிலை பெற்றவன்.

36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயு வாஹந:
வாசுதேவோ ப்ருஹத் பாநு ராதிதேவ : புரந்தர:

328. ஸ்கந்த: வற்றச் செய்பவன்.
329. ஸ்கந்ததர: அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
330. துர்ய: தாங்குபவன்.
331. வரத: வரங்களைத் தருபவன்.
332. வாயு வாஹந: வாயுவை நடத்திச் செல்பவன்.
333. வாஸுதேவ: வாசுதேவன். (எங்கும் வசிப்பவன்)
334. ப்ருஹத்பாநு: மிக்க ஒளியையுடையவன்.
335. ஆதிதேவ: ஊழி முதல்வன்.
336. புரந்தர: இருப்பிடங்களை (அசுரர்களின்) பிளப்பவன்.

37. அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸுரஸ் ஸெளரிர் ஜநேஸ்வர:
அநுகூலஸ் ஸதாவர்த்த : பத்மீ பத்ம நிபேக்ஷண:

337. அசோக: துன்பங்களை அழிப்பவன்.
338. தாரண: தாண்டுவிப்பவன்.
339. தார: காப்பவன்
340. சூர: சமர்த்தன்.
341. சௌரி: சூரனின் பிள்ளை.
342. ஜநேச்வர: பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
343. அநுகூல: எல்லைக்குள் நிற்பவன்.
344. சதாவர்த்த: சுழல்கள் பலவற்றை உடையவன்.
345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
346. பத்மநிபேக்ஷண: இனிய பார்வையை உடையவன்.

38. பத்ம நாபோ அரவிந்தாக்ஷ : பத்ம கர்ப்பஸ் ஸரீரப்ருத்
மஹர்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹா÷க்ஷõ கருட த்வஜ:

347. பத்மநாப: தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
348. அரவிந்தாக்ஷ: செந்தாமரைக் கண்ணன்.
349. பத்ம கர்ப்ப: தாமரையை ஆசனமாக உடையவன். (இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.)
350. சரீரப்ருத் - சரீரத்தைத் தாங்குபவன்.
351. மஹர்த்தி: பெருஞ்செல்வம் உடையவன்.
352. ருத்த: விருத்தியடைபவன்.
353. வ்ருத்தாத்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
354. மஹாக்ஷ: சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
355. கருடத்வஜ: கருடக்கொடி உடையவன்.

39. அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ் ஜய:

356. அதுல: ஒப்பில்லாதவன்.
357. சரப: அழிப்பவன்.
358. பீம: (தன் ஆணையைக் கடப்பவருக்கு) பயங்கரன்.
359. ஸமயஜ்ஞ: காலம் அறிந்தவன்.
360. ஹவிர்ஹரி: அவியுணவை ஏற்பவன்.
361. ஸர்வலக்ஷணலக்ஷண்ய: எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
362. லக்ஷ்மீவாந்- பூமகளின் கேள்வன்.
363. ஸமிதிஞ்ஜய: வெற்றி மகளை உடையவன்.

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ:
மஹீதரோ மஹாபாகோ வேகவாந் அமிதாஸந:

364. விக்ஷர: குறைவற்றவன்
365. ரோஹித: சிவந்தவன்.
366. மார்க்க: தேடப்படுபவன்.
367. ஹேது: காரணமாயிருப்பவன்.
368. தாமோதர: உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
369. ஸஹ: பொறுமையுள்ளவன்.
370. மஹீதர: பூமியைத் தாங்குபவன்.
371. மஹாபாக - மகா பாக்யமுடையவன்.
372. வேக வாந் - வேகம் உள்ளவன்.
373. அமிதாசந: பெருத்த உணவு உண்பவன்.

41. உத்பவ : ÷க்ஷõபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப : பரமேஸ்வர:
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ:

374. உத்பவ: பந்தத்தை விலக்குபவன்.
375. ÷க்ஷõபண: (படைக்குங்காலத்தில்) கலக்குபவன்.
376. தேவ: விளையாடுபவன்.
377. ஸ்ரீகர்ப்ப: திருமகளைப் பிரியாதவன்.
378. பரமேச்வர: பெரிய மேன்மையை உடையவன்.
379. கரணம்: உபாயமாயிருப்பவன்.
380. காரணம்: இயக்குபவன்.
381. கர்த்தா: செயல்படுபவன்.
382. விகர்த்தா: மாறுதல் அடைபவன்.
383. கஹந - அறிவுக் கெட்டாதவன்.
384. குஹ - காப்பாற்றுபவன்.

42. வ்யவஸாயோ வ்யவஸ் தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநதோ த்ருவ:
பரர்த்தி : பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட : புஷ்டஸ் சுபேக்ஷண:

385. வ்யவஸாய: விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
386. வ்யவஸ்தாந: காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
387. ஸம்ஸ்தாந: எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
388. ஸ்தாநத: மேலான வீட்டினை (ஸ்தானத்தை) அளிப்பவன்.
389. த்ருவ: நிலைத்திருப்பவன்.
390. பரர்த்தி: மேலான குணபூர்த்தி உள்ளவன்.
391. பரமஸ்பஷ்ட: வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
392. துஷ்ட: மகிழ்ச்சி நிறைந்தவன்.
393. புஷ்ட : நிரம்பியவன்.
394. சுபேக்ஷண: மங்களமான பார்வையுடையவன்.

43. ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோநய:
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம:

395. ராம: யாவரையும் மகிழச் செய்பவன்.
396. விராம: பிறரை ஓயச் செய்பவன்.
397. விரத: ஆசையை அறவே நீக்கியவன்.
398. மார்க்க: தேடப் படுபவன்.
399. நேய: கட்டளையிடப் பெறுபவன்.
400. நய: நடத்துபவன்.

(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
401. அநய: பகைவரால் அணுக முடியாதவன்.
402. வீர: வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
403. சக்திமதாம் ச்ரேஷ்ட - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
404. தர்ம: தருமமே வடிவானவன்.
405. தர்ம விதுத்தம: தருமம் அறிந்தவருள் முதல்வன்.

44. வைகுண்ட : புருஷ ப்ராண : ப்ராணத : ப்ரணவ :ப்ருது:
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ:

406. வைகுண்ட: தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
407. புருஷ: தூய்மை அளிப்பவன்.
408. ப்ராண: உய்விப்பவன் (உயிராயிருப்பவன்.)
409. ப்ராணத: உயிரை அளிப்பவன்.
410. ப்ரணம்: வணங்கத்தக்கவன்.
411. ப்ருது: பெரும்புகழுக்குரியவன்.
412. ஹிரண்ய கர்ப்ப: பொன்புதையலைப் போன்றவன்.
413. சத்ருக்ந: பகைவர்களை முடிப்பவன்.
414. வ்யாப்த: அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவன்.
415. வாயு: செல்பவன் (இருக்கும் இடம் தேடி அருள் புரிபவன்)
416. அதோக்ஷஜ: அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவன்.

45. ருதுஸ் சுதர்ஸந : கால : பரமேஷ்டீ பரிக்ரஹ :
உக்ரஸ் ஸம்வத்ஸரோ த÷க்ஷõ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண:

417. ரிது: அணுகுபவன்: (தானே வந்து புகுபவன்)
418. ஸுதர்சந: பார்வைக் கினியவன்.
419. கால: தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்.
420. பரமேஷ்டீ: பரமபதத்தில் உள்ளவன்.
421. பரிக்ரஹ: யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவன்.
422. உக்ர: (பகைவர்களிடத்துக்) கோபமானவன்.
423. ஸம்வத்ஸர: பொருந்தி வாழ்பவன்.
424. தக்ஷ: விரைந்து செயல்படுபவன்.
425. வச்ராம: ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவன்.
426. விச்வ தக்ஷிண: எல்லார்க்கும் நல்லவன்.

46. விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு : ப்ரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந:

427. விஸ்தார: விஸ்தார மானவன்.
428. ஸ்தாவரஸ்தாணு - ஆறியிருப்பவன். (மனச்சாந்தியுடையவன்)
429. ப்ரமாணம்: பிரமாண மானவன். (அதிகாரியாயிருப்பவன்)
430. பீஜம் அவ்யயம் - அழிவில்லாத வித்தாக இருப்பவன்.
431. அர்த்த: அடையத்தக்கதான பயனாக உள்ளவன்.
432. அநர்த்த: அற்பப் பயனாய் இருப்பவன்.
433. மஹாகோச: வைத்த மாநிதி: (ஊனமில் செல்வன்)
434. மஹா போக: இன்பங்கள் அனைத்தும் அளிப்பவன்.
435. மஹாதந: அளவற்ற பெருந்தனமாய் இருப்பவன்.

47. அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷõமஸ் ஸமீஹந:

436. அநிர்விண்ண: சோம்பல் இல்லாதவன்.
437. ஸ்தவிஷ்ட: பெருத்தவன் (ஸ்தூல வடிவினன்)
438. பூ: அனைத்தையும் தாங்குபவன்.
439. தர்மயூப: தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவன்.
440. மஹாமக: வேள்வி வடிவானவன்.
441. நக்ஷத்ர நேமி: விண்மீன்களை இயக்குபவன்.
442. நக்ஷத்ரீ: விண்மீன்களை உடையவன்.
443. க்ஷம: பொறுமையுள்ளவன்.
444. க்ஷõம: குறைந்து உள்ளவன் (நுட்பமானவன்)
445. ஸமீஹத: பிறரை இயங்கச் செய்பவன்.

48. யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி:
ஸர்வதர்ஸீ நிவ்ருத்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்

446. யஜ்ஞ: யாகமாக உள்ளவன்.
447. இஜ்ய: யாகத்தால் வழி படத்தக்கவன்.
448. மஹேஜ்ய: (பிறதெய்வங்களின்) சிறந்த வழிபாட்டையும் ஏற்பவன்.
449. க்ரது: செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவன்.
450. ஸத்ரம்: ஸ்திரரூபியானவன் (ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவன்.)
451. ஸதாம்கதி: சாதுக்களுக்கு அடையத்தக்கவன்.
452. ஸர்வதர்சீ: எல்லாவற்றையும் பார்த்து அறிபவன்.
453. நிவ்ருத்தாத்மா: எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவன்.
454. ஸர்வஜ்ஞ: தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவன்.
455. ஜ்ஞாநம் உத்தமம்: மேலான ஞானமயமானவன்.

49. சுவ்ரதஸ் சுமுகஸ் ஸூக்ஷ்மஸ் சுகோஷஸ் சுகதஸ் சுஹ்ருத் :
மநோ ஹரோ ஜித க்ரோதோ வீரபாஹுர் விதாரண:

456. ஸுவ்ரத: கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவன்.
457. ஸுமுக: மலர்ந்த திருமுகம் உடையவன்.
458. ஸுக்ஷம: மிகவும் நுட்பமானவன்.
459. ஸுகோஷ: வேதத்தின் குரலாக உள்ளவன். (வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவன்.)
460. ஸுகத: மேலான இன்பமயமான பயன் தருபவன்.
461. ஸுஹ்ருத்- சிறந்த நண்பனாக இருப்பவன்.
462. மநோஹர: மனதைக் கவரக் கூடியவன்.
463. ஜிதக்ரோத: கோபத்தை வென்றவன்.
464. வீரபாஹு: மிக்க பலமுடைய கைகளையுடையவன்.
465. விதாரண: வெட்டுபவன்.

50. ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்:
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்ந கர்ப்போ தநேஸ்வர:

466. ஸ்வாபந: தூங்கச் செய்பவன். (எதிரிகளை நினைவிழக்கச் செய்பவன்.)
467. ஸ்வவச: தன் வசத்தில் எப்போதும் இருப்பவன்.
468. வ்யாபீ: எங்கும் பரந்திருப்பவன்.
469. நைகாத்மா: அநேக உருவங்களில் இருப்பவன்.
470. நைகர்மக்ருத்: அநேக செயல்களைச் செய்பவன்.
471. வத்ஸர: எல்லாப் பொருளிலும், எல்லாரிடத்தும் உள்ளுறைபவன்.
472. வத்ஸல: அன்புடையவன்.
473. வத்ஸீ: குழந்தைகளை (ஆன்மாக்களை) உடையவன்.
474. ரத்ந கர்ப்ப: (சங்கு சக்கரம்) முதலான நிதியை யுடையவன்.
475. தநேஸ்வர: ஐஸ்வர்யங்களை உடனே அளிப்பவன்.
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , இது எப்படி சாத்தியமானது ? ? ! !பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !


கோயில் எப்படி கட்டப்பட்டது ???என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு:180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு:கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
 
            
                                                                                                 
திருப்புகழ் பகுதி-1

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி

விநாயகர் துதி

1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

2. உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கலிற் றேனமுதத் துணர்வூறி;
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயோ;
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தை-வலத் தாலருள்-கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

3. பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பக்ஷியெனு முக்ரதுர கமுநீபப்-
பக்குவம லர்த்தொடையு மக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்;
திக்கதும திக்கவரு குக்குடமும் ரøக்ஷதரு
சிற்றடிய முற்றியப னிருதோளும்-
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமோடு
செப்பென எனக்கருள்கை மறவேனே;
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண்-
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;
மிக்க அடி சிற்கடலை பக்ஷணமே னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு மருளாழி-
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.

4. விடமடைசு வேலை யமார்படைசூலம்
விசையன்விடு பாண மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின் விளைவேது மறியாதே
கடியுலவு பாயல் பகலிர வெனாது
கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவனறி வீன னிவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன் மகள் வாய்மை யறியாதே
இதயமிக வாடியுடை பிளைநாத
கணபதியெ னாம முறைகூற
அடையலவ ராவி வெருவ அடிகூர
அசலுமறியாமலவரோ
அகல்வதென டாசொ லெனவுமுடி சாட
அறிவருளும் ஆனை முகவானே.

5. நினது திருவடி சத்திமயிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொடுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்-
நெடிய வளைமுறி யிக்கொடு லட்டுகம்
நிறவி லரிசிப ருப்பவ லெட்பொரி
நிகரி லினிகத் லிக்கனி வர்கமு மிளநீரும்;
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக வொற்றைம ருப்பனை வலமாக-
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளு முறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை-
செரும வுதரநி ரப்புசெ ருக்குட
னிரைய வரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தள டக்கைகள் செகசேசே;
எனவே துகுதுகு துத்தென வொத்துகள்
துடிக ளிடமிக வொத்துமு ழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிமெ னத்தவி லெழுமோசை-
இகலி யலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுநடித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே.

6. முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்-
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்;
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்-
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே;
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கநடிக்கக் கழுகொடு கழுதாடக்-
திக்குப்பரி யட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்;
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை-
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.

முதலாவது படைவீடு - திருப்பரங்குன்றம்

7. உனைத்தி னந்தொழு திலனுவ தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன தருள்மாறா-
உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்போ டுன்சிக ரமும் வலம் வருகிலன்
உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோல;

கனைத்தே ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதை கொடுபொருபோதே-
கலக்கு றுஞ்செய லொழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் வருவாயே;

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமே யுகுதசை கழுகண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா-
மிகுத்த பண்பயில் குயில் மொழி யழகிய
கொடிச்சி கும்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;

தினத்தினஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தவை செயுமுநி வரர் தொழ மகிழ்வோனே-
தெனத்தே னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

8. கறுக்கு மஞ்சன விழியினை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்கு ளின்சுவை யமுதுகு மொருசிறு நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரு மெனமன முருகவொர்
கவற்சி கொண்டிடமனைதனி லழகொடு கொடுபோகி

நறைத்த பஞ்சனை மிசையினின் மனமுற
அணைத் தகந்தனி லிணைமுலை யெதிர்பொர மிடறூடே
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
வுரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிரைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரவிரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா

திறற்க ருங்குழ லுமையவ ளருளுறு
புழைக்கை தன்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு மிளையோனே
சினத்தொ டுஞ்சம னுரைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே

9. வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கியைங்கணை மதனனையொருஅரு மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரு மெனவுரை
வழுத்தி யங்கவ ரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினின்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனி லருள்பெறநினைகுவ துளதோதான்

குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவட மணிசிறு
குறக்கரும்பின் மெய்துவள்புயöனைவரு வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை யெனமுனம்
அடைத்தி லங்கையி னதிபதி நிசிசரர்
குலத்தொடும்பட வொருகணை விடுமரி மருகோனே

திடத்தெ திர்ந்திடு மசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே.

10. கனகந்திரன் கின்ற -பெருஙகிரி
தனில்வந்துத கன்தக னென்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை யெறிந்திடு கதியோனே-
கடமிஞ்சி யநந்தவி தம்புணர்
கவளந்தனை யுண்டு வளர்ந்திடு
கரியின்றுணை யென்று பிறந்திடு முருகோனே;

பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புய லென்றவ ரன்புகொள் மருகோனே-
பலதுன்ப முழன்று- கலங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்று கழிந்துட வந்தருள் புரிவாயே;

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட வின்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே-
அடல்வந்துமு ழங்கி யிடும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்;

மனமுந்தழல் சென்றிட வன்றவ
ருடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில் வென்றனில் வந்தருளுங்கன பெரியோனே-
மதியுங்கதி ருந்தடி வும்படி
யுயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே.

11. சருவும்படி வந்தன னிங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலு மொன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழந்திட திறமாவே

இரவும்பக லந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன வென்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் அயர்வாகி
இவணெஞ்சுப தன்பத னென்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் அடைவேனோ

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயி ருண்டவ னெண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள் வென்றடல்
ஜெயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே

மருவுங்கடல் துந்துமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே
மதியும்கதி ரும்புய லும்தின
மறுகும்படி அண்டமி லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே.

12. அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபி னரைதனி லுடைதனை
அவிழ்த்து மங்குள அரசிலை தடவியு மிருதோளுற்
றணைத்து மங்கையி னடிதொறு நகமெழ
வுதட்டை மென்றுப விடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்

டுருக்கு மங்கியின் மெழுகென வுருகிய
சிரத்தை மிஞ்சிடு மநுபவ முறுபல
முறக்கை யின்கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெ யுருகிட வமுதுகு
பெருத்த வுந்தியின் முழுகிமெ யுணர்வற
வுழைத்தி டுங்கன கலவியைமகிழ்வது தவிர்வேனோ

இருக்கு மந்திர மெழுவகை முநிபெற
வுரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் அலகிய அறுமுக எழில்வேளென்
றிலக்க ணங்களு மியலிசை களுமிக
விரிக்கு மம்பல மதுரித கவிதனை
யியற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனி லசைவுற
நடித்த சங்கரர் வழிவழி யடியவர்
திருக்கு ருந்தடி யருள்பெற அருளிய குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

13. கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில் வந்து தித்துக் குழந்தை வடிவாகி
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
யவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி
அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்த மென்று பெறுவேனோ

இரவி யிந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரச ரென்றும் ஒப்பற்ற வுந்தி
யிறைவ னெண்கி னக்கர்த்தனென்றும் நெடுநீலன்
எரிய தென்றும் ருத்ரற்சி றந்த
அநும னென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரு மிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ

அரிய தன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனை யும்பு டைத்துச்சி னந்து
உலக மும்ப டைத்துப்ப ரிந்து
அருள்ப ரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே.

14. காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு தொருகோடி
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொருமயலாலே

வாதுபு ரிந்துவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந்த துந்தன
மார்பில ழுந்தவ ணைந்திடுந் துன்பம துழலாதே
வாசமி குந்தகடம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளு மன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன தருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவளஞ்சிவசங்கரன் கொண்டிட மொழிவோனே
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ரீவம டந்தையு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப னிருதோளா

தீதகீ மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குல மஞ்சமுன் சென்றடு திறலோனே
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே.

15. சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண்டன்புற் றிடுவோனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

16. தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடும்
கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்
கணத்தில் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்குமங்
குலத்திற் கங்கைதன் சிறியோனே
குறப்பொற் கொம்மைமுன் புனத்திற் செங்கரம்
குவித்துக் கும்பிடும் பெருமாளே.

17. பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை யொக்குந் தனபாரம்
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கய லொக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்கு மிருட்டென் றிளைஞோர்கள்

துதித்தமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றும்
துகிற்களைந் தின்பத் துர்க்கம ளிக்குங்
துலக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் றருள்வாயே

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கவ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்கும் கதிர்வேலா
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்கும்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
பதிர்ந்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் கொலைவேடர்
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் பெருமாளே.

18. பொப்புறும் கொங்கையார் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடும் சண்டிகள் வஞ்சமாதர்
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையி லன்புமேவும்
அவர்க்குழன் றங்கமு மறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம் பங்கயம் அன்புறாதோ

மிருத்தணும் பங்கய னலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங் கும்பிடு
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ் செந்தமிழ் அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ் சந்தகில் துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங் குன்றுறை தம்பிரானே.

19. மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்
மண்டிடும் தொண்டையமு துண்டுகொண் டன்புமிகு
வம்பிடுங் கும்பகன தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் அடிசேராய்

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் வயலூரா

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை பெருமாளே.

20. வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படும் செங்கை யாலும்
மதர்த்திடும் கெண்டை யாலு மனைவோரும்
வடுப்படும் தொண்டை யாலும்
விரைத்திடும் கொண்டை யாலும்
மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி

எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி கரையேற
இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீக மருள்வாயே

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோள மளவாகத்
துரத்தியன் றிந்த்ர லோக
மழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே
தினைப்புனம் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு பெருமாளே.

இரண்டாம் படைவீடு - திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

21. அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்

திந்திரிய சஞ்சலங் கலையறுத்
தம்புயப தங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலையு ணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனைய றிந்தறிந் தறிவினில்

சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையும விழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தவிழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்

கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குணடல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்

தண்டைகள் கவின்கலின் கலிöனைத் திருவான
சங்கரி மணங்குழைந் துருகமுதி
தந்தர வருஞ்செழும் தளர்நடைச்
சந்ததி சுகம்தொழும் சரவணப் பெருமாளே.

22. அருணமணி மேவ ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அச்பொற் கும்பத் தனமோதி
அளிகுலவு மாதர் விலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகளைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொல் தருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் கருள்கூடும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் தருள்மாயன்
திருமுருக சூரன் மார்பொரு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் பெருமாளே.

23. அறிவழிய மயல்பெருக வுரையமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறவியெனை யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமவி மிசைவளரு மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே.

24. அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்பலம்பு
மவலவுட லஞ்சு மந்து தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் வசைதீர
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கைகொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புன்மயி விளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன்

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று மிளையோனே
எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்ச
மிமையவரை யஞ்ச லென்ற

25. இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே

மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் பெருமாளே.

26. இருகுழையெறிந்தகெண்டைகள் ஒருகுமிழடர்ந்துவந்திட
இணைசிலைநெ ரிந்தே ழுந்திட அணைமீதே
இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத ருந்து சிங்கியின் மனமாய

முருகொடுக லந்த சந்தண அளறுபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டே ழுந்தொறு முருகார
முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகமுடியுந லம்பி றந்திட அருள்வாயே

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையும்
இதழியொட ணிந்த சங்கரர் களிகூரும்
இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே

அரைவடம லம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைகள்
அணிமணிச தங்கை கொஞ்சிட மயில்மேலே
அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே.

27. இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு மைந்தரோடே
இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவும் எங்கள்வீடே

வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு நிந்தையாலே
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவ தெந்தநாளோ

குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய மண்டுநீரூர்
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை வண்டலாடா

முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு செந்தில்வாழ்வே
முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் தம்பிரானே.

28. உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்ற லோதிநரை பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேல்விழி
மிடைகடையொ துங்கு பிளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களி
னிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனு
முமைமருவு சந்த்ர சேகரனு
மிமையவர்வ ணங்கு வாசவனு நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையி
லகிலசக அண்ட நாயகிதன்
முகிழ்முலைசு ரந்த பாலமுத முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு தம்பிரானே

29. ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை யேடெழு தாமுழு
ஏழையை மோழையை அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி லுடையோனே

தேவிம னோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு பெருமாளே.

30.ஓள தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

31. கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுன
மிட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சமென

மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற
பட்டுருவி நெட்டைக் க்ரௌஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்பும் குழம்பமுனை

பட்டஅயில்தொட்டுத்திடங்கொண்டெதிர்ந்தவுணர் முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை பெருமாளே.

32. கண்டுமொழிகொம்பு கொங்கை வஞ்சியிடை அம்புநஞ்சு
கண்கள்குழல் கொண்ட லென்று பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பக லென்று நின்று விதியாலே

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன்க லந்து
பண்புபெற அஞ்ச அஞ்ச லெனவாராய்

வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டறநெருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த மணிமார்பா

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க மயில்மீதே
சென்றசுர ரஞ்ச வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த பெருமாளே.

33. களப மொழுகிய புளகித முலையினர்
கடுவு மமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலின ரெவரோடும்
கலக மிடுகய லெறிகுழை விரகியர்
பொருளி லிளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினி லெவரையு நகையாடிப்

பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறி லமளியி லிதமொடு குழைவோடே
பிணமு மணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடு மணைபவர்
பெருமை யுடையவ ருறவினை விடஅருள் புரிவாயே

அளைவி லுறைபுலி பெறுமக வயில்தரு
பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுட னுருகாநீள்
அடவி தனிலுள வுலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர விரல்சேரேழ்

தொளைகள் விடுகழை விரன்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி யுடையவ னெடியவன் மனமகிழ் மருகோனே
துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையில் அலையெறி திருநக ருறைதரு பெருமாளே.

34. கனங்கள் கொண்டகுந்தளங்க ளுங்கு லைந்தலைந்துவிஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து களிகூரக்
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து விலைகூறிப்

பொனின்குடங்களஞ்சுமென்தனங்களும்புயங்களும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு முடனாகப்
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்குழைந்தவம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து படுவேனோ

அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி ருண்ட கண்டர் தந்த அயில்வேலா
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
ரிந்த அன்ப ரின்ப நண்ப உரவோனே

சினங்கள் கொண்டி லங்கை மன்சிரங்கள் சிந்த வெஞ்ச ரந்தெ
ரிந்த வன்ப ரிந்த இன்ப மருகோனே
சிவந்தசெஞ்ச தங்கையுஞ்சி லம்புதண்டையும்புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே.

35. கன்றிலுறு மானை வென்றவிழி யாலெ
கஞ்சமுகை மேவு முலையாலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் சூடு மதனாலே

நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத ருடனாடி
நஞ்சுபுரி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை யருள்பாராய்

குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு மணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்றகும ரேசு குருநாதா

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர் பெருமாளே.

36. குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் தடமூழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் குழலாரோ

டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் கடலூடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் கழல்தாராய்

ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் புகல்வோனே

சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற் கம்பத் தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் பெருமாளே.

37. குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்பு சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகிம கிழ்ந்து நாயேன் தளரா

அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள் தோடோய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்து நீயாண் டருள்வாய்

தடவியல் செந்தி லிறையவ நண்பு
தருகுற மங்கை வாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்ப
தனிமயில் கொண்டு பார்சூழ்ந் தவனே

சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை வேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்ட
சொரிகடல் நின்ற சூராந் தகனே.

38. கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டளைய டைந்தகுழல் வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் கெந்துபாயும்

வெங்கயல் மிரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ டண்டஆளாய்

சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென வந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும் டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை கொண்டவேலா

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு மெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் தம்பிரானே.

39. கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள நகமேவு
குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் மருளாதே

உம்பர்கள் ஸ்வாமி நமோநம எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம எனநாளும்
உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே

பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ டெதிர்போர்கண்

டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம னோகர வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யிடேற வாழ்வருள் பெருமாளே.

40. கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் றிடுநாயேன்

நிலைய்ழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் றடைவேனோ

சிலையென வடமலை யுடையவ ரருளிய
செஞ்சொற் சிறுபாலா
திரைகட லிடைகரு மசுரனை வதைசெய்த
செந்திற் பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் பெருமாளே.

41. சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு யங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் தம்பிரானே.

42. தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளருமிடை யேந்து தங்கத் தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமயஜெப நீங்கி யிந்தப் படிநாளும்

புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித் துழல்மூடர்
புனிநிதமிலி மாந்தர் தங்கட்
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
புளகமலர் பூண்டு வந்தித் திடுவேனோ

தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத் தனதான
தனனதன தாந்த னந்தத்
தெனநடன மார்ந்த துங்கத்
தனிமயிலை யூர்ந்த சந்தத் திருமார்பா

திகையசுரர் மாண்ட ழுந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச்
சிமையவரை யீன்ற மங்கைக் கொருபாலா
திகழ்வாயிர மேந்து கொங்கைக்
குறவனிதை காந்த சந்த்ரச்
சிகரமுகி லோங்கு செந்திற் பெருமாளே.

43. தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலியய மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி கைரிலுறை பெருமாளே.

44. தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி வரிதான
அடிச்யசஞ்சடை முடிகொண்டிடு
மரற்கும்புரி தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு பரவாழ்வே
கிøளிககுந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய பெருமானே.

45. துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி லணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே
பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்கு வலம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் பெருமாளே.

46. தெருப்பு றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்துருக்கித் தருக்கியே பண்டைகூள மெனவாழ்
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர்
தியக்க முற்றுந் தவிக்கவே கண்டுபேசி யுடனே

இருப்ப கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப் பசப்பியே கொண்டுகாசு தணியா
திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் தங்கள்சேர்வை தவிராய்

பொருப்பை யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் மண்டுகோப முடனே
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா லன்புகூரு மருகா

வரப்பை யெட்டிக் குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே நின்றுசேலி னினம்வாழ்
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத் துவத்தனே செந்தில்மேவு குகனே.

47. தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடித்-
தொண்டு கிழவ னிவனா ரென இருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி;

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமே யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேலி-
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வரவேணும்;

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம-
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல வருமாயன்;

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா-
திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்திநகரி லினிதே மருவிளர் பெருமாளே.

48. தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறுகாளையர் வாசல்தொ றும்புக் கலமாருங்

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற் றருளாதோ

பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் கினியோனே

சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே.

49. நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாசி
நாரி யென்பி லாகு மாக மதனூடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
நாட றிந்தி டாம லேக வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி விளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து வாகு ஞான
நூல டங்க வோத வாழ்வு தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
காலம் வந்து வோல மோல மெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
காள கண்ட ரோடு வேத மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
யான செந்தில் வாழ்வ தான பெருமாளே.

50. நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென் றினைவோரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ் சினில்நாளும்

புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம் பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந் தருள்வாயே

மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் றந்தைமன் றினிலாடி
மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
டமிழ்ச்சொற் சந்தமொன் றருள்வோனே

குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனும்
கொழித்துக் கொண்டசெந் திலின்வாழ்வே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் பெருமாளே.

51. நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலத்தாட் கமல மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.

52. பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி லாதொரு பகடது முதுகினில் யமராஜன்

அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகியெ வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன் வரவேணும்

மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள் தடமுலை
மந்த ராசல மிசைதுயி லழகிய மணவாளா

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
வஞ்ச கீழ்திசை சகலமு மிகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் பெருமாளே.

53. படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்பரம
அதிபெல கடோர மாச லந்தர னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு செங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் தம்பிரானே.

54. பதும விருசரண் கும்பிட் டின்பக்
கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
பகடு புளகிதந் துன்றக் கன்றிக் கயல்போலும்
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்
பதற விதமுறுங் கந்துக் கொந்துக் குழல்சாயப்

புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
தினிது வரையவெண் சந்தத் திந்துப்
புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் சடைதாரி
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் தவிரேனோ

திதிதி ததததந் திந்தித் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தாரவென் றொன்றொப் பின்றித்
திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் சுவர்சோரச்

சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கல்
புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் க்ருபைதாவென்
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே.

55. பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.

56. பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
பாவ மேகபொன் சாபமிங் தேபொருவ ரந்தமீதே

மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை யன்புளார்போல்
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் சந்தமாமோ

தீத தோதகந் தீதநிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர சங்கள்வீறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு மங்கிவேலா

தாதை காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி யெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை தம்பிரானே.

57. பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
மாதர்விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
போதவ மேயி ழந்து போனது மான மென்ப தறியாத
பூரிய னாகி நெஞ்சு காவல் பாடாத பஞ்ச
பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து மயல்தீரக்

காரண காரி யங்க ளானெத லாமொ ழிந்து
யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
காலுட லூடி யங்கி நாசியின் மீதி ரண்டு விழிபாயக்
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
கயாம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே

ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு முரவோனே
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
ரானவர் கூர ரந்தை தீரமுனாள்ம கிழ்ந்த முருகேசா

வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் மருகோனே
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த பெருமாளே.

58. மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற உடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய விழ ஆவி

வெங்கண் மறவி தன்கை மருவ
வெம்பி யிடறு மொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள் தொழவாராய்

சிங்க முழுவை தங்கு மடவி
சென்று மறமி னுடன்வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழு
செந்தி லுறையு முருகோனே

எங்கு மிலகு திங்கள் கமல
மென்று புகலு முகமாதர்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய பெருமாளே.

59. மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
வண்டு புண்டரி கங்களை யும்பழி
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை
தங்க வெண்டர ளம்பதி யும்பலு
மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு கண்டமாதர்

கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
கந்த சந்தன மும்பொலி யுந்துகில் வஞ்சிசேரும்
கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை நம்புவேனோ

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டுமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்குதாரை
சம்பு வின்கும ரன்புல வன்பொரு
கந்த னென்றிடு துந்துமி யுந்துவ
சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை விஞ்சவேகண்

டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட
அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக வென்றவேளே
அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்
மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு தம்பிரானே.

60. மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில்விழு கின்ற தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த பெருமாளே.

61. மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
மூடு சிலைதி றந்தம ழுங்கிகள்
வாசல் தோறுநடந்துசி ணுங்கிகள் பழையோர்மேல்
வால நேசநி னைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ளெவரேனும்

நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசி லாதவர் தங்களை யன்பற
நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ளவர்தாய்மார்
நீலி நாடக மும்பையில் மண்டைகள்
பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
நீச ரோடுமி ணங்குக டம்பிக ளுறவாமோ

பாயு மாமத தந்திமு கம்பெறு
மாதி பாரத மென்ற பெருங்கதை
பார மேருவி லன்று வரைந்தவ னிளையோனே
பாவை யாள்குற மங்கை செழுந்தன
பார மீதில ணைந்து முயங்கிய
பாக மாகிய சந்தன குங்கும மணிமார்பா

சீய மாயுரு வங்கொடு வந்தசு
ரேசன் மார்பையி டந்து பசுங்குடர்
சேர வாரிய ணிந்த நெடும்புயல் மருகோனே
தேனு லாவுக டம்ப மணிந்தகி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்திலு கந்தருள் பெருமாளே.

62. மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு முலைமாதர்
வாங்காத்திண் டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு மொழியாலே

ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக ளுறவாமோ

கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் மருகோனே

தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோது முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் பெருமாளே.

63. முகிலாமெனு மளகம் காட்டி
மதிபோலுயர் நுதலும் காட்டி
முகிழாகிய நகையும் காட்டி அமுதூறு
மொழியாகிய மதுரம் காட்டி
விழியாகிய கணையும் காட்டி
முகமாகிய கமலம் காட்டி மலைபோலே

வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை வளையுங் காட்டி யிதமான
மணிசேர்டி தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி லுழல்வேனோ

நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலனேயரு ளமர்செந் தூர்க்கு ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு முருகோனே

அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை முழுதுங் காத்த பெருமாளே.

64. முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
முறுவ லுஞ்சி வந்த கனிவாயும்
முருக வீழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
முகிலு மின்ப சிங்கி விழிவேலும்

சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
திருமு கந்த தும்பு குறுவேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
செயல ழிந்து ழன்று திரிவேனோ

மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதி றந்த செங்கை வடிவேலா
வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
மணிவ டம்பு தைந்த புயவேளே

அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
மலறி வந்து கஞ்ச மலர்மீதே
அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
அரிய செந்தில் வந்த பெருமாளே.

65. மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன்
கூற்றத் தத்துவ பொற்கழல்
கூட்டிச் சற்றருள் புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் பெருமாளே.