வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 35: பீடபிரதிஷ்டையின் முறை

35வது படலத்தில் பீடபிரதிஷ்டையின் முறையானது கூறப்படுகிறது. முதலாவதாக இலக்கண பூர்வமாக பீடஸ்தாபனத்தை கூறுகிறேன் என்பது கட்டளை யாகும் பிறகு லிங்கத்தின் உயரம், அகலம், விஷ்ணு அம்சத்தின் சம உயரம் பூஜாம்சத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான அளவுகள், நிழல் இல்லாமல் இருப்பது எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய தான பொருள், பீடம் லிங்க விஷயத்தில் பீடத்தின் சாதாரண இலக்கணம் கூறப்படுகிறது. பிறகு லிங்க அளவாலும் அங்குல அளவாலும், கை அளவாலும், பீடத்தின் சுற்றளவு கூறப்படுகிறது. இங்கு லிங்க உயரத்திற்கு அதிகமாக பீட அளவானது விரும்பத் தக்கதல்ல என்பது கூறப்படுகிறது. பிறகு மானுஷ ஸ்வாயம் புவாதி லிங்கத்திலும் சலலிங்க விஷயத்திலும் சாதாரணமாக சீரிய முறை கூறப்படுகிறது உலோகம் ரத்தினலிங்கம் விஷயத்தில் பாணலிங்க விஷயத்திலும் சதுரம், வட்டம், ஆனதாகவோ பீடத்தின் உருவம் ஏற்கத் தக்கதாகும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் பீடம் அமைக்கும் முறையில் அகலம், நீளம் அளவு கூறப்படுகிறது. அதில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் உள்ள பீடங்களின் விஷயத்தில் பத்மம் அமைக்கும் முறையில், பத்மத்தின் உயர அகலத்தின் அளவு நிரூபிக்கப்படுகிறது. அதற்கு மேல் ஊர்த்வபத்மம் அதோ பத்மம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பலவித பிம்பங்களுக்கும் ஒரே பீடம் அமைக்கும் முறை எவ்வாறு செய்யப்படுகிறதோ அப்பொழுது அந்த பீடம் அழகு உள்ளதாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிம்பங்களின் விஷயத்தில் பீட அமைப்பானது வட்ட வடிவமாகவும் நீள் வட்டவடிவமாகவும், பரிதி சந்திரன் போன்றும் தாமரைபூ போன்றும் அமைத்தல் வேண்டும். அமர்ந்திருக்கும் பிம்பவிஷயத்தில் அர்த்த சந்திரா காரமாண பீடமே அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு லிங்க சம்மந்தம் பத்ர பீடங்களின் உயர்வு விஷயத்தில் அழகு கூறப்படுகிறது. என கூறி பத்திர பீடம், பத்மபீடம், ஸ்ரீகரபீடம், சாம்பவபீடம், விஜயபீடம், உமாபீடம், சம்பத்கரபீடம், நந்திகா விருத்த பீடம் ஸ்வஸ்திகபீடம், பூர்ண சந்திரபீடம், ஸ்தண்டிலபீடம், ஸ்வாயம்புவபீடம் இவைகளின் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பீட அங்கங்களின் அதிஷ்டானங்களின் சேர்க்கும் முறை கூறப்படுகிறது.

அங்கு கிருதவாரியோ, வட்டமோ, சதுரச்ரமோ செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகின்றன. பிறகு ஸகள நிஷ்கள பீடங்கள் எல்லா பீடவிஷயத்திலும், அளவு விஷயத்தை கூட்டுவது குறைப்பது என்று முறையும் அறிவிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள மூர்த்தி பீடத்தில் கோமுகம் செய்யும் விதம், அதன் அளவுகள் கூறப்படுகின்றன. ஸகள மூர்த்தங்களின் பீடம் கோமுகம் உள்ளதாகவோ அல்லாததாகவோ கிருதவாரி ஸஹிதமாக உள்ளதாகவோ அல்லாததாகவோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு திருவாசியின் அமைப்பு அவற்றை பீடத்தில் சேர்க்கும் முறை கூறப்படுவது, பிறகு ஆவடையாரில் உமாதேவியும், லிங்கத்தில் ஸதாசிவனும் வசிக்கிறார்கள் அந்த இருவர்களின் சேர்க்கை எங்கு செய்யப்படுகிறதோ அதுவே பிரதிஷ்டை என அறிவிக்கப்படுகிறது. அந்தயோகமும் முதலில் செய்வது பிறகு செய்வது என இருவிதமாகும் அதில் முதலில் செய்வது. லிங்கஸ்தாபன கர்மாவிலே கூறப்பட்டுள்ளது. இரண்டாவது, கிரியை, இப்பொழுது கூறப்படுகிறது. என்று சொல்லி பீடஸ்தாபன முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் முதலாவதாக மானுஷலிங்க விஷயத்தில் பீடமானது ஜீர்ணம் முதலிய தோஷங்கள் ஏற்பட்டால் வேறு பீடத்தை ஸ்த்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அவ்வாறே முன்பு எந்த அளவுள்ளதாக பீடம் இருந்ததோ அந்த அளவு உடையதாகவே பீடத்தை ஸ்தாபிக்க வேண்டும். வேறு வடிவம் உடையதாக ஸ்தாபிப்பதில் குற்றம் ஏற்படும் இவ்விதமே தெய்விக, ஆர்ஷ, பாண, ஸ்வர்யம்புவாதி லிங்க விஷயத்தில் எல்லா இடத்திலும் வட்ட வடிவ பீடமோ அல்லது முன்பு இருந்த உருவத்தை உடைய பீடமோ ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அந்த பீடமும் முன்பு எந்த திரவ்யத்தால் நிர்மாணிக்கப்பட்டதோ அந்த திரவ்யத்தினாலேயோ அதை விட உயர்ந்த திரவ்யத்தினாலேயோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது பிறகு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள படி எல்லா கிரியையும் செய்யவேண்டும். என்ற விசேஷமானது இங்கு கூறப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட முறைப்படி அங்குரார்பணம் செய்து வேதிகை ஸ்நானமண்டபம் குண்டத்துடன் கூடியதாக மண்டபம் ஏற்படுத்தவும். பிறகு விசேஷ பூஜை செய்து பரமேஸ்வரனை ஸ்தோத்ரம்  செய்து அடிக்கடி வணங்குவதை அறிவித்து அடைந்த உத்தரவை உடையவனாக பூஜையை ஆரம்பிக்கவும் என கூறப்படுகிறது.

பிறகு லிங்கத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்த்தனி அதை சுற்றிலும் எட்டு கும்பங்களை நூல் முதலியவைகளால் அலங்கரித்ததாக சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்து பிறகு அங்கு செய்யவேண்டிய பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு அவ்வாறு அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறையும் கூறப்படுகிறது. பிறகு லிங்கத்தின் முன்பாக பூஜிக்க பட்ட கும்பங்களை வேறு ஸ்தண்டிலத்தில், ஸ்தாபித்து பிரதிதினமும் நித்ய பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தங்க கோடாலியால் பழுது அடைந்த குற்றத்தால் தோஷம் அடைந்த பீடத்தை அஸ்திமந்திரத்தால் பிரித்து அதில் உண்டான சாந்து பூச்சு முதலியவைகளை ஆழமான ஜலத்தில் போட்டுவிடவும். பிறகு அங்கு பிரதிதினமும் சாந்திஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு லிங்கத்திற்கு மெருகு ஊட்டுதல் முதலியவையும் கஷாயோதக, கோமூத்திர கோசானம் இவைகளால் சுத்தி செய்து பிறகு பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம். இவைகளால் வஸ்திர, புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேறு மண்டபமத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து. அதில் பிண்டிகையை ஸ்தாபித்து அதில் யோனி அங்கமான அடையாளத்தை குறிப்பிடவும் பிறகு மிருத்யுஞ்சய மந்திரத்தை கூறிக்கொண்டு தேன், நெய் இவைகளால் ஸந்தர்பணம் செய்து அவ்வாறே தேன் நெய் கூடிய தாம்பர பாத்திரம், வெங்கல பாத்திரத்தையும், காண்பித்து தான்ய ராசிகளுடன் கூடிய பசு கன்று, கன்யாஸ்திரி இவைகளை மந்திர பூர்வமாக காண்பிக்கவும். பிறகு பீடத்திற்கு சுத்தி செய்வதன் மூலம் வஸ்திரசந்தனம் இவைகளால் அலங்கரித்து (பிராம்மணர்களுக்கு உளவு அளித்தல்) கிராமப் பரட்சிணம் பூர்வமாக ஜலாஸ்ரயமான நதீ முதலிய இடங்களை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது.

பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஆசார்யன் அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வதன் மூலம் அவனை வழி அனுப்பி பிராம்மணர்களுக்கு உணவு அளித்து பசுஞ் சாணத்தால் மெழுகி புண்யாக வாசனம், வாஸ்த்து ஹோம விதானம் இவைகளால் ஸம்ஸ்காரம் செய்து தோரணம், விதானம், கொடி, தர்பமாலை, புஷ்பமாலை இவைகளால் அலங்கரித்து எல்லா அமைப்பும் கூடியதாக அமைத்து துவாரங்களை அஸ்திரமந்திரங்களால் பிரோக்ஷித்து துவார தேவதை பூஜைகளையும் செய்து மண்டபம் நுழைந்து தன்னை அங்கந்நியாஸ, கரந் நியாஸ, அந்தர்யாகம் முடித்தவராக பாவித்து ஞான கட்க ஹஸ்தத்துடன் செய்யப்பட்ட ஆத்ம பூஜை உடையவராக அஸ்திரகும்ப பூஜையையும் திக் பாலகர்கள் பூஜையையும் செய்து குண்ட அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஜலத்தில் அதிவாசம் செய்யப்பட்ட பிண்டிகைகளை, மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்னாந மண்டபத்தில் மிருத், கஷாய, உதகங்களாலும், பஞ்சாமிருதங்களாலும், தர்ப சந்தன ஜலங்களாலும், ஸ்நாநம் செய்வித்து இரண்டு வஸ்திரம் சாத்தி அதன் கோமுக பாகத்திலோ கழுத்து பாகத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து அதில் தோல் முதலியவைகளால் சயனம் அமைத்து ஆசனம் கல்பித்து பிண்டிகையை வைக்கவும் என்று கோமுகத்தின் சயனாதி வாச விதி கூறப்படுகிறது. பிறகு நூல்வஸ்திரம் இவைகளாலும் கூர்ச்சம் இவைகளாலும் தேங்காய் மாவிலை கூடியதும் நவரத்தினம், ஹேம பங்கஜத்துடன் கூடியதுமான வர்தனீ கும்பத்தை வைத்து அதன் மத்தியில் ஆசனத்துடன் தேவியை சிவந்த புஷ்பங்களால், அர்ச்சிக்கவும் அந்த கும்பத்தை சுற்றி நூல் வஸ்திரம், ஸ்வர்ணம், தேங்காய், மாவிலையுடன் கூடிய தான எட்டு வர்தனிகளில் வாமா முதலிய அஷ்டசித்திகளை பூஜித்து ஸ்தாபனம் செய்யவும் என கூறி அதில் முர்த்தி மூர்த்தீச்வரி நியாஸ முறையும் தத்வதத்வேச்வரி நியாஸ முறையும் பூஜை செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் அந்தர்பலி பஹிர்பலி கொடுக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது.

பிறகு காலையில் ஆசார்யன், மூர்த்திபர்களுடன் கூடி சுத்தமாக அனுஷ்டிக்கப்பட்ட நித்ய கிரியைகளை முடித்து வந்து ஸாமான்யார்க்ய ஹஸ்த்தத்துடன் திவாரதேவதைகளை பூஜித்து, சந்தனம் முதலியவைகளாலும் நைவேத்யங்களாலும் ஆவுடையார், வர்தனியையும் பூஜித்து பூர்ணாஹுதிவரை ஹோமத்தை முடித்து ஆவுடையாரை பலவித வாத்ய, நாட்டிய, கீதங்களுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து கர்பக்கிரஹம் அடையவும் பிறகு லிங்க ஸ்தானபத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஆவுடையாரை லிங்கத்தில் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு பாண லிங்கத்தில் ஆவுடையாரை சேர்க்கும் முறையில் விசேஷமான விதி கூறப்படுகிறது. பீடத்தின் பள்ளத்தில் ரத்தினங்கள் தங்கம் இவைகளை போட்டு முன்பு போல் எல்லாம் அனுஷ்டிக்கவும் என ரத்ன நியாஸ விதி கூறப்படுகிறது. பிறகு அஷ்டபந்தனமோ, திரிபந்தனமோ சேர்த்து புண்யாஹ வாசனம் ஸம்பு ரோக்ஷணம் செய்து சாந்தி கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்யவும். பிறகு பீடத்தில் ஆசன மந்திரத்தால் பூஜிக்கவும். முன்பு லிங்கத்தின் முன்பாக ஸ்தாபிக்கப்பட்ட சிவ கும்பவர்தனியையும் யாகமண்டபத்தில் வாமா முதலிய எட்டு சக்திகளை உடைய கும்பங்களுடன் கூடிய தேவி வர்தனியையும் லிங்கத்திற்கு முன்பாக ஸ்தாபித்து ஜீவன் நியாஸம் செய்து அபிஷேகம் செய்யவும். சந்தனம் முதலியவைகளால் அர்ச்சனை செய்யவும். பிறகு இந்த பூமியில் எந்த காலம் வரைசூர்யனும், சந்திரனும் இருக்கிறார்களோ அந்த காலம் வரை தேவியாகிய உன்னுள் சாந்நித்யமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்ய வேண்டும். பிறகு லிங்கஸ்தாபனத்தில் கூறிஉள்ளபடி பாதி அளவு தட்சிணையை ஆசார்யன் முதலானவர்களுக்கு கொடுக்கவும் பிறகு நான்கு நாள், மூன்று நாள், இரண்டுநாள், ஒரு நாளோ, ஹோமத்துடன் கூடிய விசேஷ பூஜை செய்யவும் நான்காவது தினத்திலோ முதல் தினத்திலோ சண்டிகேஸ்வரர் பூஜை செய்யவேண்டும். பாணலிங்க விஷயத்தில் சண்டிகேஸ்வரர் பூஜை செய்யலாம் என்றும் செய்யக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பீடமுனி ஸம்ஸ்தாபனத்தின் பலன் லிங்கபிரதிஷ்டையின் பலனுக்கு ஸமமாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு 35 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் பீடம் அமைப்பதைப்பற்றி கூறுகிறேன், இலிங்கத்தின் உயரத்திற்கு தக்க விசாலமான பீடம் எல்லா பயனையும் அளிக்கத்தக்கது.

2. இலிங்கத்தின் விஷ்ணு பாகத்திற்கு சமமான உயரமுள்ளதும் ரேகை நிழல்விழும் தோஷமில்லாததும் பூஜைக்கு உகந்த ருத்ர பாகம் வெளியில் தெரிந்து உள்ளதுமான

3. பீடத்தை மனிதன் அமைத்து விட்டால் எதுதான் கைகூடாது, இலிங்கத்தின் உயரத்திற்கு சமமாகவோ லிங்கத்தின் உயரத்தில் பாதியோ

4. இருபத்தேழு அளவுகள் இருபத்தாறுபாக அளவாகவும், லிங்கத்தின் அகலத்தில் மூன்று பங்கு அதிகமாகவோ ஐந்து பங்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

5. மூன்று, ஐந்து பங்குகளின் இடைவெளியில் பிரிக்கப்பட்டதில் இருபத்தியேழு பங்கு அளவாகும், இலிங்கத்தில் அளவை முன்னிட்டு பீடத்தின் அகலம் கூறப்பட்டுள்ளது.

6. பதினைந்து அங்குலம் முதல் கொண்டு ஒவ்வொரு அங்குலமாக கூட்டினாலும், பதினாறு அங்குலம் முதல் இருபது அங்குலம் வரை பீடத்தின் அகலம் இருக்கலாம் என்பதாகும்.

7. அல்லது ஒரு முழம் முதல் ஒன்பது முழம் வரை லிங்கத்தின் பீட அகலம் இருக்கலாம். லிங்கத்தைக் காட்டிலும் அதிகமாக பீடத்தின் அகலம் இருக்க கூடாது.

8. நுனிபாகம் அடிபாகத்திற்கு சமமாக இருக்க வேண்டும், அடிபாக அளவில் குறைவாக இருக்க கூடாது. ஆறு அம்சத்திலிருந்து பதினாறு அம்சம்வரை அடிபாகம் இருக்கலாம்.

9. ஒரு பங்கு நுனி அதிகமான அகலமாகியும் பீடமும் சொல்லப்பட்டுள்ளது. பிரும்ம பாகத்தில் விஷ்ணு பாகத்தின் உயரத்தை

10. நான்கு பாகம்பண்ணி அதில் மூன்று பாகம் பீடத்தின் உயரம் இருக்கலாம், பிரும்ம பாகம் விஷ்ணு பாகம் எட்டு பாகமாக பிரித்தால் ஒன்பது பாக உயரம் என்பதாக ஆகும்.

11. நந்த்யாவர்த்தம் என்ற சிலை விலக்கத்தக்கது, மானுஷ லிங்கத்திலும் இவ்வாறு பீடம் கூறப்பட்டுள்ளது. ஸ்வயம்பு முதலிய லிங்கத்திலும்

12. ஆன்மார்த்த சல லிங்கத்தின் விஷயத்திலும் பொதுவாக சில விதி சொல்லப்படுகிறது. பீடம் லிங்கத்தின் உயர அளவுக்கு சமமாகவோ அரை பங்கு 2 பங்கு அதிகமாகவோ இருக்கலாம்.

13. அகலத்தில் மத்தியின் ஏழு அம்சத்தின் உயரம் பதினேழு மானாங்குல அளவு ஆகும், அடிபாக அளவாக முன்புள்ளபடி ஏற்க வேண்டும்.

14. அகலத்தின் பாதியளவுக்கு ஸமமான உயரத்தையோ அகல சமமான உயரமோ பாதியளவு அதிகமான உயரமோ இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் ஏழாக பிரிக்கப்பட்டதில் உயரம் பதினேழுமானாங்குல அளவாகும்.

15. ஸ்வயம்பு முதலிய லிங்கங்களில் லிங்கத்தின் உயரம் அகலம் பீடத்தில் இல்லாவிட்டால் பீடத்திற்கு தோஷமாக ஆகாது. எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் பீடம் அமைக்க வேண்டும்.

16. நாற்கோணமாகவோ அல்லது வட்டமாகவோ பீடம் இருக்கலாம். உலோகத்தினாலான லிங்கத்திற்கும் இரத்தினத்தினாலான லிங்கத்திற்கும் பாண லிங்கத்திற்கும் இது பொருந்தும்.

17. திருமேனியின் உயரத்தில் முக்கால் பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ பீட அகலமாகும். நடுவில் பதினாறளவு அம்சம் பீட அளவு ஆகும்.

18. உயரம் பதினேழு பாகமுடையதாகும். நாற்கோணமாகவோ, நீள்சதுரமாகவோ இரண்டு மடங்கு வரையிலும் அதன் நடுவில் முன்பு போலவே பீடம் அமைக்க வேண்டும்.

19. பீடத்தின் நீளம் கூறப்பட்டு அதன் உயரம் கூறப்படுகிறது. அகலத்திற்கு ஸமமான உயரமும் அதன் பாதியோ அதன் இடைவெளிபட்ட அளவோ

20. பத்தில் ஓர்பாகமும், பதினேழு மானாங்குலமும் ஆகும், அகலத்திலிருந்து கால் பாகம் அதிகமாக உயரம் அமைக்க வேண்டும்.

21. நடுவில் எட்டாக பிரிக்கப்பட்டதில் நடுவில் ஒன்பது அளவாக அறியவும். பிம்பத்தின் உயர அளவின் நான்கு பாக அளவு பத்ம பீடத்தின் உயர அளவாகும்.

22. பிம்ப உயரத்தின் எட்டில் ஓர்பாகம் பீடத்தின் உயரமாக கூறப்பட்டுள்ளது. நடுபாகத்தை எட்டாக பிரித்து ஒன்பது உயரமங்குலமாக அமைக்கவும்.

23. நின்ற கோல அமைப்பு பிம்பத்திற்கு பாத தளத்தின் நீள அளவில் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால் பன்னிரெண்டங்குலம் வரை தாமரையின் நுனி அகல அளவாகும்.

24. அமர்ந்திருக்கும் கோலத்தின் தாமரை அகல அளவானது இருபத்தி மூன்று மாத்ரையாகும். அரையங்குலம் முதல் முப்பத்தியாறு கையளவு வரை உயர அளவாகும்.

25. பீடத்தின் மூன்று பாகத்தின் ஓர் பங்கு அதிகமாக அடிப்பாக பரப்பளவு உயர்வாக கூறப்பட்டுள்ளது. நடுவில் பதினாறு பங்காக்கப்பட்ட தில் பன்னிரன்டம்சமின்றி

26. அகலம் ஏழங்குல அளவாகும், அது பத்து விதமாக கூறப்பட்டுள்ளது. மத்தியில் அகலத்திற்கு சமமான நீளமும் இருமடங்காகவோ ஆகும்.

27. எட்டாக பிரிக்கப்பட்டதில் நீளம் ஒன்பதாக கூறப்பட்டுள்ளது, மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை அதன் உயரத்தில் பிரிக்கப்பட்டு

28. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகங்களால் மேல்நோக்கிய தாமரையமைப்பைச் செய்யவும், மீதியுள்ள அளவுகளால் கீழ்நோக்கிய தாமரை அமைப்பு மேல்தளம் இன்றி அமைக்க வேண்டும்.

29. நான்கு, எட்டு, பத்து, பன்னிரெண்டு தள அமைப்பாகவோ அழகான உயரத்தை உடையதாக நின்ற கோல பிம்ப அமைப்பின் பீடமாக கூறப்படுகிறது.

30. அதிகமான உயரமுடையதாக ஆஸனத்திற்கு மேல் அமைக்கவும். மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை நீள அகலமுமோ

31. இரண்டு பக்கங்களிலும் ஒன்று, இரண்டு மூன்று பாகமோ பிரித்து மீதியுள்ள பாகத்தால் நடுவில் பத்ரம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

32. ஸபத்ரம் என்ற அமைப்பாகவோ விபத்ரம் என்ற அமைப்பாகவோ பீடத்தை எல்லா பிம்பங்களிலும் நன்கு அழகாக இருக்கும்படி ஓர் பீடமாகவே அமைக்க வேண்டும்.

33. வட்டம், நீள்வட்டம் அரை வட்டம் இவற்றில் ஓர் அமைப்பு முறையாக தாமரையின் உருவை அமைக்கவும், அதில் அமர்ந்த கோல பிம்பத்திற்கு அரைவட்ட அமைப்பை உடைய பீடம் செய்ய வேண்டும்.

34. லிங்கங்களின் பீட உயரத்திற்கு அழகு கூறப்பட்டுள்ளது, அளவில் பதினாறில் ஓர்பங்கு பாதுகை என கூறப்படுகிறது.

35. நான்கம்சம் ஜகதீ எனப்படும், மூன்றம்சம் குமுதம் எனப்படும். எட்டிதழ் தாமரை ஓரம்சம் மூன்றம்சத்தில் கர்ணம்

36. ஓர்பாகத்தால் பட்டிகையும் இரண்டு பாகத்தினால் மஹாபட்டிகையும் க்ருதவாரி என்பது ஓர் அம்ச அளவால் அமைக்கவும், மேற்கூறிய வகை பத்மபீடம் எனப்படும்.

37. பதினாறாக பிரிக்கப்பட்ட உயரத்தில் இரண்டு பாகம் பாதுகையாகும், ஐந்தம்சம் பத்மம் என்பதாகும். இரண்டுபாகம் வட்ட அமைப்பாகும்.

38. நான்கம்சம் மேல் தாமரையமைப்பையும் இரண்டம்சத்தினால் பட்டிகையும், க்ருதவாரி என்ற அமைப்பு ஓர் அம்சத்தாலும் அமைப்பது பத்ம பீடம் எனப்படும்.

39. இருபத்தியொரு பாகத்தில் மூன்று பாகங்களால் பாதுகை என்ற அமைப்பும் மேலே ஐந்தம்சங்களால் தாமரையும் ஓர் அம்சத்தால் கம்பமும் மேலே மூன்று பாகங்களால்

40. கர்ணமும், ஓரம்சத்தால் கம்பமும் ஆகும். ஐந்து பாகங்களால் மேல் தாமரையமைப்பும், இரண்டம்சங்களால் பங்த்தி என்ற அமைப்பையும் மேலே க்ருதவாரி என்ற அமைப்பை ஓர் பாகத்தால் செய்ய வேண்டும்.

41. பதினாறு பாகமாக பிரிக்கப்பட்ட உயரத்தில் ஒன்றரை பாகம் உடையது பாதுகையாகும், பந்த பாகத்தினால் 4 பாகம் ஜகதீயும், ஒன்றரை பாகத்தால் பத்மத்தின் உயரமும்,

42. ஓர் அம்சத்தால் மேலுள்ள கம்பமும் இரண்டம்சத்தால் குமுதம் என்ற பாகமும் ஆகும். அதற்கு வட்ட வடிவ அமைப்பும் பட்டிகை ஓர்பாக அளவாலும் ஆகும்.

43. இரண்டு அம்ச அளவால் கர்ணமும், பத்மம் என்ற பாகமும் அரையம்ச அளவால் பட்டிகையும் மீதியுள்ள அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்பும் செய்வதால் ஸ்ரீகரம் என்கிற பீடமாக கூறப்பட்டுள்ளது.

44. இருபத்தைந்தாக பிரிக்கப்பட்ட பாகத்தில் ஓரம்சம் பாதுகையாகும், ஓர் பாகத்தால் பத்மமும் அதற்கு வாஜநம் என்ற அமைப்பு ஓர் பாகத்தாலும்

45. நான்கு பாகத்தால் ஜகதீயும் தாமரையின் அமைப்பு மூன்று பாகமும் களம் என்ற பாகம் பாதி பாகத்தாலும் மூன்று பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால் வட்ட வடிவமும்

46. குமுதம் என்ற பத்மம் ஓர் பாகத்தினாலும் வாஜனம் என்ற அமைப்பு ஐந்து பாகத்தினாலும் இரண்டு பாகத்தினாலும் கர்ணம் என்ற அமைப்பும் ஓர் அம்சத்தால் வாஜனமும்

47. தாமரை ஓர் பாகத்திலும் இரண்டு பாகத்தால் மஹாவாஜநமும், ஓர் அம்சத்தால் கம்பமும் பாதியால் க்ருதவாரி என்ற அமைப்பும் கூறப்பட்டுள்ளது.

48. இவ்வாறு சாம்பவ பீடம் அமைக்க வேண்டும். வேறு பீடம் கூறப்படுகிறது. பீடத்தின் உயரத்தை இருபத்தியொன்றாக பிரித்து

49. ஓர் பாகத்தால் பாதுகையும் நான்கு பாகத்தினால் ஜகதீ என்ற அமைப்பாகும். ஓர் பாகத்தால் கர்ணமும், ஓர் பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால்

50. குமுதமும் ஓர் அம்சத்தால் பத்மமும், ஓர் பாகத்தால் வாஜனமும் கர்ணம் இரண்டு பாகத்தாலும் ஓர் பாகத்தால் வாஜனமும் ஓர் அம்சத்தால் பத்மமும்

51. இரண்டு பாகத்தால் மஹாபட்டியும் பத்மம் ஓர் பாகத்தாலும் கம்பம் ஓர் பாகமும், மேலே க்ருதவாரி அமைப்பு ஓர் பாகமாயுள்ளது. விஜயம் என்ற பீட அமைப்பாகும்.

52. பீடத்தை பதினெட்டாக பிரித்து ஓர் அம்சம் பாதுகை எனப்படும், ஒன்றரை பாகம் பத்மமும், கம்பம் ஓர் அம்சமுமாகும்.

53. நான்கு பாகத்தால் ஜகதீயையும் மூன்றம்சத்தால் குமுதமும் ஓர் பாகத்தால், கம்பமும் இரண்டு பாகத்தால் கர்ணம், ஓர் பாகத்தால் கம்பமுமாகும்.

54. இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும், ஓர் பாகத்தால் வாஜநமும் அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்புடன் கூடியது உமா பீடம் எனப்படும்.

55. பன்னிரெண்டாக, பிரிக்கப்பட்ட உயர பாகத்தில் ஓர் பாகம் பாதுகை, ஓர் அம்சம் பத்மம் இரண்டு பாகத்தால் ஜகதீயும் பத்மமும் ஆகும்.

56. இரண்டு பாகத்தினால் தாமரையும், கர்ணம் பாகம் அரைபாகமும், அரை பாகத்தால் மேல்பாக தாமரையமைப்பும் குமுதமும், இரண்டு பாகத்தால் பத்மமும் அரைபாக, அரைபாகத்தால்

57. கம்பமும், கர்ணமும் அரைபாக, அரைபாகத்தில் கம்பமும் பத்மமும் அரைபாகத்தினால் மஹா பட்டீயம் மேல்பாகத்தில் ஒன்றரை பாகத்தினால்

58. க்ருதவாரியையும் உடையது (பீடம்) ஸம்பத்கரம் எனக் கூறப்பட்டுள்ளது. பீட உயரத்தின் பதினொன்றாக்கப்பட்டதில் ஓரம்சம் பாதுகையாகும்.

59. ஜகதீ மூன்றம்சமும் கம்பம் ஓர் அம்சமும், கர்ண பாகம் இரண்டு பாகத்தினாலும் ஓர் அம்சத்தால் வாஜநமும் இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும் ஆகும்.

60. க்ருதவாரி ஓர் பாகத்திலும் அமைப்பது நந்திகாவ்ருத்தம் என்ற பீட அமைப்பாகும். உயரத்தை பதினைந்து பாகமாக்கி அரைபாக அளவு பாதுகம் ஆகும்.

61. அரை பாகத்தினால் கம்பமும், பத்மமும் மூன்றம்சத்தாலும் களம் அரைபாகத்தாலும் ஓர் அம்சத்தினாலும் பத்மம் இரண்டம்சத்தினால் குமுதம் ஓர்பாகம் பத்மம்

62. அரைபாகத்தினால் களமும் மூன்று பாகத்தினால் பத்மமும் ஒன்றரை பாக அளவில் பட்டிகையும், அரையளவால் க்ருதவாரியும் அமைப்பது ஸ்வஸ்திக பீட அமைப்பாகும்.

63. உயரத்தை பதினெட்டாக பிரித்ததில் இரண்டு பாகம் பாதுகை ஆகும். மூன்று பாகத்தினால் பங்கஜமும் பட்டிகை ஓர் அம்சத்தினால் நிர்மாணித்து.

64. ஆறு பாகங்களால் கர்ணமும் வாஜனம் ஓர் பாகத்தினாலும் இரண்டு பாகத்தினால் தாமரையும் கூறப்பட்டுள்ளது.

65. ஓர் பாகத்தினால் க்ருதவாரி அமைப்பதினாலும் பூர்ண சந்திர பீடம் எனப்படுகிறது. உயரத்தை பதினாறு பங்காக்கி ஓர் பாகத்தினால் பாதுகையும்

66. இரண்டு பாகத்தினால் பத்மமும், ஓர் பாகத்தினால் கம்பமும் ஆறு பாகத்தினால் களமும் ஓர் பாகத்தினால் கம்பமும் பத்மம் இரண்டம்சத்தினால் இரண்டு பாகத்தினால்

67. மஹாபட்டீயும் ஓர் பாகத்தினால் மேல் பாகத்தில் க்ருதவாரியும் அமைக்கவும். இவ்வாறுள்ளது ஸ்தண்டில பீடமாகும்.

68. உயரத்தில் பதினெட்டு பங்காக்கி இரண்டு பாகம்  பாதுகையாகும், ஐந்து அம்சம் கம்பமாகும். இரண்டு பாகம் பத்மம் எனப்படும்.

69. ஓர் பாகத்தினால் கம்பம், மற்றவை முன் மாதிரியேயாகும். பத்தொன்பது பாகமான உயரத்தில் இரண்டு பாகத்தினால் பாதுகையும் ஆகும்.

70. ஓர் அம்சத்தினால் கம்பமும், திரும்பவும் இரு பாகத்தினால் கம்பமும், இரு அம்சத்தினால் பத்மமும் கம்பமும் ஆகும், மற்றவை முன்மாதிரியேயாகும்.

71. மேற்கூறிய அமைப்பு ஸ்வயம்புவ பீட அமைப்பாகும். அதிஷ்டான அமைப்புகள் எவை உண்டோ அவை உபபீடங்களாக அமைக்கப்படவேண்டும்.

72. பீட அமைப்பின் மேல் ஒரு பாகம் ஒன்றரை பாக்ததினால் க்ருதவாரியும் இரண்டு பாகத்தினாலும் க்ருதவாரி அமைக்கவும். விருப்பப்பட்ட உயரத்தில் பிரிக்கப்பட்ட அம்சத்தில்

73. ஸமமாக வெளிக்கொணர்ந்து மஹா பட்டிகையை வெளிப்படையாக உள்ளதாக அமைக்கவும். க்ருதவாரி அமைப்பை வட்டமாகவோ நாற்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

74. பலவிதி அதிஷ்டான முறைப்படியுடன் கூடியதாகவோ அமைக்கவும். கர்ணபாக அளவை ஏற்று கம்பம் முதலியவைகளில் சேர்க்க வேண்டும்.

75. கர்ணம் என்ற பாகத்தை அதன் அளவுப்படி அமைக்கவும். ஓர்யவை அதிகரிப்பால் எட்டு மாத்திரையளவு வரை கூட்டுவதையும் குறைப்பதையும் செய்ய வேண்டும்.

76. பீடங்களின் எல்லா அமைப்புகளிலும் ஸகளம், நிஷ்களம் சலபிம்பம், அசலபிம்பம், உலோகம், ரத்னஜம், பாணலிங்கம் இவைகளின் அமைப்புகளாலும்

77. கருங்கற்சிலை, மரத்தாலானவை, மண்மயமானவை வேறு வித பொருட்களினாலோ செய்யப்பட்ட விஷயத்திலும் மேற்கூறிய அமைப்புகள் அமைக்கவும். நிஷ்கள பிம்பத்தில் அதனளவுப்படி பீடம் அமைத்தல் வேண்டும்.

78. பீடத்தின் உயரத்தை மூன்று பங்காக்கி அடிபாக அளவினால் கோமுகமும் அதன் பாதியால் நுனியின் அகலமும் எல்லா லிங்கங்களிலும் உரிய அளவாகும்.

79. பீடத்தின் அரைபாக அளவால் பாதசிலையும் மத்தியில் உயரஅளவான பதினேழு அளவாக கோமுகத்தின் அளவாகும்.

80. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி, கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி, கால் பாகம் குறைவாகவோ ஐந்து, மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

81. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி கால்பாகம் குறைவாகவோ ஐந்து மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

82. ஏழம்சத்தில் ஐந்து நான்கு, மூன்று பாகமாகவோ நுனியில் அமைக்கவும், ஜலதாரை அமைப்பு கம்பீர அமைப்புள்ளதாகவும் அதே அமைப்பாகவும் இரண்டு பாக அமைப்பாகவோ அமைக்க வேண்டும்.

83. மூலகம்பம், அதற்கு மேல் பத்மமும் இரு கம்பங்களிலும் அதன் மேல்கம்பம் என்ற அமைப்பை ஒன்று, இரண்டு ஒன்று பாகங்களால் முறைப்படி அமைக்கவும்.

84. கோமுகத்தின் கன அளவின் அளவு கூறப்பட்டுள்ளது. கர்ணத்தின் பாதியளவு அதன் அளவாகும். பீடத்தின் உயரத்தை பிரித்து

85. இருபத்தியொன்றாக செய்து நான்கம்சத்திலிருந்து ஓர்பாக அதிகரிப்பால் பத்து பாகம் வரை பீடத்தின் கோமுக அமைப்பாகும்.

86. ஒரே அமைப்புள்ள கோமுகம் உயர்ந்ததாகும். அவ்வாறில்லையெனில் பிளவுபடாததாக அமைக்கவும். உலகானுபவத்தை விரும்புபவர்களுக்கு பிளவு படாத பிண்டிகை லிங்கத்திற்கு விரும்பத்தக்க தல்ல.

87. மற்றவைகள் உயர்ந்ததாக ஆகும். ரத்னலிங்கத்திலும் ஸ்படிகாதி லிங்கத்திலும் ஒரே கல்லாக இருப்பது விரும்பத்தக்கதாகும், அவ்வாறில்லையெனில் பிளவுபட்ட கற்களாலும் அமைக்கலாம்.

88. பிளவுபடுவது அங்க அமைப்புவரை யிலுமோ, மேலுள்ள பாகம் பிளவுபடாததாக இருக்க வேண்டும். கோமுகமூக்குடன் இருப்பது விரும்பத்தக்க தாகும். கீழ்பீடத்திலும் கோமுக அமைப்பு இருக்க வேண்டும்.

89. குற்றமில்லாத பொருட்களாலானதாக கண்டமும், பீடமும் கூறப்பட்டுள்ளன. ஸகளமூர்த்தி பிம்பங்களுக்கு கோமுகமின்றியும் கோமுகத்துடனோ பீடம் அமைக்கலாம்.

90. க்ருதவாரி என்ற அமைப்புடனோ அமைப்பின்றியோ அமைக்கவும். பாணலிங்கம் முதலிய லிங்கங்களுக்கு நாஹ்கோணமோ நீள்சதுரமோ

91. பீடம் அமைத்து அதற்கு மேல் பீடத்தையோ அமைக்கவும். பீடத்தை ஒட்டி சேர்ந்ததாகவோ தனிப்பட்டதாகவோ திருவாசியை அமைக்கவும்.

92. பலவித வாஜநம் மற்ற அமைப்பையுடையதாகவும் முத்து மாலை போல் அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். பலவித புஷ்பங்களுடன் கூடியதாகவும், பலவித அக்னிஜ்வாலையுடன் கூடியதாகவும் அமைக்கவும்.

93. எல்லாவித அலங்காரங்களுடன் கூடியதாயும் விருப்பப்பட்ட முக அமைப்பின் கனத்தை உடையதாயும் அமைக்கவும். பிரமாண்ட அமைப்பு, தோரண அமைப்புடனோ வட்டவடிவமாகவோ நீண்ட வட்டமாகவோ,

94. பிம்பம், லிங்கம் இவற்றை அனுசரித்தோ விருப்பப்பட்ட அளவை உடையதாகவோ பீடம் அமைத்தல் வேண்டும். இவ்வாறு திருவாசியமைப்பு முறை கூறப்பட்டு பீட பிரதிஷ்டை இப்போது கூறப்படுகிறது.

95. பிண்டிகையில் உமாதேவியும் லிங்கத்தில் ஸதாசிவ பெருமானையும் இருப்பதாக தியானித்து இந்த இரு தேவதைகளையும் சேர்த்து அமைப்பது என்பது யாதுண்டோ அது பிரதிஷ்டை எனப்படுகிறது.

96. பிண்டிகைக்கும் லிங்கத்திற்கும் உண்டான சேர்க்கை ஆத்யம் என்றும் பச்சாத்பவம் என்றும் இருவிதமாக கூறப்பட்டுள்ளது. இவைகளில் ஆத்யம் என்பது லிங்கஸ்தாபனத்தையும் பற்றிச் சொல்லும் பொழுது கூறப்பட்டுள்ளது.

97. இரண்டாவதான பச்சாத்பவம் என்பது லிங்க யோகம் பற்றி கூறப்படுகிறது. முன்பு எந்த அமைப்பில் இருந்ததோ அவ்விதமே மறுபடியும் அமைக்கும் பொது இருக்க வேண்டும். அதை மாற்றுவது குற்றம்.

98. மானுஷமான லிங்கத்திற்கு பீடம் சதுரமாகவோ வட்டமானதாகவோ வேறு விதமாகவோ அமைக்கலாம்.

99. தேவர்களால், ரிஷிகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பாண லிங்கம், சுயம்பு லிங்கம் இவைகளுக்குப் பீடம் வட்ட வடிவத்தில் அல்லது முன்புள்ளபடியோ அமைக்கலாம்.

100. முன்னிருந்த பொருளாலேயே அமைக்க வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் உயர்ந்த பொருளாலும் அமைக்கலாம், அதன் க்ரியைகள் லிங்கப்ரதிஷ்டைக்கு சொன்னபடியே செய்தல் வேண்டும்.

101. நான் கூறுவதை பின்பற்றுபவர்களே, கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கு இன்னும் வேண்டிய மற்ற க்ரியைகளும் சொல்லப்படுகின்றன. முன்பு கூறிய முறைப்படி அங்குரார்ப்பணம் செய்தல் வேண்டும்.

102. கோயிலின் முன்போ அல்லது வடக்கிலோ அல்லது தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ முன்கூறிய விதிப்படி யாக மண்டபம் அமைத்தல் வேண்டும்.

103. அதன் நடுவில் லிங்கப் பிரதிஷ்டைக்கு சொன்னமுறைப்படி வேதிகை அமைத்து சுற்றி ஒன்பது குண்டங்களோ அல்லது ஐந்து குண்டங்களோ அல்லது ஒரு குண்டமோ அமைக்க வேண்டும்.

104. எல்லா குண்டங்கலும் மூன்று மேகலைகளுடன் அரசிலை குண்டங்களாகவோ இருத்தல் வேண்டும். அதற்கு முன்பு வடக்கிலோ ஸ்னானத்திற்காக மண்டபம் அமைக்க வேண்டும்.

105. இவ்வாறு ஸ்நான மண்டபம் அமைத்து பிறகு மற்ற க்ரியைகள் ஆரம்பித்தல் வேண்டும். விசேஷ பூஜை செய்து அடிக்கடி வேண்டி வணங்கி

106. பரசிவனைத் துதித்து வணங்கி அவரிடம் இதை தெரிவித்து விடைபெற்று க்ரியையை ஆரம்பிக்க வேண்டும். லிங்கத்தின் முன்பு ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்தநீயையும்

107. நடுவில் பீடகும்பத்தை வைத்து அதை சுற்றி நூல் சுற்றப்பட்டு வஸ்திரங்களோடும் கூர்ச்சங்களோடும் மாவிலைகளோடும் கூடிய எட்டு கும்பங்களை வைத்து

108. சந்தனம், புஷ்பம், மாலை தூபதீபங்களோடு பூஜித்து புண்யாஹவாசனம் செய்து ஆஸனம் மூர்த்தி மந்திரங்களோடு பூஜித்து

109. லிங்கத்திலிருந்து சிவனை சிவகும்பத்தில் ஆனாஹனம் செய்து மந்திர நியாஸம் செய்யவேண்டும். பீடத்திலிருந்து தேவியை வர்த்தினீ கும்பத்தில் ஆவாஹனம் செய்து நியாஸம் செய்யவேண்டும்.

110. எட்டு வித்யேச்வரர்களை சுற்றிலும் வைத்து சந்தனம் புஷ்பம் நைவேத்யம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜிக்க வேண்டும். அதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

111. மூலமந்திரத்தினால் ஸமித்து, நெய், அன்னம் நெற்பொறி, எள் இவைகளால் ஆயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு திரவ்யத்திலும் நூறு தடவை ஹோமம் செய்ய வேண்டும்.

112. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து இந்த கும்பங்களை வேறு இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வைக்க வேண்டும்.

113. லிங்கத்திலும் கும்பத்திலும் தினந்தோறும் நித்ய பூஜை செய்து வரவேண்டும். தங்க உளியால் அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பீடத்தை எடுத்து

114. ஆழமில்லாத தண்ணீரில் போட்டுவிட்டு அதிலுள்ள சுண்ணாம்பு போன்றவைகளை எடுத்து சாந்தி ஹோமம் நூறு ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.

115. பிறகு பீட பிரதிஷ்டையை செய்ய வேண்டும். அதன் விதிமுறை இப்பொழுது சொல்லப்படுகிறது. அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு பஞ்சகவ்யத்தாலும் மண்களாலும்

116. கஷாயதீர்த்தத்தாலும் பசு மூத்ரம், பசுஞ்சாணம் அஸ்த்ர தீர்த்தம் இவற்றை பிரணவத்துடன் அஸ்திர மந்திரம் கூறி பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

117. வஸ்திர, சந்தன புஷ்பங்களால் பூஜித்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பீடத்தை (பிண்டிகையை) வைக்க வேண்டும்.

118. சந்தனம், புஷ்பம் இவற்றைக் கொண்டு அர்ச்சித்து யோநிரூபமான அடையாளத்தை காண்பிக்க வேண்டும். தேன், நெய் முதலியவைகளால் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் உச்சரித்து கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

119. தாமிரத்திலோ வெண்கல பாத்திரத்திலோ தேன் நெய் முதலியவைகளை வைத்துக் கொண்டு நேத்ர மந்திரத்தை ஸ்பரிசித்துக் கொண்டு திரையிட்டு தங்கத்தால் கண் திறப்பதை செய்ய வேண்டும்.

120. பிறகு ஆசார்யன் திரையை நீக்கி தான்யங்கள், பூர்ண கும்பம் கன்றுடன் கூடிய பசு, கன்யா முதலிய இவற்றை ஹ்ருதய மந்திரத்தைச் சொல்லி கொண்டு தரிசனம் செய்து வைக்க வேண்டும்.

121. முன்புபோல் தேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், சந்தனம் இவைகளால் பூசிக்கவும். கிராமபிரதட்சிணம் செய்து ஜலக்கரையை அடைந்து

122. அங்கு ஸ்தண்டிலம் அமைத்து அதில் பிண்டிகையை வைக்க வேண்டும். முறைப்படி சுற்றி எட்டு திக்பாலகும்பங்களையும் வித்யேஸ்வர கும்பங்களையும் வைக்க வேண்டும்.

123. லம்ப கூர்ச்சம், புதிய வஸ்த்ரம் இவைகளோடு தேவிகும்பத்தை ஜலத்தின் நடுவில் பலகையில் வைத்து

124. நூல் சுற்றப்பட்டு தங்கம் முதலியவையை போட்டு அலங்கரிக்கப்பட்ட எட்டு சக்திகளை அதிதேவதைகளாக கொண்ட எட்டு கும்பங்களை தேவி கும்பத்தை சுற்றி வைக்கவேண்டும்.

125. நான்கு தோரணங்களோடு கூடியதும் விதானங்களோடும் கொடியோடும் கூடியதும் தர்பை, முத்து புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தை அடைந்து

126. எங்கும் பிரகாசமாகவுள்ளதும், ஜ்வலிக்கின்ற காந்தியோடு சூழப்பட்டதும் எல்லாவித லஷணங்களோடும் கூடியதுமான மண்டபத்தை அமைத்தபின் சிற்பியை திருப்தி செய்ரித்து அனுப்பிவிட்டு

127. பிராம்மணர்களுக்கு உணவளித்து கோமேயத்தால் மெழுகி புண்யாகவாசனம் செய்து வாஸ்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

128. ஆசார்யன் 4 வாயில்களை அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷித்து வாயில்களையும் வாயில் அதிதேவதைகளையும் பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகண்டத்தில் நுழைந்து வடக்கு முகமாக நிமிர்ந்து உட்கார்ந்து

129. தன் சரீரத்தை மந்திரமய சரீரமாக ஆக்கிக் கொண்டு ஹ்ருதய, நாபி, பிந்து இவைகளை பூஜைக்கு தகுந்த ஸ்தானங்களாக ஆக்கி தெற்கு ஹ்ருதயத்தில் சிவனை ஆவாஹித்து ஞான கட்கத்தை தரித்துக் கொண்டு

130. ஐந்து அங்கங்களை அலங்கரித்தவராய் கும்பம், அஸ்த்ரம் திக்பாலர்கள் இவர்களை பூஜித்தவராய், அக்னிகார்யம் முடித்து மஹேச்வரியை ஜலாதி வாஸத்திலிருந்து

131. அழைத்து வந்து ஸ்னபந மண்டபத்தில் ஸ்நபநம் வைத்து மண் தீர்த்தம், கஷாயோதகம், பஞ்சகவ்யம், புஷ்போதகம், பத்ரோதகம், பலோதகம்

132. தர்பஜலம், பன்னீர் முதலியவைகளாலும் பஞ்சாமிர்தத்தாலும் மஹேச்வரியை அபிஷேகம் செய்து பிறகு இரண்டு வஸ்திரங்களை உடுத்தி சந்தனம் புஷ்பங்களால் பூஜிக்கவும்.

133. அதன் நாளத்திலோ கழுத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து பதினாறு மரக்கால் நெல்லால் ஸ்தண்டிலம் அமைத்து

134. அதன் பாதியான எட்டு மரக்கால் அரிசியிட்டு அதில் பாதியான நான்கு மரக்கால் நெல் பொரி இவைகளாலும் ஸ்தண்டிலம் அமைத்து தர்பை, புஷ்பங்கள் இவைகளையும் பரப்பி மான் தோல் முதலியவையை முறைப்படி

135. அல்லது பட்டு வஸ்திரத்தால் அமைத்து படுக்கை கல்பித்து அதில் பிண்டிகையை ஹ்ருதய மந்திரத்தால் சயனம் செய்வித்து

136. இரண்டு வஸ்திரங்களால் பிண்டிகையை மூடிவிடவும். அதன் அருகில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரம் அணிவிக்கப்பட்டு நவரத்னங்களுடன் கூடிய குடத்தில்

137. தங்கத்தாமரையை இட்டு மாவிலை, கூர்ச்சம், தேங்காய் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தை வைத்து அதன் நடுவில் ஆஸனமூர்த்தி மூலத்துடன் சந்தன புஷ்பம் இவைகளால் முறைப்படி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

138. அதைச் சுற்றிலும் நூல் சுற்றப்பட்டு மாவிலை, தேங்காய், கூர்ச்சம், வஸ்த்ரம் தங்கம் இவற்றுடன் கூடிய எட்டு வர்த்தனீ கும்பங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

139. தேவதா ஸ்வரூபமான வாமாதி சக்திகளை கொண்ட எட்டு கும்பங்களையும் வைத்து சந்தனம், பூக்கள் முதலியவைகளால் பிண்டிகையையும் கும்பங்களையும் பூஜிக்க வேண்டும்.

140. தத்வ தத்வேச்வரிகளையும், மூர்த்தி மூர்த்திச்வரிகளையும் கர்ணபாகம், களபாகம், மேல் கர்ணபாகம் என்பதாகும். தத்வ திரவ்யங்களை ஆத்மத்தவம், வித்யாத்தவம், சிவதத்யம் நியஸிக்க வேண்டும்.

141. க்ரியாசக்தி க்ஞான சக்தி இச்சாசக்தி என்று முன் சொன்ன மூன்று தத்வங்களுக்கும் ஈச்வரிகள் கூறப்படுகிறது. தாரிகா, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்நா, சேதனா பலோத்கடா

142. தாத்ரி, விப்வீ என்று அஷ்டமூர்த்திகளுக்கும் உள்ள மூர்த்தீச்வரிகளையும் பூஜிக்க வேண்டும். பஞ்ச குண்ட பக்ஷம் இங்கு சொல்லாமல் இருந்தால் யூகித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

143. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிமுறைப்படி இங்கு எல்லாம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முறைப்படி பூஜித்து ஹோம கர்மாவை ஆரம்பிக்க வேண்டும்.

144. ஸமித்து, நெய் அன்னம் நெல், பொரி எள், வெண்கடுகு, யவை இவைகளாலும் புரசு, அத்தி, ஆல், அரசு இவைகளை கிழக்கு முதலிய திசைகளிலும்

145. வன்னி, கருங்காலி, வில்வம், நாயுருவி இவைகளை தென்கிழக்கு முதலிய கோணங்களிலும் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் பிரதான குண்டத்தில் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் முக்கியம் அது எல்லாவற்றிலும் உபயோகிக்கக் கூடியது.

146. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி தேவியின் மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும். அதில் பத்தில் ஒரு பங்கு அங்க மந்திரத்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

147. பிறகு சாந்தி கும்ப ஜலப்ரோக்ஷணம், ஸ்பர்சாஹூதி மற்றும் ஒவ்வொரு குண்டத்திலும் தத்வ தத்வேச்வரிகளை கூறி ஹோமம் செய்ய வேண்டும்.

148. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூறு தடவை ஹோமம் செய்து விபூதி, தர்பை, எள் இவைகளால் ரøக்ஷயும் செய்து தத்வங்களையும் அவ்வாறே ரக்ஷித்து

149. அந்தர்பலி, ÷க்ஷத்ரபலி இவைகளை செய்து தூக்கி எறிய வேண்டும். பிறகு விடியற்காலையில் ஸ்நானம் செய்து ரித்விக்குகளுடன்

150. ஆசார்யன் நித்யானுஷ்டானம் முதலியவைகளை செய்து சாமாந்யார்க்யத்துடன் திவார பூஜைகளை செய்து மஹேச்வரியை சயனத்திலிருந்து எழுந்தருளச் செய்து

151. சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம் முதலிய இவைகளால் பிண்டிகையையும் வர்த்தினியையும் பூஜித்து

152. அக்னியில் தேவியின் பொருட்டு மூலமந்திர ஹோமம் செய்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தாலும் ஹோமம் செய்து முடிவில் எல்லா குறைபாடுகளையும் நீக்குகின்ற பூர்ணாஹூதியை மூலமந்திரத்தால் செய்ய வேண்டும்.

153. ஸகல வாத்ய கோஷங்களோடும் நாட்யம் பாட்டு இவைகளோடும் ஆலயபிரதட்சிணம் செய்து கர்பகிருஹத்தை அடைவிக்க வேண்டும்.

154. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிப்படி அதை (பிண்டிகையை) ஸ்தாபனம் செய்ய வேண்டும். பாணலிங்கத்திற்கு பிண்டிகா ஸ்தாபனம் செய்ய வேண்டியிருந்தால்

155. மண்டபத்தின் முன் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாணலிங்கத்தை வைத்து புதிய வஸ்திரங்களால் மூடி கிழக்கிலோ வடக்கிலோ தலையை வைத்து இருக்கச் செய்ய வேண்டும்.

156. (பிண்டிகை) பீடத்தில் உள்ள சுண்ணாம்பு முதலியவற்றை நீக்கிவிட்டு அதே இடத்தில் பீடத்தை வைத்து அதில் லிங்கத்தையும் வைக்க வேண்டும்.

157. எல்லா பீடத்தின் பள்ளத்திலும் ரத்ன கற்களையோ அல்லது தங்கத்தையுமோ வைத்து முன் சொன்னதுபோல எல்லா க்ரியைகளையும் செய்ய வேண்டும்.

158. அதன் பிறகு அஷ்டபந்தனமோ, த்ரிபந்தனமோ செய்து சேர்க்க வேண்டும். புண்யாகதீர்த்த பிரோக்ஷணம், சாந்தி கும்ப தீர்த்தத்தின் அபிஷேகமாகும்.

159. ஆசார்யர், முன் சொன்னபடி செய்து ஆஸன, மூர்த்தி, மூலமந்திரங்களையும் பூஜித்து பீடத்தில் கிரியா சக்தியை நியஸிக்க வேண்டும்.

160. லிங்கத்திற்கு முன் வைக்கப்பட்ட சிவகும்பத்தையும் மற்றொரு வேதிகையில் வைக்கப்பட்டுள்ள வாமாதி நவசக்திகளோடு கூடிய வர்த்தினி கும்பத்தை

161. ஈசனுக்கு முன் வைத்து ஜீவன்நியாஸம் செய்து வர்த்தினீ கும்பத்தையும் வாமாதி எட்டு சக்தி கும்பங்களையும்

162. வேதிகை மத்தியில் வைத்து ஜீவன்யாசம் செய்ய வேண்டும். ஜீவன்யாஸம் மூன்று நிலைகளில் செய்ய வேண்டும். ஆஸனத்தில்

163. லிங்கத்திலும் ஸ்தாபிக்கப்பட்ட கும்பத்திலும் நியாஸம் விசேஷமாக செய்ய வேண்டும். பிறகு ஸ்நபநம் செய்து முடிவில் பஞ்சாமிர்தாபிஷேகம் செய்ய வேண்டும்.

164. கேவலம் சுத்த தீர்த்தத்தாலோ அபிஷேகம் செய்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து பின்வருமாறு பிரார்த்திக்க வேண்டும். ஹே ஈச்வரி சந்திரன் சூர்யன் பூமி இவை

165. உள்ளவரை நீ இங்கு இருந்து அருள்பாலித்து வீற்றிருக்க வேண்டும். லிங்க பிரதிஷ்டையில் சொல்லப்பட்ட அளவிற்கு பாதி தட்சிணை முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

166. நான்கு நாட்களோ, மூன்று நாட்களோ, இரண்டு நாட்களோ ஒரு நாளோ ஹோமத்துடன் கவிசேஷ பூஜையை சிறப்பாக செய்ய வேண்டும்.

167. முன் கூறப்பட்ட சம்பவத்தின் சக்தி மூல மந்திரங்களைச் சொல்லி பாயஸத்தை ஹோமம் செய்ய வேண்டும். நான்காவது தினமோ, முதல் தினமோ சண்ட பூஜை விதிக்கப்பட்டுள்ளது.

168. பாண லிங்கத்தில் இது தேவையில்லை அல்லது இது பற்றி சிந்தித்து செய்யலாம். பீட பிரதிஷ்டைக்கும் லிங்க பிரதிஷ்டையின் பலன் உண்டு.

169. ஒரே விதம் தான், ஏனெனில் இரண்டும் பிரதிஷ்டையாக இருப்பதால் ஒரே விதமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பீடபிரதிஷ்டையாகிய முப்பத்தைந்தாவது படலமாகும்.
படலம் 34: சம்ப்ரோக்ஷண விதி

34வது படலத்தில் சம்ப்ரோக்ஷண விதி கூறப்படுகிறது. முதலில் எல்லா தோஷத்தையும் போக்கக்கூடிய ஸம்ப்ரோக்ஷண விதியை கூறுகிறேன் என்பது கட்டளையாம். பிறகு ஸம்ப்ரோக்ஷணமானது ஆவர்த்தம், புனராவர்தம், அநாவர்தம், ஆந்தரிதம், என்று நான்கு விதம் ஆகும் என கூறி அவைகளில் இலக்கணம் அவை செய்யும் முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. முதலில் யாத்ரா ஹோமத்துடன் கூடியது ஆவாத்தமாகும். மற்றவைகள், யாத்ரா ஹோமம் இல்லாதவையாகும். பிறகு அவ்வாறு ஆவர்த்த பிரதிஷ்டையில் லிங்க ஸ்தாபனத்தில் கூறி உள்ளபடி மாசம், பக்ஷம், நட்சத்திரம் ஆகிய எல்லாவற்றையும் நன்கு பரிசித்து கார்யாரம்பம் செய்யவும், அனாவிருத்தம் முதலிய மற்ற சம்ப்ரோக்ஷணங்கள் காலங்களை பரிசிக்காமல் செய்யவேண்டும் என்றதான விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு 34 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தோஷங்களையும் போக்கவல்ல ஸம்ப்ரோக்ஷண முறையை கூறுகிறேன். ஆவர்த்தம், அநாவர்த்தம் புநராவர்த்தம் என்றும்

2. பிறகு ஆந்தரிதகமென்றும் ப்ரோக்ஷணம் நான்கு வகைப்படும். முதன்மையான மூலபாலாயத்திலிருந்து மூலஸ்தானத்தில் மூர்த்தியை ஸ்தாபித்து.

3. ஆவர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு அனாவர்த்தம் கூறப்படுகிறது. தகாதவர்களால் தொடப்பட்டாலும் அல்லது விக்ரகம் விழுந்தாலும்

4. ஒரு மாதகாலம் பூஜை இல்லாவிடினும் தளவரிசை விரிசலடைந்திருந்தாலும் லிங்கம், பீடம் அசைவடைந்திருந்தாலும் செய்யும் கிரியைக்கு அனாவர்த்தமெனப்படும்.

5. மூலஸ்தானத்திலிருந்து மூர்த்தி ஜீவனை பாலாலயத்தில் ஸ்தாபித்து திரும்பவும் முன்னமேயுள்ள மூலஸ்தானத்தில் மூர்த்தி ஜீவனை ஸ்தாபித்து புனராவர்த்தனம் எனப்படும்.

6. உத்ஸவ பிம்பங்கள் ஸகளநிஷ்கள பிம்பங்கள் தேவிபிம்பங்கள் ஆகியவைகளின் ஆயுதங்களாலும் வெடித்து இருந்தாலும் மாற்று வர்ணமடைந்தாலும் உருவத்தின் அங்க பாகம் உபாங்கம் குறைவுற்று இருந்தாலும்

7. தோல் ஆடை குறைவுபட்டாலும் ஆயுதமின்றி ஆபரணங்கள் இன்றியும் பத்மபீடமின்றியும் தளவரிசைகள் தேய்மானமடைந்திருந்தாலும்

8. பீடத்தில் அஷ்டபந்தனம் விடுபட்டு இருந்தாலும் அதற்காக செய்யப்படும் கிரியைக்கு அந்தரிதம் என கூறப்படுகிறது. யாத்ராஹோமத்துடன் கூடியது ஆவர்த்த ப்ரதிஷ்டையாகும். மற்றவைகள் யாத்ராஹோம மின்றி செய்யப்படுவது ஸம்ப்ரோக்ஷணமாகும்.

9. ஹே ப்ராம்மணர்களே! ஆவர்த்த பிரதிஷ்டையில் எல்லாவித மாஸம், பக்ஷம், நக்ஷத்ரம் முதலியவைகளை லிங்கபிரதிஷ்டையில் கூறியுள்ள முறைப்படி செய்யவேண்டும்.

10. மற்ற ப்ரதிஷ்டைகளை திதி, நக்ஷத்ரம் கிழமை, அம்சம் முஹூர்த்த காலம் இவைகளை சோதித்து பார்க்காமல் செய்ய வேண்டும்.

11. பிம்ப அமைப்பு முறை சரிசெய்வது ஜலாதிவாஸம், சயனாதிவாஸம் இவைகள் இன்றி அனாவர்த்த ப்ரதிஷ்டையானது ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்ய வேண்டும்.

12. இவ்வாறு அனாவர்த்தத்தை அறியவும், இங்கு புனராவர்த்தமானது எல்லாம் ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்யவும். ஆனால் மூலஸ்தானத்திலிருந்து தருணாலய பிரதிஷ்டை அவ்விடமிருந்து மூலஸ்தான மூர்த்தி ஜீவசேர்க்கையுடன் கூடியதாகும்.

13. ஹே பிராம்மணர்களே! அந்தரித பிரதிஷ்டையை சுருக்கமாக நான் கூறுகிறேன், ரத்ன நியாஸம் நயோன்மீலனம், ஜலாதிவாஸம்.

14. ஹே பிராம்மணர்களே! சயனாதி வாஸநம் முதலிய பிம்ப கிரியைகளினின்றி பிம்பத்தின் எல்லா அவயவத்தையும் புதிய வஸ்திரத்தினால் மூடி

15. முன்பு கூறப்பட்டுள்ள முறைப்படி கும்பந்யாஸம் ஹோமத்தையும் செய்ய வேண்டும், முடிவில் ஸ்நபனம் செய்யவும். மற்ற பூஜை கார்யங்கள் ஸமமானதாகும்.

16. இவ்வாறு பிரதிஷ்டைகளை யார் செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸம்ப்ரோக்ஷண விதியாகிற முப்பத்தி நான்காவது படலமாகும்.
படலம் 33: காம்யயோக விதான முறை

33 வது படலத்தில் காம்யயோக விதான முறை கூறப்படுகிறது. அதில் முதலில் மந்திரங்களால் விருப்பப் பூர்த்தியானது ஏற்படுகிறது. மந்திரங்களும் பல விதமாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப் பயனை கொடுப்பதில் ஸாமர்த்யம் உள்ளவையாகும். அதில் ஒன்றான அகோர மந்திரத்தால் செய்யக்கூடிய ஜபம் மிகுந்த தோஷத்தை போக்க வல்லதாகவும் எனக் கூறி அகோர மந்திரம் மூர்த்தி இவைகளின் உருவ வர்ணனை செய்யப்படுகிறது தன்னுடைய சேனையை காப்பாற்றுவதும் பிறரின் படைக்கு பயத்தை உண்டு பண்ணுவது, எதிரியால் ஏவப்பட்ட கார்யத்தை அழிப்பது, எல்லா வியாதியையும் போக்க வல்லது எல்லா தோஷத்தையும் போக்குவதில் ஸாமர்த்யமானது, அண்டியவர்களை  குழந்தைபோல் பாவிப்பது என்று அகோர மூர்த்தியின் மகிமை வர்ணனை காணப்படுகிறது. அது அசிதாங்கம் முதலிய எட்டு தேவர்களால் சூழப்பட்டவர் எனக் கூறி அந்த எட்டு தேவர்களின் சுய உருவம் நிரூபிக்கப்படுகிறது. அந்த மிருத்யுஞ்ய மந்திரம் விளக்கப்படுகிறது. அதில் மிருத்யுஞ்சய மந்திரமே அமிருதேசன் என காணப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் மூர்த்தி உருவம் வர்ணிக்கப்படுகிறது. மிருத்யுஞ்சய மூர்த்திக்கு நான்கு கையும், ஆறு கையும் இருப்பதாக கூறப்படுகிறது. உயிர்களை காப்பாற்றும் விஷயத்தில் இந்த மந்திரத்திற்கு ஸமமானது எதுவும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் உபாசிப்பவனுக்கு மிருத்யு ஸம்பவிப்பது இல்லை. அந்த ஆசார்யனை யமன் வலம் வந்து ஸ்தோத்திரம் செய்து பூஜை செய்கிறான். இதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது. மறுபடியும் அந்த ஆசார்யன் கண், வாக்கு பாதம் இவைகளால் நதீ, ஜனங்கள் நந்தவனம் நகரங்கள் இவைகளை சுத்தி செய்கிறான். பயம் அடைந்த பிராணியையும் தன்னையும் அண்டிய மிருத்யுஞ்சய மந்திரம் காப்பாற்றும் மிருத்யுஞ்சய மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிறகு அகோராஸ்திர மூர்த்தி தியாநம் இருவிதமாக நிரூபிக்கப்படுகிறது. முதலில் 8 கை உடையதாகவும் பிறகு 4 கை உடையதாகவும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு அகோராஸ்திர மந்திரவர்ணனை காணப்படுகிறது.

இந்த அகோராஸ்திர மந்திரமானது, பிறரால் ஏவப்பட்ட சக்கரத்தை அழிப்பதிலும் பெரிய வியாதியை போக்குவதிலும், சாந்திகத்திலும், பவுஷ்டிகத்திலும், வஸ்ய, விஷயத்திலும், பிராயசித்த மந்திரம் ஜபிக் கவும் என கூறப்படுகிறது. இந்த மந்திரத்தில் ஜுரம், விஷத்தால் தீண்டப்பட்டவைகளும், நவக்கிரஹ தோஷங்களும் அழிகின்றன. பிறரால் ஏவப்பட்ட ஆபிசாரம் முதலிய கார்யம், மந்திரம் மருந்து முதலியவைகள் எல்லா எந்திரங்களும் அக்கினியில் வெட்டுபூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன என கூறப்படுகிறது. பிறகு பாசுபதாஸ்திரம், சிவாஸ்திரம், க்ஷúகாஸ்திரம், இவைகள் மேல் கூறிய முறைப்படி தியானித்து பூஜிக்கவும் என கூறி பூஜை முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு சிவாஸ்திர ஸ்தானத்தில் பிரத்யங்கிராஸ்திர மந்திரமும், க்ஷúரிகாஸ்த்திர ஸ்தானத்தில் சங்கிராமவிஜய, மந்திரமோ, பூஜிக்கவும் என விசேஷ முறை கூறப்படுகிறது. இவ்வாறே யார் ஜபித்து பூஜிக்கிறானோ அவன் சிவ சமானமாக ஆகிறான். இந்த ஸாதகனுக்கு சாதிக்கக்கூடிய கார்யம் மூவுலகிலும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி ஜபவிதி கூறப்படுகிறது. இது முதலாவதாக இந்த மந்திரத்தினால் (வெற்றி) ஜபத்தை செய்வதில் வாக்சித்தி உண்டாகிறது. மற்ற எல்லா பலன்களும் இந்த மந்திரத்தினால் சித்திக்கப் படுகின்றன என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி மந்திரத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி தியானமும் கூறப்படுகிறது. இதில் தட்சிணாமூர்த்தி முனிவர்களுடன் கூடியவராயும் மஹா விருஷபத்துடன் கூடியவராகவும், நான்குகை மூன்று கண் உடையவராக வர்ணிக்கப்படுகிறது. பின்பு ஸங்கிராம விஜய மந்திர இலக்கணம் நிரூபிக்கப்படுகிறது. இந்த மந்திர மகிமையால் ஆசார்யன் மூவுலகையும் வெற்றி அடைந்தவன் ஆகிறான். இந்த மந்திரம் மந்திர ராஜ தன்மையாக விளக்கப்படுகிறது. பிறகு சூர்யமூர்த்தியின் தியானம் வர்ணிக்கப்படுகிறது.

பிறகு சூர்யனின் கர்பாவரண தீப்தாதி, சத்த்யாவரண சந்திராதி கிரஹாவரண, இந்திரன் முதலிய லோபாலாவரண பூஜை சுருக்கமாக கூறப்படுகிறது. காம்ய விஷயத்தில் ஈடுபட்டவனும்கூட எப்பொழுதும் சூர்யனை தியானிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரத்யங்கிராஸ்திர மந்திரம் கூறப்படுகிறது என கூறி இந்த பிரத்யங்கிராஸ்திர மந்திரம் எல்லா பக்தியையும் கொடுக்க வல்லதும் எல்லா வியாதியையும் கெடுக்க வல்லதும், ஜுரம் அபஸ்மாரம், வைசூரி இவைகளை அழிக்க வல்லதும், காச நோயை போக்க வல்லதும் எதிரிகளால் செய்யப்பட்ட உண்டு பண்ணப்பட்ட வியாதி, படைகளை அழிக்க வல்லதும் நான்கு சேனைகளை உடைய எதிரியை அழிக்க வல்லதும் தன்னுடைய சேனையை காப்பாற்ற வல்லதும் காச நோயை போக்க வல்லதும் எல்லா கர்மாவிலும் சாமர்த்யமானது என்று பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திரம் 100 எழுத்தை உடையதாகும் என கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர தியானம் கூறப்படுகிறது. அந்த பிரத்யங்கிரா தேவியானவள் 4 கைகள் உடையவளாக வர்ணிக்கப்படுகிறது. ஒரே மனதுடன் ஆசார்யன் பிரத்யங்கிரா தேவியை முயற்சியுடன் தியானித்துஎல்லா எதிரிகளையும் அழிக்கிறான் எல்லா ரோகங்களையும் போக்குகிறார் பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை நிவாரணம் செய்கிறான் என்று மந்திரத்தின் தியான பலன் கூறப்படுகிறது. பிறகு வித்யாதர தன்மையை அடைவதற்கும் யட்சினி சித்தியை (உத்ஸாதனம்), பிரிப்பது ராஜயக்ஷமம் முதலிய வியாதியை போக்குவது, வயிற்றுவலி, கண்வலி, விஷம், ஜுரம், ஸர்வ உபத்ரவம், வாதம், உன்மத்தம், ஸ்லேஷ்மம், முதலியவகைகளை போக்குவதற்கும் செய்ய வேண்டிய ஹோமங்கள் நிரூபிக்கப்படுகின்றன. இவ்வாறு 33 வது படல கருத்துச் சுருக்கம் ஆகும்.

1. விரும்பியதை அடையும் முறையை சுருக்கமாக கூறுகிறேன். விருப்பத்தை அடையக்கூடியது மந்திரங்களால் ஏற்படுவதாகும். மந்திரங்களும் பலவாறாக கூறப்பட்டுள்ளன.

2. எல்லா மந்திரங்களும் தகுதியுள்ளவைகளாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப்பட்ட பலனைக் கொடுக்கக் கூடியதாகும். அவைகளில் அகோர மந்திரம் மிகவும் தோஷத்தை போக்கக் கூடியதாகும். அது கருப்பு நிறமுடையதாகவும்

3. பாம்பினால் கட்டப்பட்ட ஜடாமுடி, கபாலத்தினால் அழகாகவும் அழகான சிவந்த கண்ணை உடையவராகவும், மிகவும் வெண்மையான பற்களை உடையவராகவும்

4. சந்திரனை தரித்தும் அகன்ற முகமும், பாம்பை பூணூலாகவும், பெரிய சரீரமும் பெரிய தித்திப் பல்லும், சலங்கை ஒலி இவைகளோடு கூடியவரும்

5. பெரிய சூலத்தின் நுனியால் குத்தப்பட்டு அழிந்த அசுரனை உடையவரும், கத்தி கேடயம், வில், அம்பு, தலையில்லா பாகம், காலன், சக்தியாயுதம்

6. வரதம், அபயம், கபாலம், பாம்பு, பாசம், ஈட்டி கதை இவைகளையுடைய கைகளை உடையவரும் இரண்டு தித்திப்பல்லை குறுக்காகவும் வாயின் நுனியிலும், பயங்கரமாக வெள்ளையாக தரித்து

7. எப்பொழுதும் தன்னுடைய படையை காப்பவராகவும், பிறர் படைக்கு பயத்தை உண்டு பண்ணவராகவும், எதிரியால் ஏவப்பட்ட கார்யங்களை அழிப்பவராகவும், எல்லா நோய்களையும் போக்குபவராகவும்

8. எல்லா குற்றங்களையும் அழிப்பதில் சிறந்தவராகவும், அடியாரிடம் அன்புள்ளவராகவும் அஸிதாங்கர் முதலான பைரவர்களுடன் சேர்ந்தோ, சேராமலோ இருப்பவர். அகோரமூர்த்தி ஆவர்.

9. அஸிதாங்கர், ருரு, சண்டர் க்ரோதநர், உன்மத்தர், கபாலீ, பீஷணர், ஸம்ஹாரர் என்பதாக எட்டு பைரவர்களாகும்.

10. அவர்கள் நான்கு கை முக்கண், கருப்பு நிறம், மஹாபலராகவும், த்ரீசூலத்தையும், முண்டத்தையும், கூப்பிய கையை உடையவராகவும்

11. அழகிய தித்திப்பல் பயங்கரமானமுகம், தலைவனின் விருப்பப்படி செயலை உடையவராகவும் இருக்கின்றார்கள். ஓம் ஜும்ஸ: என்ற மந்திரமானது ம்ருத்யுஞ்ஜயனுடையதாகும். தேவனும் ம்ருத்யுஞ்ஜயனேயாம்.

12. அந்தம்ருத்யுஞ்ஜயனே அம்ருதேசன் எனப்படுகிறான். முதலில் மறைவான எழுத்தை உடையதாகவோ அல்லாமலோ, ரஸம் முதல் சுக்லம் வரையிலான ஏழு தாதுக்களின் ஏழு எழுத்துடன் கூடியதாகவும்

13. ஹ காரம் என்ற எழுத்தால் சரீரத்தையும், ரஸமென்பதான (எழுத்துக்களான) யம், ரம், லம், வம் (சம், ஷம், ஸம் என்பதான அக்ஷரங்களையும் சேர்த்து முடிவில் ரக்ஷ, ரக்ஷ என்ற பதத்தையும், விருப்பப் பயனின் வாக்யத்தையும் கூற வேண்டும்.

14. முதலில் தேவ தேவச என்ற பதத்தை கூறவும். மூல மந்திரத்தையும் தேவதத்தனின் உயிரை என்ற பதத்தையும் சேர்க்க வேண்டும்.

15. மந்திரத்தின்பீடம் ஜும் என்றும் சரீரம் ஓம் என்றுமாக ஜும்ஸ மந்திரமாகும். மத்தியில் மறைவான மூல மந்திரத்தையோ அல்லது ஒன்பது எழுத்தையோ

16. ஹ காரம் முதலான எழுத்துக்களை கழுத்து, உதடுசம்பந்தப்பட்டதாக யும் ரூம் என்பதாக பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். இந்த மந்திரத்திற்கு ஸமமான வேறு ம்ருத்யுஞ்ஜய மந்திரம் இல்லை என்பதாகும்.

17. அந்த ம்ருத்யுஞ்ஜயர் அம்ருத கலச மத்தியில் இருப்பவராகவும், வெண் தாமரையிலமலர்ந்திருப்பவராகவும், நான்கு கை, முக்கண், ஜடையில் பிறை சந்திரனால் அழகானவராகவும்

18. புலித்தோல் தரித்தவராகவும், பாம்பை மார்பணியாகிய பூணூலாக உடையவரும் த்ரிசூலம், அபயமிவைகளை பக்கவாட்டு கைகளிலும், நடுவிலுள்ள இரண்டு கையில் அம்ருத கலசத்தை தரித்துள்ளார்.

19. ஆறுகை உடையவராக இருப்பின் த்ரிசூலம் அக்ஷமாலை, கபாலம், கெண்டி இவைகளை வலது இடது கைகளிலும், மற்றுமுள்ள இரண்டு கையால் யோக முத்ரையையும் தரித்திருக்கிறார்.

20. உயிர்களைக் காப்பாற்றுவதில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்திற்கு ஸமமான வேறு மந்திரமில்லை. முன்னும், பின்னும் இது போன்ற மந்திரம் உதாஹரணமாக இல்லை என்பதும், வேறு மந்திரம் ஏற்பட்டது, ஏற்படாது என்பதும் உண்மை.

21. மூன்றெழுத்தான ம்ருத்யுந்ஜய மந்திரத்தினால் அம்ருதீகரணமாக்கி உணவளித்தலையும் செய்யவும். ஆகையினால் உடனே அம்ருதமாகிறது. மிருதுவாகவும் ம்ருத்யுவை ஜயித்தவனாகவும் ஆகிறான்.

22. அம்ருதேச தேவ மந்திரத்தினால் நூறு முறை ஜபிக்கப்பட்ட ஜலத்தை எடுத்து அருந்தினால் நிச்சயம் அம்ருதமயமாக ஆகிறான்.

23. ப்ரும்ம வ்ருக்ஷ விறகுகளால் பிரகாசிக்கிற அக்னியில், பாலால் நனைக்கப்பட்டதும், துண்டிக்கப்படாததுமான அருஹம்பில்லை ஹோமம் செய்பவனை ம்ருத்யு அடைவதில்லை.

24. எவனுக்கு உபாஸநனாதெய்வமாக ம்ருத்யுஞ்ஜயர் இருக்கிறாரோ அவருக்கு சீக்ரமாகவே ம்ருத்யு அடைவதில்லை.

25. ஒரு மாதத்திலிருந்து வர்ஷம் முடியும் நூறு ஆவர்த்தியாகவும், இரண்டாவது மாஸத்திலிருந்து இருநூறு ஆவர்த்தியாகவும், ஒவ்வொரு மாதமும் ஜபம் செய்வதால்

26. அந்தஸாதகனை காலன் (யமன்) வலம்வந்து நமஸ்கரித்து, பூஜித்து செல்கிறான் என்பதில் ஸந்தேஹ மில்லை என்னால் கூறப்பட்டது உண்மையாகும்.

27. ஜபம் செய்த அந்தஸாதகன், கண்ணால், வாக்கால், பாதத்தினால், கையினால், நதீ, ஜனங்கள், நந்தவனம், பட்டணங்களை சுத்தப்படுத்துகிறான். ஸந்தேஹமில்லை.

28. பயந்த பிராணிகளையும், தன்னையும், தன்னை அடைந்தவர்களையும் ரக்ஷிப்பது பற்றி திரும்பவும் கூறுவானேன். பீஜாக்ஷர தொகுப்பை யுடைய அகோராஸ்த்ரத்தை கூறுகிறேன்.

29. வெட்டப்பட்டமைபோல் கறுப்பானவராகவும், சிவந்த வஸ்திரத்தை தரித்தவராகவும், எட்டு கைகளையுடையவராகவும் மேல் நோக்கிய கேசம், தித்திப் பல்லை உடையவராகவும்

30. அந்த தித்திப்பல்லும், கீழுதட்டை ஒட்டியதாகவும் பிரகாசிக்கிற நெருப்பு போன்ற கண்ணை உடையவராகவும், சலங்கை மாலையால் விளங்குபவராயும், கால் கொலுசையுடையவராகவும்

31. ஏழு ஆயுதங்களையுடையவராயும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராயும், வெண்மையான பூணூலைத் தரித்தவராயும், சிவந்த புஷ்பங்களாலலங்காரமாயும்

32. தரிக்கப்பட்ட தேளை கழுத்து மாலையாக அலங்கரிக்கப்பட்டவராயும், இடுப்பு, வயிறு, கழுத்து, காது, ஹ்ருதயம், கை, தோள்பட்டையாக மிவைகளிலும்

33. பாதங்களிலும், கைகளிலும் ஆக பதினான்கு ஸர்பங்களால் பிரகாசிக்கிறவராயும் பத்மா ஸனத்திலிருப்பவராயும், முக்கண்ணையும், பயங்கரமான உருவத்தையுடையவராயும்

34. மற்றும் சூலத்தின் அடிபாகம், வேதாளம், கத்தி உடுக்கை இவைகளை வலக்கையில் தரிப்பவராயும், இடது கையில் சூலத்தின் நடுபகுதி

35. மணி, கேடயம், கபாலம் இவைகளையும், எதிரியை அழிப்பதில் நோக்கமுடையவரையும், இடது காலை முன்பாக வைத்தவராயும் அகோரமூர்த்தியை தியானித்து பூஜிக்க வேண்டும்.

36. த்யானம் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. பிராம்மணர்களே முறைப்படி கேளும் ஆயிரம் சூர்யம் போல் பிரகாசிப்பவரும், சிரேஷ்டமான அகோராஸ்திர தேவர்

37. பிரகாசிக்கிற பற்களை உடையவராகவும் அழகானமுகம், கழுத்தை உடையவராகவும், முக்கண், மின்னல் போன்ற பிரகாசமான நாக்கு ஒளியுள்ள புருவம், மீசை சிரஸ்பாகமிவைகளையும்

38. ஸர்ப பூணூலும், சூலம், கத்தி, சக்தி, உலக்கை இவைகளை தரித்தும், நான்குமுகம், நான்கு கையையுடையவராகவும், பிரகாசிக்கிற சந்திரனை சிரஸில் தரித்திருப்பவரும்

39. பெருத்த சரீரமாயும், ஆடிக்கொண்டும், பாம்பை அணிகலன்களாகவும் இருந்து, அசுரர்கள் கர்வமுடையவர்களாயிருப்பின் அவர்களை அடக்குபவராயும் இருப்பர்.

40. ப்ரஸ்புர ஸ்புர என்ற மந்திரபதம், ஹ்ருதய மந்திரமாக கூறப்பட்டுள்ளது. கோர கோரதர என்பது சிரஸ்மந்திரமாக கூறப்பட்டுள்ளது.

41. பிறகு தநுரூப என்பது சிகாமந்திரமாக கூறப்பட்டுள்ளது. சடப்ரசட என்ற மந்த்ரபதம் கவச மந்திரமாகும்.

42. கஹ கஹ வம மந்தய என்றும் காதய, காதய என்ற மந்திரம் நேத்ரத்ரய மந்திரம் ஆகும்.

43. அகோராஸ்த்ராய, ஹும்பட் என்று நான்கு வேற்றுமையுடையயாக கூறவும் இவ்வாறு ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை கிரஹிக்கவும். ஓம் என்று முதலிலும் நம: என்பதாகவும் கூற வேண்டும்.

44. பிறரால் ஏவப்பட்ட சக்ரத்தை அழிக்கும் ஸமயத்திலும், பெரிய வியாதியால் பீடிக்கப்பட்ட போதிலும், சாந்திகம், பவுஷ்டிகம், பிறரை வசீகரிக்கும் கார்யங்களிலும் பிராயச்சித்தத்திலும் உபயோகிக்க வேண்டும்.

45. மிகுதியாக கூறுவானேன். பயமேற்பட்ட போது இந்த மந்திரத்தினால் ஜ்வரம், க்ருஹங் களால் ஏற்பட்டதும், விஷக்கடிகளும் அழிகின்றன.

46. மற்றவர்களால் ஆபிசாரம் முதலிய கார்யம் மந்திரம், மருந்து இவைகளை சிறந்ததான மந்திரங்கள் அக்னியில் விட்டில் பூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன.

47. அவ்வாறே பாசுபதாஸ்திரம், சிவாஸ்த்ரம், க்ஷúரிகாஸ்த்ரம் இவைகளை முறைப்படி தியானித்து பூஜித்து ஜபிக்க வேண்டும்.

48. அகோர தேவனை பூஜித்து அதன் முன்பாக அஸ்திரத்தை பூஜிக்கவும். தெற்கில் அகோர தேவனும், மத்தியில் ஸதாசிவரையும் பூஜிக்க வேண்டும்.

49. விசேஷமாக ஸதாசிவனின் தென்முக மண்டலத்தில் அகோர தேவரை பூஜிக்கவும். நான்கு திசைகளிலும் நான்கு அஸ்திரங்களான சிவாஸ்த்ரம்

50. அகோராஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம், க்ஷúரி காஸ்த்ரம் இவைகளை பூஜித்து அவைகளின் இடை வெளியைச் சுற்றிலும் அஸ்த்ர ஜாதிகளை பூஜிக்க வேண்டும்.

51. சிவாஸ்த்ரத்தை விட்டுவிட்டு அவ்விடத்தில் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரத்தை பூஜிக்கவும். க்ஷúரி காஸ்த்ர மத்தியில் ஸங்க்ராமவிஜய மந்திரத்தையோ பூஜிக்க வேண்டும்.

52. இவ்வாறாக யார் பூஜை செய்கிறானோ அவன் எனக்கு ஸமமானவனாக எண்ணப்படுகிறான். மூவுலகில் அவனால் சாதிக்கமுடியாத விஷயங்கள் ஏதுமில்லை.

53. இவ்வாறு கூறப்பட்டது உண்மையே, அதை முயற்சியுடன் காப்பாற்றப்படவேண்டும். ஸாதகத்தலைவன் விசேஷமாக காக்கவேண்டும்.

54. தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தின் சொல்முறை விளக்கம் கூறப்படுகிறது. அந்த மந்திரத்தினால் வாக்ஸித்தியும், வெற்றியின் ஏற்பாடும் விளங்குகிறது.

55. அந்ததட்சிணாமூர்த்தி மந்திர திருவருளினால் மற்ற எல்லா பயன்களும் கிடைக்கின்றன. ஓம் நமோ பகவந் என்ற வாக்யத்தை விளிவேற்றுமையாக கூறவும். ஓம் நமோ பகவந்

56. தட்சிணாமூர்த்தி என்பதையும் அவ்வாறே விளிவேற்றுமையுள்ளதாகவும் கூறவும். தட்சிணாமூர்த்தே! மேதாம், ப்ரயச்ச ஸ்வாஹா என்பதாக மூல மந்திரம் கூறப்பட்டுள்ளது.

57. ஹ்ருதயம் முதலானவைகளுக்கு ஸ்வரம் என்பதான உயிர் எழுத்துக்களிலிருந்து கிரஹணம் செய்யக்கூடியதாக கூறப்பட்டு நம: ஸ்வாஹா, வஷட், ஹும், பட் என்பதாகவும் கூறவும்.

58. ஸ்படிகம்போல் வெண்மையானவரும், மலர்ந்த முகத்தை யுடையவராயும் கங்கையையும், சந்திரனையும் சேர்ந்ததான சுருட்டி முடியப்பட்டதான கேசத்தையுடையவராயும்

59. புலித்தோலையணிந்தவரும் நான்கு கைகளையுடையவராயும், வெண்மையான ஸ்படிக மாலையையும், க்ஞான முத்ரையை வலது பாகக்கைகளிலும்

60. இடதுகையில் தாமரையையும், வஹ்நியையும் தரித்தோ அல்லது வரத, அபயமுத்திரை தரித்து புஸ்தகத்தோடு கூடியதாகவோ நினைத்து, முக்கண்ணையுடையவராகவும்

61. மஹாவ்ருஷபத்துடன் கூடியவராயும், ரிஷிக்கூட்டங்களுடன் கூடியவராயும் உள்ள தேவதேவேசனைத் தியானித்து எல்லா கார்யங்களை நிறைவேற்றலாம்.

62. ய என்ற எழுத்தின் முடிவான ர வும், ஹ காரமும், ஆறாவது உயிரெழுத்தான ஊவும், பதினான்காவது உயிரெழுத்தான ஒள வும் ம் என்பதாகவும் கூறலாம். ஹ்ரூம், ஹ்ரௌம்

63. மாறுபட்ட முகத்தையுடையவரான பைரவரை வேறுவிதமாக கூறலாம். மேலே ரேபம் என்பதான ர என்ற எழுத்துடன் கூடியது பைரவ பீஜ எழுத்தாகும். (ப்ரைம்)

64. இந்த மந்திரமானது ஸங்கிராம விஜயம் என்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் மஹிமையால் மூவுலகையும் வெற்றிபெற்றவனாகிறான்.

65. மூவுலகிலும் எந்த சிறிய தன்மையான கார்யம் எந்த ஒருவனால் மந்திர ராஜ, மந்திரமின்றி செய்யப்படுகிறதோ, அந்த கார்யம் ஸித்திக்கப்படுவதில்லை.

66. தாமரையிலமர்ந்து, சக்தியுடன் இதயத் தாமரையிலுள்ளவரும், ஒளிதருபவரான பாஸ்கரன் என்றும், கையில் தாமரையையுடையவராயும், நான்கு முகமும், மிகவும் சிவந்த நான்கு சக்திகளால் வ்யாபித்த திசையையுடையவராயும், பாதி உடலுடைய அருணன் மேல் அமர்ந்தவரும், மங்களகரமானவரும், அபயம், வரதம், அக்ஷ்மாலை, கபாலஹஸ்தம் பாசாங்குசம் தரித்தவராயும், க்ரஹக் கூட்டங்களால் நமஸ்கரிக்கப்பட்டவரும், கட்வாங்க ஆயுதமுடையவருமான சூர்யனை நமஸ்கரிக்கவும்.

67. ப்ரும்மமந்திர, அங்கமந்திரங்களை முறைப்படி எடுத்துக்கொள்ளவும். விஸ்தாரம் முதலிய நான்கு சக்திகளை நான்கு முகத்திலும் பூஜிக்க வேண்டும்.

68. ஹ்ருதயம் முதலான மந்திரங்களை ஆக்னேயம் முதலான திசைகளில் போகாங்கமாக பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் நேத்ரமந்திரத்தை பூஜிப்பது கர்பாவரணமாக கூறப்பட்டுள்ளது.

69. அதற்கு வெளியில் தீப்தா முதலிய சக்திகளும் அதற்கும் வெளியில் கிரஹங்களையும் அதனின்றும் வெளியில் முறையாக லோகபாலகர் களையும் பூஜிக்கவும்.

70. விருப்பத்தையடைவதற்கும் சூர்யனை பூஜிக்கலாம். ஹே ப்ராம்மணர்களே! சுருக்கமாக ப்ரத்யங்கிராஸ்த்ர மந்திர முறையை கூறுகிறேன்.

71. எல்லா பக்தியையும் கொடுக்கவல்லதும், எல்லா நோயையும் போக்க கூடியதும் ஜ்வரம், வலிப்பு போன்ற நோய், வைசூரி இவைகளை அழிக்கக் கூடியதும் காசநோயை போக்க கூடியதும்

72. எதிரியின் கார்யத்தாலேற்பட்ட வ்யாதிக்கூட்டத்தை அழிக்கவல்லதும் நான்குவிதமான படையுடன் கூடிய எதிரியை அழிக்கவல்லதும், உயர்ந்ததும்

73. தன்னுடைய படையை காப்பாற்றுவதும் எல்லா கார்யங்களிலும் தகுதித் தன்மை உள்ளதாகவும் இருக்கிறது.

74. பிறகு ஸிம்மவதனே, மஹாவதனே என்றும் மஹாபைரவி, ஸர்வசத்ரு

75. கர்மவித்வம்சினீ பரமந்திரசேதினீ, ஸர்வ பூததமனீ என்றும்

76. ஸர்வபூதாந்பந்த பந்த என்றும்ஸர்வ விக்னாந் சிந்தி சிந்தி என்றும்

77. சர்வதுஷ்டாம் பக்ஷபக்ஷ என்றும்

78. ஜ்வாலாஜிஹ்வே, கராளதம்ஷ்ட்ரே என்றும்

79. ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நம: என்று ஸ்வாஹா என்பதாகவும் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரம் கூறப்பட்டுள்ளது.

79. இந்த ப்ரத்யங்கிராஸ்த்திர மந்திரம் நூறு எழுத்தை உடையதாக கூறப்பட்டுள்ளது. முதலில் உள்ள ஏழு எழுத்து ஹ்ருதயம் என்றும் பதினைந்து எழுத்து சிரஸ்ஸிற்காகவும்

80. அதன்பிறகு பத்து எழுத்து சிகைக் காகவும், கவச மந்திரம் ஏழு எழுத்தாகவும் ஆகும். அவ்வாறே ஏழு எழுத்து நேத்ரமந்திரமும் முப்பத்தி நான்கு எழுத்துக்களால் அஸ்திர மந்திரமும் ஆகும்.

81. பதிமூன்று எழுத்தை உடையது காயத்ரி மந்திரமாயும், ஏழு எழுத்து ஸாவித்ரி என்ற மந்திர வடிவுமாகும். நம: ஸ்வாஹா, வஷட், வெளஷட், ஹும் பட் என்பதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை கூற வேண்டும்.

82. த்யானம்: ஸிம்மம் போன்ற முகம், பயங்கரமான தித்திப்பல், நெருப்பை போன்ற பிரகாசிக்கின்ற மேல் நோக்கிய கேசம், கருப்பு மை போன்ற நிறம், உருண்டையான மூன்றை கண்ணையும்

83. வலது கையில் சூலாயுதம் உடுக்கை யையும் தரித்துக்கொணடும், இடது இரண்டு கையால் முண்டபாதி உடல், தளிரையும் தரித்துக்கொணடும்

84. அட்டஹாஸ சிரிப்பு சத்தங்களால் கர்ஜித்துக்கொணடும் சத்தம் செய்துகொணடும், கருப்பு வஸ்திரம் தரித்துக்கொண்டும் நரம்புடன் கூடிய மாம்ஸத்தை வாயில் வைத்து நடனத்தை செய்பவளுமாக

85. உகந்ததாக முத்துக்களாலான அணிகலன்களை எல்லாமணிந்தவளும் மான்தோலை தரித்திருப்பவளாயும், தேவர்களால் பைரவி என்ற பெயரை உடையவளாக பூஜிக்கப்பட்டு

86. ஒருமைப்பாடுடைய மனதால் தேவியை தியானித்து எல்லா எதிரிகளையும் அழிக்கவும், எல்லா நோய்களையும் அழிக்கவும், பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை போக்கவும்,

87. படிப்பில் சிறந்தவனாக விளங்க காரகிலையோ, தாமரைக்கேசங்களாலோ சிறந்த சாதகன் ஹோமம் செய்யக்கடவன்

88. கடம்பபூவின் மொட்டுக்களால் ஹோமம் செய்தால் யக்ஷிணீ தேவதைகள் சித்தியடைகிறார்கள். தினை, வாழை பூவினால், நோயால் பீடிக்கப்பட்டவன் ஹோமம் செய்யவும்.

89. அரளி புஷ்பத்தை நெய், தேன் இவைகளுடன், கருங்காலி முதலான ஸமித்துக்களால் ஹோமம் செய்வதால் விரைவில் ஆரோக்யத்தை உண்டுபண்ணக் கூடியதாக ஆகும்.

90. வெண்கடுகு, முத்து, கொள்ளு இவைகளோடும், பால் பாயாஸம் இவைகளால் ஹோமம் செய்தால் அந்த நிமிடமே பொறுமையுள்ளவனாகிறான்.

91. கருவூமத்தம் புஷ்பம், கருங்காலி சமித்துடனும், கருநீலக்கல், நெய் இவைகளால் ஹோமம் செய்வதால் ஸ்தம்பநாசித்தியும், அபிசாரத்திலிருந்து விடுபட

92. செந்தாமரை புஷ்பம், அதே அளவு செஞ்சந்தனம், காராம்பசு நெய், பால் இவைகளால்

93. பத்தாயிரம் ஆவர்த்திஹோமம் சீக்ரம் விடுவிக்கப்படுகிறான். எருமை நெய் வெள்ளெருக்கு, கழுதைப்பால்

94. செந்தூரப்பொடி, சிகப்பு புஷ்பம், கரிக்கட்டை இவைகளால் ஒரு லக்ஷம் ஆவர்த்தி ஹோமம் செய்வதால் அந்த குலத்தை மேன்மைப்படுத்தியவனாகிறான்.

95. குங்குமப்பூ, கோரோசனை, பருத்திக் கொட்டை, குங்குலியம், மூங்கில் சமித்து இவைகளால் ஹோமம் செய்தால் எதிரிகளின் அழிவு ஏற்படுமென் பதில் சந்தேகமில்லை.

96. வேப்பம்பூ, நெல், வேப்பெண்ணை, வெள்ளையருகின் பால், பாதரஸம் இவைகளை ஹோமம் செய்யவும்.

97. அரசனின் காசநோய் முதலிய நோயைப் போக்கடிக்க மேற்கூறியபடியே ஹோமம் செய்யவும், எண்ணை நெய்யுடன் சேர்த்து, அருஹம்பில்லையும் நெய்யுடன் சேர்த்து

98. வெண்பட்டு, ஹவிஸ், நெற்பொறி, த்ரிமது ரத்துடன் ஹோமம் செய்தால் வயிற்றுவலி சம்பந்த நோய்களை போக்க காரணமாகும். சுக்கு, திப்பிலி, மிளகுகளால்

99. அக்னிஸித்திப்பதற்கு அக்னி பீஜ மந்திரங்களால் ஹோமம் செய்யவும். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, பால், நெய்

100. தேனினாலும் நேத்ர மந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். விஷக்கடியைப் போக்குவதற்கு மாவிலைகளால் ஹோமம் செய்யவும்.

101. நெய்யினால் பச்சையாக உள்ள மாவிலைகளை ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினால் ருத்ர சாந்தி மந்திரத்தினாலும் எல்லா இடையூறுகலை போக்குவதற்கு ஹோமம் செய்யவும்.

102. துணிமணிகளால் காச நோயைப் போக்குவதற்கு, கடுகுகளால் ஜலதோஷத்தைப் போக்குவதற்கும், பித்த வ்யாதியை போக்க குளுர்ச்சியான சந்தனம் முதலிய பொருட்களால் ஹோமம் செய்யவேண்டும்.

103. மேற்கூறிய பொருட்களை ஆயிரம், பத்தாயிரம், லக்ஷம், மூன்றுலக்ஷம் என்ற எண்ணிக்கை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விருப்பத்தையடையும் முறையாகிற முப்பத்தி மூன்றாவது படலமாகும்.
படலம் 32: அனுகர்மம் என்கிற பிராயச்சித்த விதி

32 வது படலத்தில் அனுகர்மம் என்கிற பிராயசித்த விதி கூறப்படுகிறது. முதலாவதாக எல்லாவற்றிற்கும் சாதாரணமான அனுகர்ம விதியை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞையாகும். பின்பு ஆலயம் விழுந்த போதிலும் பின்னப்பட்ட பொழுதும் வேறுமாறாக ஆன பொழுதிலும் குறைவு பட்ட பொழுதிலும் ஆலய விஷயத்தில் விழுதல் என்ற காரணத்தினால், திசைகளின் அசைவு ஏற்பட்ட பொழுது உருப்புகள் குறைந்த பொழுதிலும், நீள அகல அளவுகள் குறைந்த பொழுதிலும், அனுகர்ம விதி கூறப்படுகிறது. பிறகு அளவுகள் நீள, அகலம், தேய்மானம் அடைந்த பொழுது உயர்ந்த தான திரவ்யங்களாலோ அல்லது முன்பு எந்த திரவ்யங்களால் ஆலயத்தின் அங்கங்கள் நிர்மாணம் செய்யப்பட்டதோ அந்த திரவ்யங்களால் குறைபாடு உள்ள அங்கங்களை அளவு உள்ளதாக செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹம் முதலிய அங்க விஷயத்தில் செய்ய வேண்டிய அனுகர்மவிதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்திலும் செய்ய வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. மானுஷாலயத்தில் நாகரம் முதலிய விமானங்களிலும் கர்பக்கிரஹ விஷயத்திலும் ஆத்யேஷ்டிகா கர்பன்நியாசம் முதலிய விஷயங்களில் செய்ய வேண்டிய அனுகர்ம விதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்க விஷயத்தில் நல்ல தன்மை உடையதும் நல்ல தன்மை இல்லாததுமான லிங்கத்தை அசையக்கூடாது என கூறி நல்ல தன்மை உள்ளதும் இல்லாததுமான லிங்கத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. அவ்வாறு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்ட விஷயத்தில் பலன் பயன் அற்றதாக ஆகும் ஜீர்ணம் உள்ள லிங்கம் பூஜிக்கத் தகுந்தது. தகாதது எனவும் கூறப்படுகின்றன. ஆகையால் சாஸ்திர முறைப்படி சுகத்தின் பொருட்டு ஜீர்ணம் முதலிய லிங்கங்களை எடுக்கவும் என கூறி தள்ளுபடி செய்யப் படவேண்டிய ஜீர்ணாதி 16 லிங்கங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு தேய்மானம் உள்ள தோஷம் உள்ள பீடம் பிரம்ம சிலை விருஷபங்கள் இவைகள் தள்ளுபடி செய்பவைகளாகும்.

பிறகு விஷமம் என்ற குறை உள்ள இடத்தில் உள்ள லிங்கங்கள் அவ்வாறே அசைந்தது. அசைவிக்கப்பட்டது. விழுந்தது விழப்பட்டது விழும்படி செய்யப்பட்டது. ஆகிய லிங்கங்கள் அறியாமையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, சைவ மந்திரம் இன்றி வேறு மந்திரம் வேறு கிரியை இவைகளால் ஸ்தாபிக்கப்பட்டதுமான லிங்கங்களையும், தள்ளப்பட்ட சிலையால் செய்யப்பட்ட லிங்கமும் ஒரு பொழுதும் நன்கு ஸ்தாபிக்கப்பட்டதாக எண்ணுவதற்கு இடம் இல்லை. ஆகையால் அவைகள் ஜீர்ணமானால் அதே விதிப்படி முறையாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு அசுரர்கள் முனிவர்கள், தேவர்கள் தத்துவஞானிகள் இவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஆலயம் இவைகள் தேய்மானம் ஆனாலோ லிங்கம் பிளவு பட்டதாக ஆனாலும் முறைப்படி அசைக்கக் கூடாது. ஆனால் அரசன் திருடன் அக்னி இவைகளின் பயத்தால் காப்பாற்ற படுவதற்காக லிங்கத்தை வேறு இடத்தில் வைக்கவும் ஜலத்தினால் முழுகப்பட்டாலும் அடித்துச் செல்லப்பட்டாலும் அந்த லிங்கத்திற்கு அசைக்கும் தோஷம் இல்லை. அந்ததோஷம் லக்ஷ ஜபத்தால் சுத்தம் ஏற்படுகிறது. இப்பேர்ப்பட்ட லிங்கங்களின் விஷயத்தில் இடையூர் இல்லாத வேறு பிரதேசத்தில் லிங்க ஸ்தாபனம் செய்ய வேண்டும் என ஸ்தாபன முறை அறிவிக்கப்படுகிறது. சலபேர பிம்பங்களிலும் இந்த முறை ஸமானமாகும் எனக் கூறி லிங்களின் விஷயமான அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. பேரம் ஜீர்ணம் முதலிய தோஷங்களால் தேய்மானம் அடைந்தால் வேறு பிம்பம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலாமயம் பக்குவமான மண்களால் ஆனது மரத்தினால் ஆனவை ரத்தினங்களால் செய்யப்பட்டவைகளான பிம்பத்தில் வயிற்றுப் பகுதி முகம் புருவ ரேகை இவைகளின் குறைவிலும் அங்க ஹீனத்திலும் அந்த பிம்பங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

உலோகத்தினால் பக்குவம் இல்லாத மண்ணால் செய்யப்பட்ட பிம்பமும் கை மூக்கு, கால், காது. பற்கள், இவைகளால் குறைந்த பொழுதிலும் அணிகலன்கள் விடுபட்ட பொழுதிலும் அந்தந்த பொருள்களால் கெட்டியாக்கப்படவேண்டும். உத்தமமான அவையங்கள் குறைந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்து விட்டு வேறு புதியதான பிம்பம் செய்து ஸ்தாபிக்கவும், கால், கை, இழந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்யவும், அல்லது அந்த அங்கங்களால் சேர்க்கும் தன்மையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சரீர அங்கங்களில் அங்கம் உபாங்கள் பிரத்யங்கம் என்று மூன்று வகையாகும் என கூறி அவைகளின் அமைப்பும் கூறி அவைகள் குறைபாடு உள்ளது செய்ய வேண்டிய அனுகர்மவிதி கூறப்படுகிறது. பிறகு கருங்கல்லாலும் பக்குவமான மண்ணினாலும் செய்யப்பட்ட பிம்பம் குற்றம் உள்ளதாக இருந்தால் ஜலத்தில் போட்டுவிடவும், குற்றம் உள்ள ரத்னத்தினால் ஆன பிம்பம் தள்ளுபடி செய்ய தக்கதாகும் அல்லது வேறு இடத்தில் செய்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் குற்றம் உள்ள உலோக திரவ்யத்தினால் செய்யப்பட்ட பிம்பம் வேறுபிம்பம் செய்யும் கார்யத்திற்கு கொடுக்க வேண்டும். அந்த பிம்பத்தின் திருவாசியையோ பீடத்தையோ அதே பிம்பத்திற்கு அல்லது வேறு பிம்பத்திற்கு சேர்க்கப்படவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கபடவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது தள்ளுபடி செய்ய வேண்டுமா என்று விசேஷம் கூறப்படுகிறது. குற்றம் உள்ள சிலாபீடத்தில் பெயர்ந்து எடுத்து வேறு சிலர் பீடம் சேர்க்கவும். சிலா பீடம் கிடைக்காத சமயத்தில் செங்கல்லால் சேர்க்கவும் பிறகு சைல பிம்பத்திற்கு சமமாக சேர்க்கக் கூடாது. பீடத்தின் அளவு முன்பு போல் இருக்க வேண்டும். சதுர பீடத்தில் விருத்த பீடமும் விருத்த பீடத்தில் சதுரபீடமோ செய்யக் கூடாது என பீடம் அமைக்கும் விஷயத்தில் அனுகர்ம விதி கூறப்பட்டுள்ளது. மண்டபம் பரிவார பிம்பம் பரிவார ஆலயம் உட்பிரகாரம் இவைகளில் முன்பு கூறப்பட்டுள்ள அனுகர்ம விதிப்படி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

அனுகர்ம விதியில் சாஸ்திரபடி பிரமாணத்துடன் விதிக்கப்பட்ட அலங்காரத்துடன் கூடிய விஷயத்தில் பூமி கூடுதல் குறைதல் என்ற கார்யம் அரசனுக்கு கஷ்டம் கொடுக்கும் என கூறப்படுகிறது. பிரமாணம் இல்லாத விஷயத்தில் அதிகப்படுத்தும் கார்யத்தில் நல்ல குணமும், தோஷமும் வர்ணிக்கப்படுகிறது. கோபுர விஷயத்தில் அனுகர்ம விதி ஆலயத்திற்கு கூறியபடி அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. கோ சாலை முதலிய கொட்டகைகள் வீடுகள், மாளிகைகள் இவைகளின் விஷயத்திலும் அனுஷ்டிக்க வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. முடிவில் சொல்லப்பட்ட எல்லாவற்றின் விஷயத்திலும் பெயர்த்து எடுக்க வேண்டிய முறை கூறப்படுகிறது என்று சொல்லி பெயர்த்து எடுக்கும் செயலை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு அறியாமையாலும் அவ்வாறே ஜோஸ்யர்கள், சில்பி, சிவ தீட்சை அற்றவர்கள் இவர்களால் சிவலிங்கம் முதலியவைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறியபடி சிவாகம சிவசாஸ்திர சம்ஸ்காரத்தை ஆசார்யன் செய்யவேண்டும். இவ்வாறே சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் என்ற தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தையும் மறுபடியும் சிவ ஸம்ஸ்காரம் செய்து ஸ்தாபிக்கவும், பிறகு அந்த லிங்கத்தையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் முதலிய தந்திரங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் பாசுபதம் ஸோம சித்தாந்தம் லாகுளம் என மூன்று வகைப்படும். அவைகளில் ஒவ்வொன்றும் வாம, தட்சிண சித்தாந்த, பிரிவாக மூன்று விதமாகும் என்று 9 விதங்கள் ஆகும் என கூறப்படுகின்றன. பிறகு காருடம், பைரவம், வாமதந்திர, வியவஸ்திதம், பூததந்திரிய விவஸ்திதம் என்று நான்கு விதமாக சைவ தந்திரங்கள் கூறப்படுகின்றன. அவைகளும் முன்பு போல் வாம, தட்சிண சித்தாந்த பிரிவினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாக ஆகின்றன. இவைகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் ஆதிசைவர்களால் பூஜிக்கப்படுகின்றன. (வேறு கூறப்படப் போகிற ரவுத்திர பேதத்தின் உள்ளிட்டதான யாமள தந்திரத்திலிருந்து (வேறானதான) யாமளதந்திரம் உள்ளது. அது இங்கு மிஸ்ரம் என்று கூறப்படுகிறது). அந்த யாமள தந்திரமும் வாம தட்சிண, சித்தாந்த பிரிவினால் மூன்று விதமாகும் அதில், வாமம், யாமளம், பார சிவார்ஹகம், தட்சிணம் யாமளம் பைரவார்ஹாகம், சித்தாந்த யாமளம் சைவமாகிய ஆதிசைவர்க்கு ஆகும் என கூறப்படுகிறது.

அதுவும் வாம, தட்சிண, மிஸ்ரம், என்ற பேதத்தினால் பலவிதமான ரவுத்ரங்கள் கூறப்படுகின்றன. பிறகு கூறப்பட்ட பாசுபத ஸோம லாகுல தந்திரங்கள் காருட, பைரவ வாம தந்திர, பூத, அதிமார்க்கம், என்கிற தந்திரங்களும் காபால பாஞ்சராத்திர, பவுத்த, ஆர்கத, பிருகஸ்பதிமத, சாங்கியயோக வைகானச, வேதாந்த பீமாம்சை, புராண, இதிகாச, ஷடங்க, சூத்திர முதலிய கிரந்தங்களும் தர்மசாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம், நான்கு வேதமும், எண்ணப்படுகின்றன. பிறகு இந்த எல்லாம் ரவுத்திரம் சித்தாந்தம், சவும்யம் என்று ஆகிறது என கூறப்படுகிறது. பிறகு ருத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட விஷ்ணு முதலிய பிரதிமைகள் எல்லாம் சைவத்வமாக பிரதிஷ்டை செய்து சைவன் அந்த எல்லா பிம்பத்தையும் பூஜை செய்யவும் பிறகு ஆதி சைவனால் ஸ்தாபிக்கப்பட்டும், பூஜிக்கப்பட்டதுமான லிங்காதி பிம்பங்களை ரவுத்திரம் முதலிய தந்திரங்களால் பூஜிக்கப்பட்டால் அந்த பூஜையால் அந்த ராஜ்யம், ராஜகிராமம் கிராமங்கள் அங்கு வசிக்கும் ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும். இவ்வாறாக முன்பு ருத்திராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதை பிறகு ஆதிசைவனால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு பூஜை செய்வதால் அந்த பூஜையை மறுபடியும் ரவுத்திர தந்திரங்களால் பூஜித்தால் அப்பொழுது சேனையுடன் கூடின அரசன் மந்திரி அமைச்சர்கள், பிராம்மண க்ஷத்திரிய சூத்திரர்கள், வைஸ்யர்கள், மற்ற எல்லா ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும் ஆகையால் அரசன் முயற்சியினால் அந்த கிரியைகளை நிவாரணம் செய்யவும் என கூறப்படுகிறது.

பிறகு ரவுத்ராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதும் பிறகு ஸம்ஸ்கார பூர்வமாக ஆதி சைவனால் பூஜை செய்யும் சமயத்தினால் அரசறருக்கு வெற்றியும் ஆயுள் அபிவிருத்தியும் உண்டாகிறது என நிரூபிக்கப்படுகிறது. பிறகு ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஆபிசாரலிங்க விஷயங்களில் அந்த ரவுத்திரர்களால் பூஜிக்கப்பட்ட ஆபிசார மந்திரங்களை எடுக்கும் முறை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வயம்பூ தெய்விக பாண, ரிஷி, கணபர்கள் ஆகியவர்களின் லிங்கங்களின் விஷயத்தில் உடைந்தாலும் இரண்டாக பிளவுபட்டாலும் வெடித்து போனாலும் அங்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தம் கூறப்படுகிறது. இந்த லிங்கங்களில் எல்லா அங்கங்களாலும் சிதறப்பட்டதாக ஆகும். ஆனால் மறுபடியும் புதிய பிம்பங்களை ஏற்படுத்தி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆலயத்தின் அகல நீளமும் ஸ்தலத்தில் ஸ்தம்பம் முதலிய அங்கங்களிலும் லிங்க அளவு பீடம் அமைக்கும் முறை துவாரம் முதலியவைகளின் அங்கங்கள் பிரம்ம சூத்திரம் ஆகிய இவைகளில் அளவு குறைந்த பொழுது குறைபாட்டுடன் எண்ணப்படுகிற நிரூபணம் காணப்படுகிறது. இவ்வாறாக 32வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1.எல்லாவற்றிற்கும் பழமையான அனுகர்மம் என்ற பிராயச்சித்தம் கூறுகிறேன். ஆலயம் இடிந்து, பிளவுபட்டோ, ஆலய முகப்பு குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் திசைக் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும்

2. ஆலய அமைப்பு குறைவுபட்டிருந்தாலும், நீள அளவு உயர அளவு குறைபட்டிருந்தாலும் அந்தந்த திரவ்யங்களால் மிகவும் உயர்ந்ததாக பொருத்தமான அளவுள்ளதாக செய்ய வேண்டும்.

3. அளவோடு கூடியிருக்கும் எந்த வஸ்த்து முன்பு இருந்ததோ அந்த திரவ்யங்களை முன்புள்ள அளவு படியே செய்யவேண்டும். அளவுடன் கூடிய விமானத்தின் அதிஷ்டானம் முதலியவை

4. அவ்வாறே லக்ஷணமில்லாமல் இருந்தால் அதற்கு மாறுபட்ட முறையாக, முறைப்படி அளவுகளால் அமைக்கப்படவேண்டும். ஸ்வாயம்புவம் என்ற அமைப்புள்ள லிங்கங்களின் கோயில் அமைப்பு விஷயத்தில் முன்பு உள்ள அளவுப்படி செய்ய வேண்டும்.

5. சாஸ்திரத்தில் கூறப்பட்டவாறு அந்த ஆலயங்களை அமைத்தால் அதில் குற்றமில்லை. அல்லது வெளியில் கருங்கல்லாலும் உள்புறம் செங்கல்லாலும் அமைக்கலாம்.

6. மானுஷலிங்க ஆலய அமைப்பில் கூடம் பஞ்சரம், கோஷ்டம் என்ற பகுதிகள் உரிய இடத்தில் அமையாது இருந்தால் விசேஷமாக அவைகளுக்கு உகந்ததான இடங்களில் அமைக்க வேண்டும்.

7. நாகரம் என்ற அமைப்புடையதும் வேசரம் என்ற அமைப்புடையதும் திராவிடம் என்ற அமைப்புடையதும், வராடம் என்பது முதலான அமைப்பு உடைய கோபுரங்களை உடைய ஆலயம் செப்பனிடும் விஷயத்தில் அந்தந்த அமைப்புள்ள படியே அமைக்க வேண்டும்.

8. விமானம் கடினமாயும், கடினமில்லாமலும் உள்ளதாக ஆலயமிருக்கலாம். ஆலயம் பழுது பட்டிருந்தால் கிழக்கு முதலான நான்கு திசைகளில் ஓர் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.

9. கிழக்கு அல்லது வடக்கு திக்கிலோ அக்னி திசை முதலான கோண திசைகளிலோ வாயில் படியை முன்புள்ள முறைப்படியோ அல்லது மேற்கு முகம் உள்ள வாயில் படி உள்ளதாகவோ அமைக்க வேண்டும்.

10. கர்பக்கிரஹம், அஸ்திவார கல் முதலில் வைக்கப்பட்ட கல் பழுதுபட்டாலும் நாசிகை முதலிய அங்கங்கள் பழுது பட்டாலும் மறுபடியும் முன்பு உள்ள அமைப்பு படியே செப்பனிட வேண்டும்.

11. ஆலயங்கள் சாஸ்திரத்தில் கூறிய உரிய முறைப்படி அமைக்கப்படாமல் இருந்தால் சாஸ்திர முறைப்படி உரிய அளவுள்ளதாக அமைக்க வேண்டும். ஆலயம் அமைப்பு முறைப்படியும் தோஷம் உள்ளதாகவும் இருந்தாலும் சிவலிங்கத்தை அசைக்க கூடாது.

12. சுஸ்திதம் என்ற நல்ல நிலையில் இருப்பது என்பது பழுது பெற்ற ஆலயமும் பூஜை உள்ளதாக இருப்பது ஆகும். துஸ்திதம் என்ற குறைபாடுகளுள்ள நிலையானது பழுது அடைந்தது என்ற நிலை இன்றியும் பூஜை இல்லாமலும், இருப்பது ஆகும்.

13. ஜீர்ணோத்தாரணம் செய்யப்படுமேயானால் கர்த்தாவிற்கு மிக உயர்ந்த பலன் கிடைக்கிறது. மிக ஜீர்ணமான கோயில் பூஜிக்கப்பட்டாலும் தீமை, பூஜிக்காமல் இருந்தாலும் தீமை

14. ஆகையால் இரண்டு விதத்திலும் தீமை விளைவதால் நன்மையின் பொருட்டு சாஸ்திரப்படி புதுப்பித்தல் வேண்டும். ஜீர்ணமானது நெருப்பில் பாதகமானது, மிக மெல்லியது, மிகவும் பருத்தது, அளவில் குறைந்தது, அளவிலே அதிகமானது

15. உடைந்தது அடிபட்டு சிலைபெயர்ந்தது ஸமமாக இல்லாதது. லக்ஷணத்திற்கு அப்பாற்பட்டது இடிந்துவிழுந்தது, மூடப்பட்டது, வெடித்தது

16. துஷ்ப்ரயோகமானது நடுபருத்தது நன்கு தெரியாத அங்கம் இந்த பதினாறு லிங்கமும் தள்ள வேண்டியவை விளக்க வேண்டியவை.

17. மிகஜீர்ணமாக தள்ளத்தகுந்த பீடம் அல்லது பிரும்ம சிலை விளக்கத் தக்கது. அது போலவே மிக உயரமானது. பள்ளமானது. அல்லது தரைமட்டம் உள்ளது திக்குகளை அறிந்து அமைக்க முடியாகமல் இருப்பது விஷமஸ்தானத்திலிருப்பது இவை ஐந்தும் விளக்கத்தக்கவை.

18. இவ்வாறே அசைகின்ற, அசையும்படி செய்யப்பட்ட கீழே விழுந்தது விழும்படி செய்யப்பட்ட மூடனால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கமும் அவ்வாறே மந்திரக்ரியையின்றி ஸ்தாபிக்கப்பட்டதும் விளக்கத்தக்கது.

19. விலக்கத்தக்க சிலைகளால் ஆன லிங்கத்தை ஸ்தாபிக்கக்கூடாது. அவ்வாறே எந்தவித மான குற்றங்கள் இல்லாமல் இருக்குமானால் அவைகளை ஸ்தாபிக்கவும்.

20. முனிவர்களோ தேவர்களோ தத்வஞானிகளோ அசுரர்களோ பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை ஜீர்ணமாக இருந்தாலும் உடைந்திருந்தாலும் அதை எடுக்கக்கூடாது.

21. அரசன், திருடன், நெருப்பு, ஜலம் இவைகளால் ஏற்படும் பயத்தினால் வேறு இடத்தில் ஸ்தாபிக்கவும். ஜலத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலும் அபஹரிக்கப்பட்டிருந்தாலும்

22. ஐம்பதாயிரம் சிவமந்திர ஜபத்தால் லிங்கத்திற்கு சுத்தித் தன்மை ஏற்பட்டுயிருக்குமேயானால் ஸ்தாபநம் செய்வதில் எவ்வித தோஷமும் இல்லை. அல்லது முன்பு உள்ளது போலவே வாயில் வைத்து வேறு இடத்தில் ஸ்தாபனம் செய்யலாம்.

23. தண்ணீர் பாதகம் உள்ள லிங்கத்தை நூறுதண்டம் தள்ளியோ ஸ்தாபனம் செய்யவேண்டும். ஆயிரம் வில் அளவு தள்ளி லிங்கத்தை ஆதரவுடன் ஸ்தாபிக்க வேண்டும்.

24. உருவத்திருமேனிக்கும் இது பொதுவானது. கடினமில்லாத சிலாமயமான திருமேனி, பக்குமான மண்ணாலானவை, மரத்தாலானவை, ரத்னக்கல்லானவைகளான பிம்பங்களின்

25. இமை, புருவம், முகம் இவைகளின் ரேகைபழுதுபட்டால் விசர்ஜனம் செய்ய வேண்டும். அங்கங்கள் குறைவுபட்டால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பதில் விசாரணைக்கு இடம் இல்லை.

26. உலோகம், மண் இவைகளால் செய்யப்பட்ட உருவத் திருமேனியில் கை, மூக்கு, ஆபரணங்கள், காது, பற்கள் இவைகள் இல்லாதிருப்பின் அந்த உருவத்திற்கு மேனியை செய்யப்பட்ட பொருள்களினாலோ நன்கு செப்பனிடவேண்டும்.

27. உத்தமாங்கமான தலை இல்லாது போனால் அதை நீக்கிவிட்டு புதிதாக பிம்பம் அமைக்க வேண்டும். கை கால் இல்லாது இருப்பின் அதை விலக்கலாம். அல்லது மறுபடியும் செப்பனிடலாம்.

28. உபாங்கம், அங்கம், ப்ரத்யங்கம் என்று சரீரங்கம் மூன்றுவிதம் கூறப்பட்டுள்ளது. பிரதான சூலம் அங்கமாகும். அது ப்ரும்மதண்டம் என்று இவ்வாறு சொல்லப்படுகிறது.

29. மார்பு, இடுப்பு, முழங்கை, புறங்கை, மணிக்கட்டு, துடை, முழங்கால், கணுக்கால், இவைகள் உபாங்கங்கள் என்று கூறப்படுகிறது.

30. இவைகளை போக மீதி உள்ளது ப்ரத்யங்கம் என்று அறியவேண்டும். பிரும்மதண்டம் இல்லாது போனால் சூலம் ஸ்தாபனம் செய்யவேண்டும்.

31. ப்ரத்யங்கம், உபாங்கம் இல்லாதுபோனால் மறுபடியும் சேர்க்க வேண்டும். முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ப்ரும்மதண்டம் லக்ஷணத்துடனிருப்பின்

32. வேறுவைக்காமல் அதையே ஸ்தாபித்து விடலாம். முறிவு முதலானவை ஏற்பட்டிருக்குமேயாகில் மறுபடியும் ஸ்தாபிக்க வேண்டும்.

33. பிரும்மதண்டம் சிலை கல் அல்லது மண் அல்லது சுடப்பட்ட மண்ணாலான சிலையின், பிரும்ம தண்டம் பின்னமானால் ஆழமான தண்ணீரில் போட்டு விடவேண்டும். ரத்தினத்தினால் ஏற்பட்டதை விலக்க வேண்டும். அல்லது சாணை தீட்டி உபயோகிக்க எடுத்துக் கொள்ளலாம்.

34. மரத்தால் செய்யப்பட்டிருப்பது பின்னமானால் சிவாக்னியில் ஸமர்ப்பிக்கவேண்டும். அல்லது பூமியில் புதைக்க வேண்டும். ஜலத்தில் போடவேண்டும். உருக்கக்கூடிய உலோக பொருளாக இருந்தால் சிலை செய்ய சேர்த்துக் கொள்ளலாம்.

35. அல்லது பிம்பத்தின் அதன் திருவாசியை, பீடத்தையோ செய்யலாம். அங்கேயோ அல்லது பிம்பம் செய்ய வேறு இடத்திலோ சேர்க்கலாம். பிரதிஷ்டை செய்யாத பிம்பமாக இருந்தால் அதன் பீடம் முதலியவற்றில் சேர்த்துவிட வேண்டும்.

36. அல்லதுவேறு தேவதைகளுக்கும் அந்த பீடத்தை உபயோகித்து விடவும். பீடம் லக்ஷணத்தோடு அமைந்திருப்பின் அதுபோலவே பிரும்ம சிலையும் விருஷபத்தையும்

37. அவைகளை எங்கும் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது விலக்கினாலும் விலக்கலாம். சிலையால் ஆனபீடமாக இருந்தால் பழுதுபார்த்து பின் அதை எடுத்து கற்சிலையினால்தான் சேர்க்கவேண்டும்.

38. சிலாமயமான பீடம் கிடைக்காவிடில், செங்கற்களால் பீடத்தை பொருத்தவேண்டும். பிறகு சிலாமய பீடத்தை சேர்த்து உருவம் முதலியவை முன்போல செய்யவும்.

39. நாற்கோணமான பீடத்தில் வட்டத்தையோ, வட்டத்தில் நாற்கோணத்தையோ சேர்க்கக்கூடாது. மண்டபத்திலோ, பரிவாரத்தையோ, பரிவாரா லயத்திலோ

40. அனுகர்ம விதியை முன்புபோல் முறைபடி செய்யவேண்டும். அர்த்த மண்டபம் சாலா முதலியவைகளை முன்போலவே ஏற்படுத்தவேண்டும்.

41. அதைக்காட்டிலும் பூமியின் அளவு அதிகமோ, குறைவோ இருந்தால் அது நாட்டிற்கும், அரசனிற்கும் ஆபத்துக்களை கொடுக்கும். சாஸ்திரத்திலே சொன்னபடி பிரமாணத்தோடும் அலங்காரத்தோடும் அமைக்க வேண்டும்.

42. சாஸ்திர பிரமாணம் இல்லாதிருக்கும் பொழுது அதை வேறு விதமாக அமைப்பதால் குற்றம் இல்லை. கிழக்கிலும், வடக்கிலும் அதிகப்படுத்துவது மேலாகும். மேற்கில் அதிகப்படுத்துவது சத்ருக்களால் அழிவு ஏற்படும்.

43. தெற்கில் வாஸ்த்து விருத்தி ஏற்பட்டால் கர்தாவிற்கு மரணம் உண்டாகும். அதனால் அது விலக்கத்தக்கது. ஆகையினால் நான்கு பக்கத்திலும் ஸமமான அதிகமோ, சற்றே குறைவோ, கூடவோ குறைவான விதியோ கூடாது.

44. ஆலயத்திற்கு சொன்னவாறு கோபுரத்திற்கும் அனுகர்மம் செய்யவேண்டியது. சிறப்பான, கிராமங்கள், வீடுகள், சாலைகள்

45. விஸ்தாரம் நீளம் இவைகளில் குறைவு கூடாது. சமமாகவோ அல்லது அதிகமாகவோ அமைக்கலாம்.

46. யுக்தி சாமர்த்யத்தைக் கொண்டு நான்கு பக்கங்களிலும், கிழக்கு வடக்கு இவைகளில் விருத்தி செய்யலாம். வீடு, தோரணம் முதலியவைகளின் எண்ணிக்கையால் பூமியை அமைக்க வேண்டும்.

47. எந்தவிதத்திலும் முன் சொன்னபடி குறைவு நிச்சயமாக இருக்கக் கூடாது. மேற்கூறிய எல்லாவற்றிற்கும் ஒரு விசேஷ விதி கூறப்படுகிறது.

48. அதில் உபயோகப்படும் பொருள்கள் உயர்ந்த பொருள்களாக இருக்குமானால் குறை வாகவோ, அதிகமாகவோ அமைப்பதில் தோஷமில்லை. ஆலயம் சுவர் இவைகள் ஜீர்ணமானால் அஸ்தி வாரத்தின் அளவிலேயே இருக்க வேண்டும்.

49. ஆனால் கட்கமயமான அஸ்திரத்தில் மந்திரங்களை நியஸித்துவிட்டு வேறொன்றை கொண்டு வரவேண்டும். லிங்கத்தின் விஷயத்தில் ஜலம் நிரம்பிய கலசத்தில் அல்லது பீடத்தில் தியானித்து தினமும் பூஜை செய்து வரவேண்டும்.

50. அல்லது அதை விஸர்ஜனம் செய்துவிட்டு வேறொன்றையும் ஸ்தாபிக்கலாம். முன்பு எந்த வடிவமோ எந்த அளவோ அவ்விதமே அமைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது.

51. இவைகள் எல்லாவற்றிற்கும் புதுப்பித்தற்கு சாஸ்திர விதிமுறை கூறப்படுகிறது. ஆலய முன்னதாகவோ, தெற்கிலோ, ஈசானத்திலோ, மண்டபம் அமைக்கவேண்டும்.

52. ஒரு தோரணத்தோடு கூடியதும் தர்பை மாலையோடு கூடியதும், கிழக்குத்வாரத்தோடு கூடியதுமான மண்டபம் அமைக்கவேண்டும்.

53. ஆசார்யன் த்வார பூஜை முதலியவைகள் செய்து ஸ்தண்டலத்தில் ஈஸ்வரனை அர்ச்சிக்கவும். குண்டங்களில் ஆவிர் பவித்துள்ள அக்னியில் மந்திர தர்பணம் செய்து

54. ஸமித்து நெய் எள் ஹவிஸ்இவைகளோடு வாஸ்த்துவிற்கும், திக்குகளுக்கும் பலி கொடுத்து ஆசார்யன், ஆசமனம் செய்து

55. ஸகளீகரணம் செய்து சிவ தீக்ஷிதர்களுக்கு உணவளித்து தேவனிடம் தெரிவித்து ஹேப்ரயோ இந்த தோஷத்துடன் கூடிய கிரியைக்கு

56. தோஷத்தை நீக்குவதற்கு சாந்தி என்ற பரிஹாரம் செய்யவேண்டும் என்பது உங்களுடைய திருவாக்காகும். அந்த தோஷத்தை போக்குவதற்காக என்னை சதாசிவன் அண்டியுள்ளார்.

57. இவ்வாறாக கர்மாவை கூறி சாந்திஹோமம் செய்யவும். சிவமந்திரத்தினால் பால், நெய், தேன், அருஹம்பில் இவைகளால் எட்டாயிரம் ஆவிர்த்தி

58. ஹோமம் செய்து, கும்பத்தை ஸ்வாமி சமீபம் எடுத்துச் சென்று ஹ்ருதய மந்திரத்தினால் அபிஷேகம் செய்து வ்யாபகேஸ்வரா என்ற பதத்தை நான்காம் வேற்றுமையுடன்

59. ஓங்காரத்தை முதலாகவும் நம: என்ற பதத்தையும் சேர்த்து கூறுவது மூலமந்திரமாகும். (ஓம் வ்யாபகேஸ்வராயநம:) வ்யாபகேச்வரா என்ற பதத்தை ஹ்ருதயம் முதலான அங்கமந்திரங்களோடு

59. நான்காம் வேற்றுமையுடன் பிரணவத்துடன் கூடியதாகவும் கூறவும். (ஓம் வ்யாபகேஸ்வர ஹ்ருதாய நம: ஓம் வ்யாபகேஸ்வர சிரஸேநம:, ஓம் வ்யாபகேஸ்வர சிகாயை நம: ஓம் வ்யாபகேஸ்வர கவசாய நம: ஓம் அஸ்த்ராய நம:)

60. நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாக ஹ்ருதயம் முதலான ஐந்து அங்கங்களை கூறவும். பீஜாக்ஷரமின்றி அந்த மந்திரங்களால் ப்ரணவாஸநத்தில் லிங்கத்தை

61. ஸ்தண்டிலத்தில் இருப்பவராக சந்தனம், புஷ்பமாலை இவைகளால் பூஜித்து பிறகு ஆஸ்ரயித்து ஸத்வமான அஸ்திரத்தை சொல்லிக்கொண்டு கர்மாவை கேட்கவும்.

62. ஏதோரு ஸத்வதன்மையானது லிங்கத்தை அடைந்து இருக்கிறது. அந்த சத்வமானது சிவனின் ஆக்ஞைகளால் லிங்கத்தைவிட்டு விருப்பப்படி செல்லட்டும்.

63. வித்யாதேகம், அஷ்டவித்யேஸ்வரர்களுடன் கூடிய பரமேஸ்வரன் இங்கு ஏற்படட்டும். இவ்வாறாக கூறி மஹாஸ்திர மந்திரத்தினால் பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

64. இவ்வாறாக பரமேஸ்வரனை கும்பத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். கும்பமானது பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்துடன் கூடியதாகவும் ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடியதாகவும்.

65. கூர்ச்சத்துடன், மாவிலை, தேங்காய், மூவிழைநூல், புஷ்பம் இவைகளுடன் கூடியதாகவும் அமைத்து, முன்பு கூறப்பட்ட அமைப்பு உள்ளபடியே வர்தனியையும் அதில் அம்பிகையும் ஆவாஹனம் செய்யவேண்டும்.

66. சந்தனம், புஷ்பம், இவைகளால் பூஜை செய்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். தினம்தோறும் சாந்திஹோமத்துடன் கூடியதாக நித்யபூஜை செய்யவும்.

67. பிறகு பாசுபதாஸ்திர மந்திரத்தினால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆயிரம் ஆவிருத்தி ஹோமம் செய்து சாந்தி கும்ப தீர்த்தத்தினால் பிரோக்ஷணம் செய்து தர்பைகளால் ஸ்பர்சித்து கொண்டவாறு ஜபிக்க வேண்டும்.

68. விலோமார்க்யம் என்ற பரான்முகார்க்யத்தை கொடுத்து தத்வ தத்வேஸ்வரர்களையும் பிறகு லிங்கம் ஆவடையாரையும் அடைந்த மூர்த்தி மூர்த்திஸ்வரர்களையும் விசர்ஜனம் செய்ய வேண்டும்.

69. தங்கம், வெள்ளி முதலான கயிற்றால் வ்ருஷபத்தினால் அசைக்கச் செய்யவும். லோகத்து ஜனங்களால் மங்களம் உண்டாகட்டும் என்று நினைத்து ஜலத்தில் லிங்கத்தை போட்டுவிட வேண்டும்.

70. மறுபடியும் புஷ்டி ஏற்படுத்துவதற்காக திக் பாலகர்களின் திருப்திக்காகவும் ஹோமம் செய்யவும், ஆலயத்தின் பூமிசுத்திக்காக நூறு நூறு திக்பாலமந்திர ஆவிர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

71. மஹா பாசுபதாஸ்திர மந்திரத்தினால் அங்கு ஆலயத்தை காப்பாற்றவேண்டும். முன்புள்ள அளவுபடியே வேறு ஆலயத்தை அங்கு நிர்மாணிக்க வேண்டும்.

72. ஸ்யம்புலிங்கம், தெய்வீகம், ஆர்ஷகம் இவைகளிலும் கணலிங்கம் உலோக லிங்கம் நதீப்ரவாகத்தினால் ஏற்பட்ட லிங்க விஷயத்திலும்

73. இவ்வாறாக கூறப்பட்ட லிங்கத்திலும் கும்பஸ்தாபனம் செய்யக்கூடாது. மானுஷ லிங்க விஷயத்தில் கும்பஸ்தாபனகார்யம் செய்யவேண்டும்.

74. ஏழுதினம் வரையிலும் பதினைந்து தினம், முப்பது நாட்கள் வரை கும்பத்தில் வைத்து பூஜிப்பது முறையாகும். அதற்குமேற்பட்ட தினங்களில் கும்பத்தில் ஆவாஹித்து பூஜித்த ஈசன் எல்லா குற்றத்தையும் உண்டாக்குபவன் ஆகிறான்.

75. ஆகையால் மிக முயற்சியுடன் ஓர் மாதம் முடிவதற்குள்ளோ அதற்கு முன்பாகவோ பாலலிங்கம் முதலிய மூர்த்திகளை ஸ்தாபித்து லிங்கமத்தியில் மந்திரத்தை பூஜிக்க வேண்டும்.

76. ஓர் மாதம் முதல் 12 வருஷம் வரையிலோ அதற்கு உட்பட்ட தினத்திலோ அந்த பாலாலய பிம்பத்திலிருந்து பரமேஸ்வரனை மூலலிங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

77. முன்பு இருந்த லிங்கம் காலம் தேசம் இவைகளில் குறைப்பாட்டால் கிடைப்படவில்லை எனில் 36 வருஷத்திற்குள்ளாகவோ மூலலிங்கத்தில் பாலாலய மூர்த்தியை சேர்க்க வேண்டும்.

78. பாலலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி தின எண்ணிக்கையாகவும் பதினைந்து தினம் வரையிலாகவும் ஹோமம் செய்யவும் ஹோமத்தை இரண்டு மடங்கு மூன்று மடங்கு செய்து பாலாலயம் 24 வருஷத்திற்குள் செய்யப்பட்டால்

79. இரண்டு மடங்காக செய்யவும். 36 வருஷத்திற்கு மேற்பட்டு பாலாலய மூர்த்தத்தை மூல ஸ்தான மூர்த்தியில் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்த பாலாய மூர்த்தியானது மூலாலய மூர்த்தியாக ஆகிறது.

80. அங்குள்ள பாலலிங்காதிகளை எடுத்து மூலஸ்தானத்தில் பூஜிக்கவும். ஸகள பிம்பங்களுக்கும் இவ்வாறு கூறப்பட்டு அதன் விசேஷம் கூறப்படுகிறது.

81. 12 வருடத்திற்கு உள்ளாகவே, அவசியம் பாலாலய மூர்த்தத்தை மூலஸ்தானத்தில் சேர்த்து விடவேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடில் மூல பிம்பத்தை பாலாலய பிம்பத்திலேயே சேர்ப்பிக்க வேண்டும்.

82. ஆலயம், கோபுரம் இவைகளில் இவ்வாறான பிராயச்சித்த முறைகூறப்பட்டது. ஆனால் சுத்தமான கத்தியில் மந்திரங்களை பூஜித்து மற்ற கிரியைகளை செய்யவேண்டும்.

83. இவ்வாறாகவே பரிவார தேவதைகளுக்கும் கடத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். சிவலிங்கம் முதலான எந்த வஸ்த்து உண்டோ அவை அறிவில்லாததினால் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும்

84. ஜோதிஷன், சில்பி, மற்ற சிவதீøக்ஷ இல்லாதவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறப்பட்டுள்ளபடி அந்தப்ரதிஷ்டா பிம்பத்திற்கு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

85. சைவசித்தாந்த மார்கத்திற்கு வேறான பாசுபதம் முதலிய கிரந்தங்களும் உள்ளன. அவைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை மறுபடியும் சைவாகம சம்ஸ்காரம் செய்துபிரதிஷ்டை செய்ய வேண்டும்.

86. முதலில் பாசுபதம் என்றும் பிறகு சோமசித்தம் என்றும் அதன்பிறகு லாகுலம் என்றும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாக கூறப்படுகிறது.

87. வாமம், தக்ஷிணம் சித்தாந்தம் என்ற பிரிவுகளால் ஒன்பது வகையாக கூறப்படுகிறது. சைவதந்ரமும், மந்திரம், தந்திரம் என்ற பிரிவுபடி நான்கு வகையாக கூறப்படுகிறது.

88. காரூடன், பைரவம், வாமம், பூததந்தரம், என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்டுள்ள கிரந்தங்களும், ஒவ்வொன்றும் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளன.

89. மேலே கூறப்பட்ட தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை ஆதிசைவன் அர்ச்சிக்கவேண்டும். யாமளம் என்ற ஓர்தந்திரம் கூறப்படுகிறது. அதுவும் மிஸ்ரம் என கூறப்படுகிறது.

90. வாமம், தக்ஷிணம், சித்தாந்தம் என்று மூன்றுவிதமாக வாமம் பாரசைவம் சம்மந்தமாகவும், தக்ஷிணம் பைரவ தந்திர யோக்யமாகவும் கூறப்பட்டுள்ளன.

91. சைவ சித்தாந்தம், யாமள தந்திரம் இரண்டும் ஆதிசைவர்களுக்கு உரியதாகும். சைவசித்தாந்தத்திற்கு வேறுபட்டதான தந்திரங்கள் ரவுத்திரம் என கூறப்படுகிறது.

92. வாமம், தக்ஷிணம், மிஸ்ரம் என்ற பிரிவுகளாக பல வகைகளாக கூறப்பட்டுள்ள லவுகிகம், வைதிகம், அத்யாத்மம் அதிமார்க்கம், இவைகளும்,

93. அவ்வாறே பாசுபதம், சோமசித்தாந்தம், லாகுலம், காருடம், பைரவம் வாமம், பூததந்தரம், யாமளம் இவைகளும்

94. காபாலம், பாஞ்சராத்திரம், பவுத்தம், ஆர்கதமதம், ப்ருஹஸ்பதிமதம் சாங்கியம், யோகம், வைகாநசம், இவையும்,

95. வேதாந்தம், மீமாம்சம், புராணம், தர்மசாஸ்திரம், வாஸ்த்துசாஸ்திரம், ஸூத்திரம், ஷடங்கம், இதிகாசம் மற்றும்

96. அவ்வாறே நான்கு வேதங்களும் எவைகள் உண்டோ அவைகளில் சோதிக்கப்பட்டதை எல்லாவற்றையும் ரவுத்திரம் என கூறப்பட்டுள்ளது. சைவசித்தாந்தம் சவும்யம் என கூறப்பட்டுள்ளது.

97. ரவுத்திர தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணு முதலான பிம்பங்கள் எவைகள் உண்டோ, அவைகள் எல்லாவற்றையும் சைவ முறைப்படி ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

98. ஆதி சைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்துவந்த லிங்கம் முதலான பிம்பங்களை மேற்கூறிய தந்திரங்களால் ரவுத்திர ரூபமாக பூஜிக்கப்பட்டால் அரசனையும் அரசாங்கத்தையும்

99. அந்தகிராமத்தையும், கிராமத்திலுள்ள ஜனங்களையும், மேற்கூறிய பூஜைகளால் கொல்லப்படுகிறார்கள். சந்தேகமில்லை. ஆதிசைவனால் முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ரவுத்திராதி தந்திர பிம்பத்தை பூஜிக்கப்பட்டாலும்

100. பிறகு ரவுத்திராதி தந்திரர்களால், பூஜிக்கப்பட்டாலும், அந்த பூஜை படைத்தலைவன் படையுடன் கூடி அமைச்சர், மந்திரி, பிராம்ணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியன், இவர்களும்

101. நான்காம், வர்ணத்தவர் அதற்கு கீழ்ப்பட்ட ஜனங்களையும் சீக்கிரம் அழிவடைய செய்கிறது. ஆகையினால் அரசன் மிக முயற்சியுடன் மேற்கூறிய குற்றமான பூஜைகளை நீக்கி, அவைகளை

102. முன்பு மேற்கூறிய ரவுத்ராதி தந்திரங்களிலே பூஜிக்கப்பட்டதை சைவ தந்திரத்தினால் சைவனால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டால் அரசனுக்கு வெற்றியும் ஆயுள் அபிவிர்த்தி இவைகளை எப்போதும் அடைவான்.

103. சைவ மந்திரங்களில் அமைதிதன்மை இருப்பதால் எல்லோருக்கும் மங்களத்தை கொடுக்கும் என்பதாகும் ஆபிசாரகலிங்கம் முதலியவைகளை ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்டால்

104. அவைகளின் கர்ம மந்திரங்களை போக்கும் முறையை கூறுகிறேன் கேளும் பிராம்ணர்களே, மேற்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை அடைந்து, மண்பாண்டங்களை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.

105. கருங்கல்லால் ஆன திரவ்யங்கள், உலோகம், மரச்சாமான்களை, அடிக்கடி சுத்தி செய்து சுவர் முதலானவைகளை சுண்ணாம்பு சாந்தால் பூசி தரை பிரதேசங்களை சாணம் மெழுகிட வேண்டும்.

106. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி செய்து பர்யக்னிகார்யம் செய்து மறுபடியும் புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.

107. அஸ்திர மந்திர ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து பஞ்ச கவ்யத்தினால் சுத்தி செய்ய வேண்டும். உழுதல் முதலாக பிரதிஷ்டை வரையிலாக உள்ள கிரியையில் எந்த மந்திரங்கள் பிரவேசிக்கப்பட்டுள்ளதோ

108. அந்த மந்திரங்களை மஹாபாசுபத மந்திரத்தினால் விடுவிக்கவும், மஹாஜாலம் என்ற பிரயோகத்தினால் எல்லா மந்திரங்களையும் தன் வசப்படுத்தவும்

109. ஓம், ஹூம், ஹாம், ஹம், ஹாம், ஹூம், என்ற பீஜாக்ஷரத்துடன் மஹாஜால முத்திரையால், வசப்படுத்தவும் இங்குபிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் முதலிய மூர்த்தங்களை தர்பம், விபூதி, மண், தீர்த்தம் இவைகளால் சுத்தி செய்து

110. பூஜிக்கப்பட்ட மரப்பட்டை ஜலத்தினாலும், பசுவின் மூத்திரஜலத்தினாலும்

111. பஞ்ச கவ்யத்தினாலும் அபிஷேகம் செய்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும், லிங்கத்தில் பூஜிக்கப்பட்ட மந்திரத்தை அறிந்தால் முன்புபோல் அதை ஸ்வீகரிக்கவும்

112. லிங்கத்தில் சேர்க்கப்பட்ட மந்திரம் அறியப்படாவிட்டால் ஓம்காரத்தை சேர்க்கவும். பிராணிகளின் ஜலங்களால் நனைக்கப்பட்டால் அஸ்திர மந்திரத்தை ஜபித்து சேர்க்க வேண்டும்.

113. அந்த லிங்கத்தை அடைந்த மந்திரங்களை தீபத்துடன் ஒருமைப்பட்டதாகச்செய்து, அந்த மந்திரங்களுடன் தீபத்தை சேர்ந்ததாக நினைத்து எடுக்க வேண்டும்.

114. முன்பு கூறப்பட்ட மந்திரத்தினால், ஸம் ஹார முத்திரையால் எடுத்து திரும்பவும் அந்த லிங்கத்தை முன்பு கூறப்பட்ட பொருள்களினால் அஸ்திர மந்திரம் கூறி சுத்தி செய்து

115. உழுவது முதல் பிரதிஷ்டை வரையிலான கார்யங்களை நினைத்த மாத்திரமாக செய்யவும். அந்தந்த மந்திரத்துடன் கூடியதாகவும், அந்தந்த ஹோமத்துடன் சேர்ந்ததாகவும்

116. சிவலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி பிரதிஷ்டை செய்யவும். பிம்ப சுத்தி ஜலாதிவாசம் ஆகிய இரண்டும் செய்யவேண்டியதில்லை.

117. ஸயனாதிவாசமின்றி மற்ற கார்யங்களை செய்யவும் முன்பு சொன்ன பூஜா கார்யங்களை கருவறையிலோ அல்லது மண்டபத்திலோ செய்யவேண்டும்.

118. ஸ்வாமிக்கு முன்பாகவோ அல்லது மண்டபத்திலோ குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யவும். ஸ்வயம்புலிங்கம், தேவர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம், பாண லிங்கம், ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கம், கணங்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம்

119. ஆகியவைகள் சிறிது சேதமடைந்து வெடித்து இரண்டாக பிளந்து சேதம் ஏற்பட்டால் அந்த இடத்திலேயே சாந்தி செய்ய வேண்டும். திசா ஹோமமும் வேதபாராயணம் இவைகளும்

120. நூற்றெட்டுபடியால் அபிஷேகம் செய்து சாந்திஹோமம் செய்து ஸ்நபனமும் செய்யவேண்டும்.

121. பிராம்மணர்களை சாப்பிடச் செய்து, பிறகு சிவமதத்தைத் தழுவியவர்களையும் சாப்பிடச் செய்ய வேண்டும். ஈஸ்வரனுக்கு மஹாநிவேதனம் செய்து தாம்பூலத்தையும் கொடுக்க வேண்டும்.

122. நடுநிசியில் கிராமத்திலாவது, நகரத்திலாவது, பருப்பு, பொங்கல், பாயாசம் சக்கரைப் பொங்கல் இவைகளை வாழைப்பழத்துடன் சேர்த்து பலிதானம் செய்யவேண்டும்.

123. எல்லா தோஷமும் நீங்க இவ்விதம் ஏழுநாள் செய்ய வேண்டும். ஆசார்யரை தினந்தோறும் தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளால் பூஜிக்கவேண்டும்.

124. முடிவில் ஸ்நபனம் செய்யவேண்டும். மஹா ஹவிர் நிவேதனமும் கொடுக்க வேண்டும். எல்லா அவயங்களும் அழிந்திருந்தால் மறுபடியும் புதிதான பிம்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

125. ஸ்வாம்புவம் முதலிய லிங்கங்கள் பழுதடைந்தபொழுது எல்லா லக்ஷ்ணங்களோடு கூடிந்தாலும் அல்பதோஷமாக இருந்தால் சாந்திகர்மா சொல்லப்பட்டுள்ளது.

126. ஆலயத்தின் விஸ்தாரத்தில் ஆறு மாத்திராங்குலம் கூட குறைந்து இருப்பின் உயரத்தில் பன்னிரண்டு மாத்ரத்தினாலும் வரையிலும் இதில் ஒரு அங்குலம் கூட குறைவு இருப்பின் குற்றம்.

127. ஸ்தலத்தில் இரண்டு மாத்ராங்குலம் கம்பம் முதலிய அங்கங்களில் மாத்திராங்குலம் கிராம அமைப்பு, நகர அமைப்பு முதலியவைகள் தண்டம் வரையிலும் அளவு கூறப்பட்டுள்ளது.

128. சாலா ரூபமான ஆலயங்களிலோ லிங்கத்தின் அளவில் ஓர் முழம் அளவு வரையும் யவை அளவு முதல் மாத்திராங்குல அளவு வரையிலுமோ பூஜையில் பீடத்தை ஏற்படுத்தவேண்டும்.

129. வாயில்படி முதலிய அங்கங்களின் மாத்திராங்குல அளவிலும், பிரும்ம சூத்திரம் கோமுகம் நுனியும் மாத்திராங்குல அளவிலாகும். லிங்கத்திற்கு முன்பாக அந்த அளவும் முறையும் செய்யவும். இது பொருத்துக்கொள்ளக்கூடிய அளவாகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அனுகர்ம விதியாகிற முப்பத்திரண்டாவது படலமாகும்.
படலம் 31: அத்புத சாந்தி விதி!

இந்த படலத்தில் முதலில் அபூர்வமாய் இருக்கக் கூடிய விஷயத்தில் எல்லா விதமான கேடுகளையும் போக்கடிக்கக் கூடிய பரிகாரத்தை கூறுகிறேன் என்பது பிரமாணம். இரவில் சூர்யனை காண்பதும். அமாவாசையில் சந்திரன் உதயத்தை காண்பதும் பூகம்பம் ஏற்பட்டாலும் ஆலய மண்டபங்கள் சுற்றுவதிலும் நதி, குளம், கிணறு, இவைகள் வறட்சியும் சிலை அழுவதிலும் பிரதிமைகள் உண்டாவதிலும் ரத்தம் கொட்டுவதிலும் தேன், பால், நெய் மழையிலும், மண், எண்ணை, கல் மாம்சம் கொட்டுவதிலும் லிங்கம் பிம்பம் மரங்களில் இருந்து ரத்தங்கள் உண்டாவதும் எதிர்பாராத விதமாக கோயில் விழுவதிலும், ஸ்தூபி முதலியவைகள் அவயவங்கள் சேதனம் அடைவதிலும், நாசி, தலை, முதலியவைகள் குறைவு ஏற்படக்கூடிய காலத்திலும், கோயில் நடுவே இருக்கக் கூடிய தேவதைகளுக்கு பின்னம் ஏற்பட்டாலும் மண்டபங்கள் விழுந்தால் லிங்கம் முதலியவைகள் உள்ள கோயில் வேறு இடத்தை அடைந்தாலும் மரம் வேறுடன் அனுபட்டால், ஓர் மரத்தில் மற்றொரு மரத்தின் பூக்களோ பழங்களோ உண்டானால் லிங்கத்தில் பிம்பத்தில், பீடத்தில் உஷ்ணங்கள் உண்டானால் மனுஷ்யன், மிருகம் பசு, பட்சி, பாம்புகள் இவைகளில் அந்தந்த ஜாதிக்குவேறு சந்ததிகள் உண்டானால், பல தலைகள், கைகள், கால்கள், மூக்குகள், முதலிய சரீரம் உண்டானால் தன்னுடைய வர்ணத்திற்கு இதர வர்ணங்களில் உருவம் விகாரங்களினால் ஏற்பட்டு இருந்தாலும், தெளிவான வர்ணங்கள் இல்லாததான குதிரைகள் உண்டாவதினாலும், பர்வதங்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் லிங்கத்தில் பிம்பத்தில் பீடத்திலோ துக்கம் ஏற்பட்டாலோ லிங்கம் விமானம் மண்டபம் கோபுரங்களில் பரிவார ஆலயங்களில் சாலைகள் ஆஸ்தானமண்டபங்கள் சபைகளில் இடி விழுந்தாலோ, அரண்மனை குளுமையான அரசமரம், முதலியவைகளில் இடி விழுந்தாலோ, யானைக்கு மதம் பிடித்தாலோ, சூறாவளி காற்று அடித்தாலோ எதிர்பாராத விதமாக நெருப்பில் புகை உண்டானாலோ லிங்கம் பிம்பம் ஆசனம் இவைகளில் புகையை கண்டாலோ லிங்கத்தில் பேரத்தில், பீடத்தில் வெளுத்திருந்தாலோ (வேறுநிறங்கள் தோன்றினாலோ) பேரீ முதலியவைகளில் தானாக சப்தம் உண்டானாலோ, சூர்யனுக்குள் சூர்யன் தெரிந்தாலோ, சந்திரனுக்குள் சந்திரன் தெரிந்தாலோ இரவில் வானவில் தெரிந்தாலும், பகலில் நட்சத்திரம் தெரிந்தாலும் நஷத்திரங்கள் வீடுகளில் விழுந்தாலும், அக்னி நட்சத்திரங்கள், விழுந்தாலும், சந்திரன், சூர்யன் மண்டலத்தில் 5 நாளுக்கு மேல் கோட்டை கட்டிருந்தாலோ திக்குகளில் தீ பிடித்தாலோ லிங்கத்தில் பூஜை செய்த புஷ்பங்கள் வேறு நிறம் ஏற்பட்டாலோ எதிர்பாராத விதமாக குளிர்ந்த மரம் விழுந்தாலும், எதிர்பாராத விதமாக வெட்டுப்பூச்சிகள் ஏற்பட்டாலும் மனுஷ்யன் மிருகம் பசு பட்சி.

பாம்புகளுக்கு பைத்யம் பிடித்தாலோ எதிர்பாராத விதமாக யானை, குதிரை இறந்தாலோ, எதிர்பாராத விதமாக மழை பெய்தாலும், எதிர்பாராத விதமாக ராஜாவினுடைய பிரதான மனைவி, குதிரை, யானை பிரதான குரு, இவர்களுக்கு மரணம் ஏற்பட்டாலோ கோயில் மண்டபங்கள் பிராகாரம், கோபுரங்கள் பரிவார ஆலயத்திற்கு மேல் அரண்மனைக்கு மேல் பீடங்கள் பிம்பங்கள் முதலியவைகளில் நாய் ஏறினாலும், அழுதாலும், பூனைகள் அழுதாலும் இவைகளில் ஸ்திரீநரி ஏறினாலும் குதிரை லாயத்தில் நெருப்பு ஏற்பட்டாலும், லிங்கத்தில் பீடத்தில் பிம்பங்களில் ஏறினாலும் லிங்கத்தின் அடியில் பீடத்தில் பிம்பத்தில் கர்பக்கிரகத்தில் பரிவாரத்தில் தேன் கூடு கட்டினாலும், தானாகவே கதவு சாத்திக் கொண்டாலும், சூர்யன் அஸ்தமனத்திற்கு பிறகும் சூர்ய உதயத்திற்கு முன்பும் ஆகாசத்தில் பலவிதமான வெள்ளை, சிவப்பு வர்ணங்களில் நீல வாலுடன் நட்சத்திரங்களை போல தூம கேதுகள் சஞ்சரித்தாலும் அபூர்வமான கார்யங்கள் பார்ப்பதினாலும் உண்டான மற்ற இடையூறுகளையும் கண்டு அதற்காக நீக்குவதன் பொருட்டு கூறப்பட்ட பிராயசித்த கார்யங்கள் தனித்தனியாக நிரூபணம் காணப்படுகிறது.

1. சகல விதமான துன்பங்களையும் போக்கக் கூடிய பரிஹாரத்தை கூறுகிறேன். இரவில் சூர்யனைக் காண்பதால் வேற்று ராஜாக்களின் பயம் உண்டாகும்.

2. பிராம்மண போஜனத்துடன் கூடிய பரிஹாரத்தை செய்ய வேண்டும். அமாவாஸ்யை அன்று சந்திரன் உதயமானால் வேறு ராஜா உண்டாவான்.

3. முன்புபோல் மத்யம பக்ஷத்திலோ அதம பக்ஷத்திலோ பரிஹாரம் செய்ய வேண்டும், பூகம்பம் ஏற்பட்டால் நிச்சயம் அரசனுக்கு கெடுதி உண்டாகும்.

4. தேன், பால் இவைகளினால் ஆயிரம் மரக்காலோ அதில் பாதியோ அதிலும் பாதியோ நூறு படியோ அதில் அரை பாகமோ

5. மூன்று, ஏழு நாட்களோ, இருபத்தி ஒன்று நாட்களோ, பதினான்கு நாட்களோ நெய், தேன்களால் அபிஷேக விதியில் கூறப்பட்டுள்ள உத்தமமான முறையினால் சிவனிடத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. பிரகாரம், மண்டபங்கள் தானாகவே சுற்றுவதானாலும் இதே போல் செய்ய வேண்டும். நதி, குளம் குட்டை முதலியவைகள் காய்ந்து போகுமானால் துர்பிக்ஷம் உண்டாகும்.

7. அதன் கரையில் மண்டபம் நிர்மாணித்து ஸ்தண்டிலத்தில் சிவனையும் வர்த்தனி கும்பத்தில் அம்பிகையையும் சுற்றி எட்டு கும்பங்களை

8. தங்கப் பிரதிமைகளோடும் நூல் சுற்றப்பட்டும் வஸ்திரங்களோடு கூடியதாக உள்ள கும்பங்களில் கன்னிகையோடு ஏழு தீர்த்தங்களை (கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, ஸரஸ்வதி, ஸிந்து, காவேரி) சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து திசாஹோமம் செய்யவேண்டும்.

9. நதி, குளங்களில் கும்ப ஜலத்தை சேர்க்க வேண்டும். ஐந்து தினங்கள் இதுபோல் செய்ய வேண்டும். பிரதிமைகள் துக்கப்படுவதினால் வேர்வை ஏற்பட்டாலும் அரசனுக்கு மரணம் உண்டாகும்.

10. எல்லா உயிர்களுக்கும் உடனே அழிவு ஏற்படும். ஆகையால் உடனே பரிஹாரம் செய்ய வேண்டும். பிரதிமா சுத்தியை செய்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும்.

11. பிராம்மண போஜனமும் சாந்தி ஹோமமும் தினமும் செய்ய வேண்டும். எவ்வளவு நிதிநிலைமையால் முடியுமோ அந்த நிலையில் அதன் கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும்.

12. ரத்த மழை வர்ஷித்தால் எல்லாப் பிராணிகளுக்கும் அழிவு ஏற்படும். மண்டப பிரகாரங்களில் ரத்தம் விழுந்திருக்கும் இடங்களை அலம்பி விட வேண்டும்.

13. பசும்சாணத்தால்மெழுகி வாஸ்து சாந்தி புண்யாகவாசனம் செய்து தேன் முதலியவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

14. பூகம்பம் ஏற்பட்ட காலத்தில் கூறியுள்ளபடி ஏழு நாட்களோ அல்லது பதினான்கு அல்லது இருபத்தியோரு தினங்களிலோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

15. தேன், பால், நெய் ஆகிய மழைகளினால் அரசாங்கத்திற்கு கெடுதல் உண்டாகும். மண், கல், மாம்ஸம் முதலியவைகளாலோ மழைபொலியுமானால் துன்பம் உண்டாகும்.

16. அந்தந்த திரவ்யங்களினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பூகம்பத்திற்கு கூறியபடி நிறைவான அதிகமான நைவேத்யத்துடன் சிவனை பூஜித்து

17. பிறகு சைவர்களுக்கு ஏழுதினங்கள் நன்கு போஜனம் செய்விக்கவேண்டும். உலகத்தில் மண் மழை முதலிய மழை பெய்தால் ஸ்நபனத்துடன் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

18. சிவலிங்கம், மூர்த்திகள், மரங்களிவைகளில் ரத்தம் உண்டானால் சந்தனம் புஷ்பம் முதலியவைகளினால் இரண்டு வஸ்திரங்களினால் கட்ட வேண்டும்.

19. பிறகு சைவர்களுக்கு போஜனம் செய்வித்து திசாஹோமத்தை செய்ய வேண்டும். வேறு அரசரிடமிருந்து பயத்தை அறிந்து அது நீங்குவதன் பொருட்டு

20. லிங்கம், மூர்த்தி மரம் முதலியவைகளின் அங்கங்களை அஸ்திர மந்திரத்தால் சுத்தம் செய்ய வேண்டும், வாஸ்து சாந்தி செய்து ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

21. சாந்தி கர்மாவிற்கு கூறப்பட்ட தினங்களை அனுசரித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டும். எதிர்பாராதவகையில் அடித்தளத்திலிருந்து ஸ்தூபி வரையிலாக ஆலயம் விழுந்து விட்டால்

22. அதனால் அரசனுக்கு கெடுதி எனப்படும். மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். நித்யம் சிவனுக்கு இயன்ற வரையில் ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும்.

23. சாந்தி ஹோம கணக்குப்படி செய்ய வேண்டும். அனுகர்ம முறைப்படி முதல் அஸ்திவார கல் வைக்கும் நிகழ்ச்சி முதலானதாக செய்ய வேண்டும்.

24. முக்கால், பாதி, கால்பாதி அதற்கு குறை ராகவோ கட்டிடம், பிளவு ஏற்பட்டால் ஏழு, ஐந்து, ஆறு, நான்கு நாட்களில் சமப்படுத்துதல் வேண்டும்.

25. மங்களத்தை விரும்பக் கூடியவர்கள் முன் கூறிய பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். ஸ்தூபி முதலியவைகள் உடைந்துவிட்டால் முன்பு கூறியபடி ஒரே தினத்தில் செய்ய வேண்டும்.

26. விமானத்தில் நாஸிகம் முதலிய அங்கங்கள் நாசமானால் நன்கு முன்போலவே செய்ய வேண்டும், எதிர்பாராது விழுந்து ஆலயத்தின் பின்னமான திசைகளை அனுசரித்து பலன் ஏற்படும்.

27. முன்கூறியபடி பிராயச்சித்தம் அதுபோலவே செய்ய வேண்டும். ஆலயத்திற்கு உள்ளே இருக்கும் தேவதைகளுக்கு பிளவு குறைவு முதலியவை ஏற்பட்டால்

28. குருவானவர் அப்பொழுது அனுகர்ம விதியில் கூறப்பட்ட கார்யத்தை செய்ய வேண்டும். மண்டபங்கள் விழுந்து விட்டால் ஓர் நாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

29. லிங்கத்தோடு கோயில் வேறு இடத்தை அடைந்தால் அரசனுக்கு கெடுதல் ஏற்படும். ஆகையினால் தேசிகோத்தமர் (ஆசார்யன்)

30. ஈசனை சந்தன புஷ்பங்களால் பூஜித்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும். சைவ பிராம்மணர்களின் சாப்பாட்டுடன்

31. முன்பு இருந்த அளவுக்கு ஸமமாக வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பிரகாரத்தோடு கூடிய பாண லிங்கம் முதலியவைகளை ஸ்தாபிக்க வேண்டும்.

32. அல்லது முன்பு இருந்த லிங்கம் இருந்தால் பிரகாரத்தோடு கூடியதாக முன்பு இருந்த இடத்தில் அனுகர்ம விதிப்படி சமமாக நடத்த வேண்டும்.

33. பிரகாரம் மட்டும் குறைவானால் முன்பு இருந்த இடத்திலே செய்ய வேண்டும். வேறு இடத்தை அடைந்த லிங்கத்தை வடக்குப் பகுதியிலோ கிழக்கிலோ வைக்க வேண்டும்.

34. அனுகர்ம முறைப்படி அந்த இடத்திலே கோயிலை கட்ட வேண்டும். ஸ்தல விருக்ஷம் வேறு இடத்தை அடைந்தால் பயிர் நாசம் உண்டாகும்.

35. ஸ்தல மரத்தின் ஜாதியில் உண்டான ஸமித்துக்களினால் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். சைவர்களின் போஜனத்துடன் ஒன்பது நாட்கள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

36. ஸ்தல விருக்ஷத்தின் ஸமீபத்தில் இருக்கின்ற ஸ்வயம்பு முதலிய லிங்கத்தில் தினந்தோறும் ஸ்நபன பூஜை அபிஷேகம் அதிகமான நைவேத்யத்துடன் பாவாடை போடுதல் செய்ய வேண்டும்.

37. அந்த ஜாதியில் உண்டான வேறான மரத்தை முன்பு ஸ்தல வ்ருக்ஷம் இருந்த இடத்தில் ஸ்தாபிக்கவும். ஓர் மரத்தில் வேறு புஷ்பம் உண்டானாலும், வேறு பழங்கள் உண்டானாலும்

38. ஸ்தல விருக்ஷத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பூ, பழம் உண்டானால் ஐந்து ஏழு ஒன்பது தினங்கள் சாந்தி பரிஹாரம் செய்ய வேண்டும்.

39. ஸ்தல விருக்ஷத்தின் அடியில், ஆசார்யன் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். சிவலிங்கம், சகள பிம்பம், பீடம் இவைகளில் உஷ்ணம் ஏற்பட்டால்

40. எல்லா மனிதர்களும் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு கட்டாயம் நாசம் அடைவார்கள். ஸ்நபன பூஜையில் கூறியுள்ளபடி சந்தன குழம்பு இளநீர் இவைகளை வைத்து

41. பஞ்சாம்ருதத்தோடு கூடியதாக பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது பால், தேன், நெய் இவைகளை இரண்டு மரக்கால் அளவு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.   

42. ஆயிரம் முதல் நான்கு வரை அளவுள்ள மரக்கால் முதலிய அளவுகளால் சந்தனம் அகில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவைகளுடன் கூடி

43. சந்தனம் நிறைய கலந்து பூசி அதிகமான புஷ்பங்களை கொண்டும் பூஜிக்க வேண்டும், எவ்வளவு காலத்தில் சூடு உஷ்ணம் குறைகின்றதோ அவ்வளவு காலம் திசாஹோமம் செய்ய வேண்டும்.

44. அமைதியை விரும்பும் மனுஷ்யர்கள் சீத கும்பத்தை செய்ய வேண்டும். மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள் பக்ஷிகள் பாம்புகள்

45. வேறு இனத்தில் உற்பத்தியானால் உலகத்தில் கலக்கம் உண்டாகும். அநேகம் தலை, கைகள், பாதங்கள், மூக்கு தேகம் உடையதுகளாய்

46. தன்னுடைய வர்ணம் இல்லாததும் புருவம் முதலியவைகள் வேற்றுருவம் உள்ளதாகவும் நன்கு வெளிப்படுத்தக்கூடிய நிறங்கள் இல்லாததாகவுமாக குதிரைகள் உண்டானால்

47. அப்படி உண்டானவைகளை விட்டு விட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

48. சைவர்களை நன்கு பூஜித்து முறைப்படி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஐந்து நாள், ஏழுநாள் இந்த பிரகாரம் சைவர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும்.

49. பசு, யானை, குதிரைகளின் பிராயச்சித்தம் ஏற்படுமானால் அதன் இருப்பிடத்தில் தினந்தோறும் வாஸ்து பலி, சாந்தி ஹோமம் பைரவ ஹோமமும் செய்ய வேண்டும்.

50. மலைகளின் சண்டையோ தேசத்தில் யுத்த பயமோ ஏற்பட்டால் முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

51. ஏழுதினம், ஒன்பது தினம் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். லிங்கத்திலோ பிம்பத்திலோ பீடத்திலோ வியர்வை ஏற்பட்டால் ராஜபயம் ஏற்படும்.

52. அஸ்திர மந்திரத்தினால் ஜபித்த ஜலத்தினால் அலம்பி ஏழுதி தினம் சாந்தி செய்ய வேண்டும். லிங்கத்தில் பிம்பத்தில் விமானத்தில் மண்டபத்தில் கோபுரங்களில்

52.5. பரிவார ஆலயத்தில் பிரகாரத்தில் தேவரின் ஆஸ்தான மண்டபத்தில் மற்றும்

53. சபைகளில் இடிவிழுந்தால் அரசனுக்கு வியாதி ஏற்படும் என கூறப்படுகிறது. ஒன்பது வகையினாலான சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

54. அவ்வாறே லிங்கபீடத்திலோ பிம்பத்திலோ இடிவிழுந்தால் திசா ஹோமம் செய்து மஹா ஸ்நபனத்தோடு திசா ஹோமம் செய்ய வேண்டும்.

55. நூற்றி எட்டு கலச ஸ்நபனம், பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்தோடு, தேன், பால், நெய் இவைகளோடு

56. ஆயிரம் முதல் நான்கு வரையில் மரக்கால் அளவு ஈசனை அபிஷேகம் செய்து, பிராம்மண போஜனம் சாந்தி ஹோமம் செய்து அர்ச்சிக்க வேண்டும்.

57. இவ்வாறாக ஏழுதினம் செய்து முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். பிரகாரம் முழுமையும் இடிந்து விட்டால் முன் போலவே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

58. எதிர்பாராத நிலையில் கோயில் விழுமானால் முன்பு எவ்விதம் கூறப்பட்டுள்ளதோ அதன்படியே பிராயச்சித்தம் செய்யவேண்டும், ஆதிசைவர்களே! மண்டபங்களின் பிராயச்சித்தமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

59. தினந்தோறும் சைவ சாஸ்திரங்களை அறிந்த சைவர்களை நன்கு போஜனம் செய்விக்க வேண்டும், அரச அரண்மனை விழுமானால் ஆலயத்தின் பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

60. நிழல் தரும் மரங்கள், அரச மரம் மற்ற தைவீக மரங்கள் விழுமேயானால் ஏழு தினங்கள் சாந்தி மஹா சாந்தியும் செய்ய வேண்டும்.

61. அந்த மரத்தின் முன்னால் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்து அவ்விடத்திலேயே அதன் சமீபத்திலோ அந்த ஜாதி மரத்தை நட வேண்டும்.

62. வீட்டிலோ, கிணற்றிலோ, குளத்திலோ, சாந்தியை ஒருநாள் செய்யவும், யானையானது மதத்தோடு கூடினாலோ வாகனங்களின் நாசம் ஏற்படும்.

63. அந்த வீட்டில் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். பெருங்காற்று உண்டானால் அரசுக்கு கெடுதி உண்டாகும்.

64. ஓர் நாளோ மூன்று நாளோ ஐந்து நாளோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், அக்னியிலிருந்து புகை உண்டானால் யஜமானருக்கு பயம் ஏற்படும்.

65. பஞ்ச கவ்யத்தினால் அங்கு பிரோக்ஷணம் செய்து பூமியை தோண்டி நல்ல மண்ணிலோ ஐந்து வகை மண்ணிணாலோ பூச வேண்டும்.

66. அங்கு புண்யாஹவாசனம் செய்து பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். ஒன்பது வகையான சாந்தி ஹோமங்களை செய்ய வேண்டும்.

67. லிங்கம், பிம்பம், ஆசனம் இவைகளில் புகை காணப்பட்டால் முன்பு கூறியபடி பிராயச்சித்தம் செய்யவும். ஆயிரம் மரக்காலோ, அதில் பாதி அளவாலோ பாலபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

68. அதில் பாதியோ, அதிலும் பாதி அளவோ செய்து அதன் முடிவில் சீத கும்பம் வைக்க வேண்டும், லிங்கம், பிம்பம் பீடம் முதலியவைகள் நிறம் வேறுபாட்டை அடைந்தால்

69. அரசனுக்கு வியாதி என்பதை அறிய வேண்டும். சுத்தமாக அலம்பி, அரிசிமாவு, மண், வில்வம், தர்ப்பங்கள், மஞ்சள்பொடி, நெல்லி முல்லி ஜலத்தினால் அலம்ப வேண்டும்.

70. இதுபோல் உத்தம, மத்யம அதிமமாக சாந்தி செய்ய வேண்டும். சந்தனம், விளாமிச்ச வேர், பச்சகற்பூரம், குங்குமப்பூ அகிலோடு கூடியதாக

71. நிறைந்த சந்தனத்தை சேர்த்து சிரத்தையுடன் சந்தனத்தைப் பூச வேண்டும். சந்தன புஷ்பங்களால் நன்கு பூஜித்து பாபம் இல்லாத் தன்மையை வேண்ட வேண்டும்.

72. சைவர்கள், ஸாமான்யர்களான பிராம்மணர்களுக்கும் நித்யம் போஜனம் செய்விக்க வேண்டும். தானாகவே பேரி சப்தம் ஏற்படுமானால் வைசூரி உண்டாகும்.

73. அஸ்திர மந்திரத்துடன் கூடிய தீர்த்தத்தால் பேரீ முதலியவைகளை பிரோக்ஷித்து சந்தன புஷ்பங்களால் பூஜித்து சாந்தி செய்து தேவதேவனை ஆராதிக்க வேண்டும்.

74. தினமும் (ஒவ்வொரு) சூர்யோதய சமயத்தில் சந்திரனை தர்சித்தல் என்பது எந்த ராஜ்யத்தில் ஏற்படுகின்றனவோ அந்த தேசத்தில் வேறு அரசன் உண்டாவான்.

75. ஒன்பது நாட்கள் முதல் ஒரு ராத்ரி முடிய சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், இரவில் வானவில் தெரிந்தால் வேறு அரசனால் பயம் உண்டாகும்.

76. சுக்ரன் முதலாஜ க்ரஹங்கள் இடம் விட்டு மாறியும் பகலில் நட்சத்திரத்தை கண்டாலும் க்ருஹ நட்சத்திரங்கள் விழுந்தாலும் உலகத்தில் மழை பெய்யாதன்மை உண்டாகும்.

77. வாஹனங்களுக்கு நாசம் ஏற்படும், அதற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

78. ஒன்பது நாள் முதல் ஓர் இரவு முடிய சக்தியை அனுசரித்து சாந்தி செய்ய வேண்டும். அக்னி நட்சத்திரம் விழுந்தால் அகோர மந்திரத்தை முன்னூறு ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும்.

79. ஆறு ஏழு தினங்களுக்கு மேல் இடி விழுந்து கொண்டு இருக்குமானால் அரசுக்கு கெடுதல் உண்டாகும், அதற்காக திசாஹோமம் செய்ய வேண்டும்.

79. ஏழுதினங்கள் ஐந்து தினங்கள் இடி விழுந்ததின எண்ணிக்கை தினங்களில்

80. ராஜ்யத்தின் கெடுதல் போவதற்கு ஸ்நபனத்தோடு திசாஹோமம் செய்ய வேண்டும். ஏழு தினங்கள் இடி விழுந்தால் பால் முதலியவைகளினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

81. சந்திரன் சூர்யனைச் சுற்றி ஐந்து தினங்கள் கோட்டை கட்டினால் அரசன் சத்ருக்களினால் ஜெயிக்கப்படுவான்.

82. உத்தம, மத்யமம் முதலான பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், நெருப்பு பற்றி திக்குகளில் எரியுமானால் உலகத்தில் துர்பிக்ஷமி உண்டாகும்.

83. ஸ்நபன பூஜை செய்து ஈச்வரனுக்கு பால் அபிஷேகம் நடத்த வேண்டும், அதன் முடிவில் சாந்தி ஹோமம் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும்.

84. லிங்கம் முதலியவைகளுக்கு அர்ச்சித்த சந்தனம், புஷ்பம், நிறம் மாறுதல் அடைந்தால் எல்லா வர்ணத்தாருக்கும் வைசூரி ஏற்படும்.

85. சிவனை முறைப்படி பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும், மூன்று தினமோ ஐந்து தினமோ அதிகமான ஹவிஸை நிவேதனம் செய்ய வேண்டும்.

86. எதேச்சையாக போதி மரங்கள் குளிர்ந்த மரங்கள் வேருடன் விழுந்தால் அரசனுக்கு மரணத்தை அறிவிக்கும் வ்யாதி ஏற்படும் என்று அறிய வேண்டும்.

87. உத்தமான சாந்தி ஹோமத்தை செய்து முறைப்படி சிவனைப் பூஜிக்கவும். எந்த இடத்தில் மரம் விழுந்ததோ அந்த இடத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

88. அதன் பக்கத்திலோ அதே இடத்திலோ அதே மரத்தை வைத்து வளர்க்க வேண்டும், அதன் கிளைகள் கீழே விழுந்தால் அரசாங்க குழப்பம் ஏற்படும்.

89. முக்கியமான கிளை உடைந்தால் சாந்தி ஹோமம். நடுக்கிளை உடைந்தால் திசாஹோமமும் செய்ய வேண்டும். ஒரு கிளை உடைந்தால் பூவுலகில் கலகம் ஏற்படும்.

90. உத்தமம், அதமமாக சாந்தி செய்ய வேண்டும். சாந்தி ஹோமம் உத்தம, மத்யம, அதமம் என்று மூன்று வகைகளாகும். பதினான்குநாள் ஒன்பது நாள் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் இவ்வாறாக செய்யலாம்.

91. பெரியோர்களே, மூன்று பக்ஷமாக சாந்தியை மட்டும் செய்யலாம். இதே போல மற்ற முக்கியமான மரங்களுக்கும் செய்ய வேண்டும்.

92. விளக்குவெட்டு பூச்சி முதலியவைகள் உண்டானால் உலகத்தில் துர்பிக்ஷ்ம் உண்டாக்கும். சைவர்களுக்கு சாப்பாட்டோடு மூன்று, ஏழுநாள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

93. மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள், பாம்புகள் இவைகள் பைத்தியங்களாக ஆனால் மூன்று, ஏழுநாட்கள் திசாஹோமம் செய்ய வேண்டும்.

94. யானை, குதிரைக்கு மரணம் ஏற்பட்டால் திசா ஹோமம் மூன்று நாள் செய்ய வேண்டும். அதிக மழை ஏற்பட்டாலும் துர்பிக்ஷம் பூமியில் உண்டாகும்.

95. ஸத்துமாவு ஆயிரம் மரக்கால் எண்ணிக்கையாகவும் அவ்வாறே மஞ்சள் பொடியும் ஆயிரம் மரக்கால் அளவாகவும் அல்லது ஐநூறு இருநூற்றி ஐம்பது அல்லது நூறு மரக்கால் அல்லது ஐம்பது மரக்கால் அளவாகவும்

96. அதில் பாதியோ ஸ்நபன முறைப்படி ஈச்வரனை அபிஷேகம் செய்து மஞ்சளை அரைத்து பச்சை கற்பூரத்தோடு செய்து

97. ஆறு, நான்கு, மூன்று பங்கு அளவு ஆவுடையாரை சுற்றி அல்லது பிம்பத்திலோ சுற்றி அகில் பூசி பச்சைக் கற்பூரம் திரி இவைகளால் பல தீபங்களால் அலங்கரித்து

98. பிறகு வெண் பொங்கல் நிவேதித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். மூன்று ஏழுதினங்களிலோ இதுபோல் செய்ய வேண்டும்.

99. ராஜா, ராணி முக்கிய யானை குதிரை குரு புரோஹிதர் இவர்கள் இறந்தால் ராஜாவுக்கு துன்பம் உண்டாகும்.

100. சாந்தி ஹோமம் ஏழுநாள் செய்து ஈச்வரனை பூஜிக்க வேண்டும். மூன்று ஜந்து தினங்கள் யானை, குதிரை இறந்தால் சாந்தி செய்யவேண்டும்.

101. ம்ருத்யுவை ஜயிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபம் செய்து அந்த தீர்த்தத்தால் அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

102. மீதி தீர்த்தத்தை நீண்ட ஆயுளை விரும்புபவர்க்கு குளிக்கவும், பருகவும் அளிக்கவும். தினந்தோறும் தேவதேவனின் பிரசாதமான ஹோமரøக்ஷயை கொடுக்க வேண்டும்.

103. சைவ சித்தாந்தத்தை கரை கண்ட ஆசார்யர்களால் விபூதி கொண்டு வரப்பட வேண்டும், சிறந்த அரசன் ஏழு தினங்களுக்குள் மேலே கூறப்பட்ட ஆசார்யனை வரிக்க வேண்டும்.

104. குரு, புரோஹிதர் அடுத்து ராணி இவர்களும் யானை குதிரை இவைகளை ராஜாங்கமாக கொண்டு வரப்பட வேண்டும்.

105. கோயிலிலோ, மண்டபம் முதலியவைகளிலோ பிரகாரம் கோபுரம் அல்லது பரிவார ஆலயத்தின் மேலோ ராஜாவின் அரண்மனையிலோ

106. வீடுகளிலோ, வெளி மாடிகளிலோ நாய் அல்லது பூனை முதலியவைகள் அழுதாலோ, ஏறினாலோ

107. இதனால் மனிதர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் நிவ்ருத்திக்கு, அதை விரட்டி அடித்து பிறகு புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.

108. நாய் ஏறினாலோ அழுதாலோ சாந்தி ஹோமத்தையும், பூனை அழுதால் சாந்தி ஹோமத்தையோ அகோர மந்திரத்தை ஜபமோ செய்ய வேண்டும்.

109. நரி ஏறினால் விசேஷமாக சாந்தி செய்யவும், குதிரை லாயத்தில் நெருப்பு உண்டானால் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

110. லிங்கத்திலோ பீடத்திலோ மற்ற தெய்வ விக்ரஹங்களிலோ மின்மினி பூச்சி ஏறினால் அரசனிடமோ அல்லது பட்டமஹிஷிகளிடமோ மற்ற புருஷர்களின் மேல் மின்மினி பூச்சி ஏறினால்

111. அவர்கள் எல்லோருக்கும் வியாதி தோஷமேற்படும். தேவனிடமோவெனில் அரசனுக்கு தோஷமேற்படும். அந்த மின்மினிபூச்சிகளை அடித்து விட்டு, மேற்கூறிய மூர்த்தங்களை அபிஷேகித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

112. பரமேஸ்வரனுக்கு ஸ்நபனத்தை ஒருநாள் அல்லது மூன்று நாள் செய்ய வேண்டும், அரசன் விஷயத்திலும் மனிதர் விஷயத்திலும் அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

113. லிங்கத்தின் அடியிலோ, பீடத்திலோ பிம்பத்திலோ கருவறையிலோ பரிவார பிம்பத்திலோ பிராணிகள் வந்தாலும், வண்டுக்கள் ஈக்கள்

114. அதிகமாக ஏற்பட்டாலும் பூமிக்கு கலக்கம் ஏற்படும், இந்த குற்றத்தைப் போக்க இடத்தை சுத்தி செய்து அஷ்டபந்தனம் முதலியவைகளால் சரிசெய்து உறுதியானதாக ஆக்க வேண்டும்.

115. புண்யாக வாசனம் செய்து முடிவில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். கதவை திறப்பதும் சாத்துவதும் தானாகவே

116. ஏற்படுமானால் அரசுக்கு தீமை ஏற்படும், அது நிவ்ருத்தியாவதற்கு ஏழு தினங்கள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஆகாயத்தில் பலவிதமான கொடிகள் பறப்பதுபோல் தெரிந்தால்

117. ஸூர்யாஸ்தமனத்திலோ அல்லது உதயத்திற்கு முன்போ வெள்ளை, சிவப்பு வர்ண நட்சத்திர பிரகாசம் போல் தெரியுமானாலும்

118. வால் நட்சத்திரம் போன்றவைகள் தெரியுமானாலும் அரசுக்கு பெரிய பயம் ஏற்படும். உத்தம, மத்யம, அதம பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அத்புத சாந்தி விதியாகிற முப்பத்தியொன்றாவது படலமாகும்.