திங்கள், 7 அக்டோபர், 2024

படலம் 6/3...

படலம் 6/3 : மஹோத்ஸவ விதி

201. பிரம்மாவிற்கு பிரியமான பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி, இவைகளை இரண்டாவது நாள் பிரம்மாவிற்கு பலி கொடுக்கப்பட வேண்டும்.

202. நெய்கலந்த வாழைப்பழத்தோடு கூடிய எள் அன்னத்தை பூதங்களின் திருப்திக்காக மூன்றாம் நாளில் பலிகொடுக்க வேண்டும்.

203. மஞ்சள் பொடியோடு கூடியதும், தேங்காயோடு கூடியதுமான எள் அன்னத்தை கந்தர்வர்களின் பிரியத்திற்காக நான்காவதுநாள் பலி கொடுக்க வேண்டும்.

204. தினை கலந்ததும் இந்தர வல்லியோடு கூடியதுமான நெய்யை இந்திரன் பிரியத்திற்காக ஐந்தாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

205. நெய்யோடு கூடியதும் பலாச்சுளைகளோடு கூடியதுமான மூங்கிலரிசி அன்னத்தை ரிஷிகளின் பிரீதிக்காக ஆறாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

206. நெய்யோடும் கூடியதாகவும் கையாந்தரை பழத்தோடு கூடியதுமான சர்க்கரைப் பொங்கலை லட்சுமி பிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

207. உளுந்து சாதம் நெய்யோடும் கூடியதாகவும், ராக்ஷஸர்களின் பிரீதிக்காக எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

208. சுத்தான்னத்தை தயிர், ஸத்துமா, பொறி, புஷ்பம், இவைகளோடு சிவனுடைய பிரீதிக்காக ஒன்பதாவது நாளில் பலி கொடுக்கவேண்டும்.

209. மற்றொரு முறையில் தேவதைகளுக்கு திரவ்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. சுத்தான்னம், தயிர், இட்லி, அப்பம் இவைகளோடும் கூடியதாகவும்

210-211. பழங்களோடும், வெல்லம், இவைகள் சேர்த்து கணபதிக்கு பிரியமானதாக ஆகும். பழங்களோடு மஞ்சள்பொடி, நெய்சாதம், தயிர், கலந்த சத்துமா, எள்சாதம் இவைகள் பூதங்களுக்கு பலியுமாகும்.

212. தாமரை கிழங்கு, தர்பை நுனி, நெய்கலந்த அன்னமிவைகளை வாழைப்பழத்தோடு கூடியதாக ரிஷிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.

213. மின்னிக்கொடி, மஞ்சள், தினையுடன் நெய் சேர்த்து நான்காவது நாள் இந்திரன் திருப்திக்காக பலி கொடுக்கவேண்டும்.

214. பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி இவைகளை ஐந்தாவது நாள் பிரம்மாவின் ப்ரீதிக்காக பலி கொடுக்கவேண்டும்.

215. நெய்யோடு கூடிய சர்க்கரை பொங்கல் கையாந்தரை பழம் இவைகளோடு கூட விஷ்ணு பிரீதிக்காக ஆறாவது நாள் பலிகொடுக்க வேண்டும்.

216. எள்ளு சாதம் நெய் கலந்து தேங்காய், பழம் இவைகளோடு கூட சிவபிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

217. மூங்கிலரிசி அன்னத்தை தயிர் கலந்து வாழை, பலா இவைகளோடு கூட ஈஸ்வர திருப்திக்காக எட்டாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

218. சுத்தான்னம், தயிரோடு கூடி பொறி புஷ்பம் இவைகளோடு கூடியதாக சண்டேசரின் திருப்திக்காக ஒன்பதாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

219. ஒன்பது நாட்களுக்கு திரவ்ய பொருட்கள் சொல்லப்பட்டன. அதற்கு பிறகு பன்னிரெண்டு நாட்களுக்கு சொல்லப்படுகிறது.

220. வெண்பொங்கல் இட்லி, மோதகம், வாழை, வெல்லம், இவைகள் சேர்த்து, கணபதி மந்திரத்தை நினைத்து முதல்நாள் பலி கொடுக்க வேண்டும்.

221. மாம்ஸம் எள், அப்பம், நெய், மீன், செம்பருத்தி புஷ்பம் இவைகளோடு கூடிய சிவப்பு அன்னத்தை

222. பைசாச மந்திரத்தை நினைத்து இரண்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பாயாஸம், ஸத்துமா, புஷ்பம் தாமரை பூ, இவைகளோடு கூட

223. பிரம்ம மந்திரம் சொல்லி மூன்றாவது நாள் பலி கொடுக்கவேண்டும். எள்சாதம், நெய், ஸத்துமா, இட்லி, இவைகளோடு கூட

224. கந்தர்வ மந்திரத்தை சொல்லிக்கொண்டு நான்காவது நாள் கொடுக்கவேண்டும். மின்னல் கொடி, மஞ்சள் சாதம் நெய்யோடும், பொறியோடும் கூட

225. பூத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஐந்தாவது நாள் கொடுக்கவேண்டும். வெல்லம், நெய், தேங்காய் பழம் இவைகளோடு கூட

226. ஸ்கந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஆறாவது நாள் கொடுக்கவேண்டும் தர்பை நுனி, நெய் சுத்தான்னம் தயிரோடு, கூட

227. ரிஷிகளின் மந்திரங்களை சொல்லிக் கொண்டு ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பால்சாதம், அரிசிமாவு கரும்பு துண்டுகளோடு கூட

228. நாக மந்திரங்களை சொல்லிக்கொண்டு எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். தயிர் சாதம், வெல்லம் மாதுளம்பழம், இவைகளை

229. இந்திர மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒன்பதாவது நாள் பலி கொடுக்கவேண்டும். சர்க்கரை பொங்கல் நெய், வாழை, பலா இவைகளோடு கூட

230. விஷ்ணு மந்திரத்தை சொல்லிக்கொண்டு பத்தாவது நாள் பலி கொடுக்கத் தகுந்தது. சிவப்பு அன்னம் மாம்ஸம், அபூபம், (அப்பம்) எள் பொடி இவைகளை

231. ராக்ஷஸ மந்திரத்தை சொல்லிக்கொண்டு பதினோறாவது நாள் பலிகொடுக்க வேண்டும். அரிசி சாதம், தயிர் சேர்த்து வெல்லகட்டிகளுடன்

232. சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு பன்னிரண்டாம்நாள் பலி கொடுக்க வேண்டும். ஏழு, ஐந்து, மூன்று ஓர் இரவு உத்ஸவ காலங்களில்

233. முன்புள்ள தினத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள தினத்தை தினதேவதை திரவ்யங்களாக கிரஹிக்கவேண்டும். முனிவர்களே, தினதிரவ்யம், பலிதிரவ்யம், இரண்டும் இங்கே சொல்லப்பட்டது.

234. முதலில் பிரும்மாதி தேவர்களுக்கு பலி இவ்விதம் உண்டாகும். தின அதிபதி சூர்யன் முதலானவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தை தயிரோடு கூட கொடுக்கப்படவேண்டும்.

235. லோகபாலர்களின் திருப்திக்காக லோக பாலர்களின் மந்திரங்களை சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவாரங்களுக்கு திவஜஸ்தம்பத்திலும், பிரம்மா முதலியவர்களுக்கு

236. பலிகொடுத்துவிட்டு அதன் முடிவில் பலி பீடத்தில் முறையாக பலி கொடுக்கவேண்டும். கொடி முதல் பலி பீடம் வரையில் பலி சொல்லப்படுகிறது.

237. பிரம்மா முதல் பலிபீடம் வரையில் அல்லது இந்திரஸ்தானத்திலிருந்து பீடம் வரையிலோ அந்தந்த தினத்தேவதைகளுக்கு பலிபீடத்திலோ பலி கொடுக்கலாம்.

238. தினதேவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தால் பலி கொடுக்கலாம். தின தேவர்களுக்குமோ லோகேசர்களுக்குமோ பலி கொடுக்க வேண்டும்.

239. தின தேவரின் பலி பொருளால் லோக பாலர்களுக்கும் பலி கொடுக்கலாம். எல்லா தினங்களுக்கும் தினமும் இரண்டு பலி கொடுக்கவேண்டும்.

240. அவைகளுடன் ஓர் வாத்யத்தோடு திக்பலி தினபலிகளை அளித்தல் காலை, மாலை இருவேளையிலும் பலி கொடுக்க வேண்டும்.

241. பலி கொடுக்கும் போதோ, கொடுத்த பிறகோ சுவாமி புறப்பாடு செய்யவேண்டும். அதன் வாஹன முறை சொல்லப்படுகிறது. முதலில் விருஷப வாஹனம், இரண்டாவது சுற்றக்கூடிய யந்திரமாகும்.

242. ஊஞ்சல் அல்லது சிபிகை (பல்லக்கு) மூன்றாவது நாளிலும், குதிரை நான்காவது நாளிலும், ஸிம்மம் ஐந்தாம் நாளிலும், தீபம் ஆறாம் நாளிலும் ஆகும்.

243. ஆடு வாஹநம் ஏழாம் நாளிலும், ரதம் எட்டாம் நாளிலும் இவ்விதம் ஒன்றுக்கொன்று அழகானதாக செய்யவேண்டும்.

244. மூர்த்திகள் அனேக ரூபங்கள் அதன் முடிவில் சொல்லப்பட்டன. அதன் முடிவில் பலி பீடத்தோடு கூட பலிதானம் செய்யவேண்டும்.

245. அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு கூடியதாகவும் பத்து ஆயுதங்களோடு கூடியதாகவும் கோளக (பத்ரலிங்கம்) லிங்கத்தோடு கூடியதாகவும்

246. ரதத்தில் உள்ள கணேசர்களுடனும் முடிவில் நந்திகேஸ்வரர் ரதத்திலோ சிபிகையிலோ எல்லா அலங்காரங்களோடு

247. இவைகளோடு கூட இல்லாமலும் பலி அங்கங்களோடு கூடியதாய் அதன் முடிவில் விருஷபமும் பின்பு நாட்டியத்திற்கு முகரங்கம் என்ற வாத்யத்துடனும்

248. அதன் பின்பு ஸர்வாங்க சுந்தரமான இறைவனின் தேரும் அதன் இரண்டு பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டவர்களும்

249. கையில் சாமரத்தை உடையவர்களுமான எனக்கு பணிவிடை செய்யும் பெண்களால் பிரகாசிக்கின்றதும் நவரத்னங்களினால் பிரகாசிக்கின்ற குடைகளோடு கூடியதும் தொடர்ந்து செல்கின்ற

250. என் அருகிலே உள்ள சிவாச்சார்களோடு சிறப்புற்றும் எனக்கு பின்னால் என் தொண்டில் ஈடுபடுபவர்களான

251. கவனத்தோடு கூடிய பரிசாரகர்களான பக்தர்கள் கூட தாமரை மொட்டுடன் பாசத்தோடு கூடிய கையையுடையவளாலும்

252. புருஷன் போன்ற தோற்றம் கொண்ட கன்னிகையால் என்னுடைய பணிவிடை கன்னிகையுடன்கூடி அழகாக உள்ளதும் என்னுடைய மனைவியான ஈஸ்வரியின் தேருக்கும்

253. அதனருகில் தேவதேவேசி ரதத்திலும் அவ்வாறே அலங்கரிக்கப்பட்டும் அதன் முடிவில் சண்டிகேஸ்வரர் ரதமும் தனியாக அமைக்க.

254. சிவனுக்கு ஏற்பட்ட வேறு பதினாறு பிம்பங்கள் எவையுண்டோ அவையும் பல்வேறு தன்மை கொண்ட சிவபக்தர்கள் உண்டோ அவர்களின் பலவிதமான மஞ்சங்களும்

255. முன்பக்கம் செல்பவையாகவோ பின்பக்கம் வருபவைகளாகவோ செய்து கொண்டு இவைகளில் எது விருப்பமோ அப்படி செல்லலாம். பலிக்கு அங்கமான ரக்ஷõபந்தனமின்றி போகலாம்.

256. பலவாத்யங்களோடு கூடியதாகவும் யானை, குதிரை, ஒட்டகம், இவைகளோடு கூடியதாகவும் வீதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும்

257. ஒவ்வொரு வீடும் பலவித (பொடி) கோலம் சித்ரங்களோடு கூடியதாகவும் மங்கள அங்குரத்தோடும் வர்தனி கும்ப தீர்த்தத்தோடும் கூடியதாகவும்

258. வாழைமரம் பாக்கு, இலை இவைகளோடு கூடியதும் பட்டு வஸ்திரம் இவைகளோடு பிரகாசிப்பதும் தர்பமாலையோடு கூடியதும் முத்துமாலைகளால் பிரகாசிப்பதும்

259. மேலேயும், கீழேயும், ஒவ்வொரு தளத்திலும் தீபதண்டத்தையும், இரவாக இருந்தால் தீபமாலையாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

260. வீட்டினலங்காரம் கூறப்பட்டது. கிருஹம் இல்லாத இடத்திலும் அதன் அலங்காரமானது பலவித கொடிகளோடு கூடியதும் பலவாத்யங்களோடு கூடியதும்

261. பல ராகங்களோடு கூடியதும் பல கூட்டங்களோடு கூடியதும் பல குடைகளோடு கூடியதும் தோகை சாமரத்தோடு கூடியதாக இருப்பதாயும்

262. கொடி ஆலவட்டம், இவைகளோடு கூடியதாகவும் தூபம், தீபம் இவைகளோடு கூடியதாகவும் மற்றும் இரவிலும் பகலிலும் மஹோத்ஸவத்தில் செய்ய வேண்டும்.

263. ரதத்திலோ, பல்லக்கிலோ அல்லது பரிசாரகர் தலையிலோ, ஈசனை எழுந்தருளச் செய்து வலம் வரவேண்டும். இந்த சமயங்களில் தாம்பூலம் பலவித பழங்களையும் கொடுக்கவேண்டும்.

264. திரையிடப்பட்டு பக்ஷணம், அப்பம் முதலியவைகளை கொடுத்து தகுதியுள்ளவை, தகுதியற்றவை என்ற பிரிவில் தக்தம் ஆர்த்ரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு

265. சமைக்கப்பட்டு அனைத்தும் அந்தணர்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நீர்சம்மந்தமான திரவ்யம் சூத்திரர்களாலும் தயாரானதாகவும் தோலுள்ள தோலில்லாத பதார்த்தங்களை நீரீக்ஷணாதி சுத்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

266. சங்கின் ஒலியோடு கூட பாத்யம், ஆசமனம் இவைகளோடு கூடியதும் திரையை எடுத்து நிர்மால்யத்தை நீக்கி

267. எல்லோர்க்கும் பக்தர்களுக்கும், வருபவர்களுக்கும், வந்துள்ள அனைவர்க்கும், எல்லோர்க்கும் அவர்களின் பக்திக்கு ஏற்ற வகையில் பொருளைக் கொடுத்து

268. இறைவனை இளைப்பாற ஆஸ்தான மண்டபம் முதலியவைகளில் எழுந்தருளச் செய்வது, இறைவனுக்கு பாத்யம் முதலியவைகள் கொடுத்து, சாந்திஹோமம் ஸ்நபனம் வைத்து

269. எல்லா தோஷங்களின் நிவிருத்திக்காக தச்சர்களால் ஸ்பர்சிக்கப்பட்ட தேர்முதலிய வாஹனத்தின் தோஷ சாந்திகளாகவும் சண்டாளர் பாணர்களின் திருஷ்டி நிவிருத்திக்காகவும் விசேஷமாக

270. சாந்தி பரிஹாரம், அவசியம் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாந்தி ஹோமம் இல்லாவிட்டாலும் அல்லது முடியாவிட்டாலும் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

271. ஐந்து பிரகாரங்களுக்கு வெளியில் ரத ஓட்டம் நடந்தால் ஸ்நபனம் ஐந்து குருணி (15 மரக்கால் அளவு)

272. நாற்பது மரக்கால் ஜலம் அல்லது அதில் பாதி அல்லது அதில் கால் பகுதி அல்லது கொஞ்சம் குறைவு என்ற முறையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

273. வேட்டையாடுதலும் சிறப்பான ஸ்நபனம் செய்யவேண்டும். அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் இது செய்வது இஷ்டத்தைக் கொடுப்பதாகும் என்று சொல்லப்படுகிறது.

274. காலசந்தி யாகமண்டபம், ரதம் முதலியவைகளில் ஏற்றம் மற்றும் உச்சிகால பூஜை இவை நித்யம் எனப்படும்.

275. ரதத்தில் ஸ்வாமி இருந்தால் தூபம் வரையிலும் ஆலயத்தில் நைவேத்யம் வரையிலும் செய்ய வேண்டும். சிவாலயத்தில் யாத்திரைக்காக ஸ்நபனம் செய்வது பிறகு நைமித்திக பூஜை செய்ய வேண்டும்.

276. நடராஜன் தேர்கால் தர்சனத்திற்கு பிறகு மாலையில் பூஜையும் மறுபடியும் ஹோமம் பிறகு கிராம பிரதட்சிணமும்

277. புறப்பாட்டிற்கான ஸ்நபனம் பூஜை, ஆடல் பாடல் உபசாரம் பிறகு தேவியோடு அருள்பாவித்தல் செய்தல் வேண்டும்.

278. காலத்தில் பதினாறு பங்காக்கப்பட்டதும் அரையாமமாக கூறப்பட்டதுமான காலத்தில் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவனுக்கு அந்த காலங்களின் செயல்கள் கூறப்பட்டன.

279. இவைகள் உரிய காலத்தில் அனுஷ்டித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். மிகவும் முன்னால் செய்தால் சிறப்பு இல்லை. மிகவும் தாமதமாக செய்தாலும் சுபம் இல்லை.

280. ஆகையால் முயற்சியுடன் முன்சொன்ன அதன் காலத்திலேயே செய்வது சிறந்தது. தன்னுடைய காலத்தில் குற்றம் இருக்கும் ஆனால் இவைகள் பிற்காலத்தில் செய்யப்படவேண்டும்.

281. வாஹனங்களில் செல்லும் காலங்களில் பலியிடும் காலத்தில் முன் சமயங்களில் பரிவாரங்களுக்கு சொன்ன முறையில் பலிபீடத்தில் பலி போடவேண்டும்.

282. மண், மரம், அல்லது உலோகம் இவைகளாலான பீடத்திலோ அல்லது பூமியிலேயே சமப்படுத்தி பலியிடலாம். யாக மண்டபத்தில் நுழைதல் அல்லது உள்ளே செல்ல கோயிலில் நுழைதல்

283. அங்கு தாம்பூலம் முதலியவைகள் கொடுத்தாலும் கொடுக்கலாம். உரிய காலத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். செய்யப்படாவிடில்

284. இரவில் நீராஜநம் தூபதீபமுடிவில் செய்ய வேண்டும். வீதிவலம் வரும் சமயத்தின் முடிவில் பெரியதான பலி (ஹவிஸ்) கொடுக்க வேண்டும்.

285. இவ்விதம் தினமும் செய்துவர வேண்டும். அதன் சிறப்பு இப்பொழுது சொல்லப்படுகிறது. கிராமம் முதலியவைகளிலோ அல்லது அதற்கு வெளியில் ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும்.

286. மண்டபம் முதலான இடங்களில் ஸ்வாமியை அழைத்து சென்று பூஜித்து வினோதமான தர்சனம் செய்வித்து வாஹனத்திலோ அல்லது சிரசில் வைத்தவாறோ கிராமபிரதட்சிணம் செய்யவேண்டும்.

287. மழை பெய்தாலும், மழை பெய்யும் என்ற நிலையிலும் ஒரேஇருட்டாக இருந்தாலும் இவ்விதமே வெளிமண்டபத்தில் வந்து செய்யலாம்.

288. மீதமுள்ள பிரக்ஷிணத்திற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். யாகாரம்ப தினத்திலும் தீர்த்தம் கொடுக்கும் தினத்திலும்

289. கிராமத்தை முறையாக சுற்றி வரவும். பிராயச்சித்தம் தேவையில்லை. கிராம பிரதட்சிணம் இல்லாவிடில் திசா ஹோமம் செய்ய வேண்டும்.

290. ஆகாயம் நிர்மலமாகவும் சந்திரனுடன் கூடியதாகவும் இருக்கும்போது அவச்யம் சுவாமி புறப்பாடும் பலிதானமும் செய்யப்படவேண்டும்.

291. தீர்த்தம் கொடுக்கும் நாளிலிருந்து முன்னால் ஐந்தாவது அல்லது நான்காவது நாளில் அந்த வாரத்திலோ எண்ணெய் ஸ்நானம் மஞ்சள் பொடியோடும் செய்யலாம்.

292. தாம்பூலம் முதலியவைகளை இறைவனுக்கும் பக்தர்களுக்கும் முறையாக கொடுக்க வேண்டும். த்வஜாரோஹணம் (கொடியேற்றுதல்) முதலியவைகளிலும் கொடுக்க வேண்டும்.

293. தெய்வத்திற்கு எதிரில் தைலத்தை வைத்து ஸ்தண்டிலத்தில் அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தை சொல்லி வைக்க வேண்டும்.

294. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதயமந்திரத்தினால் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். மூலமந்திரத்தால் நமோந்தமாகச் சொல்லி சிவதத்வம் முதலியவைகளால் புஷ்பத்தோடு கூட எண்ணையை சிரஸில் வைக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடியையும் இடவேண்டும்.

295. நெற்றியிலிருந்து கால், கை வரையிலும் மற்றும் தேவியின் கழுத்து வரையிலும் அல்லது மற்ற முறையிலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு பாசிபயிறு நிவேதனம் செய்ய வேண்டும்.

296. தீர்த்த தினத்திற்கு முன் நாள் அல்லது அதற்கு முன்போ அல்லது முதல் நாள் இரவோ நடராஜப் பெருமாள் வீதிவலம் வருதல் செய்ய வேண்டும்.

297. பூஜையின் பொருட்டு எல்லா அணிகலன்களோடும் கூடிய நடராஜபெருமானுக்கு சிறப்பாக ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும்.

298. ஆகையால் மற்றொரு கூடத்திலோ அல்லது ஆஸ்தான மண்டபத்திலோ எல்லா அலங்காரத்தோடும் கூடியதாக பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

299. அந்த காலத்திலோ அல்லது காலையிலோ தேவதேவனை அழைத்துச் சென்று வினோத தரிசனமும் செய்விக்க வேண்டும்.

300. காலையில் ஸ்நானம் முதலியவைகளை முடித்து விட்டு பலவித அகில் முதலிய வாசனை பொருட்களோடு கூடிய சந்தனத்தாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்க வேண்டும்.

படலம் 6/3 : தொடரும்

கருத்துகள் இல்லை: