திங்கள், 7 அக்டோபர், 2024

படலம் 6/1

 படலம் 6/1 : மஹோத்ஸவ விதி

ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியாகும். அதில் முதலாவதாக த்வஜாரோஹணா வரோஹாந்தகிரியை உத்ஸவம் என உத்ஸவ என உத்ஸவ ஸ்வரூப விவரணம். பிறகு த்வஜாங்குரம் த்வஜாங்கமாகும். ஆகையால் அந்த அங்க கிரியையை த்வஜாரோஹபூர்வம் செய்ய வேண்டும். என த்வஜாங்குரகர்மா சூசிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த நட்சத்ர திதி நிச்சயித்து த்வஜாரோஹணம் ஆரம்பிக்க என கூறி தீர்த்த நட்சத்ர பிரகாரம் கூறப்படுகிறது. பின்பு அதிவாசத்திற்கு முன்பாக கொடி ஏற்றுக என கூறி த்வஜாதிவாஸவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் த்வஜபடலக்ஷணம் த்வஜபடத்தில் விருஷபாதி லேகன பிரகாரம் நயனோன்மீலனம் வ்ருஷபயாக காரணம் கூறப்படுகிறது. அந்த சமயம் காலையில் த்வஜபடம் பூஜித்து அதை திரிசூல ஸஹிதம் தேவேச சஹிதம் அல்லது தேவேச வியுக்தமாகவோ, படிசட்டம், பல்லக்கிலோ ஆரோஹித்து பல ந்ருத்த வாத்யஸஹிதமாகி க்ராம ப்ரக்ஷிணம் செய்து ஆலயப்ரவேசம் செய்க என கூறி பிறகு த்வஜாரோஹ தினத்திலோ, அதிவாஸ தினத்திலோ த்வஜதண்டம் ஸ்தாபிக்க என்று கூறி த்வஜதண்ட ஸ்தாபன பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் த்வஜதண்டப்ரமாணம், த்வஜதண்டவ்ருக்ஷ, த்வஜயஷ்டி, ஸம்பாதநக்ரமம், ஸ்கந்தவலய பிரகாரம், ரஜ்ஜுஸம்பாதந த்வஜதண்ட ஸ்தாபன விஷயம், கிரியா நிரூபணம், த்வஜ தண்ட ஸ்தாபன யோக்யஸ்தான தண்டமூலத்தில் வேதி கல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு த்வஜா ரோஹந விதி பிரதிபாதிக்கப்பட்டு அதில் முடிவாக த்வஜாரோஹணம் முதல் த்வஜாரோஹவஸாநம் வரை ஏககாலம், திவிகாலம், திரிகாலமோ, விருஷபத்தை பூஜிக்க என கூறப்படுகிறது. பிறகு பேரீதாடநவிதி கூறப்படுகிறது.

அங்கு பேரீதாடனம் விதிப்படி ராத்ரியில் செய்ய வேண்டும் பேரீதாடநப்ரகாரம், அக்காலத்தில் வினியோகிக்கிறராகதாளாதி பிரயோஜநம் நிரூபிக்கப்படுகிறது உத்ஸவம், பேரீதாடன பூர்வம், த்வஜ பூர்வம் அங்குரார்ப்பணபூர்வம் என திரிவிதமாகும் என கூறி அன்று மூன்று விதத்திலும் செய்யக் கூடிய கிரியா விசேஷம் கூறப்படுகிறது. யாகசாலை நிர்மாண பிரகாரம், வேதிகா ஸ்தண்டில கல்பனபிரகாரம், கும்பஸ்தாபனவிதி, அஷ்டமங்கல, தசாயுத ஸ்தாபன விதி இவ்வாறான விஷயம் கூறப்படுகிறது. பின்பு ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. ஸூத்ர லக்ஷணம் பஸ்மாதார பாத்ரத்தில் ஸூத்ரந்யாஸ பிரகாரம் தேவதேவியின் ரக்ஷõபந்தனத்தின் விசேஷ நிரூபணம், தசாயுதங்களின் ரக்ஷõபந்தனவிதி இவ்வாறாக விஷயங்கள் சிறப்பாக பிரதிபாதிக்கப்படுகிறது. பிறகு யாகாரம்பத்தின் முன்தினம் அல்லது அந்ததினத்திலோ தீர்த்தாங்குரார்பணம் செய்ய வேண்டுமென தீர்த்தாங்க கர்மா சூசிக்கப்படுகிறது. பிறகு ஹோமவிதிமுடிய செயற்பாலது எனக்கூறி பலிதான விதி விளக்கப்படுகிறது. பின்பு யாகசாலையில் விதிக்கப்பட்ட பூஜாவிதி, ஹோமவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோமமுடிவில் அல்லது ஹோம ஆரம்பத்திலோ ஹவிஸ் கொடுக்க வேண்டுமென ஹவிஸ்தான விதி கூறப்படுகிறது. ஹோம விதி முடிவில் பலிதானம் செயற்பாலது என்று பலிதான விதி விளக்கப்படுகிறது. நவதின உத்ஸவ விஷயத்திலுமே 12 தின உத்ஸவ விஷயத்திலும் தின தேவர்களின் பலிதிரவ்யங்களின் விசேஷ நிரூபணம் காணப்படுகிறது.

முடிவில் காலை மாலை பலிகொடுக்கவும் என்று பலிதான காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிதான முடிவில் பலிகாலத்திலோ பேரயாத்ரை செய்தல் வேண்டுமென கூறி பேரயாத்ரை பிரகாரம் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. அதில் வாஹன விதி பேரக்ரமம் இத்யாதி விஷயம் பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் பிரதி தினம் உத்ஸவ காலத்தில் பகலிலும், இரவிலும் பேரயாத்ரை செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது யாநத்தின் முடிவில் தேவர்க்கு அவசியம் ஸ்நபனம் செய்ய வேண்டுமென கூறப்படுகிறது. மிருக யாத்திரையில் விசேஷமாக செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பின்பு ரதாரோஹவிதியில் விசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. யாககாலத்தில் மழை முதலானவை ஸம்பவித்தால் செய்யக்கூடிய பிராயச்சித்த விதி நிரூபிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த திதியின் முன்பு ஐந்து நான்காம் தினத்தில் தைலாப்யஞ்ஜநம் ஆசரிக்கவும் என கூறி அப்பயஞ்சன விதி கூறுகிறார். பின்பு தீர்த்த திவஸ முன்தினம் செய்யக் கூடிய நடேசப்ரமண விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய திருப்திக்காகசெய்ய வேண்டிய யாத்ராதான விதி நிரூபிக்கப்படுகிறது. ஆசார்ய சிவ வித்யாச தர்சனத்தில் அதோகதி பிராப்தி அடைவான் என்கிறார். பின்பு தீர்த்தோத்ஸவ விதி பிரதிபாதிக்கப்படுகிறது. சூர்ணோத்ஸவ முறையும் விதிக்கப்படுகிறது. பிறகு ஸமுத்ராதிகளான மஹாஜலத்தில் மஹாதீர்த்தம் செய்ய வேண்டும் என மஹாதீர்த்த விதி கூறுகிறார். பிறகு த்வரோஹண நிரூபிக்கப்படுகிறது. பின்பு அங்குரார்ப்பணம். துவஜாரோஹணம், ஹோம ஆரம்பம் நிருத்தமூர்த்தி உத்ஸவம், தீர்த்தம் சுத்த ஸ்நபனம் காலம் ஆகிய சமயங்களில் ஆசார்யனுக்கு வஸ்த்ர ஹேமாங்குலீயம் கொடுத்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆசார்ய தட்சிணை விஷயத்தில் உத்தம, மத்யம கந்ய ஸ்க்ரமம் நிரூபிக்கப்படுகிறது.

பின்பு பக்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. பிறகு ஸம்வத்ஸரோத்ஸவ காலத்தில் மாஸோத்ஸவ காலமேற்பட்டால் மாஸோத்ஸவவிதி பிரகாரம் சுருக்கமாக செய்யுமான பிரதிபாதிக்கப்படுகிறது. ஒரு தின உத்ஸவ விதி சூசிக்கப்படுகிறது. அதில் ஏகாஹோத்ஸவம் கர்த்தா இச்சையால் விருப்பப்பட்ட காலங்களில் செய்ய கூறி க்லுப்தககாலங்கள் கூறப்படுகிறது வாரபூஜை பிரதிபாதிக்கப்படுகின்றது. அதில் பிரதிவாரம் உபயோகிக்க வேண்டிய பத்ரங்கள் ரத்னங்களும் நிரூபிக்கப்படுகிறது. வாரோத்ஸவவம் ஆசரிக்க வேண்டும் என கூறி வாரோத்ஸவ கூறப்படுகிறது. ஸாமாந்யமாக உத்ஸவ விஷயத்தில் த்வஜத்தில் த்வஜமின்றியும் விருஷபத்வஜமே செயற்பாலது. இவ்வாறாக சிவோத்ஸவத்தில் த்வஜாரோஹணம் செய்த சமயத்தில் மற்ற தேவதைகளுக்கு த்வஜா ரோஹணம் செய்யக் கூடாது என்றும் செய்யக்கூடியவை கூடாதவை என விசேஷ விதி கூறப்படுகிறது. இங்கு வத்ஸரம், சவுரம், சாந்திரம், என இரண்டு விதம், அதில் சவுரம் சிரேஷ்டம், சாந்த்ரம்மத்யமம், ஸாவநம் என்ற பிரிவு அதமம் என கூறப்பட்டுள்ளது. உத்ஸவ விஷயத்தில் வேறுவிதமாக பூஜாகிரியை தொகுப்பு பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் த்வஜம் பன்னிரெண்டாவதாண்டின் முடிவில் செயற்பாலது என்கிறார். ஜீர்ணதோஷம் ஏற்பட்டால் வேறு த்வஜம் ஏற்படுத்தவும் என்று கூறியுள்ளது. இவ்வாறாக ஆறாவது படல கருத்து ஆகும்.

1. உரிய முறைப்படி உத்ஸவத்தை பற்றி சொல்லப்போகிறேன். கொடியேற்றுவது முதல் கொடி இறக்குவது வரை உள்ள செயல் உத்ஸவம் ஆகும்.

2. த்வஜ அங்குரம் த்வஜத்திற்கு அங்கமாகும். அந்த அங்குரத்தை கொடியேற்றுவதற்கு முன்பு செய்ய வேண்டும். ஆகையால் அதற்கு முன்பு தீர்த்த நட்சத்திரத்தை நிர்ணயித்து அதற்கு முன் தினத்திலே அங்குரம் செய்ய வேண்டும்.

3. இரட்டைப்படை நாளிலோ அல்லது அந்த நாளிலோ த்வஜாரோஹணம், செய்ய வேண்டும். எல்லா மாத நட்சத்திரம் எல்லா மாதத்திலும் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திலும்

4. அரசர்களின் பிறந்த நாள், நினைவு நாள் பட்டாபிஷேக நட்சத்திரம் மற்றும் மாசிமாத ஷஷ்டி வரையில் மற்ற எல்லா மாதங்களில் பவுர்ணமி வரையில்

5. விஷுவ புண்யகாலம், தட்சிணாயாண உத்தராயண காலம், சந்திர சூர்ய கிரஹண காலத்திலும் தீர்த்த நட்சத்திர தினத்தாலும் ஐந்து நாளிலும் அஷ்டமியிலும் மற்ற தீர்த்தநட்சத்திரம் வரையிலுமோ

6. முப்படை இரட்டைப்படை, அல்லது அந்த நாளிலோ பகலிலோ இரவிலோ, அதிவாஸன பூர்வமாக த்வஜத்தை ஆசார்யன் ஏற்ற வேண்டும்.

7. ஐந்தும் முழம் முதல் பதினான்கு முழம் வரையில் த்வஜத்தின் அளவாகும். இது தலையிலிருந்து அடிபாகம் வரை உள்ள அளவாகும்.

8. இரண்டும் சேர்ந்த அளவு நான்கு முதல் ஏழுவரை ஆகும். அவைகளைப் பிரிந்து ஒரு பாகம் கொடித்துணியின் பரப்பளவு என்று சொல்லப்படுகிறது.

9. அகல அளவின் சமமாகவோ முக்கால் பாகமாகவோ பாதிபாகமாகவோ ஆகும். அகலத்தின் பாதி அளவு தலை பாகமாகும். இரு வாலுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

10. இரண்டு குச்சியுடன் கூடியதாக அதன் நடுவில் விருஷபத்தை எழுத வேண்டும். நிற்பது போலவோ படுத்திருப்பது போலவோ எழுதலாம். ஆயம் என்ற அளவு முதல் சுபம் என்ற அளவு வரையிலுமோ உள்ளதாகி வரையவேண்டும். ஆயம்: கர்த்தாவின் நட்சத்திரம், வாஸ்த்து நட்சத்திரம் ஸ்வாமியின் நட்சத்திரத்தை சார்ந்து கணக்கிடுவதாகும்.

11. விருஷபம் வெள்ளை சிகப்பு நிறமாகவோ மஞ்சள் நிறமுடைய வாலும் சிவப்பு நிறமுள்ள கொம்புகள் குளம்புகள் இவைகளோடு கூடியதாக விருஷபம் இருக்க வேண்டும்.

12. கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வலம் வரும் பொழுது கிராமத்தை எதிர்நோக்கியதாக அமைக்க வேண்டும். ஐந்து முதல் முப்பத்தாறு அளவுள்ள மாத்ராங்குல தன்மையோடு கூடியதும்.

13. ஜாதி அம்சங்களோடு கூடியதும் மூன்று வர்ண கண்களோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் தங்க மாலையோடு கூடியதும் அந்த விருஷபம் இருக்க வேண்டும்.

14. கொடிமரம் மானாங்குலத்தாலும், விருஷபம் மாத்ராங்குலத்தாலும் செய்ய வேண்டும். கொடிபட விருஷபம் பத்மாஸனத்தோடு கூடியதாகவும் பக்கத்தில் இரண்டு தீபத்துடன் கூடியதாகவும்

15. இரண்டு சாமரங்களோடு கூடியதாகவும் குடையின்கீழ் தலை உடையதாகவும் பூர்ண கும்பத்தோடு கூடியதாகவும் அல்லது திரிசூலம் இதனோடு கூடியதாகவும்

16. இவ்விதம் விருஷபத்தை எழுதி கண்திறந்து சிவனுக்கு எதிரிலோ மண்டபத்திலோ அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து

17. இரண்டு ஸ்தண்டிலங்களோடு கூடிய இடத்திலோ மனதைக் கவரும் வேறு இடத்திலோ பாத்திரத்தை முக்காலியின் மேல் உள்ள ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

18. கொடி மற்றும் புதிய குடம், வஸ்த்ரம், கூர்ச்சம், ஸ்வர்ணம் ரத்னம், இவைகளோடு கூடியதும் நூல் சுற்றப்பட்டதும் நடுவில் விருஷபத்தை உடையதாகவும் இருக்க வேண்டும்.

19. அதே போல் வஸ்திரம் கூர்ச்சம் மாவிலை இவைகளோடு கூடிய கலசங்கள் எட்டு திக் பாலகர்களுக்காக விருஷப கும்பத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.

20. ஆதார சக்தியாதி பூஜை செய்ய வேண்டும். விருஷப ஆசனம் கொடுத்து தர்மாதிகளை பூஜை செய்ய வேண்டும். ஓம் ஹாம் வ்ருஷபாஸநாய நம:) என்று கூறி பூஜிக்க வேண்டும்.

21. ஓம் ஹாம்வ்ரும் வ்ருஷப மூர்த்தயே நம: என்ற மந்திரத்தால் ஆவாஹணம் செய்ய வேண்டும்.

22. மேலே பஞ்ச பிரும்மங்களை பூஜித்து மூலமந்திரத்தால் பூஜிக்க வேண்டும். முறைப்படி ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை முறையாக பூஜிக்க வேண்டும்.

23. தத்வ தத்வேச்வரர்களோடும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களோடும் ஆவாஹணம் முதலியவைகளை செய்து விருஷப மூலமந்திரத்தால்

24. விருஷப காயத்திரியாலும் முறையாக நடுவில் பூஜை செய்து சந்தன, புஷ்பங்களால் அர்ச்சித்து சுற்றிலும் லோகபாலகர்களை பூஜை செய்யவேண்டும்.

25. முன்பே அமைக்கப்பட்ட குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களால் பரிசுத்தம் செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

26. அதற்கு நடுவில் விருஷபத்தை ஆவாஹனம் செய்து ஸமித்து, நெய், அன்னம், இவைகளால் 108 ஆஹுதிகள் செய்ய வேண்டும்.

27. தத்வ தத்வேச்வரர்களையும் பூஜை செய்து ஹோமம் செய்து மூலமந்திர ஹோமம் முடிந்தவுடன் எல்லா பலன்களையும் தரக்கூடிய பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.

28. சந்தனம் புஷ்பம், இவைகளால் பூஜை செய்து படத்திலுள்ள விருஷபருக்கும் குடத்திலுள்ள விருஷப தேவருக்கும் வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

29. காலையில் சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜை செய்து முறையாக உபசாரம் செய்து தாம்பூலம் முதலியவைகளை விருஷப தேவர்க்கு ஸமர்ப்பணம் செய்ய வேண்டும்.

30. பூர்ணாஹுதி செய்த பிறகு எல்லா மங்கள வாத்யங்களோடும் நடனம் வாத்யம் இவைகளோடு கூடியதாக

31. கேடயத்திலோ, பல்லக்கிலோ, விருஷப கொடியை (அஸ்த்ரதேவர்) திரிசூலத்தோடும் இறைவனோடும் அல்லது அல்லாமலும்

32. கிராம பிரதட்சிணம் முதலியவைகளை செய்து ஆலயத்தில் பிரவேசம் செய்து எல்லா லக்ஷணங்களோடும் கூடியதாக த்வஜ தண்டத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

33. (கொடிமரத்தை திவாஜாரோஹண தினத்திலோ) அல்லது அதிவாச தினத்திலோ ஆலய உயர சமமாகவோ, அல்லது அதன் இரண்டு, மூன்று மடங்குகளாகவோ ஸ்தாபிக்கவும். ஆறு, ஏழு, எட்டு, முழு அளவுள்ள தண்டம் அதமமாகும்.

34. ஒன்று முதலான தளம் வரையிலோ, கோபுரம் வரையிலோ பதினொன்று இருபத்திரண்டு கை அளவு உயரம் உள்ளதாகவோ நடுநிலையான கொடி அமைத்து கொடியிலும் கடைநிலையான கொடியிலும் தரையில் புதைத்ததாகவோ புதைக்காததாகவோ அமைக்கலாம்.

35. சூலங்களுக்கு கூறிய எல்லா விருக்ஷத்தினாலுமோ பட்டைகளின் ஸாரம் இவைகளையுடைய பாக்கு மரம் முதலியவைகளின் மரங்களாலோ

36-37. புரசு, கருங்காலி, அரசு, ஆல், சந்தனம், முதலியவைகள், சால விருக்ஷம் இலுப்பை, பனை, மா, மூங்கில், ஜாதி மரங்கள், வன்னி, வில்வம் முதலியவைகள்.

38. சம்பகம் ஆகிய இந்த விருக்ஷங்களால் பதினாறு, இருபத்தினான்கு முழ அளவுள்ளதாகவோ ஸ்வபாவமான நீளத்துடன் மரப்பட்டையுடன் கூடியதாகவும்.

39. த்வஜதண்டம் சொல்லப்பட்ட பிறகு, த்வஜயஷ்டி சொல்லப்படுகிறது. இரண்டு பாகம் முதல் ஒன்பதின் ஒரு பங்கு வரையிலாக தண்டத்தின் நீளம் கூறப்படுகிறது.

40. ஒரு அம்சத்தில் த்வஜ யஷ்டியை சிறந்தவர்கள் செய்ய வேண்டும். ஐந்து அங்குலம் முதல் பதினாறு ஒவ்வோர் அங்குலமாக பதினாறு அங்குலம் வரையிலுமாக

41. எவ்வளவு நீள அளவு உள்ளதோ அந்த அளவில் உபதண்டம் கல்பிக்கவும். ஐந்தம்சத்திலிருந்து பன்னிரண்டு அம்சம் வரை அடிபாகத்தின் அளவாகும்.

42. ஒரே அம்சத்தால் குறைவான அளவு தண்டத்தின் நுனியாகும். இந்த அளவே தண்ட நுனியாகும். மூங்கில் மரம், த்வஜ தண்டத்தின் மரங்களால் த்வஜயஷ்டி அமைக்கலாம்.

43. இரண்டையும் சேர்ப்பதற்கு மூன்று (ஸ்கந்தங்களை) வலயங்களை செய்ய வேண்டும். இரண்டு வலையங்கள் பன்னிரண்டு அங்குல அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

44. முப்பத்தாறு மாத்ராங்குல அளவு வரையில் கழுத்து (ஸ்கந்த) வலைய நீளத்தை செய்ய வேண்டும். ஏழு அங்குலம் முதல் இருபத்தினான்கு அங்குலம் வரை உள்ளதாக இருக்கவேண்டும்.

45. ஸ்கந்த விஸ்தாரம் கூறப்பட்டு அதன் நுனி, கழுத்து அடிபாகத்தில் மூன்று பாகமாக பாதியிலோ அல்லது மூன்று பகுதியிலோ முக்கால் பங்காகவோ தர்வீ என்ற கரண்டியைப் போல செய்யலாம்.

46. நான்கு மூன்று, இரண்டு என்ற அங்குலத்தில் இதற்கு அளவு சொல்லப்பட்டது. ஆறு, ஏழு, எட்டு என்ற அளவில் தண்டத்திற்கு மண்ணினாலோ பீடம் செய்யலாம்.

47. மூல அக்ரங்களில் திவாரம் கூடியதும் தண்டயஷ்டிக்கு இணையானதும் பாதி வளைவு உள்ள வலயம் வளையும் உள்ளதாகவும் முடிவில் யஷ்டியின் நுனி பிரதேசத்திலும்

48. தண்ட ஓரத்திலோ அல்லது ஸ்கந்தத்திலோ வலயம் இருக்க வேண்டும். பெரிய பிளவுகளாக மூன்று கிளைகள் போல் முக்கால் பங்கு அளவில் இருக்க வேண்டும்.

49. ஆறு அங்குலம் முதல் ஆறங்குல அதிகமான அளவுள்ளதாக தண்டத்தின் அடியில் உள்ள அளவுள்ளதாகி தண்டத்தின் மேலும் வலயம் இருக்க வேண்டும்.

50. அதில் வலையத்திற்கு மேல் யஷ்டியின் நுனி என்று சொல்லப்படும் பூமியில் புதைக்கும் அளவு தண்ட நுனி நீளமாக இருக்க வேண்டும்.

51. குறைந்த அளவினாலோ பூமியில் ஊன்றக்கூடாது. வல்யம், ஸ்கந்தம் இவைகள் தண்டத்தின் நுனி வரையில் இருக்கும்படி நடவேண்டும்.

52. இருபத்தைந்து மாத்திரைகள் முதல் மூன்று மூன்று அங்குலம் வளர்ச்சியால் இரண்டு மடங்காகவும் செய்யலாம். பூமியின் அளவுவரை இருப்பதாகவும் உள்ள அளவு பூமிக்குள் புதைப்பதின் அளவாகும்.

53. ஒரு அங்குலம் முதல் கால், கால், மாத்ராங்குல அளவாக வளர்ச்சி அடைந்து மூன்று மாத்திரை அங்குலம் வரையில் உள்ள வலயம், மற்றும் கீலம் இவைகளோடு கூடியும்

54. வளையத்தின் இடைவெளியானது வலயத்தின் தகுந்த பலம் உள்ளதாக இருக்கவேண்டும். கயிறு வலயத்தின் நடுவில் இருக்கும், இரண்டங்குலம் முதல் அதிகரிக்கப்பட்ட கயிறு அளவு கனத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

55. த்வஜாரோஹணத்திற்கு ஏற்ற நீளம் உடையதாக கயிறு இருக்க வேண்டும். கொடிப்பட கயிறு பலமான முப்பிரி உள்ளதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுவதற்கு தகுதியானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

56. இவ்விதம் கயிறை தயார்செய்து த்வஜ தண்டத்தை சுத்தி செய்து தர்பை கயிறு, தர்பை, மற்றும் மாலைகளால் மேலிருந்து முறையாக சுற்றவேண்டும்.

57. நூறு தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தை யஷ்டியின் நுனியில் வைக்க வேண்டும். அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து சிவதத்வமாக நியாஸம் செய்ய வேண்டும்.

58. தண்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்று பிரிவிலும் நுனி முதலாக சிவதத்வ தத்வாதி பத்ரயங்களை பூஜிக்க வேண்டும். ஸ்கந்த திரயத்தில் சிவதத்வ தத்வாதிகளை அர்ச்சிக்க வேண்டும். வலயத்தில் சூர்யனை பூஜிக்க வேண்டும்.

59. தண்டநாயகனான சிவனுக்கு கயிறு சக்தியாகும். சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். பிறகு பிரதிஷ்டை ஆரம்பிக்க வேண்டும்.

60. ரத்னந்யாஸம் தண்டமூர்த்தியனடியில் செய்ய வேண்டும். தேவாலயத்திற்கு எதிர்நோக்கியது போல் தங்கம் முதலியவைகள் குண்டுமணி எடை முதல் பவுன் எடை வரை வைக்க வேண்டும். ஆமையையோ, விருஷபத்தையோ பிரதிமையாக தண்டத்தினடியில் வைக்க வேண்டும்.

61. தண்டத்தின் அடிப்பாகத்தில் அந்தந்த மந்திரங்களால் அதோமுகமாக அர்ச்சிக்க வேண்டும். யஷ்டி நுனி பாகத்திலிருக்கும்படி தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

62. தேவாலயத்தை நோக்கி விருஷபத்தின் எதிரிலோ அல்லது பக்கமோ அப்படியே கோபுரத்திற்கும் மஹாமண்டபத்திற்கு அருகிலோ ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

63. உள்ளே உள்ள மண்டலத்திலும் பிரகாரத்தின் ஆதியிலும் கோபுரத்தின் நடுவிலேயும் ஒன்பது, ஐந்து, என்ற முறையில் எட்டு திசையில் அல்லது நாலு திக்குகளில் உள்ளவாறு ஸ்தாபிக்க வேண்டும்.

64. முன் உளது பிரதானமாகும். கொடிகள் எட்டு எண்ணிக்கை உள்ளதாய் இருக்கும். வித்யேஸ்வரர்களாகவும் நான்காக இருப்பின் தத்புருஷர்கள் அதிபதிகளாவர்.

65. தண்டாதிபர்கள் இவ்விதம் சொல்லப்பட்டார்கள். த்வஜபடத்தில் விருஷபம் அதிபதி தண்டத்தின் அடியில் வேதிகை இருக்க வேண்டும். அது பலவிதமாகும்.

66. ஒரு முழம் முதல் மூன்று, மூன்று அங்குலமாக இரண்டு முழம் வரையில் வேதிகை அளவு கூறப்படுகிறது.

67. கொடியின் சமமான உயரமுடையதும் அல்லது முக்கால் பங்கோ எட்டு, ஏழு, ஐந்து, நான்கு மூன்று என்று அம்சங்கள் உடையதாகவும் அல்லது அதில் பாதியாகவோ வேதிகை சொல்லப்பட்டது.

68. மூன்று மேகலைகளோடு கூடியதாக வேதிகை இருக்க வேண்டும். ஒவ்வொரு மேகலையும் எட்டு அங்குல அளவுள்ளதாகவோ அல்லது இரண்டு மூன்று, அங்குலம் குறைந்த அளவுள்ளதாகவோ மேகலை அளவு இருக்கவேண்டும்.

69. மேகலை இல்லாத பீடத்தில் அடியில் உபவேதிகை அமைக்கவேண்டும். இரண்டு அங்குலம் முதல் கால் அங்குலம் அதிகரித்ததாக அல்லது ஆறு அங்குலம் வரை இருக்கலாம்.

70. கால், அல்லது பாதி அல்லது முக்கால் அளவு உயரம் இருக்க வேண்டும். வேதிகைக்கு மேல் நான்கு அங்குல அளவில் தாமரை செய்ய வேண்டும்.

71. ஐந்தங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரையில் தாமரையின் உயரமாகும். விஸ்தாரம் வேதிகைக்கு சமமாகவும் இருக்கவேண்டும்.

72. ஒவ்வொரு அங்குல அளவினால் பதினொன்று அங்குலம் அளவு வரையில் கர்ணிகைகளோடு கூடியதாக பத்மம் இருக்க வேண்டும். பத்ம அமைப்புக் கூறப்பட்டது.

73. கர்ணிகை தண்டத்திலிருந்து ஒரு அடி வெளிவந்ததாக இருக்க வேண்டும். மூன்று அங்குலம் வரையில் இதன் உயரம் இருக்கலாம்.

74. நான்கு அல்லது எட்டு பத்து தளமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் நாற்பட்டையாகவும் தளசுற்று இருக்க வேண்டும்.

75. அப்படியே உபதளங்களோடும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இவ்விதம் பீடத்தை செய்து சில்பியை திருப்தி செய்ய வேண்டும்.

76. புண்யாகவாசனம் செய்து வேதிகையை அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷித்து செய்து தர்பையினால் த்வஜதண்டத்தை சுற்றி (விருஷ கும்பம், படம்,)

77. திரிசூலம் மங்கள அங்குரம் இவைகளோடு கூடிய விருஷபகும்பத்தையும் படத்தையும் பிரதட்சிண முறையாக தண்டத்திற்கு எதிரில் கொண்டு வரவேண்டும்.

78. ஆதாரசக்தி அனந்தன் முதலியவர்களை கூர்மாசனத்தில் பூஜிக்க வேண்டும். கோணங்களின் தர்மம் முதலியவைகளையும் நடுவில், அதர்மம் முதலியவைகளையும் பூஜை செய்ய வேண்டும்.

79. எட்டு தளங்களில் வாமை முதலியவர்களை பூஜிக்க வேண்டும். கர்ணிகையில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும். தண்டத்தில் ஸதாசிவ பெருமானையும் சந்தனம் புஷ்பத்தால் பூஜை செய்யவும்.

80. பாத்யம், அர்க்யம், ஆசமனமாகிய மூன்று வகைகளோடு கூடிய ஸ்நபன முறையில் கூறப்பட்ட முறைப்படி பூஜை செய்து

81. விருஷப படத்தை விருஷப காயத்ரி மந்த்ரம் சொல்லி கயிற்றால் கட்டி சிறிய மணியை கட்டி அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு

82. கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து விருஷபத்தை தியானித்துக் கொண்டு ஆசார்யன் விருஷபத்தின் ஹ்ருதயத்தில் விருஷப பத்திரத்தை வைத்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும்.

83. விருஷப மூலத்தால் ஆசார்யன் விரைவாக கொடியை ஏற்ற வேண்டும். அல்லது முதலில் தொட்டு விட்டு மற்றவரைக் கொண்டு ஏற்றச் சொல்லலாம்.

84. கீழ்நோக்கியதாக விருஷபமிருப்பின் பூமியின் திருப்தியையும் அரசனுக்கு அமைதியையும் கொடி மேல் நோக்கியதாக இருப்பின் தேவர்களின் திருப்திக்காகவும் அரசனின் வெற்றிக்கும் ஆகும்.

85. கொடி செல்லும் திசை மேற்கு, வடக்கு, ஈசானம், கிழக்கு நோக்கி இருக்குமேயானால் நன்மை கிடைக்கும். ÷க்ஷமம், ஆரோக்யம் வெற்றி புஷ்டி இவைகள் முறையான பலன் ஆகும்.

86. அக்னி கோணத்தில் கொடி செல்லுமானால் ஜ்வரம் அல்லது வருத்தம், மரணம், நோய் முதலியன உண்டாகும். வாயு திக்கில் சென்றால் பயம் உண்டாகும். வாலிற்கும் இந்த பலன் உண்டு.

87. கொடி ஏற்றும் பொழுது ஆசார்யன் குறைவினால் தடங்கல் ஏற்படுமானால் அதற்கு சாந்தியை அகோரமந்திரத்தை ஸ்மரித்து செய்ய வேண்டும்.

88. நூற்றெட்டு ஆஹுதி பிரம்ம மந்திரங்களால் ஸமித், நெய், அன்னம், முதலியவைகளோடு ஹோமம் செய்து விருஷப கும்ப தீர்த்தத்தால் தண்டமூலத்தை பிரோக்ஷிக்க வேண்டும்.

89. கிழக்கு முதலான திக்குகளில் உள்ள தளங்களில் அஷ்டவித்யேச்வர்களை பூஜித்து அந்தந்த தீர்த்தங்களால் அந்தந்த தளங்களில் உள்ள வித்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

90. சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். புண்யாகம் முதல் நைவேத்யம் வரையில்

91. எல்லா சிறப்பு வாத்யங்களோடும் கூடியதாகவும் பாடலோடு கூடியதாகவும் நான்கு திக்குகளில் நர்த்தனம் செய்யவும். அதிலும் சிறப்பான சுத்த நர்த்தனம் சொல்லப்படுகிறது.

92. அதன் பிறகு தீர்த்தம் வரையில் (கொடி இறக்கும் வரையில் ஒருகாலம், இரண்டு காலம், மூன்று காலமோ விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும்.

93. எங்கு எந்த நாட்டில் (த்வஜாரோஹணம் செய்யப்படுகிறதோ) த்வஜயஷ்டி வைக்கப்படுகிறதோ அங்கு அகால மரணம் ஏற்படாது. செல்வம் கிடைக்கும் பாபம் செய்கிறவர்களிடத்தும் இவைகள் ஏற்படும்.

94. திருட்டு பயம் முதலியன ஏற்படாது. அவமானம் கலக்கம், ஏற்படாது. மாறுபட்ட கருத்து உடையவர்கள் கூட சமாதானம் அடைவார்கள். நோயாளிகள் கூட குணமாகி விடுவார்கள்.

95. மேகங்கள் தக்க காலத்தில் மழை பொழியும் அரசனுக்கு வெற்றி உண்டாகும். சுபிக்ஷம் ஏற்படும் எல்லா உயிரினங்களும் (எல்லா பாபங்களும்) பசுக்கள் நன்கு பால் கொடுக்கும்.

96. செய்நன்றி மறந்தவன், பிராமணனைக் கொன்றவன் பசுவை கொன்றவன் போன்ற பாபங்களை ஒருவன் செய்திருந்தாலும் கொடியேற்றத்தை பார்ப்பதால் பாபம் நீங்கும். யஜமானுடைய இரண்டு குலமும் நன்கு விளங்க பலன் கொடுக்கும்.

97. இரவில் பேரீதாடனம் (பேரியை அடித்தல்) உரிய முறைப்படி செய்யப்படவேண்டும் தேவனுடைய ஸன்னிதியில் இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்ய வேண்டும்.

98. ஒரு பக்கத்தில் (ஸ்தண்டிலத்தில் ஒன்றில்) சூலத்தையும் மற்றொரு ஸ்தண்டிலத்தில் பேரியை வைக்க வேண்டும். சூலம், பேரி, இவைகளில் ஷடுத்தா ஸனம் பூஜை செய்ய வேண்டும்.

99. கிழக்கு மேற்காகவும் தெற்கு முகமுடையதாகவும் பேரியை வைக்க வேண்டும். புண்யாஹம் செய்து திரிசூலத்தில் தேவதையை பூஜை செய்ய வேண்டும்.

100. மத்ய பத்திரத்தில் ருத்ரன் வலது பத்திரத்தில் பிரம்மா இடது பத்திரத்தில் விஷ்ணு பாலிகையில் பார்வதி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

                                     படலம் 6:தொடரும்

கருத்துகள் இல்லை: