திங்கள், 7 அக்டோபர், 2024

53.ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

53.ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்  [கி.பி. 1417 - 1498]

ஸ்ரீ பூர்ணானந்த சதா சிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், நாகாரண்யம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் "நாகநாதர்". இவர் இந்தியா முழுவதும் பாத யாத்திரை செய்துள்ளார். அவரது நேபாளத்திற்கு விஜய யாத்திரையாக செல்வதற்கு முன் அங்கே கடும் சுபிட்க்ஷமில்லாமல் இருந்துள்ளது. இதை ''புண்ய ஸ்லோக மஞ்ஜரி'' எடுத்துரைக்கிறது. நேபாள மன்னர் இவரைப் பூர்ண கும்ப மரியாதையோடு எதிர் கொண்டு பாத பூஜை செய்திருக்கிறார். அதற்குக் காரணம் நேபாளத்தில் நிலவிய சுபிட்சம் இல்லாத நிலை [துர்ப்பிக்ஷம்], ஸ்ரீ பூர்ணானந்தர் கால் வைத்ததுமே விலகி விட்டதால் அரசரே நேரடியாக வந்து மரியாதை செய்தார்.

இவர் கி.பி 1498 ஆம் ஆண்டு, பிங்கள வருடம், ஆனிமாதம், வளர்பிறை தசமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 81 ஆண்டு காலம் பீடத்தை அலங்கரித்துள்ளார். 



கருத்துகள் இல்லை: