ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

41. ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

41. ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

நாற்பத்து ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 915 - 950]

ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், பீமா நதி தீரத்திலுள்ள தோரூரில் பிறந்தவர். கர்நாடக அந்தணர். தந்தையின் பெயர் ''உமேச பட்டர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘'அப்பண்ணா'’.

அப்போது கன்னோசி நாட்டை [கி.பி.903 - 917] "மகேந்திர பாலன்", "மகிபாலன்" என்னும் சகோதரர்கள் ஆண்டனர். இவர் கன்னோசிக்கு விஜயம் செய்த போது அவரிடம் ராஜ சேகரன் என்னும் புலவரை அறிமுகப் படுத்தினர் மன்னர்கள்.

"ஸ்வாமி''! இவர் பெயர் "ராஜசேகரன்". பெரும் புலவர். குருடராக இருந்தும் இவர் சொல்லி பால இராமாயணம், பிரசண்ட பாண்டவம், கர்ப்பூர வெளி வந்திருக்கின்றன.

தங்களின் தவவலிமையால் பல மஞ்சரி ஆகிய நூல்கள் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கேள்வியுற்றோம்.

''ஞானக்கண் பெற்ற இவர் புறக்கண்களாலும் காணும் படி அருள வேண்டும்” மன்னர்கள் பிரார்த்தித்தனர்.

கமண்டலத்தில் இருந்து  தீர்த்தத்தை அவர் முகத்தில் அடித்து விபூதி இட்டு, ''ஓம் சந்திரசேகராய நம:'' என்று நூற்றி எட்டு முறை ஜபித்து விட்டுக் “கண்ணைத்திற” என்றருளினார் ஆசார்யர்.

அவ்விதமே செய்த ராஜ சேகரன் பார்வை பெற்றார். கூடியிருந்தோர் வியந்தனர்.

இவர் கி.பி.950 ஆம் ஆண்டு, செளம்ய வருடம், ஆவணி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 35 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.... 

 



கருத்துகள் இல்லை: