புதன், 25 செப்டம்பர், 2024

46. ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

46. ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

நாற்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 1061 - 1098]

ஸ்ரீ சாந்த்ரானந்த போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் "சூர்யர்". இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சோமதேவர்".

இந்த ஆச்சார்யாளை ''இரண்டாம் போதர்'' என அழைத்திருக்கின்றனர். முந்தைய குருவுக்கு பணிவிடை செய்த ஒரே சீடர் இவர். குரு சேவையை செய்து கொண்டே எழுதிய நூல் தான் ''கதா சரித்திரம்'’.

இவர் காலத்தில் உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் ''போஜ மஹாராஜன்''. இவர் தீர்த்த யாத்திரை செல்ல முத்துப் பல்லக்குத் தந்திருக்கிறார். அதோடு, இவர் காலத்தில் காஷ்மீர மன்னன் ''கலசன்'', காஞ்சியில் அந்நியர் நுழையாதவாறு தடுக்க  உதவி புரிந்திருக்கிறார்.

இவர் கி.பி. 1098 ஆம் ஆண்டு, ஈஸ்வர வருடம், ஆடி மாதம், அமாவாசை அன்று அருணாசல க்ஷேத்திரத்தில் இவர் சித்தி அடைந்தார்.

இவர் 37 ஆண்டுகள் காஞ்சி பீடத்தை அலங்கராத்துள்ளார். 



கருத்துகள் இல்லை: