இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி;சைவமும் வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி;மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர்.எண்ணற்ற திருக்கோயில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன.அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்குஅளவே இல்லை! காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே சங்கர மடம்தான்.ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார்.பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக்கூறி சமய உணர்வுகளை ஊட்டினார்.இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.
அவரில் துவங்கி இன்று 69-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் 70-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு முன் 68-வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் - கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர்.இந்த புனிதமான மடத்தில் 65-வது பீடாதிபதியாக விளங்கியவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காலம் கி.பி.1851-1890.திருவிடைமருதூரில் அவதரித்தவர்.காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார்.நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான தலம்.இதை இளையாத்தங்குடி என்றும் சொல்கிறார்கள்.புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவு.புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம் திருமயம் கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம்.கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு.பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார்.அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார் எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.
ஸ்ரீநித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்துவிட்டு நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.அதற்கேற்றாற்போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர்.ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும்படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெருமக்கள். அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று நிரந்தரமாகவே அங்கு தங்கிவிட்டார் ஸ்வாமிகள் என்பதுதான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப்போவது இங்கேதான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார்.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அதற்கான ஓர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார் நகரத்தாருக்குச் சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள் அந்த இடத்தில்தான் சமாதி கொண்டுள்ளார்.ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி.காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம்.தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.
தனக்குப் பிறகு ஓர் ஆசார்யரை நியமித்துவிட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள். உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்துவரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமிநாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார்.பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார்.இதையடுத்து, இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள்(மகா பெரியவர் அல்ல). மகாதேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார்.தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே அதை சூசகமாக உணர்ந்துவிட்டார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே!சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தார்.ஓர் இடத்தை கடந்து செல்ல நேரிட்டபோது அங்கேயே அப்படி நின்றார்.
அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது.தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார் செட்டியார் ஓடோடி வந்து ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார்.முட்சொடிகள் புதர்போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா? என்று கேட்டார்.ஸ்வாமிகள்.எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும் ஸ்வாமிகளே வாய்விட்டு ஓரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே.அவருக்குப் போய் செடி,கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா?சிவன் கோயிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம்.தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார்.ஆனால் ஸ்வாமிகள் இந்த இடம்தான் எமக்குத் தேவை.உங்களால் கொடுக்க இயலுமா? என்று கேட்டார்.ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார் தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன்.கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்துக்கொள்ளமுடியவில்லை.ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்கவில்லை.மறுநாள்! ஸ்வாமிகளின் உடல்நலன் லேசாக பாதிக்கப்பட்டது.மூன்றாம் நாள் 20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார்.நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மளமளவெனக் குவிந்தனர்.இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால் ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள் முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர்.குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போதுதான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!
நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர்.காஞ்சி மடத்தில் 63வது ஆசிõரிய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள்.கீர்த்தனங்கள் பாடப்பட்டன.நாம கோஷம் கோரஸாக வெளிப்பட்டது.கயிலாயநாதர் கோயிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில் ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம்தான் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள் பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது. விஜயநகரம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கொல்லங்கோடு,கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து.ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள்.ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன.இறைத்திருப்பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள் பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோயிலாக கட்டி பராமரித்து வருகிறார்கள்.கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார். அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள்.தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர் சிறந்த சிவபக்தர்.திருவிடைமருதூரில் உறையும் மகாலிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மகாலிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மகாலிங்கமும் குழந்தைப்பருவத்திலேயே சிறந்து விளங்கினார்.அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ் கண்களில் தெரிந்த ஒளி எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்!ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார் தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார்.அவருடைய கீர்த்தி திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.
அப்போது காஞ்சி சங்கர மடத்தில், 64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1814-1851)வேதம்,சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மகாலிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது. அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை(தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்) நடத்தினார்.இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும்படி மகாலிங்கத்தைப் பணித்தார்.ஆசார்யர்.அதை சிரமேற்கொண்டு செய்து முடித்தார் மகாலிங்கம்.இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மகாலிங்கத்தின் சாதுர்யம் பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது.அதற்கு ஆசார்யரும் விதிவிலக்கல்ல.எத்தனையோ பண்டிதர்கள்,மன்னர்கள்,பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்துவிட்டானே! பலரும் பிரமிக்கும்படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64வது பீடாதிபதி.அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார்.நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர்.இவரால்தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார்.மகாலிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி சம்மதம் வாங்கினார்.ஒரு சுபதினத்தில் மகாலிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர்.காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார் 64வது பீடாதிபதி. மகாலிங்கத்துக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார்.1851ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் 64வது பீடாதிபதி சமாதி எய்த பின் 65வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மகாலிங்கம் என்கிற மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
புதுப்பெரியவர் வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது. தினமும் நடக்கும் சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தவிர வேத பாராயணங்கள் விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம்தான்.வேள்விப் புகைதான்.புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர்.எத்தனை நாட்களுக்குத்தான் மடத்தில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது எனவே ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள்.மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை,வைத்தீஸ்வரன் கோவில்,சிதம்பரம்,விழுப்புரம் எனக் கிளம்பினார்.செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு.புது ஆசார்யர் வருகிறார் என்றதும் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர்.ஆந்திரப் பிரதேசம் பூரி ஜகந்நாதர் திருக்கோயில் விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது.மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர்.ஆந்திர மன்னர்கள் 3.7.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார் ஸ்வாமிகள்.விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா நகரத்து எல்லையிலேயே யானை குதிரை ராஜபரிவாரம் ஆகியவை புடைசூழ வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மகானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார்.ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி பார்லிகிமேடி பித்தாபுரம்.பொப்பிலி வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார்.கோதாவரி கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து காளஹஸ்தியை அடைந்தார்.காளஹஸ்தி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.
அதன்பின் சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார்.சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து.திருப்பாதிரிப்புலியூர்.தாஞ்சாவூர்,தென் ஆற்காடு,திருச்சி,கோவை,கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள் மகாமக நிகழ்வில் கலந்துகொண்டார்.தனது வாழ்நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார்.சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார்.அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷிவந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார்.சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்தவர்;பழுத்த சிவபக்தர்.தவிர மிராசுதாராகவும் இருந்தார்.தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார்.பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.
மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார்.எனவே கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார்.வெங்கட்ராம ஐயரும் கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி தினமும் சொற்பொழிவாற்றினார்.உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து உபன்யாசத்தைக் கேட்டு வந்தார்.இது வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அவர் சிவபூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது ஸ்வாமிகள் சிவபூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம்.அதோடு உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம் ஸ்வாமிகள் இசையிலும் வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர்.வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார்.ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால் அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர்.அவர்களுள் மைசூர் சதாசிவராவ்,முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர்,திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.ஸ்ரீமகாதேவேந்திரசரஸ்வதி ஸ்வாமியின் திருக்கோயிலைத் தரிசிப்போமா?ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர்.எனவே ஒரு சிவ தலத்துக்கான பலிபீடம்,நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன.கருங்கல் திருப்பணி உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி,நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது. கைலி,சட்டை,பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது.கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது.ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி.அர்த்த மண்டபம் மகா மண்டபம் பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன்.மகா மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள்.இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.
கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம்.சாளக்கிராமத்தால் ஆனது.மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில்தான் தயராகிறது.பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி,வெல்லம்,எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த அதிஷ்டானத் திருக்கோயிலுக்கு1992,2003ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம்,தேன்,பால்,சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது.பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும் சதுர்த்தசியில் விநாயருக்கும் ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன.இங்கு சிறப்பாக நடந்துவரும் வேத பாடசாலையில்.பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள்.வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகுதான்!பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா,ஏகாதசி,துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன்.மற்ற நாட்களில் காவி வஸ்திரம்தான்.இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம்.சுத்தபத்தம் இல்லாமல் உள்ளே போகக்கூடது.ஒருவேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து நமது சுத்தக் குறைவை உணர்த்திவிடும்.ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள் அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும்.ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார்.தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார்.பக்தர்கள் எவருமே இல்லாதபோது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு.அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம்.அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை காஞ்சி மடத்தின் மேற்பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருபவர் சுந்தரேச ஐயர்.ஓய்வு பெற்ற ஆசிரியான இவர்.புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.
அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது.இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம். இதுபோன்ற உயர்வான வில்வ இலைகளை இதுவரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள்.அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு.காஞ்சி மகா பெரியவருக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு.புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும்போதெல்லாம் மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.1925ல் காஞ்சி மகா பெரியவர் இனையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாஸ பூஜை நடத்தி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.தவிர மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம்.வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம்.ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம்.இந்த வில்வ இலைகளைக் கொண்டு ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம்.பாரத தேசமெங்கும் புனித யாத்திரை மேற்கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று இளையாற்றங்குடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.இது அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றேதான் சொல்ல வேண்டும்.நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லையென்றால், வேதமும் இல்லை கோயிலும் இல்லை என்று காஞ்சி மகா பெரியவர் அடிக்கடி சொல்வார். பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 19 அக்டோபர், 2024
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
காஞ்சி மடம்....
தெரியுமா உங்களுக்கு காஞ்சி மடம் ஜயேந்திர பெரியவா நிர்வாகத்தில் இருந்த போது எத்தனையோ சோதனைகளை சந்தித்திருக்கிறது. வருவோர் போவோர் ஜாஸ்தி. செலவு கட்டுக்கடங்காமல் போனதும் உண்டு. ஓஹோ பெரியவா எல்லாரையும் பணம் கேட்பாளோ? அதான் இல்லை. ஒருத்தரையும் ஒரு தம்பிடி கொடு என்று கேட்டதே இல்லை. பணம் ஒரு பொருட்டாக என்னிக்கு பெரியவா மதிச்சிருக்கா. எப்படியோ மடம் நிலைமையை சமாளிச்சுண்டு தான் வந்தது. ஒரு சம்பவம் சொல்றேன். அதை நான் நேரிலே பார்த்ததாக இருக்க அவசியம் இல்லை. யாரோ சொன்னதை திருப்பி கூட சொல்லலாமே. ஏதோ ஒரு கிராமத்தில் பெரியவா கேம்ப். அன்னிக்கு நிலைமை என்னன்னு கேட்டா சுத்தமாக ஒரு சாமானும் இல்லை. அரிசி, பருப்புவகையரா ஒரு குந்து மணி கூட கிடையாது. துடைச்சு விட்டாப் போல ஆயிடுத்து. மட நிர்வாக மேனேஜர், சமையல் கட்டு நிர்வாகி காரியதரிசி எல்லோருக்கும் கவலை. எப்படி வரவாளை எல்லாம் உபசரிக்கிறது. எப்படி நிலைமையை சமாளிக்கிறது. ஒண்ணுமே ஸ்டாக் இல்லை. எப்படியோ அன்னிக்கு ராத்திரியை சமாளிச்சுடலாம். மறுநாள் காலை?? வேறு வழி எதுவும் தோன்றவில்லை. நேராக பெரியவா கிட்ட விஷயத்தை கொண்டு போக வேண்டியது தான். அப்புறம் ஈஸ்வரோ ரக்ஷது. மெதுவாக பெரியவா கிட்டே போய் விஷயத்தை எடுத்து சொன்னார்கள். அவர் எந்த கவலையும் பட்டதாக தெரிய வில்லை.
அவர்களுக்கோ ஆச்சர்யம். ''ஒரு வார்த்தை காஞ்சிபுரம் மடத்துக்கு தெரியப்படுத்தினாலோ, யாராவது ஒன்று இரண்டு பெரிய மனுஷாள், தனவான்களுக்கு சேதி போனாலோ போதுமே நிலைமை சமாளிச்சுடலாமே'' ஆனால் பெரியவரை பொறுத்தவரையில் ஓஹோ அப்படியா சரி, சரி. காமாட்க்ஷி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டார். ஓஹோ அப்படியா என்று ஏதோ ஒரு சாதாரண செய்தியை எடுத்துக் கொள்வது போல இந்த காதிலே வாங்கி அந்த காதுலே விட்டுட்டாரே என்று மற்றவர்களுக்கு கவலையில் ஆழ்ந்தனர். நேரம் ஓடியது இரவு கழிந்தது. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. பெரியவா சம்பந்தப்பட்ட ஒண்ணு ஒண்ணும் அதிசயமும் ஆச்சர்யமும் தானே. சுமார் ஏழுமணி அளவில் சூரியன் உக்ரமா மேலே எகிரிண்டு இருக்கறபோது ஒரு வண்டி எங்கிருந்தோ வந்து அவர்கள் தங்கி இருக்கிற இடத்திலே வாசலிலே நின்றது. வண்டி நிறைய மூட்டை மூட்டையா அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ பெரியவா யார்கிட்டே சொல்லி அரேஞ்ஜ் பண்ணினா?
விஷயம் இது தான். பெரியவா முகாம் போட்டிருந்த ஊருக்கு பக்கத்திலே ஒரு கிராமம். ஒரு பிரபல தனவான் வீட்டிலே ஒரு திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அந்த திருமண விருந்துக்கான எல்லா உணவுப் பொருட்கள் தான் அந்த வண்டி நிறைய. ஆனால் ஏதோ கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் நடக்க முடியாத நிலை.
வாங்கி விட்ட அத்தனை உணவுப் பொருள்களையும் என்ன செய்வது? என்று எந்த தனவான் குடும்பம் யோசித்தது. சின்ன ஊர் எங்கும் அதை பண்டம் மாற்ற முடியாது. செலவு தான் பண்ணியாக வேண்டும். அவர்கள் கூடிப் பேசி என்ன செய்வது என்று யோசித்த போது ஒருவர் சொன்னது அவர்களுக்கு சரியாக பட்டது.
''அடுத்த ஊர் ஏதோ ஒன்றிலே காஞ்சி மடத்திலே இருந்து சுவாமி வந்து முகாம் போட்டிருக்கான்னு கேள்வி பட்டேன். விஷயம் விசாரித்து இது எல்லாத்தையும் அங்கே அனுப்பினா அவாளுக்கு அன்ன தானம் பண்ணுவதற்கு ரொம்ப உபயோகமாகும். நமக்கும் நல்லபடியாக ஒரு காரியம் பண்ண சந்தோஷம் மிஞ்சும் ''என்கிறார்".
''எனக்கு அந்த கிராமம் தெரியும்". பெரியவா முகாம் போட்டிருக்கான்னும் கேள்விப்பட்டேன். நானே கூட போறேன். எனக்கும் பெரியவா தரிசனம் கிடைக்கும்'' என்று அவர்களில் ஒருவர் வண்டியில் ஏறிக்கொண்டார்.
அங்கே எல்லோருக்கும் இது மிக சிறந்த உபாயம் என்று தோன்றவே உடனே விசாரித்து வண்டியை அங்கே அனுப்பியிருக்கிறார்கள்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப் போய், பெரியவரிடம் ஓடிப்போய் எதிரே நின்றார்கள்.
விஷயம் சொன்னார்கள். '' நான் தான் சொன்னேனே. காமாட்க்ஷி பாத்துப்பானு. உங்களுக்கு என் வார்த்தையிலே சந்தேகமோ, இல்லை காமாட்க்ஷி மேலே அத்தனை நம்பிக்கை இல்லையோன்னு தான் தோண்றது என்று சொல்லி விட்டு சிரித்தார். "சரி போங்கோ வேலையை பாருங்கோ''
எந்த ஒரு விஷயத்திழும் சிறிதும் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் ஆச்சர்யங்கள் தானாகவே நிகழ்கின்றன. பெரியவா சந்ம்பந்தப்பட்ட எல்லாமே இப்படித்தான்.
''நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்று பெரியவர்கள் அனுபவ பூர்வமாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். மஹா பெரியவா வார்த்தைகள் அருள்வாக்கு.
Breaking News:
Breaking News:
=============
Hh Sri Vidhusekhara Bharathi swamigal of Tunga Sringeri Mutt is visiting Kanchipuram to celebrate the most auspicious occasion of the Aradhana of all our adi guru Sri Adi Sankaracharya Swamiji.
The date is, as we declared few days back, "Tula Krishna Paksha Ekadashi" (Aippashi Puram) falling on October 27, 2024.
Hh Sri Vidhusekhara Bharathi will arrive in Kanchipuram on October 26 and after staying at Kanchipuram on October 27 and celebrating the Adi Sankara aradhana at Kanchipuram, will leave kanchipuram on October 28.
By their peetadhipathi's arrival and stay at kanchipuram on this auspicious aradhana date of October 27, the Tunga Sringeri has shown their full acknowledgement that it is indeed the day when Sri Adi Sankaracharya attained Moksham by his merging with Goddess Kamakshi.
The Tunga Sringeri has decided to seek blessings from both their Adi Guru Sankaracharya and Goddess Kamakshi by visiting the Kamakshi temple on October 27, 2024 at 5pm.
It is indeed sad that our own acharya has decided to travel out of Kanchipuram on October 27, avoiding being present during the Adi Sankaracharya aradhana date and also avoiding any controversial meeting with the Tunga Sringeri Acharya, during his visit to Kamakshi temple.
The Kanchi Mutt should be reminded that they are the hereditary trustees of the Kamakshi temple and thus should also acknowledge that Aippashi Puram to be the Aradhana date of Sri Adi Sankaracharya and be present at the Kamakshi temple at that time.
In the absence of the Kanchi Shankaracharya during his visit to Kanchipuram, the Tunga Sringeri acharya is also planning a visit to the Kanchi Kamakoti Peetam to have the darshan of the most secretive location of the samadhi (adhistanam) of Sri Adi Sankaracharya and also that of Sri Sureshwaracharya,.
A very serious acknowledgement of our prediction of the samadhi date of Sri Adi Sankaracharya, which We - Kalavai Sri Mahadevendra Saraswati Sankaracharya Trust, are going to celebrate in Mumbai at Sankara Mattham, Matunga alongside 16 Dandi Sanyassis from Haridwar.
- B. Shridhar - Mumbai
முக்கிய செய்திகள்...
முக்கிய செய்திகள்:
=============
துங்கா சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள், நமது ஆதி குருவான ஸ்ரீஆதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆராதனையின் மிக மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடுவதற்காக காஞ்சிபுரம் வருகை தருகிறார்.
தேதி, சில நாட்களுக்கு முன்பு நாங்கள் அறிவித்தபடி, "துலா கிருஷ்ண பக்ஷ ஏகாதசி" (ஐப்பசி புரம்) அக்டோபர் 27, 2024 அன்று வருகிறது.
ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் அக்டோபர் 26 ஆம் தேதி காஞ்சிபுரம் வந்து, அக்டோபர் 27 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தங்கி, காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரர் ஆராதனையைக் கொண்டாடிவிட்டு, அக்டோபர் 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து புறப்படுவார்.
அக்டோபர் 27 ஆம் தேதி இந்த மங்களகரமான ஆராதனை திதியில் காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் பீடாதிபதியின் மூலம், துங்க சிருங்கேரி, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் காமாக்ஷி தேவியுடன் இணைந்து மோக்ஷம் அடைந்த நாள் என்பதைத் தங்கள் முழு ஒப்புதலைக் காட்டியுள்ளனர்.
துங்கா சிருங்கேரி காமாக்ஷி கோவிலுக்கு அக்டோபர் 27, 2024 அன்று மாலை 5 மணிக்கு சென்று தங்கள் ஆதி குரு சங்கராச்சாரியார் மற்றும் காமாக்ஷி ஆகிய இருவரிடமும் ஆசி பெற முடிவு செய்துள்ளது.
காமாட்சி கோவிலுக்கு வருகை தரும் துங்கா சிருங்கேரி ஆச்சாரியாருடன் சர்ச்சைக்குரிய சந்திப்பை தவிர்த்து, அக்டோபர் 27-ம் தேதி காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறி ஆதிசங்கராச்சாரியார் ஆராதனை தினத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க நமது சொந்த ஆச்சாரியார் முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
சிவ அஷ்டோத்தரம்...
ஓம் சிவாய நம:
ஓம் மஹேச்வராய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் பினாகிநே நம:
ஓம் சசிசேகராய நம:
ஓம் வாம தேவாய நம:
ஓம் விரூபாக்ஷயே நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் சூலபாணயே நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் சிபி விஷ்டாய நம:
ஓம் அம்பிகா நாதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் திரிலோகேசாய நம:
ஓம் சிதிகண்டாய நம
ஓம் சிவாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபாலிநே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாக்ஷ்ய நம:
ஓம் காலகாளாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் பீமாய நம:
ஓம் பரசுஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாஸவாஸிநே:
ஓம் கவசிநே நம:
ஓம் கடோராய நம:
ஓம் திரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் அநீச்வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் ஸோம ஸூர்யாக்நி லோசனாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யக்ஞ மயாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்வக்த்ராய நம:
ஓம் ஸதாசிவாய நம:
ஓம் விச்வேச்வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்ய ரேதஸே நம:
ஓம் துர்தர்ஷாய நம:
ஓம் கிரீசாய நம:
ஓம் கிரிசாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்க்காய நம:
ஓம் கிரிதன்வநே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் புராராதயே நம:
ஓம் மகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
ஓம் ஸூக்ஷ்மதனவே நம:
ஓம் ஜகத்வ் யாபினே நம:
ஓம் ஜகத் குரவே நம:
ஓம் வ்யோமகேசாய நம:
ஓம் மஹா ஸேந் ஜநகயா நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபூதயே நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் அஹிர் புதன்யாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்த்தயே நம:
ஓம் அநேகாத்மநே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் சுத்த விக்ரஹாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் கண்டபரசவே நம:
ஓம் அஜாய நம:
ஓம் பாசவிமோசகாய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாயே நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம:
ஓம் பகதேத்ரபிதே நம:
ஓம் தக்ஷ்த்வரஹராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஹஸஸ்ராக்ஷயை நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்க்கப்ரதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேச்வராய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி
திருமீயச்சூர்
திருமீயச்சூர் ஆலயத்தில் உள்ள இடது கரத்தில் கிளியுடன் உள்ள ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்காதேவி சிற்பத்தின் சிறப்பு:
இந்த ஆலயத்தை சுற்றி வலம் வரும்போது மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் வடக்கு தேவகோட்டத்தில் உள்ள துர்க்கையின் இடது கரத்தில் கிளியுடன் உள்ள சிற்பத்தை பார்த்து வியப்பு.
துர்க்கையின் இடது கரத்தில் கிளியுடன் உள்ள சிற்பத்தின் சிறப்பு:
மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு.
இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான்.
மற்றபடி சிலையில் கிளி கிடையாது.
ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு
சில கோயில்களில் தான்.
சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயில்,
தேனி மாவட்டம் சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் ஆகியவற்றிலும், திருமியச்சூரிலும் உள்ள துர்க்கையின் இடது கையிலும் கிளி இருக்கிறது.
மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் வடக்கு கோட்டத்தில் எட்டு கரங்களுடன் இடது கரத்தில் கிளியுடன் உள்ள துர்க்கையின் சிற்பம் உள்ளது.
இந்த துர்க்கையை ஸ்ரீ
“சுகப்பிரம்ம துர்க்கா தேவி’ என்று அழைக்கின்றனர்.
“சுகம்’ என்றால் “கிளி’.
இவள் மகிஷாசுரன் மீது நின்ற கோலத்தில் இருந்தாலும் சாந்த சொரூபிணியாக திகழ்கிறாள்.
ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்கா தேவியின் இடது கையில்
உள்ள இந்தக் கிளி பக்தர்களின் கோரிக்கையை துர்க்கை மூலமாக லலிதாம்பிகையிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்குமாம்.
“சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்ற சொலவடை கூட இதில்
இருந்து தான் பிறந்தது.
இன்றும் கூட தினமும் மாலை வேளையில் மட்டும் ஒரு கிளி இந்த துர்க்கா சன்னதியில் இருந்து லலிதாம்பிகை சன்னதிக்கு சென்று வருவதைக் காணலாம்
என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்காதேவி மிக அழகாக காட்சியளிப்பதோடு தனது இடது கையில் சுகப்பிரம்மம் (கிளி) எந்தியிருப்பது மிகசிறப்பு.
நமது கோரிக்கைகளை
இந்த ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்கா தேவியிடம் மனம்
விட்டு தெரிவித்தால்
ஸ்ரீ சுகப்பிரம்ம
துர்க்காதேவியின் இடது கையிலுள்ள கிளி நமக்காக
ஸ்ரீ லலிதா அம்பாளிடம் தூது செல்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
நாம் வழிபடும்போது நமது பிராப்தத்திற்கு ஏற்ப ஒரு கிளி மேகநாதர் கருவறை விமான கோபுரத்தின்மீது அமர்ந்தும்
பின்பு ஸ்ரீ லலிதா அம்பாள் சன்னதி கொடிமரத்தில் அமர்ந்து செல்லும் காட்சி இன்றும் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றார்கள்.
மேகநாதர் கருவறை தேவகோட்டத்தில் வடக்கு கோட்டத்தில் எட்டு கரங்களுடன் இடது கரத்தில் கிளியுடன்
உள்ள ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்கா தேவி சிற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையின் படம்...
ஐப்பசி ஸ்பெஷல்! துலா ஸ்நானம்!
ஐப்பசி ஸ்பெஷல்! துலா ஸ்நானம்!
ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு ‘துலா [தராசு] மாதம் என்று பெயர். ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மஹா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.
துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹா விஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள்மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதே போல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.
ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும் ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மஹா விஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நேரத்திற்குமுன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி முப்பதாம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
‘ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீ மஹா விஷ்ணு "நீ காவேரி நதியில் நீராடு உன் பாவம் நீங்கும்" என்றார்.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.
அதன் படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது
துலா மாதத்தில் காவிரியில் ஒரு முறை நீராடுபவன் ஸ்ரீமன் நாராயணனாக மாறுகிறான். மற்ற விரதங்களில் ஏதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால், காவிரி துலா ஸ்நானத்திற்கு அப்படி எதுவுமில்லை. மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில் காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும் முன்னோர்களின் பாபங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே காவிரியை நினைத்தாலும் சிறப்பைக் கேட்டாலும் பாபங்கள் விலகும் என்றார் பிரம்மா நதி தேவதைகளிடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி நீர்க்கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள். காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம். நதி தேவதைகளும்,
தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும் அந்தக் கறைகள் அனைத்தையும் காவேரி போக்கிக்கொள்ள திருமங்கலக்குடி திருத்தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தர வாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து காவிரி போக்கிக்கொள்கிறாள் என்பது ஐதீகம்.
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள் புரியும் ரங்கநாதருக்கு ஐப்பசியில் தங்கக் குடங்களில் ஸ்ரீரங்கத்தின் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரி நதிக்கரைப் படித்துறையிலிருந்து புனிதத் தீர்த்தத்தை சேகரித்து யானை மீது எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். மற்ற மாதங்களில் ஸ்ரீ ரங்கத்தின் வடக்கில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வார்கள்.
துலா காவேரி மஹாத்மியம்:
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை தேவ வன்மன் என்ற அரசனுக்கு சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி - பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்த போது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன், மேலும் கூறலானார்:
"கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும் தரிசித்தாலும் அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார். அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை, முனிவர்கள், பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.
நாத சந்மா என்பவன் பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள் தங்கள் பத்திநிகளுடனும் புத்திரர்களுடனும் தங்கி ஹோமாக்னி செய்து பலவித தானங்களை செய்து வரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால் காவேரி மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று அனவித்யை கேட்க நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.
காவிரி உருவான கதை:
காவேரன் என்ற அரசன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லா விட்டாலும் ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண் தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர் அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து லோபா முத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்து கொண்டவுடன் அவள் விரும்பியபடியே நதி ரூபமாகி பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு அகஸ்த்ய ரிஷி அருளினார்.
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால் தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். துலா மாதத்தில் காவேரியில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.
ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் இறைவன் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது. தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்.
அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது. முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மஹா விஷ்ணுவிற்கு பற்றிய #வீரஹத்தி தோஷம் போக்க காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்கா தேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம். ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன் அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும். துலா காவேரி ஸ்நானம் செய்யும் முன் தகுந்த புரோஹிதர்களை கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துக்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி துலா ஸ்நானம் செய்வது உசிதம்.
"கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு"
ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று,சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு,கரையான் புற்றையும் சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
நான்காம் படியில் நண்டு, வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
ஐந்தாம் படியில் மிருகங்கள்,பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது. வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்) சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
வெள்ளி, 18 அக்டோபர், 2024
56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
56. ஸ்ரீ சர்வஜ்ஞ சதாசிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
ஐம்பத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 1524 - 1539]
ஸ்ரீ சர்வஜ்ஞ சதா சிவ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், வட பெண்ணாற்றங்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் ''சித்ருதசிக் கண்ணா'' என்பவரின் மகனாக பிறந்தார். இவர் இராமநாதபுரம் மன்னரான சேதுபதி மரபினருக்குக் குருவாக விளங்கியவர்.
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் திருமரபினர் ஸித்தி எய்திய விபரங்களைக் கூறும் புண்யஸ்லோக மஞ்சரி, ஸ்வஸ்த்ம நிரூபணம் என்ற நூல்களை இயற்றி உள்ளார்.
இவர் காலத்தில் 03-05-1528 விரோதி வருடம், வைகாசி மாதம் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் "உதயம் பாக்கம்" என்ற கிராமத்தை ஸ்ரீமத் ஆசார்யாளுக்கு அர்ப்பணம் செய்ததாக செப்பேடு கூறுகின்றது.
அந்த செப்பேடு பூஜ்ய ஸ்ரீ ஆசார்யரைப் புகழ்ந்து போற்றுகிறது.
இவர் கி.பி. 1539 ஆம் ஆண்டு, விளம்பி வருடம், சித்திரை மாதம், வளர்பிறை அஷ்டமி திதி அன்று ராமேஸ்வரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!
ஏழு நாட்களில் அர்ஜூனின் பேரன் பரீட்சித்து மன்னருக்கு பாகவத சப்தாஹம் உபதேசித்து மோட்சம் கிடைக்க செய்த ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!
சுகஹா என்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள்!
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி பிறப்பு நிகழ்வு ஒன்று...
ஒரு முறை ஜனன - மரண ரகசியங்களை உமையன்னைக்கு ஈசன் சொல்லிக் கொண்டிருந்த போது உமை கண்கள் அசர,
அருகே மரத்தில் அமர்ந்திருந்த கிளிக்குஞ்சு ஈசனின் உபதேசத்தை 'ம்' கொட்டிக் கேட்டதாம்.
'ம்' கொட்டியது கிளி என்பதை அறிந்த ஈசன் அதைப் பிடிக்க முற்பட அது வியாசரின் மனைவியின் கர்ப்பத்தில் அடைக்கலமானது. ஈசன் 'கிளியே வெளியே வா' என அழைக்க கிளி முகத்தோடு சுகர் தோன்றினார். தான் உபதேசித்த ஜனன - மரண சிவ ரகசியத்தை எவரிடமும் கூறாமல் பிரம்மமாக இரு. ''உன் ஜன்ம தினத்தன்று என்னையும் உன்னையும் வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும்'' என ஆசி வழங்கினார் ஈசன்.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி பிறப்பு நிகழ்வு இரண்டு...
ஸ்ரீ கிருஷ்ணர் முனிகளுள் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார். மஹாபாரதக் கதை மற்றும் நம் தமிழ் கடவுள் பற்றி கந்த புராணம் எழுதிய வியாசர் அவர்களின் மகன் தான் ஸ்ரீ சுகப் பிரம்மம். கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர் அவளிடம் மனதைப் பறி கொடுத்தார்.
அவரிடம் இருந்து தப்பிக்க கிருதாசீ கிளியாக மாறினாள்.
ஆனாலும் முனிவரின் தபோ பலத்தால் கிருதாசீ கர்ப்பம் தரித்தாள்... ரிஷியின் கர்ப்பம் ராத்தங்காது என்பதால் உடனடியாக அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான்.
குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. கிளியாக மாறிய தனது தாய் கிருதாசியின் சாயலான கிளி வடிவத்தை முகத்தில் தாங்கி பிறந்தவர். பொதுவாக தாயின் சாயலைப் பெற்ற மகனும், தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்ட சாலிகள் என்பார்கள்.
எனவே சுகர் உலகிலேயே மிகச் சிறந்த ஞானவான் என்ற தகுதியைப் பெற்ற அதிர்ஷ்ட சாலி தான். இவர் தனது அதிர்ஷ்டத்தைக் கூட உணர வேண்டிய அவசியமில்லாத பிரம்ம ஞானி. வடமொழியில் சுகா என்றால் கிளி என்ற அர்த்தம். அதனால் கிளி முகம் கொண்டு பிறந்த அந்த குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர்.
குழந்தையை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இயலாததால், வியாசரிடமே கொடுத்து விட்டாள் தேவ மங்கை கிருதாசி. வியாசரும் அக்குழந்தையைப் புனித நீராட்ட, சிறுவனாக உருமாறிய சுகர் பிறப்பிலேயே ஞானியாக
விளங்கினார். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர்.
சுகருக்கு உரிய வயது வந்ததும் உபநயனம் செய்வித்தனர்.
பால பிரம்மச்சாரியான சுகருக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து வந்து விழுந்தன. வியாசர் மகா பாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு
உபதேசித்தார். இவரது குரு பிரகஸ்பதி ஆவார். குரு பிரகஸ்பதியிடம் கற்க வேண்டியது அனைத்தையும் கற்றார்.
மிகச் சிறந்த ஞானமும் அடக்கமும் பெற்றிருந்த போதிலும் சுகர், தம்மை ஞான மில்லாத ஒருவராகவே நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் ஸ்ரீ வியாசர் சுகப்பிரம்மா இங்கே வா என்றார்.
வருகிறேன் என்று சுகப்பிரம்மர் மட்டுமல்ல அங்கே நின்ற மரம் மட்டை செடி கொடி எல்லாம் வருகிறேன் என்றது. இதை கண்டு சுகப்பிரம்மருக்கு பெருமை பிடிபடவில்லை! அப்படி என்றால் அனைத்திலும் நான் இருக்கிறேனா? நான் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தாரோ இல்லையோ அவருடைய ஞானம் அக்கணமே அவரை விட்டுப் போய் விட்டது.
உடனே ஸ்ரீ வியாசர் மகனிடம் சுகா தற்பெருமையால் உனது ஞானம் அனைத்தையும் இழந்தாய். நீ உடனே சென்று ஜனகரை பார்த்து உபதேசம் பெற்று வா என்று கூறினார். சுகரும் உடனே தந்தை சொல் கேட்டு ஜனகரை பார்க்க மிதிலைக்கு சென்றார்.
மகா ராஜாவாக இருந்தும் ஜனகர் தாமரை இலைத் தண்ணீர் போல் ராஜாங்கத்தில் குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்தார். அவரை சந்திப்பதற்காக வாயிற்காப்போனிடம் அனுமதி கேட்டார் .
அதற்கு அவன் சுவாமி இங்கே நில்லுங்கள் நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு உடனே சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உன் மன்னனிடம் சொல் என்று கூறினார். அவனும் உடனே சென்று மன்னனிடம் அவர் கூறிய படியே கூறினான்.
உடனே மன்னர் ஜனகர் அவர் நாலைந்து பேர்களுடன் வந்து இருக்கிறார். அவரை மட்டும் தனியாக வரச்சொல் என்று கூறினார். ஏன் மன்னர் இவ்வாறு கூறினார்? என்று குழம்பிப் போய் மன்னர் கூறியதை வந்து அப்படியே சுகப்பிரம்மரிடம் கூறினான்.
அவர் உடனே சரி சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல் என்று கூற காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல இன்னும் ஒரு ஆள் கூட இருக்கிறார், அவரையும் விட்டு விட்டு வரச் சொல் என்று கூறினார். இன்னுமொருவர் தங்களுடன் உள்ளாராம். அவரையும் விட்டு விட்டு வர சொன்னார் மன்னர் என்று சுக முனிவரிடம் கூறினார்.
சரியப்பா, சுகப்பிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல் என்று சொன்னதும் அவனும் அவ்வாறு சொல்ல அவரை உடனே உள்ளே வரச் சொல் என்று ஜனக மகாராஜா அனுமதி கொடுத்தார். அவரைக் கண்டதும் ஜனக மகாராஜா அவரிடம் பேச வில்லை. எழுந்து அவருக்கு ஆசனம் வழங்க வில்லை .
அதற்கு பதிலாக அங்குள்ள மொட்டை அடித்த தலையுடன் உள்ள ஒருவனை அழைத்து அவனை அமர வைத்து அவன் தலையில் ஒரு தட்டை வைத்து தட்டில் நிறைய எண்ணையை ஊற்றினார். டேய்! நீ உடனே புறப்பட்டு ரத வீதிகள் அனைத்தையும் சுற்றி விட்டு இங்குவா. தட்டு கீழே விழக் கூடாது. மேலும் தட்டிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் உன் தலையை வாங்கி விடுவேன் என்று எச்சரித்தார்.
அவனும் கிளம்பினான். அவன் வேறு எதிலும் கவனம் செலுத்த வில்லை. தனது தலையிலிருந்த தட்டிலும் எண்ணெயுமே
கவனம் செலுத்தி அனைத்து வீதிகளையும் சுற்றி விட்டு மன்னனிடம் வந்தான். மன்னனும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் இருப்பதைக் கண்டு அவனை மன்னிக்க அவன் மகிழ்ச்சியுடன் சென்றான்.
அப்போதும் அவர் சுகரிடம் பேசவில்லை. ஆனால் இதை அனைத்தையும் நன்கு கவனித்துக் கொண்டிருந்த சுகர்
அதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டார். ஒரு மனிதனுக்கு உயிர் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், நாமும் மனதை அடக்கி கடவுளின் மீது மட்டும் பக்தியை செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும்.
மீண்டும் ஞானம் பிறக்கும் என்ற உபதேசத்தை ஜனகர் உபதேசிக்காமலேயே அவரிடம் பெற்று அங்கிருந்து மிக மகிழ்ச்சியுடன் கிளம்பினார். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவ வாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார்.
ஒரு நதிக்கரை வழியே சுகப்பிரம்மர் முன்னே செல்ல சிறிது இடை வெளியில் வியாசர் சென்ற போது தெய்வப் பெண்கள் நதியில் நீராடி கொண்டு இருந்தனர். சுகப்பிரம்மர் வந்த போது அவர்கள் அவரை கண்டு கொள்ளாமல் அரைகுறை ஆடையுடன் குளித்தபடி இருந்தனர். சிறிது நேரத்தில் வயதான வியாசர் வருவதை பார்த்தவுடன் நாணப்பட்டு அரக்க, பரக்க தங்கள்
ஆடைகளை எடுத்து தங்களது உடலை மூடினர். ஆனால் அவர்கள் வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை.
உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார். அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன. உமக்கு அப்படி இல்லையே! ஆண், பெண் என்னும் வேறுபாடுகள் உமக்கு தெரிகின்றன. அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்க முற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒரு லட்சம் பேர் சாப்பிட்டால் அதை தெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒரு நாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒரு லட்சம் தானே கணக்கு! இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே அதிசயம்! வேகம் தாளாமல் மணி
அறுந்து விழுந்து விட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை.
அனைவரும் திகைத்து நின்ற வேளையில், பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் இலையில் இருந்த ஒரு சில பருக்கைகளைக் கொத்தி விட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. எனவே ஸ்ரீ சுகப்பிரம்மரின் பெயரால் அன்னதானம் நடத்தினால் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரை. இவள் கருவுற்றாள். இவளுக்கு ஒர் ஆண் குழந்தை பிறக்கிறது. அஸ்வத்தாமன் சாபத்தால் இறந்து பிறந்த இந்தக் குழந்தையை உயிர்ப்பித்துப் பாண்டவ வம்சத்தைக் காத்தவர் கிருஷ்ணர். அப்படி இறந்து பிறந்து ஸ்ரீ கிருஷணரால் உயிப்பிக்கபட்ட குழந்தையான அர்ச்சுனரின் பேரன்
பரீட்சித்து மன்னர். பரீட்சித்து பின்னாளில் ஹஸ்தினாபுரத்து மகா ராஜாவாக ஆன போது வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார்.
அங்கு ஒரு முனிவர் குடிலொன்றைக் கண்டார். தாகத்திற்கு நீர் கேட்டு நின்றார். தவ சிரேஷ்ட்டரான சமீகர் முனிவர் காதில் அவரது குரல் விழவில்லை. கோபமுற்ற மன்னர் பரீட்சித்து, அருகில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவருக்கு மாலையாக்கினார். இதனைக் கண்ட முனிவரின் மகன் சிரிங்கி, மன்னர் பரீட்சிதது ஏழே நாட்களில் பாம்பு கடித்து இறந்து விடுவார் எனச் சாபமிடுகிறார். சாபம் பற்றி தெரிந்து கொண்ட பரீட்சித்து, உடனடியாகத் தன் மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தார்.
பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு கங்கைக் கரையில் வடக்கு முகமாக உட்கார்ந்து தவம் புரிந்து உயிர் விட ஏற்பாடு செய்தார். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினார். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவ பூஜை செய்த படியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினார். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கூறும் பாகவதம் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகப்பிரம்மர் அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார்.
பரீஷத்து ராஜாவும், பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டார்.
சாபத்தின் படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க மோட்சம் அடைந்தார். இந்த நிகழ்வின் காரணமாகவே ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்னியாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. ஸ்ரீ ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி
ரூபத்தில் ரங்க நாதரிடம் அனுப்பியதாகவும் தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்மம் இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. இங்கு ஆண்டாள் உலா வரும் போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படுகிறது.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீ மீனாட்சிக்கு வலத் தோளில் கிளி அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீ ஆண்டாளுக்கு இடது தோளில் கிளி. இந்த கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு, மாதுளம்பூ, மரவல்லி இலை, கிளியின் உடல், இறக்கைகள், நந்தியாவட்டை இலையும், பனை ஓலையும் கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் கட்டுவதற்கு வாழை நார், கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் போன்றவற்றை பயன் படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.
ஸ்ரீ சுகப்பிரம்ம முனிவரது காயத்ரி மந்திரம்!
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் எப்போதும் சுகமாக இருந்ததால் இவர் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப் பட்டார். சுகப்பிரம்ம மகரிஷி அருளியது தான் "ஸ்ரீமத் பாகவதம்" என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன்.
இவரது மற்றொரு சீடர் கௌடபாதர்,அவரது சீடர் கோவிந்த
பகவத் பாதர், அவரது நேர் சீடர் தான் ஆதி சங்கரர். இதிலிருந்து ஸ்ரீ சுகப்பிரம்மரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பில்லாலி
தொட்டியில் சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடம் உள்ளது. இங்கு சுகப்பிரம்மருக்கு தனி சன்னதி உண்டு.
சிறப்பு தகவல் : சென்னையில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம்!
சுகப்பிரம்ம மகரிஷியை போற்றி, அவரை ஆராதிப்பதற்க் என்றே சென்னை தி.நகரில் சுகப்ரம்ம மகரிஷி ஆஸ்ரமம் ஒன்று உள்ளது. குமார் குருஜி என்பவர் இதை நிர்வகித்து வருகிறார். சுகப்ரம்ம – மார்கண்டேய ஜீவ நாடி ஜோதிடம் இங்கு மிகவும் பிரபலம். இவருக்கு உமாமகேசனார் ஓலைச்சுவடி ஏடுகளும், சுகர் மகரிஷி ஓலைச்சுவடி ஏடுகளும் ஸ்ரீ ஜெய காந்தி நாயுடு என்பவர் மூலம் கிடைத்துள்ளன.
ஜெயகாந்தி நாயுடு கடலூருக்கு அருகே உள்ள திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்ததான '‘தொட்டிப்பதி” என்னும் ஊரைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இயற் பெயர் ராமசாமி. இவருக்குப் பரம்பரைச் சொத்தாக உமாமகேசனார் ஏடுகளும், சுகர் மகரிஷி ஏடுகளும் கிடைத்தன. இறை அருளால் அவரும் மக்களுக்கு அதனை வாசித்து நல்வழி காட்டி வந்தார்.
பின்னர் ஸ்ரீ குமாரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்ட ஜெய காந்தி நாயுடு அவருக்கு ”ஸ்ரீ விஜயப் பிரம்ம ஸ்ரீகாந்தி” என்ற பட்டத்தைச் சூட்டினார். மற்ற நாடி ஜோதிடம் போலல்லாமல் இவர்கள் பார்க்கும் முறையே வேறு. ஆனால் தற்போது நாடி ஜோதிடம் பார்ப்பது நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆசிரமம் மக்களுக்கு சோதிடப் பலன்களை மட்டுமல்லாது, தேவையான
மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி, ஏழை எளியோருக்கு உதவி வருகிறது. மற்றும் பல்வேறு அறப்பணிகளையும், ஆன்மீக, ஆலயப் பணிகளையும் ‘சுகர் மார்க்கண்டேயன்
அறக்கட்டளை’ என்ற பெயரில் செய்து வருகின்றது.
இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுகப்ரம்ம மகரிஷியின் ஜெயந்தி வரும் தினத்தன்று [ஆனி மாதம் – திருவோணம் நட்சத்திரம்] மூன்று நாட்கள் இங்கு கொண்டாட்டம் களை கட்டும். வேத விற்பன்னர்கள் அது சமயம் கௌரவிக்கப்படுவார்கள்.
ஹோமங்கள் யாகங்கள் நடைபெறும். அன்னதானமும் உண்டு.
இன்றும் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரத்தன்று சுகப்பிரம்மருக்கு பூஜையும் ஆராதனையும் இங்கு நடைபெறுகிறது. ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறும்.
முன்னதாக விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடைபெறும்.
பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு மந்திரோபதசனை செய்யப்பட்டு இறுதியில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயம், சர்ப்ரைஸாக கேள்விகள் கேட்கச் சொல்லி, அவற்றுக்கு பதில் அளிக்கப்படுகிறது. இது தவிர தினமும் மாலை சுகப்பிரம்மருக்கு பூஜை உண்டு. [ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 11.00 மணிக்கு] கலந்து கொண்டு சுகப்பிரம்மரின் அருளை பெறுங்கள். ஒரு முறை இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று VISITORS BOOK ல் உங்கள் பெயரையும் அலைபேசி எண்ணையும் பதிந்து விட்டு வந்தால், ஆஸ்ரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் உங்களுக்கு அனுப்புவார்கள்.
முகவரி : சுகப்பிரம்ம மகரிஷி ஆஷ்ரமம்,
8/22, அருளாம்பாள் தெரு, [கர்நாடக சங்க பள்ளி அருகே]
தி.நகர், சென்னை – 600017, தொலைபேசி : 044-28342483.
[சிரத்தையும், பக்தியும் இருப்பவர்கள் நிச்சயம் அங்கு போக வேண்டும் என்று கருதுபவர்கள் மட்டும் மேற்படி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை கேட்டு பெறவும். ஆர்வக்கோளாறு காரணமாக சும்மா அழைக்கவேண்டாம்!]
பின் குறிப்பு : இந்த பதிவின் தொடர்ச்சியாக சுமார் 5,100 ஆண்டுகள் பழமையான விழுதுகள் வளராத ஆலமரம் அமைந்துள்ள சிறப்பு மிக்க சுகஸ்தல் திருத்தலத்தின் முதல் பாகவத பீடம் பற்றிய சிறப்பு பதிவினை படிக்க தவறாதீர்கள்!
வியாழன், 17 அக்டோபர், 2024
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா? காஞ்சிபுரத்தில் பிறந்த மற்றும் வாழும் மக்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்...
காஞ்சிபுரத்து மக்களுக்கு இந்த தகவலை அனுப்பி அவர்களின் ஊர் பெருமையை உலக அறிய செய்யுங்கள்... உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்...
காஞ்சிபுரம் குடி மக்கள் வாழ்க! வாழ்க!!!
காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 66000 கோவில்கள் அக்காலத்தில் இருந்தது என்று கச்சியப்ப முனிவர் அருளிய காஞ்சி புராணம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
அவை பின்வருவன:
1. சிவன் கோவில் மட்டும் : 16000
2. அம்பிகைக்குரிய சக்திகள் வீற்றிருந்தருளும் கோவில்கள் : 5000
3. பெருமாள் கோவில் : 12000
4. பிரம்மன் கோவில் : 10700
5. அருக தேவன் கோவில் : 9700
6. புத்தேவன் கோவில் : 8000
7. கொற்றவை கோவில் : 1000
8. பைரவர் கோவில்: 1000
9. சாத்தன் கோவில்: 1000
10. முருகனுக்கு : 500
11. விநாயகருக்கு : 500
12. சூரியனுக்கு : 500
13. ஆதிஷேன் : 100
போன்ற கோவில்கள் அக்காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்தது என்று கச்சியப்ப முனிவர் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இறைவன் கருணையாளன் காஞ்சிபுரத்தில் மட்டும் 66000 கோவில்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. இறைவனை எந்த விசயத்திலும் அடக்கி விட முடியாது [அன்பை தவிர]. கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தையையே மிஞ்சி விட்டது காஞ்சி மாநகர்.
கல்வியை கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளாய்.