ஞாயிறு, 13 அக்டோபர், 2024

படலம் 78: குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை...

படலம் 78: குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை...

78 வது படலத்தில் குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் குதிரைகளுக்கு நீராஜனம் என்ற சாந்திகர்மா கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதத்தில் சுக்லபக்ஷத்தில் அஷ்டமி, நவமி அல்லது துவாதசி பவுர்ணமி ஆகிய இந்த தினங்களில் இந்த நீராஜன கர்மா செய்யவேண்டும் என்று காலம் விளக்கப்படுகிறது. நகரத்தின் வடக்கு கிழக்கு, வடகிழக்கு திசையிலோ மற்ற இடங்களிலோ இந்த பூஜை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை அமைக்கும் முறையும் அங்கு வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் ரக்ஷõபந்தனம் செய்துகொண்டு நல்ல கற்புள்ள பெண்களுடன் கூடி சலங்கைமருந்து இவைகளுடன் கூடி குதிரையைகார்யாரம்பம் செய்யும் முன்னதாகவே நதீதீரம் அழைத்துச்சென்று பிறகு முன்பு முறைப்படி செய்யப்பட்ட கிழக்குமுகமாக வேதிகையை அடைந்து அங்கு குண்டசம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஏழுதினம் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்யவும், பலிவிதியும் செய்யவும் என கூறி ஹோம முறை பலி கொடுக்கும் முறை கூறப்படுகிறது. இந்த ஏழுதின வேளையிலும் நதீ, சமுத்திரம், குளம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரைக்கு ஸ்நானம் செய்வித்து அதிகமான மருந்துகளாலும், எள்ளு, கடுகு, தயிர், பயறு இவைகளால் நன்கு தேய்த்து, தேய்த்ததால் போக்கப்பட்ட அசுத்தங்களை உடையதும், மஞ்சள்நீராட்டியதும் ஆன குதிரைகளை அவைகளின் இருப்பிடத்திலிருந்து அழைத்து, அங்கு பிரும்மசர்யத்துடன் கூடிய ஆசார்யன் ரøக்ஷக்காகவும் வீர்யத்திற்காகவும் கட்டப்பட்ட ஓக்ஷதிகளை அந்த குதிரையின் மேல் கட்டவும் என கூறப்படுகிறது. பிறகு வெளியில் நல்லமுகூர்த்தத்தில் வேதகோஷங்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட தினத்தில் சூர்யசந்திரர்களின் கிரணங்கள் குதிரைகளின் மேல் படாதவாறு வலம்வர செய்யச் சொல்லவும். காலையிலும் மாலையிலும் இரண்டு காலத்திலும் முக்யமான குதிரைக்கு ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும். தினம்தோறும் ஸ்தோத்திர ஆசீர்வாத மங்களகரமான மந்திரங்கள் முடிந்தபிறகு சுக்லபக்ஷ அஷ்டமியில் காலையில் ஸ்நானம் அனுஷ்டானம் முடித்த ஆசார்யன் வெண்கடுகாலும் கோமூத்திரத்தினாலும் குதிரைகளை ஸ்னானம் செய்வித்து நவமியில் உத்திராட நக்ஷத்திரமும் திருவோண நக்ஷத்திரமும் கூடும் சமயத்தில் நகரத்திற்கு வெளியில் அவைகள் வசிக்கட்டும் என கூறி, அவைகள் வசிக்கும் இடம் முறைப்படி கூறப்படுகிறது.

அங்கு தோரணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்படவேண்டும். பிறகு அரசன் எல்லா மங்கள வாத்யங்களுடன் நகர ஜனங்களுடனும் கூடி உச்சமான சங்க நாதங்களுடனும் கூடி முன்பு விதிப்படி செய்யப்பட்ட சாந்தி செய்யும் யாகக்கிரஹத்தை அடைந்து வஸ்திரம் முதலியவைகளுடன் கூடிய 8 கலசத்தில் ஓஷதிகளை ஸ்தாபித்து அந்த பூஜையை முறைப்படி செய்து முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் ஹோமம் செய்யவும் எனக்கூறி அரசனால் செய்யவேண்டிய ஹோம விதிகள் நிரூபிக்கப்படுகின்றன. அரசன் புலித்தோலின் மேல் அமர்ந்து ஆசார்யனுடன் கூடி கிழக்கு முகமாக வேத விதவான்கள், குதிரை வைத்யர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அரசன் பூர்ணாஹுதியின் முடிவில் அக்னியின் சுபாசுபத்தை அறிந்து வெள்ளைச்சந்தனம் வெள்ளை மாலை இவைகளுடனும் வெள்ளை வஸ்திரத்துடன் கூடின உயர்ந்ததான குதிரையின் மேல் ஏறி தோரண சமீபம் செல்லவும். அங்கு பாட்டு வாத்யங்களால் மெதுவாக அமைதியான வார்த்தைகளால் ஹோம சேஷத்தை, பால், தயிர், வாழைப்பழம் இவைகளுடன் கூட்டி பிண்டமாக அமைத்து அந்த உத்தமான குதிரைக்கு கொடுக்கவும். அந்த குதிரை சீக்ரமாக சாப்பிட்டால் அப்பொழுது ராஜா விஷயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சாந்திகம் பவுஷ்டிகம் என்ற மந்திரங்களால் சாதாரண கும்ப தீர்த்தத்தால் ராஜாவையும், குதிரையையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு சைன்யங்களையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆபிசார மந்திரத்தினால், மிருன்மயமான குதிரையை கூர்மையான சூலத்தினால் மார்பு பகுதியில் குத்தவும். இவ்வாறு குதிரைக்கு ரøக்ஷ செய்து அதன் மேல் ஏறி வெற்றி அடைவதற்காக அரசன் கிழக்கு முதலான திசைகளை அடையவும் என கூறப்படுகிறது. இவ்வாறாகவே யானை முதலியவைகளுக்கும் அரசன் நீராஜனம் என்ற சாந்திகர்மாவை செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறை கூறப்படுகிறது. இவ்வாறு 78வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. குதிரைகளின் சாந்தியான கெட்ட பார்வைகளை நீக்கும் முறை பற்றி கூறுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆசார்யன் ஐப்பசி மாதத்தில் செய்ய வேண்டும்.

2. நவமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமியிலோ, திவாதசியிலோ விசேஷமாக வளர்பிறையில் செய்ய வேண்டும்.

3. நகரத்தின் கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ அல்லது வேறு இடத்திலோ செய்யவும். அதன் செய்முறை கூறப்படுகிறது.

4. அகலம் எட்டு முழ அளவும், நீளம் பத்து முழ அளவு உயரமும் நீளபாகம் இருபது முழ அளவாகவும் யாக சாலை அமைக்க வேண்டும்.

5. ஆறு முழ அளவுள்ள நான்கு வரிசையில் மூன்று முழ மத்யமாக வேதிகை அமைக்கவும். அதன் பாதி உயரமுள்ளதாக அரசனுக்கு வேதிகை அமைக்க வேண்டும்.

6. நீண்டதான வேதிகைகளின் மத்தியில் குண்டத்திற்கு இடம் அமைக்கவும். அந்த குண்டம் ஒருமுழ அளவும் மூன்று மேகலையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

7. முதலில் காப்பு கட்டுதலை செய்து சலங்கை மருந்துப் பொருள்களுடன் கூடியதும், நல்ல பெண்களுடன் கூடியதுமான குதிரையை நீரின் அருகில் அழைத்து வந்து

8. வலமாக தீர்த்த கரையில் கிழக்கு முகமாக வேதிகை அமைக்கவும். அதற்கு முன்னதாக ஹோமத்திற்காக குண்டம் அமைத்து, முன்பு கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

9. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து உயர்வான ஆசார்யன், ஹோமம் செய்யவும். நல்ல தேஜஸ்ஸையுடைய அக்னியில் கீழே கூறுபவர்களுக்கு ஹோமம் செய்யவும், இந்த ஹவிஸை பிரம்மாவிற்கும்

10. பிறகு விஷ்ணு, அக்னி, ருத்ரன். இந்திரன், வருணன், வாயு, மலையரசன், ஸ்கந்தன், குபேரன் இவர்களுக்கும்

11. நாகர்கள், நதிகள், பிரம்மா முதலானவர்கள் ஆகிய இவர்களுக்கும் முறையே இந்த ஆஹுதி, பலி இவைகளை செய்ய வேண்டும்.

12. நதீ, சமுத்திரம், குளம், தடாகம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரையை ஸ்நானம் செய்வித்து நிறுத்தி வைக்கவும். முன்பு கூறப்பட்ட அவுஷதிகளாலும்

13. எள், கடுகு, மாதுளை, விதை, இவைகளாலும் தயிராலும் இந்த குதிரைகளை தேய்க்கவும், அங்கு தேய்க்கப்பட்ட சுத்தமானதும் குளித்து ஆகாரங்களை பருகி, மூழ்கியதுமான குதிரைகளை

14. பிரம்மசர்யத்துடன் கூடி குதிரை லாயத்திற்கு அழைத்துச் சென்று வீர்யத்திற்காகவும், ரøக்ஷக்காகவும் இந்த குதிரைகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மருந்துகளை கட்டிவிட வேண்டும்.

15. காலையிலும், மாலையிலும் ஏழுதினம் முதலாக ஹோமம் செய்யவும். நெய்யை தர்பைகளால் சுத்தம் செய்து தர்பைகளால் நெய்யை ஸமர்பிக்க வேண்டும்.

16. சமித்துக்களாலும், அக்னியில் நன்கு ஜ்வாலை உள்ளதாக இரண்டாவது தினம் ஹோமம் செய்யவும், மூன்றாவது தினம் ஸ்ருக்கினால் நெய் ஹோமம் செய்து சிவந்த நிறமானதாக குதிரையை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

17. தயிர், அப்பம், அன்னம் இவைகளால் ஹோமம் செய்து நான்காவது தினம் அதிகாலையில் அருணோதய வேளையில் பிரம்ம கோஷங்களால் சப்திக்கப்பட்ட சமயத்தில்

18. சூர்யன், சந்திரன், இவைகளுடைய காந்தி குதிரைகளின் மேல் படாதவாறு அவைகளை நகர்வலம் வரச் செய்யவும். காலையில் ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும்.

19. இரண்டு காலத்திலும் விசேஷமாக பிரதானமாக குதிரைக்கு பிரதி தினமும் ஸ்வஸ்தி வாக்யம், ஆசீர்வாதம், மங்கள வாத்யத்துடன் கூடியதாக புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.

20. ஏழாவது இரவு முடிந்தவுடன் ஸ்நானம் செய்து முன்புறமாய் இருந்து கொண்டு எட்டாவது நாளில் வெண்கடுகு, கோரோஜனை இவைகளால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

21. உத்திராட நக்ஷத்ரம் சேர்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் சுக்லபக்ஷ நவமி திதியில் நகரத்திற்கு வெளியில் வசிக்க செய்ய வேண்டும்.

22. கிழக்கிலோ, வடக்கிலோ முன்பு கூறப்பட்டுள்ள சுத்தமான ஆவரணத்துடன் பிரதட்சிண மான தீர்த்த கரையின் வடக்கில் விசாலமான மரக் கூட்டத்தில்

23. தோரணம் அமைத்து பத்து கை நீளமும், எட்டுகை அகலமும், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கிழக்கு நோக்கியதுமான

24. இரண்டு பக்கத்திலும் உள்ளதுமாக கொட்டகையை அமைத்து அங்கு முன்பு போல் பூஜை கார்யத்தை செய்யவும், எல்லா மங்கள வாத்யத்துடனும் பட்டணத்து ஜனங்களுடன் கூடிய அரசன்

25. விருப்பப்பட்ட வீட்டை சங்கவாத்யங்களால் சந்தோஷப்பட்டவனாக அடைந்து, சாந்தி க்ருஹத்தில் நுழைந்து இந்த பூஜை முறையை ஆசரிக்க வேண்டும்.

26. சந்தனம், கீழாநெல்லி, மஞ்சமெழுக்கு, மனச் சிலை, ஹரிதாளம், வசம்பு, தந்தம், சீந்திக்கொடி, தினை, அர்ஜீனம்

27. மஞ்சள், ஸ்வர்ண புஷ்பம், வஹ்னிமந்தம், என்ற திரவ்யம், தர்பம், கிரிகர்ணிகை, வெட்டி வேர், கடுகு, லோஹிணி என்ற திரவ்யம்

28. ஸகதேவி, நாகபுஷ்பம், விளாம்பழம், தண்ணீர்விட்டான் (சராவரீ) ஸோமவல்லி ஆகிய திரவ்யங்களை கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

29. எட்டு கும்பங்களிலோ வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதாகவும் சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யங்களோடு கூடியதாயும்

30. பலவித அப்பம், முதலிய திரவ்யங்களால் பலி கொடுக்கவும், குண்டத்தில் முன்போல் முன்பு கூறிய திரவ்யங்களால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

31. ராஜாவானவன், புலித்தோலிலமர்ந்த வனாகவும், குரு அமைச்சர்களுடன் கூடியவனாகவும், வேத வித்வான், குதிரை வாத்யர் இருவர்களுடன் கூடியவனாகி கிழக்கு முகமாக இருந்து

32. ஹோமாக்னியின் சுப, அசுப சகுனமறிந்து, பூர்ணாஹுதி முடிந்த பிறகு சிரேஷ்டமான குதிரையின் மேல் அமர்ந்து தோரண வாயில் சமீபம் அடைந்து

33. மெதுவாக, நல்லவார்த்தைகளாலும், கானம் வாத்யமிவைகளுடன் கூடியும், வெள்ளை சந்தன, வெள்ளை மாலை தரித்தவனாகவும் வெள்ளை வேஷ்டி அணிந்தவனாகவும்

34. ஹோமத்தின் மீதியான உருண்டையை, பால் தயிருடன் கூடியதாகவும் வாழைப்பழத்துடன் கூடியதாகவும் உயர்வான குதிரைக்கு கொடுக்கவும்.

35. சீக்கிரமாக சாப்பிட்டால் அது வெற்றியை கொடுக்கவல்லதாகும். மற்ற குதிரைகளை அத்திமரக்கிளை கொம்புகளால் நனைந்த தீர்த்தங்களால்

36. பிரோக்ஷணம் செய்து ஆசார்யன், சாந்திகம், பவுஷ்டிகம் ஆகிய மந்திரங்களால் ராஜாவையும் குதிரையும் சேனையையும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

37. பிறகு பிராம்மணன் மண்ணினால் செய்யப்பட்ட குதிரையை அதன் மார்பு பகுதியில் சூலத்தினால் குத்தவும், ஆபிசார மந்திரங்களாலும் பெரிய கருமை நிறத்தால்

38. குதிரைக்கு ரøக்ஷயை கொடுத்து கிழக்கு முகமாக அதன் மேல் ஏறி மங்கள வாத்யங்களுடன் கூடியவனாகி ராஜாவானவன் வெற்றி அடைவதற்கு செல்ல வேண்டும்.

39. இவ்வாறாகவே யானைகளுக்கும் செய்து அதை அழைத்து வந்து அதில் அரசனை ஏற்றவும், ஆனால் அந்த யானைக்கு செய்யும் நீராஜனம் கார்த்திகை மாஸத்தில் அஸ்வினீ நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்.

40. முன்பு கூறப்பட்ட எல்லா திதிகளிலும் செய்யவும், யானையின் மேல் வலம் வருதலில் விசேஷமாக சதுரஸ்ரமான கொட்டகை அமைக்க வேண்டும்.

41. வேதிகையும், சதுரஸ்ரமாக அமைத்து பிறகு யானையின் இருப்பிடம் கூறப்படுகிறது. நூறு முழ அளவு சதுரஸ்ரமாக செய்யவேண்டும்.

42. ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து எண்ணிக்கை உள்ள சமமான சமித்துக்களை யானைக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் குதிரைக்கு நீராஜன விதியாகிற எழுபத்தெட்டாவது படலமாகும்.

படலம் 77 : துர்கா பூஜை முறை...

படலம் 77 : துர்கா பூஜை முறை...

77 வது படலத்தில் துர்கையின் பூஜா முறை கூறப்படுகிறது. முதலில் துர்காபூஜையின் காலம் விளக்கப்படுகிறது. அதில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் அஷ்டமியிலும், நவமியிலும் உலகத் தாயான துர்கையை பூஜித்தால் அரசன் துக்கம் இல்லாதவனாகவும், எதிரியை ஜயித்தவனாகவும் ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜைக்காக உபயோகிக்கப்படுகிற எருமை முதலான பிராணிகள் வதம் செய்தால் அவைகள் நல்ல கதியை அடைகின்றன. அதனால் பாபம் ஏற்படாது என கூறப்படுகிறது. துர்க்கைக்கு எதிராக தேவர்கள் உயிரை விடுகிறார்களோ அவர்களுக்கு ஸ்வர்கவாசம் அப்ஸரஸ்திரீகளின் பிரயமும் ஏற்படுகின்றன. பிறகு துர்க்கா பூஜைக்காக ஒவ்வொரு நகரத்திலும் கிராமம் வீடு பலஇடங்கள் ஆகியவற்றிலும் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ மண்டபம் அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும் அதில் வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. வேதிகையின் மேல் அரசு சின்னங்களான எல்லா ஆயுதங்களையும் அதிவாசம் செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜை செய்யும் முறை ஹோம முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. ஹோம சேஷத்தை குதிரை யானை முதலியவைகளுக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பலவித வாத்ய கோஷசப்தங்களுடன் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட ஐந்து யானை, குதிரை இவைகளை அலங்காரம் செய்து நகரத்தில் பிரதிதினமும் சுற்றிவர செய்யவும். பிரதிதினமும் அரசன் தங்களுடைய பிதுர்தேவர்களை பூஜித்து ராஜசின்னங்களை பழம் புஷ்பம் மாலை சந்தனம் இவைகளாலும் அப்பம் போன்ற பலவித  பக்ஷ்யவிசேஷங்களாலும் வெற்றிலையுடன் கூடிய பல நைவேத்தியங்களாலும் பூஜித்து ஹோம சேஷத்தை யானைக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது.

இவ்வாறு துர்காபூஜையில் கார்யங்களின் சுருக்கம் கூறப்படுகிறது. பிறகு பூஜையின் மந்திரங்களை கூறுகிறேன் என்று சொல்லி குடை, குதிரை, கொடி, யானை, பதாகம், கத்தி, கவசம், துந்துபி என்ற வாத்யம், வில், சங்கு, சாமரம், கத்தி, ஸ்வர்ணதண்டம் சிம்மாசனம் இவைகளின் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. பிறகு அரசன் அஷ்டமி தினத்தில் துர்காதேவியை பழம், நைவேத்யம், புஷ்பம், தூப தீபம், சந்தனம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி இந்த பூஜையின் முறை வர்ணிக்கப்படுகிறது. அங்கு தங்கம், வெள்ளி, தாமிரம், கருங்கல், மரம், மிருத்திகை இவைகளால் ஆன பிரதிமைகளில் ஏதாவது ஒரு பொருளால் சக்திக்கு தக்கவாறு பூஜிக்கவும் என கூறப்படுகிறது. அல்லது சித்திரமாகவரையப்பட்ட பிரதிமையையோ பூஜிக்கவும். முன் பகலிலோ மாத்யாஹ்னிகத்திலோ இந்த பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக உருவத்தின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு பலவிதமான நாட்டிய சங்கீதங்களால் இரவை போக்கி காலையில் அருணோதய வேலையில் பிரதிமையின் முன்பாக எருமையையும், ஆட்டையும் பலி கொடுப்பதாக வெட்டவும். பிறகு மாலை வேளையில் நவமியில் அம்பாளை தேரில் ஏற்றி ராஜ்யத்தை சுற்றிவர செய்யவும். தேர் ஓடும் சமயத்தில் ராஜா சைன்யத்துடனோ அல்லது அவனால் ஏவப்பட்ட வீரனுடனோ, 8 திக்கிலும் பூதங்களுக்கு தேன் நெய் கலந்த அன்னத்தை இந்த மந்திரத்தினால் பலிகொடுக்கவும் என கூறிபலிகொடுக்கவும் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. முடிவில் மனிதர்களால் சுமக்கப்பட்டதாகவோ அம்பாளை வலம் வரச்செய்யும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இவ்வாறு 77வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே உயர்ந்த அந்தணர்களே, எல்லா விதமான விருப்ப பயனை தரக்கூடியதும் உலகத்திற்கு ஆபிசாரத்திற்காக ஸ்ரீ துர்கா தேவியின் பூஜை முறையை நான் கூறுகிறேன்.

2. சூரிய பகவான் கன்யா ராசியை அடைந்த பொழுது, புரட்டாசி மாத மூல நக்ஷத்ரம், சுக்ல அஷ்டமியுடன் கூடிய ஸமயம், அந்த புண்ய காலம், மஹா நவமி என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

3. அல்லது ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் மூலம், அஷ்டமி இவைகளுடன் கூடிய புண்யகாலம், மஹாநவமி எனப்படும் இந்த புண்யகாலம் மூவுலகிலும் கிடைப்பது அரிது.

4. ஐப்பசி மாதத்தில் அஷ்டமியிலும், நவமியிலும் ஜகன்மாதாவான துர்கா பரமேச்வரியை ஆராதித்து, துன்பம் முதலான கஷ்டங்கள் நீங்கியவனாய் தன் எதிரிகளை வெல்கிறான்.

5. ஹூங்காரங்களால் கூட்டமாக கைகளைத் தூக்கிக் கொண்டு கத்தியை தரித்த அந்த தேவிக்காக, எருமை முதலிய பிராணிகள் பலியிடப்படுவதால்

6. பாபம் இல்லாமல் அந்த எல்லா பிராணிகளும் நல்ல நிலையை அடைகின்றன. தேவியின் ஆலயத்தின் எந்த பிராணிகள் உயிரை விடுகின்றனவோ

7. அம்பாளுக்கு பலியான அந்த பிராணிகளுக்கு ஸ்வர்கலோகத்தில் வசிக்கும், அப்சரஸ் ஸ்திரீகளுக்கு பிரியமானவர்களாக ஒவ்வொரு இடத்திலும் பட்டணங்களிலும் எல்லோராலும் மரியாதை செய்யப்படுகிறார்கள்.

8. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் சவுக்யத்தை அளிப்பதிலேயே நாட்டமுள்ள பதினொன்று, எட்டு, ஏழு, கை அளவுகளால் வடக்கு, கிழக்கு திசைகளில் ஆசார்யன்

9. மண்டபத்தை நிர்மாணித்து ஆக்னேய திசையில் (தென் கிழக்கில்) கை அளவிற்கு மேகலை யுடன் கூடிய அரசிலை போல் யோனி குண்டத்தை அமைக்க வேண்டும்.

10. எல்லா ராஜ பரிவார அடையாளங்களையும், எல்லா அஸ்திரங்களையும், எங்கும் வேதிகையின் மேல் பூஜிப்பதற்காக எல்லா இடங்களிலும் அவைகளை இருக்கச் செய்ய வேண்டும்.

11. ஆசார்யன் ஒவ்வொரு தினமும் அந்தந்த மந்திரங்களால் சந்தனாதி வாஸனை திரவியங்களால் அந்த அஸ்திரங்களைப் பூஜிக்க வேண்டும். துர்கை அம்மனுக்கு அந்த மந்திரங்களால் ஹோமம் நடத்தவும்.

12. ஸமித், நெய், ஹவிஸ், பாயசம் ஆகிய இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஹோம மீதியை யானைகளுக்கும், குதிரைகளுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.

13. ரக்ஷõபந்தனம் செய்த ஐந்து யானைகளையும் ஐந்து குதிரைகளையும் நன்கு அலங்கரித்து பலவிதமான வாத்ய கோஷத்துடன் நகரத்தில் தினம் சுற்றி வரும்படி செய்ய வேண்டும்.

14. அரசர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பித்ரு தேவதைகளை பூஜித்து விட்டு ராஜ சின்னங்களை பழம், புஷ்பம், சந்தனம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

15. பலவித அப்பம் முதலிய நிவேதனங்களால் தாம்பூலத்துடன் கூடிய நைவேத்யங்களால் பூஜித்த பிறகு, ஹோம மீதியை பட்டத்து யானைக்கு கொடுக்க வேண்டும்.

16. அந்த யானைக்கு ஹோம மீதியை கொடுப்பதால் அரசருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த பூஜை மந்திரங்களை சொல்ல இருக்கிறேன்.

17. எப்படி ஆகாயம் பூமியின் நன்மைக்காக பூமியை மறைத்துக் கொண்டு இருக்கிறதோ, அவ்வாறே குடையாகிய நீ, வெற்றி ஆரோக்கிய அபிவிருத்திக்காக அரசனை நீ மறைத்துக் கொண்டு இரு. ஓம் சம் சத்ராய நம:

18. நீ கந்தர்வ குல ஜாதியில் பிறந்தவன் பிர்மா, ஸோமன், வருணன் ஆகியோருடைய ஸத்ய வாக்யத்தால் ராஜ வம்சத்துக்கு அணியாக விளங்குகிறாய். ஓம் தும் துரங்காய நம:

19. ஹே அச்வ, அக்னி பகவானின் மகிமையாலும், ஸூர்ய பகவானுடைய தேஜஸாலும், முனிவர்களுடைய தபஸாலும் விசேஷமாக வெற்றி பெறுவாயாக.

20. பரமேஸ்வரனுடைய, பிரம்ஹசர்யத்தாலும் வாயு பகவானின் பலத்தாலும் கவுஸ்துபம் என்ற ரத்னத்தை ஸமுத்திர ராஜனின் மகனாகிய நீ ராஜகுமாரன் என்றாலும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு

21. ராஜ்யத்திற்கு ஜீவாதாரமான விஷயத்தில் பொய் பேசுபவனும் ராஜ்யத்தின் நலத்தில் கவனம் செலுத்தாத, க்ஷத்ரியன், ப்ரும்மஹத்தி பாபம் செய்தவன் மாத்ரு ஹத்தி, பித்ரு ஹத்தி செய்தவன் எந்த பாப லோகங்களுக்கு செல்வானோ அங்கு பொய் பேசி ஜனங்களுக்கு நன்மை செய்யாத அரசன் போகிறான்.

22. சூர்யனும், சந்திரனும் வாயு பகவானும், எவ்வளவு காலம் நீ செய்த பாபங்களை பார்பார்களோ, அவ்வளவு நாள் காட்டில் வாழ வேண்டிய கதியை விரைவில் அடைவாய். அவர்களது வேகம் உனக்கு இருக்க வேண்டும்.

23. ஹே குதிரையே எங்களுக்காகப் பிராயச்சித்தத்தை அடையுங்கால் யுத்தத்தில் எதிரிகளை வென்று எஜமானருடன் சுகமாய் இரு. ஓம் அம் அச்வாய நம:

24. மஹா பலசாலியான தேவேந்திரனுடைய கொடியே ஸ்வர்கலோகத்தில் உள்ளவரும் ஸ்ரீமன் நாராயணனுடைய த்வஜமாகியுள்ள கருடபகவான் உன்னிடத்தில் சான்னித்யம் கொண்டுள்ளார். ஓம் த்வம் த்வஜாய நம:

25. காச்யபருடைய, புத்ரனும் அமிர்தத்தை அபஹரித்துக் கொண்டு வந்தவரும் மஹாவிஷ்ணுவின் வாஹநமும், போரில் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வவும், அளவிடமுடியாத எதிரிகளை ஒழித்துக் காட்டியவரும்

26. பலம் நிறைந்த இறக்கைகளை உடையவரும் வாயுவுக்கு ஸமமான வேகம் படைத்த கருடபகவான் த்வஜமாகிய உன்னருகில் எதிரிகளை அழிப்பவைகளே, அச்வதர்மமறிந்த வீரர்களை ரக்ஷிக்க வேண்டும்.

27. குமுதன், ஐராவதம், புஷ்ப தந்தன், வாமணன், சுப்ரதீகன், அஞ்சனன், நீலன், நாகன் ஆகிய எட்டு தேவலோகத்து யானைகள் ஆகும்.

28. இந்த யானைகளின் எட்டு வகையான புத்ரர்களும், பவுத்ரர்களும், காட்டில் பத்ரம், மந்திரம், மிருகம், கருப்பு ஜாதியில் பிறந்த யானைகளாக இருக்கின்றன.

29. வேறுவேறு வனத்தில் பிறந்தவை அந்த யானைகள் காட்டிலுண்டான அந்தக் காட்டனைகளும் வஸீ, ருத்ர, ஆதித்யர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.

30. ஏ யானை சிரேஷ்டனே, தலைவனை ரக்ஷி. உடன்பாடு கடைபிடிக்கட்டும். யுத்தத்தில் வெற்றி அடைவாயாக, நடையில் மங்களங்களை மேற்கொள்.

31. சோமனிடமிருந்து செல்வத்தையும், மஹா விஷ்ணுவிடமிருந்து பலத்தையும் சூர்யனிடமிருந்து தேஜஸ்சையும், வாயுவிடமிருந்து வேகத்தையும் மேரு மலையிலிருந்து ஸ்திரத் தன்மையையும் ருத்ரனிடமிருந்து வெற்றியும் தேவேந்திரனிடமிருந்து

32. யுத்த காலத்தில் உள்ள யானைகளும் திக் தேவதைகளுடன் திக்குகளும் அச்வினி தேவர்களும் கந்தர்வர்களும் நாற்புறமும் பாதுகாக்கட்டும். ஓம் ஹம் ஹஸ்திநே நம:

33. அக்னி பகவான், அஷ்ட வஸூக்கள், ருத்ரர்கள், வாயு, ஸோமன், மஹரிஷிகள், நாகர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பூத கணங்கள், நவக்கிரஹங்கள் ஓம் கம் கஜாய நம:

34. ஆதித்யர்களுடன் கூடிய பிரதம கணங்களும், அஷ்டமாத்ருக்களுடன் கூடிய பைரவரும், சேனாதி பதியான சுப்ரமண்யரும், வருணனும், உன்னிடம் வாஸம் செய்து (புகழை உமக்குத் தரட்டும்)

35. எல்லா எதிரிகளையும் அரசன் கொல்லட்டும், வெற்றி அடையட்டும், எதிரிகளால் நாற்புறமும் வெல்லப்பட்ட தூஷனைகளையுடைய நாய்களே

36. உன்னுடைய தேஜஸால், தூஷணைகள் தொலைந்தன. அவை எதிரிகளின் மேல் காலநேமிவதத்திலும் திரிபுரஸம்ஹாரத்திலும் நடந்தது போல் விழட்டும்.

37. ஹிரண்யகசிபு, யுத்தத்திலும் தேவாசுர யுத்தத்திலும், எப்படி பிரகாசித்தாயோ அப்படி இப்பொழுது உன் பிரதிக்ஞையை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

38. நீலமாகவும் வெண்மையாகவும், உள்ள இந்த கொடியை பார்த்தே அரசனது பகைவர்கள் அழியட்டும். பலவித அஸ்திரங்களாலும் பயங்கர வியாதிகளாலும் யுத்தத்தில் ஜயிக்கப்பட்டவர்களாக ஆகட்டும்.

39.  உன்னால் ஜயிக்கப்பட்டவர்கள் உன்னை அடைந்தால் சுத்தர்களாகி உடனே நன்மை அடைந்தவர்களாக ஆகிறார்கள். பூதநா, ரேவதீ, காளராத்ரி என்று எண்ணப்படுகிறார்களோ ஏ கொடியே எல்லா எதிரிகளையும் அழித்து நீ என்னை அண்டியவனாயிருக்கிறாய். ஓம் பம் பதாகாய நம:

40. அஸி:, விசிஸந:, கட்க:, தீக்ஷணதர்மா, துராஸதி:,

41. ஸ்ரீ கர்ப:, விஜய:, தர்மதார:, என்ற எட்டு நாமாக்கள் பிரம்மாவால் உனக்கு கூறப்பட்டுள்ளன. ஓம் கம் கட்காய நம:

42. உனக்கு நக்ஷத்திரம் கிருத்திகை உனக்கு குரு பரமேஸ்வரன் உன்னுடைய உடல் தங்கமயமானது, பிரம்மா, விஷ்ணு உனக்கு

43. தந்தையும் பாட்டனாரும் நீ எங்களை எப்பொழுதும் காப்பாற்று. ஹே கவசமே யுத்தத்தில் எல்லா ஆபத்தையும் அழிக்கிறாய்.

44. என்னை ரக்ஷி, நான் ரக்ஷிக்கத்தக்கவன், குற்றமற்றவனே உனக்கு நமஸ்காரம், ஓம் வம் வர்மனே நம: ஹே துந்துபி வாத்யம் உன்னுடைய கோஷம் எதிரிகளின் உள்ளத்தைக் கலக்க வைக்கிறது.

45. மஹாராஜாக்களுடைய அரண்மனை உனக்கு வாசஸ்தலம், நீ வெற்றியை அளிப்பவன், மேகத்தின் இடியோசையால் உயர்ந்த யானைகள் எவ்வாறு சந்தோஷமடைகின்றனவோ

46. அவ்வாறு உன்னுடைய சப்தத்தால் எங்களுக்கு ஆனந்தம் உண்டாகட்டும். இடியோசை எப்படி ஸ்திரீகளுக்கு பயத்தை கொடுக்கிறதோ அவ்வாறே

47. உன்னுடைய ஒலியானது, எதிரிகளை ருத்ரருடைய கோபத்தால் பயம் உள்ளவர்களாகச் செய்யட்டும். (ஓம் தும் துந்துபயே நம:) எல்லா ஆயுதங்களுக்கும் பெரியவரே (எல்லா வில்லுக்கு நமஸ்காரம்) எல்லா ஆயுதங்களையும் அழிப்பவரே.

48. பாணத்துடன் கூடிய நீங்கள் என்னை எப்பொழுதும் காப்பாற்றுவீர்ராக, இது சாபமந்திரம், ஓம் சம் சாபாய நம: ஹே சங்கே புண்ய ஸ்வரூபமாய் மங்களத்திற்கு மங்களமாகவும்

49. மஹாவிஷ்ணுவால் எப்பொழுதும் தரிக்கப்பட்டதாயும் உள்ள தாங்கள் எனக்கு மன அமைதியை தருவீராக. இது சங்க மந்திரம், ஓம் சம் சங்காய நம:, சந்திரனை போல் பிரகாசிக்கிறவரும் பனிக்கட்டி போல் வெண்மை ஆனதும்

50. தேவர்களுக்கு பிரியமானவருமான ஹே சாமரமே என்னுடைய பாபங்களை விரட்டுவீராக, ஓம் சம்சாமராய நம: இது சாமர மந்திரம், எல்லா ஆயுதங்களுக்கும் முதன்மையான நிர்மாணிக்கப்பட்டது பரமேஸ்வரனால்

51. சூலாயுத நுனியிலிருந்து எடுத்து நல்ல பிடியை தயாரித்து துஷ்டர்களை கொல்வதற்காக சண்டிகா தேவியிடம் கொடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய்.

52. உன்னால் விஸ்தரிக்கப்பட்ட கத்தியானது தேவர்களுக்கு அளிக்கப்பட்டதாகும். நீ எல்லா தத்வத்திற்கும் அங்கமாகவும், எல்லா அசுபத்தையும் போக்குபவளாயும் இருக்கிறாய்.

53. ஹே கத்தியே என்னை எப்பொழுதும் காப்பாற்று எனக்கு மன அமைதியைக் கொடு என கத்தியின் மந்திரம், ஓம் க்ஷúம் க்ஷúரிகாய நம: துஷ்டர்களை விரட்டுவதற்கும் சாதுக்களை அழைப்பதற்கும்

54. பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறாய், நீ எனக்கு புகழ், சவுக்யம் முதலியவைகளை கொடு, நீ அரசனுக்கு தேவனாக இருக்கிறாய்.

55. எல்லா எதிரிகளையும், அழிப்பாயாக, தங்க தண்டமே உனக்கு நமஸ்காரம். இவ்வாறு தங்க தண்டமந்திரம் ஓம் கம் கனக தண்டாய நம: எதிரிகளால் தாக்க முடியாததை தர்மத்திற்கு கட்டுப்பட்டது. அமைதியான ஸ்வாபம் உடையவை. சத்ருக்களை கொல்லக்கூடியது.

56. துக்கத்தை அழிக்கவல்லது, தர்மத்தை தரவல்லது அமைதியானது, எல்லா எதிரிகளையும் அழிக்கவல்லது, ஆகிய எட்டு பலம் பொருந்திய எட்டு ஸிம்மங்கள் உன்னிடம் இருக்கிறது.

57. பிராம்மணர்களால் வேதங்களில் ஸிம்மாஸனத்தின் புகழை பாடப்படுகிறது. உன்னிடம் சிவன் பிரத்யக்ஷமாக இருக்கிறான், தேவர்களின் தலைவனாக இந்திரனும் இருக்கிறான்.

58. உன்னிடம் மஹா விஷ்ணு வஸிக்கிறார், உனக்காக தவம் அனுஷ்டிக்கப்படுகிறது. எங்கும் மங்களமயமான உனக்கு நமஸ்காரம், அரசே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

59. மூன்று உலகங்களையும் வெற்றி கொள்வாயாக, சாந்நித்யமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம், இது சிம்மாஸன மந்திரம், மந்திரத்தை முன்னிட்டதாக இந்த உலகபிரசார கர்மாவால் செய்ய வேண்டும்.

60. பழங்கள், புஷ்பங்கள், சந்தனம், தூப, தீப, நைவேத்யம் இவைகளால் அஷ்டமியில் தங்கத்தால் செய்யப்பட்ட துர்கா தேவியை பூஜிக்க வேண்டும்.

61. அல்லது தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு வெள்ளியிலோ, செப்பிலோ, கல்லாலோ, மரத்தாலோ அல்லது களிமண்ணாலோ தேவியை நிர்மாணித்து ஆராதிக்கலாம்.

62. அரசர், ஸ்நானம் செய்து எல்லா ஆபரணங்களை தரித்தவராக கரந்நியாஸம் அங்கந்நியாசம் செய்து கொண்டவராக முற்பகலிலோ அல்லது மதியத்திலோ இந்த துர்கா பூஜையை செய்ய வேண்டும்.

63. துர்கை அம்மனுக்கு திவ்ய பரிமளம் நிறைந்த சந்தனம், அகில், பச்சகற்பூரம், ஜவ்வாது, குங்குமப்பூ, முதலியவைகளை காப்பு சாத்தி வாசனை நிறைந்த புஷ்பங்களாலும்

64. நீலோத்பலங்களாலும் வாசனை நிறைந்த பூக்களாலும் தூப, தீபாதிகளுடன் பழங்களுடன், கூடிய விசேஷ நைவேத்யங்களாலும், நர்தனம், கானம் மங்கள வாத்யம் ஆகியவைகளுடன்

65. தும்பை பூக்களாலும், பில்ப பத்ரங்களுடன் எட்டு கைகளுடன் கூடியவளும், மகிஷாஸூரனை வதம் செய்பவளாகவும்

66. சூலத்தை மஹிஷாஸுரன் மார்பில் குத்தியவாறு மேலே தூக்கிய வண்ணம் இருப்பவளும் கபாலம், சூலம் தரித்திருப்பவளும், வில், அம்பு, கத்தி, கேடயம் தரித்திருப்பவளும்

67. சங்கு, சக்ரம் தரித்திருப்பவளும், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்திருப்பவளும் வரத முத்ரையை தரித்திருப்பவளும், ஜபமாலையை ஒலித்துக் கொண்டிருப்பவளும் மஹிஷாஸுரனின் தலைமீது நின்று கொண்டிருப்பவனும்

68. ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளும், மூன்று கண்களை உடையவளும், எல்லா எதிரிகளையும் அழிப்பவளும் அல்லது வரத, அபய முத்திரையுடன் கூடிய நான்கு புஜங்களுடன் கூடியவளும்

69. சங்கு, சக்ரம் ஆகியவைகளை தரித்திருப்பவளாயும் பக்தி நிறைந்தவர்களுக்கு பிரியமானவளும், அமைதி தரும் தேவதையும் ஆன மஹிஷாஸுர மர்தினியை பலவிதமான கானங்களாலும் நர்தனங்களாலும்

70. இவ்விதம் ஆராதனையால் இரவை கழித்து காலையில் அருணோதய காலத்தில் மிருதுவான கழுத்தை உடைய ஆட்டையும், மஹிஷத்தையும் கத்தியால் வெட்ட வேண்டும்.

71. நூறு, ஐம்பது, இருபத்தி ஐந்து, பன்னிரெண்டு இஷ்டபிரகாரம் பலியிடலாம். பிறகு பிற்பகலில் நவமியில், தேரில் அமர்ந்திருக்கும்.

72. துர்கையை, அரசர், சைன்யங்கள், சூழ ஊர்வலம் நடத்த வேண்டும். ராஜாவால், ஏவப்பட்ட வீரன்

73. நெய்யுடன் கூடியதும், தேன் நிறைந்ததுமான அன்னத்தை நான்கு திசைகளிலும் நான்கு மூலைகளிலும் இந்த மந்திரத்தைச் சொல்லி பூதங்களுக்கு பலி போடவேண்டும்.

74. இந்த பலியை தேவர்களும் ஆதித்யர்களும் வஸீக்களும், மருத்துக்களும், அசிவீனி தேவர்களும், ருத்திரர்களும், ஸூபர்ணர் (என்ற கருடனும்) நாகர்களும் கிரஹங்களும்

75. அஸீரர்களும், ராக்ஷஸர்களும் மாத்ரு தேவதைகளும், பாம்புகளும், பிசாசங்களும், டாகினீகளும், பைரவர்களும், யோகினிகளும், பெண் தெய்வங்களும், பெண் நரிகளும்

76. ஆண் நரிகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வீரர்களும், வித்யாதரர்களும், மனிதர்களும், திக்பாலர்களும், லோகபாலர்களும் மற்றும் உள்ள வினாயக தேவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

77. உலகத்திற்கு சாந்தியை அளிக்கும் சத்கர்மாக்களை பிராம்மணர்கள், மாமுனிவர்கள் செய்யட்டும் எனக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கு எதிரிகள் இருக்க வேண்டாம்.

78. பூதங்கள், பிரேதங்கள் அஸூரர்கள் திருப்தி அடைந்து சாந்தர்களாக இருக்கட்டும் என்று பிராத்தனையுடன் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும், அல்லது பக்தர்களால் தூக்கப்பட்டு எல்லா விதமான விக்னங்களையும் போக்கடிக்கும் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் துர்காபூஜா விதியாகிற எழுபத்தி ஏழாவது படலமாகும்.

படலம் 76: அரசர்களின் ரக்ஷா முறை...

படலம் 76: அரசர்களின் ரக்ஷா முறை...

76 வது படலத்தில், அரசர்களினுடைய ரக்ஷ விதியை கூறுகின்றேன். நல்ல உத்தமமான குருவானவர் அரசனின் பொருட்டு நெற்றி, முகம், ஹ்ருதயம், நாபி, கைகளின் அடி இரண்டிலும் மந்திரத்தை நினைத்துக் கொண்டு விபூதியை கொடுக்க வேண்டும் என்பதைக் கூறி திருநீற்றின் லக்ஷணம், நினைக்க வேண்டிய மந்திரம், திருநீறு கொடுக்க வேண்டிய முறை, அங்கு, விரல்களின் தேவதைகள் என்பன போன்ற விஷயங்களை விளக்கப்படுகின்றன. பிறகு பிராமணன் க்ஷத்திரியர், வைசியர்கள், சூத்ரர்கள் விஷயங்களில் கூட ரøக்ஷயின் முறை, பூணூல் அணியும் முறை மந்திரத்தோடு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசர் விஷயத்தில் உத்தரீயம் இரண்டு பூணூல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் எழுபத்து ஆறாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. அரசர்களுக்கான ரøக்ஷயை சுருக்கமாக கூறுகிறேன். சாஸ்திரோக்த முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை வஸ்திர காயம் செய்யப்பட்டு மிருதுவாக இருப்பதும் நல்ல வாசனை உள்ளதும், பஞ்சாக்ஷராகி மந்திரங்களால் ஸம்ஸ்காரம்

2. செய்யப்பட்டதும், கொஞ்சம் சிவந்ததுமான விபூதியை அரசருக்கு, தொப்புளுக்கு மேலும் நெற்றி, முகம், மார்பு, தொப்புள் கைகளின் மூலப்பரதேசங்களிலும்

3. ஈசானாதி மந்திரத்துடன் ஜபித்துக் கொண்டும், அல்லது தனக்கு இஷ்டமான மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டும், ஆசார்யன், பிரம்ம, விஷ்ணு, ருத்ர ஸ்ரூபமான மூன்று நடு விரல்களால் விபூதியை பூசிக்கக் கொடுக்க வேண்டும்.

4. பிரம்மா, விஷ்ணு, ஈச்வரர்களை தியானித்துக் கொண்டு ஈசானாதி மந்திரங்களை ஜபித்துக் கொண்டு, மும்மூர்த்தீஸ்வரூபமான, மோதிர விரலுடன் கூடிய கட்டை விரலால் விபூதியை கொடுக்க வேண்டும்.

5. மோதிர விரலின் அடிபாக பர்வாக்களிலிருந்து, வரிசையாக மூன்றுபர்வாக்களிலும் (கணுக்களிலும்) மூன்று மூர்த்திகள் இருக்கின்றனர். அதற்கேற்றவாறு மந்திரங்களைச் சொல்லி யஜமானுக்கு, ஏற்ற வகையில் விபூதியை கொடுக்க வேண்டும்.

6. நான்கு வர்ணத்தாருக்கும் விபூதி விநியோகம் செய்யும் பொழுது எல்லா மந்திரங்களையும் சொல்லலாம். வேதவித்தான பிராம்ணர்களுக்கு விபூதி தரும் பொழுது ஓம் என்ற பிரணவம் முதல் நம: என்று முடிவு வரையிலாக உச்சரிக்க வேண்டும்.

7. க்ஷத்திரியனுக்கு விபூதி கொடுக்கும் பொழுது ஸ்வாஹா என்ற சொல்லை கடைசியாக கொண்டும், வைச்யனுக்கு வவுஷட் என்ற சொல்லை முடிவாக கொண்டும், நான்காம் வர்ணத்தவர்களுக்கு

8. அவரவர்களின் தேவதைகளை தியானித்துக் கொண்டும் விபூதி கொடுக்கலாம். அவரவர்களின் தேவதைகளின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட பூணூலைக் கொடுக்க வேண்டும்.

9. அரசர்க்கு இஷ்ட தேவதையின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட இரண்டு பூணூல்களை கொடுக்கவும். நல்ல உத்தரீயங்களையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் அரசனின் ரøக்ஷ முறையாகிய எழுபத்தி ஆறாவது படலமாகும்.

படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை... இரண்டு

படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை... இரண்டு...

101. தேன், நெய், தயிர், பொறி, வாழைப்பழம், வடை இவைகளோடு கூடிய அன்னத்தை

102. பலவிதமான, வாத்ய கோஷங்களோடும் நாய்கள் பின்தொடர தீபமில்லாமல் கிராமத்தின் ஆரம்பத்தில் பலி கொடுத்தல் வேண்டும்.

103. ஹே பிராம்மண உத்தமர்களே அதிலும் குறிப்பாக அரண்மனையில் தீங்கு வராமல் காப்பாற்றப்பட வேண்டிய இடத்தில் அகோராஸ்த்ர தேவரின் கொடியோடு மவுன வ்ருதத்தை கடைபிடித்து

104. க்ஷேத்திர பாலர்களுக்கும் ருத்திரர், முதலியவர்களுக்கும் பலி கொடுத்தல் வேண்டும். பிறகு கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் நோயுள்ளவர்களை பிரோக்ஷிக்க வேண்டும்.

105. அகோர மந்திரத்தையும், அகோரஸ்த்ர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு, நோயுள்ளவனுக்கு பிரோக்ஷணம் செய்தும், பிறகு அந்த மந்திரங்களால் அபிமந்திரம் செய்யப்பட்ட விபூதியை அந்த இரண்டு மந்திரங்களையும் தியானித்து கொடுக்க வேண்டும்.

106. பிறகு ஹோம ரøக்ஷயும் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். பிறகு கர்த்தா போஜனம் தட்சிணை முதலியவைகளால் ஆசார்யரை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

107. ஆசார்யன் ஸந்தோஷம் அடைந்தால், அசையும் பொருள், அசையா பொருள் எல்லாம் மகிழ்ச்சி அடையும், கோயில்களிலும் அகோர தேவதை சிலாவிக்ரஹமாக அமைத்து

108. ஹோமம் பலி முதலியவைகளை செய்தல் வேண்டும். கும்பத்திலும் ஆவாஹித்து பூஜை ஹோமம் முதலியவைகளைச் செய்யலாம்.

109. இப்படி தர்பணம், ஹோமம், முதலியவைகளோடு பூஜை செய்தால் இப்பிறவியில் நோய்களும், எல்லாப் பீடைகளும் அழிந்து விடுகின்றன.

110. பூஜை ஹோமம், பலிமட்டுமாவது தினந்தோறும் செய்ய வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் இந்த ஹோமம் பலி கூறப்படுகிறது.

111. பூஜையின் முடிவில் ஜபத்தையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். அல்லது எல்லா தீங்குகளும் நீங்குவதற்கு ஜபம் மாத்திரமாவது செய்ய வேண்டும்.

112. யானைகளின் நோய் தீருவதற்கு மற்றொரு விதமும் இங்கு கூறப்படுகிறது. தூய்மையான இடத்தையடைந்து பசுஞ்சாணத்தால் மெழுகிவிட வேண்டும்.

113. கோவை பழம் போல் செந்நிறம் உள்ளதும் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ளதுமான கும்பத்தை நூல் சுற்றி இரண்டு மரக்கால் நெல்

114. ஒரு மரக்கால் அரசி அரை மரக்கால் எள்ளு கால் மரக்கால் பொறியுள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

115. கும்பத்தின் மேல், ஐந்து தர்பங்களால் கூர்ச்சம் நிர்மாணம் செய்யப்பட்டும் கும்பத்தில் சந்தனம்

116. முப்பழங்களோடும், கீழாநெல்லி, விளாமிச்சவேர், ஏலம், லவங்கம் முதலிய வாசனைப் பொருளின் தூள்களையும், கும்பத்தில் ஸமர்பித்து

117. வஸ்திரம் உடுத்தி ஆதார சக்தி அனந்தாஸனம் தர்ம, ஞான, வைராக்ய ஐச்வர்யம் முதலிய ஆஸனங்களையும் கல்பித்து

118. அதர்மாதி நான்கையும் கல்பித்து அதச்சதனம் (கீழ்இதழ்) ஊர்ச்வச்சதனம் (மேல் இதழ்) இவைகளோடு கூடியும் தண்டு தளம், கர்ணிகை முதலியவைகளோடு

119. கூடிய பத்மாஸனத்தை பூஜித்து முன் சொன்ன தியானத்துடன் கும்பத்தை இறைவனுடைய மூர்த்தமாக நினைக்க வேண்டும்.

120. கும்பத்தின் நடுவில் பிரணவஸ்வரூபமான வரும், தெற்கு நோக்கியவருமான அகோர மூர்த்தியை ஆசாரியர் அகோர மந்திரத்தை உச்சரித்து பாத்யம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

121. சந்தனம், விளாமிச்சவேர், இவைகளோடு கூடிய தீர்த்தத்தை பாத்யமாகக் கொடுக்க வேண்டும். ஏலம், இலவங்கம் மூன்று வகை பழங்களுடன்

122. தீர்த்தத்தை ஆசமனமாக கொடுத்து பிறகு நீர், பால், தர்பை நுனி, அக்ஷதை புஷ்பம் எள்ளு இவைகளும்

123. யவை, வெண்கடுகு, இவைகளுடன் எட்டு பொருள்களுடன் கூடிய அர்க்யத்தை இங்கு கூறப்பட்டுள்ளது. சந்தனம் கோரக் கிழங்கு கீழாநெல்லி ஆகிய மூன்று சந்தனங்களை சாத்தி,

124. பலவித புஷ்பங்களால் பூஜித்து, தூபதீபம், முதலிய உபசாரம் செய்து அந்த பத்மத்தின் தளத்தில் அகோராஸ்திர மந்திரத்தை உச்சாடனத்துடன்

125. அகோராஸ்திரத்தை பூஜித்து முன் போலவே பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து ஆவரணத்தோடோ, ஆவரணமில்லாமலோ பூஜித்து

126. கிழக்கு திசை முதல் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோத பைரவர், உன்மத்த பைரவர்

127. கபால பைரவர், பீஷணபைரவர், ஸம்ஹார பைரவர், என்ற எட்டு பைரவர்களையும் பூஜித்து பத்மத்திற்கு வெளியில் திக்பாலர்களையும் அதற்கு வெளியில் அவரவர்களின் ஆயுதங்களையும்

128. அஸ்த்ராவணம் மட்டுமோ, லோகபாலகர், பைரவர் வரையிலுமோ சந்தனம் முதலியவைகளாலும் தூபம் நெய் தீபம் முதலியவைகளால் உபசாரம் செய்து

129. காய்கறி வகைகளுடன் ஆஜ்யத்தோடு கூடியதுமான நிவேதனத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அகோர தேவர்க்கும் அகோராஸ்த்ரத்திற்கும் பருக நீர் முதலியவற்றை நிவேதிக்க வேண்டும்.

130. பிறகு தாம்பூலம் கொடுத்து நூற்றெட்டு ஆவ்ருத்தி அகோர மந்த்ரத்தையும் அகோராஸ்த்ர மந்த்ரத்தையும் ஜபித்து அதை அந்தந்த தேவதைகளுக்கு ஆசார்யன் ஸமர்பிக்க வேண்டும்.

131. கும்பத்தின் முன் ஐந்து ஸம்ஸ்காரங்கள் சுத்தம் செய்யப்பட்ட மணலாலான ஸ்தண்டிலத்தில் குண்டஸம்ஸ்காரமும் செய்து

132. முன் கூறிய விதம் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்து பாலுள்ள மரத்தின் ஸமித்துகளாலும் ஆஜ்யத்தாலும் அன்னத்தாலும்

133. பொறி, அக்ஷதையோடு கூடிய எள்ளாலும், நூற்றெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்து கடைசியாக அஸ்த்ரரூபமான இறைவனுக்கு தாம்பூலமும் நிவேதனம் செய்து

134. கடைசியில் பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். அகோர மந்திரத்தால் ஹோமபஸ்மத்தை எடுத்து அஸ்த்ரமந்திரத்தால் அதை ரட்சிக்கவும் வேண்டும்.

135. போகாங்க பூஜையும், லயாங்க பூஜையும் செய்து அக்னியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பிறகு ஹோம கர்மாவை அகோர ரூபியான கும்பத்தில்

136. அர்ப்பணம் செய்து விரும்பியதைப் பிரார்த்தித்துக் கேட்டு உத்தரவு பெற்று பராங் முகார்க்யம் கொடுத்து போகாங்க பூஜைகளை ஒடுக்கிக் கொண்டு

137. லயாங்க பூஜை செய்து உபஸம்ஹரணம் செய்ய வேண்டும். அஸ்த்ர மந்திரத்தையும் அகோர மந்திரத்தையும் மற்ற மந்திரங்களையும் ஹ்ருதய கமலத்தில் சேர்த்து

138. கும்ப தீர்த்தத்தால் நோயுள்ளவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். தினந்தோறும் இவ்வாறு அந்த தீர்த்தத்தால் பிரோக்ஷணமும் செய்து கொள்ளலாம்.

139. எல்லாவற்றிற்குமோ யானைகளின் இடம் முதலிய இடங்களிலும் புரோக்ஷித்து அகோர தேவரை விட்டு அகோராஸ்த்ரத்தையாவது பூஜிக்க வேண்டும்.

140. இவ்வாறு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் ஐந்து அல்லது ஏழு நாட்கள் அல்லது பக்ஷம் ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதம் தினந்தோறும் இவ்வாறு.

141. தினந்தோறும் செய்தால் அரசன் முதலானவர்களுடைய நோயும் யானை முதலியவைகளுடைய நோயும் தீர்ந்துவிடும்.

142. அரசனும் யானைகளும், நோயின்றி பலம் பொருந்திய சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

143. இதுவே குதிரை எருமை, ஆடு முதலிய பிராணிகளுக்கு உண்டாகும் நோயைப் போக்கவும் முடியும்

144. யாகத்தில் உபயோகித்து மிச்சமுள்ள பொருள் ஆசார்யனுக்கு கொடுப்பதோடு உணவும், நெய் முதலியவற்றையும் தினம் கொடுக்க வேண்டும்.

145. கடைசியில் சக்திக்கு தக்கவாறு தட்சிணையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகலிலும் இரவிலும் இக்கர்மாவை செய்ய வேண்டும்.

146. ஹோமத்தின் முடிவில் இரவில் தினந்தோறும் யானைக் கொட்டாரத்திலோ குதிரை லாயத்திலோ அல்லது

147. அதன் சமீபத்திலோ ஆஜ்யத்தோடு கூடிய அன்னம் பலியாகக் கொடுக்க வேண்டும். சுத்தமான கோமயத்தால் மெழுகப்பட்ட அஸ்த்ரமந்திரத்தால்

148. அகோர தேவரையும் அகோராஸ்த்ர தேவரையும் பரிவாரத்துடன் சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து வஜ்ரம் முதல் சக்ரம் வரையிலான ஆயுத ஆவரணத்துடன் கூடிய

149. ஸ்வாஹாந்தமாக பலிதானம் செய்ய வேண்டும். மேற்கிலோ, வடமேற்கிலோ ÷க்ஷத்திரபாலகருக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

150. அகோரமந்திரமின்றி அகோராஸ்த்ரத்தை மட்டுமாவது நடுவில் வைத்து அஸ்த்ராவண தேவதைகளுக்கும் ருத்திரன் முதலியவர்களுக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

151. எந்த ராஜ்யத்தில் இவ்விதம் பலிதானம் செய்யப்படுகிறதோ அங்கு ருத்திர பாதங்களால் உண்டான பயமும் நோயின் உபத்ரவமும் நிச்சயம் ஏற்படாது.

152. ஏதேனும் நோய், செய்கிறவனுக்கும் செய்விப்போனுக்கும் உண்டாகுமேயானால் அது உடனே நசித்து விடும். ஐயமில்ல.

153. எந்த அரசனின் ராஜ்யத்தில் அகோரதேவருக்கு அகோரசாஸ்த்ரத்திற்கும் பூஜையும் ஹோமமும் பலிதானமும் நடைபெறுகிறதோ

154. அங்கு ஆயுள் விருத்தியும் நோயற்ற தன்மையும் உண்டாகும். இதற்கு சமமாக நல்லது செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால் இதை முயற்சியுடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வியாதிநாச விதியாகிற எழுபத்தி ஐந்தாவது படலமாகும்.

படலம் 74: நோய்களை தீர்க்கும் முறை...

படலம் 74: நோய்களை தீர்க்கும் முறை...

74 வது படலத்தில் நோய்களை தீர்க்கும்முறை முறைப்படி கூறப்படுகிறது. முதலில் எல்லா மனிதர்களுக்கும் விசேஷமாக அரசர்கள், பசு, யானை, நாய், ஆடு, எருமை முதலிய பிராணிகளுக்கும் ஜுரம், வைசூரி, கிருஹ ஆவேசம், அபஸ்மாரம், இவைகளிலும் விசேஷமாக, குஷ்டரோகம் முதலிய வியாதி ஏற்பட்டாலும், வியாதி நிவர்த்திக்காகவும், ரோகம் ஏற்படாமல் இருப்பதற்கும், புஷ்டிக்காகவும், பலத்திற்காகவும் குறுகிய முறை கூறப்படுகிறது என்று பிரதிக்ஞை ஆகும். பிறகு தேவாலயம், நதிக்கரை மலை, காடு, இவைகளிலோ மற்ற புண்ய தேசத்திலோ அந்தந்த இருப்பிடத்தில் ரøக்ஷயுடன் கூடிய தன்னுடைய வீட்டில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட சுத்தமான இடத்தில் லிங்கம், மண்டலத்திலோ, கும்பம், ஸ்தண்டிலம், பலகை முதலியவைகளிலோ சிவன் முதலான தேவர்களை ஆவாஹித்து முன்பு போல் சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், இவைகளுடன் கூடியதாக பூஜித்து தன்னுடைய இஷ்ட தேவரை பஞ்சகவ்ய பஞ்சாமிருதம் இவைகளால் ஸ்நபன ஸஹிதம் பூஜை செய்து ஜபம் செய்யவும் என கூறி ஜபம் செய்யும் முறை, அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் கும்ப ஸமீபம் சென்று தேவனை வணங்கி நமஸ்கரித்து கும்ப தீர்த்தத்தால் வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை பிராக்ஷித்து, பிறகு மந்திரம் தியானத்துடன் கூடிய அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ருத்திராதி தேவர்களுக்கு நெய்யுடன் கூடின தயிர் அன்னத்தை பலி கொடுக்கவும் என்று மனுஷ்யர்களுடன் விஷயமான வியாதி நாசன விதியில் செய்யவேண்டிய ஒரு விதி விளக்கப்படுகிறது. இங்கு ஹோமம் முடிவிலோ ருத்திராதிகளுக்கு பலி கொடுக்கவும் என்று வேறு விதமாக அறிவிக்கப்படுகிறது. பிறகு வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷ உருவத்திற்கு சமமாக மாவினால் உருவம் செய்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜைவரை பூஜித்து பிரதிதினமும் மூன்று சந்த்யாகாலத்திலோ ஒரு காலத்திலோ பலவித காய்கறிகளுடன் கூடி பாயசம் (மிளகு) வெண் பொங்கல் சுத்தான்னம் இவைகளை நாற்சந்தியிலோ, நிழல் தரும் மரத்தின் அடியிலோ, தேரோடும் வீதியிலோ, சப்த கன்னிகைகள் கோயில் சமீபத்திலோ, சுடுகாடு முதலிய இடங்களிலோ மந்திரத்தை கூறி பலிதான முறைப்படி பலியை வைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பலிதான மையத்தில் சொல்லக்கூடிய மந்திரம், சாதாரணமாக எந்த சத்வன் தேவதத்தனை அறிந்து இங்கு இருக்கிறானோ அவனுக்கு இந்த பலி ஆகட்டும் என கூறப்படுகிறது.

இந்த பலியானது ஒரு தினம் முதல் 10 தினம் வரையிலும், ஒருமாசம் முதல் வருஷம் முடியும் வரையிலும், ஒரு வருஷம் நூறு வருஷம் வரையிலும் பிராணிகளின் விஷயத்தில் விதி கூறப்படுகிறது. இவ்வாறு பலிதான விதிபிரகாரம் ஒன்று மனுஷ்யர்களுக்கு வியாதி நாச விதியாக கூறப்படுகிறது. பிறகு லிங்கம் முதலியவைகளில் தேவனை பூஜித்து ஜபஹோமம் முடிந்து லோபித்தன்மை இன்றி தங்கத்தாலோ வெள்ளியாலோ வியாதியால் பீடிக்கப்பட்டவனின் உருவத்தையும், யமரூபத்தையும் சக்ரம் போன்றோ பிரதிபிம்பம் ஏற்படுத்தி முன்பு கூறிய விதிப்படி பூஜித்து அந்த பிரதிபிம்பத்தை சிவனுக்கு தானம் செய்யவும். பிறகு வியாதி அடைந்தவன் வியாதி இல்லாதவனாக ஆகிறான். இது சந்தேகம் இல்லை எனக் கூறுகிறார். இவ்வாறு பிரதி பிம்பதான வடிவம் வேறுவிதமாக மனுஷ்யர்களின் வியாதி போக்கக் கூடிய விதியில் விளக்கப்படுகிறது. இங்கு வெறும் பலிதானம் மட்டும் நான்கு மாதம் வரையிலோ ஆறுமாதம் வரையிலோ வியாதி முடியும் வரையிலோ செய்யவேண்டும் என சுருக்கமாக வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டு பக்ஷத்திலும் அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, அவ்வாறு சூர்ய, சந்திர கிரஹணங்கள், விஷுவபுண்யகாலம், இரண்டு அயனங்களிலும் தன்னுடைய ஜன்ம நக்ஷத்திரம், அனுஜன்ம நக்ஷத்திரம், சுத்தமான அழகான, கோசாணம் மெழுகப்பட்ட ஸ்தண்டிலம் அமைத்து, லக்ஷணத்துடன் கூடிய 25 கலசங்களையோ, அல்லது ஐந்து, ஒன்பது கலசங்களை ஸ்தாபித்து அவைகளை முறைப்படி அந்தந்த மந்திரங்களுடன் கூடி சந்தன புஷ்ப தூப, தீபங்களுடன் விசேஷமாக பூஜித்து, அதன் முன்பாக நான்கு திக்கிலும், ஸ்தண்டிலம் அல்லது குண்டத்திலோ, சமித்து நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும். அந்தகுண்டத்திலே உள்ள விபூதியால் அதன் வடக்குதிக்கில் உள்ள வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை ஸ்நானம் செய்விக்கவும். யவம் முதலிய மாவுகளால் பூசி அந்த தியானத்துடன் கூடியதாக அந்தந்த மந்திரத்தை ஸ்மரித்து அபிஷிக்கவும் அல்லது சம்ப்ரோக்ஷிக்கவும். பிறகு அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ரோகி ஆசார்யனை பூஜிக்கவும். இந்த வியாதியை போக்கும் விதியானது பட்டத்தில் உள்ள அரசர்களுக்கும் அஷ்டோத்தர சதகலச ஸ்தாபனமோ ஐம்பது கலஸஸ்தாபனமோ செய்து எல்லா கலசத்திலும் ஒரே மந்திரத்தை பூஜிக்கவும் என்று அரசர்கள் விஷயத்தில் கூறப்படுகிறது.

இவ்வாறு சாதாரணமான மனிதர்களுக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய முறை, விபூதிஸ்நானம் கும்பதீர்த்தாபிஷேகம் தீர்த்தபிரோக்ஷணம், விபூதி பூசுதல் ஆகிய வியாதியை போக்கக் கூடிய முறைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு அரசர், சாதாரண மனுஷ்யர்கள் விஷயத்தில் வியாதியை போக்குவதற்கு ஜலத்தின் நடுவில் நின்று கொண்டு மந்திரஜபத்தால் சாதிக்கக் கூடிய வேறு விதி வர்ணிக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஹோமவிதி மந்திர தர்பணவிதி கூறப்படுகிறது. பிறகு காட்டு புரசு இலையில் மந்திரத்தினை எழுதி தங்கம், வெள்ளி இவைகளால்சிறு உருண்டை மாதிரி செய்து புரசபத்திரத்தில் எழுதியதை நுழைத்து அந்த உருண்டையை (ரøக்ஷயை) கழுத்து, காது, சிகையிலோ கட்டிக் கொள்ளவும் எனக் கூறி அங்கே செய்யவேண்டிய ஹோமம் மந்திர தர்பணம் ஜபம் வரை கூறப்படுகின்றது. இந்த கர்மாவில் பிறரை அனுக்கிரஹம் செய்யவேண்டிய விஷயத்தில் ஈடுபட்ட ஆதி சைவனே ஆசார்யனாக ஆவான் என உயர்ந்ததாக கூறப்படுகிறது. பிறகு யானைகளின் விஷயத்தில் வியாதியை போக்கக் கூடிய முறை கூறப்படுகிறது. யானை கட்டும் இடத்தின் மத்தியிலோ சிவன் கோயிலிலோ, சூலம் ஸ்தாபிக்கப்பட்ட இடத்திலோ, விஷ்ணு, துர்கை, சூர்யன், மஹாகணபதி, சாஸ்தா, சப்தமாத்திருக்கள், இவர்களின் ஆலயத்திலோ ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, ஸ்வாமி நந்தவனத்திலோ, கோசாணம் மெழுகப்பட்ட இடத்திலோ முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து ஓர் கும்பம் அமைத்து அங்கு அங்கபூஜை சஹிதம் அகோராஸ்திரத்தை பூஜிக்கவும் என்று கூறி அகோராஸ்திரத்யான முறை, செய்யவேண்டிய பூஜாமுறையும் கூறப்படுகிறது. பிறகு ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பூர்ணாஹுதியின் முடிவில் அஸ்திர கும்பதீர்த்தத்தால் சம்ப்ரோக்ஷணம் அங்கு இருக்கும் விபூதியை பூசுதல் யானைகளுக்கு செய்யவேண்டும்.

அப்பொழுது வியாதிகள் அழிந்து போகின்றன. யானைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியும் புஷ்டியும் ஏற்படுகிறது. அவைகளின் தலைவன் விஜயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யவேண்டிய பலிமுறை கூறப்படுகிறது. முடிவில் இந்த பூஜை முறையே குதிரைகளை காப்பாற்றுவதற்கும் உள்ள விதியாகும். ஆனால் புகைக்கலர் உள்ள அகோராஸ்திரத்தை உத்தமமான ஸாதகர்களால் தியானிக்கப்படவேண்டும் என்று விசேஷம் விளக்கப்படுகிறது. பிறகு வியாதியை போக்கும் விஷயத்தில் அகோரமந்திர, அகோராஸ்திர மந்திரங்களின் பூஜையால் சாதிக்க வேண்டிய பிரயோகமும், அவ்வாறே கருங்கல் முதலிய திரவ்யங்களில் அகோரமூர்த்தியை ஏற்படுத்தி ஸ்தாபித்து அந்த பூஜையால் சாதிக்கக்கூடிய பிரயோகம் ஆவரணத்துடன் கூடிய அகோர மூர்த்தியின் பூஜையின் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஜப, ஹோம, பலி முறைகள் கூறப்படுகின்றன. பிறகு சாதாரண மனிதர்களுக்கும், விசேஷமான அரசர்களுக்கும், கால்நடைகளுக்கும் வியாதியை போக்கும் முறைகளில் பலவித பிரயோக விஷயங்கள் கூறப்படுகின்றன. முடிவில் அகோரமந்திரம், அகோராஸ்திர மந்திரம், இவைகளுக்கு எந்த ராஜ்யத்தில் ஹோம பலியுடன் கூடிய பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஆயுள் அபிவிருர்த்தி, நோயின்மை ஏற்படும். இதற்கு சமமாக வியாதியை போக்குவதற்கு காரணமான வேறுபிரயோகம் இல்லை என்கிறார். ஆகையால் முயற்ச்சியுடன் இந்த பிரயோகத்தை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 75வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா மனிதர்களுக்கும், அரசர்களுக்கும் உண்டாகும் நோயைப் போக்கும் முறையை சுருக்கமாகவும், விசேஷமாகவும் கூறுகிறேன்.

2. பசு, எருமை, யானை, குதிரை, ஆடு, எருது, முதலிய பிராணிகளுக்கு உண்டாகும், ஜ்வரம், மாரி, க்ருஹ பீடைகள், வலிப்பு முதலிய நோய்களைப் போக்கும் முறைகளை கூறுகிறேன்.

3. க்ஷயம் குஷ்டம் போன்ற நோய், சோகை, வயிற்றுவலி, மண்ணீரம் நோய், பைத்யம், வாத, பித்த, கபங்களின் ஆதிக்கம், தீ புண், மயக்கம், மதம் பிடித்த தன்மை, காயங்கள் இவைகளுக்கும்

4. மஹோத்ரம், இரத்தக் குழாய் வீக்கம், நீர்கட்டு இது போன்ற இன்னும், பெரிய நோய்களும், தலை, கண், பல் முதலியவைகளில் தோன்றும் நோய்கள்

5. முகம், வாய், கைகால்கள், இவைகளில் உண்டாகும் நோய்களுக்கும் கூறப்படாத நோய்களுக்கும், விசேஷமாக உண்டாகும் நோய் மற்றும் அரசர் முதலியவர்களுக்கும்

6. நோய்களை போக்குவதற்கும், மேற் சொன்ன பிராணிகளுக்கு இவை போன்ற நோய்கள் உண்டாகாமல் இருப்பதற்கும் சரீரபுஷ்டி ஏற்படுவதற்கும், உடலில் பலம் உண்டாவதற்கும் சாஸ்திர முறைப்படி விதிமுறை சுருக்கமாகக் கூறப்படுகிறது.

7. ஆலயத்திலாவது, புண்ய நிதிக்கரையிலாவது அல்லது மலை, காடு, வேறு புண்ய தேசம் இவைகளிலாவது அந்த பிராணிகள் வியாதி ஏற்பட்ட இடத்திலாவது தன் வீட்டிலாவது

8. பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட சுத்தமானதும் மனதிற்கு நிறைவை அளிக்கக்கூடியதும், மறைவானதும் இடையூறு ஏற்படாமல் காப்பாற்றப்பட்ட, இடத்தில் லிங்கத்தில் அல்லது மண்டலத்தில், கும்பத்தில், ஸ்தண்டிலத்தில் பலகை முதலியவைகளிலோ

9. ஈஸ்வரன் முதலிய தேவதைகளை ஆவாஹனம் செய்தும், சந்தனம், புஷ்பம், தூபதீப, ஹவிர் நிவேதனம் முதலியவைகளால் பூஜித்தும்

10. பஞ்ச கவ்யம், ஸ்நபனம், அபிஷேகம் முதலியவைகளால் ஈஸ்வரனை ஆராதித்து, மந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

11. பத்தாயிரமோ அல்லது ஐயாயிறமோ அல்லது இரண்டாயிரத்து ஐநூறோ, அல்லது ஆயிறமோ அல்லது ஐநூறோ அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது

12. அந்த மந்திரங்களுக்கு தகுந்தவாறு ஜபம் செய்ய வேண்டும். பிறகு அந்தந்த மந்திரங்களை உச்சரித்து நோய் உண்டானவனுடைய நிலையையும் சொல்லி நோயை நாசம் செய், நாசம் செய் என்று கூறி பிறகு

13. தேவதத்தனுடைய என்ற பதத்தை விசேஷமாக படித்து ஜபத்தை செய்து விருப்பமான (இஷ்டதேவதை) தேவனிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

14. பிறகு ஜபத்தை சந்தனம், புஷ்பம், அக்ஷதை, அருகு இவைகளோடு இறைவனிடத்தில் அர்பணம் செய்து இறைவனை வணங்கி ஹோமம் செய்ய அனுமதி பெற்று ஹோமம் செய்யும் இடத்தை அடைய வேண்டும்.

15. ஆராதிக்கப்பட்ட ஈச்வரனுக்கு முன்புபோல் அல்லது ஈசான்ய திக்கிலாவது நான் கோண வடிவில் அல்லது வட்டவடிவ குண்டத்தில் அல்லது ஸ்தண்டிலத்திலாவது முறைப்படி சிவாக்னியை ஏற்படுத்தி

16. அதில் இஷ்ட தேவதையை ஆவாஹனம் செய்து சாஸ்திரத்தில் கூறப்பட்டபடி சந்தனம், சமித்து, அன்னம், நெய், என்று முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும்.

17. ஜபம் செய்ததில் பத்தில் ஒருபங்காவது அல்லது நூற்றி எட்டு ஆவ்ருத்தியாவது ஹோமம் செய்து பூர்ணாஹூதியும் செய்து, அதிலிருந்து ரøக்ஷயை எடுத்து

18. கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஈஸ்வரனிடம் சென்று ஹோமகர்மாவை விக்ஞாபித்து துதித்து வணங்கி (ஈஸ்வரனுக்கு பரான் முகார்யம் கொடுக்க வேண்டும்)

19. கும்பத்தில் உள்ள தீர்த்தத்தால் நோயாளியை ஸ்நானம் அல்லது பிரோக்ஷணம் செய்து ஹோம பஸ்மாவினால் தகுந்த மந்திரங்களைச் சொல்லி உடம்பில் பூச வேண்டும்.

20. ஹோமத்தின் முடிவில் நெய் கலந்த தயிர் அன்னத்தால் ருத்திரன் முதலிய தேவதைகளுக்கு பலி கொடுக்க வேண்டும். இது ஓர்முறையாகும். வேறு முறையும் இப்பொழுது கூறப்படுகிறது.

21. நோயாளியின் உருவப் படிவம் போல் மாவினால் ஓர் உருவத்தையமைத்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து, பலி பூஜை வரையிலுமாவது பூஜித்து,

22. பலவிதமான காய்கறி, பக்ஷணவகைகளுடன் பாயஸம், பாசிபயிறுடன் சுத்தான்னம், நெய், தயிர், அப்பம் இவைகளுடன்

23. தினந்தோறும் மூன்று ஸ்ந்த்யா காலங்களில் அல்லது ஒருகாலத்திலாவது நாற் சந்தியிலோ யக்ஞத்திற்கு தகுந்த புண்ய விருக்ஷத்தின் அடியிலாவது

24. ஸப்தமாதர்கள் ஆலயத்தின் ஸமீபத்திலோவது, மயானத்திலாவது, எது தேவதத்தனை பிடித்திருக்கிறதோ

25. அதற்கு இந்த பலி ஆகட்டும் என்பது மந்திரத்தோடு மேற்கூறிய பொருட்கள் கொடுக்க வேண்டும். பலி ஓர் தினம் முதல் பத்து நாள் வரையிலும், ஓர்மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலுமாகவும்

26. ஓர் ஆண்டு முதல் நூறு வருடம் வரையிலும், மனிதர்களுக்கு பிராணிகளுக்குமாக தூப, தீபத்துடன் கூடியதாக இந்த பலியானது, கூறப்பட்டது.

27. பதாகம் என்ற உபசார கொடியை எடுத்து வந்து மேற்கூறிய பலிகளை செய்வது பொதுவானதாகும். இன்னும் வேறு விதமாகவும், நோயை தீர்க்கும் தன்மை கூறப்படுகிறது.

28. லிங்கத்திலோ அல்லது கும்பத்திலோ இறைவனை ஆவாஹனம் செய்து, ஜபஹோமங்களை முடித்துக் கொண்டு நூறு நிஷ்க்க அளவு தங்கத்திலாவது வெள்ளியிலாவது

29. ஐம்பது நிஷ்கத்திலாவது அல்லது இருபத்தைந்து நிஷ்கத்திலாவது பத்து நிஷ்கத்திலாவது ஐந்து நிஷ்கத்திலாவது

30. 2, 1/2 நிஷ்கத்தில் ஒரு நிஷ்கத்திலாவது அவரவர்கள் சக்திக்கு தக்கவாறு வ்யாதி உள்ளவனுடைய உருவம் செய்ய வேண்டும். பணக்குறைவை செய்யக்கூடாது. (நிஷ்கம் என்பது எண்பது குண்டுமணி எடை)

31. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களின் உருவத்தை நிர்மாணித்தோ, யமனுடைய உருவத்தையோ, பூமி சக்ரம் போன்றோ வேறு உருவத்தையோ

32. முன்கூறப்பட்ட முறைப்படி துதித்து இறைவனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ரோகம் போய் ரோகமில்லாது இருப்பது நிச்சயம்

33. இவ்விதம் செய்ய முடியாவிடில் நான்கு, ஐந்து, ஆறுமாதம் வரை பலிதானம் மட்டும் செய்தாலும் நோய் தீர்ந்து விடும்.

34. மற்றொரு விதத்தாலும் நோய் போவதற்கு முறை கூறப்படுகிறது. அஷ்டமியிலாவது, சதுர்த்தியிலாவது இரண்டு பக்ஷங்களின் பர்வாக்களிலாவது

35. கிரஹண காலத்திலாவது, விஷுவ புண்ய காலத்திலாவது, இரண்டு அயனங்களிலாவது ஜன்ம நக்ஷத்திரத்திலாவது அனு ஜன்ம நக்ஷத்திரத்திலாவது

36. பசுஞ்சாணத்தினால் மனதிற்கு நிம்மதியாக உள்ள இடத்தை அஸ்த்ர மந்திரத்தை சொல்லி பிரோக்ஷணம் செய்து, அங்கு ஸ்தண்டிலம் அமைத்து ஒன்பது கலசங்களையோ

37. இருபத்தி ஐந்து கலசங்கள் அல்லது ஐந்து கலசங்களையோ இரண்டு மரக்கால் அளவு ஜலம் பிடிக்கும் ஒரு கலசத்தையாவது வைத்து பூஜை செய்ய வேண்டும்.

38. எல்லா கலசங்களும் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்கள் சந்தனம், அக்ஷதை, அலங்கரிக்கப்பட்டு தங்க பிரதிமைகளோடும் மருந்துகளோடும் பலவித விதைகளோடும்

39. கூர்ச்சம், மாவிலைகளோடும் சந்தனம், அக்ஷதை, இவைகளோடும் வாசனை பொருள் நிறைந்த ஜலம், உள்ளதுமான அந்த கலசங்களை அதற்கு தகுந்த மந்திரங்களாலும்

40. சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளாலும் விசேஷமாக பூஜித்து அந்தந்த மந்திரங்களை நூறுமுறை கூறி அதற்கு முன்போ, நான்கு திசைகளிலுமோ

41. குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைத்து சிவாக்னியை ஆவாஹனம் செய்து, அதில் சமித்து, நெய் அன்னங்களோடு ஹோமம் செய்ய வேண்டும்.

42. அதிலிருந்து பஸ்மாவை எடுத்து வடக்கு பக்கத்தில் பசுஞ்சாணம் மெழுகப்பட்ட இடத்தில் பலகையில் இருக்கின்ற நோயுள்ளவர்களுக்கு ஸ்நானம் செய்வித்து

43. அந்தந்த மேற்பட்ட தேசத்திலுள்ள நோயால் பீடிக்கப்பட்டவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். யவை முதலான திரவ்யங்களினால் ஆன மாவுகளாலும் பசுஞ்சானத்தாலும்

44. வியாதிக்கு தகுந்த மந்திரத்தினால் தியானத்தோடு சொல்லி எடுத்த ரøக்ஷயை உடம்பில் பூசவேண்டும்.

45. பிறகு நோய் உள்ளவன், ஆசார்யனை பூஜிக்க வேண்டும். பட்டம் சூட்டிய ராஜாக்களும் சிற்றரசர்களுக்கும் இன்னும் மஹான்களுக்கும்

46. நூற்றியெட்டு கலசங்களையாவது அல்லது ஐம்பதுக்கும் குறையாத கசலங்களை வைத்து பூஜை செய்தல் வேண்டும்.

47. எல்லா கலசங்களிலும் ஒரே மந்திரந்தான் பூஜிக்கப்படுகிறது. ஆனால் நடுவில் உள்ள கலசத்தில் விசேஷமாக பூஜிக்கப்பட்டு அந்த தீர்த்தங்களால் மேற் கூறியவர்களை ஸ்னானம் செய்விக்க வேண்டும்.

48. நோயை போக்குவதற்கு வேறு முறையும் கூறப்பட்டுள்ளது. சூர்ய உதயத்திலிருந்து ஜலத்தில் நின்று கீழ்வரும் முறைப்படி மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

49. பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது இருபத்தி ஐந்தாயிரம் அல்லது ஆயிரம், நூற்றியெட்டு ஆவ்ருத்தியானது மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

50. ஹோம எண்ணிக்கைக்கு ஸமமாகவோ ஜப எண்ணிக்கைக்கு ஸமமாகவோ தர்பணம் செய்ய வேண்டும்.

51. சக்தி உள்ளவனாக இருந்தால் ஜலமத்தியில் நின்று நித்யம் ஜபம் செய்ய வேண்டும். இந்த விதமாகவோ காட்டுப் பூவரசுத்தோல் முதலியவைகளில்

52. நோயுள்ளவனுக்கு தக்கவாறு நல்ல நேரத்தில் நல்ல லக்னத்தில் அவரவர்களின் தேவனின் பூஜை முறைப்படியான எழுத்துக்களை குங்குமத்தால் எழுத வேண்டும்.

53. முன்பு கூறப்பட்ட ஜபம், தர்பணம், ஹோமத்துடன் கூடியும், ஜபத்தை மட்டுமோ, கோரோசனையால்

54. ஊசியால், அம்பினால், மந்திரங்களை எடுத்து எழுதி சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து மாத்திரை போன்றோ (தாயுத்து போன்றோ)

55. தங்கத்தினாலோ வெள்ளியிலோ, தாமிரத்திலோ, பஞ்சால் ஆன நூலோ அரக்கினாலோ கட்டி வியாதி தீரும்வரை தரித்துக் கொள்ள வேண்டும்.

56. பலமில்லாதவன் பலமுள்ளவனாகவும், பூமியில் எல்லோர்களாலும் பூஜிக்கப்படுகிறான். காதிலோ கழுத்திலோ, சிகையிலோ அல்லது கையிலாவது ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

57. ஆனால் மந்திர ஸான்னியத்தை முன்னிட்டு இடுப்பின் கீழே கட்டுதல் கூடாது. இப்படி தினமும் பூஜிரக்கப்படும் மந்த்ரம் எல்லா பயனையும் அளிக்க கூடியது.

58. கடமையுணர்வோ கூடினவனாய் தினமும் பூஜை ஜபம் மட்டுமோ அல்லது பூஜை, ஜபம், ஹோமம், தர்பணம் இவைகளை செய்விக்க வேண்டும்.

59. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் தீமைகளிலிருந்து விடுபட்டவனாகிறான். துர்பலம் உள்ளவன், பலமுள்ளவனாகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவனாகவும் ஆகிறான். அரசனாக இருந்தால் பலமுள்ளவனாகவும் எல்லோராலும் விரும்பத்தக்கவனாகவும் தர்மத்தில் அதிகம் ஈடுபட்டவனாகவும் ஆகிறான்.

60. சக்தியில்லாதவர்களுக்கு அவர்களால் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆசார்யன் இந்த கர்மாவில் அதிகாரமுள்ளவனாக ஆகிறான், அதிலும் விசேஷமாக ராஜாவை முன்னிட்டு செய்யும் கர்மாக்களில் வேறு யாருக்கும் இடமில்லை.

61. ஆகையால் பிறர்க்கு அனுக்ரஹம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்ட ஆதி சைவனிடத்தில் எப்பொழுதும் பூர்ணமான நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே எப்பொழுதும் ஆதிசைவன் என கூறப்படுகிறான்.

62. யானைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு சாந்தி சொல்லப்படுகிறது. யானைக் கொட்டாரத்தின் நடுவில் அல்லது அழகான இடத்திலும்

63. சிவாலயம், விஷ்ணு ஆலயம், துர்கை, ஸூர்யன், சாஸ்தா அவர்களின் ஆலயத்திலாவது ஸப்தமாதாக்களின் ஆலயத்திலாவது

64. நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், இவைகளுள் ஏதேனும் ஒன்றை பசு சாணத்தால் மெழுகி அஸ்த்ர மந்த்ரத்தை கொண்டு ஜலத்தைப் பிரோக்ஷித்து

65. முறைப்படி நெல், அரிசி முதலியவைகளால் ஸ்தண்டிலம் ஏற்படுத்தி மரக்கால் அளவு ஜலம் கொண்டதும் பொறி, தர்பம் இவைகளுடன் சேர்த்தும்

66. கூர்ச்சம், வஸ்த்ரம், வாசனைப் பொருள் நிறைந்த ஜலம் நிறைந்ததும் ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் இவைகளை மூன்று பல அளவோடும்

67. அருஹம் புல்லுடன் வெள்ளை அரிசியுடனும் சேர்த்து கும்பத்தில் அகோராஸ்ரத்துடன் கூடியதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

68. பத்மாஸனத்தில் வீற்றிருப்பவராகவும் ஆறு கைகள் மூன்று கண்கள், உள்ளவராக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் பூர்ண சந்திரனுக்கு சமமான காந்தியுள்ளவராகவும்

69. கபாலம், சூலம், வில், அம்பு, கத்தி, கேடயம் இவைகளோடு கூடியவராகவும் மேல் நோக்கிய கேசபாசத்தை உடையவராகவுமாக

70. மேற்கூறிய முறைப்படி அகோராஸ்த்ர உருவ அமைப்பை தியானித்தோ முன்கூறிய உருவ அமைப்புடன் வெண்மை நிறமாகவோ

71. சந்தனம், புஷ்பம், தூப தீபங்களால் உபசரித்து உபதம்சத்துடன் தாம்பூலத்துடனும் நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

72. தினமும் ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது அஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தல் வேண்டும்.

73. அதன் முன்போ அல்லது அதன் ஈசான்ய திக்கிலோ வட்டவடிவ குண்டமாவது நாற்கோணகுண்டமாவது, அமைத்து அதில் சிவாக்னியை ஆவாஹித்து ஹோமம் செய்தல் வேண்டும்.

74. ஸமித்து, நெய், அன்னம், எள், அரிசி முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். பாலுள்ள மரத்திலுண்டான புரசு முதலான மரங்களிலிருந்து பில்வம் முதலியவைகளிலிருந்தும் உண்டான

75. ஸமித்துக்கள் மிக மேலானது அல்லது அருஹம்பில் மேலானது என அறியவும். ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி முன் சொன்ன பொருளால் ஹோமம் செய்ய வேண்டும்.

76. பிறகு பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். ஹோம பஸ்மாவை எடுத்து கும்பத்தில் சேர்த்து இறைவனுக்கு பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

77. அந்த தீர்த்தத்தால் ஸ்நானம் செய்வித்து தினமும் அந்த ஹோம பஸ்மாவை தரித்துக் கொள்ள துஷ்டக்ரஹங்கள் விலகுகின்றன. நோய்கம் அழிகின்றன. அதுமட்டுமில்லாமல் சரீரபலமும் ஏற்படுகிறது, மேலும்

78. வேறு நோய்களும் ஏற்படுவதில்லை, ஆயுள் வளர்ச்சியும் உண்டாகிறது. எங்கு இது போன்று கார்யங்கள் செய்யப்படுகிறதோ அங்கு யஜமானன் வெற்றி உள்ளவனாக ஆகிறான்.

79. கோமயத்தால் மெழுகப்பட்ட மண்டபத்தில் ருத்ரன் முதல் ÷க்ஷத்ரபாலர் வரையும் உள்ள தேவதைகளுக்கு பலி கொடுத்து திக்பாலர் பலியும் கொடுக்க வேண்டும்.

80. அல்லது யானைகொட்டாரத்தின் ஸமீபத்தில் அல்லது ஹோமம் செய்த இடத்தில் பலியை கொடுக்கவும். குதிரை முதலியவைகளுக்கும் இந்த விதியே பொருந்தும்.

81. ஆசார்யரால் தூம்ரவர்ணம் (புகை கலர்) உள்ள ஈஸ்வரன் தியானிக்கத்தக்கவர், யானை கூட்டம், குதிரை, பசு, எருமை, ஆடு இவைகள்

82. அஸ்த்ர ராஜாவின் கருணையால் நன்கு காப்பாற்றப்பட்டும், அவைகள் நோய் நீங்கியதோடு அல்லாமல் நன்கு புஷ்டியாகவும் ஆகிவிடும்.

83. முற்பகலில் அல்லது நடுபகலில் அல்லது இரவில் இதை செய்ய வேண்டும். ஒருகாலம் அல்லது இரண்டு காலம் மூன்று காலம் செய்வது விசேஷமானது.

84. அரசன் இதை தினமும் செய்வானேயானால் புண்யம் செய்தவனாய் எங்கும் வெற்றி பெற்றவன் ஆவான். யஜமானன், ஸாதகன், திருப்தியடையும்படி பூஜிக்க வேண்டும்.

85. குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேறு விதமாகவும் காக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜலத்தினால் தர்பணம் செய்த பிறகு

86. சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்தில் பதினாறு மரக்கால் அல்லது எட்டு மரக்கால் அல்லது நான்கு மரக்கால் அல்லது இரண்டு மரக்கால்

87. அல்லது ஒருமரக்கால் ஏழையாக இருந்தால் அதிலும் பாதி நெல் பரப்பி, பரப்பிய நெல்லில் பாதியுள்ள அரிசியையும் பரப்பி

88. எள், பொறியையும், பரப்பி அதன் மேல் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ள கும்பத்தை வைத்து

89. தேங்காய், வஸ்த்ரம், கூர்ச்சம், மாவிலைகளோடு கூடியதும் வாசனைப் பொருள்களோடு ஜலம் நிறைந்துள்ளதும், முன்பு கூறப்பட்ட திரவ்யங்களோடு கூடியதுமாக அமைத்து

90. அதில் முன்கூறப்பட்ட தியானத்தோடு அகோரத்தை ஆவாஹித்து சந்தனம், புஷ்பம், தூபதீபங்களோடும்

91. பாயசத்தை தாம்பூலத்துடன் நைவேத்யம் செய்து, பிறகு ஹோமத்தை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.

92. ஸமித், நெய், அன்னம், எள்ளு, கடுகு, பொறி, பால் உள்ள மரத்தின் ஸமித்துக்கள் அல்லது அருகு இவைகளாலும்

93. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றிஎட்டு அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து ஆவ்ருத்தியாவது

94. ஒவ்வொரு திரவ்யத்தை அகோர மந்திரத்தால் அதே எண்ணிக்கையுள்ள அகோராஸ்த்ர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு

95. இரண்டு குண்டத்திலாவது ஒரு குண்டத்திலாவது ஹோமம் செய்யவும். பிரதான மந்திரத்தால் பூர்னாஹுதியையும் தர்பணத்தையும் செய்து

96. அல்லது தனியாக பூர்ணாஹூதி செய்து, மத்தியில் நெய்யோடு கூடிய அன்னம் பலி கொடுத்து எட்டு திக்குகளிலும் பலி கொடுக்க வேண்டும்.

97. ஸ்வாஹா என்ற சொல்லை முடிவுடையதாக அகோராஸ்த்ர மந்திரத்தால் குண்டத்திற்கு ஈசான திக்கில் பலி கொடுத்தல் கூறப்பட்டுள்ளது.

98. பெரிய ஜ்வாலையுள்ள தீயையே சிகையாகக் கொண்ட ஹே அகோராஸ்த்ர தேவரே எவனால் பூஜிக்கப்பட்டு தர்பணத்தாலும், பலியாலும் ஸந்தோஷம் அடைந்தீர்களோ அப்பேற்பட்ட நீங்கள்

99. அந்த யஜமானனையும் அவன் யானைகளையும் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளவும், ஸ்வாஹா என்று விசேஷமாகக் கூறி பலி, தர்பணம் கொடுக்க வேண்டும்.

100. இந்த கர்மாவை முதற்பகலிலோ, நடுபகலிலோ இரவிலோ செய்தல் வேண்டும். மஹாபலி கொடுக்க வேண்டுமானால் நடு இரவில் கொடுத்தல் வேண்டும் எப்படி எனில்....

படலம் 73: வைசிஷ்ய விதாந விதி...

படலம் 73: வைசிஷ்ய விதாந விதி...

73 வது படலத்தில் வைசிஷ்ய விதாநவிதி கூறப்படுகிறது. ஆசார்யன், ஸாதகன், புத்ரகன், ஸமயி, மஹேச்வரன், என்ற ஐவரும் ஸம்ஸ்காரத்தினால் ஒருவருக் கொருவர் குணமிகுதியினால் விசேஷமாக கூறப்பட்டது. ஆசார்யலக்ஷண படலத்தில் (உ.கா 24-53 பூர்வம் - 54) ஜாதி உயர்வு இல்லாதவர்கள் சாதாரணமாக சமயீ மஹேஸ்வர: என்று மாஹேஸ்வரலக்ஷணம் இவ்வாறு கூறப்பட்டது. பிறகு பிராம்மணாதி சதுர்வர்ணத்தவர்கள் அனுலோமர்கள் ஆறுவகைப்படும். இவர்களில் ஒருவர்க்கு ஒருவர் ஜாதியினால் உயர்வு கூறப்பட்டது. பிறகு வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கிரியையினால், நடத்தையினால் ஒன்றுக்கொன்று விசேஷம் உண்டு என்று கூறப்பட்டது. பிறகு ராஜகுரு, ராஜா, ராஜபத்தினி, ராஜ புரோஹிதர், ராஜபுத்திரர், மந்திரி இவர்களும் கூட வரிசையாக ஒருவருக்கொருவர் விசேஷமானவர். பிறகு சிவாலயத்தில் ஆசார்யன் நிஷ்களார்ச்சகர், சகளார்ச்சகர், ஜோஸ்யர் இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் உயர்ந்தவர். பிறகு மடாதிபதி ராஜா, ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டவர், நைஷ்டிகர், சிவ பக்தர்கள், பவுதிகர்கள், பரிசாரகர்கள், பூஜகர்கள், பக்தர்கள், பஞ்சாசாரியர்கள், ருத்திர கன்னிகைகள், தேவருக்குப் பணிவிடை செய்பவர்கள் இவர்கள் வரிசையாக அவர்களுடைய கார்யங்களில் விசேஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கூறப்படாத மற்றவர்களும் கூட அவரவர்களுடைய கார்யத்தின் வடிவிலே பிராம்மணர்கள் கிரமாக விசேஷம் அறிந்து ஆதரவுடன் பூஜிக்க வேண்டும் என கூறுகிறது. இவர்கள் அனைவரும் ஈஸ்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளில் தேசிகருடைய கட்டளையினால் விசேஷம் உண்டு என்பது தெரிகிறது. ஆகையினால் தேசிகனே சிவன் என்று அறிய வேண்டும். தேசிகனுடைய கட்டளை சிவனுடைய ஆக்ஞை என்று சிவாகமங்களில் கூறப்படுகிறது. ஆகையினால் தேசிகர் சிவனைபோல பூஜிக்க தகுந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு சன்மார்க்கம் முதலியவைகளில் கிரமமாக விசேஷம் இங்கு சம்மதம் என்று கூறி சன்மார்க்கம், புத்திரமார்க்கம், ஸஹமார்க்கம், தாசமார்க்கம் என்று கூறி இந்த நான்கின் தனிப்பட்ட லக்ஷணம் கூறி கிரமமாக ஒருவருக்கொருவர் விசேஷம் என்று கூறப்படுகிறது. இந்த அனேக பிரகாரத்தினால் குணத்தோடு கூடின சைவர்களோடு கூட விசாரித்து விசேஷம் நிர்ணயிக்கவும் என்று கூறப்படுகிறது.

1. பிறகு எல்லா கார்யங்களிலும் யாவருக்கும் விசேஷம் விதிக்கப்படுகின்றது. ஆசார்யன், சாதகன், புத்ரகன், சமயி என்றும்

2. மஹேச்வரன் என இந்த ஐவரும் ஒருவருக்கொருவர் குணம் அதிகமுடையவர். ஸம்ஸ்காரத்தினால் விசேஷமாக யாகம் முதலியவைகளில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

3. பிராம்மணர் முதலிய நான்கு பிரிவினர்கள் அனுலோமத்தினர் ஆறுபேர்கள் முன்பு போலவே குணம் அதிகமுள்ள பிரிவினர்கள் விசேஷமாக கூறப்படுகின்றது.

4. வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கார்யத்தினால் பிறகு நடத்தையினாலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

5. முதலில் ராஜகுரு, ராஜா, ராஜமஹிஷி அவர்களது புரோஹிதர் அவர்கள் புத்ரர்கள், மந்திரிகள் இவர்களை கிரமமாக விசேஷமாக கூறப்படுகிறது.

6. ஸகலமாகவோ, நிஷ்கலமாகவோ லிங்கமுள்ள சிவன் கோயிலில், ஆசார்யன், அர்ச்சகன், ஜோஸ்யரும், வரிசையாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

7. பிறகு மடாதிபதி, ராஜா அவரால் நியமிக்கப்பட்டவர், எனது பக்தர்கள் நைஷ்டிகர்கள், பவுதிகர்கள் கூலி இல்லாதவர்கள்.

8. பரிசாரகர், அர்ச்சகர்கள், பக்தர்கள், கூலி உடையவர்கள், தானாக பாடகூடியவர்கள் வீணை, மந்திரம், பாட்டு இவைகளில் முழுமையாக ஈடுபட்டவர்கள்.

9. பஞ்சாசார்யர்கள் எனது பெண்களான தேவதாசிகள், பாடுகின்றவர்கள், வாத்யம் வாசிக்கிறவர்கள் இவர்கள் முறையாக அவரவர் வேலைகளில் விசேஷமாக கூறப்பட்டுள்ளனர்.

10. ஆகையால் மற்றவர்கள் அவரவர் வேலையை அனுசரித்து பிராம்மணர் முதலியவைகளை கிரமமாக அறிந்து ஆதரவுடன் விசேஷமாக கூறப்படுகின்றது.

11. ஈச்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளை உசிதப்படி பூஜித்து ஈஸ்வரனுடைய கட்டளையால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

12. உத்தமமான குருவானவர் எதனால் தான் தேசிகன் என கூறினாரோ, ஈச்வர ஆக்ஞையே என்னுடைய ஆக்ஞையாக சிவாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

13. அதனால் என்னைப்போல் முதலில் எல்லோருக்கும் பூஜிக்கத் தகுந்தவர் நன்னடத்தை முதலியவைகளினாலும் வரிசையாக விசேஷமாக உள்ளவர் இங்கு ஸம்மதமாவர்.

14. ஸன் மார்க்கி, புத்ர மார்க்கீ, ஸஹ மார்க்கீ, தாச மார்க்கீ இவர்களை முறைப்படி விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

15. நன் நடத்தை உள்ளவன் ஸம்ஸ்காரமின்றி பக்தி உள்ளவன் யோக்யமானவன் ஒருமைப்பாட்டு உணர்வை உடையவன். அஹங்காரமின்றி சிவயோகத்தில் ஈடுபட்டுள்ளவன்.

16. எல்லா சிவாகமங்களையும் கற்றுணர்ந்த புத்ரமார்க்கீயானவன் புத்ரனுடைய அமைப்பால் செய்யப்பட்ட மனிதன் சைவாசார்யன் என்றும் சாந்தானிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

17. அக்னி கார்யம் ஜபம் ஹோமம் மிகவும் ஈடுபட்டுள்ளவர் பிரவேசகர் சிவக்ஞானி அவுப தேசிகர் எனப்படுகிறார்கள்.

18. நந்தவனம் சிவலிங்கம் பிம்பம் ஆலயம் இவைகளை அமைப்பது சைவ சம்பந்த நடனங்கள் பாட்டுக்கள், ஸ்தோத்ரங்கள் வாத்யங்கள் இவைகளை செய்பவர் தாசமார்க்கீயாகும்.

19. இவ்விதமாக பலமுறைப்படி சைவர்கள் விசாரணை செய்து விசேஷமான பூஜை கார்யங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் வைசிஷ்ய விதான விதியாகிற எழுபத்தி நான்காவது படலமாகும்.

சனி, 12 அக்டோபர், 2024

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்....

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்...

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்

2) முழுத்தேங்காய் - நாரிகேலம்

3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ

4) வாழைப்பழம் - கதலி பலம்

5) மாம்பழம் - ஆம்ர பலம்

6) விளாம்பழம் - கபித்த பலம்

7) நாகப்பழம் [நாவல்பழம்] - ஜம்பு பலம்

8) பலாப்பழம் - பனஸ பலம்

9) சாத்துக்குடி - நாரங்க பலம்

10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்

11) பேரிக்காய் - பேரீ பலம்

12) கொய்யாப் பழம் - பீஜா பலம்

13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்

14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்

15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்

16) கரும்பு - இக்ஷூ தண்டம்

17) மாதுளம் பழம் - தாடிமீ பலம்

18) எலுமிச்சம் பழம் - ஜம்பீர பலம்

19) வடை - மாஷாபூபம்

20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்

21) எள்ளுச்சாதம் - திலோன்னம்

22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்

23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்

24) வெண் பொங்கல் - முத்கான்னம்

25) புளியோதரை - திந்திரிணியன்னம்

26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்

27) எலுமிச்சைசாதம் - ஜம்பீர பலன்னம்

28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்

29) தயிர் சாதம் - தத்யோன்னம்

30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்

31) சுண்டல் - க்ஷணகம்

32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்

33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்

34) புட்டு - குடமிச்சபிஷ்டம்

35) முறுக்கு - சஷ்குலி

36) இட்லி - லட்டுகானி

37) கொழுக்கட்டை - மோதகானி

38) அப்பம் - குடாபூபம்

39) மாவிளக்கு - குடமிஸ்ஸ பிஷ்டம்

40) அதிரசம் - குடாபூபம்

41) உளுந்து - மாஷம்

42) பயறு - முத்கம்

43) எள் - திலம்

44) கடலை - க்ஷணகம்

45) கோதுமை - கோதுமா

46) அரிசி - தண்டுலம்

47) அவல் - ப்ருதுகம்

48) நெய் - ஆஜ்யம்

49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்

50) பால் - க்ஷீரம்

51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்

52) வெண்ணெய் - நவநீதம்

53) கல்கண்டு - ரஸ கண்டாளீ

56) மல்லிகைப்பூ - மல்லிகா புஷ்பம்

57) செவ்வந்திப்பூ - ஜவந்தி புஷ்பம்

58) தாமரைப்பூ - பத்ம புஷ்பம்

59) அருகம்புல் - தூர்வாயுக்மம்

60) வன்னி இலை - வன்னி பத்ரம்

61) வில்வ இலை - பில்வ பத்ரம்

62) துளசி இலை - துளஸி பத்ரம்

63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்

64) விளக்கு - தீபம்

65) சூடம் - கற்பூரம்

66) மனைப்பலகை - ஆசனம்

67) ரவிக்கை துணி - வஸ்த்ரம்

68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை

69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்

70) திருமாங்கல்ய சரடு - மங்கல சூத்ரம்

71) மற்ற பட்சணங்கள் - விசேஷ பக்ஷணம்

72) பூநூல் - யக்ஞோபவீதம்

73) சந்தணம் - களபம்

74) விபூதி - பஸ்பம்

75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா

வைகானசம்...

வைகானசம்...

வைணவ சமயத்தினர் பின்பற்றும் இரண்டு ஆகமங்களின் தொன்மையான ஒன்றாகும். விகநச முனிவரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஆகம நெறியினைப் பின் பற்றுவோர் வைகானசர் ஆவர். திருவேங்கடம் (திருப்பதி) திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) போன்ற, திவ்யதேசங்களில் வைகானச அர்ச்சகர்கள் தான் பெருமாளுக்கு ஆராதனம் செய்கிறார்கள். இவர்கள் வடகலை வைணவ சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மூலவர் திருமேனியைத் தொடும் உரிமையுடையவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவியாகப் பணி புரியும் பட்டர்களுக்கும் மூலத் திருமேனியைத் தொடும் உரிமை இல்லை. இவர்கள் நெறி வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் இராமாநுசரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் திவ்வியப் பிரபந்தங்களை இவர்கள் ஓதுவதில்லை.

பஞ்ச சம்ஸ்காரம் (வைணவனாக எண்ணப்படுவதற்குத் தேவைப்படும் ஐவகைத் தூய்மைகள்) என்ற வைணவ தீட்சையை இவர்கள் பெறுவதும் இல்லை. தாயின் கருவிலேயே இம்முத்திரை தங்களுக்கு இடப்பட்டு விட்டது என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.

பரத்துவம் (வைகுண்டத்தில் உள்ள நிலை) 

வியூகம் (பாற்கடலில் உள்ள நிலை)

விபவம் (அவதாரநிலை) 

அந்தர்யாமி (உயிரில் கரந்து நிற்கும் நிலை) 

அர்ச்சை (கோவில்களில் குடி கொண்டுள்ள திருவுருவ நிலை) 

என்னும் வைணவ வழிபாட்டு நெறிகளில் அர்ச்சாவதாரத்தையே (கண்ணுக்குப் புலனாகும் பொருள்களாற் செய்யப்பெற்றுக் கோவில்களில் வழிபடப்பெறும் திருமேனிகளை வணங்குவதையே) வைகானசர் பின் பற்றுகின்றனர். பிற நெறிகளை ஏற்பதில்லை.

ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் காலத்தில் உருவான கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதால், ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே வைகானசர் தமிழ்நாட்டுக் கோவில்களில் பணியாளராக நிலை பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருது. 



வெள்ளி, 11 அக்டோபர், 2024

படலம் 72 : கரண லக்ஷண முறை...

படலம் 72 : கரண லக்ஷண முறை...

72 வது படலத்தில் கரண லக்ஷண முறை கூறப்படுகிறது. முதலில் சமித்து, பின்னல் போன்ற அமைப்புமுறைகள், விஷ்டரம், பரிதி, கூர்ச்சம் என்று இவைகளின் லக்ஷணமும் அமைப்பு முறையும் அதை உபயோகிக்கும் இடமும் அதை செய்ய உபயோகமான திரவ்யங்களும் விளக்கப் படுகின்றன. கூர்ச்ச விஷயத்திலோ உத்கூர்ச்சம், அதக்கூர்ச்சம், அந்தக் கூர்ச்சம், என்று மூன்று பேதம் கூறப்படுகிறது. உத்கூர்ச்சம் சாந்தி கர்மாவிற்கும், அதக்கூர்ச்சம் புஷ்டிகர்மாவிற்கும் அந்த கூர்ச்சம் ஆபிசாரத்திற்கும், செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பவித்ர லக்ஷணமும் அதை உபயோகிக்கும் முறையும், அதன் திரவ்யமும் கூறப்படுகின்றன. பிறகு பவித்திரத்திற்காக ஸ்வர்ணத்தால் நிர்மாணம் பண்ணப்பட்ட பவித்ர மோதிரமும் விரும்ப தக்கது என கூறப்படுகிறது. தர்பமாலையின் லக்ஷணமும், அதை அமைக்கும் முறையும், அதன் திரவ்யமும் விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டையில் செய்யவேண்டிய தான தோரணத்தின் அளவு தோரண திரவ்யம், அதை உபயோகிக்கும் முறை, ஏற்படுத்தும் முறை இவைகள் கூறப்படுகின்றன. பிறகு தர்பணம், பூர்ணகும்பம், வருஷ்பம், யுக்ம சாமரம், ஸ்ரீவத்சம், ஸ்வதிகம், சங்கம், தீபம் ஆகிய சிவனின் அஷ்டமங்களம் என்று பெயர்களை கூறி அதை செய்யும் லக்ஷணம், அதன் அளவு முறை அதன் உருவ அமைப்பு, அதற்கு உபயோக மான திரவ்யங்கள் ஆகியவைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற தேவர்கள், தேவீ, இவைகளுக்கு இந்த விஷயத்தில் விருஷபத்தை விட்டு அந்த மூர்த்திகளின் வாகனத்தை பூஜிக்கவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. கிராமம் முதலான இடங்களிலோ தன்னுடைய கிராஹத்திலோ யஜமானனின் உருவத்திற்கு தக்கவாறு தர்பணம் முதலான திரவ்யங்களை வரைய வேண்டும் என கூறி, அதன் அளவுகளை கூறுகிறார். ஸ்திரீகளின் சிரசில் இருக்கும் படியாகவோ தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களை செய்யவும் என கூறுகிறார். தர்பணம் முதலிய அஷ்டமங்கலங்களில் பூஜிக்க வேண்டிய தேவதைகளை நிரூபிக்கிறார். பிறகு வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், த்வஜம், சூலம், பத்மம், சக்ரம் என தசாயுதங்களின் பெயர் நிரூபிக்கப்படுகின்றன.

பிறகு த்வஜமோ, கதையோ யென்று வேற்றுமையாக கூறப்படுகிறது. பிறகு தண்டத்தை தவிர்த்து, த்வஜமோ, அங்குசமோ செய்யலாம். தசாயுதங்கள் யாகத்திற்கு சம்மந்த பட்ட விருக்ஷங்களாலோ, உலோகங்களாலோ செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. தேவர்களை அஞ்சலி கையுடன் கூடியதாக செய்து அவர்கள் சிரசில் தசாயுதங்களை கல்பிக்கவும் என கூறப்படுகிறது. தசாயுதங்களில் சக்தியும் கதையும், ஸ்திரீ ரூபமாகும். மற்றவை புருஷலக்ஷணங்கள் என கூறப்படுகின்றன. தசாயுதங்களின் விஷயத்தில் அளவுகள் அதை செய்யும் முறை பிறகு ஸ்ருக்சுருவம் அமைக்கும் முறை விஸ்தாரமாக கூறப்படுகிறது. கரணங்கள் செய்யும் விஷயத்தில் புதியதாக செய்தால் சிரேஷ்டமானது. அது முடியாவிட்டால் பணத்தை கொடுத்து பழைய கரணங்களை ஆசார்யனிடமிருந்து வாங்கிக்கொள்ளவும். முன்பு செய்யப்பட்டதான திரவ்யங்களை கிரஹிக்கும் விஷயத்தில் பிராயசித்தம் செய்யவும் எனக் கூறி பிராயச்சித்த முறை கூறப்படுகிறது. பிறகு எந்த சாஸ்திரத்தினால் எந்த கார்யம் முன்பு அனுஷ்டிக்கப்படுகிறதோ அங்கு அந்த சாஸ்திரசித்தத்தினால் செய்யப்பட்ட கரணமே கிரஹிக்க வேண்டும். அங்கு சொல்லப் படாததை வேறு கிரந்தத்தினால் கிரஹிக்க வேண்டும். சொல்லப்படாததை உத்ஸவம் முதலியகர்மாக்களில் அஸ்திரம், பிரதிமை தேவ உபகர்ணாதிகள் எல்லாம் அந்த ஆலய சித்தமாகவே இருப்பது சிரேஷ்டம். அந்தலிங்கம் முதலியவைகளின் வேற்றுமை ஆயாதி முதலான அளவுகளால் அமைப்புடன் கூடியதாகவோ வேறு ஆலயத்தில் இருந்ததாகவோ கிரஹித்து கொள்ளக் கூடாது என கூறப்படுகிறது. பிறகு ஒருஸ்தானத்திலிருந்து வேறு ஸ்தானத்திற்கு கொண்டு செல்லும் தோஷ சாந்திக்காக, அனுஷ்டிக்க வேண்டிய பிராயசித்தவிதி கூறப்படுகிறது. முடிவில் யாகசாலை முதலியவைகளில் செய்ய தோரண விஷயங்களின் லக்ஷணம் அளவுமுறைப்படி கூறப்படுகிறது. இவ்வாறு 72வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பூஜைக்கு உபயோகிக்கும் பொருட்களின் அமைப்பு முறையை சுருக்கமாக கூறுகிறேன். யக்ஞ சம்பந்தமான மரங்களிலிருந்து உண்டானதும், பன்னிரண்டங்குலமுடையதாகவும் உள்ளது சமித்துக்களாகும்.

2. அந்த ஸமித்துக்களும் தோலுடன் கூடியதாகவும், ஸமமாக வெட்டியதாகவும் வளைவு, முடிச்சு இல்லாததாகவும் இருக்க வேண்டும். முப்பது தர்ப தளங்களில் நெருக்கமானதும் ஒருமுழ அளவாக வெட்டப்பட்டதாகவும்

3. பின்னல் போன்றதாகவோ, முறுக்கியதாகவோ, தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதாக (விஷ்டரம்) இருக்க வேண்டும். அந்தந்த குண்ட மேகலை அளவுள்ளதாகவும் நுனியுள்ளதாகவும் நேரானதாகவும் அந்த குண்டத்திற்கு ஏற்பட்ட சமித்து உடையதாகவும்

4. திவாரம் முதலியன இல்லாததாகவும் ஸமமாக வெட்டியதாகவும் பரிதிகள் (சமித்து) இருக்க வேண்டும். நான்கு விஷ்டரமும் பரிதியும் அவ்வாறே (4) உள்ளதாக நினைக்க வேண்டும்.

5. மூன்று தர்பம் முதற்கொண்டு ஒவ்வொரு தர்பம் அதிகரித்ததாக முப்பத்தியாறு தர்பம் வரையிலும் கூர்ச்சத்திற்காக தர்பையை கிரஹிக்க வேண்டும்.

6. அதே முப்பத்தாறு மாத்ர அளவான நீளமும் ஆகும், பதினோரு மாத்ர அங்குல அளவினால் முடிச்சாகும். அரையங்குல பத அதிகரிப்பால் இரண்டங்குல அளவு வரையில்

7. முடிச்சு பிரதட்சிணையாக சுற்றப்பட்டு, சிகையளவு இரண்டு மாத்ரையாக அமைக்கவும். ஒரு மாத்ரையங்குல அதிகரிப்பால் ஒன்பது மாத்ரையளவு வரையிலும்

8. முடிச்சு உள்ளதாகவும், நுனி முடிச்சு இல்லாமலும் கூர்ச்சங்கள் கூறப்பட்டன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்கள் கூர்ச்சத்தின் முறையே அடி, நுனி, நடுபாகங்களில் இருப்பவர்களாக எண்ணவேண்டும்.

9. இது உத்கூர்ச்ச நியாஸபக்ஷமாகும். அத: கூர்ச்சத்திற்கு விலோமமான முறையாகும். உத்கூர்ச்சம் சாந்தியையும், அத: கூர்ச்சம் புஷ்டியையும் கொடுக்க வல்லதாகும்.

10. அந்த கூர்ச்சம் (உள்கூர்ச்சம்) செய்யக் கூடாது. அது ஆபிசாரத்திற்கு சொல்லப்பட்டது. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து தர்பங்களால் அடிநுனியுடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்க வேண்டும்.

11. பவித்ரத்தை வலப்பக்கமாக சுற்றியபடி முடிச்சு போடப்பட்டோ இல்லாமலோ, மோதிரவிரலுக்கு உகந்த தான திவாரத்தை உள்ளதாக வேண்டும்.

12. முன்பு கூறப்பட்ட முடிச்சை மேலே உடையதாகவும் மிக அழகாகவும் முன்பு கூறியதுபோல வலப்பக்கமும் இரு பக்கங்களிலும் தேவதாதிஷ்டி தமாகச் செய்து

13. கையில் சேர்க்க வேண்டும். தேவார்ச்சனை செய்யும் காலத்தில் ஸ்வர்ணத்தால் (தங்கம்) நிர்மாணிக்கப்பட்ட அங்குலீயபவித்ரம் விருப்பப்பட்டதாகும்.

14. இருபத்தி மூன்று எண்ணிக்கையுள்ள தர்பைகளால் நிர்மாணிக்கப்பட்டதும், பன்னிரண்டு மாத்ரை முதல் முப்பத்தாறங்குலம் வளைந்ததாகவும்

15. விருப்பப்பட்ட இடைவெளியுடையதாக தொங்குவதாக நிர்மாணிக்கப்பட்டதும், சுண்டுவிரல் கணமுள்ளதாகவும் தர்பமாலையை செய்ய வேண்டும்.

16. அரசிலைகளால் அழகுபடுத்தப்பட்ட ரஜ்ஜூவாவது செய்ய வேண்டும். ஒருமுழ அளவு முதல் மூன்றங்குல அதிகரிப்பால்

17. பதினைந்து முழ அளவு வரை நீளமாகும், அதன் பாதி அளவு அகலமாகும். ஸமான மானதாகவும், நடுவில் எட்டில் ஓர்பங்காகவோ ஒன்பது அளவுள்ளதாகவோ கூறப்பட்டுள்ளது.

18. வாயிற்படி அளவு உயர, அகல, கனஅளவுகளாலோ தூண்களுக்கும் திவார ஆஸனங்களுக்கும் மூன்றங்குல அளவு அதிகரித்ததாக அளவாகும்.

19. நான்கங்குல அதிகரிப்பால், முப்பதங்குலம் வரையிலான அளவுள்ளதாக யக்ஞவ்ருக்ஷ மரங்களால் பிரதிஷ்டை முதலான கார்யங்களில் தோரணம் செய்தல் வேண்டும்.

20. கற்சிலையினாலோ, செங்கல்லினாலோ மரங்களினாலோ, தோரணம் செய்தல் வேண்டும். விருப்பப்பட்ட அளவு குழிதோண்டியும் அதே போல் அளவும் ஆகும்.

21. வாயிற்படியின் குறுக்கு பட்டையில் த்ரிசூலம், ஒன்பது சூலம், பஞ்ச சூலமோ ஏழங்குலம் ஆரம்பித்து ஐந்தங்குல வ்ருத்தியாக

22. பதினைந்து மாத்ரங்குலம் வரையில் த்ரிசூலத்தின் நீளம் (உயரம்) அமைக்கவும். அகலத்திலிருந்து கால்பாக அதிக அளவால் இரண்டங்குலத்திலிருந்து பன்னிரெண்டங்குலம் வரையிலும்

23. எவ்வளவு அளவு கணம் வேண்டுமோ, அந்த அளவு கனத்தை விருப்பமுள்ள அளவுப்படி செய்யவும். இவ்வாறு வாசற்படி தோரண அளவு கூறி அஷ்டமங்கலம் கூறப்படுகிறது.

24. ஒன்பதங்குலம் முதல் ஐந்தங்குல அளவு அதிகரிப்பால் முப்பத்தாறங்குல அளவு வரை கனமான அஷ்டமங்கலத்தின் அளவை கல்பிக்கவும்.

25. மேற்கூறிய அளவில் கால்பாகம், அரை பாகம், மூன்றில் ஒருபாக அளவோ, அவைகளின் அளவாக அமைக்கவும். இடைவெளியின் எட்டு பாகத்தில் ஒன்பதளவு உதாஹரணமாக்கப்பட்டுள்ளது.

26. கனமானது ஓரங்குலத்திலிருந்து கால் அங்குல அதிகரிக்கையால் ஏழங்குலம் வரையில் யக்ஞஸம்பந்த வ்ருக்ஷங்களாலோ உலோகங்களாலோ அஷ்டமங்கலம் செய்ய வேண்டும்.

27. தர்பணம் (கண்ணாடி) பூர்ணகும்பம், வ்ருஷபம், இரட்டைச்சாமரம், ஸ்ரீவத்ஸம், ஸ்வஸ்திகம், சங்கு, தீபம் இவைகளின் சிவனின் அஷ்டமங்கலமாகும்.

28. மற்ற தேவர்களுக்கும், தேவீகளுக்கும் வ்ருஷபத்தை விட்டுவிட்டு அந்த ஸ்தானத்தில் அவரவர்களின் வாஹனங்களை கிரஹிக்க வேண்டும்.

29. சைவாஷ்டமங்கலம் தேவர்களுக்கும், ஆச்ரமத்தை உடையவர்களுக்கு கிராமங்களிலோ தன் வீட்டிலோ, யஜமானனை அனுசரித்த உருவமுடையதாக

30. தர்பணம் முதலியவைகளை வரையவும், அதன் அளவு இப்பொழுது கூறப்படுகிறது. ஐந்தங்குலம் முதல் ஓரங்குல அதிகரிப்பதால்

31. இருபத்தைந்து மாத்ரை அளவுள்ளது வரை அதன் கனம் அமைக்க வேண்டும். மேற்கூறிய அளவை அனுசரித்து அகல அளவை பாதத்துடன் கூடியதாகவோ தர்பணம் (கண்ணாடி) அமைக்க வேண்டும்.

32. கால்பாக அளவோ, அல்லது அரைபாக அளவாலோ அதற்கு பாதம் அமைக்க வேண்டும். அவ்வாறே பூர்ணகும்பத்திலும் பாதஅளவு அமைக்க வேண்டும்.

33. தன்முகம் குறுக்களவாக இருந்தும் கொடியுடன் கூடியதாகவும் கொடியின் அளவு வெளிக் கொணர்ந்ததாகவும் அவ்வாறே வ்ருஷபத்தின் பாத அளவும் நின்ற கோலத்துடனோ அமர்ந்த கோலத்துடனோ

34. தாமரை போன்ற பாதமுடையதாகவும், மேலே குடை சின்னமுடையதாகவும், ஸ்ரீவத்ஸமானது கூறப்பட்டு கிராம அளவை உடையதாக இருக்கும்.

35. சங்கமானது ஊர்த்வமுகமாகவும் கீழே ஸ்பர்ச்சிக்காமலோ அமைக்கவும். ஸ்ரீவத்ஸத்தில் தாமரை போன்ற பாதமும், குடையும் அமைக்க வேண்டும்.

36. மேற்கூறிய அஷ்டமங்கலங்களை ஸ்தீரி களின் (பெண்) தலையில் வைத்ததாகவோ அமைக்கவும். அவர்களின் தேவதைகளை ஹே, பிராம்மணர் களே, கேளும், கண்ணாடியில் சூர்யனும் பூர்ண கும்பத்தில் வருணனும் பூஜிக்காதவர்களாவர்

37. சாமரத்தில் வாயுபகவானையும், ஸ்வஸ்திகத்தில் ஸரஸ்வதியையும், சங்கத்தில் விமலனாகிய சந்திரனையும், தீபத்தில் அக்னி பகவானையும் பூஜிக்க வேண்டும்.

38. ஸ்ரீவத்ஸவத்தில் லக்ஷ்மியையும், வ்ருஷபத்தில் வ்ருஷபத்தையும் அவரவர் மந்திரத்தினால் பூஜிக்கவும். கிழக்கு, மேற்கு திக்கை நோக்கியதாக இரட்டைசாமரம் அமைக்க வேண்டும்.

39. ஒவ்வொன்றையும் வேதிகையின் வலது, இடது பாகமாக வைத்து பூஜிக்கவும். அஷ்டமங்கலத்ரவ்ய ரூபமாக வைக்காமல் அந்த ஸ்தானத்தில் அவற்றை பூஜிக்க வேண்டும்.

40. வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், (கத்தி) பாசம், அங்குசம், த்வஜம் (கொடி) கதை சூலம், பத்மம், சக்ரம் என்று தசாயுதம் அமைக்க வேண்டும்.

41. தண்டம் என்ற ஆயுதத்தை எடுத்து விட்டு த்வஜமும், அங்குசமுமோ அமைத்து பூஜிக்கவும். ஹே, பிராம்மணர்ளே, உலோகங்களாலோ, யக்ஞவ்ருக்ஷங்களாலோ அமைக்கவும். உலோகத்தால் செய்தால் பிம்ப அளவு முறைப்படி செய்ய வேண்டும்.

42. தேவரூபங்களை கைகளால் கூப்பிய கரமுடையதாக அமைக்கவும். சக்திக்கும், கதைக்கும் ஸ்தீரி (பெண்) உருவமாக அமைக்கவும். மற்றவைகளை ஆண் உருவமாக அமைக்க வேண்டும்.

43. ஒன்பது தாள அளவுள்ளதாக அமைப்பு முறை கூறப்படுகிறது. அவைகளின் தலைமேலோ, கையிலோ, கிரீடத்தின் மேலோ வஜ்ரம் முதலியவைகளை அமைக்க வேண்டும்.

44. தேகலப்தாங்குல அளவினால் அவைகளின் அளவு முறை கூறப்படுகிறது. அவைகளை முப்பத்தாறங்குல நீளமும், எட்டங்குல அகலமுமாகவும்

45. பதினைந்தங்குலம் முதல் இரண்டங்குல அதிகரிப்பால், நாற்பத்தியொன்பது மாத்ரங்குல அளவுவரை நீளமாகும்.

46. இதுவரை உலோக பிம்ப அளவு கூறி தாருஜ (மரம்) பிம்பஅளவு கூறப்படுகிறது. மாத்ராங்குல அளவினால் விருப்பப்பட்ட முறைப்படி செய்யவேண்டும், அதன் விஸ்தார அளவு கூறப்படுகிறது.

47. ஸ்ருக், ஸ்ருவம், முறைப்படி செய்யவேண்டும். அதன் அமைப்பு முறை கூறப்படுகிறது. அதன் பக்கவாட்டிலோ, அந்த மரத்தின் நடுவிலோ அதற்கு திவாரம் அமைக்க வேண்டும்.

48. முப்பத்தாறங்குலம் அல்லது முப்பத்தைந்து அங்குல அளவு நீளமாகவோ, அதன் கனமானது ஆறங்குலமும், வேதிகை ஆறங்குலத்திலும் கட்டை விரம் பருமன் கர்ணிகையும் அமைக்க வேண்டும்.

49. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற அளவினால் குழியானது அமைக்கவும். ஏழரை அங்குல அளவு இடைவெளி விடாததான ஓட்டையையும், சதுரச்சரம் போன்ற அழகான முகத்தையுடையதாக அமைக்க வேண்டும்.

50. சுண்டுவிரல் அளவு நெய் செல்லும் உத்தமமான திவாரத்தை (ஓட்டையை) அமைக்கவும். சுருக்கின் அடிபாக கலச அளவு ஆறங்குல நீளம்வரை தண்டத்தின் நுனிவரையிலும் நான்கங்குல அளவில் வேதிகையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

51. விருப்பப்படி கலசத்தின் அளவையும் இரண்டங்குல அளவால் வேதிகையையும் அமைக்கவும். பலவித மரத்துண்டுகளால் தாமரையிதழ்கள் போல் அலங்கரிக்கப்பட்ட

52. ஸ்ருக்கை மடக்கின் அடிபாகம் எவ்வாறிருக்குமோ அவ்வாறாகவும் பக்கத்திலுள்ள கர்ணபாகம் ஒருபாகம் குறைந்த ஐந்து மாத்ரையால் (4 மாத்ராங்குல அளவில்)

53. சுண்டுவிரல் பருமன் தண்டமும், நேரானதாக அமைத்து ச்ருக்கை செய்ய வேண்டும். அல்லது முப்பதங்குல நீளஅளவும் எட்டங்குல விஸ்தாரமும் (அகலம்)

54. அதன் பாதி நான்கங்குல கனமும், முகமானது ஐந்து மாத்ராங்அகுல அளவுமாகும். முகமானது முக்கோணமாகவும், நடுவில் ஓட்டை யையுடையதாகவும் அமைக்க வேண்டும்.

55. பக்கவாட்டுபாகம், இரண்டங்குலமும், வேதிகை எட்டங்குலமும் ஆகும். அதனடிபாகம் கண்டிகையை அமைத்து அரை மாத்ராங்குலத்திலிருந்து ஒவ்வொரு அரைமாத்ராங்குல வ்ருத்தியாக

56. தண்டம் ஒன்பது அங்குலமாகும். அதன் அகலம் ஆறங்குலம், கைப்பிடி எட்டங்குல அளவிலும் அதன் நீளம் எட்டங்குல அளவுமாகும்.

57. அல்லது வேறுவிதமாக ஸ்ருக்கின் அளவு கூறப்பட்டுள்ளது. முப்பத்திரண்டு அங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

58. அதன் கனம் நான்குமாத்ரையளவையும், முகத்தின் அகலம் ஆறங்குலமும் கர்ணமென்ற பக்கவாட்டுப்பக்கம் பதினைந்தங்குலமும், அகலம் ஐந்து மாத்ராங்குல அளவுமாகும்.

59. வேதிகை ஏழங்குல நீளமும், தாமரை பதினைந்தங்குலம் ஆகும். கண்டிகை ஓரங்குலமும், அதன் நீளம் ஏழுமாத்ரங்குலமும் ஆகும்.

60. பன்னிரெண்டு அங்குலம் தண்டபாகமும் (அதன்) அகலம் ஆறங்குலமும் ஆகும். அதன் அடியில் கலசாதாரமாக இரண்டங்குல நீளத்தில் பத்தங்குல சுற்றளவு உடையதாக அமைக்க வேண்டும்.

61. கலசத்தின் அடியில் பாதத்தை அமைக்கவும். வேறு விதமாகவும் கூறப்படுகிறது. முப்பத்தாறங்குல நீளமும், ஏழங்குல அகலமுமாகும்.

62. அகல விஸ்தாரத்தின் அரைபாகமான நான்கங்குல கனமும், முகம் ஏழங்குல அளவும் விஸ்தார நீளத்தினால் பன்றி முகம் போலும் அமைக்க வேண்டும்.

63. மூன்றிலொருபாகம் அக்ர (நுனி) பாகம் செய்து மற்ற பாகங்களை விட்டுவிடவும். பக்கவாட்டு கனம் இரண்டுமாத்ரையும், விஸ்தாரம் நான்கங்குலமாகும்.

64. வேதிகை எட்டங்குல நீளமும், அதே அளவு அகலமுமாகும். நான்கு மாத்ரை அல்லது மூன்று மாத்ரையளவில் அதன் நடுவில் (வேதிகை) திவாரம் அமைக்க வேண்டும்.

65. தண்ட அளவு ஆறங்குலமும், அதன் மத்தியில் மூன்றங்குல அளவில் கண்டிகையும் அமைக்கவும். அந்த கண்டிகையானது அரையங்குல வ்ருத்தியால் நான்கங்குலம் வரை செய்யவேண்டும்.

66. பதிமூன்றங்குலம் தண்டமும், அதன் அடியில் முன்புபோல் கும்ப அமைப்பும் உள்ளதாக ஸ்ருக் செய்யவும். ஸ்ருவமும் அவ்வாறே அந்த அளவுள்ளதாகவும் யோநி அமைப்பு உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.

67. ஒன்று, இரண்டு, மூன்றங்குல அளவு குறைந்ததாகவோ, நீளம் அமைக்கவும். ஆறங்குல அகலமாகவும், தண்டத்தின் அடியில் தாமரை போன்ற அமைப்பும் செய்ய வேண்டும்.

68. அதன் பாதிஅளவான மூன்றங்குலம் கண்டபாகமாகவும் முறைப்படி மெலிந்ததாக அமைக்கவும். கோபுரம் போன்ற அமைப்புள்ளதாக நெய் எடுக்கும் ஸ்தானம் நுனியிலுள்ளதாக அமைக்க வேண்டும்.

69. ஸ்ருவத்தின் பின்புறம் இரண்டு கும்பம் போல் அமைப்புள்ளதாகவும், முன்பக்கம் பதினாறு உளுந்து முழுகும் அளவுள்ளதாக ஆழ அளவும் உள்ளதாக அமைக்கவும். புதிதாக அமைத்து செய்வது உத்தமம், கிடைக்காவிடில் பழமையானதை கிரஹிக்கவும் (எடுத்துக்கொள்)

70. அந்த திரவ்யமதிப்பிற்குள்ளான (பொருளுக்குள்ள) பணத்துகையை கொடுத்து பழமையான ஸ்ருக், ஸ்ருவத்தை கிரஹிக்கவும். குருவின் அனுமதி பெற்று அந்த திரவ்யத்தை உபயோகிக்க வேண்டும்.

71. பழமையான கரணங்களை (உதவிப் பொருள்களை) உபயோகித்தால் ஆயிரம் ஆவ்ருத்தி அகோர மந்திர ஜபம் செய்யவும். எந்த சாஸ்திரத்தினால் பரமேஸ்வரனுக்கு பூஜாக்ரியைகள் நடைபெறுகிறதோ

72. அங்கு அந்த சாஸ்திர ஸம்பந்தப்பட்ட கார்ய உபகரணங்களை கிரஹிக்கவும். உத்ஸவம் முதலிய கர்மாக்களில் கூறப்படாததை வேறு விதமாக கிரஹிக்க வேண்டும்.

73. அஸ்திரதேவர், உற்சவபிம்பம், தேவனின் உபகரணத்ரவ்யங்கள், அந்த ஆலயத்தைச் சேர்ந்ததாக கிரஹிப்பது உத்தமமாகும். வேறு ஆலயத்தில் உள்ளதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

74. ஆயாதி முதலிய அளவுகளால் அசுபமானதாக லிங்கம் முதலானவைகளின் திரவ்யங்கள் விருத்தமானதாக (மாறுபட்டதாக) ஆகும். அந்த லிங்காநுகூலமாக பிம்பம் முதலியவை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால்

75. அந்த பிம்பத்தினால் உத்ஸவ கார்யங்கள் செய்யலாம். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு கரணங்கள் எடுத்துச் செல்வதற்காக சுத்தியை அனுஷ்டிக்க வேண்டும்.

76. ஸமித்து, நெய், அன்னம் இவைகளால் ஆயிரம் (முறை) ஆவ்ருத்தி சாந்தி ஹோமம் செய்யவும். குறைந்த மாத்ரை அளவுள்ள (ஹ்ரஸ்வப்ராஸாத) மூலமந்திரத்தினால் அதிகமான பூஜைகளுடன் செய்ய வேண்டும்.

77. பாலுள்ள ஜாதிமரங்களால் அழகுடையதாக தோரணங்கள் அமைக்கவும். ஐந்து, ஆறு, ஏழு முழ அளவுள்ளதாக அதம (கடைநிலை) தோரணங்களின் நீளமாகும்.

78. முப்பத்திரண்டங்குல நுனியுள்ளதாக மற்றவைகளை அமைக்கவும். அவைகளில் ஒருமுழத்திற்கு மேற்பட்டதாக அந்த வ்ருத்தியளவின் பாதியாலும் அழகானதாக அமைக்க வேண்டும்.

79. இரண்டு சாகைகளின் நடுபாகம் சமமான உயரமாகவோ, குறைவான உயரமாகவோ அமைக்கவும். சூலபாகம் எட்டங்குலத்தினால் மற்றவைகள் பதினாறங்குலத்தினால் செய்யவேண்டும்.

80. இவ்வாறு ஒன்று முதல் நான்கு முழம் வரையுள்ள க்ஷúத்ரமயமான தோரணத்தில் நுனியின் அரைபாக அளவிலோ யாகாதி கார்யங்களில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கரணலக்ஷண விதியாகிய எழுபத்தியிரண்டாவது படலமாகும்.

படலம் 71 : ரத ஸ்தாபன முறை...

படலம் 71 : ரத ஸ்தாபன முறை...

71 வது படலத்தில் ரதஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறையை முன்னிட்டு தேர் இவைகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேரும் சக்கர அமைப்புகளால் பலவிதமாக கூறப்படுகிறது. அதில் மூன்று சக்கரம் முதல் 9 சக்கரம் வரையிலான ஏழு ரத பேதங்கள் கூறப்படுகின்றன. இரண்டு சக்கரம் உடையது. சகடம் என்று கூறி ரத பேதமான சகட விஷயம் கூறப்படுகிறது. பிறகு ரதவிஷயத்தில் உள் அமைப்பு, வெளி அமைப்பு என்ற இவைகளில் நிர்மாண விதியும் அவை சேர்க்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு வெளி அமைப்புகளின் நிரூபண விஷயத்தில் பாரம், அ÷க்ஷõத்தரம், சிகை, விஷ்டை, அக்ஷம், சக்கரம், உபபீடம் என்று உருப்புகள் கூறப்பட்டுள்ளன. வெளி அமைப்பு நிரூபணத்தில் உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் அமைக்கவும் அதிஷ்டானத்திற்கு மேல் பாதவர்க்கம், பாதவர்க்கத்திற்கு மேல் பிரத்யரவர்க்கம் செய்யவும் என கூறப்படுகிறது. இவைகளை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு இந்த முறைப்படி அமைக்கப்பட்டது முதல் தளமாகும். இந்த முதல் தளத்துடன் கூடியது ஏகதளரதம் என்றும் ஒரு தளத்தை உடைய தேரை அமைக்கும் முறை. பிறகு இரண்டுதளம் உடைய தேர் இருக்கிறதா இல்லையா என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால் இரண்டுதளம், மூன்று தளம் உடைய ரதங்களை செய்யும் விஷயத்தில் அமைக்கும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அனேக தளத்தை உடைய தேர் அமைக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய விசேஷ அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு தேர் அமைக்கும் முறை கூறி அந்த விஷயத்தில் சுபம் ஆயாதி என்ற கணக்கிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் இங்கு சகடை, பல்லக்கு முதலியவைகளில் சுபத்திலும் சுபஆயாதி அளவு முறை சம்மதம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு ரதத்தை ஸ்தாபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. அதில் சில்பியை திருப்தி செய்வது முறையாக பிரோக்ஷணம் முதலான சம்ஸ்காரங்கள் கூறப்படுகின்றன. பிறகு ரக்ஷõ பந்தன முறை கூறப்படுகிறது. பிறகு ரத்தின் உருவமானது சக்ரம் முதலான இடங்களில் பூஜிக்கவேண்டிய சூர்யன் முதலான தேவதைகளின் நிரூபணம், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், இவர்கள் ரதத்தின் அதிபர்கள் சிகரத்தின் அதிபதி சதாசிவன், ஸ்தூபிநாயகன் சிவன், தாமரை மொட்டுக்களின் அதிபன் அனந்தன் பிறகு, ரதத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து ஸ்தண்டிலத்தில், கும்பஸ்தாபன முறை கூறப்படுகிறது.

அதில் 9 கும்பங்களை ஸ்தாபித்து மத்ய கும்பத்தில் சிவனையும், கிழக்கில் சூர்யனையும், ஆக்னேயதிக்கில் சந்திரனையும் தெற்கில் மஹாவிஷ்ணுவையும், நிருதியில் ஆதாரசக்தியையும் மேற்கில் விருஷபரையும் வாயு திக்கில் அனந்தரையும், வடக்கு திக்கில் தர்மாதிகளையும் ஈசான கும்பத்தில் சேஷனையும் கும்பமூர்த்தித் தன்மையாக பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கடங்களுக்கு தேரை சுற்றிலுமோ 9 அல்லது 5 குண்டமோ அல்லது கிழக்கு திக்கில் 1 குண்டமோ அல்லது எல்லா இடத்திலும் ஸ்தண்டிலமோ அமைத்து குண்ட அக்னி ஸம்ஸ்கார முறையாக ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு 9,5,1 என்ற குண்டங்களை அனுசரித்து ஹோமம் செய்யும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறாக அதிவாச விதியில் செய்முறைகள் விளக்கப்பட்டது. பிறகு இரண்டாம் நாள் காலையில் நல்ல முகூர்த்த காலத்தில் மந்திரந்நியாச பூர்வமாக அந்தந்த கும்பத்தில் உள்ள ஜலங்களால் அந்தந்த பிரதேசத்தில் சம்ப்ரோக்ஷிக்கவும் என்று ரத சம்ப்ரோக்ஷண விதி சொல்லப்பட்டது. முடிவில் யார் இவ்வாறாக ரதத்தை தயார் செய்து சம்ப்ரோக்ஷணம் செய்கிறானோ அந்த மனிதன் இந்த லோகத்தில் தனவானாகவும், ஸ்ரீமானாகவும், விருப்பப்பட்ட பயனையும் அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு ரதத்தை நன்கு தயாரித்து வெள்ளோட்டம் என்கிற ரதயாத்திரை செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக ரதஸ்தாபனத்தில் செய்முறை விளக்கம் கூறப்பட்டுள்ளது. பிறகு பல்லக்கானது பைடீ, சேகரீ, மண்டீ, என மூன்று விதமாக ஆகும் என கூறி அந்த மூன்று விதங்களின் செய்முறை விளக்கம் அதற்கு உபயோகமான விருக்ஷங்கள் நிரூபிக்கப்படுகின்றன. சிபிகாப்ரோக்ஷணமானது. சிம்மாசன பிரதிஷ்டா விதியில் கூறியுள்ளபடி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கட்டில், மஞ்சம், அமைக்கும் முறை அதை செய்வதற்கு உபயோக மான திரவ்யங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறு சிறிய மஞ்சம் கட்டில் செய்யும் முறையும், விளக்கப்படுகிறது. இவ்வாறாக 71வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் ரத பிரதிஷ்டையைக் கூறுகிறேன். சக்கரத்தின் கணக்கை கொண்டு ரதம் பலவிதமாக சொல்லப்படுகிறது.

2. மூன்று சக்கரம், நான்கு சக்கரம், ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என பலவகையிலும் ஆகும். ஆனால் இரண்டு சக்கரமுள்ளது சகடம் என்றும் சொல்லப்படும்.

3. சக்ரத்தின் மேலுள்ள பலகை அமைப்பின் அகலம் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது முழம் உள்ளதாக இருக்கும். அதன் நீளமும் இப்பொழுது சொல்லப்படுகிறது.

4. அச்சின் மேல்பாகமாக கூறப்பட்டுள்ளது. தேரின் மேல்பாகம் கூறப்படுகிறது. படகு போன்று வளைவான அமைப்பாக அமைக்கவும். தேரின் கீழ் விரிப்பு நீளம்போல் கனமாக உள்ளதாகவும்

5. தேரின்கீழ் விரிப்பின் வெளி அகல அளவின் அரைபாக அளவு நீளமோ கால்பாக அதிகமோ, கால்பாக குறைந்ததாகவோ அதற்கிடைப்பட்டதான ஆறு அளவு உடையதாக

6. தேரின் கீழ் விரிப்பு பாகத்தின் ஆதாரத்திற்கு கீழாக அச்சின் மேல் பாகம் அமைக்கவும். எங்கெங்கு பாரத்தை உடைய அச்சுக்கும் சேர்க்கை உள்ளது என்பது இப்பொழுது சொல்லப்படுகிறது.

7. இரும்பு பட்டைகளாலும் முளைகளாலும், மிகப்பெரிய முனையுள்ள ஆணிகளாலும் எப்படி கட்டினால் அது வலுவாக இருக்குமோ அப்படி மிக வலுவாக கட்ட வேண்டும்.

8. அச்சைக் காப்பதற்காக நடுபக்கம் இவைகளில் அவைகளின் நடுவிலுள்ள இரு பக்கங்களில் அவைகளின் கனத்திற்கு ஸமமாக பலவித சிகைகளாக உடையதாக செய்தல் வேண்டும்.

9. அச்சுவரை தொங்குகிறதாக இரும்பு பட்டையால் நன்கு கனமாக உள்ளதாக அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு சக்ரத்திற்கும், ஸமமாகவோ, ஸமமில்லாமலோ அச்சாணி அமைத்தல் வேண்டும்.

10. மேல் நோக்கிய தலைபாகத்தை விட்டு பூமியை நோக்கி கீழே உள்ளதாக சிறிது வெட்டப்பட்டதாகவும் அச்சின் மேல்பாகத்தில் நுழைவதற்காகவும் அல்லது மேல் பாகத்தையோ செய்ய வேண்டும்.

11. எல்லா அச்சுகளிலும் மேல் பாகமாக இருப்பதற்காகவும் திவாரத்தில் நுழைப்பதற்காகவும் குறைக்கவும் தேரில் கீழ்பலகை அகலத்தை அறுபது பாகமாக பிரிக்க வேண்டும்.

12. அதற்கு ஸமமாகவோ அறுபதுக்கு ஐந்து பாகமாகவோ அதிகரிக்கவும். கால்பாகம், குறைந்த அளவின் இரண்டு மடங்கு நீளமுடைய அடிபாகமாக கூறப்பட்டுள்ளது.

13. அதன் நுனி, அடி பாகத்தின் பாதியை, எட்டு பாகமாக அதிகரிக்கவும். ஓர் பாகத்திலோ, முக்கால், அரை பாகத்தினாலோ, நீளத்தில் அமைக்கப்படவேண்டும்.

14. அதன் நுனியிலோ, அதை அடைந்ததாலோ, ஸமபத்ரம் என்ற அமைப்பை செய்யவும். அவைகளின் அளவு பாதத்திற்கு கூறப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும்.

15. பின்பாகமான பத்ர அமைப்பிலிருந்து அதிகமானதாக நுனிபாக பத்ரம் அமைக்கப்படவேண்டும், பத்ரத்தை பத்ரத்தின் நுனிகள் விருப்பப்பட்ட அளவுகளால்

16. பிரும்மாஸனத்தை செய்தோ, செய்யாமலோ இருக்கவும், பத்ரம், உபபத்ரம் இவைகளின் அளவு ஒன்று பட்டதாகவோ வேறுபாடான அதிகமாகவோ இருக்கலாம்.

17. தேரின் பத்ர, உபபத்ரங்களின் அளவு எவ்வாறு நன்கு சேர்க்கப்பட்டு இருக்கிறதோ அந்த எல்லா அளவும் தேர்கீழ்பரப்பு பலகைக்கு கனமாகும். கீழ்பரப்பு பலகையில் இடைவெளி அமைக்க கூடாது.

18. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு முழங்கை அளவு நீளமுள்ளதாகவும் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகம் அகலமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

19. அச்சுக்குமேல் பாகத்தில் இரண்டு முதல் ஒன்பது எண்ணிக்கை வரையிலாக பாரம் என்ற கீழ்விரிப்பு பாகமாகும். மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகமாக அகலத்தில் அரைபாகமாக கொடுங்கை அமைப்புகளை

20. சேர்க்கவும், கம்பங்களின் நடுவில் பலகைகளுக்கு வேறு ஆஸனங்களை (விட்டங்களை) அமைக்கவும். கீழ் விரிப்பு அமைப்புகளில் நுனி, அடி, நடுவிலோ விருப்பப்பட்ட விட்டங்களை சேர்க்க வேண்டும்.

21. மேல் பாகத்தில் வெளியில் தெரியும்படி துவாரங்களை ஐந்து முடிச்சுக்களை உடையதாகவும், நான்கு பாகம் முதல் பதினெட்டு பாகம் வரையிலாக

22. அதிகமான விஸ்தாரத்தை செய்யவும், சக்ரத்தின் கடையாணி, இடைவெளி ஐந்து பாகத்திலிருந்து பாகம் அதிகமானதாக இருக்க வேண்டும்.

23. பந்துபாகம் வரையிலும் சக்ரத்தின் அச்சு கனமும் ஏதுண்டோ அதை வெளியில் தலைபாகம் தெரியும்படி கீழ் வெளிபரப்பு அச்சின் இடைவெளி இதற்கு சமமாகும்.

24. இவைகள் எல்லாம் அச்சின் நீளமாகும். அச்சு உருண்டையாகவோ சதுரமாகவோ இருக்கலாம்.

25. அகன்ற அமைப்பை உடைய நடுபாகத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ ஐந்து உருப்பு அமைப்பென்பதான கார்யங்களை மரத்தினாலும் இரும்பினாலும் செய்ய வேண்டும்.

26. எவ்வாறு பலமுள்ளதாகவும், அகலமாகவும் இருக்குமோ அவ்வாறே கனமுள்ளதாகவும் அமைக்கவும், சக்ரங்களுக்கு பிரமாணம் தேருக்கு வெளியிலும் பாரத்திற்கு இடைவெளியிலும் ஆகும்.

27. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறுபாக குறைந்தோ அதிகப்படுத்தியுமோ செய்து இரண்டு பாகத்திலிருந்து, எட்டு பாகம் வரை சக்ரங்களின் கனமாக கூறப்பட்டுள்ளது.

28. ஒன்று, இரண்டு, மூன்றங்குல மதிகமாக நாபி தேசத்தில் ஆகும் அவ்வாறே வெளிபாக சக்ரத்தின் வட்டமும் அவைகளின் நடுவில் கோடு போன்ற அமைப்பை

29. கீழும், மேலும், ஒன்று, இரண்டு, மூன்றம்சங்களால் மெலிந்ததாகவும், இருபத்திநான்கு முதல் எட்டு அதிகத்தால் அறுபத்திநான்கு வரை எண்ணிக்கையுள்ள அம்சங்களால் மெலிந்ததாகவும் அமைக்க வேண்டும்.

30. தேரோட்டுபவர் முருகன், அல்லது நந்திகேஸ்வரர் அல்லது பிரம்மா, அல்லது விஷ்ணு, இந்திரன் இப்படியும் இருக்கலாம்.

31. கீழ்விரிப்பு பலகையின் மேல் உபபீடம் அமைக்கவும். அதன் அளவு கூறப்படுகிறது. ஓர் பாகத்திலிருந்து இரண்டுமுழம் வரை ஓர்பாக அதிகரிப்பால்

32. பாரத்தின் உபான அமைப்பிலிருந்து வெளிக்கொணர்ந்து பாரத்தின் வெளியில் ஓர் அம்சத்திலிருந்து பாகத்தின் வெளி அமைப்பு அதிகரிப்பால் ஆறு பாகம் வரையிலோ

33. இருபத்தி ஒன்பது அம்சம் வரையிலோ பீட உயரத்தை பிரிக்கவும். மூன்று, இரண்டு, ஐந்து, ஒன்று, ஒன்பது, ஒன்று மூன்று என்ற அம்சங்களாலும்

34. மூன்றுபாக, ஒவ்வோர் பாகத்தினால், கீழிருந்து ஆரம்பித்து செய்யவும். உபாநம், பத்மம், கம்பம், கர்ணம், கம்பம் இவைகளும்

35. பத்மம், வாஜநம், கம்பம் இவைகளை மேற்கூறிய அளவுகளால் கூறப்பட்டுள்ளது. கால்பாகம், அரைபாகம், மூன்றுபாகம், இரண்டு பாகத்தினாலோ

36. மூறு பாகத்தினாலோ நான்கு பாகங்களால் குறைவாகவோ, அதிகமாகவோ அமைக்கவும். இவைகளின் நுழைவு, வெளிக் கொணர்தலை அழகின் அதிகரிப்பால் செய்ய வேண்டும்.

37. ஆலயத்திற்கு சொல்லப்பட்ட உபபீடம் ஏதுண்டோ அதை இங்கு செய்யலாம். நாற்கோணங்களிலும் நடுவிலும், அவ்வாறே பத்ரம், உபபத்ரம் என்ற அமைப்புகளிலும்

38. பொம்மை போன்ற அமைப்புகளால் நாடக அமைப்புகளாலும் கழுத்து பாகத்தை அலங்கரிக்கவும். உபபீடத்தின் உயரளவிலாவது உபபத்ரபீடம் செய்ய வேண்டும்.

39. உபபத்ர பீடத்திற்கு மேல் நன்கு கனமான பலகையால் மேலே மூடுவதை செய்யவும். பலகையின் பாரமத்தியில் பாதம் முதலியவைகளால் அலங்கரிக்க வேண்டும்.

40. பலகையின் நடுவிலிருந்து பாரம் என்ற தாமரை மொட்டு அமைப்புகளை காம்புடன் கூடியதாக செய்யவும். தண்டின் அளவு இரண்டு, ஏழு, மூன்று அங்குலத்திற்கு மேற்பட்டதாகவும்

41. நூறு அம்சம் வரையிலும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிபாகம் நான்கு பாதத்திலிருந்து எட்டம்சம் வரை கனத்தையுடையதாக வட்டவடிவமாகவோ, எண்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

42. ஆறு, பன்னிரெண்டு பாகம் வரை நுனியில்லாமல் வளைந்ததாக செய்து கும்பம் போல் அழகுடன் கூடியதாகவோ இரண்டு கண்டிகையை அடிப்படையாகவோ

43. தாமரையை பலகையுடன் கூடியதாயும், அதற்குமேல் தாமரை மொட்டையும் செய்யவும். அதையும் நான்கம்சம் ஆரம்பித்து ஓர்பாக அதிகரிப்பால்

44. எட்டம்சத்துடன் கூடியதாய் அந்த விஸ்தார நடுவரையிலுமாக அதன் முக்கால் பாகம் அகலமுமோ, அதன் கடைசிக்கு ஸமமான அளவிலுமோ

45. மெலிந்த நுனியையுடையதாகவும், வட்ட வடிவமாகவும் எண்கோண வடிவமாகவும் விரிந்த வெளிப்பட்ட இதழை உடையதாகவும், வெளிப்பக்கத்தில் அலங்காரம் செய்ய வேண்டும்.

46. கீழ்விரிப்பு பலகையின் மேல் சிறிது வெளிப்பட்ட அமைப்பை உடைய வாஜநத்தை அமைக்கவும். விருப்பப்பட்ட பலஅமைப்புடன் மேலே வாஜனத்தின் இடைவெளியில்

47. அது வெளிக்கொணர்ந்ததாகவோ, கழுத்து பாகம் வரை உபபீடத்தை அமைக்கவும். இரண்டுவித மரங்களாலோ, ஓர் மரத்தினாலோ

48. அதற்கு சம்பந்தப்பட்டதாக செய்யவும், விருப்பப்படி அச்சுக்கு மேற்பட்ட தேசத்தில் பஞ்சக்ரஹி என்ற இரண்டு கட்டின் அமைப்பை அறிஞர்களால் செய்ய வேண்டும்.

49. விடுபட்ட கனமும் விஸ்தாரமும் அதன் சம்பந்தப்பட்ட வேறு அமைப்புகளையும் பத்ரத்தின் அடியிலும் நுனியிலும், ஸமபத்ரம் என்ற அமைப்பிலும் அவ்வாறே செய்ய வேண்டும்.

50. உட்பட்ட வாஜனத்தின் மேல் உபபீட களத்தின் முடிவு வரை உபபீடத்தின் முடிவில் பாதங்களை செய்யவேண்டும்.

51. அந்த பாதத்தின் மேல் இரண்டு பலகை செய்யவும். பஞ்சக்ராஹி என்ற அமைப்பை உடைய நன்கு சேர்க்கப்பட்ட இரண்டு விட்டங்களை செய்ய வேண்டும்.

52. பத்ரமென்ற அமைப்பின் நுனியிலும், நடுவிலும் மேற்கூறியபடி செய்யவும். உபபீடத்திற்கு மேல் அதிஷ்டானம் என்ற அமைப்பை செய்ய வேண்டும்.

53. அந்த அதிஷ்டானம் உபபீடத்திற்கு ஸமமாகவோ, அதன் அரை பாகமாகவோ, ஒன்றரை பங்காகவோ, அதன் நடுவில் ஆறுபாக அளவினாலோ எது பொருந்துமோ அதை ஏற்க வேண்டும்.

54. 28 பாகமாக, அதன் உயரமானது ஸமமாகும். பத்து, இரண்டு, ஒன்று, ஏழு, ஒன்று, ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு

55. பத்மம், கர்ணம், பத்மம், குமுதம், பத்மம், வாஜனம், சதந்தத்தை கண்டத்தை கம்பத்தை, மஹாவாஜனத்தையும் செய்ய வேண்டும்.

56. உபபீடத்திற்கு கூறப்பட்டபடி கூடுதல் குறைத்தலை செய்ய வேண்டும். உள்ளடக்கமும் வெளிக்கொணர்தலும் முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.

57. இந்த உபபத்ரம், பத்ரம் என்ற அமைப்பை உள்பக்கமாக அமைக்கவும். அதிஷ்டானத்திற்குமேல் பாதவர்கம் செய்தல் வேண்டும்.

58. அதிஷ்டானத்திற்கு ஸமமாகவோ இருமடங்காகவோ செய்ய வேண்டும். அதற்கு இடைபட்டு ஒன்பது அளவிலோ, பாதத்தின் எட்டில் ஓர் அம்சமாகவோ

59. பொம்மை போன்ற பாதங்களால் நாட்டிய அமைப்புகளாலும் பெரிய யாளி உருவங்களாலும், லிங்கம், பூதம், யானை போன்ற பாதங்களாலும் வர்க அமைப்பை எங்கும் அலங்கரிக்க வேண்டும்.

60. அதற்கு இடைவெளியில் திவாரமிட்டு ஆணி போன்றவைகளால் நன்கு செப்பனிடவும். பாதவர்கத்தின் மேல் விரிப்பு அமைக்கவும். அதன் அமைப்பும் முகப்பும் கூறப்படுகிறது.

61. மூன்று பாகம் முதல் ஒவ்வோர்பாக அதிகரிப்பால் ஒன்பது பாகம் வரை அலங்கரிப்பு கூறப்படுகிறது.

62. பாரத்தின் உச்சம் பதினாறு பாகத்தில் மூன்று, ஒன்று, இரண்டு, ஏழு இவைகளாலும் ஒன்று, ஒன்று, ஒன்று, அம்சங்களால் மேற்பட்ட வாஜநம்

63. நித்ரா, கபோதம், ஆலிங்கம், வாஜநம், பிரதிவாஜநம், பிரவேசம், நிர்மகம் என்ற பெயருள்ள குறிப்புகளை ஆலய அமைப்பு முறைப்படி செய்ய வேண்டும்.

64. இது முதல் தளத்திற்கு கூறப்பட்டுள்ளது. ஸமமான ஆரம்பத்தையுடைய பத்ரமானது ஆகும். பாதம் வரையிலுமோ, பத்மம்வரை அடியிலிருந்து குறைந்ததாகவோ

65. இரண்டு பக்கத்திலும், ஒன்று முதல் ஆறு பாகம் வரை நுழைவின்றியோ அமைப்புடையது உபபத்ரமாகும்.

66. ஓர் தளமுடைய தேர் அமைப்பு கூறப்பட்டு இரண்டு தளத்துடன் கூடியதாகவோ அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆறு முதல் முப்பது அம்சம் வரை அடிபாகம் வரை ஸமமாகவோ

67. விளிம்பின் உயரம் வரை இரண்டு தளத்தின், பாதம், கபோதம் இவைகளின் உயரமாகும். இந்த முறைப்படியே மூன்று தள தேரையும் அமைக்க வேண்டும்.

68. நல்ல மரத்தின் ஓர் அங்குல கனம் அல்லது வேண்டிய அளவு கனமுள்ள பலகைகளால் மேல் பாகத்தை வலுவாக மூடவேண்டும்.

69. பத்ர பீடத்தையும் உபபத்ர பீடத்தையும் இவ்விதமே செய்ய வேண்டும். இவ்வாறே போவதற்கும் வெளியில் வருவதற்கும் அமைக்க வேண்டும்.

70. போவதற்கும், வெளியில் வருவதற்கும் வழியில்லாது போனால் நல்ல கயிற்றையாவது வைக்க வேண்டும்.

71. பல தளங்கள் இருக்குமேயானால் அதில் விசேஷம், சொல்லப்படுகிறது. தேரில் ஏறுவதற்காக படிகட்டுபோல் அமைக்கவும்.

72. பத்ரபீட அமைப்பிற்கு கூறியபடி அகல நீளத்தை முன்பும், பின்பும் அமைக்கவும். பத்ர பீடத்திற்கு ஒவ்வொரு பக்கத்திலும் நுழைவு அமைப்பு இருக்க வேண்டும்.

73. அதன் அமைப்பு முறை படிக்கட்டை மேல் அமைக்கவும். உபபத்ர பீடமின்றியோ பத்ர பீடத்தை பாரம் என்ற விரிப்புத்தளம் வரையிலுமோ செய்ய வேண்டும்.

74. இவைகள் இல்லாமல் இருந்தாலும் உபபீடம் மட்டும், அமைத்து அதன் மேல் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

75. உபபீடமின்றி மசூரம் என்ற அமைப்பை மட்டுமோ செய்யவும். வெளியில் உள்ளபடி செய்வது கூறி உள்ளே செய்வது இங்கு கூறப்பட்டுள்ளது.

76. பாத வர்க்கத்தின் இடைவெளியில் கம்பத்தின் மேலாக, க்ஷúத்ர பாதங்களை அமைக்கவும். மேல்பாக கம்பத்தை கட்டப்பட்டதாக அமைக்கலாம்.

77. அதற்கு மேல் நுனியாக விளிப்பை பஞ்சக்ராஹி என்ற அமைப்பை கூடியதாகவோ, இல்லாமலோ அமைக்கவும் பலவித ஆஸன அமைப்புகளை ஒவ்வொன்றுக்கும் அமைக்க வேண்டும்.

78. மிகுந்த காந்தியை உடையதாயும், தராசின் முகஅமைப்பை அனுசரித்ததாயும் அதற்குமேல் ஜயந்தீ என்ற அமைப்புகளையும், அதற்குமேல் விரிப்பையும் அமைக்க வேண்டும்.

79. விருப்பப்பட்ட கனம், உயரத்திலிருந்தவாறு விஜியை அமைக்கவும். பலவித தாழ்பாள், பட்டிகை, பஞ்ச க்ராஹி என்ற அமைப்புகளால்

80. பெரிய ஆணிகளாலும், பெரிய தாழ்பாளாலும் உயர்ந்த கீல்களாலும் கூர்மையான வளைந்த பட்டைகளாலும் நன்கு கட்ட வேண்டும்.

81. இது ரங்கம் என்ற அமைப்பை கூறியுள்ளது, தோரணத்துடன் கூடியோ, தோரணமின்றியோ பாதங்களுடன் சேர்ந்துள்ளதோ தேர் எனப்படுகிறது. அதன் அளவு கூறப்பட்டுள்ளது.

82. நான்கு தளம் ஆரம்பித்து அரை தாள அளவாக அதிகரிக்கவும். மூன்றங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை காலின் கன அளவாகும்.

83. கால்பாக அங்குல அதிகரிப்பால் மூன்றங்குலம் வரை பாதத்தின் அகலம் கூறப்பட்டு ஆலயம் போன்ற பாதத்தின் அளவு கூறப்படுகிறது.

84. நுனியிலும் அடியிலும் சிகையுடன் கூடியதாயும், கும்பம் முதலான அமைப்புகளுடன் கூடியதாய் பாதங்களை அமைக்கவும். பலவித கூர்மையான அமைப்புகளை பலகைகளில் அமைக்க வேண்டும்.

85. தாள அளவிற்கு கீழிருக்கும் விட்டங்களால் பாதத்தின் அடிபாகத்தை கட்ட வேண்டும். அவ்வாறே இரும்பு கம்பிகளால் தாங்கும்படி நன்கு இறுக்கமாக கட்ட வேண்டும்.

86. பாதத்திற்கு மேல் விரிப்பை அமைக்கவும். கொடுங்கை அமைப்பதற்கு உரியதாகவும் அந்த விரிப்பு சிகை போன்ற அமைப்பினால் கொடுங்கை என்ற அமைப்பை உடையதாயும்

87. தங்கம், வெள்ளி, ஆகிய தகடினாலும், தாமிரங்களால் பலகைகளாலும் மற்ற இடங்களை பிரகாசிக்கின்ற ஸ்தூபியுடன் கூடியதாக மூட வேண்டும்.

88. சுபம், ஆயாதி, என்று கணக்களவுடன் கூடியதாக ரதம் கூறப்பட்டது. அந்த ரதம், அகல, நீளத்தால் சிறு குறிப்புடன் கூறப்படுகிறது.

89. இரண்டு ஸகள பிம்பமூர்த்திக்கும் நீள அகலத்திலோ இரண்டு, மூன்று நான்கு அளவுகளால் குறைத்தோ, கூட்டியோ செய்யவேண்டும்.

90. ஏழு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய அளவுகளால் நீளத்தையும், அகலத்தையும் மூன்று, பதினைந்து அளவாக அமைக்கவும். முற்பது முழம் இந்த ரதத்தில் கூறப்பட்டுள்ளது.

91. சட்டத்தேர் பல்லக்கு முதலியவைகளிலும் சுபாசுபம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த பிரதிஷ்டை சொல்லப்படுகிறது.

92. ரதசில்பியை அனுப்பிவிட்டு சுத்தமான ஜலத்தால் ரதத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். கோஜலம், கோமயம், தர்பை தீர்த்தம் இவைகளாலும் சுத்தம் செய்ய வேண்டும்.

93. பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷித்து புண்யாக தீர்த்தத்தாலும், அஸ்த்ரமந்ர தீர்த்தத்தாலும் புரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

94. தாமரை மொட்டு போன்ற இடத்தில் ரக்ஷõபந்தனம், ஹ்ருதயமந் திரத்தால் செய்ய வேண்டும். வஸ்த்ரம் ஸமர்பித்து ஆலயத்திற்குச் சொன்னவாறு தத்வ தத்வேஸ்வரர்களோடு கூடவும்,

95. மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களோடு கூடவும், தெற்கு வடக்கிலுள்ள சக்ரத்தில் சூர்ய, சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

96. அச்சில் விஷ்ணுவையும் கீழ் விரிப்பு பலகையில் ஆதார சக்தியையும், உபபீடத்தில் வ்ருஷபத்தையும் ஆதாரத்தில் அனந்தனையும் பூஜிக்க வேண்டும்.

97. தர்மாதிகளையும் அதர்மாதிகளையும் பாதத்தில் பூஜித்து அதற்கு மேல் அதச்சனம் ஊர்த்வச்சத்தையும் இவைகளை பூஜிக்க வேண்டும்.

98. விரிப்பு பலகையில் மேலும் கீழும் பத்மகர்ணிகையையும் பூஜித்து நவ சக்திகளையும் பூஜித்து சிவாஸனத்தை கல்பிக்க வேண்டும்.

99. பிரும்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் இவர்கள் ரதத்தின் அதிபர்கள், சிகரத்தில் ஸதா சிவபெருமானும், ஸ்தூபியில் சிவபெருமானும் நாயகராவார்.

100. தாமரை, மொட்டுகளில் அனந்தன் ஆலய அமைப்பினால் வ்யாப்த்தமாக அறியவும். அதில் நூல் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளோடு கூடிய

101. தங்கம், கூர்ச்சம், ஒன்பது கும்பங்களை வைத்து நடுகும்பத்தில் சிவபெருமானையும் கிழக்கில் உள்ள கும்பத்தில் சூர்யனையும், தென்கிழக்கில் சந்திரனையும்

102. தெற்கில் விஷ்ணுவையும், வடமேற்கில் உள்ள கும்பத்தில் சக்தியையும், மேற்கில் வ்ருஷபத்தையும் வடமேற்கில் உள்ள கும்பத்தில் அனந்தரையும் பூஜிக்க வேண்டும்.

103. தர்மாதிகளை வடக்கில் உள்ள கும்பத்திலும், ஈசான கும்பத்திலும் சேஷனையும் சந்தன, புஷ்பங்களாலும், பூஜித்து ஹோம கர்மாவையும் செய்ய வேண்டும்.

104. நிறுவப்பட்ட கும்பங்களை சுற்றியோ அல்லது இரதத்தின் நான்கு பக்கங்களிலோ ஒன்பது குண்டங்களையோ ஐந்து குண்டங்களையோ அல்லது கிழக்கில் ஒரு குண்டத்தையே அமைக்க வேண்டும்.

105. குண்டஸம்ஸ்காரத்தையும் செய்து, பிரதானத்தில் ஸாங்கமாக சிவபெருமானை நூற்றுக்கணக்கான ஹோமத்தால் சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

106. அந்தந்த திக்குகளில் உள்ள குண்டங்களில் சூர்யன் முதலியவர்களையும் ஐந்து குண்டமாக இருக்குமேயானால் ஒவ்வொரு குண்டத்திலும் இரண்டிரண்டு தேவதைகளையும் பூஜிக்க வேண்டும். ஒரே குண்டமாக இருக்குமேயானால் எல்லா தேவதைகளையும் பூஜிக்கவும். (சூர்யன், சந்திரன், விஷ்ணு - ஆதாரசக்தி, வ்ருஷபன், ஆனந்தன், தர்மாதிகள், அதர்மாதிகள், சேஷன், சிவபெருமான்.

107. ஸமித்து, நெய், அன்னம், பொறி, எள், இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

108. பலா, அத்தி, அரசு, ஆல், இவைகளை கிழக்கு முதலிய திக் குண்டங்களுக்கு உகந்தது. வன்னி, நாயுறுவி, பில்வம், இச்சி இவைகளை தென் கிழக்கு முதலிய குண்டங்களில் ஹோமம் செய்ய வேண்டும்.

109. பிரதானத்திற்கு பலாச சமித்து சிறந்ததாகும் என சொல்லப்படுகிறது. பூர்ணாஹுதியையும் கொடுத்து, இரண்டாம் நாளில் கும்ப, அக்னி, இவைகளை பூஜித்து

110. நல்ல முஹுர்த்த வேளை வந்தபொழுது ஆசார்யன் மந்திரம் நியாஸம் செய்து ஜ்யோதிஷர் சில்பி இவர்களுடன் கூடினவராய்

111. அந்தந்த கும்பங்களில் உள்ள தீர்த்தங்களால் அந்தந்த இடங்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு சொல்லாதவை பொதுவான ஸ்தாபன கர்மாவில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும்.

112. எவன் இவ்வாறு ரதத்தை அமைத்து பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கேயே செல்வந்தனாகவும் லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியவனாகவும் ஆகி விரும்பிய பயனையும் அடைவான்.

113. ரதத்தை இவ்வாறு தயார்செய்து தேரோட்டத்தையும் செய்ய வேண்டும். பைடீ, சேகரீ, மண்டீ, என தேர் மூன்று வகைப்படும்.

114. பதினைந்து அங்குலம், முதற்கொண்டு ஐந்தைந்து அங்குலமாக விருத்தி செய்து, தொண்ணூற்றாவது அங்குலம் வரை பல்லக்கின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.

115. இருபத்தியோரு அங்குலம் முதல் ஒரு மாத்ரையளவு அதிகரிப்பால் நூற்றி தொண்ணூற்றி ஒன்பது அங்குலம் நீளம் அமைக்க வேண்டும்.

116. யானை கண் விழி அமைப்பை வெளி, நடு உள்பக்கம், உதாரணமாக கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், அரசர்களுக்கும் பாதத்திற்கு வெளிப்பட்டதாக அமைக்க விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

117. பாத நடுவில் பொதுவான பரப்பளவு முறையை அறியவும், இவ்வாறு யவை அளவால் யானைக் கண் அமைப்பை செய்வது நடுநிலையாக கூறப்பட்டுள்ளது.

118. கால் பாகமளவு யானைக் கண் அமைப்பை உள்ளிட்டதாக செய்வதை எல்லாவற்றிற்கும் கூறப்பட்டுள்ளது. மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகிய மாத்ரை அளவுகளால் அகலத்தை செய்ய வேண்டும்.

119. கனத்தின் முடிவில் பதினான்கு விதஸ்தி அளவாக கூறப்பட்டுள்ளது. விதஸ்தி என்பது நீட்டப்பட்ட கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரையுள்ள அளவாலோ ஆயாமம் என்ற அளவுகளை அறிய வேண்டும்.

120. பரப்பளவினால் நீளத்திலிருந்து அல்லது எல்லா அமைப்பிலிருந்து அளவை கிரஹிக்கவேண்டும். எட்டு. மூன்று, எட்டு, பன்னிரெண்டு, பதினான்கு என்ற அமைப்புகளால் அமைக்கவேண்டும்.

121. எட்டு இருபத்தியேழு, குறைந்ததாகவோ முப்பது, ஏழு இவைகளால் வரிசையாக ஆயம் முதலிய அமைப்புகளை அறியவேண்டும்.

122. ஆயம், வ்யயம், யோநி, நக்ஷத்ரம், வாரம் இவைகளை விஸ்தாரத்திலோ ஆயாமம் என்ற அளவினால் வ்யயம் (கழிப்பதை) செய்ய வேண்டும்.

123. ஆயாமென்ற அளவினால் யோநியையும் அந்த அளவினால் நக்ஷத்ர அமைப்பினால் கூறப்பட்டுள்ளது. ஆயாயமென்ற அளவால் விஸ்தாரத்தை சேர்த்து திதிவார அமைப்பை உயரமாக செய்ய வேண்டும்.

124. மூன்று மாத்திரை, ஒரு மாத்திரை அளவுகளால் அதன் பிரிவுகளால் இரண்டாக கூறப்பட்டுள்ளது. ஓர்முழ அளவு உயரத்தை அறியவும், அலங்காரம் கூறப்பட்டுகிறது.

125. மூன்று மாத்திரை முதல் கால்பாத மாத்திரை அதிகரிப்பால் பதினெட்டங்குலம் வரை யானை கண் அமைப்பின் அகலமாகும்.

126. ஐந்து மாத்ரை ஆரம்பித்து கால்மாத்ரை அதிகரிப்பால் ஏழு மாத்ரை வரை யானைக்கண் அமைப்புகளை அதிகரிக்கவும் செய்யலாம்.

127. ஐந்து மாத்ரை முதல் கால்பாக மாத்ரை முதலான ஏழு மாத்ரை வரை ஓர்முழம் அளவு வட்ட வடிவமாகவோ, நாற்கோணமாகவோ அமைக்க வேண்டும்.

128. நீள்வட்டவடிவமாகவோ, செவ்வகபாகமாகவோ கைஅமைப்பாக கூறப்பட்டுள்ளது. பதினெட்டம்சத்திலிருந்து அம்ச வ்ருத்தியால் தன்பரப்பால் ஆறம்சம்வரை

129. இஷ்டிகை இரண்டுகை பாகங்களாலும் கர்ணம் கூறப்படுகிறது. ஆனால் கை அமைப்பால் அதன் பிரிப்பின் எட்டு அம்சம் வரையக விசேஷம் கூறப்பட்டுள்ளது.

130. கால் மாத்ரையிலிருந்து, கால்மாத்ரை அதிகரிப்பால் நான்கு மாத்ரைவரை பட்டிகையின் கனமும், அகலமும் முறைப்படி அமைக்க வேண்டும்.

131. ஸர்பம், சிங்கம், யானை, குதிரை, மனிதர்கள், வித்யாதரர்களாலும் பொம்மை போன்ற அமைப்பு பாதங்களாலும் பட்டைகளின்றி வாஜனம் என்ற அமைப்புகளாலும்

132. பெரிய கம்பங்களாலும், கொடிகளாலும் பெரிய ஆணிகளாலும், மூளையில் கட்டப்பட்டவைகளால் நல்ல அம்சங்கள் புறா தங்குமிடம் பிரதிவாஜனங்களாலும் அழகுள்ளதாக செய்ய வேண்டும்.

133. மீன்களாலும் வலயங்களாலும், சிறிய குண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம், தாம்ரம், தந்தம், மரவேலைப்பாடுகளால்

134. அழகான பல்லக்கு செய்ய வேண்டும். இது பைடீ எனப்படும். சிகரத்தோடு கூடியது சேகரீ எனப்படும்.

135. பாதங்களோடு கூடிய மஞ்சங்களால் மண்டபாகரமாக உள்ளது மௌண்டீ எனப்படும். பெருவாகை, கருப்புநிறமுள்ள மரம் (கருங்காலி) பலா, வேம்பு, அர்ஜூனம்

136. இலுப்பை, கருங்காலி மற்றும் பாலுள்ள மரங்கள் பல்லக்கு அமைப்பிற்கு கூறப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் உயர்ந்த மரங்களால் லக்ஷணங்களோடு பல்லக்கு தயாரிக்க வேண்டும்.

137. இதற்கும் ஸிம்மாஸனத்தைப்போல் புரோக்ஷணம் செய்ய வேண்டும். (பர்யங்க அளவுடன்) பாதத்துடன் பல்லக்கின் விஸ்தாரத்தை சொல்லப் போகிறேன்.

138. மூன்று மடங்கு இடைவெளி உள்ளதாக விஸ்தாரமும், நான்கு பாதங்களுடன் கூடியதாகவும், பாதத்தின் அளவும் கூறப்பட்டுள்ளது.

139. மூன்றங்குலத்திலிருந்து மூன்றங்குல அதிகரிப்பால் ஐம்பதுமுழம் வரை பாதத்தின் நீளம் கூறப்பட்டு, இரண்டங்குலத்தால் பாத வ்ருத்தியுடன் கூறப்பட்டுள்ளது.

140. பாதத்தின் அடியில் பதினைந்து மாத்திரை அகலமாகும். பலவித கெண்டி அமைப்புடனும் பலவித தாமரை, பலகோடு அமைப்புகளோடும்

141. பல கர்ணபாகங்களுடனும் மூன்று மடங்கு இருப்பினால் கூடியதும் அதன் பக்கங்களில் யானைக் கண் போன்ற அமைப்புகளை உடைய பலகையையோ செய்ய வேண்டும்.

142. அதிகமான பலகையையோ, நன்கு அழகாகவும் பலமாகவும் இருக்கும்படி அமைக்கவும். பலவித பட்டைகளும் பலவித கம்பங்களையும் உடையதாக வேண்டும்.

143. பலவித ஆப்புகளையும் பலவித உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டும், உலோகத்தாலோ தந்தத்தாலோ, மரத்தினாலோ எல்லா திரவ்யங்கள் கலந்ததாகவோ

144. பல்லக்கை ஆயம் என்ற கணக்கு வகைகளால் சேர்ந்ததாக செய்வது ஐச்வர்யத்தை கொடுக்கும். இது பர்யங்கம் (விரிப்பு) என்ற அமைப்பை உடையதாகும். பாலபர்யங்கமும் அவ்வாறேயாகும்.

145. பல்லக்கைப்போல் நீட்டப்பட்ட கர்ண வேலைப்பாடின்றி கேடயத்தின் பாகத்துடன் கூடி ஓர்பட்டிகையோடு கூடியதும்.

146. காலின் அடியில் வேம்பு முதலிய மரங்களால் ஏற்படுத்தப்பட்ட சிறிய சக்கரத்தோடு கூடியது பாலபர்யங்கம் என்று பெயர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேர் முதலியவைகளின் அமைப்பு முறையாகிற எழுபத்தோராவது படலமாகும்.