புதன், 9 அக்டோபர், 2024

படலம் 28: பிராயச்சித்த விதி...

படலம் 28: பிராயச்சித்த விதி...

301. தீபாராதனையோ அல்லது அதன் அங்கமோ குறைந்தால் தேசத்தில் அக்னிபயம் உண்டாகும். ஆசார்யன் ஈசனை பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து பணிவுடன் ஆராதிக்க வேண்டும்.

302. குறைந்த பொருட்களை இருமடங்காக பகவானுக்கு ஸமர்பிக்க வேண்டும். சாந்தி ஹோமமோ, மூர்த்தி ஹோமமோ செய்ய வேண்டும்.

303. ஆராத்ரிக்ரியையில் ரøக்ஷபஸ்மம் கொடுக்காமல் இருந்தால் அகோரமந்திரத்தால் நூறு தடவை ஜபிக்க வேண்டும். ஸ்வாமிக்கு உபசாரமாக கண்ணாடி, குடை, சாமரம் முதலியவைகள் கொடுக்காமல் இருந்தால்

304. அகோரமந்திரத்தை ஆயிரம் (1000) தடவை ஐநூறு தடவை (500)யோ ஜபம் செய்து இருமடங்காக உபசாரங்களை செய்ய வேண்டும். வாடிபோன பூக்களால் ஈச்வரனுக்கு பூஜை செய்தால் ராஜ்யத்தில் தடுமாற்ற நிலை உண்டாகும்.

305. அப்பொழுது சுவாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். கர்பகிருஹத்தில் நிர்மால்ய சுத்தி செய்யப்படாமல் இருந்தால், தேவதா ஸாந்நித்யம் இருக்காது.

306. அப்பொழுது ஸ்தலசுத்தி செய்து விசேஷமாக பகவானை பூஜித்து தோஷ சாந்தியின் பொருட்டு ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

307. நிர்மால்யம் கலந்த புஷ்பாதிகளால் பகவான் பூஜிக்கப்பட்டால் அந்த தேசத்தில் வசிக்கும் மக்கள் சத்ருக்களால் துன்புறுத்தப்படுவார்கள்.

308. க்ஷயம், குஷ்டம் முதலிய வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களாலும் செவிடர்களாலும், பாபரோகங்கள் உள்ளவர்களாலும் அபஸ்மாரம் என்ற வலிப்பு நோயால் தாக்கப்பட்டவர்களாலும் அவலக்ஷணம் நிறைந்தவர்களாலும்

309. குறைந்த அவயவம் உடையவர்களாலும், வளர்ச்சியடைந்த அங்கமுள்ளவர்களாலும், சிகையில்லாதவர்களாலும் செய்யப்பட்ட பூஜை ராஜ்யத்தில் குழப்பம் ஏற்படக்காரணமாக அமைகின்றன. அதன் பிராயச்சித்தம் கூறப்படுகிறது.

310. அதற்கு பரிஹாரமாக ஒரு தடவை நடத்தப்பட்ட முறைதவறிய பூஜைக்காக ஆசார்யன் நூறு தடவை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும், அதற்கு மேல் காலப்போக்கை அனுசரித்து நூறு தடவை ஜபிப்பதை மறுபடியும் ஜபித்து பூஜை செய்ய வேண்டும்.

311. ஒரு பக்ஷத்திற்கு மேல் முறைதவறி நடந்தால் ஸம்ஹிதா ஹோமமும், மாஸதேதிற்கு மேல் போனால் சாந்தி என்ற ஹோமமும் செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு மேல் ஆனால் சாந்தி ஹோமத்தையும் அதற்கு மேல் போனால் மூர்த்தி ஹோமத்தையும் செய்ய வேண்டும்

312. உரியதான குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் செய்யும் யாகமே விரும்பிய பயனை கொடுப்பதாகும். மற்ற தேசத்தில் வேறுகாலத்தில் செய்யப்படும் யாகம் விரும்பிய பயனை கொடுக்காததாகும்.

313. ஸந்தியா காலத்தில் நேரத்தை தவறவிட்டு சாந்தி ஹோமாதிகள் செய்தால் தோஷம் ஏற்படும். அதற்காக ஆயிரம் முறை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஸந்த்யை ஐந்து வகைப்பட்டது என்றும் சாஸ்திரத்தில் பாலை என்ற வேறுபாடாக வேண்டும் கூறப்படுகிறது.

314. அவை பாலா, அதிபாலா, யுவதி, அதிவ்ருத்தா, ச்ரேயஸீ என்று ஐந்து வகைப்படும். அதிபாலை, அதிவ்ருத்தை இவைகளுடன் மற்ற மூன்றும் 1.05 நாழிகை கொண்டவைகள் ஆகும்.

315. சூர்யோதத்திற்கு முன்னதாகவுள்ள 0.5 நாழிகை சமயமும், நடுவில் உள்ளதான யுவதீ என்ற ஸந்த்யைக்கு முன்னதாக உள்ள அதிபாலை, பாலை என்ற காலம் நித்ய, நைமித்திய, காம்ய ஆகிய மூன்று விதமான பூஜைகளில் ஏற்று கொள்ளாததாகும்.

316. சூர்யனுக்கு பின்புறமாக யுவதீ முதலிய ஸந்த்யைகள் செல்லுகின்றன. அந்த ஸந்தியா காலங்களில்தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அந்த பூஜையையும் முற்பகலிலேயே செய்ய வேண்டும்.

317. ச்ரேயஸீ என்ற ஸந்த்யையில் ஆரம்பிக்கப்பட்ட பூஜை உத்தமமானது. யுவதி, அவ்ருத்தா ஸந்த்யைகளில் செய்யப்பட்ட பூஜை மத்யமமானது. பூஜா ஆரம்பத்திற்கு அதிபாலை, அதிவ்ருத்தை, அர்ஹதை அற்றவைகள்.

318. அப்படி இருஸந்தியா காலங்களிலும் பூஜையை ஆரம்பித்தால் முன்பு கூறப்பட்டபடி பரிஹாரம் செய்ய வேண்டும். ஸந்த்யாகால ஆரம்பத்திலும், அதைத்தவிர வேறு ஸமயத்திலும் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

319. ஆதிசைவ குலத்தில் உதித்தவர்கள் அல்லாதாரால் பரார்த்தமாக சிவபூஜை செய்யப்பட்டாலும் ஒருகால ஸந்த்யாகால பூஜை செய்யப்பட்டாலும் அந்த குற்றத்தின் பொருட்டு

320. ஸம்ஹிதா ஹோமம் செய்யவேண்டும். நாட்கள் அதிகமாகி ஆதிசைவரல்லாதவர்களால் செய்த பூஜைக்கு ஏற்றவாறு ஹோமமும் விருத்தியடையும். ஒரு பக்ஷத்திற்கு மேல் போனால் சாந்தி என்ற ஹோமத்தையும், மாஸத்திற்கு மேல் போனாலும் சாந்தி ஹோமத்தையும்

321. இரண்டு மாஸங்கள் ஆனால் மூர்த்தி ஹோமமும் நான்கு மாதத்தில் பூஜை செய்யப்பட்டால் திசா ஹோமமும், ஆறுமாதத்திற்குமேல் ஆதிசைவரல்லாதவர்களால் பூஜிக்கப்பட்டால் ஸம்ப்ரோக்ஷணமும் செய்ய வேண்டும்.

322. ஆறு மாதத்திற்கு பிறகும் ஆதிசைவரல்லாதவர்களால் பூஜை செய்யப்பட்டால், தேவலகன் என்ற அனுசைவரிடத்தில் கூலிக்கு பூஜை செய்யப்படாமல் இருப்பின் அதிகாரமானது உண்டு.

323. மத்ய தேசத்தில் பிறந்த சைவர் பூஜைக்கு அதிகாரியாக ஆகிறார். ஆத்மார்த்த லிங்கபிரதிஷ்டையிலும், தீøக்ஷயிலும் எல்லா தேசத்தவர்களுக்கும் அதிகாரம் உண்டு.

324. விந்தியமலைக்கு தெற்கில் க்ஷத்திய வம்சத்தில் உதித்தவர்களான அரசர்களுக்கும், விந்திய மலைக்கு வடக்கில் வைச்யர்களுக்கும் ஸாந்தாநிகர்களுக்கு எல்லா இடத்திலும் பூஜைக்கு அதிகாரம் உண்டு. சூத்ர ஜாதியில் பிறந்தவர்க்கு தீøக்ஷயில் அதிகாரம் கிடையாது.

325. அதிகாரம் இல்லாதவனால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மா அனுஷ்டிக்கப்படாததாக ஆகும். கூலிக்கு பூஜை செய்பவனாகின்ற ஆசார்யர்கள் லிங்க பிரதிஷ்டை முதலிய கார்யங்கள் செய்திருந்தால்

326. மறுபடியும் லிங்க பிரதிஷ்டை செய்து சாஸ்திரோக்தமாக பூஜையைச் செய்ய வேண்டும். பூஜை செய்ய அதிகாரம் இல்லாதவர்களால் பூஜை செய்யப்பட்டால் முன்பு கூறியபடி பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும்.

327. இவ்வாறு நித்யானுஷ்டான முறையில் பிராயச்சித்தம் கூறப்பட்டது. அஷ்டபந்தனம் முதலியவற்றிற்கு குறைவு ஏற்பட்டால் பிராயச்சித்தம் வரிசையாக கூறப்படுகிறது.

328. அஷ்டபந்தனம் சிதிலமடைந்து லிங்கமோ பிம்பமோ, திருடர்களால் திருடப்பட்டால் (லோ) அம்பாள் மட்டும் திருடப்பட்டாலோ

329. அம்பாளை விட்டுவிட்டு ஸ்வாமி மட்டும் திருடனால் திருடப்பட்டிருந்தால் அந்த ஸமயத்தில் தேவாலயத்திற்கு சிறிதளவோ அல்லது அதிகமாகவோ சேதம் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலும்

330. ஆலய ஸ்தூபியின் அவயவம் வெட்டப்பட்டிருந்தால் ஸ்தூபிகள் கீழே விழுந்தால் கர்பக்ருஹதள அடி வரிசையில் ஜலம் கீழே சென்றால் ஸ்தூபியின் அங்கங்களும் எல்லா பொருளும் கீழே விழுந்தாலும்

331. ஆவுடையார் கீழே விழுந்தாலும் பரிவாரமின்றி இருந்தாலும் பலிபீடம் இல்லாமல் போனாலும் ஜீர்ணமானாலும் பலிபீடம் உடைந்திருந்தாலும்

332. அந்த பலிபீடம் எரிந்து போயோ அல்லது விழுந்தாலோ, பிராகாரம் கோபுரம், பாதிக்கப்பட்டிருந்தாலும் கோபுரம், பிராகாரம் பழுதடைந்து விழுந்தாலும் வெடிப்பு கண்டிருந்தாலும்

333. குரங்கு கோழி, புறா பன்றி, நாய், ஆந்தை, கழுகு, காக்கை, வீட்டுவிலக்குள்ள பெண், திருடன் கழுதை இவைகளாலும்

334. தள்ளப்பட்டவர்கள், பாபிகள், பிரேதம் தூக்குகிறவர்கள், தீட்டுள்ளவர், நல்ல பிறப்பு இல்லாது மறைமுகமாக பிறந்தவர்கள், பாபரோகம் உள்ளவர் மட்டமான மனிதர்கள், கலப்பு ஜாதியில் பிறந்தவர்

335. குரு முதலானவர்களுக்கு த்ரோஹம் செய்தவர்கள், சிவதீøக்ஷ இல்லாத பிராம்மணர்கள் நான்கு கால் பிராணிகள், குதிரைகள், பறவைகள், பாம்புகள்

336. தாழ்ந்த ஜாதியினர், தீøக்ஷ இல்லாதவர்கள், சில்பிகள், வியாபாரி, சண்டாளர், வண்ணான் ஆகிய இவர்களால்

337. பீடம், லிங்கம், பிம்பங்கள் முதலியவைகள் கர்பக்ருஹத்தில் தொடப்பட்டாலும் கர்பக்ருஹத்திலும், உத்ஸவ பேர மண்டபத்தில் பிரவேசித்தாலும்

338. பரிவாராலயத்திலோ உள்மண்டபத்திலோ இரண்டாவது மண்டபத்திலும் பிரவேசித்தாலும் மடப்பன்ளியில் நுழைந்தாலும் பீடங்களைத் தொட்டாலும்

339. நிர்வாண தீøக்ஷ இல்லாதவர்களாலும் ஸமயதீøக்ஷ உள்ள சூத்ரர்களாலும் நாட்டு நலனுக்காக ஸ்தாபிக்கப்பட்ட திருக்கோயில் மூலவர் தொடப்பட்டாலும் கர்பக்கிருகத்தில் பிரவேசித்தாலும்

340. உள்மண்டபம் பிரகாரங்கள் இவைகளிலும் மாளிகைகளிலும் மண்டபத்திலும் வெகுகாலம் தங்கி அசுத்தமான பதார்த்தங்களை போட்டாலும்

341. கர்பக்ருஹம் அர்த்தமண்டபம், பிம்பமண்டபத்திலும், வெளிமண்டபத்திலும் மலம், நச்சுகொடிகள் கபங்கள், கள் சிந்துதல், பிரஸவம் ஏற்பட்டாலும்

342. ஆசவுசம் என்ற சாவுத்தீட்டு உள்ள பிராஹ்மண க்ஷத்ரியவைச்ய என்ற த்ரிவர்ணத்தாரால் உள்மண்டபப் பிரவேசம் செய்தாலும் கோபுரம், கர்பக்ருஹம் அர்த்தமண்டபம் பிரதிமாமண்டபத்திலும்

343. கோபுரவேதியிலும், மாளிகையுடன் கூடிய சுற்றுபிரகாரத்திலும் பிம்பத்திலும் பீடத்திலும், பலிபீடத்திலும் நந்திகேஸ்வரரிடத்திலும் அவரின் ஆலயத்திலும்

344. பரிவாரங்களின், ஆலயத்திலும், தேவாலய கிணற்றிலும், மடப்பள்ளியிலும், உற்சவ ஆஸ்தான மண்டபத்திலும் அரண்மனையிலும் வீட்டிலும்

345. ஸபையிலும், சுவற்றிலும் புற்று உண்டாகியிருந்தாலும் பழுதடைந்திருந்தாலும் தேன்கூடு கட்டியிருந்தாலும்

346. பெரிய கொடிய எறும்புகள் க்ஷúத்ர ஜந்துக்கள் சிவந்த ஸ்திரீகள் வாயிற்படி தேசத்திலும் பள்ளியறையிலும் உண்டானாலும்

347. எண்ணை, நெய், ஹவிஸ், வைக்கப்படும் இடத்திலும் திவாரத்திலுள்ள தண்டு பாகத்திலும் காற்று செல்லுமிடத்திலும் ஆடுபசுஎருமை கொட்டகையிலும் கிராமத்தின் நடுவிலும்

348. மரத்தாலான லிங்கம் பிம்பங்கள், வீதி, நிழல்தரும் மரத்திலும், மடம், தண்ணீர்பந்தல் நந்தவனம்

349. லிங்கத்தின் அடிபாகம், ஆகியவைகளிலும் பாம்புப் புற்று ஏற்பட்டிருந்தால் நித்ய, நைமித்திக காம்ய பூஜைகளில் ஸ்நபனம் லோபமானாலும்

350. தான்யங்களால் ஏற்படுத்தக் கூடிய ஸ்தண்டிலம் அதன் அங்கம் இல்லாமல் இருந்தாலும் கும்பங்கள் இல்லாமல் இருந்தாலும் கும்பங்கள் (பரிமாணம்) குறைந்திருந்தாலும்

351. ஸ்தாபிக்கப்பட்ட சிவகும்பம் வர்தனீகலசம் உடைந்திருந்தாலும் பின்பாகம் உடைந்திருந்தாலும்

352. கரையான், எறும்புடன் கூடிய சங்குகளாலும், ஸ்வர்ணபாத்ரங்களாலும், யக்ஞவ்ருக்ஷபத்ரங்களால் ஆன பாத்ரங்களால் மூர்த்திக்கு ஸ்நாநம் செய்விக்கப்பட்டாலும் நூல் சுற்றப்படாத கலசத்தால் ஸ்நபனம் செய்யப்பட்டாலும்

353. கலசங்கள் குறைவான நூலால் சுற்றப்பட்டிருந்தாலும் பிரதான கூர்சம் இல்லாமல் இருந்தாலும் அந்த கூர்ச்சம் தயாரிக்கும் முறை குறைந்தாலும்

354. கடங்களில் நவரத்னம் தங்கம், வஸ்திர லோபம் ஏற்பட்டாலும் பால், நெய் முதலிய திரவ்யங்களின் லோபம் இருந்தாலும் புண்யாஹவாசனம் இல்லாமல் இருந்தாலும்

355. கும்பம், பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் மந்திர நியாஸம் இல்லாமல் இருந்தாலும் ஆடி முதல் கார்த்திகை முடிய மாதங்களில் செய்ய வேண்டிய

356. அரசாங்க குழப்பம் காரணமாக பவித்ரோத்ஸவம் இல்லாமல் இருந்தாலும் தமனாரோஹணம் என்ற மரிக்கொழுந்து சாத்துதல் இல்லாமலிருந்தாலும் கார்த்திகை தீபம் தடைபட்டிருந்தாலும்

357. அரசாங்க குழப்பங்கள் காரணமாக மூர்த்தங்கள் பூமிக்கடியிலோ தண்ணீரிலோ அல்லது குகையிலோ பாதுகாக்கப்பட்டாலும் சிவலிங்கத்தின் சிரசில் புஷ்பம் இல்லாமல் இருந்தாலும் மழைநீரால் லிங்கம் நனைக்கப்பட்டாலும்

358. உடைந்துவிட்ட ஆலயத்தில் சிவலிங்கம் இருந்தாலும், மிருகங்கள், பறவைகள், பாம்புகள், பசு முதலியவைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வேறு தேவதையால் சிவனுக்கு பூஜை தடைபட்டாலும்

359. இது போன்ற ஸம்பவங்களில் பிராயச்சித்தம் விதிக்கப்படுகிறது. அஷ்டபந்தனம் விடுபட்டு இருந்தால் ராஜ்யம் தடுமாற்றத்தில் இருக்கும்.

360. அஷ்டபந்தனத்தையோ அல்லது த்ரிபந்தனத்தையோ செய்து கடைசியில் ஸ்வாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்ய வேண்டும். பழைய அஷ்டபந்தன மருந்தை நீக்கிவிட்டு சாஸ்திரபிரகாரம் அஸ்திர மந்திரத்தையும்

361. அகோர மந்திரத்தையும் நூறு தடவை ஜபம் செய்து, சமித், நெய், எள்ளு, அன்னம் இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். லிங்கமோ, பிம்பமோ (மூர்த்தயோ) எதிரியால் கைப்பற்றப்பட்டிருந்தால்

362. அந்த தேசம் அழிந்து அரசர் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார். ஆகையால் எப்படியாவது முயற்சி செய்து எதிரியால் கைப்பற்றப்பட்ட லிங்காதிகளை கொண்டு வந்து அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

363. லிங்கம், பிம்பம் முதலியவைகள் கிடைத்தால் அவைகள் ரகஸ்யமான பாதுகாப்பு ஸ்தலத்தில் வைத்து லிங்கத்தை இடத்திலிருந்து பெயர்த்ததால் ஏற்பட்ட தோஷசாந்தியின் பொருட்டு அகோர மந்திரத்தால்

364. ஆயிரம் (1000) ஆவ்ருத்தி ஹோமமும் நெய், எள்ளு, ஹவிஸ், ஆகியவைகளால் நூறு ஸங்க்யை ஹோமமும் தேன்பால் சர்க்கரை கலந்தும் அருகம்பில்லாலும் ஆயிரம் (1000) ஆஹுதியை

365. ஹோமம் செய்து முடிவில் ஸ்தாபன முறைப்படி முன்பு உள்ள பூமியிலேயே ஸ்தாபிக்க வேண்டும். பிம்ப லக்ஷணத்தை பரிக்ஷிப்பது கண்திறப்பது, ஜலப்ரவேசம்

366. ஆகிய இவைகள் இல்லாமல் ஸ்தாபிக்க வேண்டும். தத்வ தர்சிகளால் எதிரியால் கைப்பற்றப்பட்ட லிங்கமும் மூர்த்தங்களும் கிடைக்காவிடில் வேறு புதிய லிங்க பேரங்களைக் கொண்டு ஸ்தாபிக்க வேண்டும்.

367. ஒரு மாஸத்துக்குக் குறைந்தாலும் அதிகமாக போனாலும் மூன்று மாஸத்திற்குள்ளாகவும் கிடைக்காவிடில் ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமத்தை லிங்க பிம்ப ஸ்தாபனம் செய்யும் வரை செய்ய வேண்டும்.

368. அதற்கு மேல் பாலலிங்க பிரதிஷ்டை கூறப்படவில்லை ஆகையால் எப்படியாவது மூன்று மாதங்களுக்குள்

369. பாலாலய விதிப்படி பாலலிங்கத்தை ஸ்தாபித்து அந்த லிங்கம் யாரால் கைப்பற்றப்பட்டது. திருடர்கள் எங்கே, அந்த லிங்கம் எப்பேற்பட்டது.

370. பிம்பங்கள் முகலிங்கமோ அல்லது பாண லிங்கமோ என்று பிரதி தினமும் நிச்சயம் தேடி அந்த லிங்கம் கிடைத்தால்

371. சண்டைபோட்டு வென்றோ பணம் கொடுத்தோ அல்லது அன்பினாலோ லிங்கத்தையும் மூர்த்தத்தையும் முன்பிறந்த இடத்திலேயே ஸ்தாபிக்க வேண்டும்.

372. மூன்று வருஷங்களுக்குள் விடாமுயற்சி செய்து கிடைத்தாலும் அதே இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் கிடைக்காவிடில்

373. மூலஸ்தானத்தில் முன்புள்ளது போல் அந்த திரவ்யங்களால் வேறு மூலலிங்கம் முதலியவைகளை ஸ்தாபித்து பூஜா முறைப்படி அர்ச்சிக்க வேண்டும்.

374. முன்பு இருந்த லிங்கத்தின் அளவும், ஆக்ருதியும் தெரியாவிடில் ஆசார்யன் தேவாலயத்திற்கு ஏற்றவாறோ யஜமானனுக்கு ஏற்றவாறுமோ

375. லிங்கத்தை விதிப்படி நிர்மாணித்து முன் கூறிய பிரகாரம் செய்ய வேண்டும். ஸர்வகார்ய ஸித்திக்காக பாணலிங்கத்தையாவது ஸ்தாபிக்கலாம்.

376. அதே ரீதியில் மூர்த்தத்தையும் பீடத்தையும் செய்விக்க வேண்டும். அம்பாள் இல்லாமல் ஈச்வரனோ அல்லது அம்பாள் மட்டுமோ

377. எதிரிகளால் கைப்பற்றப்பட்டால் முன் பிருந்த மூர்த்தத்திற்கு சமமான மற்றொரு மூர்த்தத்தை தயாரித்து பிரதிஷ்டை செய்து

378. ஆசார்யன் சாஸ்திரோக்தமாக கல்யாண மஹோத்ஸவத்தை செய்ய வேண்டும். புதிய மூர்த்தம் தயார் செய்து பிரதிஷ்டையான பிறகு திருடர் வசமிருந்து மூர்த்தம் கிடைக்கப் பெற்றால் அதை

379. அதன் ஸமீபமான இடத்தில் ஸ்தாபனம் செய்து சிரத்தையுடன் தினமும் பூஜிக்க வேண்டும். லிங்கத்துடன் பீடம் இல்லாவிடில் லிங்கத்திற்கு வேறு பீடம் இணைக்கலாம்.

380. ஸ்வாமியின் ஆலயம் கிழக்கு திசையில் வெடிப்புடன் இருந்தால் அரசனுக்கு பயம் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் வெடிப்பு ஏற்பட்டால் அக்னி உபாதையும், தெற்கு திசையில் வெடிப்பு இருந்தால் ராஜ்யத்தில் கலகமும் ஏற்படும்.

381. தென்மேற்கு திசையில் வெடிப்பு ஏற்பட்டால் தனநாசமும் மேற்கு திசையில் ஊழியர் நாசமும் வடமேற்கு மூலையில் வெடிப்பு ஏற்பட்டால் சத்ரு வ்ருத்தியும் வடதிசையில் வெடிப்பு இருந்தால் புத்ர நாசமும்

382. வடகிழக்கில் வெடிப்பு இருந்தால் அரசனுக்கு துக்கமும் உண்டாகும். ஆகையால் உத்தமம் என்பது முதலான ஸ்தான பேதமறிந்து அவைகளுக்கு ஏற்றவாறு முன்கூறியபடி சாந்திஹோமம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

383. சாந்தி ஹோமத்துடன் கூடியதாக முடிவில் ஆலயத்தில் வெடிப்புள்ள இடத்தை சீர்திருத்தம் செய்து அனுகர்ம விதிப்படலத்தில் கூறியுள்ளபடி முறையாக ஆலயம் அமைக்க வேண்டும்.

384. ஆலயத்தில் சிறிதளவு வெடிப்பு இருந்தாலும் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். ஆலயத்தின் பாதி அம்சமோ அல்லது முக்கால் பாகமோ அல்லது கால்பாகமோ அல்லது அரைக்கால் பாகமோ வெடிப்பு ஏற்பட்டிருந்தால்

385. வெடிப்புள்ள இடத்தை சீர்படுத்தி ஆறு, ஐந்து, நான்கு மூன்று தடவை முன்பு கூறிய முறைப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

386. ஸ்தூபி முதலானவை அதன் அவயவம் பின்னமாகியிருந்தால் ஒரு தினம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். தரையின் கீழே ஜலம் பெருகினாலும் தண்ணீரில் கீழே விழுந்தாலும்

387. ஸ்தூபியின் அங்கம் தண்ணீரில் மூழ்கினாலும் பூமியில் தோஷம் உண்டாகிறது. ஸ்தூபியே நீரில் மூழ்கினாலும் மூன்று நாட்கள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

388. ஈசனை கும்பத்தில் ஆவாஹணம் செய்து ஸ்தலத்தை செப்பனிட்டு சுத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஸந்தி பூஜா காலத்திலும் அஸ்திர தீர்த்தத்தால் ஸ்நானத்திற்காக பிரோக்ஷிக்க வேண்டும்.

389. சில்பிகளால் செப்பனிடப்பட்ட ஸ்தலத்தை புண்யாஹமந்திரங்களால் பிரோக்ஷணம் செய்து ஸ்தலகர்மாவின் முடிவில் ஸம்புரோக்ஷணம் செய்ய வேண்டும்.

390. ஆவுடையார் என்ற பிண்டிகை தன் இடத்திலிருந்து கீழே விழுந்தால் தேசத்திற்கு எதிரிகளால் துன்பம் உண்டாகும் ஆகையினால் ஆசார்யன் சிவனை கும்பத்திலும் அம்பாளை வர்த்தனியிலும்

391. அஷ்ட வித்யேச்வரர்களுடன் கூடியதாக கும்பத்தில் ஆவாஹனம் செய்து ஆவுடையார் என்ற பிண்டிகையை அதன் இடத்தில் பொருத்த வைத்து மூன்று நாட்கள் மந்திர நியாஸத்துடன் சாந்தியை செய்ய வேண்டும்.

392. சில்பி முதலியவர்களின் ஸ்பர்சம் ஏற்பட்டால் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். பரிவாரம் குறைந்தால் அரசாங்கத்தின் ஊழியர்கள் அழிவார்கள்.

393. பரிவாரங்களைத் தயாரித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். பலிபீடம் இல்லாவிடில் எல்லாவித தோஷங்களும் உண்டாகும்.

394. முன்பு இருந்தது போல் ஏற்பாடு செய்து பீடத்தை அதன் இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும். அந்த பலிபீடம் பழுதானாலும் விரிசல் கண்டிருந்தாலும் தீயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கீழே விழுந்திருந்தாலும்

395. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். பிராகாரம், கோபுரம், பழுதடைந்து கீழே வீழ்ந்திருந்தாலும் வெடிப்பு கண்டிருந்தாலும்

396. அரசருக்கு பயம் உண்டாகும். அதற்காக சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். வெடிப்பு கண்ட இடங்களிலும் மற்றவற்றையும் சீர்திருத்தம் செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

397. பஞ்சகவ்யத்தினால் பிரோக்ஷணம் செய்து ஒருநாள் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். குரங்கு, கோழி, புறா, பன்றி, நாய்

398. ஆந்தை, கழுகு, காகம் வீட்டுக்காகாத ஸ்திரீ, திருடன், கழுதை, பாபம் செய்தவர், பிரேதம் தூக்குபவர், தள்ளப்பட்டவன், பிரஸவ தீட்டுள்ளவர்

399. மறைமுகமாக பிறந்தவர்கள், மட்டமான மனிதர்கள், பாபரோகிகள், கலப்பு ஜாதியினர் குரு முதலானவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், தீøக்ஷ இல்லாத அந்தணர்

400. இரண்டு கால, நான்கு கால் பிராணிகள், பறவைகள், பாம்பு, கீழ்த்தரமான ஜாதியில் பிறந்தவர்கள், மற்ற வேறு தீøக்ஷயால் தீக்ஷிக்கப்பட்டவர்களாலும்

401. சில்பிகள், சண்டாளர், வண்ணான், வியாபாரி, ஆகியோர்களால் பீடமோ, லிங்கமோ மூர்த்தங்களோ தொடப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள்

402. அந்த தேசத்து ஜனங்கள் அனைவரும் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார்கள். மேலே கூறப்பட்டவர்களால் தொடப்பட்ட மண்பாண்டங்களையும் அவர்கள் பாத்ரஸமீபத்தில் வந்தாலும் உபயோகிக்க கூடாது.

403. பசுஞ்சாணத்தை அந்த பாத்திரங்களில் பூசி ஆசார்யன் புண்யாஹ வாசனம் செய்து பஞ்சகவ்யத்துடன் ஸ்நபனம் செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

404. ரஜஸ்வலா தீட்டுடன் கூடியபெண், பாபி. ஆசவுசம் என்ற தீட்டுடன் கூடியவர் வண்ணான், சில்பி ஆகியோரால் தொடப்பட்டால் சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.

405. சண்டாளன் வியாபாரி ஆகியோர் கர்பகிருஹத்திலுள்ள பிரவேசித்தால் சாந்தி ஹோமத்துடன் ஸ்நபனாபிஷேகம் செய்யவேண்டும்.

406. குரங்கு, கோழி ஆகியவைகள் கர்பகிருஹத்தில் பிரவேசித்திருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் இல்லாது சாந்திஹோமத்தையும் தீட்டுபெண் பாபி முதலியவர்கள் கர்பகிருஹத்தினுள் நுழைந்தால்

407. முன்பு கூறப்பட்டபடி ஸம்ப்ரோக்ஷணம் மட்டும் செய்யவேண்டும். சண்டாளன், வண்ணான், முதலியவர்களால் கர்பகிருஹம் பிரவேசிக்கப்பட்டிருந்தால் சாந்தி ஹோமத்துடன் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

408. சாந்திஹோமம், திசாஹோமம், ஸம்ப்ரோக்ஷணம் என்று மூன்று பிரகாரமாக பிராயச்சித்தம் கூறப்பட்டுள்ளது.

409. மேற்கூறியவர்கள் அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தால் சாந்தி, சாந்திஹோமம் என்ற ஹோமம் செய்ய வேண்டும். சண்டாளனுக்காக உள்ள பிராயச்சித்தத்தையும் செய்ய வேண்டும்.

410. ரஜஸ்வலை ஸ்திரீ ஸ்பர்சம் ஏற்பட்டால் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். சாந்திஹோமம், திசாஹோமம் ஸம்ப் ரோக்ஷணம் ஆகிய மூன்று விதமான பரிஹாரத்தை பிம்பமண்டப பிரவேசம் செய்தால் செய்ய வேண்டும்.

411. மூர்த்தி ஹோமம், சாந்திஹோமம், திசா ஹோமம், ஆகியவைகளை தீøக்ஷயில்லா ஆசார்யன் செய்யக்கூடாது. அவர்களை ஒதுக்கிவிட்டு தீøக்ஷயுள்ள ஆசார்யன் கிரியைகளை செய்யவேண்டும்.

412. பரிவாரதேவைகளின் ஆலயத்தில் பிரவேசித்தற்காக மேற்கூறிய பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். புறா, காகம், பாம்பு முதலிய பிராணிகளின் பிரவேசம் தோஷத்தை உண்டாக்காது.

413. உள்மண்டபத்தில் சண்டாளர், வண்ணான் முதலியவர்கள் பிரவேசித்தால், மூர்த்திஹோமத்துடன் சாந்திஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

414. எல்லா கார்யங்களிலும், பசுஞ்சாணம், பூசுவது பொதுவானது. மடப்பள்ளியில் சண்டாளர் வண்ணான் முதலியவர் பிரவேசித்தால் பரிவார ஆலயபிரவேசத்தில் கூறப்பட்டபடி பரிஹாரம் செய்ய வேண்டும்.

415. மடப்பள்ளி பிராயச்சித்தத்திற்கு ஸமமாகி பலிபீடங்களை தொடுவது முதலியவைகளுக்கு பரிஹாரங்களை செய்ய வேண்டும், நிர்வாணதீøக்ஷ இல்லாதவர்களும், சமயதீøக்ஷயுள்ள சூத்ரர்களும்

416. பரார்தமாக ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்ட சாச்வதமான லிங்கத்தை தொட்டாலும் மேலே கூறப்பட்டவர்கள், கர்பகிருஹத்தில் நுழைந்தாலும் ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

417. அர்த்த மண்டப பிரவேசத்தில் தோஷம் இல்லை. உள்மண்டபம், பிராகாரம், மாளிகைபோல் அமைப்புள்ள இடம், மண்டபம் இவைகளிலும் தோஷம் இல்லை.

418. மண்டபத்தின் நடுவே வெகுநேரம் வஸித்தால் அசுத்தமான பொருளை போட்டாலும் அசுத்தம் இருந்த இடத்தை சீர்படுத்தி பசுஞ்சாணத்தால் அலம்பவேண்டும்.

419. இடையூறுக்கு அனுகுணமாக புண்யாஹ வாசனத்தையும், சாந்திஹோமத்தையும் செய்ய வேண்டும். கர்பகிருஹத்திலோ, அர்த்த மண்டபத்திலோ, மூர்த்தங்களின் மண்டபத்தில்

420. மலமோ, ப்ரஸவித்தலோ, நச்சு கொடியின் ஜலமோ, கபம், கள் போன்றவை முதலியவைகள் சிதறிக் கிடந்தால் ஸம்ப்ரோக்ஷணம் செய்து, திசாஹோமம், மூர்த்தி ஹோமம், சாந்திஹோமத்தையும் செய்ய வேண்டும்.

421. பசுஞ்சாணத்தால் சுத்தி முதலியவைகளை முன்பு போலவே சொல்லப்பட்டுள்ளது. ஆசவுசம் உள்ள மூன்று வர்ணமுள்ள தீக்ஷிதர்களின்

422. உள் பிரகார நுழைவு குற்றத்தை ஏற்படுத்தாது. தீøக்ஷ இல்லாதவர்கள் பிரவேசம் செய்தால் பஞ்சகவ்யத்தால் அந்த இடத்தில் தெளிக்க வேண்டும்.

423. அதற்கு வெளியில் பிரவேசித்தால் தோஷமில்லை என்று கூறப்படுகிறது. சிவசின்னத்தை தரித்திருக்கும் சூத்ரர்களோ, கலப்பு ஜாதியினரோ,

424. த்ரிவர்ணத்தவரால் தீøக்ஷ செய்து வைக்கப்பட்டாலும், அவர்கள் தீøக்ஷ இல்லாதவர்களுக்கு இணையானவர்கள் ருத்ரகன்னிகைகள் மந்திரமின்றி தீøக்ஷ செய்யப்பட்ட தேவதாஸிகளுக்கு இணையானவர்கள்

425. தீøக்ஷ இல்லாத பிராம்மணர் முதலியவர்களால் ஐந்து ஆசார்யர்களும் தீøக்ஷ செய்யவிக்கப்பட்டால் தீøக்ஷ செய்யப்பட்டதாக ஆகாது. கோயில், கர்பகிருஹத்திலும், அர்த்தமண்டபத்திலும் உத்ஸவ மூர்த்தி மண்டபத்திலும்

426. மாளிகையுடன் கூடிய பிராகாரத்திலும் கோபுரத்தின் பக்கத்திலும், பிம்பத்திலும், தேவாலய வாசலில் உள்ள பீடத்திலும், விருஷபத்திலும், விருஷபம் இருக்கும் இடத்திலும், பலிபீடத்திலும்

427. பரிவார தேவதைகளின் ஆலயத்திலும் கிணற்றிலும், மடப்பள்ளியிலும், ஆஸ்தான மண்டபத்திலும் அரசருடைய மாளிகையிலும், வீட்டிலும்

428. ஸபையிலும், அதற்கு மேற்பட்ட பிரதேசத்திலும் பாம்பு புற்று ஏற்பட்டாலும் கட்டிடங்களில் வெடிப்பு, விரிசல் ஏற்பட்டாலும், தேன்கூடு ஏற்பட்டாலும்

429. பெரிய எறும்பு, கொடியசிகப்பு ஸ்தீரி முதலிய கொடிய ஜந்துக்கள் பூமியிலிருந்து கிளம்பி இருந்தாலும் மனிதர்களுக்கு எல்லாவிதமான தோஷங்களும் உண்டாகும்.

430. நடுப்பகுதி, கிழக்கு முதல் இவைகளுக்கு பலனைக் கேளுங்கள், வியாதி, பயம், தீவிபத்து, பந்துக்களின் அழிவு, பணவரவு

431. புத்ரநாசம், நண்பர்களின் லாபம், தான்யலாபம், பொருள் அழிவு, ஆகிய பலன்களாகும். நடுவிலிருந்து ஈசானதிசை வரை பாம்புபுற்று தெரிந்தால் மேற்கூறிய பலனாகும்.

432. நடுவில் விடுபட்டு இருந்தால் ஸுகம் உண்டாகும். அதற்குமேல் பிராணிகளுக்கு நாசம், கிழக்கு திக்கில் பயம் உண்டாகும்.

433. தென்கிழக்கு மூலையில் இருந்தால் நண்பர் வரவு, அதற்குமேல் இருந்தால் ராஜ்யத்தில் குழப்பம் ஏற்படும் தெற்குதிசையில் பொருள்லாபம்.

434. அதற்கு மேலே இருந்தால் எஜமானுடைய மனைவிக்கு மரணம் ஸம்பவிக்கும், நிர்ருதி திக்கில் அபிவிருத்தி, அதற்குமேல் இருந்தால் அர்த்த மற்றதான பயன் ஆகும்.

435. மேற்கில் இருந்தால் தனலாபம், ஆரம் பத்தில் இருந்தால் திருட்டுபயம், வாயுதிக்கில் இருந்தால் கன்னிகைகளுக்கு தீங்கு, வடக்கு திக்கில் சத்ருக்களால் பயம்

436. அதற்கு மேல் தான்யலாபம், ஈசானத்தில் பெரும்பயம், வாசலில், இருந்தால் கிருஹத்திற்கு அழிவு சயனஸ்தானத்தில் (படுக்கை அறை) இருந்தால் மரணம்

437. எண்ணை, நெய், ஹவிஸ் ஆகியவைகளிருக்கும் இடத்தில் எரும்பு, கரையான்புற்று இருந்தால் நான்குகால் பிராணிகளுக்கு அழிவு ஏற்படும். வாசல் பிரதேசத்தில் இருந்தால் மனைவி மரணம், வேலைக்காரர்களுக்கு தீமை ஏற்படும்.

438. பசு, ஆடு, எருமை முதலிய பிராணிகள் கொட்டகைகளில் எள் செடி முளைத்திருந்தால் கண்நோய், வரும். கிராம மத்தியிலும், தேவலாயத்திலும் எள் செடி முளைத்தால்

439. அதற்கங்கமான ராஜாங்கத்திற்கு பயமேற்படும், லிங்கத்திலும், அரசவையிலும் நிழல்தரும் மரத்திலும், பெரியவீதியிலும், மடத்திலும்

440. தண்ணீர்பந்தல், நந்தவனம், கிணறு, சிவ லிங்கத்தின், அடிபாகத்திலும், எள்செடி ஏற்பட்டிருந்தால் தேசத்தின் நிலை சீர்கெட்டிருக்கும். அரசருக்கும் பயம் உண்டாகும்.

441. தேன்கூடு ஏற்பட்டிருந்த விஷயத்திலும் மேலே கூறப்பட்ட பலன்கள் உண்டாகும். வாசல் முதலியவைகளில் பாம்பு புற்று ஏற்பட்டிருந்தால் முன்பு கூறப்பட்ட பலனாகும்.

442. தோண்டுவதற்கு தகுந்த இடத்தைத் தோண்டி எடுத்து உப்பு முதலியவைகளால் சுத்த மண் கலந்து முன்போல் மறுபடியும் உண்டாகாமல் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

443. புண்யாஹவாசனம் செய்து தீர்த்தால் பிரோக்ஷணம், பஞ்சகவ்ய பிரோக்ஷணமும் செய்து கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து மூர்த்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.

444. பாலாலய மூர்த்தம், லிங்கம், பீடம், ஆலயம், கர்பகிருஹம், த்வாரங்களில் தேன்கூடு, பாம்புபுற்று ஏற்பட்டால் முன்பு கூறியபடி மூர்த்தி ஹோமத்தை ஏழுநாட்கள் செய்ய வேண்டும்.

445. அர்த்த மண்டபத்திலும், மூர்த்தி மண்டபத்திலும் தேன்கூடு, பாம்பு புற்று ஏற்பட்டால் மூன்று தினங்கள், ஹோமங்களையும், வேறு இடத்தில் ஏற்பட்டால் மூர்த்தி ஹோமத்தையும், பிறகு ஒரு நாள் சாந்தி ஹோமத்தையும் செய்யவேண்டும்.

446. அரசருடைய மாளிகையில் தேன்கூடு புற்று இருந்தால் பதினான்கு (14) நாட்கள் திசாஹோமத்தைச் செய்து தேன்கூடு இருந்தால் அந்த இடத்தில் அதை எடுத்து

447. இடத்தை நன்கு சீர்திருத்தி பசுஞ்சாண ஜலத்தால் நன்கு அலம்பி சுத்தம் அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து ஈசனுக்கு அபிஷேகம் செய்து, திசாஹோமத்தை செய்ய வேண்டும்.

448. பாம்புப் புற்றுக்கு கூறியபடி தின எண்ணிக்கையால் தேன்கூட்டிற்கு பிராச்சித்தம் செய்யவும் நித்யநைமித்தியகாம்ய பூஜையில், ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் நின்று போயிருந்தால்

449. ஸ்நபன கர்தாவிற்கு மஹாவியாதி உண்டாகும். அதன் நிவ்ருத்திக்காக சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். முன்பு கூறிய பிரகாரம் மறுபடியும் விருப்பப்பட்ட நாளில் ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

450. ஸ்நபன அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டால் தேசமக்கள் பாபகாரியங்களில் ஈடுபடுவார்கள் அதற்காக (300) மூன்னூறு தடவை அகோரமஹாமந்திரத்தை ஜபித்து ஸ்வாமிக்கு பூர்ணமாக ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

451. நெல் முதலிய தான்யங்களால் நிர்மாணிக்கப்படும் ஸ்தண்டிலத்திற்கும் அதன் அங்கத்திற்கும் குறைவு ஏற்பட்டால் அகோரமந்திரத்தால் (1000) ஆயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்து முறைப்படி ஸ்தண்டிலத்தை சீர்செய்யவேண்டும்.

452. சாஸ்திரத்தால் கூறப்பட்ட கும்பம் முதலியவைகள் உரிய முறைப்படி இல்லையெனில் ராஜ்யத்தில் சண்டை ஏற்படும். அதற்காக 1000 ஆவ்ருத்தி அகோர மந்திரம் ஜபித்து

453. மறுபடியும் ஸ்வாமிக்கு கும்பம், அஸ்த்ரவர்தனீகளால் ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தில் கூறப்பட்ட பிரமாண அளவுடன் கூடிய கலசங்களால் இருமடங்கு திரவ்யங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

454. கும்பம் முதலியவைகளின் அளவு குறைவுபட்டிருந்தால் கும்பத்திற்கு முன்னூறு ஆவ்ருத்தி, வர்தநீக்கு, 200 தடவையும் கலசத்திற்கு 100 ஆவ்ருத்தி என்பதாக

455. மந்திர மறிந்த ஆசார்யன் அவைகளின் அளவு ஸித்திப்பதற்காக முறைப்படி அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். சிவகும்பத்திலோ அல்லது வர்த்நீ கலசத்திலோ,

456. பின்னங்கள் ஏற்பட்டாலும் அடிபாகம் இல்லாததாகவோ இருந்தால் அரசருக்கும் மஹா ராணிக்கும், கார்யகர்தாக்களுக்கும் தோஷம் உண்டாகும்.

457. அப்பொழுது ஆசார்யன் அகோரமந்திரத்தால் ஐநூறு (500) இருநூறு (200) நூறு தடவையுடன் மேலும் அந்த ஆசார்யன் இருமடங்காகவும் ஜபிக்க வேண்டும்.

458. வேறு ஒரு கும்பத்தைக் கொண்டு வந்து அந்தந்த திரவியங்களுடன் வைக்க வேண்டும். மடக்கு போன்ற பாத்ரம், சங்கு, தங்கம், முதலான பாத்ரம் அல்லது பலாசமரம் முதலான பாத்ரங்களில்

459. பகவானை ஸ்தாபித்து நூறு ஆவ்ருத்தி, அகோரமந்திரத்தினால் ஜபம் செய்து அபிஷேகம் செய்ய வேண்டும். நூல் சுற்றப்படாத கும்பங்கள் உபயோகிக்கப்பட்டால் சத்ருக்களை விருத்தி செய்யும்.

460. அதற்கு அகோர மந்திரத்தால் நூறு (100) தடவை ஜபம் செய்யவேண்டும். ஸ்வல்பமாக நூல் சுற்றப்பட்டவைகளாக கும்பங்கள் இருந்தால் அதற்கு 100 தடவை அகோர ஜபம் செய்யவேண்டும்.

461. மாவிலை, தேங்காய், முதலான திரவ்யங்களால் கும்பத்தை சரியாக மூடாதிருந்தால் ஆசார்யன் அகோரமந்திரத்தால் நூறுதடவை ஜபிக்க வேண்டும். கூர்ச்சம் இல்லாமல் இருந்தால் தேவதாஸான்னித்யம் இல்லாமல் போகும்.

462. உள்ளேபோடும் கூர்சம், முதலான கூர்சங்களை மாற்றி வைத்திருந்தாலும் முன்புகூறிய, சத்ருவ்ருத்தியும், தேவதாஸான்னித்யம் இல்லாமையும் ஏற்படும். அதன் பரிஹாரமாக ஹ்ருதய மந்திரத்தால் 200 தடவையோ அல்லது 300 முறையோ ஜபிக்க வேண்டும்.

463. ரத்னம், தங்கம் ஆகியவை கலசத்தில் இல்லாமல் இருந்தால் அரசன் தரித்ரனாக ஆவான். அவ்வாறே கலசம், வஸ்திரம் இல்லாததாக இருந்தால் அரசனுக்கு தாரித்ரியம் ஏற்படும். அந்த தோஷநிவ்ருத்திக்காக (1000) ஆயிரம் தடவை ஹ்ருதய மந்திரத்தால் ஜபம் செய்ய வேண்டும்.

464. தங்கம், ரத்னம் ஆகியவைகளுடன் கூடிய கலசத்தால் மறுபடியும் சுவாமிக்கு ஸ்நபனம் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்சகவ்யம் முதலிய திரவியங்கள் இல்லாமல் இருந்தால் தேசத்தில் சண்டை சச்சரவு உண்டாகும்.

465. அப்பொழுது அகோர மந்திரத்தை நூறு தடவை ஜபித்து பால்நெய் முதலியவைகளை பகவானுக்கு சேர்ப்பிக்க வேண்டும். புண்யாஹவாசனம், பிரோக்ஷணம் இல்லாமல் இருந்தால் மறுபடியும் நூறு தடவை அகோரமந்திரம் ஜபம் செய்ய வேண்டும்.

466. கும்பங்களினால் பூஜை செய்யப்படாமல் இருந்தால் ஸ்நபனம் செய்யப்படாதாக ஆகும். மந்திரங்களால் நியாஸம், செய்யப்படாமல் இருந்தால் சாந்திஹோமம் செய்யவேண்டும்.

467. அகோர மந்திரத்தை நூறு தடவை ஆசார்யன் ஜபித்து தேவதாஸான்னித்யம் ஏற்படச் செய்ய வேண்டும். ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் முடிய (5) ஐந்து மாதங்களில்

468. பவித்ரோத்ஸவம் செய்யப்படாமலிருந்தால் கோயில், வீடு முதலிய இடங்களில் எந்த கிரியைகள் கோயிலில் இருக்கின்றனவோ அந்த எல்லா கர்மாக்களும் பயனற்றவைகளாக ஆகும்.

469. விதிப்படி ஸ்வாமிக்கு பூஜை நடத்தி திசாஹோமத்தைச் செய்யவேண்டும். பிறகு தனக்கு சவுகர்யமாக ஐந்து மாதத்திற்குள் அபிப்ராயப்பட்ட மாதத்தில் பவித்ராரோஹணம் நடத்த வேண்டும்.

470. தமநாரோஹணம் என்ற மரிக்கொழுந்து சாற்றும் உற்சவமின்றி இருந்தாலும் திசாஹோமம் செய்யவும் கிருத்திகாமாத தீபபூஜை இல்லாமல் இருந்தால் ஜனங்கள் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார்கள்.

471. அப்பொழுது மூர்த்திஹோமத்தைச் செய்து கிடைத்த மாதத்தில் தீப பூஜையை நடத்த வேண்டும். அரசாங்கக் குழப்பம், சத்ருக்கள் திருடர்கள் இவர்களால் ஒருவர்க்கொருவர் விரோதம் காரணமாக

472. சிலை, முதலியவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் குகையிலோ, தண்ணீரிலோ, பூமியிலோ மறைத்து வைத்து காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தில் கீழ்வரும் கிரியையை செய்ய வேண்டும்.

473. பிறகு அந்த மூர்த்தங்களின் எதிரில் தயாரிக்கப்பட்ட ஸ்தண்டில பீடத்தில், சந்தனம் முதலியவைகளால் மூர்த்தத்தை பூஜித்து கும்பம், வர்தநீ, வித்யேச கலசங்களுடன் கூடியதாகவோ, வித்யே சாவரண மின்றியோ

474. கூர்ச்சத்துடன் நூல் சுற்றிய கலசங்களால் உமையுடன் கூடிய மஹேச்வரனை அஷ்டவித்யேச்வரர்களுடன் அந்தந்த வேதமந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.

475. அந்த பிம்பத்திற்கு முன்னதாக ஸ்தண்டில அமைத்து சிவாக்னி கல்பித்து சிவமந்திரத்தால் (100) நூறு ஆவ்ருத்தியும் மனோன்மணீ மந்திரத்தால் ஐம்பது (50) ஆவ்ருத்தியும் பிரும்மந்திரம் அங்க மந்திரத்தோடும்

476. அஷ்டவித்யேச்வரர்களுடன் சுவாமிக்கு ஒவ்வொரு மந்திரமும் நூறு ஆவ்ருத்தி ஸமித் நெய் அன்னம் இவைகளால் செய்து கடைசியில் பூர்ணாஹுதியை செய்யவேண்டும்.

477. கும்பத்திலோவர்த்தநியிலோ களிமண் முதலான திரவ்யங்களினால் செய்யப்பட்ட பீடத்திலோ, செங்கல் முதலான கற்களால் செய்யப்பட்ட பீடத்திலோ, லிங்கத்திலோ மந்திரத்தை சொல்லி நியாஸம் செய்யவேண்டும்.

478. ஆசார்யன் அந்த கும்பத்தில் உள்ள ஜலத்தாலேயே பீடம் முதலியவைகளை அபிஷேகம் செய்ய வேண்டும். பீடமாயிருப்பின் பீடத்தின் கீழோ, லிங்கமாயிருப்பின் தேவியை ஆவுடையாரிலோ வைத்து பூஜிக்க வேண்டும்.

479. அதற்காக ஒவ்வொரு நாளும் லிங்கத்திலோ, பீடத்திலோ பூஜை செய்யவேண்டும். உருவ அமைப்புள்ள மூர்த்திகளும் தேவதாஸான்னித்யம் ஏற்படுவதாக இந்த கர்மா கூறப்பட்டது.

480. எந்த ராஜ்யத்தில் சிவலிங்கம் புஷ்பம் இல்லாத சிரசுடன் இருக்கிறதோ அந்த தேசத்தில் எப்பொழுதும் அதிவ்ருஷ்டி, புயல், காற்று கடும் வெய்யில் இவைகளால் பல வித துன்பங்கள் ஏற்படும்.

481. மழை முதலியவைகளால் பாதிக்கப்பட்டதும் பழுதடைந்ததும், இடித்ததுமான ஆலயத்தில் இருப்பதும் விலங்கு, பறவை, பாம்பு, மாடு ஆகியவை களால் பாதிக்கப்பட்டது. இதரதேவதைகளால் பாதிக்கப்பட்டதுமான சிவலிங்கம்.

482. முக்கியஸ்தர்களை பாதிக்கும் வசதியுள்ளவர்களையும் பாதிக்கும். ஆகையினால் அரசர் ஸம்ப்ரோக்ஷணம் முதலிய காரியங்களைச் சீக்கிரமாக செய்யவேண்டும்.

483. பிறகு ஸம்ப்ரோக்ஷணம் ஆனது முதல் தேசத்தின் தன்னுடைய நன்மைக்காக, உத்தமமாகவோ அல்லது நடுத்தரமாகவோ, அல்லது அதமமான சாதாரண முறையிலோ பூஜையை நடத்தவேண்டும்.

484. ஒருவேளையோ, இருவேளைகளிலோ அல்லது மூன்று வேளைகளிலும் ஜபத்துடனும் சந்தனத்துடனும் செய்யப்படும் பூஜை விசேஷமானது. பூஜை தூபத்துடனும் செய்யப்பட்டால் முன் கூறியதைவிட உயர்ந்ததாகும்.

485. தீபத்துடன் செய்தால் உயர்ந்ததாக ஆகும். நைவேத்யத்துடன் பூஜை சிறந்தாகும். தாம்பூலத்துடன் செய்யப்படும் பூஜை முன்பைவிடச் சிறந்தது. பலியுடன் செய்யப்படும் பூஜையும் சிறந்தது.

486. ஹோமங்களால் பகவானை ஆராதித்து, உத்ஸவம் முதலியவைகள் நடத்தப்பட்டால் முன்பு கூறியதை விட உயர்ந்ததாகும். சுத்தந்ருத்தம் என்ற சவுக்யகர்மாவுடன் பூஜை செய்தால் முன்பு கூறியதை விட மிகமிக உயர்ந்ததாகும். இவ்வாறு அறிந்து ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும்.

487. மழை முதலியவைகளால் பாதிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு கோயில் அமைக்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு நாளும் தவறாமல் தீர்த்தம் புஷ்பம், பில்வபத்ரம் ஆகியவைகளை ஸமர்பித்து பரமசிவனை ஆராதிக்க வேண்டும்.

488. பழுதடைந்து இடிந்து போனதும், மாடு, ஆடு முதலியவைகளால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை ஜீர்ணோத்தாரணம் செய்து கதவு தாழ்ப்பாள் முதலியவைகளை செய்து லிங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.

489. முன்பு ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் முதலிய பிம்பங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் பிரம்மாதி மூர்த்தங்களை வேறு இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

490. சிவ÷க்ஷத்திரத்தில், சிவபெருமானுடைய, நந்தவனத்தில் சிவஸாந்நித்யம் உள்ள கிராமத்தில் ப்ராம்மணோத்தமர், விஷ்ணு, பிரும்மா, இந்திரன், புத்தர், ஜைனர்.

491. மற்ற தேவதைகளை தாமே உயர்ந்தவர் என்பதாக பிரதிஷ்டை செய்யக்கூடாது. அப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டியிருந்தால் தூர பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டும்.

492. அதனால் அரசருக்கு அமைதியும், தேசக்களுக்கு நிம்மதியும் ஏற்படும். சிவனை தவிர்த்த விஷ்ணு இதரதேவதைகள் சிவஸ்தானத்திற்கு தூரத்தில் ஸ்தாபிக்கப்பட்டால் தேசத்திற்கு நலன்கள் ஏற்படும்.

493. ஏனென்றால் பரமேஸ்வரர் எல்லோருக்கும் தலைவர், ஒப்பற்றமகிமை உடையவர். அவருடைய ஸ்தானத்தில் அவரைதவிர வேறு எந்த தேவதைக்கும் இடமில்லை.

494. விஷ்ணு மூர்த்தத்தையோ, பிரம்மமூர்த்தத்தையோ, பவுத்தர், ஜைனர், சூர்யன் ஆகிய தேவதைகளை இந்திர கிழக்கு திசையிலோ, ஆக்னேய மூலையிலோ, தெற்கு திசையிலோ

495. நிர்ருதியிலோ, வருணனுடைய திசையிலோ, வாயுதிசையிலோ, குபேரதிசையிலேயும், பார்வதீ, துர்கை, ÷க்ஷத்ரபாலர், சந்திரன்

496. ஜ்யேஷ்டாதேவி, லக்ஷ்மி, பூமி, மன்மதன், கணபதி, சுப்ரமணியர், நந்திகேசர், அஷ்டவஸுக்கள், நாகராஜா ஆகியோர்க்கு ஸ்தானம் ஏற்பாடு செய்வது உத்தமம்.

497. மேற்கூறிய ஸ்தானங்களே முனிவர்கள், மனிதர்கள், அஸுரர்கள், ஆகியோருக்கும் ஸ்தானமாக செய்வதால் ஈசனுடைய ஸ்தானத்திற்கு தகுதி சிறந்ததாக விளங்குகிறது.

498. ஏனென்றால் எல்லா சாஸ்திரத்திலும் பரமேச்வரனை எல்லோரை காட்டிலும் சிறந்தவராக கூறப்படுகின்றன. சிவபெருமானை எல்லா தேவதைகளை போல் ஸாமான்யமாக நினைப்பவர்கள் நரகத்தை அடைவார்கள்.

499. பிரம்ஹதேவரும் விஷ்ணுபகவானும், ருத்ரரும், ஸமமானவர்கள் என்று கூறுபவர்கள் துர்புத்தியுள்ளவர்கள். அவர்கள் பாபமயமான நரகத்தில் வஸிப்பார்கள்.

500. மேற்கூறியபடி சிவனை முக்யமின்றி மற்ற தேவர்களை பூஜிப்பவர்களுக்கு ரவுரவம் முதலிய நகரமே வாஸமாகும். மோக்ஷம் கிடைப்பதில்லை. சிவனையே சரணாகதியாக இருப்பவர்களுக்கு சிவன் பூஜிக்கத்தக்கவராக இருக்கிறார்.

501. 80 வயதுக்கு மேற்பட்டவரும் பதினாறு 16 வயதுக்கு குறைந்த சிறுவனும் வியாதியால் பீடிக்கப்பட்ட பெண்களும் அரைபாகம் பிராயச்சித்தம் செய்ய தகுதியுள்ளவர்கள்.

502. அதிலும் சிரமம் இருந்தால் பாதி, அதிலும் பாதி செய்யலாம். தான் செய்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் ஆசார்யன் வேறொருவன் மூலம் இரண்டு மடங்காக செய்யச் சொல்லவேண்டும்.

503. இடம், நேரம், வயது, சக்தி, ஜாதி, பக்தி, கர்மானுஷ்டான வரிசைகளை நன்கு யோஜித்துச் செய்ய வேண்டும். வியாதியுடன் கூடியவனிடத்தில் உபவாஸம் வேண்டாம்.

504. பிராயச்சித்தம் செய்யமுடியாதவனுக்கு தந்தை, சகோதரன், பந்துக்களாலும் பிராயச்சித்தர்களை பிரித்து கொடுக்கப்பட வேண்டும். மற்ற ஜனங்களால் இருமடங்காக செய்யவேண்டும்.

505. சிறுவர்களாயினும், பெண், முதியோராக இருந்தாலும். வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பவராக இருந்தாலும் அவர்கள் சிவனிடம் பக்தி உள்ளவர்களாக இருந்தால் கால்பாகமாக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

506. 11 வயதுக்கு குறைந்தவராக இருந்தாலும், ஐந்து (5) வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் அவருக்கு சகோதரனோ, தந்தையோ, அல்லது, நண்பரோ, பிராயச்சித்தத்தை செய்யவேண்டும்.

507. ஆகையால் சிறுவனுக்கு குற்றம் கிடையாது. பாபமும் கிடையாது அரசாங்கத்தால் அவனுக்கு தண்டனையும் கிடையாது, பிராயச்சித்தமும் கிடையாது.

508. குறிப்பிடும் பொருள் (தேசம்) எவனால் கட்டளையிடப்படுகிறதோ அவன் தேசிகன் என கூறப்படுகிறான். தேசமும் பலவிதமாகும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்திஸ்தானம் விசேஷமாகும்.

509. சரீரம் சுகானுபவஸ்தானமாகும் அவ்வாறே வேறு ஸ்தானங்கள், ஹ்ருதம்ய, கழுத்து, தாடை, இருபுருவங்களின் இடைவெளி பிரம்மரந்தரம் என்று வரிசையான ஸ்தானமாகும்.

510. நாபி, புருஷசின்னம், மூலாதாரஸ்தானம் தேசம் என்று கூறப்படுகிறது. ஒருமுறை ஸந்தியா லோபத்தில் மேற்பட்ட ஸத்யோஜாத மஹா மந்திரத்தை நூறு (100) தடவை ஜபிக்க வேண்டும்.

511. அறியாமையால் ஸந்த்யா லோபம் ஏற்பட்டால் ஒவ்வொரு ஸந்த்யாகாலத்திலும் ஸத்யோ ஜாத மந்திரம் ஜபிக்க வேண்டும். ஸந்த்யாலோபம் தெரிந்து செய்தாலும் ஒவ்வொரு தேவதார்ச்சனை லோபமா னாலும் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும்.

512. ஒரு காலம் மட்டும் பூஜை செய்பவராகிலும், ஒருதினத்திலும், இருகாலங்களிலும், பூஜை செய்பவர்க்கு அறியாமல் லோபம் ஏற்பட்டாலும் அகோரமந்திரத்தால் ஆயிரம் (1000) முறை ஜபம் செய்ய வேண்டும்.

513. மனமறிந்து பூஜை அனுஷ்டிக்கப்படாவிடில் உபவாஸம் அனுஷ்டிக்கவும், வெகுகாலமாக பூஜை செய்பவராக இருந்தாலும் இரண்டு காலங்கள் முதலான பூஜாலோபம் ஏற்பட்டால்

514. எவ்வளவு நாட்கள் பூஜை செய்யப்படவில்லையோ, அதற்கு ஏற்றவாறு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இரண்டு நாட்கள் பூஜை முதலான பூஜைகள் லோபம் ஏற்பட்டால் ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

515. பதினைந்து நாள் பூஜை இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு நாளும் 150 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஒருமாதம் பூஜா லோபம் ஏற்பட்டால் பத்தாயிரம் (10000) தடவை அகோர மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.

516. ஒரு வருடம் அதற்கு மேலும் தினத்தில் லோபமேற்பட்டால் தீøக்ஷயால் சுத்தி செய்வது விரும்பத்தக்கது, ஆத்மார்த்தலிங்கம், இடத்தை விட்டு நழுவியிருந்தாலும் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருந்தாலும் அக்னியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் எதிரிகளால் அபஹரிக்கப்பட்டிருந்தாலும்

517. மனிதர், குரங்கு, காகம் முதலியவைகளால் தொடப்பட்டாலும், அகோரமந்திர ஜபம் செய்து வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதனால் சுத்தி ஏற்படுவதில் சந்தேகமில்லை (சுத்தி ஏற்படும்)

518. கையிலிருந்து லிங்கம் விழுந்தாலும், ஒரங்குலம், இரண்டு அங்குலம் என்ற அதிகப்படியான கணக்கில் விழுந்தாலும் ஆயிரம் தடவை அகோர மந்திரம் ஜபத்தை அதிகமானதாக இருமடங்கு ஜபம் செய்யவேண்டும்.

519. பீடத்துடன் லிங்கம் விழுந்தால், ஒவ்வொரு தான அளவிற்குமாக (10000) பத்தாயிரம் முறை அகோர ஜபம் செய்ய வேண்டும். பீடம் இல்லாமல் இருந்தால் இருமடங்கு ஆசார்யனால் ஜபம் செய்து பீடம் தயாரிக்க வேண்டும்.

520. ஒரு கையளவு முதலோ அல்லது இரண்டு கையளவு உயரத்திலிருந்தோ லிங்கம் விழுந்தால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபம் செய்து, பஞ்சகவ்யத்தினாலும் பஞ்சாம்ருதத்தினாலும்

521. ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, விசேஷமாக அர்ச்சனை செய்ய வேண்டும். உரிய அங்கமில்லாததாக இருந்தாலும் மேற்கூறியபடி செய்ய வேண்டும்.

522. இரண்டுமுழ கையளவுக்கு மேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்து சேதமடைந்தால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மந்திரம் ஜபம் செய்து, ஸம்ஸ்காரத்தினால் சுத்தப்படுத்தலாம். அல்லது லிங்கத்தை பிரதிஷ்டை செய்வது சாஸ்திர ஸம்மதமாகும்.

523. எதிர்பாரத வகையில் லிங்கம் பிண்டிகை ஆவுடையார் பீடம், உடைந்திருந்தால் முன்பு கூறிய பரிஹாரத்தை இருமடங்காக செய்ய வேண்டும். தெரிந்தபடியே லிங்கம் பீடம் உடைந்தால் பிராயச்சித்தமில்லை.

524. சிவதீøக்ஷ இல்லாத பிராம்மணர் முதலியவர்களால் லிங்கம் தொடப்பட்டாலும் நூறு ஸங்க்யை அதிகப்படுத்தி சிரமத்தை அனுசரித்து அகோர மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

525. சிவலிங்கம் காலால் ஸ்பர்சிக்கப்பட்டால் அல்லது தாண்டப்பட்டாலும் (20000) இருபதாயிரம் தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். காலில் இருக்கும் புழுதி லிங்கத்தில் பட்டால் (10000) பத்தாயிரம் எண்ணிக்கை அகோர மந்திரஜபம் செய்ய வேண்டும்.

526. கபம் முதலிய அசுத்த பதார்த்தத்தால் லிங்கம் கெடுக்கப்பட்டிருந்தால் புண்யாஹம் செய்து தீர்த்த்தால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து (50000) ஐம்பதாயிரம் தடவை அகோரமந்திரஜபம் செய்ய வேண்டும்.

527. சிறுநீரால் லிங்கம் பாதிக்கப்பட்டால் (30000) முப்பதாயிரம் தடவை அகோரமந்திரம் ஜபம் செய்யவேண்டும். ரத்தம், சிறுநீர், ரஜஸ், சுக்லமிவைகளால் லிங்கம் தொடப்பட்டால் 50000 ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும்.

528. மேற்கூறிய அசுத்தத்துடன் கூடிய ஜலம் லிங்கத்தில் பட்டால், 1/4 பாகத்தை குறைத்து அதாவது, 37,500 தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். மலஸ்பர்சம் ஏற்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தியும் விஷ்டை ஜலம் பட்டால் 75,000 தடவை அகோர மஹாமந்திர ஜபம் செய்ய வேண்டும்.

529. நிர்மால்யம் நிறைந்த பள்ளத்தில் லிங்கம் விழுந்து இருந்தால் முன்புபோல் 75,000 தடவை அகோர ஜபம் செய்யவேண்டும். விஷ்டை முதலானவை நிறைந்த குழியில் (பள்ளத்தில்) விழுந்திருந்தாலும் 1.05 லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

530. (அனுலோம) கலப்பு இனத்தில் பிறந்தவனால் லிங்கம் தொடப்பட்டால் தாயார் வம்சத்தை அனுசரித்து பரிஹாரம் செய்ய வேண்டும். தாழ்ந்த ஜாதியினரால் ஸ்பர்சம் ஏற்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

531. வாமாசாரம், தக்ஷிணாசாரம் என்ற மரபு வழிகளில் பிறந்தவர்களால் லிங்கம் தொடப்பட்டால் பத்தாயிரம் தடவை ஜபமாகும். சண்டாளன், வியாபாரி, முதலியவர்களால் தொடப்பட்டால் கத்திக்காக பிரதிஷ்டை செய்யவேண்டும். அகோரஜபமும் செய்ய வேண்டும்.

532. அந்த தொடப்பட்ட குற்றம் நீங்குவதற்கு ஸ்திரமான லிங்கத்தை எடுத்து, அதையே ஸ்தாபித்து லிங்கம் விழுந்ததால் ஏற்பட்ட அசுத்தத்தை நீக்கி லக்ஷம் அகோரஜபமும் நித்ய ஹோமம், இல்லாமல் இருந்தால் நித்யம் செய்வது போல் ஹோமம் செய்து பரிஹாரம் செய்ய வேண்டும்.

533. அஷ்டமி, சதுர்தசி, பவுர்ணமி, அமாவாஸ்யை, உத்தராயணம், தக்ஷிணாயனம், விஷுவ புண்யகாலம், கிரஹணம் ஆகிய இவைகளில் நித்ய ஹோமம் இல்லாமல், இருந்தால் நான்குமடங்கு அதிகப்படியாக ஹோமம் செய்ய வேண்டும்.

534. மற்ற புண்யதினங்களில் இப்படியே நித்ய ஹோமத்திற்கு குண்டத்திலுள்ள அக்னி அணைவது போன்ற லோபம் ஏற்பட்டால் நான்கு மடங்காக மேற்கூறிய பிராயச்சித்த ஹோமத்தை செய்ய வேண்டும்.

535. சிவபெருமானுக்கு பலி இல்லாமல் இருந்தால் 108 சிவ காயத்ரீ ஜபிக்க வேண்டும். விரத நியமலோபம் ஏற்பட்டாலும் மற்ற பூஜாக்ரியைகளில் லோபம் நடந்திருந்தாலும்

536. 108 காயத்ரீயால் பூஜா கார்யங்கள் சுத்தமாகிறது. ஆஷாடம் என்ற ஆடிமுதல் கார்த்திகை முடிய ஐந்து மாதங்களில் பவித்ரோத்ஸவம் செய்யாமல் இருந்தால்

537. அகோரமந்திரத்தினால் மூன்று லக்ஷம் ஜபித்து சாந்திராயண விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பவித்ரோத்ஸவம் இல்லாமல் இருந்தாலும் மூன்று லக்ஷம் அகோரமந்திரத்தை ஜபித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

538. அதே பவித்ரோத்ஸவம் வேறு மாதங்களில் செய்யப்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். ஆனால் சாந்திராயண விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.

539. அர்க்ய பாத்ரம் சுத்தி செய்யப்படாமல் இருந்தால் 200 ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபமும் அர்க்ய பாத்ரம் கெட்டுபோனால் ஆயிரம் ஆவ்ருத்தியும், இல்லாமலேயே இருந்தால் 500 ஆவ்ருத்தியும் அகோரஜபம் செய்ய வேண்டும்.

540. ருத்ராக்ஷ மாலை அறுந்தால் முன்பு லிங்கத்திற்காக கூறிய ஜபம் 1/4 பாகம் அதாவது 100 தடவை அகோர மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். புதிய நூல் அறுந்து போனால் 1000 தடவை ஜபம் செய்ய வேண்டும்.

541. பழுதடைந்த நூலானால் 100 தடவையும், கையிலிருந்து மாலை கீழே விழுந்தாலும், 100 தடவை அகோரமந்திரத்தையும் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்த ருத்ராக்ஷமாலையை சந்தனக் குழம்பால் அலம்ப வேண்டும்.

542. நூறு சிவகாயத்ரீ மந்திரஜபமும் தோஷத்தை நிவிருத்தி செய்யும். பூஜாமணிசரியாக ஒலிக்காமல் இருந்தால் லிங்கத்திற்கு சொல்லப்பட்ட பிராயச்சித்தத்தில் 8ல் ஓர் பாகம் செய்வதால் சுத்தி ஏற்படும்.

543. பூஜா ஸாதனங்கள் ஸ்வாமிபீடம் முதலியவை தன்னையறியாமல் கால்களால் தொடப்பட்டிருந்தால் 200 தடவையும், தெரிந்து தொடப்பட்டிருந்தால் 1000 தடவையும் அகோரமந்திர ஜபம் செய்யவேண்டும்.

544. பகவானுக்கு தூபம் காட்டும் பொழுது அந்த தூபத்தில் ஜந்துக்களின் அவயவம் தவறுதலாக இருந்தால் ஸத்யோஜாத மந்திரத்தை 100 தடவையும் கேசம், மாமிசம், எலும்பு, புழுபூச்சி இவைகளால் தோஷமடைந்து தென்பட்ட நைவேத்யம்.

545. தெரிந்தவாறு செய்தால் 10,000 தடவையும் அறியாமல் செய்து இருந்தால் 100 தடவையும் அகோர ஜபம் செய்ய வேண்டும். நித்யம் தயாராகும் நைவேத்யத்தின் அளவு குறைந்தாலும் உற்சவகால நிவேத்ய அளவு குறைந்தாலும் செய்ய வேண்டும்.

546. 10,000 தடவை அகோரமந்திர ஜபத்தைச் செய்து நைவேத்ய அளவு குறைவால் ஏற்பட்ட தோஷத்தை போக்கவேண்டும். ஆசார்யனையும் பகவானையும் சிவாகம கிரந்தத்தையும் அறியாமல் காலால் தொடப்பட்டால்.

547. 20,000 தடவை அகோரமந்திரத்தையும் அறிந்தபடியே மேற்கூறியவைகளை செய்தால் 1,20,000 தடவை அகோரமந்திரஜபத்தையும் பரமேச்வரன், குரு, சண்டிகேச்வரர் ஆகியோருடைய உத்தரவை மீறினால் லக்ஷம் ஜபமும் செய்ய வேண்டும்.

548. சிவன்குரு சண்டிகேஸ்வரர் ஆகியோருடைய பூஜைக்காக சேகரிக்கப்பட்ட பொருளை சாப்பிட்டால் 75,000 தடவையும் அறியாமையால் நிர்மால்யத்தை சாப்பிட்டால் 10,000 தடவையும் அகோரமந்திரஜபம் செய்யவேண்டும்.

549. பூஜா திரவியங்களை தானம் செய்தால், சாப்பிட்டதின் பிராயச்சித்தத்திற்கு சமமான பிராயச்சித்தமாகும். மேற்கூறிய திரவ்யங்களை பார்த்தாலும் பாதிபாகம் பிராயச்சித்தம் அனுஷ்டிக்கவும், அல்லது மனப்பூர்வமின்றி பூஜாதிரவ்யங்களை சாப்பிட்டால் ஸத்யோஜாதாதி பஞ்சமந்திரங்களையும்.

550. 1000 தடவையோ அல்லது 1500 தடவையோ ஜபிக்க வேண்டும். தெரிந்தபடியே புசித்தால் தீøக்ஷயால் சுத்தமாக ஆகிறான். நிர்மால்யத்தைத் தாண்டினால் 5000 முறை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

551. நிர்மால்யத்தை விலைக்கு கொடுத்தல், ஸ்பர்சித்தல் இவைகளுக்கு மற்ற புசித்ததின் பிராயச்சித்த சமமாகும். ஒரே விதமாக மேல் கூறிய பரிகாரம் ஆகும். தேவதைகளின் சொத்து, தேவதைகளின் பொருள், நிவேதனம் செய்தது நிவேதனம் செய்வதற்காக வைத்துள்ள பொருள்

552. சண்டிகேச்வரருடைய திரவியம், ஸ்வாமிக்கு ஸமர்ப்பித்தது என்று நிர்மால்யம் ஆறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. கிராமம் முதலியவை பகவானுக்கு தேவஸ்வம் பகவானுக்கு வஸ்திரம் முதலியவை தேவ திரவியம்.

553. ஸ்வாமிக்கு நிவேதனத்திற்காக தயார் செய்தது தேவோச்சிஷ்டம், நைவேத்யம் செய்யப்பட்டது என்று ஆறுவகையாகும். சுவாமிக்கு பூஜித்து சண்டிகேச்வரருக்காக வைக்கப்பட்டது சண்டிகேசருடைய திரவியம் வெளியில் எறியப்பட்ட பொருள் நிர்மால்யம் எனப்படும்.

554. பலிபீடத்தில் உள்ள அன்னத்தையும் ஸ்வாமியிடம் விஸர்ஜனம் செய்ததும் ஆவுடையாரில் இருப்பவைகள் நிர்மால்யம். நிர்மால்யதானம் செய்தால் ராக்ஷஸனாக பிறப்பான். அதை சாப்பிட்டால் யானையாகப் பிறப்பான்.

555. நிர்மால்யத்தைத் தாண்டினால் மந்திர ஸித்தி முதலியவற்றின் குறைவும் நிர்மால்யத்தை விற்றால் வேடனாகவும் பிறப்பான். நிர்மால்யத்தை தொட்டால் பெண்ணாகும் தன்மை ஏற்படும். இவ்வாறு நிர்மால்யத்தின் ஸந்தேஹமில்லாத தோஷ பலன் கூறப்பட்டுள்ளது.

556. எந்தப் பொருள் நிர்மால்யத்தால் ஸ்பர்சிக்கப்பட்டதோ அதை மனிதன் புசித்தாலும் நிர்மால்ய ஸ்பர்சம், தாண்டுதல், சாப்பிடுதல் ஆகியவைகளால் ஏற்பட்ட தோஷம் நீங்க முன் சொன்ன பரிஹாரத்தில் 3/4 பங்கு செய்யவும் (7500 தடவை)

557. பக்ஷணம் இரு (2)விதமாகும். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் இருப்பதும் மற்றது நைவேத்யம் செய்யப்பட்டதும் ஆகும். ஸ்வாமிக்கு சொந்தமான கிராமத்தில் உற்பத்தியாகும்.

558. தான்யம் (நெல் முதலியவை) களை ஏதோ ஒரு காரணத்தினாலோ, ஸ்வீகரித்துக் கொள்ளுகிறானோ அதுவும் நிவேத்யத்தை சாப்பிடுவதற்கு ஒப்பானதாகும். அந்த மூடன் சிவனுடைய சொத்தைத் திருடுபவன் ஆகிறான்.

559. பகவானுக்காக தயாரிக்கப்பட்ட அரிசியையோ அல்லது அன்னத்தையோ எவன் சாப்பிடுகிறானோ அல்லது வேறு யாருக்காவது கொடுக்கிறானோ அவனும் திருடன் என கூறப்பட்டுள்ளது.

560. எனக்கு நிவேதனம் செய்யப்பட்டதை புசித்த பாபத்தை விட அதிகமான தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகும். அதனால் அவர்கள் நான்கு வேதங்கள் அத்யயனம் செய்திருந்தாலும் அந்த வேதங்கள் அனைத்தும் மறந்து போகும்.

561. சிவபெருமானுக்கு நைவேத்யத்தை தயாரித்து அதை பகவானுக்கு அர்பணித்து விட்டு ஒவ்வொரு நாளும் நிவேதன சேஷத்தை பக்தியுடன் புஜிக்கிறானோ

562. அவன் எனக்கு (சிவபெருமானுக்கு) ஸமமானவனாகவும் ஆகிறான். யக்ஞ சேஷமான ஹவிஸை சாப்பிட்டவனும் எனக்கு சமமானவனாக ஆகிறான். சிவசேஷத்தையும் எவன் பேராசையால் சாப்பிடுகிறானோ

563. அவன் பாபீ, துஷ் புத்தியுள்ளவன். முன்பு கூறிய முறைப்படி நல்ல பலனல்ல எனப்படுகிறது. சுத்தமான மனதுள்ள பிராம்மணன் இது பரிசுத்தமானது என்று சிவசேஷத்தையும் சண்டசேஷத்தையும்

564. சந்தேஹம் இல்லாமல் பக்தியுடன் சாப்பிடுகிறானோ அவனுக்கு பாபம் சீக்கிரம் விலகுகிறது. நல்ல மனது இல்லாதவனும் ஆசாரம் இல்லாதவனுமான மனிதன் பரிசுத்தமான சிவசேஷத்தை அறியாமையால்

565. சாப்பிடுவானானால் விஷம் (பாதரஸம்) சாப்பிட்டவன் போல் அவன் இறந்து போவான். சிவஸ்வரூபத்தை தரித்திருப்பவர்களும் சிவனையே கதியாக உடையவர்களும்

566. சிவனையே சரணமாகக் கொண்ட ஆசார்யர்கள் விஷயத்தில் நைவேத்ய பக்ஷணம் உசிதமாகும். மற்றவர் விஷயத்தில் இல்லை. ஆகையால் என் நிர்மால்யத்தை புசித்தால் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும்.

567. ஆகையால் நான்கு வர்ணத்தவரான ஆசார்யர்களுக்கு சிவநிர்மால்ய பக்ஷணம் செய்தால் பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். அந்த பிராயச்சித்தத்தை சொல்ல இருக்கிறேன் கேளுங்கள்.

568. மவுனமாக இருத்தல், மூன்று வேளை ஸ்நானம், சிவாக்னி குரு ஆகியோரை பூஜித்தல் கோமயத்தால் மெழுகப்பட்ட பிரதேசத்தில் அமர்ந்து பத்தாயிரம் (10,000) தடவை அகோர மந்திரத்தை ஜபம் செய்து

569. பஞ்சகவ்யத்தை உபயோகித்து ஹவிஸ்ஸையும் புசித்து பல்துலக்குதல் செய்யவும். பாபம் நீங்குவதற்கு ஒவ்வொரு நாள் இரவும் இந்த விரதத்தை செய்ய வேண்டும்.

570. அக்னிகார்யம் இல்லாவிடினும் அகோர மந்திரஜபம் மட்டுமாவது செய்ய வேண்டும். இதற்கு விரதம் என்று பெயர். இது பத்து மடங்கு பெரியதானால் அனுவிரதம் என்று பெயர்.

571. உபவிரதம் என்றும் பெயர் உண்டு. இதைவிட பத்துமடங்கு பெரியது மஹாவிரதம் எனப்படும். மஹாபாபம் செய்தவர்களுக்கு சிவாகமத்தில் மஹாவிரதம் கூறப்பட்டுள்ளது.

572. ஸாதாரண பாபிகளுக்கு அனுவிரதம் முதலியவை கூறப்பட்டது. பிரம்மஹத்தி (பிராம்ஹணவதம்)கள் குடித்தல், திருடுதல், குருபத்னீகமனம்

573. இவைகள் நான்கும் மஹாபாபங்கள், அந்த நான்கு பாபம் செய்தவனுடன் ஸஹவாசம் செய்பவனும் ஐந்தாவது மஹாபாபியாகிறான். வேண்டுமென்றே பாபங்களை செய்தவனுக்கு மஹாவிரதம் அனுஷ்டிக்க வேண்டும். அறியாமையால் பாபம் செய்தவர்களுக்கு முன் கூறிய பரிஹாரத்தில் பாதி போதுமானது.

574. க்ஷத்திரியனை ஒருவன் கொன்றால் பிரும்மஹத்தி தோஷத்தில் 1/4 பாகம் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். வைச்ய வதத்தில் முன் கூறியதில் பாதி சூத்ரவதத்தில் அதிலும் பாதி

575. அனுலோம ஜாதி வதத்தில் அவர்கள் தாய்வழியில் கூறிய பரிஹாரம். மறைவாக பிறந்தவர் விஷயத்தில் முன்கூறியதில் பாதி. நீச ஜாதியில் பிறந்தவர் விஷயத்தில் அதிலும் பாதி.

576. சிவதீøக்ஷ உடையவர்கள் விஷயத்தில் எல்லாவற்றிலும் இருமடங்கு பரிஹாரம். ஆசார்யபிஷேகம் செய்து கொண்டவரை வதம் செய்தால் தீக்ஷிதருக்கு கூறப்பட்ட பரிஹாரம் செய்ய வேண்டும்.

577. பலாப்பழம், திராøக்ஷ, தேன், பேரீச்சை, வெல்லம், கரும்பு, பனங்கற்கண்டு இளநீர், கள் இவைகள் திராøக்ஷ, கண்டங்கத்தரிக்காய், முள் உள்ளவை.

578. ஆகிய 11 போதைப்பொருட்கள் ஸாமான்ய போதை பொருள்களாகும். 12வது கள் இது எல்லாவற்றையும் விட தாழ்ந்தது இந்தக்கள்ளை பிராம்மணன் சாப்பிட்டால் பிராயச்சித்தமாக

579. மாவு மயமான கள்ளைக் குடித்து மஹா விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிராம்மணன் தவறுதலாக முன் கூறிய 11 போதை பொருட்களால் ஆன ஸுரையை பானம் செய்தால் முன் கூறிய பரிஹாரத்தில் 10ல் ஒரு பாகம் பரிஹாரம் செய்ய வேண்டும்.

580. மாவுமயமான ஸுரைக்கள்ளைக் குடித்து பசுவின் சிறுநீர், பார்லி இவைகளை ஆகாரமாகக் கொண்டு பத்துநாட்களில் தூய்மையை அடைகிறான்.

581. இரண்டு தடவை இந்தபிரயோகத்தை செய்தால் தினங்கள் அதிகமாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது. க்ஷத்திரியர்கள் முதலான அனைவருக்கும் முன்பு கூறிய பரிஹாரம் பொருந்தும்.

582. நூற்றுக்கு மேற்பட்ட தங்கத்தை அபஹரித்தவனை கொல்வதே க்ஷத்திரியர் முதலானவர் விஷயத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்ஹணர்களுக்கு கொல்வது கூறப்படவில்லை.

583. நிஷ்கம் (வராகன்) தங்கம் திருடினால் 10000 ஆவ்ருத்தி ஜபம். 5 நிஷ்கம் திருடினால் லக்ஷம் தடவை ஜபம். 10 நிஷ்கம் திருடினால் 10 லக்ஷம் ஜபம். அதற்கு மேற்பட்டு திருடினால் 10 மடங்கு அதிகமானதான

584. கோடி மந்தரஜபமும் ப்ராம்மணன் திருடும் விஷயத்தில் கூறப்பட்டுள்ளது. க்ஷத்ரியாதி வர்ணத்தவர்கள் ஸ்வர்ணத்தை திருடினால் 100,50,25 என்ற முறைப்படி குறைவான எண்ணிக்கையில் அகோர ஜபம் செய்ய வேண்டும்.

585. வெள்ளியை திருடினால் தான்யத்தை திருடின பரிஹாரத்தின் இருமடங்கு பரிஹாரம் செய்ய வேண்டும். தங்கம் வெள்ளி தான்யம் இவைகளை 111 தடவை அகோர ஜபம் செய்ய வேண்டும்.

586. திருடின ஏழைக்கு உகந்தவாறு இருமடங்கு அதிகமாக அகோர மந்திர ஜபம் செய்ய வேண்டும். குருதார கமனம் செய்யாமல் அன்ஸயஸ்தீரீ ஸங்கமத்தில் இந்த பாபம் கிடையாது.

587. ஹோமம் நடத்திக் கொடுப்பது (விவாஹம்) வேதாத்யயனம், சேர்ந்து புஜித்தல், ஆகியவைகளை பாபிகளுடன் செய்பவனும் பாபியாகிறான்.

588. ஒரு வருஷம் அல்லது அதற்கு பிற்பட்டதாக இருந்தால் பாதியோ, அல்லது கால்பங்கோ பரிஹாரம் செய்யலாம். அனுபாதம் என்ற பாபத்தின் சுத்திக்காக அனுவிரதம் கூறப்பட்டுள்ளது.

589. தாயின் சகோதரி, தன் சகோதரி, தன் மகள், தந்தையின் சகோதரியான அத்தை, ஆகிய இந்த நால்வருடன் யோநி ஸம்பந்தம் வைத்திருந்தால் அனுபாதகம் என்று கூறப்படுகிறது.

590. பிராம்மண ஸ்தீரிகமனம், பந்து ஸ்த்ரீ கமனம், தன்னை அண்டியிருப்பவனை வதம் செய்தல், சண்டாளன், வியாபாரி, வண்ணான் ஏனையோருடைய சாப்பிட்ட மீதத்தை புசித்தால் அனுபாதகம் எனப்படும்.

591. லிங்கம், ஆவுடையார், மூர்த்தம் ஆகியவைகளை கைகளால் வெறுப்பினால் அசைந்து பிடுங்கினால் அது பாதகம் என்ற பாபத்தை விட அதிகமானதாகும்.

592. அரசாங்க பீதி, சோர (திருட்டு) பயகாலத்தில் அதை செய்து கெட்ட இடத்தில், மூழ்கி னாலும் அதை போக்குவதற்கு அதை பெயர்த்தெடுத்து வெகு தூரத்தில் அவற்றை பிரதிஷ்டை செய்து

593. விதிப்படி ஸ்தாபித்து அகோரமஹாமந்திரத்தை லக்ஷம் ஆவ்ருத்தி ஜபித்து சுத்தனாகிறான். கோயில் நிலத்தை ஆக்ரமித்து அபஹரித்தல், ஸ்வாமிக்கு உபயோகப்படும் பூஜா ஸாதனங்கள் திருடுதல்,

594. சிவாகம புஸ்தகத்தை திருடுதல், சிவலிங்கத்தை அபஹரித்தல் இவைகளை செய்த சைவம் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கு தடியால் அடிப்பது தண்டனையாகும்.

595. உபபாதகம் என்ற குற்றத்தை போக்க உபவ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். சித்தப்பாவின் தோழி, சிஷ்ய, ஸ்த்ரீ, மருமகள், அடைக்கலம் புகுந்தவள்,

596. அரசி, அரசரால் தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டவள், காப்பவள், உயர்ந்த ஜாதி பதிவ்ரதை, ஸமான கோத்ரமுள்ளவள், மாமனின் மனைவி, ஸமான ரிஷிப்ரவரமுள்ளவள்.

597. ஆகியோரின் சேர்க்கை உபபாதகம் எனக் கூறப்படுகிறது. அண்ணனுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கையில் கல்யாணம் செய்து கொண்ட தம்பி அவர்களுடைய சந்ததியிடம் யாசகம் செய்வதும்

598. அவர்களுக்கு கன்யகாதானம் செய்வதும், சிவாக்னி, சிவாகமம் ஆகியவைகளை நிந்திப்பதும், குருவுக்குப் பிரதிகூலமாக இருப்பதும் ஒருவர் ரஹஸ்யமாக வைத்திருக்கும்பொருளை கைப்பற்றிக் கொள்வதும்

599. தந்தை, தாய், குரு ஆகியோரைக் கைவிடுதலும், பொய்யான ஸாக்ஷியத்தில் ஸத்யம் செய்தலும், கோழிச் சொல்லுதல், தள்ளப்பட்டவன் அவனுடன் சேர்தலும் சேராமல் இருப்பதும்

600. பூமி, வீடு, ரத்னம், கிணறு (குட்டை) மரங்கள் இவைகளை கைப்பற்றுவதும் குளம், கிணறு, ஏரி முதலியவைகளை அபஹரிப்பதும் உபபாதகம் எனக் கூறப்படும்.

படலம் :தொடரும்

படலம் 27: பிராயச்சித்த விதி...

படலம் 27: பிராயச்சித்த விதி...
 

27 வது படலத்தில் பிராயச்சித்த விதி கூறப்படுகிறது. அங்கு முதலில் பிராயச்சித்த கர்மாவின் ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது. உத்தரவு இடும் அமைப்பை உடையது. தர்மம் என்று தர்ம இலக்கணம் ஆகும். அந்த விதி நிஷேதம் என உத்தரவு இரு வகைப்படும். அந்த உத்தரவில் முறைப்படி அனுஷ்டித்த பொழுது தர்மசங்கிரஹம் ஏற்படுகிறது. விபரீதமாக அனுஷ்டித்தால் அதர்மம் ஏற்படும். அதர்மத்தால் பெரிய பாபம் ஏற்படும். அந்த பாபத்தால், பாபத்தை செய்தவனுக்கு கீழ்நோக்கி செல்லும் செயல் ஏற்படும் பொழுது எந்த அனுஷ்டிக்கப்பட்ட கர்மா பாபம் செய்தவனை மேல் நோக்கி செலுத்துகிறது. அந்த கர்மாவானது பிராயசித்தம் என்று ஆகமத்தில் கூறப்படுகின்றது என பிராயச்சித்த கர்மாவின் ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது. மேலும் பிராயக் என்ற சொல்லினால் தோஷம் என்று கூறப்படுகிறது. சித் என்ற சப்தத்தினால் இந்த ஆகமத்தில் ஆத்மா என கூறப்படுகிறது. தகாரத்தினால் தாண்டுதல் என கூறப்படுகிறது. அவ்வாறே எந்த கர்மாவினால் தோஷத்துடன் கூடிய ஆத்மாவிற்கு கீழே விழுவதிலிருந்து மேல் நோக்கி செல்லும் செயல் ஏற்படுகிறதோ அப்பேர்பட்ட கர்மாவானது பிராயச்சித்தம் என்று பிராயச்சித்த சப்தத்தின் பொருள் விளக்கம் கூறப்படுகிறது. எந்த கர்மாவில் அனுஷ்டிக்கப்பட்ட விஷயத்தில் விதியோ நிஷேதமோ இல்லையோ அந்த விஷயத்தில் புண்யமோ பாவமோ இல்லை என்று சாஸ்திர அர்த்த நிர்ணயம் கூறப்படுகிறது. பிறகு கர்மாக்கள் பல விதமாக இருப்பதாலும் நூல் அதிகப்படியாக ஆகும் பிராயச்சித்த கர்மாவை சொல்ல இயலவில்லை. பலவிதமாகவும் கூற இயலவில்லை என்கிறார். ஆகையால் பொதுவான பிராயசித்த கர்மா அல்பமாக கூறப்படுகிறது என கூறி ஸ்நானம், ஜபம், சிவத்யானம், பிராணாயாமம், பிரதிக்ஷணம், பிம்பம், ஆகமம், தன்னுடைய ஆசார்யன், தேசிகன், சைவ சித்தாந்தத்தில் அவர்களுக்கு நமஸ்காரம் செய்வது. சிவன்கோயிலை தரிசிப்பது சிவன் அக்னி குரு. பூஜை செய்வது பஞ்சகவ்யம் அருந்துவது சிவதீர்த்தம் தீட்சை புண்ய ÷க்ஷத்திரங்களில் வசிப்பது.

உபவாஸம், ஹவிஸ், போஜனம், சருபாத்திர சேஷத்தை புசிப்பது. சாந்தி, சாந்திஹோமம் திசா ஹோமம் சம்ஹிதா ஹோமம் மூர்த்தி ஹோமம் நெய்தேன், பால், இவைகளால் ஸ்நானம் செய்விப்பது ஒரு தினம் முதல் கொண்ட உத்ஸவம், சீதகும்பம், விசேஷ பூஜை இவைகள் சனாதன பிராயசித்தம் என கூறப்படுகிறது என்று கூறி அதன் பெயரும் காரியங்களும் குறிப்பிடப்பட்டு, குறிப்பிடப்பட்ட கார்யங்களை குறித்து அவைகளின் லக்ஷணம் சிறிய முறைப்படி விளக்கப்படுவது என அறிவிக்கிறார். பிறகு கவுசிகம் முதலான 5 கோத்திரத்தில் உண்டானவரும், சிவத்விஜ குலத்தில் உண்டானவரும் தலைபாகை உத்தரீயம் புதிய வஸ்திரத்துடன் கூடியவரும் 5 அணிகலன்களை உடைய ஆசார்யன் பிராயசித்தம் செய்யவும் என கூறி பிராயசித்த கர்மாவை செய்வதில் யோக்யமானவரை பற்றி நிரூபிக்கப்படுகிறது. பிறகு அத்புத சாந்தி விஷயத்தில் தினம் லக்னம் நட்சத்திரம் முதலியவைகளை பார்க்காமல் பிராயசித்த கர்மாவை எப்பொழுது  அனுஷ்டிக்கப் படுகிறதோ அது சிரேஷ்டம் ஆகும். ஏழு தினத்திற்கு பிறகு செய்வது மத்யமம். 15 தினத்திற்கு பிறகு செய்வது அதமம் ஒரு மாதத்திற்கு பிறகு செய்வது ஹீனம் ஆகும் எனப்படுகிறது. 1 மாதத்திற்கு மேலாக செய்யக் கூடாது. லிங்கம், பீடம், விமானம் இவைகளின் விஷயத்தில் பிராயசித்தம் ஏற்பட்ட சமயத்தில் முதல்பாகம் மத்யமபாகம், கடைசிபாகமோ, சேர்ப்பதற்காக கர்த்தா தேசிகன் ஸ்தானிகனோ பணம் இல்லாமையால் மனக் கலக்கத்தினாலும் ஒருவர்க்கு ஒருவர் பேராசை என்ற விஷயத்தினாலோ, பாபகர்மா ஏற்படும் என்பதாலோ இந்த பிராயச்சித்தம் குறித்து மதிக்காமல் அலட்சியம் செய்கிறானோ அவர்கள் சிவத்துவேஷி எனவும், ராஜாவிற்கு பங்கத்தை உண்டுபண்ணுபவனும், ராஜ்யத்தை கலகம் உள்ளதாக செய்பவனுமாக நிரூபிக்கப்படுகிறது. அவர்கள் மிகுந்த சிவ பக்தர்களாலும் ஆசை அற்றவர்களாலும் தபஸ்விகளாலும், தண்டிக்கத்தக்கவர்களாக ஆகிறார்கள்.

சிரத்தையுடன் கூடிஎவர்கள் பிராயச்சித்தத்தை செய்கிறார்களே அந்த மனிதர்கள் உத்தமமான மனிதர்கள் என்றும் அரசனுக்கு நன்மையையே செய்பவனாகவும் புண்ய கர்மாவை உடையவனாகவும், ராஜ்யத்திற்கு உபகாரம் செய்பவருமாகவும் ஆகிறார்கள். ஆகையால் முயற்சியுடன் பிராயசித்தம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ள ஸனாதன பிராயசித்த கர்மாக்களின் நடுவில் ஸ்நான, ஜபகர்மா கூறப்படுகிறது. பிரதட்சிணம் என்ற கர்மா பேதமுறைப்படி பயனை தெரிவிக்கும் முறையாக விஸ்தாரமாக கூறப்படுகிறது. சிவதீர்த்தம் அஸ்திர தீர்த்தம் இவைகளை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு உபவாசம் செய்யும் முறை விஸ்தாரமாகவும் வெவ்வாறாகவும் கூறப்படுகிறது. பிறகு சாந்தி கர்மாவானது முறைப்படி கூறப்படுகிறது. அதன் முடிவில் சாந்தியானது ஒன்று மூன்று, ஐந்து ஏழு ஒன்பது, பதினான்கு பதினைந்து, இருபத்தியொன்று, இருபத்தி ஏழு, ஆகிய எண்ணிக்கை உள்ள தினங்களால் இடைவிடாமல் அனுஷ்டிக்க வேண்டும் என 9 விதமாக நிரூபிக்கப்படுகிறது. 9 விதங்களுக்குள் செய்ய வேண்டிய முறையும் அறிவிக்கப்படுகிறது. பிறகு சாந்தி ஹோமவிதி அறிவிக்கப்படுகிறது. அந்த சாந்தி ஹோமமானது இருவகைப்படும் என கூறப்பட்டு அதில் உயர்ந்ததான சாந்தி ஹோமத்தை முதலில் கூறுகிறேன் என்று கூறி உன்னதமான சாந்தி ஹோமத்தை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. 9 கும்பத்தை ஸ்தாபித்து பாசு பதாஸ்திர பூஜை, ஹோமம் செய்யும் முறை கும்பத்தில் உள்ள ஜலங்களால் பிரோக்ஷணம் செய்வது முதலிய செய்முறை தொகுப்புகளை கூறி சாந்தி ஹோமத்திற்கு சொல்லப்பட்ட தின சங்க்யையால் கும்பஸ்தானம் இன்றி ஹோமமோ செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. இருவிதம் என அறிவிக்கப்பட்ட சாந்தி ஹோமத்தில் உயர்ந்தது மட்டுமே கூறப்பட்டுள்ள மற்றவைகள் கூறப்படவில்லை.

பிறகு திசாஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. திசாஹோமம் இருவகைப்படும் அதில் ஒன்று பிராயசித்தத்திற்காகவும் மற்றொன்று ஸ்னபனம் முதலியவைகளுக்கு ஏற்றதானது என கூறி இரண்டின் செய்முறையும் இங்கு சிவாஸ்திரம் பிரத்யங்கிராஸ்திரம் இவைகளின் தியானமுறை விசேஷமாக வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஸம்ஹிஹோமம் செய்ய சொல்லப்படுகிறது. பிறகு இந்த ஹோமமானது எல்லா தோஷத்தையும் போக்கக் கூடியது என கூறி அந்த ஹோமம் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு மூர்த்தி ஹோமம் செய்யும் முறையும் காணப்படுகிறது. முதலாவதாக பிராயசித்தத்திற்காக செய்யக் கூடிய மூர்த்தி ஹோமம் முறைப்படி நிரூபிக்கப்படுகிறது. மற்றதான மூர்த்தி ஹோமத்தின் விசேஷமும் இங்கு கூறப்படுகின்றன என கூறி மூர்த்தி ஈசர்களின் அர்ச்சனை ஹோமத்துடன் கூடிட எட்டு குண்டம் ஐந்து குண்டம் ஒரு குண்டம் இவைகளில் செய்ய வேண்டிய மூன்று வித ஹோமம் கூறப்படுகிறது. இங்கு இந்த மூர்த்தி ஹோமமானது சம்ப்ரோக்ஷணம் பிரதிஷ்டை இவைகளில் பிராயசித்தத்திற்காக செய்யக் கூடாது என கூறப்படுகிறது. இவ்வாறு முன்பு ஸநாதன பிராயசித்த கர்மதன்மையினால் எண்ணப்பட்ட ஸ்நானம் முதற்கொண்டு மூர்த்தி ஹோமம் இவைகளான சிலபிராயசித்தங்கள் கூறப்படுகின்றன. கிருதஸ்நானம் முதலிய கர்மாக்களில் முன்பு போலவே செய்யவேண்டும் என சொல்லப்பட்டதால் மறுபடியும் கூறவில்லை என அறிவிக்கப்படுகின்றன. அதில் கிருதஸ்நான விதியும் க்ஷளத்ராபிஷேக விதியும் க்ஷீரஸ்நானம் முதலிய பலவித ஸ்நான முறையும் விசேஷ பூஜையும் 4வது படலத்தில் ஸ்நபன படலத்தில் விளக்கப்படுகிறது. 1 நாள் முதல் கொண்டதான உத்சவவிதி ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியில் நிரூபிக்கப்படுகிறது. சீதகும்ப விதி 15ம் படலத்தில் சொல்லப்பட்டுள்ளது இவ்வாறு ஸநாதனமான பிராயச்சித்த கர்மாவுக்கும் முன்பு தெரியப்படுத்தப்பட்டவைகளுக்கும் சிலவற்றிற்கு குறிப்பு விஷயம் காணப்படுகிறது.

பிறகு நித்ய பூஜாவிதியில் ஏற்படுகிற நித்யபூஜை விடுபட்டதான விஷயங்களை கூறி அங்கு உண்டாகிற பாபங்களின் விஷயத்தை கூறி அதைப் போக்குவதற்காக செய்யப்படவேண்டிய பிராயச்சித்த கர்மாக்கள் நிரூபிக்கப்படுகின்றன. பின்பு நடுவின் நைமித்திக காம்ய பூஜாவிதியும் ஏற்படுகிற பாத்யாதி திரவ்யங்கள் குறைபாடுகளை விளக்கி அதனால் உண்டாகிற குற்றங்களையும் குறிப்பிட்டு செய்ய வேண்டிய பிராயசித்த கர்மா நீடிக்கப்படுகின்றன. பிறகு அஷ்டபந்தனம் முதலியவைகள் விடுபட்டால் அதற்கு செய்ய வேண்டிய பிராயசித்த முறையும் கூறுகிறேன் என்று சொல்லி நைமித்திக விஷயத்தில் ஏற்படுகிற தோஷங்களையும் அவ்வாறே திடீர் என்று ஏற்படுகிற தோஷங்களையும் குறிப்பிட்டு அந்த தோஷங்கள் ஏற்பட்ட காலத்தில் உண்டாகிற தோஷங்களுக்கு குறிப்பிடுவதன் மூலம் அதை போக்குவதற்கான செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டுள்ளது. பிறகு தேசம், காலம், வயது, சக்தி, ஜாதி, பக்தி இவைகளை நன்கு விசாரித்து அதற்கு தக்கவாறு பிராயத்திங்களை அனுஷ்டிக்கும் விதம் சொல்ல வேண்டுமென கூறப்பட்டுள்ளது. சிறு வயதினர், பலமில்லாதவர்கள், வயதானவர்கள், வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கால் பாகம் பாகம் பிராயச்சித்தம் கொடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. கட்டளைகள் பலவிதமாக சாஸ்திரத்தில் கூறப்படுகின்றன. அவற்றில் மோக்ஷஸ்தானம் மிக முக்யமாகக் கூறப்பட்டுள்ளது. அனுபவிக்குமிடம் சரீரமாகும். அவ்வாறே வெவ்வெறு இடங்களிலிருக்கின்றன என குறிப்பிட்டு ஆசார்யனால் பிராயச்சித்தம் ஏற்பட்ட பொழுது செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விரிவாக கூறப்படுகின்றன. பிறகு உத்ஸவ விஷயத்தில் ஏற்படுகின்ற தோஷங்களை குறிப்பிட்டு, அவைகளேற்பட்டபொழுது உண்டாகிற குற்றங்களை அறிவித்து அங்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விரிவாகி நிரூபிக்கப்படுகின்றன. முடிவில் ஓர் ஆலயத்தில் ஏற்படும் கிரியையை ஓர் ஆசார்யனே செய்யவேண்டும். மற்றவரால் செய்யப்பட்டால் ஆசார்யகலப்பு குற்றம் ஏற்படும். அந்த குற்றம் அரசனையும், அரசவையையும் அழிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் கேட்கின்ற முனிவர்களின் தீர்த்தம் முதலியவை சேகரிப்பது, சந்தனம், புஷ்பம், தூபமிவைகள் தயார் செய்வது, தீபங்கள், நைவேத்யங்கள் ஏற்பாடு செய்வது, உருவபிம்ப பூஜை, பரிவார பூஜை, நித்யோத்ஸம், பாடுவது முதலியவை, ஸ்நபனத்திற்கு தயார்செய்வது, அவ்வமயம் மூலலிங்கம் முதலியவைகளின் பூஜை, நித்யஹோமம், ஆகிய இவைகள் பலமனிதர்களால் செய்யப்படவேண்டியிருப்பதால் எவ்வாறு ஓர் ஆசார்யனே செய்யமுடியும் என்று கண்டனம், தீர்மானம் கூறப்படுகிறது. அங்கு சிவனால் நித்யம், நைமித்திகம், காம்ய விதிகளில் எந்த கிரியை ஓர் ஆலயத்தில் ஏற்படுகிறதோ அந்த கிரியை ஒரே ஆசார்யனாலே செய்யப்பட வேண்டும் என்று முன்பு கூறப்பட்டது. அவ்வாறே தேசிகன், புத்ரன், பேரன், பந்துக்கள், தீஷிதர்கள் அவர்களால் ஏவப்பட்ட மனிதர்கள், ஆதிசைய குளத்திலுண்டான பிராமணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன், அநுலோமர்கள், பாடுபவன், ஆடுபவர்கள், அவர்களால் ஏவப்பட்ட ருத்ரகன்யா, ருத்ரகன்யா, ருத்ரதாஸீ ஆகிய இவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மாவும் ஆசார்யனால் அனுஷ்டிக்கப்பட்டதாக ஆகிறது. எவ்வாறு அரசனால் ஏவப்பட்ட அமைச்சர் முதலியவர்களால் செய்யப்பட்ட அரசகார்யம், அரசனால் செய்யப்பட்டதாகவே எண்ணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் ஏற்கப்படுகிறது என்று ஸமாதானம் கூறப்படுகிறது. இவ்வாறு முப்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. அந்தண ஸ்ரேஷ்டர்களே பிராயச்சித்த விதானத்தை கூறுகிறேன். கேளும். செய்யென்றும், செய்யாதே என்றும் சாஸ்திரம் இருவகைப்படும்.

2. சாஸ்திரத்தில் கூறிய பிரகாரம், அனுஷ்டித்தால் தர்மம் ஸித்திக்கிறது. அதற்கு மாறுதலாக அனுஷ்டித்தால் அதர்மம் ஏற்பட்டு அதனால் மஹாபாபம் ஸம்பவிக்கிறது.

3. அந்த அதர்மனுஷ்டானத்தினால் நரக பிராப்தி ஏற்படுகையில் அதைத் தடுத்து ஸ்வர்க லோக பிராப்திக்காத எந்த கர்மா அனுஷ்டிக்கப்படுகிறதோ அதற்கு பிராயச்சித்தம் என்று இங்கு ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

4. மாபெரும் பாபத்திற்கு ப்ராயம் என்று பெயர், சித் என்றால் ஆத்மா என்று பொருள் த என்ற எழுத்து தாண்டுதல் (கடப்பது) என்று பொருள் கொண்டதாகும் (பிராயச்சித்த)

5. சிவபிராம்மணர்களே! பாபத்துடன் கூடிய ஆத்மா நரகத்தில் விழுவதைத் தடுப்பதே பிராயச்சித்தம் என்று கூறப்பட்டுள்ளது.

6. எந்த கர்மாவை அனுஷ்டிக்கும் விஷயத்தில் சாஸ்திரம் விதிக்கவும் இல்லையோ அதில் புண்யமும் இல்லை பாபமும் இல்லை என்று சாஸ்திரத்தின் (ஒருமித்த) கருத்தாகும்.

7. முக்கியமான கர்மா கிழக்கு முகமாக அனுஷ்டிக்கப்பட்டால் அதற்கு பிராச்சித்தம் தேவை இல்லை. மேற்கு முகமாகவும், திசை மூலையிலும் கர்மா அனுஷ்டிக்கப்பட்டால் பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

8. ஹே அந்தணர்களே கர்மாக்கள் அளவற்றவைகளாக இருப்பதால் கிரந்தம் (சாஸ்திரம்) மிகவும் விரிவடையும் என்ற காரணத்தால் பிராயச்சித்தங்களில் பேதங்களை கூற இயலாது.

9. ஆகையால் சுருக்கமாக ஸ்வல்பமாக பழமையான பிராயச்சித்தம் கூறப்படுகிறது. ஸ்நானம் சிவத்யானம், பஞ்சாக்ஷரஜபம், ப்ராணாயாமம், வலம் வருதல் முதலியன (பிராயச்சித்தமாக) விதிக்கப்படுகிறது.

10. சிவலிங்கம், மூர்த்திகள், ஆகமங்கள், ஸ்வகுரு, ஆசார்யன் சிவஞானம் நிறைந்த மகான்கள் ஆகியோருடைய தர்சனம் பிராயசித்தமாகும்.

11. மேலே கூறியவர்களை நமஸ்காரம் செய்வதும், சிவாலயத்தில் தொண்டு செய்வதும், சிவாக்னி ஆசார்யன், ஆகியோருக்கு நமஸ்காரம் செய்வதும், சிவதீøக்ஷ பெற்றவர்களுக்கு (உரியவர்க்கு) அன்னதானம் செய்தலும் பிராயசித்தமாகும்.

12. கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளில் ஸ்நானம் செய்வதும், பஞ்சகவ்யம் சாப்பிடுவதும். சிவாஸ்த்ரஜலம் தீøக்ஷ, புண்ணிய ÷க்ஷத்திரங்களில் வாஸம் செய்வதும் (பிராயச்சித்தமாகும்)

13. உபவாசம், ஹோம சேஷத்தை புசிப்பதும், சரு பாத்திரத்தில் கடைசியில் மிஞ்சியதை புசிப்பது. சாந்தியும், சாந்தி ஹோமமும், திசாஹோமம், ஸம்ஹிதா ஹோமமும்

14. மூர்த்திஹோமம், நெய், தேன், பால் இவைகளால் பகவானுக்கு அபிஷேகமும், ஒரு நாளை முதலாகக் கொண்டு கொண்டாடுதல், குளிர்ந்த ஜலம் கும்பங்களால் பகவானுக்கு அபிஷேகம், விசேஷ பூஜை

15. ஆகிய இவைகள் யாவும் ஸாமான்யமான பிராயச்சித்தமாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பிரித்து அவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது.

16. ஐந்து கோத்ரத்தில் ஜனித்தவர்களான ஆதிசைவ வம்சத்தில் உதித்தவரும். தலைபாகை, உத்தரீயம், புதியவஸ்திரம், ஆகியவைகளை தரித்தருப்பவரும்

17. மகர குண்டலம், மோதிரம், பூணூல், கடகம் அரைஞான் முதலியவைகளாலான பஞ்சாங்க பூஷணங்களுடன் ஆசார்யர், பிராயச்சித்த விதியை அனுஷ்டிக்க வேண்டும். பிராயச்சித்தத்தையும், அத்புதசாந்தியையும் உடனே அனுஷ்டிக்க வேண்டும்.

18. பிராயச்சித்தம், அனுஷ்டிப்பதற்கு நாள், பக்ஷம், நக்ஷத்ரம், லக்னம் முதலியவைகளை கவனிப்பது, அவசியமில்லை. இவைகளை எதிர்பார்க்காமல் உடனே பிராயச்சித்தம் அனுஷ்டிப்பது உத்தமமாகும்.

19. ஏழு தினங்களுக்குள் பிராயச்சித்தம் செய்வது, மத்யமம், ஒரு பக்ஷத்தில் செய்வது அதமமாகும். ஒரு மாஸத்தில் செய்வது மிகவும் தாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

20. மாஸத்திற்கு, பிறகு செய்யக்கூடாது. ஒரு மாஸத்துக்கு மேல் செய்ய இயலாவிடில் சாந்தி ஹோமத்துடன் செய்ய வேண்டும். லிங்கம், பீடம், விமானம் ஆகியவைகளுடன் கூடிய திருக்கோயிலுக்கும் அவற்றின் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும்.

21. லிங்கம், பீடம், விமானமிவைகளின் ஆரம்பத்திலோ, அல்லது நடுவிலோ, முடிவிலோ இணைப்பதற்காக ப்ராயச்சித்தமேற்பட்டபொழுது யஜமானன் ஆசார்யன்

22. அல்லது ஸ்தானீகரோ, பிராயச்சித்தத்தை குறித்து உதாசீனமாயும், பொருள்பற்றாக் குறையாலும், மனக்கலக்கத்தாலும், விருப்பு வெறுப்புகளாலும்.

23. பாப கர்மாவின் தாக்குதலாலுமோ பிராயச்சித்தம் கடைபிடிக்காமலிருந்தால் அவர்கள் என்னை விரோதிப்பவர்கள் ஆவார்கள். அரசாங்க அழிவிற்கும், அரசாங்க குழப்பத்திற்கும் பிறந்தவர்களாகிறார்கள்.

24. அப்படிப்பட்டவர்களை ஆசையற்ற தபஸ்விகளான என் பக்தர்கள் தண்டிக்கவேண்டும். ஸ்வாமி சொத்தை அபகரிப்பவர்களும் தண்டிக்க தகுந்தவர்களாவர்.

25. சிவபக்தர்களும் அரசாங்கத்திற்கு நன்மை செய்பவர்களும், அரசாங்கத்துக்கு போஷகர்களும், புண்ய கார்யம், செய்பவர்களுமான உத்தமர்கள் சிரத்தையுடன் பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

26. அந்த கிராமத்திற்கு மேன்மையைச் செய்கின்றவர்கள், சிவபூஜையின் அபிவிருத்திக்கு காரணமானவர்களும் நன்கு அறிந்த பிராயச்சித்தத்தை எப்படியாவது அனுஷ்டிக்க வேண்டும்.

27. பிறகு ஆசார்யன் சுத்த பஸ்மஸ்னானம் செய்து மந்திரஜபம், மந்திரமான சரீரத்தை உடையவனாகவும் வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ, ஜபமாலை தரித்துக் கொண்டு

28. சிவமந்திரத்தையும் அல்லது அகோரமந் தரத்தையும், பாசுபதாஸ்த்ரமந்திரம் அல்லது அகோராஸ்த்திரம் சிவாஸ்திரம் பஞ்சபிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களையோ,

29. மேளா மந்திரத்தையோ அல்லது வேறு மந்திரத்தையோ, ஸமுச்சயமாக 100 ஆவ்ருத்தியிலிருந்து கோடி ஸங்க்யை ஆவ்ருத்தி வரை செய்யவும், ஜபம், ஆவ்ருத்தி செய்யும் போது ஜபத்திற்கு தக்கவாறு (அலவண) போஜனம் மிதமான ஆஹாரம் உட்கொள்ள வேண்டும்.

30. ஆஹாரமில்லாமலும், பிக்ஷõசனம் செய்தும், ஹவிஸைபுசித்தும், பாலை குடித்தும், காய், தான்யம், பிண்ணாக்கு, கிழங்கு, கனி இவைகளில் ஏதேனும் ஒன்றை புசிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

31. தேவதைகளின் ரூபத்தை ஸ்மரித்து கொண்டு மேற்கூறிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டு ஜபத்தை இறைவனிடம் ஸமர்ப்பிக்கவும் இது ஜபம் செய்யும் முறையாகும். பிறகு பிரதக்ஷிணத்தை கூறுகின்றேன்.

32. உள் பிரதக்ஷிணம் வெளி பிரதக்ஷிணம் லிங்கத்திற்கும் ஆலயத்திற்குமிடையிலுள்ள பிரதக்ஷிணம் உத்தமம் அதமமாக கூறப்படுகிறது.

33. உள் மண்டபத்திற்குள் பிரக்ஷிணம், சிறந்த பலனை அளிக்கிறது. கர்பகிருஹத்தில் பிரதக்ஷிணம் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அது பல பாபங்களை தரும்.

34. கர்ப கிருஹத்தில் லிங்கத்தின் நிழல் இருக்கும், நிர்மால்யதிரவ்யங்கள் இருக்கும் ஸோம சூத்ரம் என்ற ஸ்தானத்தின் இருப்பிடமானதாலும்

35. ஆகையினால் இவைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எல்லா பயனையும் தரக்கூடிய உள் மண்டல தேசத்திலும் ஸோம சூத்ரம் இருக்கிறது.

36. தேவாலயத்தின் அரைபாக அளவோ அல்லது தேவாலயத்தின் முழு அளவோ நிழல் இருக்கும் நிர்மால்யமும் குவிந்திருக்கும்.

37. அவைகள் அனைத்தையும், நீக்கிவிட்டு பிரதக்ஷிணம் செய்யவேண்டும் வலமிருந்து இடது புறமாக பிரதக்ஷிணம் செய்யவேண்டும்.

38. வலது பாகம் சண்டிகேச்வரருடைய ஸ்தானம் இடதுபாகம் (கோமுகம்) ஸேரம சூத்ரஸ்தானமாகும். ஆகையால் வலமிருந்து இடமாக மெதுவான கதியுடன் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

39. வலமிருந்து இடமாகவும் உள்ளே நித்யோத்ஸவத்திலும் தேவோத்ஸவத்திலும், கோயிலின் நிழலைத் தாண்டுவதாலும் ஏற்பட்ட தோஷம்

40. அந்த காலத்தில் ஸேவிப்பதாலும், அந்த ஸமயத்தில் தோஷம் ஏற்படுவதில்லை. ஸோம சூத்ர பிரதக்ஷிணத்திற்கு வெளியில் செய்யும் பிரதக்ஷிணம் கொஞ்சம் கூட தோஷத்தை உண்டுபண்ணுவது இல்லை. நல்லபயனை கொடுக்கும்.

41. வெளியில் பிரதக்ஷிணம் செய்கையில் பல அடிகளை வைத்து செல்வதால் ஒவ்வொரு அடியும் பத்து மடங்கு அச்வமேத யாக பலனை தருகிறது. உள்பிர தக்ஷிணத்தைக் காட்டிலும் பத்து மடங்கு விசேஷ பலன்களை அளிக்கும்.

42. சூர்யோதயம் முதற்கொண்டு சூர்யாஸ் தமனம் வரை செய்யப்படும். அங்க பிரக்ஷிணத்தின் மஹிமையை யாரும் கூற இயலாது.

43. புண்ய ÷க்ஷத்ரங்களின் மஹிமை பிரகாரம் பகவானுக்கு அங்க பிரதக்ஷிணம் செய்வது அவருக்கு ஆனந்தத்தை அளிப்பதாகும். இவ்விதம் பிரதக்ஷிணம் கூறப்பட்டது. இனி சிவதீர்த்தம் கூறப்படுகிறது.

44. பூமியில் தான்யங்களைப் பரப்பி ஸ்தண்டில மைத்து அதன்மீது வைக்கப்பட்டதும். நூல், வஸ்திரம், ஸ்வர்ணம் கூர்சம், சந்தனம் இவைகளோடு கூடியுள்ள கலசத்தில்

45. உள்ள தீர்தத்தை சிவமந்திரம் ஜபித்து அங்கமந்திரம், பஞ்சபிரம்மந்திரத்தை ஜபித்ததால் சிவதீர்த்தம் என்றும், சிவாஸ்த்ர மந்திர ஜபத்தால் ஜபித்து அஸ்திர தீர்த்தம் என்றும் கூறப்படும்.

46. பிறகு க்ருச்ரம், தப்தக்ருச்சரம் அதிக்ருச்ரம் பராகம் சாந்திராயணம் எனக்ருச்ரங்கள் கூறப்பட்டுள்ளன.

47. மூன்று நாள் ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு மூன்று நாட்கள் உபவாஸம் இருந்தால் க்ருச்ரம் எனப்படும் இந்த க்ருச்ரத்தை ப்ராஜா பத்ய வ்ரதம் எனவும் கூறுவர்.

48. மூன்று நாட்கள் வெண்ணீரைக் குடித்தும் (அல்லது) மூன்று நாட்கள் பாலை மட்டும் உட்கொண்டும் மூன்று நாட்கள் உஷ்ணமான நெய்யை உணவாக உட்கொள்ள வேண்டும். மூன்று தினமும் ஆஹாரமின்றியும் இருக்க வேண்டும்.

49. இது தப்தக்ருச்ரம் எனக் கூறப்படுகிறது. அதிக்ருச்ரம் என்பது கூறப்படுகிறது. 21 நக்ஷத்திரங்களின் (தினங்கள்) எண்ணிக்கைபடி மூன்று பலம் என்ற அளவால் பாலை உட்கொள்ள வேண்டும்.

50. (இதை) அதிக்ருச்ரம் எனக் கூறுவார். பராகம் என்பது கூறப்படுகிறது. 12 நாட்கள் ஆஹாரம், இல்லாமல் இருப்பது பராகவ்ரதம் (எனப்படும்)

51. 15 நாட்கள் சுக்ல பக்ஷத்தில் ஒவ்வோர் பிடி ஆஹாரம் அதிகமாகவும் கிருஷ்ண பக்ஷத்தில் ஒவ்வோர்பிடி குறைவாகவும் ஜலத்தையோ குடித்துக் கொண்டும் ஜீவிப்பதுசாந்திராயணவ்ரதம் ஆகும்.

52. மாலையிலும், தினத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும், நடுப்பகலிலும், உபவாஸத்தை முடிக்க வேண்டும். நான்குவித போஜனத்தையும் விடவேண்டும்.

53. நடுவில் கூறப்பட்ட தப்தக்ருச்ர அதிக்ருச்ரத்தில் தானமும் செய்யலாம். உபவாஸம் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு சாந்தி பற்றி சொல்லப்படுகிறது.

54. நல்ல திசையில் மண்டபம் நிர்மாணித்து ஆக்னேயதிக்கிலோ, முன்பு கூறியபடி அதன் நடுவில் கைஅளவு குண்டத்தை நிர்மாணித்து

55. சில்பியை அனுப்பிவிட்டு, புண்யாஹ மந்திரத்தால் பிரோக்ஷணம் செயது ஸ்வாமியை முறைப்படி சுத்தி செய்து ஒவ்வொரு தினமும் ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

56. நிறைய சந்தனாதி திரவ்யங்களைபூசி சாந்தியை ஆரம்பிக்க வேண்டும். குண்டத்தையும் அக்னியையும் மந்திரத்தால்ஸம்ஸ்காரம் செய்து அந்த மிந்திரத்துடன் கூடிய சிவனை திருப்தி செய்யவேண்டும்.

57. அகோரமந்திரம், அல்லது சிவமந்திரம், அல்லது பாசுபதம், அகோரஸ்த்ரம் இவைகளை ஆசார்யன்ந்யாஸம் செய்து தன்சரீரத்தில் ஸித்திக்கும் படி செய்ய வேண்டும்.

58. ஹோமகுண்டத்தில் கர்ணிகையில் பூஜை செய்து ஸபரிவாரம் தேவனை திருப்தி செய்யவேண்டும். ஸமித்து, பசும்பால், தேன், த்ரிமது இவைகள் முக்கியம்.

59. பாலுடன் கூடிய அருகம்பில்லை அல்லது சுத்த அன்னம் அல்லது பாயஸத்தால் 1000 அல்லது 500 அல்லது 108 ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

60. ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு மேலே கூறப்பட்ட திரவ்யங்களால் ஹோமம் செய்துஸ்வாஹா என்ற பதத்தின் முடிவில் ஸர்வ÷க்ஷõபநாசத்தை பிராத்தித்து

61. பகவன் ஸர்வ÷க்ஷபநாசம் குருகுரு ஸ்வாஹா என்று ஒவ்வொரு மந்திரத்திலும் 10,50,100 ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.

62. மேலே கூறிய மந்திரத்தை உச்சரித்து ஹோமத்தை முடித்து பூர்ணாஹூதியை செய்யவேண்டும்.வாசனை திரவியங்களுடன் கூடிய தாம்பூலத்தை நிவேதனம் செய்யவேண்டும்.

63. சிவாகாம  ஞானத்தினால் தேர்ச்சி பெற்ற வர்கள் சிவனது ஐந்து திசைகளிலும் ஐந்து முகத்தி லிருந்தும் உண்டானதான சிகாகமத்தை படிக்க வேண்டும்.

64. கிழக்கில் தத்புருஷனையும் தெற்கில் அகோரனையும், வடக்கில் வாமதேவரையும் மேற்கில் ஸத்யோஜாதனையும் ஈசானனையும் பஞ்சபிரம்ம மந்திரங்களை ஜபிக்கவேண்டும்.

65. நான்கு வேத விற்பன்னர்கள் வேதபாராயணத்தையும் 4வேதத்தையும் அத்யயனம் செய்தவர்) பலரோ அல்லது ஒருவரோ  ஸ்தோத்திரங்களைச்  சொல்லவேண்டும்

66. அந்த மந்திரங்களின் அர்த்தத்தில் ஈடுபாடுடன் சிவதீøக்ஷயினால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு ஹோமத்தில் ஈடுபாடுள்ளவர்களாலும், ஆசாரத்துடன் ஸ்னாநாதிகளை செய்து அனுஷ்டிக்க வேண்டும்.

67. ஹோமத்ரவ்யத்திலிருந்து ரøக்ஷயைத் தயாரித்து பராங்முக அர்க்யம் கொடுத்து ஈசனை அங்குஇருக்க செய்து அந்தர்பலி பஹிர்பலி இவைகளை கொடுக்க வேண்டும்.

68. ஆசமனம் செய்து உத்தரந்யாஸம் செய்து ஸ்வாமி சன்னதிக்குச் சென்று ஹோமகர்மாவை ஈச்வரனுக்கு அர்பணம் செய்து பாபக்ஷயம் ஏற்பட வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.

69. இவ்விதம் சாந்தி கூறப்பட்டுள்ளது. அந்த சாந்தி ஒன்பது வகைப்பட்டது ஆகும். ஒருநாள் மூன்று நாள்ஐந்து, ஏழு நாட்கள், ஒன்பது நாட்கள் பதினான்கு நாட்கள்.

70. பதினைந்து நாட்கள், 21 நாட்கள் 27 நாட்கள் என்பதாக ஆகும். இடைவிடாது சாந்தி நடைபெறும் குண்டத்தில் உள்ள அக்னிக்கு ஹோமம் முடிவதற்கு முன்பாக விஸர்ஜனம் கூறப்படவில்லை.

71. ஈச்வரனிடம் விஸர்ஜனம் உண்டு. ஆனால் அக்னிக்கு விஸர்ஜனம் கிடையாது. இவ்விதம் சாந்தி கூறப்பட்டு சாந்தி ஹோமம் கூறப்படுகிறது.

72. சாந்தி ஹோமம் இருவகைப்படும் முதல் வகை சொல்லப்படுகிறது. கிழக்கு முதலான நல்ல திசையில் ஆக்னேயத்தில் நன்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில்

73. தான்யாதிகளால் ஸ்தண்டிலத்தை அமைத்து குடத்தை நூல் சுற்றப்பட்டும் ஜலத்துடன் கூடியதாகவும், கூர்சம். வஸ்திரம் தங்கத்தாமரை இவைகளுடன் கூடியதாகச் செய்துவைக்க வேண்டும்.

74. மேலும், சந்தனம் பூசியதாகவும்மஞ்சள் தேங்காய் மாந்தளிருடன் கூடியதாகவும், கலசம் இருக்க வேண்டும், மேலே கூறப்பட்ட கலசத்தை சுற்றி, வஸ்திரம் கூர்ச்சம இவைகளுடன் கூடிய எட்டு கலசங்களை வைத்து

75. மத்திய கும்பத்தில், பாசுபதம்என்று பெயருள்ள வரும் ஓம்காரம் என்கிற ஆசனத்தில் அமர்ந்திருப்பவரும் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வரும் மஹாபலம் நிறைந்தவரும்

76. ஐந்து திருமுகங்களை உடையவரும், பத்து காதுகளை உடையவரும், தித்திப் பற்களால் பயங்கர ஸ்வரூபம் உடையவரும், யாராலும் வெல்லமுடியாதவரும், சப்தத்தை செய்பவரும்.

77. பிரம்மகபாலங்களை ஆபரணமாகக் கொண்டவரும், பிறைசந்திரனை தலையில் அணிந்தவரும் சந்திர சூர்ய அக்னிகளையும் பயங்கரமான கண்ணாக கொண்டவரும் பாம்புகளை ஆபரணமாகவும் நாக்கை வெளியே நீட்டி கொண்டு இருப்பவரும்.

78. பதினாயிரம் கோடி சூர்யர்களுக்குஸமமான தேஜஸை உடையவரும். இடையூறுகளைப் போக்குகிறவரும். பயங்கரமான அஸ்திரங்களுடன் கூடிய பத்து கைகளை உடையவரும். பயங்கரமான ஆயுதங்களை உடையவரும்.

79. கத்தி, வில், சூலம், அபயமுத்ரை, பாசம் ஆகியவைகளை வலது பாகத்திலும், கேடயம், பாணம், கபாலம், வரமுத்ரை, ஈட்டி ஆகியவைகளை இடது பாகத்திலும்.

80. பொன்னிற கொண்ட மீசை புருவம், இவைகளோடு, கூடியவரும், அதே மஞ்சள் நிறமுள்ள கேசங்களையுடைய சிவனை தியானித்து, பாசுபதாஸ்திரத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யவேண்டும்.

81. ஓம் ஸ்லீம் என்ற பதத்துடன் பம்சும் ஹும்பட் நம: என்றும் ஓங்காரத்தை ஆக்னேய திக்பாகத்திலும் ச்லீம் கார மந்திரத்தை ஈசான திக்கிலும் சொல்லி

82. பம் என்ற எழுத்தை நிர்ருதி திக்பாகத்திலும் கம் என்ற எழுத்தை வாயுதிக்கிலும் உச்சரிக்கவும் ஹ்ருதயாதி நியாஸத்தை ஓம் முதல் பட் வரை உள்ள எழுத்துக்களால் செய்து கொள்ள வேண்டும்.

83. எல்லா ஹ்ருதயம் முதலான மந்திரங்கள் பாசுபதம் என்ற வாக்கியத்தோடு கூடியதாகவும், பட் என்பதை முடிவாக கொண்ட வஜ்ராதி ஆயுதங்களை அந்த கலசங்களில் ஆவாஹனம் செய்து

84. சந்தனம் முதலிய திரவியங்களால் பகவானை ஆராதித்து கடைசியில் நைவேத்யத்தை நிவேதிக்கவும், கையளவு வட்டவடிவமான குண்டத்திலோ அல்லது ஸ்தண்டிலம் அமைத்தபூமியிலோ

85. முன்பு போல் மந்திரத்தால் நன்கு ஐந்து ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அக்னியில் ஸபரிவார பாசுபதாஸ்திரத்தை ஆராதித்து திருப்தியடையும்படி செய்ய வேண்டும்.

86. சமித்து, நெய், எள் பால் தெளித்த அருகம் பில், ஹவிஸ் முதலிய திரவ்யங்களால் 1000, 500, 108 ஆவ்ருத்தி, மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு

87. ஒவ்வொரு ஆவ்ருத்திக்கும் கர்மாவை குறிப்பிட்டு பகவானை குற்றங்களின் அமைதியை செய்வாயாக (பகவந்தோஷ சாந்திம் குருகுரு) என்ற ஆசார்யன் பிராத்தித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

88. அங்கமந்திரங்களையும் வஜ்ராதிபத்து அஸ்திரங்களையும் ஆஹூதிகளால் திருப்தி செய்ய வேண்டும். பாசுபதாஸ்திரத்தை நினைத்துக் கொண்டு பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.

89. பாசுபதாஸ்திரத்தை நினைத்துக்கொண்டு பிராயச்சித்தாஹுதியைச் செய்து விட்டு மறுபடியும் பூர்ணாஹுதி செய்து தாம்பூலம் கொடுத்து பராங்முகார்க்யம் கொடுத்து

90. லயாங்க பூஜை செய்து கர்மாமுடியும்வரை அக்னியைஸம்ரக்ஷித்து நியமத்துடன் இருக்க வேண்டும் அல்லது ஒவ்வொருநாளும் அக்னியை செய்து அஸ்திர வடிவில் இருக்கும் சிவனை திருப்தி செய்ய வேண்டும்.

91. அந்தர்பலி, பஹிர்பலி ஆகியவை களைக் கொடுத்து மந்திரமய சரீர ஆசார்யன் ஆசமனம் செய்து அனுஷ்டித்த கர்மாவை பரமேச்வரனிடத்தில் அர்பணித்து தன்னுடைய மனோபீஷ்டத்தை பிராத்திக்க வேண்டும்.

92. ஈசனை கும்பத்திலிருந்து விஸர்ஜனம் செய்து த்வாதசாந்தத்தில் அமர்த்த வேண்டும். பிறகு அந்த கும்பதீர்த்தத்தை சுற்றிலும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

93. கும்பஸ்தாபனம் இல்லாமல் ஸமித்நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும் சாந்தி ஹோமம் சாந்தியில் கூறப்பட்ட நாட்களில் செய்ய வேண்டும்.

94. திசா ஹோமத்தை சொல்கிறேன். திசா ஹோமம் இருவகைப்படும். அதில் பிராயச்சித்தாங்கம் ஸ்நபனாங்கம் என இருவகைப்படும்.

95. லிங்கத்திலோ, பிரதிமையிலோ, பீடத்திலோ கோபுர கட்டிடத்திலோ, மண்டபத்திலோ, மாளிகைகளிலோ ஸ்தல விருக்ஷத்தின் வேர் பாகத்திலோ

96. எங்கு தோஷம் காணப்பட்டுள்ளதோ அதற்காக பிராயச்சித்தம் அந்த இடத்தின் நான்கு திசைகளிலும் நான்குகுண்டங்களை அமைத்து கொட்டகை பந்தல் ஆகியவைகளை நிர்மாணித்து

97. குண்டங்கள், நாற்கோண வடிவிலோ, வட்டவடிவிலோ ஒரு முழ அளவு உள்ளதாகவோ, ஸ்தண்டிலமாகவோ ஏற்படுத்தி அஸ்திர தீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

98. எல்லாவற்றிற்கும் ஆலயத்தின் நான்கு திசையிலும் கொட்டகை அமைத்து ஆசரிக்க வேண்டும் (அல்லது) ஒரே கூடாரத்தை அமைத்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

99. நடுவில் கும்ப ஸ்தாபனம் செய்ய வேதிகை அவச்யமாகிறது. அல்லது யாகசாலையிலேயே எல்லா காரியங்களையும் செய்து முடிக்க வேண்டும்.

100. பிறகு பிரம்ம மந்திரம், அங்கமந்திரமிவைகளுடன் கூடிய சிவனின் ப்ரீதிக்காக ஈசானதிக் பாகத்தில் வேறு குண்டம் அமைக்கப்பட வேண்டும்.

101. லிங்கத்திலோ அல்லது வேறு ஸ்தண்டிலங்களிலோ சிவபெருமானை திருப்தி செய்யவேண்டும். லிங்கம் அமைத்து ஸ்தண்டிலத்தின் முன்பாக சிவாஸ்த்ரத்தை பூஜிக்க வேண்டும்.

102. நான்கு முகத்தை உடையவரும் பிரகாசிக்கிற கேசத்தை உடையவரும், மின்னல் கூட்டம் போன்ற ஒளியை உடையவரும். பிறைசந்திரனை சிரஸில் உடையவரும் தளிர் போன்ற நான்கு கையை உடையவரும்

103. இடியோசையுடன் கூடியவரும் பயங்கரமான பராக்ரமத்தை உடையவரும் பன்னிரண்டு கண்களும் கூடியவரும். சக்த்யாயுதம், சூலாயுதம், அபயமுத்ரை வரதமுத்ரையுடன் கூடியவராக

104. சிவாஸ்திரத்தை தியானம் செய்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து அதனுடையதான சிவாஸ்திர மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும், வலது பாகத்தில் அகோரத்ஸ்திரத்தையும் மேற்கில் பாசுபதாஸ் திரத்தையும்

105. வடக்கில் ப்ரத்யங்கிராஸ்திரத்தையும் ஆராதிக்க வேண்டும். அந்த ப்ரத்யங்கிராஸ்திரமந்திரம் கூறப்படுகிறது. ஓம் ஹ்ரீம் க்ருஷண வாஸஸே

106. ஸிம்ம வதநே, மஹாவதநே, மஹாபைரவீ, ஸர்வசத்ரு

107. கர்ம வித்வம்சிநீ, பரமந்திரசேதிநி, ஸர்வபூததமநீ

108. ஸர்வபூதாந் பந்த பந்த ஸர்வ விக்னாந் சிந்தி சிந்தி

109. ஸர்வ வியாதிம் நிக்ருந்த நிக்ருந்த, ஸர்வ துஷ்டாந் பக்ஷ பக்ஷ

110. ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நமோஸ்து

111. தே ஸ்வாஹா இது பிரத்யங்கிரா மந்திரமாகும். பிரணவம் முதல் ஏழு எழுத்து ஹ்ருதயம், பதினைந்து எழுத்து சிரஸ்,

112. பத்து எழுத்து, சிகை, ஏழு எழுத்து கவசம் அவ்வாறே ஏழு எழுத்து நேத்ரமந்திரம். நாற்பத்தி மூன்றெழுத்து அஸ்த்ரமந்த்ரமுமாகும்.

113. பதிமூன்று எழுத்து காயத்ரீ, ஏழு எழுத்தால் ஸாவித்ரீ என்பதாகும். நம: ஸ்வாஹா, வஷட் வவுளஷட், ஹும் பட் என்ற மந்திரங்களை முடிவாக கொண்டு ஹ்ருதயாதிகளை உச்சரிக்க வேண்டும்.

114. ஸிம்ஹத்தின் முகம்போலும் உக்ரமான தித்திப்பல்லையும் அக்னியின் காந்தி போல் மேல் நோக்கிய அக்னி ஜ்வாலையை உடையவளும் கருத்தமை போன்ற நிறமும், வட்டமான சிவந்த மூன்று கண்களை உடையவளும்

115. வலது பக்கத்துக் கைகளில் சூலம், டமருகம், ஆகியவைகளை தரித்திருப்பவளும், இடது பக்க கைளில், தலையில்லாத சரீர பாகத்தையும், மாந்தளிரையும் தரித்திருப்பவளும்

116. கருப்பு வஸ்திரத்தை தரித்திருப்பவளும் ரக்தம் மாமிஸம் நிறைந்த வாயை உடையவளும் நர்த்தனத்தில் ஈடுபாடு உள்ளவளும் முத்துக்களாலான ஆபரணங்களை அணிந்து பாதாதி கேசாந்தம் ஆபரணங்களை அணிந்திருப்பவளும்

117. அட்டஹாஸ சப்தத்துடன் கூடியவளும், மான்தோலை உடுத்தியிருப்பவளும் ஆன பரமேஸ்வரியை தியானம் செய்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

118. ஐந்து கும்பங்களில் நூல் சுற்றப்பட்டதும், வஸ்திரத்தால் சுற்றப்பட்டதும் சந்தனம் கலந்த வாசனையுள்ள ஜலத்தை உடையதும் கூர்சம், தங்கத்தாமரையுடனும்

119. தனித்தனியாக ஸ்தண்டில பூமியில் வைக்கப்பட்டதும் மூடப்பட்டதும் மாங்கொத்துடன் கூடியதும் சந்தனம் பூசப்பட்ட நியஸிக்கப்பட்ட ஐந்து கும்பங்களை ஸ்தாபித்து

120. விதிப்படி மத்திய கும்பத்தில் பரமேஸ்வரியான ப்ரத்யங்கிரா அம்பிகையையும், முன்பு கூறிய பிரகாரம் நான்கு புறமும் அஸ்திரங்களையும் பிறகு பிரத்யங்கிரா தேவியையும்

121. பூஜை செய்துவிட்டு ஹோமத்திற்காக தெரிவித்து யாகசாலையை அடைய வேண்டும். அவரவர்களின் குண்டத்தை ஸம்ஸ்கரித்து முன்புபோல் அக்னி ஸம்ஸ்காரமும் செய்து

122. சந்தனாதிகளால் அந்தந்த தேவதைகளை ஆராதிக்க வேண்டும். ஆசார்யனானவன், மூர்த்திபர்களை திருப்தி செய்ய வேண்டும்.

123. வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும், ஜபம் ஸ்தோத்திரங்கள் முதலியவைகளை செய்ய வேண்டும் கிழக்கு முதலான அவரவர் திசையில் நன்கு அமர்ந்து கொண்டு

124. இச்சி, அத்தி, அரசு, ஆல் ஆகிய நான்கு சமித்துகள் கூறப்பட்டுள்ளன. பிரதான குண்டத்திற்கு பலாசமும், அல்லது எல்லா குண்டத்திற்குமோ புரசு சமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

125. எள்ளு, நெய், அருகம்பில்சமித்து இவைகள் பாலில் நனைக்கப்பட்டு பன்னிரண்டங்குலம் நீளமுள்ளவைகளையும் (ஆனசமித்து) அன்னம் ஆகிய ஹோமதிரவ்யங்களால் நூறு ஆவிருத்தி, ஐம்பது ஆவிருத்தியோ

126. அந்த அஸ்திர தேவியின் தியான நினைவுடன் ஒவ்வொரு ஹோமதிரவ்யங்களாலும் 100,50, ஆவ்ருத்தி ஹோமம் செய்யவும் பிராயச்சித்தா ஹுதியுடன் தாம்பூலத்துடன் பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

127. ரøக்ஷ ஸமர்ப்பித்து நிரோதார்க்யத்தையும் லயாங்கத்தையும், ஸந்நிரோதனத்தையும் செய்து பிறகு அந்தர்பலி, பஹிர்பலி செய்து விட்டு ஆசமனம் செய்து மந்திரமூர்த்தியாக இருந்து கொண்டு

128. அனுஷ்டித்த கர்மாவை ஈச்வரார்ப்பணம் செய்து பகவானை பிரார்த்தித்து, அவர் அனுக்ரஹத்தால் ஹோம பஸ்மாவை கர்தா தரித்துக் கொண்டு முறைப்படி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

129. ஆசார்யன், கும்பங்களிலுள்ள ஜலத்தால் ஸ்வாமியை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். இந்த ஹோமம் தேவாலயத்தில் செய்யப்பட்டால் ஸ்வாமியை ஆராதிக்க வேண்டும்.

130. (வீட்டில்) பிராயச்சித்திற்காக செய்யப்பட்டால் கும்ப ஜலத்தால் யஜமானனை பிரோக்ஷிக்க வேண்டும். எல்லாவித கஷ்டங்களையும் நிவ்ருத்தி செய்யக்கூடிய திசாஹோமம் கூறப்பட்டது.

131. இரண்டாவது பிரகாரமான திசாஹோமம் விசேஷமாக கூறப்படுகிறது. இந்த திசாபூஜையில் பிரத்யங்கிராதேவி அஸ்திரங்களுக்கும் பூஜை கூறப்படவில்லை.

132. ஸமித், நெய், அன்னம், எள், வெண்மையான அரிசியுடன் ஹோமம் விதிக்கப்படுகிறது. தத்புருஷ அகோர வாம தேவ ஸத்யோஜாத மந்திரங்களால் ஹோமம்,

133. ஸ்நபனம் முதலியவைகளை பூஜாகாலத்தில் நான்கு திசைகளிலும் அனுஷ்டிக்க வேண்டும். எல்லா தோஷங்களையும் போக்கக்கூடிய ஸம்ஹிதா ஹோமத்தை கூறுகிறேன்.

134. நல்ல திசையில் நித்யாக்னியில் யாகமண்டபத்தில் உற்சவம் முதலியவைகளில் அக்னி, மத்தியிலோ, ஸ்தண்டிலத்திலோ ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

135. பிரம்மமந்திரம் அங்கமந்திரம், கூடிய மந்திரமான இதை சிவாகம சாஸ்திரத்தில் ஸம்ஹிதாமந்திரம் என கூறப்படுகிறது. அந்த ஸம்ஹிதா மந்திரங்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னியில் ஆசார்யனால் சந்தனாதிகளால் அர்ச்சிக்கப்பட்ட

136. சிவமந்திரத்தால் பலாசசமித்து, நெய், அன்னம் இவைகளால் நூறு ஸங்க்யை ஹோமம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தில் பத்தில் ஒருபாகம் பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், இவைகளால் ஹோமமும்.

137. பிறகு அகோரமந்திரத்தால் 25 எண்ணிக்கை ஹோமமாக செய்ய வேண்டும். இவ்விதம் பிராயச்சித்தத்தை அனுஷ்டித்து பூர்ணாஹுதியை விதிப்படி கொடுக்க வேண்டும்.

138. இது ஸம்ஹிதா ஹோமம் எனப்படும். இனி மூர்த்திஹோமம் விதிக்கப்படுகிறது. தேவலாயத்தின் எதிரிலோ மற்ற இடத்திலோ, ஸ்தண்டிலம் அமைத்து

139. அதன் மத்தியில் சிவகும்பத்தை வைக்க வேண்டும். அதன் வலது புறத்தில் வர்தனியை வைக்க வேண்டும். இவைகளை சுற்றி எட்டு கலசங்களுக்கு வஜ்ரம் முதலிய ஆயுதங்களுடன் கூடியதும்

140. நூல் சுற்றப்பட்டதும், மூடப்பட்டதும் வஸ்திரத்துடன் கூடியதும், ஹிரண்யத்துடன் கூடியதும் வாஸனை நிறைந்த தீர்த்தத்துடன் கூடிய கும்பத்தை சந்தனம், புஷ்பம், தூப, தீபங்களால் ஆராதித்து

141. மத்திய கும்பத்தில் சிவனை பூஜித்து அகோராஸ்திரத்தை வர்த்தனியில் பூஜிக்கவும் அல்லது மத்திய கும்பத்தில் சிவனை பூஜிக்காமல்

142. வர்தனீ என்ற கும்பத்தை வைக்காமல் மத்யகும்பத்தில் அகோராஸ்திரத்தை ஸாங்கமாக ஆசார்யன் பூஜிக்கவும் அகோராஸ்த்ரா ஸநாயஹும்பந் நம: என்று ஆஸனத்தையும்

143. ஆகோராஸ்த்ரமூர்த்தயே ஹும்பந்நம: என்று மூர்த்தியையும் பூஜிக்கவேண்டும் (தியானம்) ஆயிரம் சூர்யனுக்கு சமமான காந்தி உள்ளவரும் ப்ரளயகாலத்து மேகம் போன்ற சப்தத்தை உடையவரும்

144. பிரகாசிக்கின்ற பற்களை உடையவரும், தத்தங்களின் ஒளியால் பிரகாசிக்கும் முகத்தை உடையவரும் மூன்று கண்களும், மின்னல் போல் பிரகாசிக்கும் நாக்கையும் பளபளப்பாக தோற்றமளிக்கும் புருவம், மீசை, கேசத்தை உடையவரும்

145. பாம்பை பூணுலாக கொண்டவரும், சூலம், கத்தி, சிறிய உலக்கை ஆகியவை தரித்திப்பவரும் நான்கு புஜங்களையும், நான்கு முகங்களையும் பிரகாசிக்கும் அர்த்த சந்திரனை சிரோ பூஷணமாக உடையவரும்

146. நர்த்தனம் செய்பவரும், பெரிய சரீரத்தையும், பாம்பை ஆபரணமாகக் கொண்டவரும் கர்வம் கொண்ட தேவர்கள், தானவர்கள், ஆசுரர்கள், ஆகியோரை அழிப்பவருமான சிவனை தியானம் செய்ய வேண்டும்.

147. வஜ்ரம் முதல் சூலம் வரையுள்ள ஆயுதங்களை கிழக்கு முதலாக பூஜித்து பத்மத்தை ஈசான திக்கிலும் சக்ரத்தை நிர்ருதியிலுமாக பூஜிக்க வேண்டும்.

148. அதன் முன்பு ஓர் முழு அளவும் வட்ட வடிமான குண்டத்தில் அல்லது மந்திரத்தால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட ஸ்தண்டிலத்தில் ஆசார்யன், அக்னியை ஸ்தாபித்து

149. பஞ்ச ஸம்ஸ்காரங்களால் அக்னிகார்ய முறைப்படி பூஜித்து, அந்த சிவரூபமான அக்னியில் ஸாங்கமாக அகோராஸ்திரத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

150. சமித், நெய், எள் பாலில் நனைக்கப்பட்ட அருகம்பில், சக்கரை, பால், தேன் என்ற த்ரிமதுரத்தையும் ஹவிஸ்ஸையும் 1000 அல்லது 500 அல்லது 100 ஆவ்ருத்தியாவது.

151. ஒவ்வொரு திரவ்யங்களாலும் அகோராஸ்திரத்தை சிவாக்நியில் ஹோமம் செய்ய வேண்டும். கர்மாவை குறிப்பிடும் முறையோடு சேர்த்து அங்கமந்திரங்களாலும் அஸ்திர மந்திரங்களாலும் ஆராதித்து

152. பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்தாஹுதி செய்து திரும்பவும் பூர்ணாஹுதி செய்து தாம்பூலம் நிவேதித்து, ஸ்தோத்திரம் செய்து வணங்கி

153. விருப்பத்தை பிராத்தித்து ஹோமரøக்ஷயை ஸ்வாமியிடம் ஸமர்பிக்க வேண்டும். ரøக்ஷயை தனக்கும் எஜமானனுக்கும் எடுத்துக்கொண்டு பராங்முக அர்க்யம் செய்ய வேண்டும்.

154. லயாங்க பூஜை செய்து சிவவ்யாஹ்ருதி ஹோமம் செய்ய வேண்டும். கர்மா முடியும்வரை நித்யம் அக்னியை ரக்ஷிக்க வேண்டும்.

155. அல்லது ஒவ்வொரு நாளும் ஸ்தண்டிலத்தில் ஹோமத்துக்காக அக்னியை உண்டாக்கலாம். ஆசார்யன் ஆசமனம் செய்து அந்தர்பலிபஹிர்பலி கொடுக்க வேண்டும்.

156. அஸ்திரரூபியான ஈசனிடத்தில் அனுஷ்டித்த ஹோமத்தை அர்ப்பணித்து விக்ஞாபனம் செய்து பிறகு கும்பதீர்த்தத்தால் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

157. சந்தனம், புஷ்பமாலை, நைவேத்யம் முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும். சிவனைப் பிராத்தித்து உத்தரவையடைந்து

158. யஜமானனுக்கு ஹோமகர்மாவில் பஸ்மாவை கொடுக்க வேண்டும். இங்கும் சாந்தி ஹோமம் போல் அஸ்திர மந்திரஜபங்களும் வேத பாராயணங்களும் செய்ய வேண்டும்.

159. இவ்விதமாக மூர்த்தி ஹோமம் பிராயச்சித்தத்திற்காக கூறப்பட்டது. இன்னொரு விதமான மூர்த்தி ஹோமம் விசேஷமாக இங்கு கூறப்படுகிறது.

160. மத்திய குடும்பத்தில் சிவனையும் வர்த்தினீ குடும்பத்தில் அஸ்திரத்தையும் பூஜித்து அதைச் சுற்றி எட்டு குடும்பத்தில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை பூஜிக்க வேண்டும்.

161. எட்டு திசைகளிலும் சர்வாதி மந்திரங்களால் ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். வேதிகையுடன் எட்டுகுண்டத்திலோ எட்டு ஸ்தண்டிலத்திலோ

162. ஸமித், நெய், பால், யவம் ஆகியவைகளால் 108 அல்லது 50 ஸங்க்யையோ 25 ஸங்க்யையோ ஒவ்வொரு திரவ்யங்களாலும் தனித்தனியாக ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

163. புரசு, அத்தி, அரசு, ஆல் ஆகிய சமித்துக்களால் கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம், இச்சி ஸமித்துக்களால் தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளிலும்

164. பால், நெல் இல்லாத திரவ்யங்களாலோ பஞ்சகுண்டம் ஐந்து கடங்களாலோ பூஜித்து பஞ்சகுண்டபக்ஷத்திலோ எட்டு குண்டபக்ஷத்திலோ கிழக்கு திசையில் உள்ளதாக ஸ்தண்டிலத்தை ஸ்தாபித்து

165. விதிப்படி எல்லா மந்திரங்களாலும் ஹோமத்தை அங்குசெய்ய வேண்டும். கிழக்கிலுள்ள குண்டத்திலோ ஈசாண்ய குண்டத்திலோ ஸம்ஹிதாஹுதி செய்ய வேண்டும்.

166. பிறகு பூர்ணாஹுதி கொடுத்து கும்ப தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் சிவனை பூஜித்து மனோபீஷ்டம் ஸித்திப்பதற்கு ஈசனை பிராத்திக்க வேண்டும்.

167. இவ்விதம் சிரேஷ்டம் முதலிய பேதங்களால் மூர்த்தி ஹோமம் மூன்று வகைப்பட்டதாகும். மூர்த்தி மூர்த்தீச்வர பூஜையையும் ஹோமத்தையும் உடைய மூர்த்தி ஹோமமானது செய்ய வேண்டும்.

168. இந்த மூர்த்தி ஹோமம் ஆலய ஸம்ப்ரோக்ஷணம் மூர்த்தி பிரதிஷ்டைக்காக ஆகும். பிராயச்சித்தத்திற்காக கூறப்படவில்லை. சாந்தி ஹோமத்தில் கூறிய பிரகாரம் தின எண்ணிக்கையால் முறைப்படி செய்ய வேண்டும்.

169. இவ்வாறு மூர்த்தி ஹோமம் சொல்லப்பட்டது. முன்பே கிருதஸ்நானம் முதலியவைகள் என்னால் எதனால் கூறப்பட்டதோ அதனால் இப்பொழுது கூறப்படவில்லை.

170. ஒரு கால ஸந்த்யா பூஜை முதலியவைகளால் விடுபட்டாலும், நித்ய பூஜை லோபம் ஏற்பட்டாலும் திவாரபாலக பூஜை இல்லாமல் இருந்தாலும் பஞ்ச சுத்தி இல்லாதபோதும்

171. ஆஸன ஸம்ஸ்காரம், உபசாரம், ஆவரண பூஜை குறைந்த பொழுதும், பாத்யம் முதலான நான்கு க்ரியைகள் எண்ணைக்காப்பு, துடைத்தல் முதலானவைகளின் குறைப்பு ஏற்பட்டாலும்

172. அபிஷேகம் இல்லாத போதும் தைலம் முதலான திரவ்யங்களுடன் இருக்கும் போது பூஜிக்கப்பட்ட ஸமயத்திலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம் இவைகளுக்கு லோபம் ஏற்பட்ட பொழுதும்

173. சந்தனம் குறைவாகச் சாத்தப்பட்டாலும் புஷ்பாதிகள் ஸ்வல்பமாக விபரீதமாக சாத்தப்பட்ட பொழுதும் தீபம், தீபாராதனை, தூபம் ஆகியவை இல்லாமலிருந்தாலும்

174. பிராம்மணர்களே நீராஜந தீபம், சர விளக்கு அணைந்தபோதோ, எலி முதலியவைகளால் தீபத்திலுள்ள நெருப்பால்

175. லிங்கம், பேரம் (பிம்பம்) ஆகமம் இவைகள் ஸ்பரிசிக்கப்பட்டாலும், அன்னியவர்ணத்தாரால் தொடப்பட்டாலும் லிங்கத்திலுள்ள வஸ்திரம் கர்பக்ருஹம் அக்னியால் தஹிக்கப்பட்டாலும்

176. தீபம், ரக்ஷõதீபம் அணைந்தாலும் மந்திரத்துடன் கூடிய ஹவிஸ்ஸை அர்பணம் செய்யும்போது திரையிடப்படாமலிருந்தாலும் சந்தனம் புஷ்பம் நிவேத்யங்களில்

177. புழு, பூச்சி, எலும்பு, நகம், கேசம் முதலியவைகள் காணப்பட்டாலும், சுவாமிக்கு அர்ப்பணம் செய்ய வேண்டிய திரவ்யங்களில் நகம், கேசம் தென்பட்டாலும்

178. கபம், கண்ணீர், ரத்தம் இவைகள் கலந்திருந்த திரவியங்களால் சிவனை பூஜை செய்தாலும் பல்லி, கரப்பு, வவ்வால் முதலிய பிராணிகள் மலத்துடன் (புழுக்கை) கலந்த திரவ்யங்களாலும் பூஜிக்கப்பட்டாலும்

179. நைவேத்யம் கொண்டு வரும் சமயத்தில் சுத்திக்காக ஜலப்ரோக்ஷணம் செய்யப்படாமல் இருந்தாலும் அந்த சமயத்தில் சங்க த்வநி இல்லாமல் இருந்தாலும்

180. முன்பே அளவிட்டு நிச்சயிக்கப்பட்ட திரவ்யம் குறைவானாலும் அதிகமானாலும் லிங்கம், மூர்த்தி பிம்பங்கள் இவைகளின் சிரஸ்ஸில் புஷ்பங்கள் இல்லாமலும்

181. முன்பு ஸமர்ப்பிக்கப்பட்ட வாடிப்போன புஷ்ப மாலையுடன் லிங்காதிகள் பூஜிக்கப்பட்டாலும் அக்னி கார்யத்தில் நித்யம் செய்ய வேண்டிய பலி கொடுக்கப்படாமல் இருந்தாலும்

182. நைமித்திகம் காம்யமான கர்மாக்களில் குண்ட, அக்னி ஸம்ஸ்காரம் இல்லாமல் இருந்தாலும், சிவாக்னி ஸம்பந்தமில்லாத அக்னியில் ஹோமம் செய்யப்பட்டாலும், வைதிகாக்னியில் ஹோமம் செய்தாலும்

183. சாதாரண அக்னி அணைந்தாலும் சைவாக்னி (சிவனை ஆவாஹித்த) அணைந்தாலும் ஹோம த்ரவ்யம் குறைவாக இருந்தாலும் நித்யோத்ஸவம் லோபமடைந்தாலும்

184. பிம்பங்கள் இருக்கும்போது பிம்பங்களை விட்டுபுஷ்பம் முதலிய லிங்கங்களால் நித்யோத்ஸவம் செய்தாலும், மழை முதலியவைகளாலும், அரசாங்கக் குழப்பத்தின் காரணமாகவும்

185. கர்ப கிருஹத்திலுள்ள தீபம் இல்லாமல் இருந்தாலும் மங்கள வாத்தியங்கள் நர்தனம் செய்யும் போது விதானத்திற்கு அழிவு ஏற்பட்டாலும்

186. பலிப்ரதானம் செய்யும் பொழுதுவாத்யம், தீபம் இல்லாமல் இருந்தாலும், பாதுகை பூஜை குறைந்தாலும் பாதுகையை வலம் வரச்செய்தல் குறைந்தாலும்

187. பாசுபதாஸ்த்ரத்தை அஸ்திர தேவரிடத்தில் பூஜிக்கப்படாமலிருந்தாலும் அல்லது அஸ்திர தேவர் விடுபட்டாலும், முறையான பிரதக்ஷிணம் குறைந்தாலும் விபரீதமாக அப்பிரதக்ஷிணம் செய்தாலும்

188. சலமூர்த்தம், அன்னலிங்கம், பாத்ரம், பாதுகை விழுந்தாலும் சவுக்யம் என்ற சுத்தந்ருத்தம் செய்யப்படாமல் இருந்தாலும் அதன் அங்கமான பஞ்ச ஆசார்யன் இல்லாமல் இருந்தாலும்

189. சவுக்ய ச்லோகங்கள் சொல்லப்படாமல் இருந்தாலும் அல்லது நர்தனம் ஆடும் தேவதாஸி கீழே தவறி விழுந்தாலும் அப்போது தீபம், ஸங்கீதம் இல்லாமல் இருந்தாலும்

190. வாத்யம், நர்தனம் இல்லாமல் இருந்தாலும் நீராஜந கிரியை செய்யாமலிருந்தாலும் அதன் அங்கமான ரøக்ஷ, பஸ்மா கொடுக்கப்படுவது இல்லாமல் இருந்தாலும்

191. கண்ணாடி, குடை, சாமரம் முதலிய உபசாரங்கள் செய்யப்படாமல் இருந்தாலும் கர்ப கிருஹத்தில் பழைய புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டாலும்

192. நிர்மால்யத்துடன் கூடியதாக ஈசனை பூஜித்தாலும், நிர்மால்ய சேர்க்கையுடன் கூடிய திரவ்யங்களால் ஈசனை பூஜித்தாலும், க்ஷயம், குஷ்டம் முதலிய வியாதிகளுடன் கூடியவர்களாலும்

193. காது கேட்காதவர்களாலும் பாபரோகமுள்ளவர்களாலும், வலிப்பு போன்ற நோயுள்ளவர்களாலும் விலக்ஷணமான உருவை உடையவர்களாலும் குறைந்த அவயவம் அல்லது நீளமான அவயவம் உள்ளவர்களாலும்

194. சிகை இல்லாதவர்கள் பூஜை செய்தாலும், சந்தி பூஜை முதலான காலபூஜை காலங்கள் தாமதமானாலும், ஆதி சைவகுலத்திலிருந்து வேறுபட்டவர்களால் பூஜை செய்யப்பட்டாலும்

195. சிவபூஜைக்கு அதிகாரம் இல்லாதவர்களாலும் சம்பளம் வாங்கி பூஜை செய்பவர்களாலும் சிவபூஜை செய்யப்பட்டால் இவைகளின் பிராயச்சித்த விஷயத்தில் நித்ய பூஜைகளின் குறைகள் வரிசையாக கூறப்பட்டுள்ளது.

196. மேலே கூறப்பட்டவைகளுக்கு ஏற்றவாறு பரிஹாரமாக நித்ய பிராயச்சித்தம் கூறப்படுகிறது. உத்தமமான பூஜை செய்யுமிடத்தில் ஒருநாள் ஸந்தியா கால பூஜை நின்றால்

197. அரசருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படும். அப்பொழுது திசாஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். மத்தியம பூஜையில் மூர்த்தி ஹோமமும், அதம பூஜையில் சாந்தி ஹோமமும்

198. விதிப்படி பூஜைகள் செய்து இருமடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ அல்லது சமமாகவோ செய்து முடிக்க வேண்டும். உபசந்தியா கால பூஜை தடைபட்டால் குறைபட்டதற்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தையும்

199. இரண்டு ஸந்தியாகால பூஜை தடைபட்டால் அந்த தோஷத்தின் பரிகாரத்திற்காக ஆசார்யன் ஒன்பது கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து விட்டு அதன் பிறகு

200. முன்புகூறியபடி பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும், மூன்று ஸந்தியாகால பூஜை நடைபெறாமல் இருந்தால் 25 கலச தீர்த்தங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

201. நான்கு ஸந்த்யாகால பூஜை நடைபெறாமல் இருந்தால் 50 கலசங்கள் ஸ்னபன விசேஷசமும், ஒருநாள் பூராவும் பூஜைகள் நடைபெறாமல் தடைபட்டால் (நின்று போனால்)

202. நூற்றிஎட்டு (108) கலச தீர்த்தத்தால் ஸ்வாமிக்கு அபிஷேகம் முதலியவைகள் முன்பு கூறியபடி செய்ய வேண்டும். இருதினங்கள் பூஜை நடக்காமல் இருந்தால் இரு தினங்களும் 108 கலச ஸ்னபநாபிஷேகம் செய்ய வேண்டும்.

203. அதிலும் ஸந்த்யாகால பூஜை நடக்காமல் இருந்தால் முன்பு சொன்ன பரிஹாரத்தை செய்ய வேண்டும். எவ்வளவு நாட்கள் நித்யபூஜை லோபம் ஏற்பட்டதோ

204. அத்தனை நாட்களையும் கணக்கிட்டு முன்பு கூறப்பட்டுள்ள பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். ஓர் மாதம் வரை பூஜையின்றியிருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

205. பிராம்மண சிரேஷ்டர்களே அப்படி இல்லா விடில் தேவதாஸாந்நித்யம் இருக்காது. திவாரபாலகர்கள் பூஜை இல்லாமல் இருந்தால் இடையூறுகளால் துன்பம் ஏற்படும்.

206. அதற்காக, ஸம்ஹிதா ஹோமத்தை அனுஷ்டித்து அதன் பிறகு துவார பாலகர்களை ஆராதிக்க வேண்டும். பஞ்ச சுத்தி இல்லாத பூஜை செய்யப்பட்டாலும் அந்த பூஜை செய்யப்படாததே ஆகும்.

207. ஆசனாதி பூஜைகள் இல்லாமல் இருந்தால் உலகில் கெட்டநிலை உண்டாகும். சிவஸம்ஸ்காரம் இல்லாவிடில் மனிதர்கள் கெட்ட நடத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

208. உபசார பூஜைகள் இல்லாமல் இருந்தால் ஜனங்கள் பசி, தாகம் முதலியவைகளால் பீடிக்கப்படுவார்கள். உபசாரர்களின் வரிசைக்ரமம் மாறுபட்டால் உலகில் ஜாதிக்கலப்பு உண்டாகும்.

209. வித்யேச்வர ஆவரண (பங்கம்) ஏற்பட்ட போது ஏவப்படுபவர்களுக்கு கெட்ட நடத்தை ஏற்படும். அதன் பரிஹாரமாக சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். முறைப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

210. நித்யம், நைமித்தியம், காம்யம் ஆகிய பூஜாகாலங்களில் பாத்யம் முதலான திரவ்யங்கள் குறைந்தாலும் அதன் அங்கமாக உலகத்தில் அந்த திரவ்யங்களுக்கும் குறைவு ஏற்படும்.

211. பாத்யத்ரவ்யம் அதன் அங்கலோபம் ஏற்பட்டால் பாதங்களில் ரோகம் உண்டாகும். ஆசமன திரவ்ய லோபம் ஏற்பட்டால் வாயில் ரோகம் உண்டாகும்.

212. அர்க்ய திரவ்யலோபம் ஏற்பட்டால், அர்க்யலோபமும் ஏற்பட்டால் தலைசம்பந்தமான வியாதி உண்டாகும். அருகு, புஷ்பம், அக்ஷதை அதன் அங்கம் இல்லையெனில் முன்பு கூறிய தோஷமேற்படும்.

213. எண்ணைக்காப்பு இல்லாவிடில் பொது ஜனங்கள் வியாதியால் பீடிக்கப்படுவார்கள். பஞ்சகவ்ய லோபம் ஏற்பட்டாலும் பஞ்சாமிருத லோபம் ஏற்பட்டாலும்

214. உலகில் அந்தந்த திரவியங்கள் அழிந்து போவது நிச்சயம். சந்தனம் குறைந்தாலும் அதன் அங்கமான வாசனைப் பொருள்கள் குறைந்தாலும் புஷ்பம் இல்லாமல் இருந்தாலும் அதன் அங்கமானவைகள் இல்லாமல் இருந்தாலும்

215. முனிபுங்கவர்களே! உலகில் சந்தனம், புஷ்பங்கள் அதன் அங்கமான பொருட்கள் அழிவடையும். தூபத்தில் குறைவு ஏற்பட்டாலும் அதன் அங்கமான திரவ்யங்கள் இல்லாமல் இருந்தாலும் பயங்கர நோய் உண்டாகும்.

216. கோயிலில் மணியோசை இல்லாவிடில் பிசாசுகள், ராக்ஷஸர்கள் அங்குள்ள ஜனங்களை பலவித துர்வியாதிகள் உண்டாக்கி துன்பமடையச் செய்வார்கள்.

217. தீபம் இல்லாவிடில் அதன் அங்கமான திரி, நெய் போன்ற திரவ்யங்கள் இல்லாவிட்டாலும் கண்களில் ரோகமுண்டாகும். ஆமந்திரண ஹவிஸ் லோபமானாலும் அங்கதிரவ்ய லோபமானாலும்

218. ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யாமல் இருந்தாலும் நைவேத்ய அங்க திரவ்யங்கள் லோபமானாலும் நெற்பயிர்கள் அழிந்து போகும். தாம்பூலமும் அதன் அங்கதிரவ்யங்கள் லோபமேற்பட்டாலும் வாயில் வியாதி உண்டாகும்.

219. திரையிடுதல் இல்லாமலிருந்தால் ஸ்வாமியின் ஸாந்தித்யம் அழிந்து விடும். ஆசார்யன் இவைகளை அறிந்து பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

220. ஈசனை நன்கு பூஜித்து இருமடங்காக அந்த திரவியங்களை சிவனுக்கு ஸமர்பிக்க வேண்டும். பிறகு சாந்தி ஹோமத்தையோ அல்லது ஸ்நபனாபிஷேகத்தையோ ஆசார்யன் அனுஷ்டிக்க வேண்டும்.

221. எந்த திரவியங்களுக்கு லோபமேற்பட்டதோ அந்த திரவியத்தை 2 மடங்காக ஸமர்ப்பிக்க வேண்டும். ஸம்ஹிதா ஹோமமோ, 100 ஆவ்ருத்தி அகோர ஜபமுமோ செய்ய வேண்டும்.

222. இந்த திரவ்யங்களின் அளவை பாதி, கால், அரைகால் பாகமாக கொடுத்தால் அகோர மந்திரத்தை இருநூறு (200), நானூறு (400), அறுநூறு (600) எண்ணிக்கை முறையாக

223. ஜபித்து ஈச்வரனுக்கு அந்த திரவியங்களை இருமடங்கு ஸமர்பிக்க வேண்டும். ஆசார்யன் பாத்யாதி திரவ்யங்களை மந்திரமின்றி ஈச்வரனுக்கு கொடுத்தால்

224. அந்த பாத்யாதி திரவ்யம் கொடுக்கப்படாததாகும். பின்பு ஆசார்யன் சிவனை பூஜித்து கடைசியில் மந்திரத்துடன் திரவ்யங்களை இருமடங்காக சிவனுக்கு ஸமர்பிக்க வேண்டும்.

225. ஸ்நபன பூஜை செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது நூறுஸங்க்யை அகோரமந்திரஜபம் செய்ய வேண்டும். நித்ய, நைமித்திக காம்யங்களில் பாத்யம் ஆசமனம் அர்க்யத்தில் குறைவு ஏற்பட்டால்

226. ஸத்யோஜோத, தத்புருஷ ஈசாந மந்திரங்களை நூறு எண்ணிக்கை ஆவ்ருத்தி செய்து இரு மடங்கு அல்லது அதே அளவு உள்ளதாகவோ பாத்யாதி உபசாரங்களைச் செய்ய வேண்டும்.

227. அருகம்புல், புஷ்பம், அக்ஷதை இல்லாமல் இருந்தால் ஹ்ருதய மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும், தினமும் நடைபெறும் தைலாபிஷேகம், துடைத்தல், அபிஷேகம் முதலியவைகளில்

228. குறைவு ஏற்பட்டால் ஹ்ருதய மந்திரத்தை நூறு ஆவ்ருத்தி ஜபித்து அவற்றை இருமடங்காக செய்ய வேண்டும். தைலாபிஷேகம் முதலியவைகளுடன் இருந்தபோது பூஜித்தால் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

229. நித்ய, நைமித்திக, காம்ய பூஜை முன்பு சொல்லப்பட்ட ஆவரண பூஜைகளில் குறைவு ஏற்பட்டால் ஸம்ஹிதா ஹோமம் செய்து இருமடங்காக திரவியங்களை ஸமர்பிக்க வேண்டும்.

230. இதே முறையில் பஞ்சகவ்ய பிராயச்சித்தத்திற்காக ஸம்ஹிதா ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். முன்பு தயாரித்த சந்தனம் குறைவானால் ஸத்யோ ஜோத மந்திரத்தை நூறு ஆவ்ருத்தி ஜபம்செய்ய வேண்டும்.

231. அல்லது நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். அந்த திரவ்யங்களை இருமடங்காகவோ. ஸமமாகவோ ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாதி திரவியங்கள் ஸமிருத்தியாக இல்லாமல் இருந்தால் அல்லது விபரீதமாக பூக்களை ஸமர்ப்பித்தாலும்

232. நூறு ஸங்க்யை ஈசான மந்திரத்தை ஜபித்து இருமடங்காக புஷ்பாதிகளை ஸமர்பிக்க வேண்டும். தூபம், தீபாராதனை ஆகியவைகளில் குறைவு ஏற்பட்டாலும் அகோர மந்திரத்தை நூறு தடவை ஜபித்து அவற்றை 2 மடங்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

233. தூப, தீபம், நீராஜநம் ஸமர்பிக்கும் காலத்திலும் ஸரவிளக்கிலிருந்து எலி முதலியவைகளால் எடுக்கப்பட்ட

234. நெருப்பால் லிங்கம், பிம்பம், ஆகமங்கள் ஸ்பர்சமான சமயம் அக்னி கொஞ்சமாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அரசனுக்கு வியாதி ஏற்படும்.

235. அக்னியால் பழுதடைந்த பாகத்தை பரிசுத்தம் செய்து, பஞ்சாமிருதாபிஷேகம், இளநீர் ஆகியவைகளை ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்கூட

236. ஈசனை பூஜித்து மூர்த்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அக்னி சிறிதளவுள்ளதாக இருந்தாலும் சாந்தியை முறைப்படி செய்ய வேண்டும்.

237. லிங்க, பிம்பாதிகளில் இருக்கும் வஸ்திரங்கள் அக்னியால் முழுதும் பாதிக்கப்படாமலிருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் முதலிய கர்மாக்களை செய்ய வேண்டும்.

238. வஸ்திர பிரதேசங்களில் அக்னியா பாதிக்கப்பட்டால் சாந்தியை செய்ய வேண்டும். ஆலயத்தில் அக்னிதாஹம் ஏற்பட்டால் அந்த பிரதேசத்திற்கு ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

239. தேவாலயப் பகுதிகளுக்கு ஏதேனும் இடிபாடு ஏற்பட்டிருக்குமானால் ஸ்வாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்து இடுபாடுகளை நீக்கி, கட்டிடத்தை சீர்படுத்தி பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

240. அக்னியால் லிங்கம், பிம்பம் முதலியவைகள் வேறுநிறம் அடைந்தால் மானுஷ லிங்கமாக இருப்பின் அகற்றி, ஸ்வயம்புவமான லிங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

241. சாஸ்திரத்தில் கூறிய பிரகாரம் ஸம்ப்ரோக்ஷணம் முதலியவைகளை செய்ய வேண்டும். புஸ்தகம் சிறிதளவு அக்நியால் பாதிக்கப்பட்டிருப்பினும் சாந்தி செய்ய வேண்டும்.

242. ஸகள மூர்த்தி கலையின்றி இருந்தால் சிவனுக்கு பெரிய ஸ்நபநம் செய்ய வேண்டும். தூபம் காட்டவில்லையெனில் ஸத்யோஜாத மஹாமந்திரத்தை நூறு ஸங்க்யை ஜபிக்க வேண்டும்.

243. வ்ருஷப தீபம் முதலிய தீபம் ஸமர்ப்பிக்கவில்லையெனில் அகோர மந்திரத்தை முன்னூறு ஸங்க்யை ஜபிக்க வேண்டும். தூப தீபங்களை இருமடங்காக, பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

244. ரக்ஷõதீபம் அணைந்தாலும், அகோரஜபம் அறுநூறு ஸங்க்யையாகும் ஸ்வாமிக்கு ஹவிஸ் கொடுக்கப்படாவிட்டால் ஸ்நபநம் செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

245. இருமடங்கு ஹவிஸ்ஸை கொடுக்க வேண்டும். ஆமந்த்ரண ஹவிஸ் கொடுக்காதபோதும் மேற்கூறியபடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். திரை இல்லாமல் இருந்தால் கவசமந்திரத்தால் இருநூறு தடவை ஜபிக்க வேண்டும்.

246. சந்தனம், புஷ்பம், நிவேதனம் ஆகிய திரவ்யங்களில் புழு, பூச்சி, எலும்பு, நகம், கேசம் முதலியவைகள் காணப்பட்டால் முன்பு போலவே கவச மந்திரம் 200 முறை ஜபிக்க வேண்டும்.

247. நகம், கேகமிவைகளுடன் கூடிய திரவ்யம் கொஞ்சமாக இருந்தால் அதை விலக்கி விடலாம். அதிகமாக இருந்தால் அதை எறியக்கூடியது. சிவனுக்கு அர்பனம் செய்யப்பட்ட திரவ்யங்களில் நகம், ரோமம் முதலியவை தென்பட்டால்

248. அதை பஞ்சகவ்யத்தால் நனைத்து அகோர மந்திரத்தை முன்னூறு முறை ஜபிக்க வேண்டும். கபம், கண்ணீர், ரத்தம் முதலியவைகளுடன் கூடிய திரவ்யங்களால் சிவனை பூஜித்தால்

249. ஸ்வாமிக்கு ஸ்நபநம் கர்த்தாவின் விருப்பத்தை அனுசரித்து அபிஷேகம் செய்ய வேண்டும். வவ்வால் முதலிய சாமான்ய பிராணிகளின் மலத்துடன் கூடியவற்றால் பூஜை நடந்தால் முன்பு கூறியபடி ஸ்நபனம் செய்து அபிஷேகிக்க வேண்டும்

250. மடப்பள்ளியிலுருந்து நைவேத்யம் கொண்டு வரும்போது ஜலம் விடுவது செய்யாமலிருந்தாலும், நைவேத்யத்தைத் தாண்டியிருந்தாலும் தோஷமேற்படும். அதனால்

251. அர்க்ய தீர்த்தத்தால் நைவேத்யத்தை பிரோக்ஷித்து அகோர மந்திரத்தினாலும் நூறு ஆவ்ருத்தியும் சங்க முழக்கம் இல்லாமல் இருந்தாலும் நூறு (ஆவ்ருத்தி) அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

252. வாத்யங்கள் இல்லாத பொழுது தத்புருஷ மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபிக்க வேண்டும். முன்பாகவே தீர்மானிக்கப்பட்ட திரவ்யம் குறைவாக இருந்தாலும், அக்குறைவை நீக்க

253. மூலமந்திரத்தை நூறு தடவை ஜபித்து இருமடங்காக அத்திரவியங்களினால் ஆராதிக்க வேண்டும். தீர்மானித்த திரவ்யங்களை முன்னதாகவே அதிகப்படுத்தினால் அது ஐச்வர்யத்தை அபிவிருத்தி செய்யும்.

254. நித்ய, நைமித்ய, காம்ய பூஜை விஷயங்களில் இது பரிஹாரமாக விளங்குகிறது. லிங்க, பிம்பங்களின் சிரஸில் புஷ்பாதிகளற்று சூன்யமாக இருந்தால், பலதோஷங்கள் உண்டாக்கும்.

255. அந்த தோஷங்கள் நீங்கி அகோர மந்திரத்தினால் நூறி ஆவ்ருத்தி ஜபித்து பூக்களால் சிவனை பூஜிக்க வேண்டும். முன்னதாக ஸந்த்யா காலத்தில் பூஜிக்கப்பட்ட வாடிய புஷ்பம் முதலியவைகளுடன் இருக்கும் போது

256. லிங்கம், பிம்பங்கள் பூஜை செய்யப்பட்டால் அரசனுக்கு பலதோஷங்கள் உண்டாகும். ஆதலால் அகோர மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபம் செய்து மறுபடியும் பூஜை செய்ய வேண்டும்.

257. பலிதானம் இல்லாமலிருந்தால் எல்லா தேவதைகளும் அந்த ஸ்தானத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகிறார்கள். அவைகளின் திருப்தியின் பொருட்டு இருமடங்காக பலிதானம் செய்ய வேண்டும்.

258. பத்து நாட்களுக்கு மேல் பலிதானம் செய்யாமலிருந்தாலும் சிவமூலமந்திரத்தினால் நூறு ஆஹுதிகளை செய்ய வேண்டும். நித்ய, நைமித்திக, காம்ய பூஜைகளில் ஹோமகர்மாக்கள் நடக்காமல் இருந்தாலும்

259. அவ்விடத்தில் மழை பெய்யாது பஞ்சம் ஏற்படும். அதனால் அங்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். மறுபடியும் மூன்று மடங்காகவோ அதே அளவு முறைப்படியோ செய்ய வேண்டும்.

260. ஆசார்யனின் ஸாமர்த்யத்தினால் முன்பு கூறியதை இருஸந்த்யா காலத்திலும் செய்யலாம். தேசிகர்களால் எவ்வளவு ஹோம கார்யங்கள் தள்ளப்பட்டவைகளாக உள்ளதோ

261. நாட்கள் அதிகமானதாகவும், அதிகப்படுத்திய அந்தந்த திரவ்யங்களினால் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். குண்டங்களின் அளவுகள் குறைந்தாலும், ஸ்தண்டிலம் அளவின்றி இருந்தாலும் அது சத்ருக்களின் வ்ருத்தியை கொடுக்கும்.

262. அதன் பரிஹாரமாக சாந்தி ஹோமத்தை செய்து முன்புபோல் குண்டத்தையும், ஸ்தண்டிலத்தையும் அமைக்க வேண்டும். குண்ட ஸம்ஸ்காரத்தில் குறைவு ஏற்பட்டால் சிவாக்னி பலனை அளிக்காது.

263. குண்ட ஸம்ஸ்காரமில்லாத குண்டத்திலோ, ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்தாலும், சிவாக்னி கல்பனமில்லாத குண்டத்தில் ஹோமத்தை செய்தாலும்

264. அந்த ஹோமம் ஸ்வாமிக்கு ஸாந்நித்யம் ஏற்படாது. சிவசம்பந்தமில்லாத அக்னியில் செய்யப்பட்ட சிவஹோமம் வியாதியை தரும்.

265. சிவாலயத்தில் சைவாக்னியில் செய்யப்பட்ட ஹோமம் சைவமெனப்படும். சிவாலயத்தில் வைதிகாக்னி கிரியைகள் அனுஷ்டானம் தேவையில்லை.

266. புண்யாஹவாசனம் மட்டும் எவ்வாறு செய்யப்பட்டது என்றால் அது சிவாக்ஞையால் விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஸ்வபுத்திசக்தியால் எதுவும் செய்யக்கூடாது.

267. சிவாலயத்தில் புண்யாஹம் முதலிய மந்திரங்கள் செய்ய வேண்டுமென்பதான வாக்யம் இருந்தால் வைதிகமான மந்திரங்களை ஸித்தாந்த முறைப்படி செய்யலாம்.

268. காமிகாதி ஆகமங்களின் பேதங்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட ஈச்வரனுக்கு வேதத்தில் கூறப்பட்டதும், புராண ஸ்ம்ருதிகளால் கூறப்பட்டதுமான பூஜாக்ரமம் கிடையாது.

269. மேற்படி கூறுவானேன், பாசுபதாதிமதங்களின் பூஜைகளுக்கும், சிவன் கோயிலில் அனுமதி கிடையாது. ரக்ஷிக்கப்பட்ட அக்னி அணைந்துபோனால் யஜமானன் அழிவை அடைவான் அதற்காக

270. அகோரமந்திரத்தினால் ஆயிரம் ஆவ்ருத்தி ஜபமும் தர்பணமும் செய்ய வேண்டும். சைவாக்னி அணைந்து போனால் பத்தாயிரம் ஆவ்ருத்தி அகோரமந்திரத்தினால் ஹோமத்தையும்

271. அதே ஸங்க்யை ஜபமும் பிராயச்சித்தமாகச் செய்ய வேண்டும். ஹோமத்ரவ்யம் குறைந்திருந்தால் குறைந்த திரவ்யங்களை இருமடங்காக்கி ஆஹுதி செய்ய வேண்டும்.

272. நித்யோத்ஸவம் குறைவடைந்தால், மனிதர்களுக்கு எல்லா தோஷங்களும் உண்டாகும். அந்த தோஷம் நிவ்ருத்தி அடைய அகோரமந்திரத்தினால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

273. மூன்று ஸந்திகளிலும் பூஜை நின்று போனால் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். இரவும், பகலும் ஆகிய இரு ஸமயங்களிலும் பூஜை இல்லாமல் இருந்தால் சிவனுக்கு ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும்.

274. ஐந்து நாட்கள் பூஜை இல்லாமல் இருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் நூறு ஸங்க்யை ஹோமம் செய்ய வேண்டும். பத்து நாட்கள் பூஜை இல்லாமல் இருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

275. பதினைந்து (15) தினங்கள் பூஜை இல்லாதிருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். ஒருமாதத்திற்குள் பூஜை தடைப்பட்டால் ஸ்வாமிக்கு ஸ்நபனாபிஷேகத்துடன் திசாஹோமம் செய்ய வேண்டும்.

276. ஒருமாதத்திற்கு மேல் பூஜையின்றி இருந்தால் மூன்று நாட்கள் சாந்தி செய்யவேண்டும். பதினைந்து தினத்திற்குள்ளும், பதினைந்திற்கு மேலும் இருபத்தேழு தினத்திலும் பூஜைகள் குறைவு ஏற்பட்டால்

277. பிராயச்சித்தமானது இருமடங்காக பக்ஷம் முடியும்வரை வளர்ச்சியுடன் செய்ய வேண்டும். அந்த பிராயச்சித்தம் முடிந்ததும் பிராயச்சித்தத்தை அனுசரித்து நித்யோத்ஸவம் நடத்த வேண்டும்.

278. பிம்பத்தை வைத்து நித்யோத்சவம் செய்து கொண்டிருக்கும்பொழுது அதை விட்டு புஷ்பம் முதலான லிங்கத்தில் நித்யோத்ஸவம் செய்தால்

279. முன்னூறு (300) அல்லது இருநூறு (200) தடவை அகோரமந்திரத்தினால் ஜபம் செய்ய வேண்டும். அடைமழையாலும், அரசாங்க குழப்பங்களாலும்,

280. கர்பக்ருஹத்தில் நித்யோத்ஸவம் செய்யவும் படி ஏற்பட்டால் முன்பு கூறிய ஸங்க்யையில் பாதியை செய்ய வேண்டும். நித்யோத்சவ ஸமயத்தில் தீபம் அணைந்து போனால், தேசம் கடுமையான இருளால் சூழ்ந்து விடும்.

281. அச்சமயம் அகோரமந்திரத்தை நூறு தடவை ஜபம் செய்து இருமடங்கு தீபத்தை ஏற்ற வேண்டும். வாத்யம் இல்லாமல் இருந்தாலும், நர்த்தனம் இல்லாமல் இருந்தாலும் தோஷம் உண்டாகும்.

282. அதன் பரிஹாரத்திற்காக ஸம்ஹிதா ஹோமம் அல்லது நூறு (100) ஸங்க்யை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். பிறகு இருமடங்கு நர்த்தனத்தையும் வாத்யத்தையும் செய்விக்க வேண்டும்.

283. விதானம் என்ற உபசாரப்பொருள் பழுதடைந்திருந்தால் அகோர மந்திரத்தை முன்னூறு தடவை ஜபம் செய்ய வேண்டும். பலிதான ஸமயத்திலும் வாத்யம், தீபம் இவைகள் இல்லாமல் இருந்தால் முன்கூறிய முன்னூறு தடவை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும்.

284. பாதுகாபூஜை குறைந்தாலும் வலம் வருதல் இல்லாமல் இருந்தாலும் கால்களில் ரோகம் உண்டாகும். அதன் பிராயச்சித்தமாக ஸம்ஹிதா ஹோமத்தை செய்ய வேண்டும். அகோரமந்திரத்தையும் ஆயிரம் (1000) முறை ஜபிக்க வேண்டும்.

285. அஸ்திரராஜர் என்ற பாசுபதாஸ்திரம் பூஜிக்கப்படாமல் இருந்தால் இடையூறு, கஷ்டங்கள் ஏற்படாது இருக்க அகோர ஜபமும், ஸம்ஹிதா ஹோமமும் செய்ய வேண்டும்.

286. உத்ஸவத்தில் விபரீதமாக பிரதக்ஷிணம் நடந்தாலும், விதிப்படி கூறப்பட்டபிரதக்ஷிணம் குறைந்தாலும் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

287. பிம்பங்கள் ( ஸ்வாமிகள்) திருவீதி உலா வரும்பொழுது விழுந்தால் ஸம்வத்ஸர உத்ஸவத்தில் கூறியபிரகாரம் செய்ய வேண்டும். அதேபோல் அன்னலிங்கம் முதலியவை விழுந்தாலும் ஸம்வத்ஸர உத்ஸவத்தில் கூறியபிரகாரம் செய்ய வேண்டும்.

288. பிம்பம் விழுந்தாலும் முன்கூறிய அன்ன லிங்கத்திற்கு கூறியபடி பரிஹாரங்களை செய்ய வேண்டும். பாதுகை விழுந்தால் தேசத்தில் கலஹம் உண்டாகும்.

289. அந்ததோஷ நிவ்ருத்திக்காக த்வஜத்தை அதிவாஸம் செய்வதுபோல் பாதுகையை அதிவாசம் செய்து முறைப்படி கும்பத்தை நடுவில் ஸ்தாபித்து பாதுகையை பூஜித்து அதற்கு முன்னதாக சாந்தி ஹோமம் செய்து.

290. கும்பபூஜை ந்யாஸம் முறைப்படி செய்து முடிவில் கும்பத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பாதுகை உடைந்தால் அனுகர்ம விதிப்படலத்தில் சொன்னபடி பரிஹாரம் செய்ய வேண்டும்.

291. சுத்த நிருத்தம் என்ற சவுக்யகர்மா செய்யப்படாமல் இருந்தால் நாட்யஜன உலகில் பல தொல்லைகள் உண்டாகும். அந்த ஸமயத்தில் இருபத்தைந்து (25) கலசஸ்நபனங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

292. அல்லது ஒன்பது (9) கலச ஸ்நபனங்களால் பஞ்சகவ்ய ஸ்நபனமுமோ செய்யலாம். எத்தனை தினங்கள் சவுக்யகர்மா என்ற சுத்தந்ருத்தம் செய்யப்படவில்லையோ, அதை இருமடங்காக செய்ய வேண்டும்.

293. பலதினங்கள் சவுக்ய கர்மாவின் லோபம் ஏற்பட்டிருந்தால் ஐம்பது (50) கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சவுக்ய உபசாரத்தின் அங்கம் ஹீனமானால் விடுபட்ட அங்க பூஜையை இருமடங்காக செய்ய வேண்டும்.

294. சவுக்யகர்மாவின் பஞ்ச (5) ஆசார்யர்கள் தன் கடமைகளைச் செய்யாவிடில் அங்குள்ள ஜனங்கள் தத்தம் தொழிலை விட்டவர்களாக ஆகிறார்கள்.

295. அப்பொழுது ஈசனை தத்புருஷ அகோர வாமதேவ ஸத்யோஜாத மந்திரங்களை, ஒவ்வொரு மந்திரத்தையும் நூறு (100) ஆவ்ருத்தி ஜபத்தை செய்ய வேண்டும். சவுக்ய கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாவிடில் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

296. சவுக்யகர்மாவை சவுக்ய ஸ்லோகமின்றி செய்தால் அந்த (சவுக்ய) சுத்தந்ருத்தம் செய்ததாக ஆகாது. அதனால் நூறு (100) தடவை அகோரமந்திர ஜபம் செய்து இருமடங்கு சவுக்ய கர்மாவை செய்யவேண்டும்.

297. சுத்தந்ருத்தம் செய்து கொண்டிருக்கையில் தேவதாஸி தவறி கீழே விழுந்தால் தேசத்திற்கு கெட்டநிலை ஏற்படும். ஆகையால் தேசத்தின் நிலைசரியாகும் வரை விதிப்படி சாந்திஹோமம் செய்ய வேண்டும், (அல்லது)

298. ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகத்தையோ அல்லது ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தியோ ஜபிக்க வேண்டும். சவுக்யகாலத்தில் மங்களதீபம், அணைந்து போனால் (உடைந்துபோனால்) நூறு தடவை அகோரமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

299. சவுக்ய காலத்தில் சொல்லப்பட்ட ஸங்கீதம் இல்லாமல் இருந்தால் அந்த தேசத்திற்கு பயம் ஏற்படும். அந்த பயம் நீங்க சவுக்யகர்மாவில் கூறப்பட்டுள்ளபடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

300. சங்கீதம், வாத்யம், நர்த்தனம் இல்லாமல் இருந்தால் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும். அல்லது அகோரமந்திரத்தை ஆயிரம் (1000) தடவை ஜபித்து சங்கீதம், வாத்யம், நர்த்தனத்தை இருமடங்காக ஈசனுக்கு ஸமர்பிக்க வேண்டும்.

                           படலம் :தொடரும்