புதன், 10 ஜனவரி, 2024

மஹாளய பட்க்ஷம்

 மஹாளய பட்க்ஷம்




மஹாளய ஸிராத்தத்தில் ஸ்ராத்த கர்தாவிற்கு ஸம்பந்த பட்ட எல்லோருக்கும் ஹவிர் பாகம் உண்டு. ஆனால் இதர ஸிராத்தங்களில் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் தான் ஹவிர்பாகம்.

ஸூரியன் கன்யா ராசியில் இருக்கும் கிருஷ்ண பக்ஷம் முழுவதும் மஹாளய ஸிராதத்திற்கு சிலாக்கிய மாகும். இந்த பக்ஷம் ப்ரதமையில் இயிலிருந்து சுக்ல பக்ஷம் ப்ரதமை வரை 16 நாட்கள் ஹோமத்துடன் பார்வண விதியாக ஶ்ராத்தம் செய்வது உத்தமமாகும். இதற்கு ஶக்தி இல்லா விடால் பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற் கொண்டோ அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவன்  நிஷித்த மில்லாத ஒரு நாளில் செய்யவும். சில முனிவர்கள் அமாவாசை வரை செய்தால் போதும் என்றும் கூறியுருப்பதால் 15 நாட்களும் அனுஷ்டிக்கலாம்.

இது முக்கிய காலம். கெளண காலத்தில் எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இதிலும் செய்ய தவறினால் பித்ருக்கள் மிகவும் பெருமூச்சு விட்டு, வருத்தமடைந்து பூலோகத்தை விட்டு கிளம்புகிறார்கள். இதனால் ஐஸ்வரியத்திற்கும், ஆயுஸ், ஆரோக்கியம், புத்ர, பெளத்ராதிகளுக்கும் குறைவு ஏற்படுகிறது. மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு ஸிராத்த மானது கயா ஸிராத்ததிற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை ஐந்து மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் பத்து பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி இருபது மடங்கு அதிகமாகவும், த்வாதசி புண்ய காலத்தை நூறு மடங்கு அதிக மாகவும்  மஹாளய அமாவாஸ்யையை ஆயிரம் மடங்கு அதிகமாகவும் புண்யத்தை கொடுக்க கூடியதாக சொல்ல பட்டிருக்கிறது.

பலன்கள்:- ஆதாரம் வைத்தினாத தீக்ஷிதீயம் ஸிராத்த காண்டம் உத்தர பாகம் 225ம் பக்கம்.  ப்ர்தமை தன லாபம்; த்விதியை சந்ததி வ்ருத்தி; த்ருதீயை இஷ்டமான வரன்; சதுர்த்தி சத்ருக்களை அகற்றும்;

பஞ்சமி ஐஸ்வர்யத்தை அடைவான்;ச ஷ்டி புகழ தகுந்தவன்; ஸப்தமி கூட்த்திற்கு தலைவன்; அஷ்டமி சிறந்த புத்தியை அடைவான்;  நவமி அழகு கன்னிகையை அடைவான்;

தசமி- இஷ்டங்கள் எல்லாவற்றயும் அடைவான்; ஏகாதசி எல்லா வேதங்களையும் அடைவான்; த்வாதசி ஸ்வர்ண லாபம்; த்ரயோதசி ப்ரஜை, மேதாசக்தி; பசுக்கள் தேக புஷ்டி. ஸ்வதந்திர தன்மை; சிறந்த வ்ருத்தி; தீர்க்கமான ஆயுஸ், ஐவர்யம் சொல்லப்பட்ட எல்லா விதமான பலனும் ஸந்தேஹமில்லாமல் கிடைக்கும்;

சதுர்தசி ஆயுதத்தால் அடிபட்டும், துர்மரணம் அடைந்த வர்களுக்கும் இன்று செய்ய வேண்டும் அமாவாசை இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.

பிதா, மாதாவின் இறந்த திதி தான் முக்கியமென்பதில்லை. மஹாளய பக்ஷத்தில் ஒரு நாள் மஹாளய ஸிராத்தம் செய்வதாய் இருந்தால் பஞ்சமியிலிருந்து அமாவாசைக்குள் சதுர்தசி நீங்கலாக திதி, வார, நக்ஷத்திரங்களை பார்த்து தோஷமற்ற நாட்களில் செய்யலாம்.
அமாவாசை, வ்யதீபாதம், அபபரணி, அஷ்டமீ, த்வாதசி. தகப்பனாரின் இறந்த திதி இவைகளில் மஹாளய சிராத்தம் செய்வதானால் திதி, வாரம், நக்ஷத்திரம் பார்க்க வேண்டியதில்லை. மஹாளய பக்ஷத்தில் தெய்வாதீனமாய் மஹாளய ஸிராத்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால் ப்ரதமை, ஷஷ்டி, ஏகாதசி, சதுர்தசி வெள்ளிகிழமை கூடாது. ஒரு நாள் மஹாளயம் விஷயத்தில் புத்ரன், பத்னி இரண்டும் இல்லாதவன், சந்ததி இல்லாத விதவை; ப்ருஹ்மசாரி இம்மூவரும் அமாவாசை அன்று செய்யவும்.

மஹாளய ஸிராத்தம் செய்ய கூடாத நாட்கள்:- ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, வெள்ளிக்கிழமை; கர்த்தா, கர்த்தாவின் பத்னீ, கர்த்தாவின் ஜ்யேஷ்ட புத்ரன், இவர்களது ஜன்ம நக்ஷத்திரம், வ்யதீபாத ஸம்பந்த மில்லாத ரோஹிணி, ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம்.

தந்தையின் திதியில் செய்வதானால் இந்த நிஷித்தங்கள் கிடையாது.
அபபரணி, மத்யாஷ்டமி, கஜசாயை, வ்யதீபாதம் உள்ள நாட்களிலும் இந்த நிஷித்தம் கிடையாது. தந்தை இல்லாத புத்ரர்கள் எல்லோரும் செய்ய வேண்டும். விவாஹமான புத்ரர்கள் தனி தனியாக செய்வது விசேஷம். ஆதாரம் நிர்ணய சிந்து. கிருஷ்ண பக்ஷ பஞ்சமி முதல் சுக்ல பக்ஷ சதுர்த்தி முடிய கிருஷ்ண பக்ஷமே.. சந்திரனின் கலைகள் குறைந்த நாட்கள். மஹாளய பக்ஷத்தில் வ்ருத்தி, ஆசெளசம் நேர்ந்தால் ஆசெளசம் போன பிறகு நாள் பார்த்து செய்யவும்.

அன்ன ரூபமாக மஹாளய பக்ஷம் 16 நாட்களும் செய்ய முடியாவிடில் , ஒரு நாள் அன்ன ரூபமாகவும், மீதி நாட்கள் தர்ப்பண ரூபமாகவும் செய்யலாம். ஒரு நாள் அன்னருபமாக மஹாளயம் செய்பவன்  அப்பா, அம்மா சிராத்தம் குறுக்கிட்டால் அதன் பிறகு தான் நாள் பார்த்து செய்ய வேண்டும். பித்ரு கார்யங்களை மஹாளய கிருஷ்ண பக்ஷத்தில் செய்ய வேண்டியது. ஆஷாட மாத ஆரம்பமாக க்ருஷ்ண பக்ஷத்தை கணக்கிட்டு, ஐந்தாவது, ஏழாவது அல்லது வ்ருச்சிக மாதம் பிறப்பதற்குள், கிருஷ்ண பக்ஷத்தில் தான் ஸக்ருன் மஹாளய ஸிராத்தம் செய்ய வேண்டும்.

மாத பேதம் இருந்தால், மஹாளய பக்ஷத்திற்கு பின்பு அடுத்த மாதத்தில் ப்ரத்யாப்தீக ஸிராத்தம் வந்தால் மஹாளயம் முன்பு செய்ய வேண்டும். ஆஷாட மாதத்திலிருந்து எப்பொழுது மஹாளய ஸிராத்தம் செய்கிறார்களோ அப்பொழுது எத்தனையாவது பக்ஷம் என்று ஸங்கல்பத்தில் சொல்லி கொள்ளவும். பெற்றோர்கள் இறந்து முதலாவது சிராத்தம் வரையில் அமாவாசை, மாத பிறப்பு, கிரஹணம் முதலியவற்றில் தர்ப்பணம் செய்வது என்பது விகல்பம். அதாவது செய்தாலும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். வருஷம் முடிவதற்குள் கிரஹணம் ஏற்பட்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பித்து விட்டால் அந்த வருஷம் மஹாளயம் செய்ய வேண்டும்.

ஸிராத்தம், தர்ப்பணம் செய்வதற்கு உசித காலம் 10:30 மணியிலிருந்து 03:30 மணிக்குள் செய்யலாம். பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர் அமாவாசை தர்பணத்திற்கு பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். காருணீக பித்ருக்கள் பட்டியல் படியார் யாருடைய கோத்ரமும், பெயரும் தெரியுமோ அவர்கள் இறந்து போயிருந்தால், அவர்களை உத்தேசித்து தனி தனியாக வஸு ரூபமாக சொல்லி தர்ப்பணம் செய்யலாம்.

பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிளைகள், அக்கா, தங்கைகள், அத்திம் பேர்கள், மனைவி, மாமனார், மாற்று பெண், மைத்துனன்
குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், சினேஹிதன் ஆகியோர்களின் பெயர்களை சொல்ல வேண்டும்.

தர்ப்பணம் என்ற சொல்லுக்கு த்ருப்தி படுத்துதல் என்று பொருள்.

இதில் இறந்தவர்களுக்கு மட்டும் அவர்களது கோத்திரம், பெயர் சொல்லி மூன்று முறை தர்பணம் செய்யவும்.

ஜ்யேஷ்ட = மூத்த; கனிஷ்ட = இளைய

அப்பாவின் சகோதரர்கள்:-----------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .

புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி

அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி

பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி

மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி

மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மூன்று தடவை தர்ப்பணம்.செய்யவும்.

க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்கத்வய பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.

பூணல் வலம்

நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:

பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த

யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்

வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:

இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

பூணல் இடம்.;

உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.

அல்லது ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபிள் பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி

அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .

என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.

ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.

மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.

ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.

கருத்துகள் இல்லை: