ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
23. ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி மூன்றாவது ஆசார்யர் [கி.பி. 481 - 512]
ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர அந்தண குலத்தவர். ஸ்ரீ காகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் ''சோம நாராயணர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிரீசர்''.
இவர் சுப்ரமண்ய ஸ்வாமி மீது பெரும் பக்தி கொண்டவர். முருகனை உபாஸனை செய்து குமரனின் பரிபூர்ண அனுக்கிரகத்தைப் பெற்றவர். இவர் காலத்தில் வாழ்ந்த பிர பல வானவியல் அறிஞரான ஆரியபட்டர் நாஸ்திகக் கொள்கையுடன் இருந்தார். அவர் பூஜ்ய ஸ்ரீ பெரியவாளுடன் வாதிட்ட பிறகே தெளிவு பெற்றவராய் வேதாந்தப் பிடிப்புடன் வாழத் தொடங்கினார்.
ஒரு முறை சூரிய கிரகணம் பற்றி ஆராய, கடல் தாண்டிச் சென்றார் ஆர்யபட்டர். அந்நாளில் கடல் தாண்டிச் செல்வது சாஸ்திர விரோதமானது என்பதால் அவர் ''சமூகப் பிரஷ்டம்'’ செய்யப்பட்டார். பூஜ்ய ஸ்ரீ பெரியவாள் தலையிட்டு உரிய பிராயச்சித்தங்களை விதித்து ஆரியபட்டரின் ''பிரஷ்டத்தை'' நீக்கினார்.
இவர் கி.பி. 512 ஆம் ஆண்டு, கர வருடம், வைகாசி மாதம், சுக்ல பட்க்ஷம் சப்தமி திதி அன்று ஜகந்நாத்திற்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 31 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக