வெள்ளி, 11 அக்டோபர், 2024

படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்...

படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்...

56 வது படலத்தில் பக்த அனுக்கிரஹ தேவதா ஸ்தாபன விதி கூறப்படுகிறது. அமைப்பு முறையுடன் பக்த அனுக்கிரஹ தேவரின் ஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பக்த அனுக்கிரஹர்கள் சதாசிவன் முதலிய தேவர்கள் என்று முன்னமே கூறப்பட்டுள்ளது. தேவ தானவ, கந்தர்வ முனிவர்கள் முதலிய மனுஷ்யர்கள் அவ்வாறே எறும்பு முதல் யானை வரை உள்ள ஜங்கம பிராணிகள் மரம் செடி கொடி முதலிய ஸ்தாவரங்கள் ஆகியவை இந்த சாஸ்திரத்தில் அனுக்கிரஹம் அடைய தகுந்தவர்களாவார்கள். இவர்களின் அனுக்கிரஹமானது சாக்ஷúஷதீக்ஷõ ஸ்பர்ச தீøக்ஷ சாஸ்த்ர தீøக்ஷ வாசிக தீøக்ஷ என்று பலவிதமாக கூறப்படுகிறது. எந்த மனிதன் சிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரீரத்துடன் மரணத்தை அடைகிறானோ அவள் அந்த மனிதன் எல்லா பாபத்திலிருந்து விடுபட்டு சிவனாகவே ஆகிறான் இவ்வாறு எந்த மனிதன் மரணம் அடைந்த சமயத்தில் தன்னுடைய இஷ்டமான லிங்கத்தை தொட்டுக் கொண்டு உயிரை விடுகிறானோ அவனும் சிவனாகவே ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.  இவ்வாறு அனுக்கிரஹம் செய்பவர்கள் அனுக்கிரஹிக்கப்படுபவர்களுக்கு செய்யும் அனுக்கிரஹம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பக்தர்களின் உருவத்தை அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, படுத்திருப்பதாகவோ நல்ல லக்ஷணம் அஞ்சலிகையுடன் கூடியதாக உலோகம் முதலிய திரவ்யங்களால் செய்ய வேண்டும். இவ்வாறு உலோகம் முதலிய திரவ்யங்களால் சதாசிவன் முதலிய தேவர்களின் உருவமோ அல்லது அவர்களுடைய பீடமோ செய்யப்படவேண்டும். பக்த பிரதிமை, தேவபிரதிமையை ஸ்தாபிக்கவும் என்று பக்தானுகிரஹ தேவலக்ஷணம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்ப்பணம் செய்து ரத்னநியாஸ, நயனோன்மீலன, பிம்பசுத்தி, கிராமப் பிரதட்சிண, ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியையின் வரிசை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை மண்டபத்தை குண்டம், வேதிகையுடன் கூடியதாக முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவும்.

பிறகு ஸ்தபதியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாகவாசன பரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் செய்து அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்நபனத்தால் அபிஷேகம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தில் ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு போல் கும்பஸ்தானம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் கால் பக்கத்தில் பக்தனின் கும்பமும் சுற்றிலும் வித்யேஸ்வரரால் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தத்வததத்வேஸ்வர மூர்தித்தேஸ்வர நியாசம் முன்பு கூறிய முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஹோம முறை திரவ்ய நிரூபணம் முதற் கொண்டதாக சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது தினத்தில் ஆசார்யன் முறைப்படி கும்ப, அக்னி பூஜை செய்து, தட்சிணையை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திர நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸம் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பத்தில் உள்ள தீர்த்திரங்களால் மூர்த்தியை அபிஷேகம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிரதிஷ்டை முடிவில் ஸ்நபனம், நைவேத்யம் செய்யவும். பிறகு உத்ஸவம் செய்யவும் என்று உத்ஸவம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முடிவில் இறந்தவரை குறித்து அவரின் புத்திரனோ பேரனோ இந்த பிரதிஷ்டையை செய்யவும் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய ஆத்மாவை சிவாத்மாவாக பாவித்து பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 56வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே, உயர்ந்த அந்தணர்களே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற தேவருக்கு உருவ அமைப்புடன் கூடியதான ஸ்தாபனத்தை நன்கு கூறுகிறேன், கேளுங்கள்!

2. ஸதாசிவாதி தேவர்கள் முன்பே அமைப்பு முறையுடன் கூறப்பட்டுள்ளார்கள். அவர்களே அனுக்ரஹம் செய்யக்கூடியவர்கள், அதனால் பக்தாநுக்ரஹம் செய்யக்கூடியவர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

3. தேவர்கள், தானவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், மனுஷ்ய ஜாதிகள், எரும்பு முதல் யானை வரை ஜங்கமஸ்தாவரங்கள் எவர்களோ

4. அவர்கள் அனுக்ரஹிக்க கூடியவர்கள். சாஸ்திரங்களில் அனுக்ரஹம் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. சிவதீøக்ஷ, சாஸ்த்ர உபதேசம், ஸ்பர்சதீøக்ஷ, சாக்ஷúஷ தீøக்ஷ சமாதான வார்த்தைகள் மூலம் என்பதாக அருள்பாலிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

5. சிவாதிஷ்டித உடலோடு கூடின ஓர் மனிதன் மரணத்தை அடைந்தால் அந்த மனிதன் எல்லா பாபங்களில் இருந்து விடுபட்டு சிவனாகவே ஆகின்றான்.

6. இறக்கும் காலத்திலே விருப்பப்பட்ட லிங்கத்தை தொட்டுக்கொண்டு எவன் உயிரை விடுகின்றானோ அவன் சிவனே அதில் சந்தேகம் இல்லை.

7. சொல்லப்பட்ட கோத்ரம் முதலிய தேகத்தை அதனுடைய ஆகிருதியை (உருவை) செய்து தொட்டுக் கொண்டு நல்ல லக்ஷணத்தோடு கூட படுத்துக் கொண்டோ அமர்ந்து இருந்து கொண்டோ நின்று கொண்டோ

8. கையை கூப்பிக் கொண்டு பிரதிமையை ஸதாசிவர் முதலான பிம்பங்களுக்கு கூறப்பட்ட உலோக திரவியங்களினால் (பொருட்களால்) சமர்த்த னானவன் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

9. சமர்த்தனான ஆசார்யன் அதனுடைய பீடத்தை அதேபோல் அளவில் செய்ய வேண்டும். பக்தானுக்ரஹ தேவதையினுடைய லக்ஷணம் இம்மாதிரி கூறப்பட்டது.

10. பிராம்ஹண உத்தமர்களே, பிரதிஷ்டை செய்வதை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். முன்போல நல்லவேளையை நிர்ணயம் செய்து அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

11. ரத்னந்யாஸம், கண் திறப்பது, பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலத்தின் நடுவில் (அதிவாஸம்) ஜலாதிவாசம் செய்ய வேண்டும்.

12. பிரதிஷ்டா மண்டபமானது (அதை) முன்பு கூறப்பட்ட முறையினால் செய்யவும். அந்த இடத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்கவும்.

13. நாற்கோணம் முதலிய குண்டங்கள், வ்ருத்த குண்டம், பிரதாணமாகவோ அமைத்து சில்பியை சந்தோஷப்படுத்தி அனுப்பிவிட்டு பிராம்ஹண போஜநம் செய்வித்து புண்யாஹவாசனம் செய்து புரோக்ஷிக்கவும்.

14. நெல், அரிசியால் ஸ்தண்டிலம் அமைத்து ஸ்நபனம், சயனாதிவாசம், அதே போல் ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) கும்பஸ்தானம் இவைகள் முன்போல் செய்ய வேண்டும்.

15. அதனுடைய பாதத்தில் அதனதனுடைய தியானத்தோடு பக்த கும்பத்தையும் ஹ்ருதய மந்திரத்தோடு கூட வித்யயேஸ்வர கடங்களை சேர்ந்ததாக (கடகங்களுடன்)

16. அந்தந்த மூர்த்திகளுடைய நியாஸங்களை முன் கூறிய விதியினால் நடத்த வேண்டும். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

17. சமித்து, நெய், பொறி, எள், மூங்கில், அரிசி, யவதான்யம், புரசு, அத்தி, அரசு, ஆல் இவைகள் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும்

18. வன்னி நாயுறுவி, வில்வம், இச்சி ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான கோணங்களிலும் புரசு சமித்து பிரதான குண்டத்திலும் அல்லது எந்த குண்டசமித்து இல்லையோ அந்த குண்டத்திற்கு புரசுசமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

19. பிறகு இரண்டாவது தினத்தில் கும்பம், அக்னி, பூஜையை செய்து ருத்விக்குகளோடு கூட வஸ்திரம், தங்கம் முதலியவைகளை அடைந்தவனாய்

20. ஆசார்யன் பத்து நிஷ்கம் தட்சிணையை அடைந்து சந்தோஷமான மனதோடு பிம்பத்தின் முன்நிலையில் கடங்களை வைத்து பிம்பத்திற்கு மந்திரந்யாஸம் செய்யவும்.

21. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து தேவருடைய ஹ்ருதயத்தில் நியஸித்து (சேர்த்து) ஈஸ்வரன் தேவியோடு கூடி இருந்தால் ஆசார்யன் தேவியினுடைய மந்திரத்தை

22. தேவியினுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை சேர்க்க வேண்டும். இல்லாவிடில் பீடத்தில் சேர்க்க வேண்டும். பிறகு கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

23. பக்த கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை அந்த பக்த ஹ்ருதயத்தில் சேர்த்து நியஸிக்க வேண்டும். மற்ற அஷ்டவித்யேஸ்வர மூலமந்திரங்களை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

24. அந்த கும்ப ஜலத்தினால் பீடத்தை அபிஷேகம் செய்விக்க வேண்டும். ஸ்நபனம் செய்து முடிவில் நைவேத்யம் செய்ய வேண்டும்.

25. கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும் என ஸாமான்யமாக கூறப்பட்டது. திரிபுரஸம்ஹார (முப்புரம் எரிப்பது) பிரதிஷ்டையில் விசேஷவிதி கூறப்பட்டிருக்கிறது.

26. பக்த பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி எந்த மனிதன் இந்தபடி செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

27. புத்திரனை விரும்புகிறவர்கள் புத்திரனையும், பணத்தை விரும்புகிறவர்கள் பணத்தையும் தேவர்கள் விரும்புபவர்கள் தேவர்களையும், மோக்ஷத்தை விரும்புபவர்கள் மோக்ஷத்தையும் அடைவார்கள்.

28. மனுஷ்யன் எந்தந்த விருப்பங்களை விரும்புகிறானோ அவைகளை அடைகிறான். இறந்தவனை குறித்து எந்த மகன், பேரன், இப்பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் மேற்கூறிய பயனை அடைகிறான்.

29. உயிரோடு இருக்கும்பொழுதே சிவ அடையாளத்தை உடையவனாக தன்னை பிரதிஷ்டை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பக்தானுக்ரஹ தேவஸ்தாபன முறையாகிற ஐம்பத்தியாறாவது படலமாகும்.

படலம் 55: சண்டேசானுக்ரஹ மூர்த்தி...

படலம் 55: சண்டேசானுக்ரஹ மூர்த்தி...

55 வது படலத்தில் சண்டேசானுகிரஹர் முதலானவர்களின் ஸ்தாபனமுறை கூறப்படுகிறது. இங்கு அமைக்கும் முறைப்படி சண்டேசானுக்ரஹ, நந்தீசானுக்கிரஹ, விஷ்ணு அனுக்கிரஹ மூர்த்திகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் சண்டேசானுக்ரஹ மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு உமா தேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு வலப்பக்கத்திலோ, இடது பக்கத்திலோ அமர்ந்ததாகவோ நின்றதாகவோ அஞ்சலிகையுடன் ஸ்வாமியை பார்த்துக்கொண்டிருப்பதாக சண்டிகேஸ்வரரை அமைக்கவும். அங்கு ஈஸ்வரன் சண்டிகேஸ்வரரின் சிரசில் புஷ்பமாலையாக சுற்றுவதனை செய்பவராகி பிம்பம் அமைக்கவும். இப்பேர்பட்ட உருவ அமைப்பு உடையது சண்டேசானுகிரக மூர்த்தியாகும். இவ்வாறாக சண்டேசானுக்கிரக மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு போலவே உமாதேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு பாகத்திலோ, வலதுபாகத்திலோ, இரண்டுகண், இரண்டுகை உடையதும் அமைதியானதும் அஞ்சலிகையுடன் கூடியதாகவும், ஜடாமகுடத்துடன் கூடியதாகவும் சிவாகமங்களை கேட்பதில் ஈடுபட்டதாகவும் பிரசன்ன மானவருமான நந்திகேஸ்வரரை அமைக்கவும் இவர் நந்தீசானுக்கிரஹ தேவனாகும் என்று நந்தீசானுக்கிரஹ மூர்த்தி வர்ணிக்கப்பட்டது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அமைப்புபடி ஸ்வாமியின் வலது பாகத்திலோ இடது பாகத்திலோசக்ரத்துடன் கூடிய அஞ்சலிகையையும், சங்கம், தாமரை இவைகளை விஷ்ணுவிற்கு சக்ரம் கொடுப்பவராக உள்ளவர் விஷ்ணு அனுக்கிரஹமூர்த்தியின் லக்ஷணம் கூறப்பட்டு மற்ற அனுக்கிரஹ கார்யம் செய்யும் சிவனை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்டு நல்ல கிழமை நட்சத்திரம் முதலியவைகளை பரிக்ஷித்து அங்குரார்பணம் செய்து அனுக்கிரஹம் செய்பவர் அனுக்கிரகிக்கப்படுவர்கள் ஆகிய இருவர்க்குமான விஷயத்தில் ரத்ந நியாசம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி கிராமபிரதட்சிண பூர்வமாக ஜலாதிவாசம் வரையிலான கிரியைகளை செய்யவும் என்று கிரிய வரிசை முறை கூறப்படுகிறது.

பிறகு யாக மண்டபம் குண்டம் வேதிகை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலையை திருப்திசெய்து விட்டு பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்ட பிம்பங்களுக்கு தனித்தனியாக ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயானாதிவாசம் செய்யவும் என சயன அதிவாச முறை விளக்கப்படுகிறது. பிறகு ஈஸ்வரனால் அனுக்கிரஹிக்கத் தகுந்த பக்தர்கள் தனியாக பீடமாக இருந்தால் அவர்களுக்கு ஸ்வாமியின் காலடியில் சயனம் அமைத்து பிறகு ஈஸ்வரனின் சிரோபாகத்தில் சிவகும்பம், வர்தனியையும் ஸ்தாபிக்கவும். அனுக்கிரஹிக்கவேண்டிய பிம்பங்களின் விஷயத்தில் அந்த பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி அந்தந்த மூர்த்திக்கு எட்டுகும்பங்களுடன் ஸ்தாபிக்கவும். ஹோமமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு மறுநாள் மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் தேவன், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் தட்சிணை பெற்றுக்கொண்டு மந்திரநியாசம் செய்யவும் என்று மந்திரர்யாஸமும் விளக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்தி ஸ்வாமியை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டையின் முடிவில் ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம் இவைகளை செய்யவும். இங்கு பூஜை விஷயத்தில் வேறுபாடு காணப்படுகிறது. தேவியானவள் தனியாக பீடமாக இருந்தால் கல்யாணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு முடிவில் இவ்வாறு யார் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் முடிவில் மோட்சத்தை அடைகிறான் என்று பலச்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 55வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் விஷ்ணு இவர்களை அனுகிரஹித்த பிரபுவினுடைய பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்தோடு கூட நன்கு கூறுகிறேன்.

2. உயர்ந்த ஆசார்யன் உமா மஹேஸ்வரனுடையவோ, சந்திரசேகர மூர்த்தியினுடையவோ வலது அல்லது இடது பாகத்திலோ

3. முழந்தாள், துடை, தொப்புள், வரையிலும் மார்பு பகுதி, கழுத்து பகுதி, வரையிலுமோ இருக்கும் நிலையையுடையவராகவும் அமர்ந்தோ நின்ற கோலத்துடனோ அஞ்சலி கூப்பிய கையை உடையவராகவோ

4. ஸ்வாமியைப் பார்த்த கோலமாகவோ என்னுடைய பக்தனான சண்டிகேஸ்வரரை எல்லா அங்க அழகுடையதாக அமைக்கவேண்டும். கனிஷ்ட தச தாளம் என்ற அளவினால்

5. மாலையினுடைய நுனியை, ஈஸ்வரனுடைய வரத, ஹஸ்தத்திலும் இன்னொரு கை நுனியை கடக கையிலும் வைத்து ஈஸ்வரன் மாலையினால் சண்டிகேஸ்வரனுடைய தலையில் சுற்ற வேண்டும்.

6. நந்திகேஸ்வர, அனுக்ரஹ மூர்த்தியில் சிறிது விசேஷமிருக்கிறது. சாந்தராய், இருகைகள், இரண்டு கண்கள், அஞ்சலியை சேர்த்துக் கொண்டு (கையை கூப்பிக் கொண்டு)

7. விரிந்த ஜடையை உடையவரும், ஜடையை மகுடமாக தரித்தவரும், ஆகம சாஸ்திரத்தை கேட்க்கும் விழிப்புணர்வோடும் வணங்கியவராய் செய்ய வேண்டும்.

8. முன்கூறிய அளவில் நந்திகேஸ்வரரை மலர்ந்த திருமுகமுடையவராய் அவரை செய்ய வேண்டும். நந்தீசானுக்ரஹ மூர்த்தியை இந்த பிரகாரம் கூறப்பட்டது. அது போல் விஷ்ணு அனுக்ரஹ மூர்த்தியையும் செய்ய வேண்டும்.

9. நந்தீஸ்வரரை விட்டு விட்டு விஷ்ணுவை அதன் லக்ஷணத்தோடு கூடியதாக சக்கரத்தோடு கூடின அஞ்சலி ஹஸ்தமும், சங்கு தாமரைகளை போன்ற மற்றகைகளிலும்

10. விஷ்ணு மூர்த்திக்கு சக்ரத்தை அளிப்பவராக இந்த தேவர் இருக்க வேண்டும். இவ்வாறே பரமேஸ்வரனை மற்ற அனுக்ரஹத்தை வேண்டி அவரை நோக்கிய தேவனை செய்ய வேண்டும்.

11. இந்த பிரகாரம், லக்ஷணங்களை கூறப்பட்டது. பிரதிஷ்டாவிதியை கூறுகிறேன். அங்குரார்பணம், ரத்னன்நியாஸம், இரண்டும் முதல் நாளிலும்

12. கண் திறப்பது, பிம்பசுத்தி, நகர பிரதட்சிணம், ஜலாதிவாசம், யாக மண்டபம் நிர்மாணம்

13. பிறகு வட்டவடிவ குண்டம், சதுரஸ்ர குண்டம், எண்கோண குண்டங்களை செய்ய வேண்டும். லக்ஷணங்களோடு கூட ஒன்பது, ஐந்து என்பதான எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.

14. சிற்பிகளை அனுப்பிவிட்டு பிராம்மன போஜனம் புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, தனியாக வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்தை அமைக்க வேண்டும்.

15. ஸ்நபனம், ரக்ஷõபந்தனம், முதலியவைகளை முன்போல் தனித்தனியாக தேவர்களுக்கு செய்து சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

16. அருள் பாலிக்கப்பட்ட எந்த தேவர்கள் தனிமையான இருக்கையையுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சயன அமைப்பை ஸ்வாமியின் திருவடியின் கீழ் அமைக்க வேண்டும்.

17. ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் வர்த்தனியுடன் கூடிய சிவ கும்பத்தை வைக்க வேண்டும். அனுக்ரஹிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு அந்த அந்த மூர்த்திகளுடைய எட்டு கும்பங்களை மந்திரத்துடன் கூடியதாக வைக்க வேண்டும்.

18. முனிபுங்கவர்களே, அந்தந்த அத்யாயத்தில் சொல்லப்பட்டபடி கிரஹிக்க வேண்டும். குண்ட, அக்னி ஸம்ஸ்காரத்தை செய்து திரவ்யங்களால் ஹோமம் செய்ய வேண்டும்.

19. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், நெல், அரிசி இவைகளை வரிசையாகவும் புரசு, ஆல், அத்தி, இச்சி கிழக்கு முதலியவைகளையும்

20. வன்னி, கருங்காலி, பில்வம், அரசு தென்கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் பிரதான குண்டத்தில் புரசு சமித்தும் அல்லது புரசையே எல்லா குண்டங்களுக்கும் உபயோகம் செய்யலாம்.

21. சண்டர், நந்திகேசர், விஷ்ணு, ஆகிய இவர்களை பிரதான குண்டத்தில் ஆசார்யன், ஹோமம் செய்ய வேண்டும். முடிவில் ஹோம கார்யமானது, பூர்ணாஹுதியோடு தனியாக செய்ய வேண்டும்.

22. தத்துவத்தை அறிந்து, ஆசார்யன், இரண்டாம் நாள், மூர்த்தீபர்களுடன் பரிசுத்தமாக சயனத்திலிருந்து பிம்பத்தை எடுத்து, கும்ப, குண்ட, அக்னிகளை பூஜித்து

23. நல்ல முஹூர்த்தம் வந்த ஸமயத்தில் மந்திரந்யாஸத்தை செய்ய வேண்டும். வஸ்திரம், தங்கமோதிரம், முதலியவைகளால் பூஜிக்கப்பட்டு ரித்விஜர்களோடு கூட அடையப்பட்ட பிம்பத்தின் முன்னிலையில் ஆதாரமாய் செய்யப்பட்ட ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைக்க வேண்டும்.

24. பத்து ரிஷ்கம் முதலான அளவுள்ள தட்சினையினால் திருப்தி அடைந்த ஆசார்யன், பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் கடங்களை அமைக்கவும்.

25. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து, சிவனுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியினுடைய சக்தியை எடுத்து அதனுடைய பீடத்தின் மேல் சேர்க்க வேண்டும்.

26. அம்பாள் ஒரே பீடத்திலிருந்தால் அவளுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை நியஸிக்க வேண்டும். மற்றவர்களுடைய மூல மந்திரத்தை எடுத்து பீடத்தை சுற்றிலும், நியாஸம் செய்ய வேண்டும்.

27. சண்டேசர் முதலிய தேவர்களிடத்தில் அவருடைய கும்பங்களுடைய மந்திரத்தை வைக்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களினால் அந்தந்த தேவதைகளுக்கு அபிஷேகம் செய்துவிக்க வேண்டும்.

28. ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம், முதலியவைகளை செய்தும் செய்யாமலும் இருக்கலாம். அம்பாள் வேறு பீடத்தில் இருந்தால் ஆசார்யன் கல்யாணம் செய்துவிக்க வேண்டும்.

29. இது மாதிரி எந்த ஒரு மனிதன் செய்கிறானோ, அவன் முடிவில் மோக்ஷத்தை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சண்டேஸாத்யனுக்ரஹ விதியாகிற ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.

படலம் 54: சரபேச பிரதிஷ்டை...

படலம் 54: சரபேச பிரதிஷ்டை...

54 வது படலத்தில் சரபேச பிரதிஷ்டை கூறப்படுகிறது. இங்கே சரபேச மூர்த்தியின் உருவ அமைப்பை கூறுவதன் மூலம் பிரதிஷ்டை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கழுத்திலிருந்து மேற்பட்ட பாகத்தில் பட்சி உருவமாக ஸ்வர்ண காந்தியுடன் சிம்மபாதம் போல் நான்கு பாதத்தையும், மேல் பாகத்தில் நான்கு பாதம் இருப்பதாகவும் செய்து கழுத்திற்கு மேல் பாகத்தில் மனிதஉருவம், ஸிம்ம உருவமாகவும் பயங்கரமான தெத்திப்பல்லை உடையதாகவும் சிவந்த மூன்று கண்ணைஉடையாதகவும், கீழே இரண்டு பாதம், மேலே இரண்டு பாதம் வயிற்றில் இரண்டு பாதம் நரசிம்மரை ஸம்ஹாரம் செய்வதுபோல் சரபேச மூர்த்தியை அமைக்கவும். அஞ்சலி கையுடன் கூடியதும் சேஷ்டையின்றி பெரிய சரீரத்தை உடையதும் வணங்கிய தேகத்தை உடையதுமான நரசிம்ம மூர்த்தியை அமைக்கவும் என்று வெட்கம் அடைந்த நரசிம்மமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. கற்சிலை முதலான திரவ்யங்களுள் இஷ்டப்பட்ட திரவ்யங்களால் சரபேசரை அமைக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு உருவ அமைப்பை விளக்கி சரபேசமந்திரத்தை கூறி பூஜைகளில் இஷ்டசித்திக்காக இந்தமந்திரத்தை சரபேஸ்வரனின் பொருட்டு உபயோகிக்கவும் என கூறப்படுகிறது. வஜ்ரதேகன் முதலிய எட்டு மூர்த்திபர்களின் பெயர் கூறிய இவர்கள் பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக கிழக்கு முதலிய திசைகளில் ஸ்தாபிக்கபடுபவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு தன்னுடையபெயருடன் கூடிய அக்ஷரத்தினால் மந்திரம் உபயோகித்து செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு நல்ல லக்னத்தை உடைய தினத்தில் அங்குரார்பணம், நயனோன்மீலனம், ரத்தினநியாஸம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம் ஆகிய கிரியைகள் முறைப்படியே ஹரிக்கும் ஹரனுக்கும் தனித்தனியாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. அங்கு வேதிகை குண்டம் செய்முறை கூறப்பட பிறகு சில்பியை திருப்திசெய்து புண்யாகபிரோக்ஷணம் பிராம்மன போஜனம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் மண்டபத்தில் சயனம் அமைக்கவும், பிறகு முன்பு கூறியபடி ஜலத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து சுத்திசெய்து, சரபமூர்த்தி நரசிம்ம மூர்த்திக்கும் ரக்ஷõபந்தனம் செய்து கிழக்கு வடக்குமுகமான பாதத்தையும் வைத்து சயன அதிவாசம் செய்து நரசிம்மமூர்த்தி தனிபீடமாக இருந்தால் சரபமூர்த்தியின் இடது பாகத்தில் சயனாதிவாசம் செய்யவும், பிறகு சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தவும் என்று சயனஅதிவாச முறை கூறப்பட்டது. பிறகு சிவகும்பமும் விஷ்ணு கும்பமும் சிரோதேசத்தில் ஸ்தாபிக்கவும் சுற்றிலும் வஜ்ரதேகம் முதலான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு கூறப்பட்ட ஆசார்யன் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். மூர்த்திமூர்தீஸ்வரநியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்பட்டது. பிறகு திரவ்ய நிரூபணமுறையாக ஹோமமுறை கூறப்படுகிறது. பிறகு தட்சிணையால் சந்தோஷம் அடைந்த ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முறைப்படி மந்திர நியாசம் செய்யவும் என கூறி மந்திர நியாஸமுறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த கும்பதீர்த்தங்களால் அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனம் செய்து ஆசார்யன் அதிகமான நைவேத்யம் உத்ஸவம் செய்யவும் என்று கூறப்படுகிறது. பிரதிஷ்டா முறை கார்யத்தை குறிப்பிடும் அளவால் சொல்லப்படுகிறது இவ்வாறு சரபமூர்த்தியை பிரதிஷ்டைசெய்து பிரதிதினமும் பூஜிக்கும் முறை முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால் சரபேச மந்திரத்தினால் அர்ச்சனை செய்யவும் என கூறப்படுகிறது. ஸ்நபனோத்ஸவ கர்மாக்களை ஆசார்யன் சரபேஸ்வரனை பொருட்டு செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சரபமந்திரத்தினால் சத்துருவர்க்க நாசனமும், ஸர்வவ்யாதி நாசனமும், வஸ்ய ஆகர்ஷன வித்வேஷாதிகர்மாவும் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன முறைப்படிசெய்யவும் என கூறப்படுகிறது. எந்தமனிதன் சரபேஸ்வரமூர்த்தி பிரதிஷ்டையை பக்தியுடன் செய்கிறானோ அவன் இந்த ஜன்மாவில் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து மேல் உலகத்தில் ஈஸ்வரபதத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 54வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. சரபேச பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். பட்சியை போல் இரண்டு இறக்கைகளை உடையதாகவும் தங்க நிறமாகவும்

2. மேல் இறக்கைகளை உடையதாகவும், சிவந்த மூன்று கண்களை உடையதாகவும், சிங்கத்தை போன்ற நான்கு கால்களை உடையதாகவும்

3. கூறான நகங்களை கூடியதாகவும், மேல் நோக்கிய நான்கு பாதங்களை உடையதாகவும், விரிந்த சடையோடு கூடியதாகவும், தெய்வீகமான வாலை உடையதாயும்

4. கழுத்திற்குமேல் மனிதர்களை போலவும் தெய்வீக தலையை உடையதாயும், நீண்ட தெத்திப் பல்லும், பெரிய பராக்ரமத்தோடு கூடிய சிம்ம முகத்தோடும்

5. ஜகத்தை அழிப்பதற்கு தயாராக வரும் அஞ்ஜலி பந்தத்துடன் இருப்பவரும் அசைவற்ற பெரிய உடல் உள்ளவருமான நரசிம்ம மூர்த்தியை அபஹரிப்பவராயும்,

6. வணங்கின சரீரத்தோடு தாமரை இதழ் போன்ற கண்களை உடைய விஷ்ணுவை மேல்நோக்கிய முகத்தை உடையவராகவும், மேல்நோக்கிய 2 பாதத்தையும், நரஸிம்மரின் வயிற்றில் 2 பாதத்தை உடையவராகவும்

7. ஆகாசத்தை நோக்கிய முகத்தை உடையவராக சரபேஸ்வரரை செய்ய வேண்டும், இவ்வாறு அமைப்பு முறை கூறப்பட்டு அவரின் மந்திரம் கூறப்படுகிறது.

8. சவுச என்பதாக மந்திரத்தை (எட்டாவது எழுத்து வர்க்கத்தின் முதல் எழுத்தான சாவும். பதினான்காவது உயிரெழுத்தான அவும், ஆறாவது உயிர் எழுத்தான ஊவும் (ஊ) பிந்துவும் நாதமும் ஆகிய (ம்) சேர்ந்து சவும் என பொருள்படுகிறது.

9. இது சரபபீஜம் என்றும் சரபேஸ்வர என்று கூறப்பட்டுள்ளது. பிறகு ஹரிஹர என்ற பதத்தை நான்காம் வேற்றுமை உடையதாயும் கூறவும். (சரபேச்வராய ஹரிஹராய)

10. முதலில் பிரணவம் என்ற ஓம்காரத்தையும் மந்த்ர முடிவில் நம: என்ற பதத்தையும் கூடியதாக விருப்பப்பயனை அடைய சரபேஸ்வரனின் பூஜை முதலியவைகளில் சொல்ல வேண்டும்.

11. முதல் எழுத்தினால் (மந்திரத்தினுடைய) ப்ரும்ம மந்திரத்தையும் அங்க மந்திரத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வஜ்ரதேகர் என்பவர் முதலாவதாகவும், பிறகு காதகர், வியோஜகர்

12. மாரணர், தீர்க்க ஹஸ்த்தர், தீஷ்ண தம்ஷ்டரர், ஜடாதரர், பலிப்பிரியர், இவர்கள் எட்டு வித்யேஸ்வரர்கள் ஆவார். இவர்கள் கிழக்கு முதலான திசைகளில் இருக்கிறார்கள்.

13. பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவருடைய பெயர்க்கு உண்டான முதல் எழுத்தினாலே மந்திரங்களை கூறவேண்டும்.

14. கற்சிலை முதலான பொருள்களில் விருப்பப்பட்ட பொருளால் சரபேஸ்வரனை அமைக்கவும். பகலில் நல்ல லக்னம் இருக்கும் பொழுது பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

15. அங்குரார்பண கார்யமானது அதன் முறைப்படி செய்ய வேண்டும். நயனோன்மீலனம், ரத்னன், நியாஸம் செய்ய வேண்டும்.

16. மண் முதலியவைகளால் சுத்தி செய்தும், கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முதலியவைகளை முன்போல் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியாக செய்ய வேண்டும்.

17. மண்டபத்தை முன்பு போல் செய்து சதுரம் முதலான ஒன்பது குண்டங்களும் ஐந்து குண்டங்களோடு கூடியதாகவோ ஒரு குண்டத்தோடு கூடியதாகவோ செய்ய வேண்டும்.

18. ஸ்தபதியை அனுப்பி விட்டு புண்யாகவாசன ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து, அதனுடைய மீதியையும் வெளியே போட்டுவிட்டு மெழுக வேண்டும்.

19. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி, அதன் கார்யம் ஸ்தண்டிலத்தை செய்து, சயனாதி வாசம் செய்து முன்போல ஸ்நபனம், ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

20. தனித்தனியாக இரண்டு கார்யங்களும் செய்து, இரண்டு மூர்த்திக்கும் சயனா ரோகனத்தை நடத்த வேண்டும். தேவன் கிழக்கு திக்கில் தலையையும் வடக்கில் கால் இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும்.

21. தனியான பீடத்தில் விஷ்ணு இருந்தால் இடது பக்கத்தில் அவரை சயனாதிவாசம் செய்து சிகப்பு வஸ்திரம் போற்றி கும்பஸ்தாபநம் செய்ய வேண்டும்.

22. சிவகும்பத்தையும், விஷ்ணு கும்பத்தையும் வைக்க வேண்டும். நூல் சுத்தியதாகவும், மாவிலை, வஸ்திரங்களோடு கூடியதாக தலை பக்கத்தில் வைக்க வேண்டும்.

23. தங்கம் நல்ல வஸ்திரங்கள் இவற்றுடன் கூடியதாய் சுற்றிலும் எட்டு கடங்களை நியாஸம் செய்து நூல் சுற்றப்பட்டும் ஜலத்தோடு கூடியதும் வஜ்ர தேஹாதிகளை அதிஷ்டான முடியதாய்

24. முன் சொல்லப்பட்ட மந்த்ர சொரூபத்தை அறிந்தவரான ஆசார்யன், சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். ஸகலீகரணம் செய்து, ஹ்ருதயாதிகளிலிருந்து உண்டான மூர்த்திகளை அவைகளை ஆவாஹணம் செய்து அந்த மூர்த்தியை ஹ்ருதயத்திலிருந்து மூலத்தினால் ஆவாஹனம் செய்து சரபேச மந்திரத்தை நியாஸம் செய்து விஷ்ணுவினிடத்தில் அதற்கு கூறியபடி பூஜிக்க வேண்டும்.

25. ஹ்ருதய அஞ்சலியுடன் கூடியதாக மூல மந்திரத்தினால் சரபேச மந்திரத்தை ஆவாஹனம் செய்து, மஹா விஷ்ணுவையும் அவ்வாறே ஆவாஹநம் செய்ய வேண்டும்.

26. முன்போலவே மூர்த்தி, மூர்த்தீஸ்வரன், நியாஸத்தை செய்ய வேண்டும். மூர்த்திகள் வஜ்ரதேகன் முதலியவைகள் ஈசானன் என்று கூறப்படுகின்றன.

27. குண்டம், அக்னி, இவைகளுக்கு ஸம்ஸ்காரம் செய்து பிறகு ஹோமத்தை செய்ய வேண்டும். புரசு சமித்துகளினால் நெய்யினால் அன்னத்தினால்

28. எள்ளினால், பொரியினால், மருந்து வகையினால் மூர்த்தீச மந்திரங்களோடு கூட பூர்ணாஹீதி கொடுத்து இரண்டாவது நாள் அக்னி கும்பங்களில் தேவதா பூஜை செய்ய வேண்டும்.

29. ஆசார்யன் பூஜை செய்பவர்களோடு கூட கிடைத்த தட்சிணையால் சந்தோஷத்துடன் ரித்விக் முதலியவர்களோடு முறைப்படி மந்திரத்தின் நியாசம், ஆரம்பம் செய்ய வேண்டும்.

30. ஈஸ்வரனுடைய முன்னிலையில் ஆசார்யன் ஸ்தண்டிலத்தை செய்து கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சரபேச மூர்த்தியின் ஹ்ருதயத்தில் நியஸிக்க வேண்டும்.

31. விஷ்ணு மூலமந்திரத்தை எடுத்து நரசிம்ஹ ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்றவைகளின் மூலமந்திரங்களை எடுத்து பத்ம பீடத்தில் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

32. அந்தந்த கும்பங்களின் ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து நைவேத்யம் உத்ஸவங்களை நடத்த வேண்டும்.

33. இந்த மாதிரியாக பரமேஸ்வரனை பிரதிஷ்டை செய்து தினம்தோறும் நன்கு பூஜிக்க வேண்டும். முன் போலவே அர்ச்சனம் செய்து சரப சம்பந்தமான மந்திரங்களினால் அர்ச்சிக்க வேண்டும்.

34. ஸ்நபனம் உத்ஸவம் முதலிய கார்யங்கள் முறைப்படி செய்ய வேண்டும். தேசிகளும் அவருடைய மந்திரங்களினால் சத்ரு வர்க்கங்களை நாசம் செய்ய வேண்டும்.

35. எந்த வியாதி உண்டானாலும், இந்த மந்திரத்தினால் வியாதிகளை நாசம் செய்யவும், வச்யம், ஆகர்ஷணம், வித்வேஷணம் முதலியவைகளை இந்த முறையிலேயே நடத்த வேண்டும்.

36. இங்கு கூறப்படாததை சாதாரணமாக ஸ்தாபனத்தில் கூறப்பட்டபடி கிரஹித்துக் கொள்ள வேண்டும். எந்த மனுஷ்யன் சரபேஸ்வரனிடத்தில் இந்த முறைப்படி செய்கிறானோ

37. பக்தியினாலும் பாவனையோடு கூடியும் உள்ள அவனுக்கு பிராம்ணர்கள் இந்த மாதிரி செய்ய வேண்டும். புண்ய கூட்டங்களுடைய இந்த அளவு போகங்களையும் இந்த ஜன்மத்தில் அனுபவித்து

38. விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெற்று மேலுலகில் மேலான ஈஸ்வர பதத்தையும் அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சரபேச்வர பிரதிஷ்டையை கூறும் ஐம்பத்து நான்காவது படலமாகும்.

படலம் 51 : பலிபர்த்ரு பிரதிஷ்டை...

படலம் 51 : பலிபர்த்ரு பிரதிஷ்டை...
 

51 வது படலத்தில் பலிபர்த்ரு பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது. அதன் லக்ஷணம் நித்யோத்ஸவபடலத்தில் கூறப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ள நல்ல காலத்தில் அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான செய்யவேண்டிய கிரியைகளை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேதிகை குண்டத்துடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிரதான குண்டம் விருத்தம் என கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்திசெய்து பிராம்மணபோஜனம், புண்யாஹப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்கள் செய்யவும் என கர்மாக்களின் வரிசை கூறப்படுகிறது, பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிரதிமையை எடுத்து மண் முதலியவைகளால் பிம்ப சுத்தி செய்து சந்தனாதிகளால் பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்யவும். பிறகு மண்டபத்தில் வேதிகைகள் ஸ்தண்டில பூர்வமாக சயனம் அமைத்து அங்கு பிம்பத்தை சிவப்பு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சயனாதிவாசம் செய்யவும் என அந்த அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவ கும்பத்தை பிம்பத்தின் சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும். அதை சுற்றிலும் வஸ்திரங்களோடு கூடின எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டு சிவ கும்பத்தில் பாசு பதாஸ்திரத்தை பூஜிக்கவும் என கூறி பாசுபதாஸ்திர மந்திரம் கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பங்களைச் சுற்றிலும் உள்ள எட்டு கும்பங்களில் வஜ்ரம் முதலான ஆயுதங்களை முறைப்படி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாச பூஜையும் கூறப்படுகிறது. பிறகு குண்ட அக்னி சமஸ்காரம் செய்து சிவாக்னியை பூஜிக்கவும் என ஹோமம் செய்யும் முறையும் திரவ்ய நிரூபணமும் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் யஜமானன் ஆசார்யன் முதலானவர்களை பூஜித்து தட்சிணை கொடுக்கவும். தட்சிணை பெற்றுக் கொண்ட ஆசார்யன் ஸ்வாமி, கும்பஅக்னியை முறைப்படி பூஜித்து பிம்பத்திற்கு முன்பாதி கும்பங்களை ஸ்தாபித்து மந்திரந் நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸ முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை ஸ்நபனம் உத்ஸவம் அதிகமான நைவேத்யம் செய்ய வேண்டுமா இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்யபிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள படிசெய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டை முறை சுருக்கமாக கூறப்பட்டு முடிவில் யார் இவ்வாறு அஸ்த்ர பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இந்தலோகத்தில் சுகத்தையும் மேல்உலகத்தில் மோட்சத்தையும் அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 53வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!

1. பலிபோடுவதற்கு எடுத்துச்செல்லும் மூர்த்தமான பலி பர்த்ருவின் பிரதிஷ்டையை கூறுகிறேன். சந்திரசேகரப்ரதிஷ்டையில் கூறியுள்ளபடி சூத்ரமிடும் முறை நித்யோத்ஸவத்தில் கூறப்பட்டுள்ளது.

2. பிராயச்சித்தங்களிலோ ஸகவிதமான கார்ய ஸித்திக்காகவோ நித்யோத்ஸவத்திலும், விசேஷமான அதன் மந்திரங்களையும்

3. ஹே மூனீஸ்வரர்களே, சுருக்கமாக பிரதிஷ்டையை கூறுகிறேன். காலத்திலே அங்குரார்பணம், ரத்னநியாஸம், கண் திறப்பது முதலியன செய்து

4. வாஸ்து சாந்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முன்னால் சொல்லப்பட்டிருப்பதால் அவை அனைத்தும் செய்ய வேண்டும்.

5. மண்டபம் நிர்மாணம் செய்து அதில் ஒன்று, ஐந்து, ஒன்பது குண்டங்களும், குண்டங்கள் வட்டவடிவம், சதுரம், எண்கோணமோ செய்ய வேண்டும்.

6. அந்த மூன்று பக்ஷங்களிலும் பிரதான குண்டம் வட்டவடிவமே. பிறகு சில்பிகளை போகச் சொல்லிவிட்டு, பிராம்ணர்களை போஜனம் செய்விக்க வேண்டும்.

7. புண்யாகவாசனம் செய்து பிரோக்ஷித்து வாஸ்த்து ஹோமத்தை செய்ய வேண்டும். ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து ஐந்து மண்ணினால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

8. சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். வேதிகையில் ஸ்தண்டிலத்தோடு கூடிய சயனத்தை செய்ய வேண்டும்.

9. சிவப்பு நிறமான வஸ்திரங்களோடு, கூடின தேவனை சயனத்தில் படுக்க வேண்டும் முன் போல் சுற்றிலும் சிவ கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

10. தலை பாகத்தில் சிறந்த வஸ்திரத்தை உடையவரும், எல்லா கும்பங்களும், வஸ்திரங்களோடு கூடியதாகவும் அமைத்து சிவ கும்பத்தில் பாசுபதாஸ்திரத்தை பூஜிக்க வேண்டும்.

11. அந்த லக்ஷணத்துடன் கூடிய ரூபத்தை தியானித்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, நான்காவது வேற்றுமையோடு ஹூம்பட் என்ற பெயர்களோடு கூடின மந்திரத்தினால்

12. ஓம் சிலீம், பம், சும், பண்ண ம என்றும் மந்திரத்தினால் பூர்த்தியான தேவனை பாசுபதாஸ்திரம் என கூறப்படுகிறது.

13. அகாரம் முதல் அவுகாரம் முடிய எழுத்துக்கள், ஸத்யோஜாதாதி மந்திரங்கள் முதல் பட் முடிய மந்திரங்கள் ஹ்ருதயாதி மந்திரங்கள்

14. மந்திரத்தினால், முறைப்படி ஓம்காராதி ஹ்ருதய மந்திரங்கள் வேறுபடுகின்றன. ஹ்ருதயாதிகளோடு கூடிய ஹூம்பட் கடையாகவும் நம என்ற பதத்தை கடைசியாகவும்

15. ஹ்ருதய மந்திரத்தினால் வித்யாதேகத்தினாலும் ஹும்காரத்தை கல்பிப்பதனால் ஹ்ருதய மந்திரத்தை சேர்ப்பதினாலும்

16. வஜ்ரம் முதலிய எட்டு ஆயுதங்களையும் குருவானவர் சுற்றிலும் பூஜிக்க வேண்டும். தத்வதத்வேஸ்வரர்களையும் நியாஸம் செய்து முன்போல் மூர்த்திகளையும் நியாஸம் செய்ய வேண்டும்.

17. புத்திமானானவன் மூர்த்தீஸ்வரர்களையும் நியசித்து வஜ்ராதிகளையும் நியாசம் செய்ய வேண்டும். குண்டங்களில் ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

18. சமித்து, நெய், அன்னம், ஓஷதிவர்க்கங்களும் எள், பொறி இவைகளோடு கூடியதாக முன்பு சொல்லப்பட்ட மூலமந்திரம் ப்ருமாங்க மந்திரங்களினால் முன்பு கூறப்பட்ட எண்ணிக்கை

19. மூர்த்தி மூர்த்தீஸ்வரரால் ப்ரும்மாங்க மந்திரங்களோடு கூட ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, ஆல், இந்திராதி திக்குகளிலும்

20. வன்னி, கருங்காலி, வில்வம், பிப்பல, சமித்துக்கள், அக்னியாதி திக்குகளிலும் பிரதான குண்டத்தில் இரண்டாவதாக, புரசு சமித்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

21. பிறகு தேசிகர்களை பூஜித்து தட்சிணைகள் கொடுக்க வேண்டும். பிம்பத்தினுடைய முன்னிலையில் குடங்களை வைத்து அந்த கும்பங்களிலிருந்து மந்திரத்தை ஹ்ருதயத்தில்

22. நியசிக்க வேண்டும், பத்ம பீடத்தில் பரிவார மந்திரங்களை நியசிக்க வேண்டும், ஸ்நபனம், உத்ஸவம், விசேஷ நைவேத்யங்கள் செய்ய வேண்டும் செய்யாமலும் கூட பூஜித்து வரலாம்.

23. இங்கு கூறப்படாததை சாதாரணமாக பிரதிஷ்டையை போல் செய்ய வேண்டும். இது மாதிரியாக அஸ்த்ரப்பிரதிஷ்டையை எவன் செய்கிறானோ

24. அவன் இந்த லோகத்தில் சுகத்தை அடைவான். பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவான்.

இவ்வாறாக உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பலிபர்துரு பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

54. ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

54. ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

ஐம்பத்தி நான்காவது ஆச்சார்யர் [கி.பி. 1498 - 1507]

ஸ்ரீ வியாசாசல மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சியில் ஸ்ரீ காமேஸ்வரர் - ஸ்ரீ கமலாம்பா தம்பதிகளுக்குத் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "குப்பண்ணா". இவரும் தம் குருநாதரைப் போலவே தம் காலத்தை ‘'வியாசாசலம்'' என்ற மலைக் குகையில் தவம் புரிவதிலே காலத்தை செல விட்டார். அதனால் '‘வ்யாசாசல மஹாதேவர்'' என்றே அழைக்கப்பட்டார்.

சங்கர விஜயத்தைப் பற்றி இவர் வழங்கிய நூல் ''வ்யாசாசலீயம்’' எனப்படுகிறது.

இவர் காலத்தில் விஜய நகர அரசனாக இருந்தவர் "வீர நரசிம்மன்". கிருஷ்ண தேவராயரின் தமையனான இவர், ஸ்ரீ மடத்துக்கு நிவந்தங்கள் [மானியங்கள்] அளிக்கும் செப்பேட்டில் ஸ்ரீ சதா சிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும், அவரது பிரதான "ஸ்ரீ மஹா தேவேந்திரரும்" சிஷ்யரான
மெய்யெல்லாம் திருவெண்ணீறு பூசியவர்கள்.

பனியாலும், வெயிலாலும் பாதிப்புறாதவர்கள்; சாஸ்திரங்களை முற்றுமுணர்ந்த தபஸ்விகள்.

அஷ்டமாசித்திகளும் கைவரப் பெற்றவர்கள். நிறையருள் பெற்றவர்கள்; முற்றறிவாளர்கள்.

"சிவமாகவே திகழ்ந்தவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 1507-ம் ஆண்டு எழிச்சூர், வெண்பாக்கம், குடியாந்தண்டலம் முதலான கிராமங்களை நிவந்தமாக [மானியமாக] அளித்துள்ளார்.

இந்த கிராமங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன. படப்பையில் இருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் உள்ளது இவரின் பிருந்தாவனம்.

இந்தச் செப்புப்பட்டயம் மூன்று ஏடுகளைக் கொண்டது.

இவர் 1507 ஆம் ஆண்டு, அக்ஷய வருடம், ஆடி மாதம், தேய் பிறை பிரதமை திதியில் சித்தி அடைந்தார்.

இவர் 9 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.



வியாழன், 10 அக்டோபர், 2024

படலம் 50 : பிக்ஷாடன பிரதிஷ்டை...

படலம் 50 : பிக்ஷாடன பிரதிஷ்டை...
 

50 வது படலத்தில் பிக்ஷõடனர் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. இங்கு பிக்ஷõடனருக்கும் கங்காளமூர்த்திக்கும் அமைப்பு முறை விளக்கத்துடன் அந்த இருவர்களின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. கங்காளமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. பாதத்தில் பாதுகையுடன் கூடியதாகவும், நான்கு கையும், பூணூலும் கிளம்புவதற்கு தயாராகவும் இருப்பதாக தேவனை அமைக்க வேண்டும். வலது காலை சிறிது வளைந்ததாகவும் இடது கால் நேராக இருப்பதாகவும் அமைக்கவேண்டும், பக்கவாட்டில் உள்ள கைகளில் வலக்கையில் குச்சியையும் இடக்கையில் உடுக்கையையும் அமைக்க வேண்டும். மற்ற இரு கைகளில் இடது கையில் தோகையுடன் கூடியதும் எலும்பு கூட்டையும் உடைய காலதண்டத்தை அமைக்க வேண்டும். வலது கையில் மானின் நாக்கை தொட்டு கொண்டது போல் அமைக்க வேண்டும். பக்கத்தில் பெண்களையும் பூதங்களையும் அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பெண்களுக்கும் பூதங்களுக்கும் உருவ அமைப்பு முறை பலவிதமாக கூறப்படுகிறது. இப்பேர் பட்ட லக்ஷணம் உடையவரே கங்காள தேவர் ஆவர். கங்காளம் தண்டம் இவைகள் இல்லாத வரும் ஆடையில்லா ஸ்வரூபமாகவும் இருப்பவர் பிக்ஷõடனதேவர் ஆவர்என்று பிக்ஷõடன மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. மூர்த்திகளின் பிரதிஷ்டா முறை விளக்கப்படுகிறது. இங்கு கூறியமுறைபடி நல்லகாலத்தில் அங்குரார் பணம் செய்யவும். பிறகு தேவன் பூதம் பெண்கள் இவர்களுக்கு ரத்னநியாஸம் முறைப்படி செய்யவும். பெண் முதலானவர்களுக்கு செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று ரத்னநியாஸ முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிணம் ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் செய்யவேண்டும் என்று கிரியைகளை குறிப்பிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு முன்புபோல் யாகமண்டபம் அமைத்து குண்டம் வேதிகை தயார் செய்து சில்பியை திருப்தி செய்து பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

பிறகு ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி பிம்பங்களை அனுசரித்து தனித்தனியாக சயனம் அமைக்கவும். ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கு ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்வித்து மத்தியில் ஈஸ்வரன் அதற்கு தெற்குபக்க வடக்குபக்கத்தில் பூதங்கள் ஆகியவற்றை முறைப்படி வஸ்திர அலங்கரிக்கப்பட்டதாக சயன அதிவாசம் செய்யவும் கங்காள தண்டம் தனியாக இருந்தால் அதை ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் அதிவாசம் செய்யவும் என்று சயனஅதிவாச முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. இங்கு சயனவிஷயத்தில் குறிப்பிட்டுள்ள பிம்பங்களுக்கு கும்பஸ்தாபன முறை கும்பத்தை பூஜிக்கும் விஷயத்தில் மந்திர விசேஷம் அவ்வாறே தத்வ தத்வேஸ்வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸவிஷயத்தின் விசேஷங்கள் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாசவிஷயத்தின் விசேஷ குறிப்பிற்கு பிறகு ஹோமம் செய்யவும் என்ற திரவ்யங்களில் நிரூபனமுறைப்படி ஹோமவிதி சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது நாள் தட்சிணையை பெற்று ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி பூஜைகளை நன்கு செய்து பிம்பத்திற்கு முன்னதாக கும்பங்களை வைத்து மந்திரநியாஸம் செய்யும் முறை அவ்வாறே அந்த கும்பங்களால் அபிஷேகம் செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு ஆச்சாரிய பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனமும், பெரியஉத்ஸவமும், அதிகமான நைவேத்தியமும் செய்யவேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்யஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு எந்த மனிதன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைவான் என்று கூறப்படுகிறது! முடிவில் இவர்களின் பிரதிஷ்டை எல்லாஇடத்திலும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாக இல்லையா என்று விவரிக்கப்படுகிறது. இவ்வாறு 52வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!

1. ஹே, உயர்ந்த அந்தணர்களோ, பிக்ஷõடனர், கங்காளர் இவர்களுடைய உருவ அமைப்புகளும் பிரதிஷ்டையையும் நான் கூறுகிறேன், கேளுங்கள்.

2. காலில் காலணியுடனும் நான்கு கைகளுடனும் பூணூலுடனும் அமைதியான வடிவமும் நடந்து செல்லத் தயாரான நிலையில் இருக்கக்கூடிய நிலையிலும்

3. ஜடாமகுடத்தால் பிரகாசிக்கக்கூடியவரும் கத்தியை கட்டியவராகவும், அழகானவராகவும் வெண்பட்டோடு கூடியவராகவும் ஆபரணங்களோடு கூடியவராகவும் செய்ய வேண்டும்.

4. இடது காதில் சங்கினால் ஆன காதணியையும், வலது காதில் மகர குண்டலத்தையும், வலது காலை வளைத்த நிலையில் உடையவராகவும், இடது காலை நன்கு பூமியில் வைக்கப்பட்டவராயும்

5. ஸமபங்கம் என்ற அமைப்புடனும், தன்னுடைய பிரகாசமான சரீரத்தோடு, வலது கையில் தண்டத்தையும் இடது கையில் உடுக்கையையும்

6. வலது கை நடுவிரலுடைய நுனியானது மானுடைய நாக்கு நுனியை தொட்டவாறும், முன் இடது கைகளில் மயில்தோகை குச்சியையும், காலதண்டத்தையும்

7. இரண்டு தண்டங்களுடைய மூலப்ரதேசமானது தோள் பட்டைக்கு மேல் உயர்ந்ததாகவும், பலவிதமான தேவாஸுர கூட்டங்களோடு கூடியவராகவும்

8. தன்னுடைய இடதுபாகத்தில் தலையில் சுமந்த பலிபாத்ரத்தோடு கூடிய பூதத்துடனும் பல ரூபங்களை தரித்த பலவிதமான பூதங்களோடு கூடியதும்

9. பேரீ, தவில் முதலியவைகளின் ஆரவாரத்தோடு பாட்டு, நாட்டியம் முதலியவைகளைச் செய்யவராகவும் தன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே மோஹித்தவர்களும் வசீகரிக்கப்பட்டவர்களுமான குற்றமற்ற சவுந்தர்யமுள்ள அழகிய பெண்களோடு கூடியவராகவும்

10. நழுவிய வஸ்திரம், அணிகலன்களோடு கூடியவர்களாயும், பிøக்ஷயிடுவதற்கு எதிர் நோக்கியிருப்பவர்களும் சிலர் ஆசீர்வாதத்திற்காக எதிர்நோக்கியிருப்பவராகளாயும், சிலர் ஆலிங்கனம் செய்ய எதிர் நோக்கியிருப்பவர்களாயும் இருக்கும்படி (ஸ்திரீ) பெண்களை அமைக்க வேண்டும்.

11. சிரஸ் சூத்திரமானது நெற்றியின் மத்தியிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி இருக்க வேண்டும். கால் கட்டை விரலுடைய அடியிலிருந்து இடது மூக்கு முனியோவெனில்

12. வலது பாகத்தில் எட்டு யவ பிரமாணம் தள்ளியும் இதயத்திலிருந்து வலது பாகத்தில் மூன்று யவப்பிரமாணம் தள்ளியும், தொப்பூழ், ஆண்குறி இவைகள் இடதுபாகத்தில் ஏழு அங்குலமாக இருக்க வேண்டும்.

13. இரு கால்களுடைய கட்டை விரல்களின் மத்யமானது ஆறு மாத்ர அளவுள்ளதாக கொள்ள வேண்டும். இரு குதிகால் பாகங்களுடைய அளவு ஏழங்குலமாகும். முழங்கால்களுடைய அளவிலிருந்து முகத்தினுடைய அளவின் இடைவெளி

14. அங்குலம் என்று அறியவும். குச்சியையுடைய கையில் வளைவான கடகம் தொப்பூழ் பிரதேசம் வரையிலும் உடையதாகவும்

15. நாபியிலிருந்து மணிக்கட்டினுடைய முடிவானது முன் சொல்லப்பட்ட பாகமாக கூறப்படுகிறது. வலது மேல் கைக்கும் கீழ்கைக்கும் மத்ய பாகமானது ஐந்து மாத்ர அளவுள்ளதாகவும்

16. மான் முகத்தை தொடக்கூடிய கையானது தொடையின் நடுபாக அளவாகவும், தொடை மத்தியிலிருந்து அந்த மான் முகத்தை தொடக்கூடிய கை வரையிலும் 21 மாத்திரை அளவாகவும்

17. அந்த மானை தொடக்கூடிய கடக முத்ரையோடு கூடிய கீழ்நோக்கிய கையானது நுனிபாகத்துடன் கூடியதாகவும், இடது மேல் கைக்கும் கீழ்கைக்கும் உள்ள அளவானது 7 மாத்ரை அளவுள்ளதாகும்.

18. கங்காள மூர்த்தியினுடைய தோகையை தரித்திருக்கக்கூடிய கையினுடைய கக்ஷபாகம் சமமான உயரமுள்ளதாக இருக்க வேண்டும். கையின் முடிவிலிருந்து மணிக்கட்டின் முடிவு வரையில் 16 அங்குலமாகவும்

19. கையிலிருக்கக்கூடிய அந்த தோகை தண்டமானது 12 அங்குல மாத்ரமோ (அளவு) அந்த தோகையும் அதே அளவாகவும் கீழிருந்து சுவாமியினுடைய மூக்கின் நுனி வரையிலும் இருக்க வேண்டும்.

20. கங்காள மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய தண்டமானது சுவாமியினுடைய கீழ்கழுத்து வரையிலும் அந்த தண்டத்தினுடைய நுனியில் பூதபிரேத முகத்தையும் செய்ய வேண்டும்.

21. பெண்கள், சுவாமியினுடைய மார்பு, முகம், ஸ்தனம், நாபி இவைகள் வரையிலும் உயரமானவர்களாகவும் பூதரூபங்கள் மூன்றுமுக முள்ளவைகளாகவோ இஷ்டப்படியோ செய்யலாம்.

22. இவர் இவ்வாறாகவும், மற்றொருவரான பிக்ஷõடனர் வஸ்த்ரமில்லாமலும் பூதப்ரேதாதிகள் இல்லாமலும் (பெண்களுடன்கூட) இருபக்கங்களிலும் விரித்த ஜடையும், சுருண்ட முடிகளோடு அலங்கரிக்கப்பட்டவராகவும்

23. இடுப்பு பிரதேசத்தில் பாம்பு சூத்ரமாக சுற்றப்பட்டும் வரதஹஸ்தமும் கபாலமானது இடதுகையில் கல்பிக்க வேண்டும்.

24. இடது பாகத்தில் மற்றொரு கையில் உடுக்கையும் ஏந்தி, வலது பாகத்தில் இன்னொரு கையில் மயில் தோகையை தரித்தவராகவும்

25. பாம்பானது பக்கத்தில் இருக்குமாறும் மான் முகமானது முன்பக்கத்தில் இடது பாகம் திரும்பியும் அல்லது இடது பாகத்தில் மூலையாக பார்த்தவாறும் செய்ய வேண்டும்.

26. கபாலமேந்திய கையினுடைய பின்பக்கமானது தொப்பூழ் வரையிலும் இருக்க வேண்டும். தொப்பூழிலிருந்து அந்த மணிக்கட்டின் முடிவு வரையிலும் 16 அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

27. உடுக்கையினுடைய மேல்பாகமானது காதினுடைய கடைசி வரையிலும் அந்த கையின் மணிக்கட்டிலிருந்து காது முடிவு வரை 16 மாத்ரை களாகவும், மீதமுள்ளவைகள் கங்காளமூர்த்தியை போலும் இருக்க வேண்டும் (அளவு முறை)

28. ஹரனான பிக்ஷõடனர் தனியாகவும், விஷ்ணுவோடு கூடியதாகவும் அமைக்கலாம். ஹே முனிபுங்கவர்களே, சுருக்கமாக ஸ்தாபன முறையை சொல்லுகிறேன்.

29. அந்த பிரதிஷ்டாகாலமானது முன்னமே கூறப்பட்டுள்ளது. அதைப்போலவே அங்குரார்பணம் ரத்னந்யாஸம் முதலியவைகளை சுவாமிக்கும் பூதங்களுக்கும் முறைப்படி செய்து

30. குருவானவர் பெண்களுக்கு தனிப்பீடமாகவோ அல்லது ஒரே பீடத்திலோ மான் முதலானவைகளை விட்டுவிட்டு ரத்னந்யாஸம் செய்ய வேண்டும்.

31. நயனோன்மீலனம் செய்து பிம்ப சுத்தி ஜலாதிவாஸம், கிராமபிரதட்சிணம் முதலியவைகளை முறைப்படி செய்து

32. யாக மண்டபத்தை அடைந்து திக்குகளில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் எண்கோணம், வட்டவடிவம் முதலிய குண்டங்கள் யாக சாகலையில் முன்பு கூறியதுபோல் அமைக்க வேண்டும்.

33. பிறகு சில்பியை மரியாதை செய்து அனுப்பிவிட்டு ஸ்பர்சதோஷத்திற்காக வித்வான்களுக்கு உணவளித்து புண்யாஹம், வாஸ்துஹோமம், சயனம் முதலியவைகளுக்கு தனியாக ஸ்தண்டிலம் அமைத்து

34. பிறகு ஸ்நபனாபிஷேகம், காப்புகட்டு, பிம்ப சுத்தி, முதலியவைகளை தனியாகச் செய்து மத்தியில் மூலபேரத்தையும் அதற்கு வலது பாகத்தில் இடது பாகத்தில் முறையாக பெண்களையும் பூதங்களையும்

35. தனித்தனியாக வஸ்திரம் அணிகலன்களால் அலங்கரித்து எல்லாவற்றையும் முறைப்படி சயனம் செய்வித்து அந்த கங்காள தண்டமானது தனியாக இருப்பின் தலைபாகத்தில் தனியாக சயனம் (படுக்கை) செய்வித்து

36. கிழக்கு ஈசான திக்கு இவைகளுக்கிடையில் (விஷ்ணு, பிக்ஷõடணர் இவர்களுக்கு மத்தியில்) வர்த்தீனியோடு கூட கும்பங்களை வைத்து, மற்ற கும்பங்களை அந்த மூர்த்திக்கு தலைபாகத்தில் வர்த்தீனியுடன் கூடியதாக

37. வைத்து அந்தந்த தேவதைகளுடைய மந்திரங்களோடு கூட சந்தன புஷ்பங்களோடு உபசாரங்களை செய்து அந்த பூதகணங்களுடைய கும்பங்களில் வீரேசாய நம: என்று ஆசார்யரானவர் பூஜைசெய்து

38. அந்த பூதகணங்களுடைய கும்பவர்த்தனியில் நந்தனாயை நம: (நந்தநாயே நம:) என்று மனதால் பூஜை செய்து பிரதான கும்பத்தில் கங்காளரை பூஜை செய்து தத்வ நியாஸத்தை செய்ய வேண்டும்.

39. சுவாமிக்கு தத்வங்கள் முன்போல் செய்து வீரேசகும்பங்களுக்கு மறுபடியும் சொல்லப்படுகிறது. மூர்த்திகள் முன்போலவும் மூர்த்தீச்வரர்கள் பிரமுகன், துர்முகன் என்றும்

40. பிரமோதன், ஆமோதன், விக்னராட் என்றும் கங்காள மூர்த்திக்கு விஷ்ணுவுக்கு போன்றும் செய்து பிறகு ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும்.

41. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து, சமித்து, அன்னம், நெய், நெல், பொறி, எள், மருந்து வகைகளோடும் (மூலிகை) அக்ஷதைகளோடு கூட ஹோமத்தை செய்ய வேண்டும்.

42. பலா, கருங்காலி, அரசு, அத்தி முதலியவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி முதலியவைகளை தென்கிழக்கு முதலான கோணங்களிலும்

43. (அல்லது) பிரதானத்திலும் எல்லா குண்டங்களிலும் புரச சமித்தையும் ஆசார்யனானவன் தேவர்களை ஆவாஹனம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

44. பிறகு இரண்டாவது நாளில் பிம்பம், கும்பம், அக்னி, முதலியவைகளில் ஈசனை பூஜித்து வஸ்த்ரம், தங்கம், தட்சிணை இவைகளை அடைந்தவர்களான ரித்விக்குகளுடன் கூடிய ஆசார்யன்

45. மந்திர நியாஸம் செய்து பிம்பத்திற்காக முன்பாக கும்பங்களை வைத்து, கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சுவாமியினுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து

46. வர்த்தனீயிலிருந்து பீஜத்தை எடுத்து சுவாமியினுடைய தாமரை பீடத்தில் நியாஸம் செய்து, மற்ற கும்பங்களிலிருந்து பீஜங்களை எடுத்து அவரவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

47. ஆசார்யரானவர் அந்தந்த கும்ப ஜலங்களினால் அபிஷேகம் செய்து, ஸ்நபநம், உத்ஸவம் முதலியவைகளையும் செய்து பிரதிஷ்டையின் முடிவில் நிறைய நிவேதனமும் செய்ய வேண்டும்.

48. இதில் சொல்லப்படாததை பொதுவான ஸ்தாபனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த புத்திமானானவன் இவ்வாறு செய்கிறானோ அவன் புண்யகதியை அடைகிறான்.

49. நடு சூத்திரத்திலிருந்து சூத்ரங்களுக்கு இரண்டு அங்குலம் இரண்டங்குலமாக எல்லா அங்கங்களையுடையவும் அமைப்பாகும்.

50. கைகளுடைய எண்ணிக்கை கூடவும், ஆடை, ஆபரணம் முதலியவை, முத்ரைகளும் வெண்மை முதலிய வர்ணங்களுடன் இருக்க வேண்டிய நிலையில் ஸ்பஷ்டமாக காண்பிக்க வேண்டும்.

51. ஆசார்யன் சில்பி, கர்த்தா, இவர்கள் எதை விரும்பி செய்கிறார்களோ அதை செய்ய வேண்டும். பிராம்மணர்களே எல்லா தேவதைகளுக்கும் மேலே கூறப்பட்டது பொதுவான முறையாகும்.

52. இந்த பிரதிஷ்டையானது (ஆத்ய) பாலஸ்தாபனம், செய்தோ, செய்யாமலோ எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். பிக்ஷõடனர், கங்காளர், பிரதிஷ்டா விதிமுறை இம்மாதிரி கூறப்பட்டது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பிக்ஷõடன பிரதிஷ்டா முறையைக் கூறும் ஐம்பத்திரண்டாவது படலமாகும்.

படலம் 49 : தட்சிணாமூர்த்தி ஸ்தாபனம்...

படலம் 49 : தட்சிணாமூர்த்தி ஸ்தாபனம்...

49 வது படலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் வியாக்யாணம், கேயம், யோகம் இவைகளில் இருக்கும் மூன்று விதமான தட்சிணாமூர்த்தியின் ஸ்தாபனம் கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பின்பு ஞானமுத்திரையுடன் கூடியவர் வியாக்யான மூர்த்தி, வீணையுடன் கூடியவர் கேயமூர்த்தி, வியாக்யானம் வீணை இவை இரண்டும் இல்லாமல் இருப்பவர் யோகமூர்த்தி என்று மூன்று மூர்த்திகளின் சாமான்யமான லக்ஷணத்தை கூறி இந்த மூன்று மூர்த்திகளுக்கும் சூத்ரபாதம் என்ற முறைப்படி விசேஷலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு வியாக்யானத்துடன் கூடியவர் அறிவை கொடுப்பவர் என்றும் கேயமூர்த்தியும் யோகமூர்த்தியும் மோக்ஷத்தை கொடுக்ககூடியவராகவும் கூறப்படுகிறது. மேலும் வியாக்யானமூர்த்தி விஷயத்தில் கவுசிக, காச்யப, பாரத்வாஜ, அத்திரி, கவுதமர் என்ற முனிவர்களின் அமைப்பு முறை கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு போல் திதி வாரம் இவைகளை உடைய நல்லகாலத்தை அறிந்து அங்குரார்பணம் செய்து வேதிகை குண்டத்துடன் கூடியதான மண்டபம் அமைக்கவும். பிறகு ரத்ன நியாஸ நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிண ஜலாதிவாசம் வரையிலான காரியங்கள் செய்யவேண்டும் என்று கிரியைகளின் மேலான பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. பிறகு யாகத்திற்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் புண்யாக பிரோக்ஷண, பிராமண போஜனம் மறுபடியும் புண்யாஹ பிரோக்ஷணம் வாஸ்து சாந்தி பூமி பரிகிரஹம் முதலிய கர்மாக்களை செய்யவும். பிறகு மண்டபம் ஸ்தண்டிலம் அமைத்து தட்சிணாமூர்த்திக்கும் முனிவர்களுக்கும் தனித்தனியாக சயனம் அமைக்கவும்.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்துவந்த பிம்பங்களுக்கு ஸ்நான வேதியில் ஸ்நபனம் செய்யவும். அந்தபிரதிமைகளை சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக சயனாதிவாசம் செய்யவும் என்ற சயனாதிவாஸ முறை கூறப்பட்டது. இவ்வாறு வியாக்யான கேய யோக நிஷ்டர்களான மூன்று மூர்த்திகளின் விஷயத்தில் பிரதிஷ்டை கூறப்படுகிறது. பிறகு அந்த அந்தந்த மூர்த்திகளுக்கு அந்த மூர்த்தியின் சிரோதேசத்தில் அவர்களின் கும்பங்களை அலங்கரிக்க பட்டதாக சிவ கும்பத்தின் வடக்கு பாகத்தில் வர்த்தனியை ஸ்தாபிக்கவும் பிரதிமா லக்ஷணத்தில் கூறப்பட்டபடி ரூபத்தியானத்துடன் முறைப்படி பூஜிக்கவும். தத்வ தத்வேச்வர மூர்த்தீஸ்வர நியாஸம் முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் தத்வ தத்வேஸ்வர மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவேண்டுமென்று அறிவிக்கப்படுகிறது. பிறகு குண்டஸம்ஸ்கார அக்னிஸம்ஸ்காரம் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணமுறைப்படி ஹோமம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை போக்கி சுத்தமான காலை பொழுதில் ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி நித்ய அனுஷ்டானம் முடித்து பிம்பங்களை எடுத்து பூஜித்து கும்ப அக்னி இவைகளையும் பூஜிக்கவும், பிறகு எஜமானன் தேசிகர்களுக்கு தனித்தனியாக தட்சிணை கொடுக்கவும். ஆசார்யன் பிம்பத்திற்கு முன் ஸ்தண்டிலத்தில் கும்பத்தை வைத்து மந்திர நியாஸம் செய்யவும் என்று கூறி மந்திரநியாஸம் முறை கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் பீஜமந்திரங்களை அவர்கள் ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் இவ்வாறே முனிவர்களின் கும்பதீர்த்தங்களால் முனிவர்களுக்கும் அபிஷேகம் செய்விக்க வேண்டும். வியாக்யான தட்சிணாமூர்த்தி கையில் உள்ள காமிகம் முதலான ஆகமங்களை உபாகமத்துடன் கூடியதாக ஸ்தாபிக்கவும். பிறகு தேவேசனை ஸ்தாபிக்கவும் வலது இடது பாகங்களில் முனிவர்களை ஸ்தாபித்து, ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்தியம் செய்யவும். முடிவில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டையை செய்பவன் எல்லாம் அனுபவித்து முடிவில் பரமேஸ்வரனை அடைகிறான் என்பதில் சந்தேகம் இல்லை இவ்வாறு 51 வது படல கருத்தாகும்!!

1. ஹே, விப்ரச்ரேஷ்டர்களே, தட்சிணாமூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை கேளுங்கள். வ்யாக்யான லக்ஷணம், கேயலக்ஷணம், யோகலக்ஷணம் என நிஷ்டையில் மூன்று விதங்களாம்

2. அந்த தட்சிணாமூர்த்தியானவர் வ்யாக்யான லக்ஷணத்தில் ஞான முத்ரையோடும் (சின்முத்ரை) கேய லக்ஷணத்தில் வீணையோடும், இரண்டிலிருந்தும் வேறுபட்ட யோகத்தில் பலவிதமான திருஉருவ பேதங்களாகும்.

3. நான்கு கைகள், மூன்று கண்கள், வெண்மையாகிற காந்தியோடு கூடிய இளம் சந்திரனோடும், வெளுப்பு, பவள நிறமாகவும், பொன்னிறமாகவும், கருப்பு திருமேனியோடு கூடியவராகவும்

4. புலித்தோல் ஆடையை தரித்தவராகவோ, அல்லது பீதாம்பரங்களை தரித்தவராகவோ மேல் (அங்க) வஸ்திரத்துடன் கூடியவராகவும் வெண்மையான பூணூலை அணிந்தவரும்

5. விரித்த ஜடையோடு கூடியவராகவோ, ஜடாமகுடத்தோடு கூடியவராகவோ (தலையில்) பட்டையான பட்டுத்துணியால் கட்டப்பட்டவராகவோ, தலையில் மண்டை ஓட்டை தரித்தவராகவும்

6. ஊமத்தம்பூ, கொன்றை புஷ்பம், பாம்பு படங்களுடன் கூடியவரும் சந்திரனோடு கூடியவராயும் ஐந்தாவது தொழிலான (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனுக்ரஹமுத்ரையுடன் (தலையில் கங்கை மற்றும் மணிச்சரங்களோடு கூடியவராயும்)

7. ஆலமரத்தினுடைய அடியில் பாறாங்கல்லில் மீது அமர்ந்தவராகவும், புலித்தோலின் மீது அமர்ந்தவராகவும் அல்லது மரத்தினடியில் நின்ற கோலத்துடனோ, வீராஸனமுடையவராகவோ

8. வலது காலை தொங்கவிட்டு அதனுடைய முழங்காலின் மீது வளைந்த இடது கால்விரல்களை வைக்கப்பட்டவராய் வலது கையில் முத்ரையோடு கூடியவராய் செய்ய வேண்டும்.

9. நன்கு காண்பிக்கப்பட்ட ஸமிக்ஞைகளோடு இடது கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தோடு கூடியவராயும் முப்பத்திரண்டு அங்குல நீளமான (சாய்ந்த) புஸ்தகத்தை கையில் உள்ளவராயும்

10. அல்லது இடதுகையில் ஸர்ப்பம் (பாம்பு) உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முழங்காலில் வைக்கப்பட்டுள்ள மணிக்கட்டுடன் கூடியதாக வரதஹஸ்தத்தை அறியவும்.

11. முழங்காலில் சேர்ந்த முழங்கையை உடையதாக தொங்குகிற கையை அமைக்கவும். விரிந்த (மலர்ந்த) தாமரையின் காந்தியைப் போன்று உள்ள விரிந்த விரல்களோடு கூடிய கையை உடையவராகவும்.

12. பின்கையில் இரண்டிலும் அக்ஷமாலை, அக்னியோடு கூடியவராகவும் தாமரையையோ, நீலோத்பலத்தையோ, பாம்பையோ இடதுகையில் வைத்திருப்பவராகவும்

13. அந்த இருகைகளையும் கடக முத்ரையோடு கூடியதாகவும் பிரஸன்னமான நேர்பார்வையோடு கூடியவராகவோ, அல்லது தனது மூக்கு நுனியில் பார்வையுடையவராகவோ இடது கையில் புஸ்தகத்தோடு கூடியவராகவும்

14. சரீர மத்தியிலிருந்து இடதுபாகத்தில் சிறிது வளைவான பங்கத்தோடு அதாவது ஆபங்க ஸஹிதமாக செய்ய வேண்டும். சூத்திரமானது முறையாக இடது பாகத்தில் ஹ்ருதய, தொப்பூழ், குஹ்யப்ரதேசம் இவைகளில் இருக்க வேண்டும்.

15. மத்தியிலிருந்து மூன்று மாத்ரை அளவு விட்டதாக தொங்கும் பாதமுள்ளதாகும். லம்ப பாதத்தின் இருக்கையானது மத்ய சூத்ரத்திலிருந்து 1/2 அங்குல இடைவெளியுள்ளதாகும்.

16. 1/2 அங்குல அதிகரிப்பால் ஒன்றறை யவப்பிரமாணம் வரையாகும். கட்டைவிரலின் அடிபாக உயரத்திலிருந்து (மார்பு) நுனிவரை உள்ள இடைவெளி பத்து அங்குலமாகும்.

17. கட்டை விரலுக்கும் மார்பகத்திற்கும் உள்ள இடைவெளி இரு கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும். நாபியிலிருந்து மணிக்கட்டின் இடைவெளி நான்கங்குலமென்று உதாரணம் கூறப்படுகிறது.

18. புஸ்தகமுள்ள கைக்கும் துடையின் மேல் பாகத்தின் இடைவெளியும் தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலான இடைவெளியும் பத்தொன்பது அங்குலமாகும்.

19. கையின் தோள் பக்க மத்தியிலிருந்து பக்க வாட்டு மத்யபாகம் வரையிலான இடைவெளி ஆறங்குலமாகும். பக்கக்கையின் மணிக்கட்டிலிருந்து அந்த கையின் தோள்பட்டையின் மத்தியும் எட்டங்குலம் ஆகும்.

20. நடுபாகமுள்ளகை, பக்கவாட்டுக் கையின் இடைவெளி பத்து மாத்ரையாகும். தோள்பட்டைபாக அடியிலிருந்து கையின் முடிவுபாகம் ஓரங்குலமாகும். இடுப்பு பாக சூத்ரம், கடக முத்ரையின் உயர அளவினால் இருமாத்ரை அங்குல அளவாகும்.

21. ஜடாமகுடம், ஸ்தனம், கழுத்தின் அடிபாகம் இவைகளின் முறையே இரண்டங்குல நீளம் மட்டும் அளவாகும். அவைகள் அந்தந்த அழகுடன் கூடியவைகளாகவும், வெண்மையான பூணூலை தரித்தவர்களாயும்

22. வெண்மையான பட்டு முதலிய வஸ்திரங்களை தரித்தவர்களாகவும், விபூதி ருத்ராக்ஷங்களை அணிந்தவர்களாயும், கவுசிகர் மஞ்சள் நிறமுள்ளவராகவும், காச்யர் கரும்பச்சை நிறமாகவும்

23. பரத்வாஜர் சிகப்பு நிறமாகவும், அத்ரி, கவுதமர் இவர் இருவரும் புகை நிறமாகவும், உள்ள இவர்களை சுவாமிக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒருவராகவோ மூவராகவோ வைக்க வேண்டும்.

24. வ்யாக்யான (லக்ஷண) மூர்த்தியானவர் இவ்வாறாகவும், கேயமூர்த்தி என்ற வீணா தக்ஷிணா மூர்த்தியானவர் (நடுபக்கத்தில் உள்ள வலது கையில் கடகமுத்ரையோடு கூடியதாகவும்) வலது இடது பாகம் உள்ள நான்கு கைகளில் கடக முத்ரையையும்

25. கடக முத்ரையுடன் கூடிய வலதுகையில் வீணையும், அந்த வீணை இடது தொடையில் சேர்ந்ததாக அமைக்கவும். வலதுகை கடகமுத்ரையுடன் துடையின்மேல் வைத்ததாக அமைக்க வேண்டும்.

26. அந்த வீணையினுடைய வட்டபாகமானது தொடைக்கு வெளியிலும், அதனுடைய மூலபாகமானது கடகமுத்ரைக்கு மேல் உள்ளதாகவும், இடது பாகம், ஒரு பங்காகவும், ஐந்து பாகத்தை உடையதாயும்,

27. அகலமானது ஐந்து அங்குலம், நீளமானது, ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் சுற்றளவு ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் உயர அளவானது ஆறங்குலமும்

28. வீணை வட்டபாகத்தின் உயரம் மூன்று அங்குலம் என்று அறிந்து செய்யவேண்டும். கையிலிருந்து மணிக்கட்டு வரையும் இடுப்பு சூத்ரமுதலும், முறையாக

29. 30 அங்குலம் என்றும், வேறு கை மணிக்கட்டிலிருந்து தொப்பூழ் வரையிலுமான இடைவெளியானது முன்பு போல 30 அங்குலமாகும்.

30. வ்யாக்யான மூர்த்தியையும் இவ்வாறாக கவனித்து செய்யவும். அவ்விடத்தில் கண்ணின் பார்வை வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.

31. விரிந்த இடது கையை உடையவர் யோக மூர்த்தி என்றும் பிறகு வளைந்த இடது குதிகால் நுனியானது இடுப்பு பிரதேசத்தை ஒட்டியதாகவும்

32. தூக்கப்பட்ட அவருடைய இடது முழங்கால் நுனியானது இடதுகையின் பின் பாகத்துடன் சேர்ந்ததாகவும் நன்கு பார்வையோடு கூடியவராகவும் சிறிது ஆபங்கத்தோடு கூடியவராகவும்

33. பலவித பிராணிகளோடு கூடியவராகவும், பலவித பாம்புகளோடு கூடியவராகவும், அனேக முனிவர்களோடு கூடியவராகவும் சித்த வித்யாதரர் களோடு கூடியவராகவும்

34.  பூதகணங்கள், கின்னர கிம்புருஷாதிகளோடு கூடியவராகவும், மரங்களால் சூழப்பட்ட வராகவும், அவருக்கு பக்கத்தில் மலை முதலியவை களைச் செய்தும் ஆலமரம், புல்லடர்ந்த பிரதேசத்தில் வீற்றிருப்பவராகவும்

35. பழங்களோடும், கிளைகளோடும், விழுதுகளோடும் பலவித பக்ஷிகளோடும் கூடிய மரத்தின் அடியில் தென்புறமாக நிழலில் அமர்ந்திருப்பவராகவும் கருணையோடு கூடியவராகவும்

36. ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் விரிக்கப்பட்ட புலித்தோலின் மீது நன்கு அமர்ந்தவராகவும் கவுசிகாதி முனிவர்களோடு கூடியவராகவும்

37. ஆதிசைவர் குலத்தில் முதன் முதலில் தோன்றியவர்களும், ஆகமங்களை அறிந்த மனதை உடையவர்களும், பரமேச்வரர்களும் தீøக்ஷ செய்யப்பட்டவர்களுமான கவுசிகாதி முனிவர்களால் சூழப்பட்டவராயும் ஆக

38. தட்சிணாமூர்த்தியினுடைய மூர்த்தி பேதங்களானது கூறப்பட்டுள்ளது. வ்யாக்யான மூர்த்தியானவர் ஞானத்தை கொடுக்கக் கூடியவராகவும், கேய தட்சிணாமூர்த்தியானவர் போகத்தையும் கொடுக்கக்கூடியவராக அறிய வேண்டும்.

39. யோக தட்சிணாமூர்த்தியானவர் முக்தியை கொடுக்கக்கூடியவராக அறியவும், (நினைத்து பூஜை செய்யவும்) உட்கார்ந்த கோலமாகவோ நின்ற கோலமாகவோ, ரிஷிகளோடு கூடியவராக இல்லாமலோ வடிவமைக்க வேண்டும்.

40. ஆலமரம் இல்லாமலோ பூதகணங்களால் சூழப்பட்டவராகவோ பூதத்தின் மீது தொங்கிய திருவடியை வைத்தவராகவோ, தட்சிணா மூர்த்தியானவர் கூறப்படுகிறார்.

41. இவ்வாறு அமைப்பு முறைகள் கூறப்பட்டு பிரதிஷ்டா முறையானது கூறப்படுகிறது. திதி, வார, யோகாதிகளை முன் போல் எடுத்துக் கொண்டு அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

42. யாக மண்டபத்தை முன்போல் செய்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் சதுரச்சமும், சுற்றிலும் அஷ்டாச்ரமுமோ அமைக்க வேண்டும்.

43. ரத்னந்யாஸம், நயனோன்மீலனம், பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம் முதலியவைகள் செய்து ஜலத்தில் அதிவாஸம் செய்ய வேண்டும்.

44. புண்யாஹ ஜலத்தை தெளித்தலை செய்த பிறகு அந்தணர்களுக்கு உணவளிப்பதை செய்விக்க வேண்டும். புண்யாஹவாசனம், வாஸ்துஹோமாதிகளை செய்து பூமியை ஏற்றுக் கொண்டு

45. பூஜிக்கத்தக்க அந்த ரிஷிகளையும், சுவாமியையும், வேதிகையின் மீது தனியாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் சயனத்தை அமைக்க வேண்டும்.

46. பிறகு ஸ்தான வேதிகையில் ரிஷிகளோடு கூட சுவாமிக்கு ஸ்நபனாபிஷேகம் செய்வித்து, பிறகு அந்த கவுசிகாதி ரிஷிகளோடு கூட சுவாமியை படுக்கையில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

47. கவுசிகர் முதலிய ரிஷிகள் சுவாமியின் வலது பாகத்திலும், பாரத்வாஜர் முதலியவர்கள் சுவாமியின் இடது பாகத்திலும் சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம், ஆபரணம் இவைகளுடன் கூடியதாக தனித்தனியாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

48. வ்யாக்யான, கேய, யோக பேதங்களுக்கும் பொதுவாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவரவர்களுடைய தலைபாகத்தில் அவரவர்களுடைய கும்பத்தை வஸ்திராலங்காரங்களோடு கூட வைக்க வேண்டும்.

49. சிவ கும்பத்தினுடைய இடது பாகத்தில் வர்த்தினியை வைக்க வேண்டும். சுற்றிலும், எட்டு கும்பங்களை வைத்து வித்யேச்வரர்களை பூஜிக்க வேண்டும்.

50. உருவ அமைப்புகளோடு கூடிய அந்த வடிவத்தை முறைப்படி பூஜை செய்து தத்வந்யாஸம் மூர்த்திந்யாஸாதிகளை செய்து ஹோமத்தை செய்ய வேண்டும்.

51. தத்வங்களை முன்போல சுவாமிக்கு செய்து முனிவர்களுக்கும் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அவ்வாறு செய்து குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை உற்பத்தி செய்து

52. ஸமித்து, நெய், ஹவிஸ், பொறி, எள், வெண் கடுகு, மூங்கில் முதலியவைகளை கிழக்கு முதலிய திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும். பிரதானத்தில் புரசு சமித்தை ஹோமம் செய்ய வேண்டும்.

53. வில்வம் முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களில் ஹோமம் செய்து பிரதானத்தில் ரிஷிகளை தர்பண, தீபநம் செய்து இந்த பொருள்களால் ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

54. இரவுப் பொழுதை முடித்து சுத்தமான காலைப்பொழுதில் குருவானவர், சிஷ்யர்களோடு கூட ஸ்நானத்தை முடித்தவராய் மந்திர சுத்திகளை செய்து கொண்டவராய்

55. குண்டங்களில் அக்னிகளை பூஜித்து கும்பங்களையும் பூஜித்து (சயன கும்பம்) பிம்பங்களை எடுத்து பூஜிக்கவும். ஆசார்யர்களுக்கு தட்சிணா தாம்பூலம் முதலியவை அளிக்கச் செய்து

56. நல்ல முஹூர்த்த நாழிகைக்கு முன்பாக மந்திர நியாஸத்தை முதலில் ஆரம்பிக்க வேண்டும். முன்போல பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து

57. கும்பத்திலிருந்து பீஜமந்திரத்தை சுவாயினுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தனியிலிருந்து பீஜத்தை சுவாமியினுடைய பீடத்தில் சேர்க்க வேண்டும்.

58. வித்யேச்வரர்களுடைய பீஜங்களை பீடத்தில் பிரதட்சிணமாக சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களை அந்தந்த பிரதேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

59. ரிஷிகளுடைய பீஜமந்திரங்களை அவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

60. ஸ்ரீ கண்ட முனிவராகிய தட்சிணா மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தில் காமிகம் முதலான ஆகமங்களை, உபாகமங்களுடன் கூடியதாக அமைக்கவும்.

61. பிறகு ஸ்வாமியை ஸ்தாபித்து சுவாமியினுடைய இருபக்கங்களிலும் ரிஷிகளை ஸ்தாபனம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து உத்ஸவம், மஹாஹவிர் (படையல்) நிவேதனம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

62. இங்கு சொல்லப்படாதவைகளை பொதுவாக கூறப்பட்ட ஸ்தாபனங்களில் சொன்னதுபோல் செய்யவும். எந்த ஒரு மனிதன் தட்சிணா மூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை இவ்விதம் (பிரதிஷ்டையை) செய்கிறானோ

63. அவன் இவ்வுலகில் தனக்கு விருப்பப்பட்டவைகளை அனுபவித்து கடைசியில் பரமேச்வரனை அடைவான், அதில் ஸந்தேஹம் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தியோராவது படலமாகும்.

புதன், 9 அக்டோபர், 2024

முருகனின் அருள் பெற்றவர்கள்...

முருகனின் அருள் பெற்றவர்கள்...

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக்குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடுகளையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில்ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்:  பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுõல், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்:  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்:  யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நூலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர்,மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நூல் இது. பஞ்சாமிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்குஅபிஷேகம் செய்தவர் இவர்.

படலம் 48: லிங்கோத்பவ பிரதிஷ்டை...

படலம் 48: லிங்கோத்பவ பிரதிஷ்டை...
 

48 வது படலத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் லிங்கோத்பவரின் பிரதிஷ்டைகளை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. லிங்கோத்பவ அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு கர்ப்பக்கிரஹத்தை அனுசரித்து அதன் அளவுப்படி லிங்கம் வைத்து அதற்கு மத்தியில் சந்திரசேகர மூர்த்தி அமைப்பு முறையும் அவ்வாறே லிங்கத்திற்கு மேலும் கீழுமான பிரதேசத்தில் அன்னபட்சியையும் பன்றியையும் அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. இங்கு லிங்க மத்தியில் அமைத்த சந்திரசேகரரின் அமைப்பு முழங்காலிலிருந்து கீழ் பாகம் கண்ணுக்கு புலப்படாததாக ஆகும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு லிங்கத்தை அனுசரித்து இரண்டு பக்கங்களிலும் எல்லா அவயவமும் அழகுடன் கூடிய பிரம்மா விஷ்ணுவை நமஸ்கரித்து கொண்டு நின்ற கோலத்தில் உள்ளதாக அமைக்கவும் என்று கூறப்படுகிறது. இம்மாதிரியான தேவன் பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்பட்ட லிங்கோத்பவர் என்று கூறப்படுகிறது. பிறகு பிரம்மா விஷ்ணு இல்லாமல் அன்னமும் பன்றியும் மட்டும் உள்ளதாக அமைக்கலாம் என்று வேறு ஒரு விதி கூறுகிறது. பிறகு பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தை பரிக்ஷித்து அங்குரார்ப்பணம் செய்து யாகத்திற்காக குண்டம் வேதிகையுடன் மண்டபத்தை முன்பு போல் அமைக்கவும். பிறகு நியாஸ கர்மா இல்லாமல் நயனோன்மீலனம் பேர சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என்று கர்மாவின் வரிசை முறை குறிப்பிடப்படுகிறது. பிறகு மண்டபத்தை அலங்கரித்து அங்கு வாஸ்து ஹோமம் முறையாக பூபரிக்ரஹ கர்மாவை செய்து வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் கல்பித்து, ஜலத்திலிருந்து எடுத்து வந்த சுவாமியை முறைப்படி சுத்தி செய்து ரக்ஷõபந்தனம் செய்து, சயனத்தில் அதிவாசம் செய்யவும்.

இவ்வாறே பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் நயனோன்மீலனம் முதலான கர்மாவையும் முடித்து ஈஸ்வரனின் தென்பாகத்தில் பிரம்மாவையும், வடக்கு பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் சயனாதி வாசம் செய்யவும் வஸ்திரங்களால் பிரதிமைகளை போர்த் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும் என்று சயன அதிவாசமுறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன் பிரம்மா விஷ்ணு இவர்களின் சசிரோ பாகத்தில் பிராதன கும்பங்களை ஸ்தாபிக்கவும். சிவகும்பத்திற்கு வடக்கில் வர்த்தினியை ஸ்தாபிக்கவும். பிறகு சுற்றிலும் வித்யேச்வரர் முதலிய கும்பங்களான 8 கும்பங்களை ஸ்தாபிக்கவும். முறைப்படி ரூப தியானத்தை சொல்லி பூஜிக்கவும். ஈஸ்வரனுக்கும் பிரம்மா விஷ்ணுவிற்கும்  தத்வ தத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு ஆசாரியன் மூர்த்திபர்களுடன் செய்யவும் என கூறி ஹோம முறை திரவ்ய நிரூபண முறைப்படி சுருக்கமாக விளக்கப்படுகிறது. பிறகு இரவு பொழுதை கழித்து காலையில் சுத்தாத்மாவான ஆசாரியன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும். அந்த ஆச்சார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கவும் பின்பு முகூர்த்த நாழிகைக்கு முன்னதாக ஆசார்யன் மந்திர நியாஸம் செய்யவும் என கூறி மந்திரன்யாசம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. முடிவில் ஸ்நபநம் உத்ஸவத்துடன் கூடியதான பூஜையை செய்யவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறி இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொன்னபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறே லிங்கோத்பவ பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் இவ்வுலகின் புத்தி உள்ளவனாக இருந்து முடிவில் சிவசாயுஜ்ய பதவி அடைகிறான் என்று வர்ணிக்கப்படுகிறது. இவ்வாறு 50வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லிங்கோத்பவருடைய பிரதிஷ்டையை முதலில் கூறுகிறேன். கர்பக்ருஹ அளவை அனுசரித்து லிங்கத்தை முன்பு கூறப்பட்ட முறைப்படி நன்கு அமைக்க வேண்டும்.

2. லிங்கத்தினுடைய உயரத்தில் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாக அம்சத்தில் ஓரம்ச அளவு கீழே விட்டு இறக்க வேண்டும். அதே ஓரம்ச அளவோ, அல்லது அதில் பாதி அளவோ மேல் பாகமாக விட்டுவிட்டு அவைகளின் இடைவெளியில்

3. முன்பு கூறப்பட்ட அமைப்புமுறை சந்திர சேகர உருவத்தை நன்கு அமைக்க வேண்டும். லிங்கத்தின் கீழ்பாகத்தின் சந்திரசேகரின் முழந்தாளின் கீழுள்ள பாதத்தை கண்ணுக்கு புலப்படாதவாறு அமைக்க வேண்டும்.

4. லிங்கத்தின் மேல் கீழ்பாகம் முறையே, அன்னபக்ஷி, பன்றி ஆகிய இவற்றின் உருவ அமைப்பை அமைக்க வேண்டும். பிம்பத்தின் முக அளவிற்கு தக்கவாறும் பிம்பத்தை எதிர்நோக்கியும் அன்னப் பறவையை அமைக்க வேண்டும்.

5. பிம்பத்தை எதிர்நோக்காமல் பூமியை தோண்டுவது போல் பன்றி உருவத்தை அமைக்க வேண்டும். அந்த லிங்கத்தின் ஆறில் ஒரு பங்கு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பாகங்களினால்

6. பிரம்மா, விஷ்ணுவை இரண்டு பக்கங்களிலிருப்பதாகவும், வணக்கத்தை உடையதாகவும், அனுகூலமாக இருப்பதாகவும், குறுக்காக உள்ள பாதத்தை உடையதாகவும், எல்லா அவயங்களும் அழகாக உள்ளதாகவும்

7. பிரம்மா விஷ்ணுவால் வணங்கப்படுகிறவராயும், பிரம்மா விஷ்ணுவின்றி, அன்னம், பன்றியுடன் கூடியதாகவோ லிங்கோத்பவரின் அமைப்பு

8. இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. பிரதிஷ்டையின் காலம் முன்பு போல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே, அங்குரார்பணத்தையும் செய்து

9. பிறகு மண்டப நிர்மாணம் செய்து, ஒன்பது, ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கைப்படி சுற்றிலும் நான்கோணம் அளவான குண்டங்களை அமைக்க வேண்டும்.

10. எண்கோணகுண்டம், வட்டவடிவமான குண்டங்களையோ அமைக்க வேண்டும். இந்த பிம்பத்திற்கு ரத்னந்யாஸம் தேவையில்லை. ரத்னந்யாஸம், பிம்பசுத்தி முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

11.கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம், மண்ட பாலங்காரம், வாஸ்து ஹோமம் இவைகளைச் செய்ய வேண்டும்.

12. முதலிலோ அல்லது முன்கூறியபடியோ பூமியை ஏற்றுக் கொண்டு வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்திற்கு வேண்டிய முறைகளை செய்ய வேண்டும்.

13. ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை எடுத்து பிம்பசுத்தியை செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தின் மேல் பிம்பத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

14. நயனோன்மீலனம் முதலியவைகளை பிரும்மா விஷ்ணுவிற்கும் செய்ய வேண்டும். தெற்கு பாகத்தில் (வலது பாகத்தில்) பிரம்மாவையும், வடக்கில் (இடது பாகத்தில்) விஷ்ணுவையும் சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

15. வஸ்திரம் முதலியவைகளால் போர்த்தி சந்தனம் முதலியவைகளால் பூஜிக்கவும். பிம்பங்களின் தலைபாகத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

16. சிவகும்பத்தின் வடக்கு பாகத்தில் சிவ கும்பத்தை ஸ்தாபிக்கவும். வித்யேச்வர கும்பங்களாக எட்டு கடங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

17. முறைப்படி லிங்கோத்பவ மூர்த்தி அமைப்பாக ஹ்ருதயத்தில் ஆசார்யன் தியானித்து மூர்த்தீஸ்தாபன பாவங்களால் பூஜித்து

18. லிங்க மூர்த்தி, பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கு தத்வ தத்வேஸ்வர, மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸங்களை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும்.

19. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் சேர்ந்து ஹோமம் செய்யவும். ஸமித், அன்னம், நெய், பொறி, எள், கடுகு, மூங்கிலரிசி இவைகளாலும் ஹோமம் செய்ய வேண்டும்.

20. கிழக்கு முதலான திசைகளில் புரசு, அத்தி, அரசு, இச்சி முதலிய ஸமித்துக்களையும், தென்கிழக்கு முதலான கோண திசைகளில் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற்கொன்னை ஆகிய ஸமித்துக்களையும்

21. பிரதான குண்டத்தில் புரசு சமித்தையும், அந்த புரசையே எல்லா குண்டத்திலும் ஹோமம் செய்து மேற்கூறிய திரவ்யங்களால் ஹோமம் செய்து பிரம்மாவையும், விஷ்ணுவையும்

22. ஸமித்து முதலிய பொருட்களால் பிரதான குண்டத்தில் ஆசார்யன் பூஜிக்கவும். மீதிப் பொழுதான இரவை போக்கி சுத்தமான அதிகாலையில்

23. சுத்தமான மனதை உடைய ஆசார்யன் தத்வமறிந்தவனாக மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், குண்டம், குண்டத்திலுள்ள அக்னி இவைகளை பூஜித்து

24. ஆசார்யர்களை பூஜித்து தட்சிணையைக் கொடுக்க வேண்டும். பிரதிஷ்டா முஹூர்த்த ஸமயத்தின் ஓர் நாழிகைக்கு முன்பாக மந்திரநியாஸம் செய்ய வேண்டும். வேதிகையிலிருந்து கும்பங்களை எடுத்து மூர்த்திக்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

25. சிவகும்பத்திலிருந்து மந்திர பீஜத்தை எடுத்து தேவனின் ஹ்ருதயத்தில் சேர்த்து, வர்த்தநீ கடத்திலிருந்து வர்த்தநீ பீஜமந்திரத்தை எடுத்து பாத தேசத்தில் சேர்த்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

26. வித்யேச கும்பத்திலிருந்து அவ்வாறே மந்திரங்களை எடுத்து சேர்பித்து ஈசனை அந்த ஜலங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிரம்மவிஷ்ணு இவர்களின் பீஜமந்திரத்தை வைத்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

27. ஸ்நபன பூஜைசெய்து அபிஷேகம் செய்து முடிவில் திருவிழா நடத்தவும் பிம்பங்களை பிறகு ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமிக்கு தெற்கு பாகத்தில் பிரும்மாவையும் (வலது)

28. வடக்கில் (ஸ்வாமிக்கு இடது) பாகத்தில் மஹாவிஷ்ணுவை ஸ்தாபிக்க வேண்டும். இங்கு கூறப்படாததை பொதுவான பிம்ப ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

29. எந்த மனிதன் மேற்கூறியவாறு லிங்கோத்பவ பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் இவ்வுலகில் பெரிய தனவானாகி முடிவில் சிவஸாயுஜ்ய பதவியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லிங்கோத்பவ பிரதிஷ்டா முறையாகிற ஐம்பதாவது படலமாகும்.

படலம் 47: ஸோமாஸ்கந்த ஸ்தாபன விதி...

படலம் 47: ஸோமாஸ்கந்த ஸ்தாபன விதி...

47வது படலத்தில் ஸோமாஸ்கந்த ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு அமைப்பு முறை பிரகாரம் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, முதலில் ஸோம லக்ஷணம் அல்லது உமாஸஹித தேவரின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவர் நான்கு கை, மூன்று கண் ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டு எல்லா ஆபரணத்துடன் கூடியதாகவும் வரதாபய ஹஸ்தமும் பார்ஸ்வ ஹஸ்த்தத்தில் மானும் மழுவும் உடையவராகும் பூணூல் தரித்தவராகவும் பிரஸன்னாத்மாவாகவும் இடது பாகத்தில் கவுரியுடன் கூடியதாக இருப்பவர் ஸோமன் என்று ஸோமேச லக்ஷணம் கூறப்படுகிறது. கவுரி லக்ஷணம் தேவி ஸ்தாபன முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு இந்த விஷயத்தில் சூத்ரபாதம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஸோமாஸ்கந்த மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளின் மத்தியில் ஸ்கந்தரை அமைக்கவும் என கூறி ஸ்கந்தரின் லக்ஷணம் கூறப்படுகிறது. அந்த ஸ்கந்தரானவர், இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடம் சர்வாபரண பூஷிதம் வலது கையில் தாமரை புஷ்பம், தொங்க விடப்பட்ட இடது கை, அல்லது இரண்டு கைகளிலும் தாமரை புஷ்பம், நாட்டிய கோலம் அல்லது அம்பாளின் மடியில் அமர்ந்த கோலம், தாமரை புஷ்பம் இல்லாத கை அல்லது அமர்ந்த கோலம் நின்ற கோலம் ஆகிய இப்பேர்பட்ட அமைப்பு உடையவர் ஸ்கந்தர் ஆவர் என கூறப்படுகிறது. பிறகு ஸ்கந்தரும் உமாவும் இல்லாத மூர்த்தி சுகாசனர் என்று சுகாசன மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு ஸோமாஸ்கந்த சுகாசன மூர்த்திகளின் லக்ஷணம் கூறப்பட்டு ஸோமாஸ்கந்த மூர்த்தியின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. இங்கு நல்ல காலத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஸ்வாமி அம்பாள், குஹன் இவர்களுக்கு ரத்னநியாச முறை கூறப்படுகிறது. அந்தந்த பிரதிஷ்டையில் சொல்லப்பட்டபடி மந்திரங்களுடன் அந்தந்த ரத்னன் நியாஸம் செய்யவும் என கூறப்படுகிறது. மேலும் அம்பாளுக்கு ஸ்வர்ணபத்மமும், ஸ்கந்தருக்கு ஸ்வர்ண மயூரமும் வைக்கலாம் என்று வேறு ஒரு விதி முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம் ஜலாதி வாசம் ஆகியவைகள் முன்பு போல் செய்யவும் என கூறப்படுகிறது.

பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைத்து அங்கு வேதிகை குண்ட அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு சிற்பியை திருப்தி செய்து விட்டு பிராம்மண போஜனம், புண்யாகப் ரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதன் மத்தியில் சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து மண்டபத்தை அடைந்து ஸ்நபனம் செய்ய வேண்டும். பிறகு அந்த மூன்று பிம்பங்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்து மூன்று வித அதிவாசம் செய்யவும். தனித்தனியான வஸ்திரங்களால் மூடவும் பிறகு சிவனுடைய சிரோதேசத்தில் சிவகும்பம், அதற்கு வடக்கு பாகத்தில் அம்பாளுக்கு வர்த்தனி, தெற்கு பாகத்தில் ஸ்கந்த கும்பம் வைத்து ரூபதியான முறைப்படி சந்தனாதிகளால் பூஜிக்கவும். சுற்றிலும் 8 கும்பங்களில் வித்யேஸ்வரர்களை பூஜித்து ஸ்தாபிக்கவும். பிறகு அந்தந்த மூர்த்தி ஸ்தாபனப்படி அந்தந்த மூர்த்திக்கு தத்வதத்வேஸ் வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு குண்டமமைத்து முறைப்படி ஹோமம் செய்யவும் என கூறி ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முன்பு கூறிய பிம்பங்கள் தனிமையான பீடமாயிருப்பின் தனிமையான மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. மறுதினம் ஆசார்யன் தேவகும்ப அக்னிகளை மூர்த்திபர்களுடன் பூஜித்து யஜமானனால் கொடுக்கப்பட்ட வஸ்திராதி தட்சிணைகளை பெற்றுக் கொண்டு மந்திரநியாசம் செய்யவும். இங்கு அம்பாள் ஒரே பீடமாக இருந்தால் அம்பாள் ஹ்ருதயத்தில் மந்திரநியாசம் செய்யவும். இவ்வாறு கும்பாபிஷேகமும் செய்யவும். பிறகு விசேஷமாக கல்யாண கர்மாவும் செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்ய பிரதிஷ்டைபடி செய்ய வேண்டும். இந்த பிரதிஷ்டை செய்பவன் இங்கு சித்திகளின் பலனை அனுபவித்து முடிவில் சிவ ஸாயுஜ்யம் அடைகிறான் என்பது பலச்ருதி. இவ்வாறு 47 வது கருத்து சுருக்கம் ஆகும்.

1. சிரேஷ்டமான ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையை கூறுகிறேன். அதன் அமைப்பின் முறை இப்பொழுது கூறப்படுகிறது.

2. நான்கு கைகள், மூன்று கண், ஜடாமகுடத்துடனும் எல்லாவித ஆபரணத்துடனும் வரதம், அபயம் என்ற முத்ரையை கீழ் இருகைகளிலும்

3. மேல் இரண்டு கைகளில் மான், மழுவேந்தியவரும் இடது காதில் கர்ணபத்ரமும் வலது காதில் மகரகுண்டலத்தையுடையவரும்

4. பூணூலுடன் பிரஸன்ன முகமுடையவரும் மடக்கப்பட்ட இடது காலையும் தொங்கவிடப்பட்ட வலது காலையுடையவரும் இடப்பாகத்தில் கவுரியையுடையவரும்

5. எல்லா லக்ஷணமும், எல்லாவித ஆபரணபூஷிதருமாக இருப்பவர் ஸோமேசராவர். (ஸோமாஸ்கந்த லக்ஷணம்) நெற்றி மூக்கு, தொப்பூழ், குஹ்யபிரதேசம் கால்கள், குதிகால் மத்தியிலும்

6. இடுப்பு பாகத்தையும் சேர்ந்துள்ள சூத்ரம், மத்ய சூத்ரமெனப்படும், யோநிபாகத்தின் அடியிலிருந்து முகத்தின் அடிபாகம் வரை கழுத்தின் பக்கத்திலிருந்தும்.

7. ஸ்தனக்காம்பிலிருந்தும் இடுப்பின் பார்ச்சவத்திலிருந்தும், உஷ்ணீச பாகத்திலிருந்தும் பிடரி பக்கமும் கழுத்தின் பின்பக்கமும் மத்தியிலிருந்தும்

8. உள்ள சூத்ரம் ப்ருஷ்ட சூத்ரமெனப்படும், பார்வங்களிலிருந்து ஒன்றரை அளவும் இரண்டு பார்சவங்களில் விட்டு, துடை நீளம் வரையிலும்

9. மடக்கப்பட்ட கால் பதினைந்து அங்குலமும் தொங்குகின்ற கால் மூன்று (ஆறு) அங்குலமாகவும் இடது முழந்தாளின் கடைசியான ஸூத்ரத்திலிருந்து சரீர பாதி அளவிலும்

10. துடைபாக கடைசியிலிருந்து முதுகுத்தண்டு வரையிலும், பாததளத்தின் நுனியிலிருந்து துடையின் நடு பகுதி வரையிலும் இடைப்பட்ட அளவு மூன்றங்குலம்

11. தொங்குகிற காலசூத்ரத்திலிருந்து தலை பகுதி வரை ஏழரை அங்குலமாகும். கடகமுத்ரையிலிருந்தும், மணிக்கட்டிலிருந்தும் இடுப்பின் நுனி எல்லை வரையும்

12. தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலும் பதினாறங்குலம் ஆகும். வரதஹஸ்தமெனில் அதன்பின் பாகத்திலிருந்து தொப்பூழ் வரை ஸமமாகும்.

13. இடதுபாகத்தில் தேவிபிரதிஷ்டையில் கூறிய வண்ணம் பிரதிஷ்டை செய்த அம்பாளுடன் கூடியிருப்பதால் (உமாவுடன் கூடியவர்) ஸோமர் என்றும் ஸ்கந்தனுடன் கூடியிருப்பதால் ஸோமாஸ்கந்தர் என்று கூறப்படுகிறார்.

14. சுவாமியின் பத்தில் ஒரு பாக உயரமோ பத்தில் இரண்டு பாக உயரமோ 10 ல் மூன்று நான்கு பாக உயர அளவுகளாலோ ஸ்கந்தரை நடுவில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

15. இரண்டு கண், இரண்டு கை, கரண்ட மகுடமுடையவரும், இரு காதுகளிலும் மகர குண்டலங்களை அணிந்திருப்பவரும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும்

16. வலது கையில் தாமரையையும் இடது கையை தொங்கும் அமைப்பாகவுமோ (அல்லது) இரு கைகளிலும் தாமரையையுடையவராகவோ நடன அமைப்பிலுள்ளவராகவோ

17. தேவியின் மடியில் அமர்ந்திருப்பவராகவோ தாமரையில்லாத கையையுடையவராகவோ அமர்ந்திருப்பவராகவோ நின்ற திருக்கோலத்திலோ இருப்பவர் ஸ்கந்தர் ஆவர்.

18. ஸ்கந்தர் உமையின்றி இருப்பவர் சுகாஸனராவர். உமையுடன் கூடியவரிடத்திலும் ஸோமாஸ்கந்தர் அமைப்பிலும், ஸுகேசர் அமைப்பிலும் உருவ அமைப்பு சமமாகும்.

19. அங்குரார்ப்பணம் முதற்கொண்டதான இந்த பிரதிஷ்டையானது நல்ல நேரத்தில் செய்ய வேண்டும். தேவனுக்கு ரத்னந்யாஸம் செய்து, தேவிக்கும், குஹனுக்கும் ரத்னந்யாஸம் செய்யவும்.

20. அல்லது (சுவாமிக்கு ரத்னந்யாஸம் செய்து) தேவிக்கு தங்கத்தாமரையையும் ஸ்கந்தனுக்கு தங்க மயிலையும் நியஸிக்க வேண்டும். அந்தந்த மூர்த்தியின் பிரதிஷ்டையில் கூறிய உருவத்யானம் மந்திரங்களால் கூடியதாக

21. அந்தந்த பத்மபீடத்தில் நன்கு இருக்கமாக பிரதிஷ்டை செய்யவும். நயநோன்மீலநம் (கண்திறத்தல்) பிம்பசுத்தி, க்ராமப்ரதக்ஷிணம்

22. ஜலாதிவாஸம், மண்டபிரவேசனம் முதலியன செய்யவணும். எண்கோணம், வட்டவடிவ குண்டம், நாற்கோண குண்டமோ அமைக்க வேண்டும்.

23. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டம் அமைக்கவும். சில்பியை திருப்தி செய்து அனுப்பி அந்தணர்களுக்கு உணவளித்தலை செய்விக்க வேண்டும்.

24. புண்யாஹப்ரோக்ஷணம், வாஸ்துசாந்தி, சயனத்தை தயார்செய்து ஸ்நபனம் முதலியவை செயற்பாலது.

25. மூன்று பிம்ப உருவங்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்தது, பிறகு சயனத்தில் எழுந்தருளச் செய்து மூன்று கும்பங்கள் அமைத்து வஸ்திரங்களால் அழகுபடுத்தவும்.

26. சிவனின் தலைபாகத்தில் சிவகும்பமும், அதன் வடக்கில் வர்த்தனியையும் வைத்து ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகில் தெற்கில் கடம் ஸ்தாபித்து

27. ஸ்கந்தமந்திரங்களினால் பூஜித்து சந்தனம், புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். பிறகு பிம்ப லக்ஷண ரூபத்யான மறிந்த புத்தியுள்ள ஆசார்யன்

28. அக்கும்பங்களை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கடங்களுடன் ஸ்தாபித்து அந்தந்த பிரதிஷ்டா முறைப்படி தத்வத்வேஸ்வர மூர்த்தி, மூர்த்தீஸ்வரந்யாஸம் செய்ய வேண்டும்.

29. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம், (பூஜை முறையை) செய்து ஸமித்து, நெய், அன்னம் பொரி, எள், தான்யம் பயறுகளாலும் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

30. புரசு அத்தி, அரசு, ஆல் சமித்துகளால் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வ சமித்துகளால் தென்கிழக்கு முதலிய நான்கு திசை மூலைகளிலும்

31. பிரதானத்தில் முன்பு சொன்னபடி புரச சமித்தையும் ஹோமம் செய்து எல்லா க்ரியைகளையும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். ஸ்கந்தருக்கும், தேவிக்கும் பிரதான குண்டத்தில் தர்பண தீபனம் செய்ய வேண்டும்.

32. இந்த பிம்பங்கள் தனித்தனியான பீடமாயிருப்பின் தனித்தனியாக மண்டபம் அமைக்க வேண்டும். இரண்டாம் நாள் தேவர், கும்பம் அக்னி, இவைகளை முன்புபோல் பூஜை செய்ய வேண்டும்.

33. தசநிஷ்கம் (10 வராஹன்) முதலான தட்சிணையை மூர்த்திபர்களுக்கும் கொடுத்து வஸ்த்ரம் தங்க மோதிரங்களால் குருவான ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.

34. கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து (க்ரகித்து) பரமேச்வரனிடம் சேர்க்கவும். வர்த்தனியிலிருந்து மூலமந்திரத்தை ஸ்வாமி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

35. ஸ்வாமி பீடத்துடன் தேவி சேர்ந்திருந்தால் வர்த்தனீ பீஜத்தை (மூலமந்திரம்) அம்பாளிடம் சேர்க்க, குஹகும்ப மந்திரத்தை குஹனிடம் சேர்க்க வேண்டும்.

36. மற்ற வித்யேச்வர கும்பங்களை பீடங்களை சுற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த மூர்த்தங்கள் தனித்தனியான பீடங்களாயிருப்பின் தனித்தனி மண்டபம் (யாக) அமைத்து பூஜைகளை செய்ய வேண்டும்.

37. முறைப்படி விசேஷமான கல்யாணோத்ஸவம் செய்யவேண்டும். இப்படலத்தில் கூறாததை பொதுவான ஸ்தாபனத்தில் (பிரதிஷ்டையில்) கூறியபடி செய்ய வேண்டும்.

38. உயர்ந்த மனிதன் இவ்வாறு ஸோமாஸ்கந்தர் முதலிய பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் விருப்ப பயன்களையும் சிவஸாயுஜ்ய பதவியையும் அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸோமாஸ்கந்த பிரதிஷ்டையாகிற நாற்பத்தியேழாவது படலமாகும்.

படலம் 46: நடராஜரின் பிரதிஷ்டை...

படலம் 46: நடராஜரின் பிரதிஷ்டை...

46 வது படலத்தில் நடராஜரின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இங்கு லக்ஷண அமைப்பு முறையுடன் நடராஜமூர்த்தி பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. பின்பு நடராஜமூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் ஸூத்ரபாதம் என்ற முறைப்படி கூறப்படுகிறது. இங்கு நான்கு கை மூன்று கண் ஜடாமகுடத்துடன் கூடி அபஸ்மாரன் மேல் வலது காலால் நின்று கொண்டு பலவித ஸர்ப்ப பூஷணங்களோடு இருப்பவர் புஜங்க த்ராஸர் என கூறப்படுகிறது. ஜடையில் தட்சிண பாகத்தில் அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய கங்கை, வாம பாகத்தில் இளம்பிறை சந்திரன் பிரகாசிக்கிறார்கள் என கூறப்படுகிறது. அபஸ்மாரம் கங்கை இல்லாததாகவோ இருக்கலாம் என வேறுபாடுகள் கூறப்படுகிறது. பிறகு சிரஸில் உள்ள பாலச்சந்திரன் உயர அளவிற்கு புஜாங்கத்ராஸ மூர்த்தி பக்கத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்கவும் இவ்வாறே பிருங்கிரிடியையோ பத்ரகாளியையோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு புஜங்கத்ராஸர் என்ற நடராஜமூர்த்தி லக்ஷணம் கூறி புஜங்கத்ராஸரை போல் எல்லா லக்ஷணமும் கூடியதான புஜங்க லலிதம் என்ற நடராஜர் இருப்பார். ஆனால் இங்கு கால் வைக்கும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என கூறி விசேஷம் கூறப்படுகிறது. பிறகு புஜங்கத்ராஸ, நடராஜர் போல புஜங்க பைரவரும் இருப்பார். ஆனால் அங்கும் ஒரு விசேஷம் என கூறி பாத விஷயமே வேறு விசேஷம் என கூறப்படுகிறது. ஆனால் பைரவர் நான்கு கையோடோ எட்டு கையோடுமோ இவைகளுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறாக நடராஜ மூர்த்தி விஷயத்தில் புஜங்க த்ராஸ, புஜங்க லலித, புஜங்க பைரவ என்று மூன்று மூர்த்திகளின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரீசிட்சித்து அங்கு ரார்ப்பணம் செய்து, ரத்னநியாஸம், நயனோன்மீலனம் நன்கு செய்ய வேண்டும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என அங்குரார்பணம் முதல் ஜலாதி வாசம் வரையிலான காரியங்கள் வரிசைப்படி கூறப்படுகின்றன. பிறகு யாகத்திற்காக மண்டப முறையையும் குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பிராம்மண போஜன, வாஸ்து ஹோம, புண்யாக வாசனம், பூ பரிகிரஹம் செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூபரிக்கிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இங்கு வாஸ்து ஹோமம் இன்றியும் பூ பரிகிரஹம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு வேதிகைக்கு மேல் பிரோக்ஷண பூர்வமாக ஸ்தண்டிலம் அமைத்து அங்கு சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிரதிமையை சுத்தி செய்து ரக்ஷõபந்தன பூர்வமாக சயனாதி வாசம் செய்யவும் என்று சயனாதி வாச முறை கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் சிவகும்பம் வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அஷ்டவித்யேஸ்வரர்களையும் ஸ்தாபிக்கவும். வர்த்தினியில் கவுரியை பூஜிக்கவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் நைவேத்தியம் வரை பூஜிக்கவும். தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு கூறப்பட்ட காலத்தில் மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணம் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை பாட்டு, நாட்டியம், ஸ்தோத்திரம், வேத கோஷங்களால் கழித்து காலையில் ஸ்நாநம் செய்து ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்தை எடுத்து கந்த புஷ்பங்களால் பூஜித்து குண்டம், அக்னி, கும்பம் இவைகளை பூஜிக்கவும். பிறகு பூர்ணாகுதி செய்யவும். யஜமானன் ஆசார்ய பூஜையும் தட்சிணை கொடுப்பதும் முறைப்படி செய்யவும். ஸ்தாபனம் ஆரம்பிக்கவும். சல பிம்பமாக இருந்தால் ஸ்நான வேதிகையில் வைக்கவும். அசலமாயிருப்பின் அதன் ஆலய மத்தியில் ஸ்தாபிக்கவும். ஸ்தாபன விஷயத்தில் கும்பங்களை எடுத்து பலவித வாத்ய ஸஹிதமாக ஆலய பிரதட்சிணம் செய்து கும்பங்களை பிம்பத்திற்கு முன்பாக வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திரன்யாஸ முறையும் கும்பாபிஷேக முறையும் கூறப்படுகிறது. பிறகு தேவி பிரதிஷ்டை முறைப்படி தேவியை ஆசார்யன் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. நிதி நிலையை அனுசரித்து ஆசார்யன் கல்யாணகர்மாவும் உத்ஸவமும் செய்ய வேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதன் சிவ பாவனையுடன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ இந்த லோகத்தில் போகங்களை அனுபவித்து பிறகு ஈஸ்வர பதத்தை அடைகிறான் என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 46வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நடராஜாவின் பிரதிஷ்டையை லக்ஷணத்துடன் கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள், விகீர்ணமான (பரந்த) ஜடையை உடையவரும்

2. ஜடாமகுடத்துடன் கூடியவரும் சுருட்டி கொண்டு படத்துடன்கூடி சுற்றப்பட்ட ஸர்பமுடையவரும், ஐந்து முதல் ஒவ்வொன்றதிகமான பின்பாகம் இருபக்கமுடைய

3. இடைவெளியுடைய முப்பது எண்ணிக்கையுடைய ஜடையை உடையவரும் கருவூமத்தை, கொன்னை, எருக்கு முதலிய புஷ்பங்களையும் பிங்கள வர்ணமுடைய ஜடைகளை உடையவரும்

4. ஜடையின் தட்சிண பாகத்தில் அஞ்சலிஹஸ்தமுடைய கங்கையையுடையவரும் இடப்பாகத்தில் ஜடையில் இளம்பிறை சந்திரனை உடையவரும் (ஜடா மகுடத்தில்)

5. மகிழம்பூ மாலையுடையவரும், ஸர்பாபரணம் அணிந்தவராயும், புலித்தோலை அணிபவரும், ஸர்வாபரண பூஷிதராகவும்

6. இடது தோள் முதல் தொங்கிக் கொண்டிருக்கிற புலித் தோலை தரித்தவராகவோ, திவ்யாம்பரத்தோடு கூடியவராகவோ, மான் தோலை தரித்தவராகவோ

7. தலையில் உள்ள பிரம்ம கபாலமும், எல்லா புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் பன்றியின் தந்தத்தை தரித்தவரும், புலி நகத்தை உடையவரும் ஆமையின் ஓட்டையும்

8. சங்கு மணிகளால் தொடுக்கப்பட்ட மாலையால் அலங்கரித்த ஹ்ருதயத்தையுடையவராகவும் வலது காலால் நின்று கொண்டு இடது காலால் மேலே குறுக்காக மடித்தோ

9. குஞ்சித பாதமாகவும், இடது கையை குஞ்சித பாதத்திற்கு மேல் பிரஸாரிதகரமாகவும், அம்பிகையின் முகமாகிய தாமரையில் சுற்றுகின்ற வண்டை போல் கண்ணையுடையவராகவும்

10. பாதத்தில் சலங்கையும், கொலுசு என்ற ஆபரணத்தையுடையவராகவும், இடது காதில் கர்ண பத்ரமும், வலது காதில் மகர குண்டலமும் உடையவரும்

11. வலக்கை அபயமுத்ரையும், படத்துடன் கூட ஸர்பத்தையுடையவரும் பார்ச்வ இடக்கையில் நெருப்பையும், வலக்கையில்

12. டமருகம் (உடுக்கை) யுடையவராகவும், யக்ஞோபவீதமுடையவரும் பால்போல் வெண்மையானவரும், பன்னிரண்டங்குலம், பங்கமாக உடையவரும் (வளைந்ததாக)

13. பல ஸர்பாபரணங்களையுடையவரும், அபஸ் மாரத்தின் மேல் நிற்பவராகவும் சிரஸ் நெற்றியின் வலப்பக்கம், மூக்கின் வலப்பக்கமும்

14. நாபியின் வலப்பக்கம், குதிகால் மத்தியிலும், ஸூத்ரம் காண்பிக்கவும். மத்திய சூத்ரம் இரண்டு மாத்ரமாகும்.

15. கடி (இடுப்பு) பாக சூத்ரங்களின் மத்தி மூன்று மாத்ரமாகும். இடுப்பு முதல் இடது துடை வரை உள்ள சூத்ரமும் மூன்று மாத்ரமாகும்.

16. இரண்டு கணுக்கால் மத்தியில் உள்ள சூத்ரம் ஒரு அங்குலமாகும். வளைந்த முழங்கால் வரை உள்ள சூத்ரமானம் பன்னிரண்டு, எட்டு, ஏழு என்ற மாத்ரங்குலமாகும்.

17. அந்த ஜாநுசூத்ரத்திலிருந்து, இடது ப்ருஷ்டம் வரையுள்ளது. பதினேழு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து இடது முழங்கால்வரை நாற்பத்தியொன்றும் பத்தங்குலமுமாகும்.

18. இடது சூத்ரத்திலிருந்து வயிறு பக்கம் குக்ஷி பாகம் எட்டு அங்குலமாகும். அந்த சூத்ரத்திலிருந்து வலது குக்ஷி பாகம் பண்ணிரண்டங்குலமாகும்.

19. வலது துடையிலிருந்து சூத்ரம், பதினேழு அங்குலமாகும் இடதுபக்க வாமபாக துடையிலிருந்து ஒன்பது மாத்ரமாகும்.

20.  இடது கண்டம் மத்ய சூத்ரத்திலிருந்து ஐந்தங்குலமாகும். வலது கண்ட (கழுத்து) சூத்ரமும் அதே பாக அளவான ஐந்தங்குலமாகும்.

21. அந்த சூத்ரத்திலிருந்து இடது தோள்வரை மூன்றங்குலம் குறைவானதாகும். அல்லது வேறு விதமாகவும் சூத்ரபாதம் (கோடிடும் முறை) கூறப்படுகிறது.

22. கண்ணின் கருவிழி வரையும், தலை மூக்கின் வலது பாகம் தொப்பூழின் வல இடப்பாகம் ஊன்றியதான வலது முழங்கால், கணுக்கால் மத்தியமும் வரை

23. ஸ்பர்சமான சூத்ரம், மத்யசூத்ரம் எனப்படும், மேல் சூத்திரத்திலிருந்து இடப்பாகம் ஐந்து மாத்ரமும் முகமும் கழுத்தும் மூன்று மாத்ரமும்

24. தோள்பாகம் வரை பதினைந்து மாத்ரமும், கக்ஷ பாகம் வரை ஒன்பது மாத்ரமும், வயிறு மத்தியில் எட்டு மாத்திரையும், இடுப்பு பாகம் ஏழங்குலமாகும்

25. இடுப்பு பாகம் பதினைந்து அங்குலமாகவும் வேறு இடத்தில் 60 அங்குலமாகும் ஒன்பது மாத்ரம் துடை பாகமாகும். குதிகால் வரை நான்கங்குலமாகும்

26. ஏழங்குல முகமும் வேறு இடத்தில் கழுத்து ஆறு மாத்ரமுமாகும். தோளின் கடைபக்கம் மூன்று மாத்ரையும், கக்ஷõந்தம் ஏழு மாத்ரையுமாகும்

27. பதினான்கங்குலம் குக்ஷி பாகமும் இடுப்பின் மேல் பாகம் நான்கு மாத்ரமும் கடிபாகம் நான்கு மாத்ரமும், முழங்கால் எட்டங்குலமும் ஆகும்.

28. பாதாக்ரபாகம் ஒரு மாத்ரமும் (முகத்திற்கு சொன்ன ஏழு மாத்ரமும்) அறிந்து செய்யவும். நீட்டபாதத்தின் நீளம், ஸ்தித பாதத்தின் முழங்கால் சமமாகும்.

29. அப்பக்கத்து முழங்கால்களின் இருமுக இடைவெளி இரண்டங்குலமாகக் கூறப்பட்டது. இடுப்பின் மேல் உயரமானது, இடது முழங்காலின் உயரமாகும்.

30. அந்த துடை மத்தியிலிருந்து நாபி வரை இடைவெளி ஒன்பது மாத்ரையாகும். இடது முழங்கால் லம்பஹஸ்தத்ததின் மணிக்கட்டின் இடைவெளி பதினான்கு மாத்ரையாகும்.

31. தொங்குகின்ற இடது ஹஸ்தத்திற்கும், அபய ஹஸ்தத்திற்கும், இடைவெளி ஆறங்குலம் வலக்கை கட்டைவிரல் கடைபாகத்திலிருந்து மார்பக நுனி வரை இரண்டங்குலம் இடைவெளி ஆகும்.

32. அந்த பாஹு உச்சமும், அந்த தோள்களிலும் மத்ய ஹ்ருதயத்திற்கு சமமாகும். பதினேழு அங்குலம் தண்ட ஹஸ்த (லம்ப) புறங்கை பிரதேசத்திற்கும் இடைவழியாகும்.

33. முழங்கை கடையிலிருந்து அக்னி கை உச்சமும் அக்னியின் உயரமும் ஐந்தங்குலம் சிரோபாகம் முதல் கேசம் வரை உள்ள கோலகமும் மூன்று சிகைகளுக்கும் ஐந்தங்குலம்

34. உடுக்கை தரித்த ஹஸ்தம், கர்ணத்தின் உயரத்தில் ஓரங்குல மதிகம் டமருக விஸ்தாரம் ஒன்பதங்குலமாகும், முக விஸ்தாரம் ஐந்தங்குலமாகும்.

35. கோலக மத்ய விஸ்தாரம், சுற்றிலும் உள்ள விஸ்தாரமும், மூன்றங்குலம் ஒரு நாக்கு உடையதும், கம்பீர சத்தம் உடையதுமாக, ஸர்பமுடையவராக உள்ள

36. இரண்டு கைகளிலிருந்து மணிக்கட்டின் கடையளவு முப்பதங்குலமாகும். அபஸ்மார உயரமானது பதினொன்று, பன்னிரண்டு (ஒன்பது) எட்டு மாத்திரை ஆகும்.

37. தேவருடைய முகம் போல் அபஸ்மார முகம் அமைக்கவும். இரண்டு மடங்கு முதல் ஐந்து வரையளவுள்ளதாகவும்

38. முகத்தின் அரை அளவு அதிகமாக்கி ஏழு அளவு வரை உதாரணம் கூறப்பட்டது. நான்கு தாள அளவில் அபஸ்மார உருவம் அமைக்க வேண்டும்.

39. சிரோ பாதத்திலிருந்து பாதம்வரை ஆறு, எட்டு என்று பாகமாக பிரிக்கவும். சிரோ பாகத்திலிருந்து கேசம் வரை உள்ள பிரதேசம் கோளகம் ஆகும். தலைப்பாகையிலிருந்து தலைகேசம் வரை கோளகம் ஆகும்.

40. கேச கடைபாகம் முதல் சரீரம் வரை அஷ்டபாகமாகும். களதேசம் அரையங்குலம் ஒன்ரை அங்குலம் கர்ணதேசம்

41. இடுப்பிலிருந்து பாகத்திலிருந்து ஹ்ருதயம் வரை ஆறங்குலம் ஆகும். ஹ்ருதயத்திலிருந்து நாபி வரை ஆறங்குலமாகும்.

42. நாபியிலிருந்து ஆண்குறி கடைபாகம் வரை ஐந்தங்குலமாகும். அதிலிருந்து துடைபாக நீளம் ஏழு அம்சமாகும். முழங்கால் உயரம் இரண்டு மாத்ரை ஆகும்.

43. ஜங்கை (முழங்கால் கீழ்ப்பிரதேசம்)யின் அளவு ஏழம்சம், பாதத்தின் அளவு இரண்டு மாத்ரை, இருபுஜம், இரண்டு கண், மேல் நோக்கிய உடம்பு கீழ்நோக்கிய முகம்.

44. ஸர்பசரீரம் இடது கையிலும், ஸர்பசிரஸ்தக்ஷ ஹஸ்தத்திலும், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டதும், வளைந்த சரீரம் உடையவராகவும், ஸ்வாமியின் வலப்பாக சிரசை உடைய அபஸ்மாரத்தை அமைக்க வேண்டும்.

45. தேவருடைய முக அளவு சமமாகவே கங்கையின் முழு அளவு ஆகும். இருகைகளும் முக்கண்ணும் கரண்டமகுடமுடையவளாகவும்

46. ஸர்வாபரண பூஷிதையாயும், அஞ்சலி ஹஸ்தமுடையவளாயும், ஊர்த்வபாகத்திலிருந்து அதோ பாகம் வரை நீர்வழியும் தோற்றத்துடனும், அமைத்து லக்ஷணமுடைய

47. கங்காதேவியுடன் கூடியவராகவோ கங்கா தேவி ரஹிதமாகவோ அமைக்கவும். பிரபை என்கிற திருவாசியின் விஸ்தாரம் நூற்று பத்தங்குலமாகும்.

48. நூற்றி முப்பத்தி ஏழு ஆயாமம் பிரபையின் தண்டபாக அளவாகும். ஒன்று முதல் பத்து மாத்ரைகளால் குறைவாகவோ, அதிகமாகவோ ஆகும்.

49. இரண்டங்குலம், முதல் ஓரங்குல கணத்தில், ஏழங்குல பரிமாணமாக பிறை சந்திரனாகும். அதை போலவே ஈசனை அனுசரித்து பக்கத்தில் தேவியை கல்பிக்கவும்.

50. பத்ரகாளியையோ ப்ருங்கீரடியையோ அமைக்கவும், பரந்து விரிந்த கையையுடையாக புஜங்கத்ராஸர் கூறப்பட்டு, நிருத்த லக்ஷணமான புஜங்கத்தையுடையாதாகவும் அமைக்கவும்.

51. புஜங்கத்ராஸமாகவே செய்யவும் விசேஷமாகவும் கூறப்படுகிறது. மேல்பாகம் முழங்காலக்கு மேல் தூக்கியதாகவும் அமைக்கவும் முழங்காலுக்கு

52. இரண்டு மாத்ரம், மூன்று மாத்ரம், நான்கு மாத்ரையாகவோ, நிருத்யலக்ஷணம் புஜங்கலவிதமாகும். அது பைரவம் எனப்படுகிறது.

53. புஜங்க திராஸப்படி எல்லாம் செய்யவும், என விசேஷமாக கூறப்படுகிறது. மேல்தூக்கிய தட்சிண பாதத்தையோ, இடது பாதத்தை உடையதாகவோ அமைக்கவும்.

54. பாதத்துடன் கூடிய சரீரமத்தியில் மேல் நோக்கிய பாததளமுடையவராகவும் அமைக்கலாம். சதுர்புஜமோ, அஷ்டஹஸ்தமோ, பலவித திவ்ய அஸ்த்ர பூஷிதராகவும் அமைக்கவும்.

55. கற்சிலை முதலான திரவ்யங்களை சேர்த்து நடராஜரை அமைக்கவும். இவ்வித நடராஜ லக்ஷணம் கூறப்பட்டது. பிரதிஷ்டையை பற்றி கூறுகிறேன்.

56. பிரதிஷ்டை காலம் முன்போல் எனக் கூறப்பட்டுள்ளது. அங்குரார்ப்பணம், ரத்னந்யாஸம், நயஜேனான் மீலனம், முதலியவை முன்போலவே செய்ய வேண்டும்.

57. பிம்பசுத்தி, கிராமாதி, பிரதட்சிணம், ஜலாதி வாஸம், மண்டபபிரவேசம், முதலியவை செய்ய வேண்டும்.

58. சதுரஸ்ரம், வ்ருத்தம், அஷ்டாச்ரம் முதலிய ரூபத்தில் எந்த ரூபத்திலோ ஒன்பது ஐந்து, ஒன்று முதலிய எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

59. பத்து நபரதிகமானதாக ஆயிரம் பிராம்ணர்களுக்கு போஜனம் செய்வித்து மண்டப சுத்திக்காக புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

60. மரீசிபத பூஜையுடன் வாஸ்த்து ஹோமம் செய்யவும், வாஸ்த்து ஹோமம் இல்லாமலாவது பூமி பரிக்ரஹம் செய்ய வேண்டும்.

61. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வேதிகையின் மேல் ஸ்தண்டிலம் அமைக்கவும் ஸ்தண்டிலத்தின் மேல் சயனம் அமைத்து பிம்பசுத்தி செய்யவேண்டும்.

62. ரக்ஷõபந்தனம் செய்து சயனாதி வாசம் செய்யவும், தேவருடைய சிரோபாகத்தில் சிவகும்பம் வைக்க வேண்டும்.

63. உத்தர பாகத்தில் வர்தனியை ஸ்தாபித்து, அதில் கவுரியை ஆவாஹிக்கவும். லக்ஷ்ண ரூபத்துடன் தியானம் செய்து சந்தனங்களால் பூஜிக்க வேண்டும்.

64. அஷ்டவித்யேச்வர கலசம் ஸ்தாபித்து, சந்தன, புஷ்பம், நைவேத்யங்களால் அர்ச்சிக்க வேண்டும்.

65. தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீச்வர நியாஸம் செய்யவும், ரித்விக்குகளோடு ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

66. குண்ட, அக்னி ஸம்ஸ்காரம், அக்னிகார்ய விதிப்படி செய்யவும், ஸமித், நெய், அன்னம், நெல்பொறி, கடுகு, யவம், எள் இவைகளாலும்

67. தினை நெல், பாசிபயறு, இவைகளால் ஹோமம் செய்யவும். அத்தி, ஆல், அரசு, இச்சிசமித்துகளால் பூர்வாதி திக்குகளிலும்

68. வஹ்நி, நாயுருவு, பில்வம், கருங்காலி முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களிலும், பிரதானத்தில் புரசு, சமித்தையும் ஹோமம் செய்ய கூறப்பட்டது.

69. ரிக்வேதாதி பாராயணம், மந்திரஜபம், சங்கீதம், நடனம் ஸ்துதீ, ஸ்தோத்ரங்களால் துதித்து முறைப்படி கழித்துவிட்டு

70. ராத்திரி இரவை கழித்து பூஜை முடித்து காலையில் ஸதாசிவரை ஸ்மரித்து ஸ்னானம், மந்திர சுத்தி, தேஹ சுத்தி செய்து கூடினவனாய்

71. சயனத்திலிருந்து, பிம்பத்தை எடுத்து கிழக்கு முகமாக வைத்து, வஸ்திர கூர்ச்சாதிகளை எடுத்து விட்டு, சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

72. கும்ப சண்ட, அக்னி, இவைகளை பூஜித்து வவுஷடந்த மூலத்தால் பூர்ணாஹுதி செய்யவும். மூலமந்திரத்தோடு கடைசியில் வவுஷட் என்பது முடித்து பூர்ணாஹுதி கொடுக்க வேண்டும்.

73. வஸ்திர ஹேமாங்குலீயங்களால் ஆசார்யரை பூஜித்து முன்பு போல் தட்சிணை கொடுத்து ஸ்தாபனம் ஆரம்பிக்க வேண்டும்.

74. பிறகு வேதிகையிலிருந்து கும்பத்தை எடுத்து ஸ்னாந வேதிகையில் ஸ்தாபிக்க சலபேரமாயின் ஆலய மத்தியிலும் அசலபேரமாயின் பிரதிஷ்டை செய்து

75. பிறகு கும்பங்களை எடுத்து ஸர்வவாத்யங்களோடு கூட ஆலய பிரதட்சிணம் செய்து பிம்ப முன்பாக வைத்து

76. சிவகும்ப மந்திரத்தை, நடராஜர் பிம்பத்தில் நியஸித்து வர்த்தநீ பீஜத்தை பிம்ப பீடத்தில் நியஸித்து

77. வித்யேச கடங்களை பத்மபீடத்தில் சுற்றிலும் (அந்த இடத்திலே) ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும். தேவீ பிரதிஷ்டை விதிப்படி தேவீ ஸ்தாபனம் செய்யவேண்டும்.

78. பிரதிஷ்டை முடிவில், புத்தியுள்ளவனான தேசிகன் கல்யாண உத்ஸவத்தை அதன் முடிவில் செய்ய வேண்டும். பணத்தின் நிலையை அனுசரித்து உத்ஸவம் செய்யவேண்டும்.

79. இப்படலத்தில் சொல்லப்படாததை ஸாமான்ய ஸ்தாபன விதிப்படி செய்யவும். இந்த சிவபாவனையோடு யார் பிரதிஷ்டை செய்கிறானோ

80. அவன் இந்த லோகத்தில் போகத்தை அடைந்து பிறகு சிவபதம் அடைகிறார்.

இவ்வாறு உத்தரகாமிகத்தில் ந்ருத்த மூர்த்தி ஸ்தாபன முறையாகிற நாற்பத்தியாறாவது படலமாகும்.