புதன், 9 அக்டோபர், 2024

படலம் 36: காம்யலிங்க பிரதிஷ்டா முறை...

படலம் 36: காம்யலிங்க பிரதிஷ்டா முறை...

36 வது படலத்தில் விருப்பத்தை பூர்த்தி செய்யும் லிங்கம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. அதில் இலக்கண பூர்வமாக காம்யலிங்க பிரதிஷ்டையை கூறுகிறேன் என்று கூறுகிறார். பிறகு விருப்பங்கள் பயனை அடையும் படியாகவே கூறப்படுகின்றன. பயன்கள் பலவிதமாக காணப்படுகின்றன. இந்த சித்திகளின் கடை நிலை, நடுநிலை, உயர்ந்த நிலை, மிகவும் உயர்ந்த நிலை என்பதாக நான்கு பிரிவுகள் உள்ளன. அந்த நான்கு விதமான பிரிவுகளில் ஒவ்வொன்றும் உயர்ந்த தன்மை முதலியதாக மூன்று விதம் ஆகும். இவைகளில் பயன்களின் பிரிவுகளால் பலன் காணப்படுவது காணப்படாதது. உயர்ந்தது, தாழ்ந்தது என இருவிதமாகும் என கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்ட சித்தி பிரிவுகளின் பயன்களுடைய அமைப்பு சுருக்கமாக கூறப்படுகிறது. அதில் அரச தன்மை கடைநிலை சித்தி பிரிவாகும். பல சித்திகளில் மத்யம சித்தி பிரிவுகளாக கூறப்படுகிறது. தேவத்தன்மை உயர்ந்த சித்தி பிரிவாக எண்ணப்படுகிறது. தேவர்களின் சமானமாக இருக்கும் தன்மை மிகவும் உயர்ந்த சித்தி பிரிவாக கூறப்படுகிறது. தேவத் தன்மை என்கிற சித்தி பேதமானது வித்யேசத்வம் ருத்ரத்வம், விஷ்ணுத்வம், பிரும்மத்வம், முதலான பிரிவுகள் பலவிதமாக ஆகும். இவ்வாறாக அணிமாதி எட்டு சித்திகளும், சக்ரவர்த்தி தன்மையும் சித்திகளில் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு குளிகம், மை, பாதாளம், கத்தி, மணி இவைகளால் சித்திக்கக் கூடியவைகள் மத்யமமாகும். அபமிருத்யு, ஜயம், உச்சாடனம், வச்யம் முதலியவைகள் அதமம் என கூறப்படுகிறது. மாயா கார்யத்தில் இந்த தேகத்தினால் எது அனுபவிக்கப் படுகிறதோ அது காணப்படும் தன்மையாகும். இது வேறு சரீரத்தில் அனுபவிக்கப்படுகிறதோ அது காணப்படாத தன்மை என கூறப்படுகிறது. இவ்வாறு மாயா கார்யத்தில் வேறு இடத்தில் எந்த தேவர்களுக்கும் தலைவன் முதலான ருத்திரஸ்தானத்தில் நன்மை ஏற்படுகிறதோ அது அபரமாகும். எந்த நந்த்யாதி பத ஸ்தானத்தில் சுகம் ஏற்படுகிறதோ அது பரம் என்று பயனின் தன்மை நிரூபிக்கப்படுகிறது. பிறகு சித்தியும், மோட்சமும் லிங்கத்தை ஆஸ்ரயித்து பூஜிக்காமல் கிடைப்பதில்லை. விஷ்ணு முதலிய தேவர்கள், வசுக்கள், ருத்திரர்கள், முனிவர்கள் முறைப்படி இவர்கள் லிங்கத்தை ஆராதிப்பதால், விருப்பப்பட்ட பயனை அடைந்தார்கள்.

ஆகையால் ஆசார்யன், ஸாதகனும், உரிய லிங்கத்தை அடைந்து அவை பூஜிப்பதால் நற்கதியை அடைவான். தன்னால் செய்ய இயலாதவர்களின் நன்மைக்காகவோ, ஆசார்யன் சித்தியை ஸாதிக்கவும் ஆசார்யன் லிங்கத்திற்காக கருங்கல் முதலிய பொருள்களை தயார் செய்து கர்மாவை அனுசரித்து லிங்கத்தை ஏற்படுத்தவும் அந்த திரவ்யங்களும் சிலை, மண், உலோகம், மரம், இரத்னம், க்ஷணிகம் என்று பொருள்களாக பலவிதமாக ஆகும். அந்த எல்லா திரவ்யங்களையும் கூறுகிறேன் எனக் கூறி கருங்கல் முதலிய திரவ்யங்களை நிரூபிக்கிறார். திரவ்யங்களும் பிராம்ணர் முதலிய ஜாதியை அனுசரித்தும் பயனை அனுசரித்தும், ஆறு கர்மம் முதலியவைகளை அனுசரித்தும் கூறப்படுகின்றன. திரவ்ய இலக்கணம் கூறப்பட்ட பிறகு காம்ய லிங்கங்களின் இலக்கணம் கூறப்படுகிறது. என கூறி முதலில் லிங்கங்களின் விஷயத்தில் அளவு கூறப்படுகிறது. இங்கு ஆலயம் கர்ப்பக்கிரஹம் இவைகளின் அளவாலும் அங்குலம் என்ற அளவாலும் கையின் அளவாலும் லிங்கம் அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்கங்களின் இலக்கணம் கூறப்படுகிறது. இங்கு வஜ்ரம் முதலிய தசாயுதத்துடன் கூடிய சிரசை உடையதான ஆன லிங்கங்கள் அவ்வாறே ஸித்தி லிங்கம், ஸஹஸ்ர லிங்கம், 108 லிங்கம், தாரா லிங்கம், இவைகளின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு லிங்கத்தின் சிரசின் சுற்றுதல் என்ற அளவு முறை கூறுகிறேன் என்று கூறி புண்டரீகன், விசாலம் விருத்தம், சத்துருமர்தனம், குக்குடாண்டம், விஷுமஸ்தகம், த்ரபுஷாகிருதி, சத்ரசீர்ஷம் முதலிய தலையின் சுற்று வட்டவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்கங்களின் இலக்கண அமைப்பு முறை கூறப்படுகிறது. இங்கு தலையில் வச்சரம், முதலிய ஆயுதங்களின் இலக்கண முறையும் கூறப்படுகிறது. தலை சுற்று வட்ட இலக்கண முறை கூறும் விஷயத்தில் அந்தந்த பயன்களும் விளக்கப்படுகின்றன. மணி, முத்து, பவழம் முதலிய லிங்கங்களும் பாண லிங்கத்திலும், உலோகஜ லிங்கத்திலும் அந்த பிரகாசத்தின் லக்ஷணமே இலக்கணமாகும். ஆகையால் இந்த லிங்கங்களின் விஷயத்தில் இலக்கண குறிப்பு தேவையில்லை என கூறப்படுகிறது.

பிறகு பீடம், ஆவடையார் இவைகளின் இலக்கணம் கூறப்படுகிறது. அதில் ஐந்தரம், ஆக்னேயம், யாம்யம், ராக்ஷசம், வாருணம், வாயவ்யம், யாக்ஷம், ஐசம், பிராம்மம், வைஷ்ணவம் என்று பெண்பாலாக, பத்து வித ஆவடையாரின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு வச்ஜரலிங்கத்தில் கருங்கல் லிங்கத்தில் ஆஸ்மி, பிருதிவி, லிங்கத்தில் பார்த்திவ மரலிங்கத்தில் தாருஜா, தாது லிங்கத்தில் தாது சாம்பவி, ரத்ன லிங்கத்தில் ரத்னஜா என்றும் ஆவடையார் ஆனது உத்தமம் ஆகும், அல்லது உத்தமமான உலோகங்களால் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. சலலிங்கத்திலும் ரத்ன லிங்கத்திலும் பாசிபயறு அளவானதோ பர்வம் என்ற அளவு உடையதாகவோ, பிண்டிகை யானது சுபத்தை கொடுக்கக் கூடியது என கூறப்படுகிறது. பிறகு கார்யத்தை அனுசரித்து ஆவடையார் அமைக்கும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறு அவ்யத்த லிங்கம் கூறப்பட்டு அவ்யக்த, வ்யக்தலிங்கம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்து முகலிங்க விஷயத்தில் ஒன்று, இரண்டு மூன்று நான்கு, ஐந்து முக லிங்கங்கள் இலக்கணத்துடன் கூடியதாக நிரூபிக்கப்படுகின்றன. பிறகு வ்யக்தாவ்யத்தமான முகலிங்க லக்ஷணம் கூறப்பட்டு வ்யக்த லிங்கம் கூறுகிறேன் என கூறி சதாசிவ மூர்த்திகளின் இலக்கணம் மிக விரிவாக விளக்கப்படுகிறது. இங்கு முடிவில் ஞான மயமான ஸதாசிவரை இவ்வாறாக தியானிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கண்ட மூர்த்தியின் இலக்கணம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கண்ட மூர்த்தியின் இலக்ஷணமானது 10 கை, 16 கை 18 கை, 20 கை இவ்வாறாக நான்கு விதமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு கால ருத்திரன், வாமருத்திரன், அகோர ருத்திரன், புஜங்கேச ருத்திரன் ஸர்வ காமததேவன், திரிசூல சூத்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரார்த்த மூர்த்தி, நீலருத்திரன், பீமருத்திரன், ஸர்வ, ஸர்வ ருத்திரன், பவருத் திரன் இவர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. பிறகு 11 ருத்திரர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. பின்பு கபாலீசன் முதலிய ருத்திரர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. இவ்வாறாக வ்யக்தமான லிங்கத்தின் உருவம் செய்யும் முறை ஆகும். பிறகு முன்பு கூறப்பட்ட அவ்யக்த, வ்யக்தாவ்யக்த, வ்யக்தம் முதலிய லிங்கங்களின் பிரதிஷ்டை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு மூல மந்திர விஷயத்தில் விசேஷமான அறிவிப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை காலம் முதல் கும்பாபிஷேகம் வரையிலான செய்ய வேண்டிய கிரியைகள் பெயரால் விளக்கப்படுகிறது. ஆனால் அவைகளின் கிரியை விளக்கப்படவில்லை. முகலிங்க விஷயத்தில் அதன் அத்யாய மார்க்கத்தினாலோ எல்லா கார்யமும் அனுஷ்டிக்கும் என கூறி மூல மந்திர விஷயத்தில் வேறு விசேஷம் கூறப்படுகிறது. பிறகு ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்களை அபிசாரம் முதலிய கர்மாவிற்கு பூஜிக்கக் கூடாது என கூறப்படுகிறது. சாந்திகம், பவுஷ்டிதம் ஆகிய கர்மாக்களுக்கே ஆராதிப்பதற்கும் உபயோகிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 37 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் கூடிய காம்யலிங்க பிரதிஷ்டையை கூறுகிறேன். காம்யங்கள் என்பது ஸித்திகளாகும், ஸித்திகள் பலவிதமாகும்.

2. சிரேஷ்டம், ஜேஷ்டம், மத்யமம், அதமம் என நான்கு விதமாகும். ஒவ்வொன்றும் உத்தமாதி பேதமாக மூன்று விதமாகும்.

3. கண்ணுக்கு புலப்படுபவன, புலப்படாதவன எனவும் பரம், அபரம் என்றும் இருவகைப்படும். அரசத்தன்மை அதமம், மத்யமம், பலசித்திகளும் ஆகும்.

4. உத்தமம் தேவர்கள் பதம், சிரேஷ்டம் தெய்வசமானமாகும். தெய்வசமானம் ஒவ்வொன்றும் பலவாறாகவும் வித்யேசர் முதலான பேதங்களாக ஆகும் என கூறப்படுகிறது.

5. வித்யேசத்வம், ருத்ரத்வம் ப்ருஹ்மத்வம், விஷ்ணு பதம் என்று தைவத்வம் சிரேஷ்டம் எனப்படுகிறது.

6. அணிமாதி ஸித்திகள், சக்ரவர்த்தி பதம், அணிமாதி சித்திகளும் ஜ்யேஷ்டம் எனப்படும். இந்த முதன்மை யானவைகள் சித்திகளின் சிரேஷ்டமானதாகும்.

7. குளிகை, மை, பாதாளபிரவேசம், கட்கம், கண்டாதிகளால் ஏற்படக்கூடிய பலன் மத்யமம், அபம்ருத்யுஹரணம், உச்சாடனம், வச்யகர்மங்கள் அதமம்

8. இந்த சித்திகளால் எந்த சரீரத்தில் பல சித்தி தெரிகிறதோ மாயா கார்யத்தில் வேறு சரீரத்தில் தெரிந்தாலும்

9. மாயா கார்யமான ருத்ரஸ்தானத்தில் அமரேசாதி எந்த சுகம் உண்டோ அது அபரம், பரமானது அனந்தாதி பதஸ்திதியாகும்.

10. லிங்க பூஜையின்றி முக்தியோ ஸித்தியோ அடைய முடியாது. சிவலிங்க பூஜையின்றி சித்தி, முக்தி அடைய விரும்புகின்றவர்கள்

11. மூடர்களாகிறார்கள், பெரியதான ஸம்ஸார சாகரத்தை எவ்வாறு தாண்டுவார்கள். பகவானுடைய அபீஷ்ட பலமடைந்தவர்கள் சித்தர்கள், தேவர்களாவார்கள்.

12. கலங்கிய சிந்தனையுடைய மூடர்களுக்கு ரத்ன லிங்க பூஜையால் என்ன பலன், ஆகையால் லிங்க பூஜையிலிருந்து ஸித்தி கிடைக்கும் யுக்தமான லிங்கபூஜை செய்ய வேண்டும்.

13. விஷ்ணு முதலானோர், வஸூக்கள் ருத்ரர்கள், முனிவர்கள் தபஸ்விகள் முதலானோர் விதிப்படி லிங்கபூஜை செய்து விரும்பிய பயனை அடைந்தார்கள்.

14. ஸ்வாயம்புவமோ முநிவர்களால் கணங்களாலும் விபுதர்களாலும் ஸித்தர்களாலும் வித்யாதரர்களாலும் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பயன்கள் தரக்கூடியதாகும். மானுஷ்யர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை சிறந்ததல்ல.

15. ஆசார்யனோ கீழே கூறும் முறைப்படி எல்லா இலக்கணங்களோடு கூடியதாக தானாகவே சாஸ்திரம், காலம் தேசத்தை நன்கு பார்த்து ஸ்தாபித்து

16. ஆசார்யரோ மற்றும் உதவி செய்பவராலோ தன்னால் பிரதிஷ்டை செய்ய இயலாத அரசர்களின் நன்மைக்காக தான் பிரார்த்திக்க வேண்டும்.

17. ஆசார்யன் நான்கு வர்ணத்தவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்கும் அந்யருக்கும், கர்த்தாவுக்கும், நன்மை செய்பவர் உத்தமதேசிகராவர்.

18. லிங்க நிர்மாணத்திற்காக லோஹரத்னங்கள் கிடைக்கும் மலைக்கு தன் செயலுக்கு உகந்த நிலையில் கல் முதலிய திரவ்யங்களை உரிய முறையில் எடுத்துவர வேண்டும்.

19. அந்தத்ரவ்யங்கள் கற்சிலை ம்ருத், லோஹ, தாரு, ரத்ன, க்ஷணீக வஸ்துக்களாக பலவாறாக கூறப்படுகிறது.

20. நான்கு வர்ணத்தாருக்கும் முறையே வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு வர்ணமென நான்கு விதமாக சிலைகள் பற்றி கூறப்படுகிறது. நான்கு வர்ணத்தவர்களுக்கும் நெல்லிமுல்லி நிறமான கருப்பு ஏற்றதாகும்.

21. நான்கு வர்ணலிங்கமும் விப்ரருக்கும், மூன்று வர்ணங்கள் க்ஷத்ரியர்களுக்கும், இரண்டு வர்ணங்கள் வைச்யர்களுக்கும் ஓர் வர்ணம் நான்காம் வர்ணத்தவர்க்கென்று முறையாக பூமியின் சிலை லக்ஷணம் கூறப்பட்டுள்ளன.

22. அந்தந்த பூமியிலுண்டான மண்ணையே லிங்கத்திற்காக கூறப்பட்டுள்ளது. அந்தந்த லிங்கத்திற்கு ஏற்றாற்போல பலன்களும் சொல்லப்படுகின்றன.

23. (அந்தந்த) நான்கு வர்ண ம்ருத்லிங்க பலன் அரசத்தன்மையானதாகும். ஸ்வர்ண லிங்கம் செல்வத்தை தரும், வெள்ளி லிங்கம் ராஜ்யத்தை தரும்.

24. இரும்பு லிங்கம் மரணம் அளிக்கும், வெண்கல லிங்கம் மயக்கத்தை தரும், பித்தளை லிங்கம் இடமாற்றத்தை தரும், ஈயலிங்கம் புத்ர விருத்தியை அளிக்கும்.

25. தாமிர லிங்கம் வளர்ச்சியைத் தரும், வெள்ளீயம் நோயை போக்கும். இவ்வாறு உலோக லிங்க பலன்கள் ஆகும். ரத்ன லிங்க பலன்பற்றி கூறுகிறேன்.

26. வைர லிங்கம் அரச பலனை கொடுக்கும், முத்து லிங்கம் ஆரோக்யத்தை கொடுக்கும், இந்திர நீல லிங்கம் எல்லா விருப்பத்தையும் அளிக்கும்.

27. மாணிக்க மயமான லிங்க பூஜையால் விஷ்ணு பதவியடைகிறான். வைடூர்ய லிங்கம் நோயழிவும், புஷ்பராகம் சவுபாக்யமும் தரும்.

28. மரகத லிங்கம் ஆரோக்யத்தை தரும், பவழ லிங்கம் வசீகரம் தரும், ராஜாவர்த லிங்கம் மஹாபோக பலன் தரும்.

29. நீலக்கல் லிங்கம் நாகேந்திர போகம், சங்குமய லிங்கம் சவுபாக்யம் ஆகும். காந்தக்கல் லிங்கம் சூலநோயை குணப்படுத்தவும், சத்ருவை வீழ்த்த மணல் லிங்கமும்

30. தான்ய லிங்கம் பயிர் விருத்தியையும், சூர்ய காந்த லிங்கத்தால் ஆரோக்யமும், சந்திர காந்த லிங்கம் ம்ருத்யு ஜயத்தையும், பத்மராக லிங்கம் ஐச்வர்யத்தையும் கொடுக்கும்.

31. ஸ்படிக லிங்கத்தால் ஸர்வ ஸித்தியும் பூமியிலுள்ள (பவழ) லிங்கத்தால் ஸித்திகளும் பாதரஸ லிங்கம் நல்ல பலனைத் தரும், காந்த லிங்கம் நல்ல பலனைத் தரும்.

32. மந்த்ர ஜாதி ஸம்ஸ்காரலிங்கம் க்ஷüத்ர ஸித்தி பலனையும் மற்ற உயர்ந்த மணி ஜாதிகளால் பூஜித்த லிங்க பலன், பல நினைக்க இயலாத பலமாகும்.

33. இவ்வாறு ரத்ன லிங்க பலன்கூறி மர வகைலிங்க பலன் கூறுகிறேன். ஐஸ்வர்ய பலனை சாரமுள்ள வ்ருக்ஷலிங்க பூஜையாலும், பாலுள்ள விருக்ஷ லிங்க பூஜை ஆயுளையும்

34. மதுரமான வாசனை குணமுள்ள வ்ருக்ஷலிங்கம் ஞான சவுபாக்யமும் சிவப்பு சந்தன லிங்கம் அசோகம் சிம்சுப மரலிங்கம் பில்வ லிங்கம்

35. எல்லா துக்கமில்லாததும், பிசாச மரலிங்கம் சத்ருக்களை அழிக்கக்கூடியதாகும். ஸாதக நக்ஷத்ர வசத்தால் ஏற்பட்டுள்ள (தாரு) மரலிங்கம் அமைக்க வேண்டும்.

36. நெல்லி விருஷம், அத்தி, நாவல், கருங்காலி, கருப்பு அர்ஜுன மரம், காட்டு வாழை, அரச மரம்

37. புன்னாக மரம், ஆலமரம், புரசு, அரளிமரம், முல்லைமரம், பில்வம், அர்ஜுன மரம், இலவ மரம், மகிழ மரம்,

38. மறுக்காரை. மருதமரம், அசோக மரம், பலாமரம், மாமரம், எருக்கு, கதம்பமரம், வன்னி, வேம்புமரம்

39. இலுப்ப மரம் இவைகள் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் இருபத்திஏழு மரங்களாகும். இந்த மரங்களால் லிங்கம் செய்ய வேண்டிய ஏற்பட்டால் சாந்தி ஹோமம் முதலியவை

40. செய்து லிங்கம் செய்யவும், இல்லாவிடில் மரண பயம் உண்டாகும், வெள்ளெருக்கு வேர்லிங்கம் வெற்றியை தரக்கூடியதாகும்.

41. சந்தன லிங்கம் ஸர்வ வச்யம், சிவப்பு சந்தன லிங்கம் செல்வம். (சரள) மேருமல்லி மரலிங்கம் எல்லாவற்றையும், கருங்காலி ரோக நாசத்தையும் தரும்.

42. ஏழிலைப்பாலை மரம், தேக்கு மரம், பாலுல்ள பழங்கள் தரும் மரங்களின் லிங்கங்கள் எல்லா வர்ணத்தாருக்கும் எல்லா விருப்பங்களையும் தரும்.

43. அத்தி மரலிங்கம் புஷ்டியையும், ஆலமரலிங்கம் சாந்தியையும், அரசு மரலிங்கம் வச்யத்தையும் கருங்காலிமர லிங்கம் ஆரோக்யத்தையும் தரவல்லதாகும்.

44. தாளி என்ற மரலிங்கம் சத்ருக்களை விரட்டும். மரத்தினால் லிங்கம் சொல்லப்பட்டு க்ஷணிகலிங்க பலன் கூறப்படுகிறது.

45. மணல் லிங்கம் மோக்ஷம், ஐஸ்வர்யத்தையும் கோமயம் நோயின்மையும் அன்ன லிங்கம் எல்லாவற்றையும் மாவு லிங்கம் புஷ்டியை தருவதாகும்.

46. வெல்லம் ப்ரீதிகரமும், பழம் இஷ்டார்த்த சித்தியும், நெய்லிங்கம் துக்கமுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதாகும்.

47. வெண்ணை லிங்கம் சந்தோஷத்தையும், மண்மய லிங்கம் குணங்களையும் விபூதி லிங்கம் ஸர்வ வியாதி நிவாரணத்தையும் தரும்.

48. அவரவர் வர்ணத்துக்கு தக்கவாறு புஷ்பங்களின் லிங்கம் புஷ்டியை கொடுப்பதாகும், வில்வம் முதலிய பத்ர லிங்கம் சந்ததியை கொடுக்கும்.

49. அந்தந்த விதையிலிருந்து உண்டான லிங்கம் விசேஷமாக திருப்தி காரணமாக ஆகும். அரிசி முதலிய தான்ய லிங்கம், அந்தந்த த்ரவ்ய பலனை தரும்.

50. கிழங்கு, வேரால் ஆனலிங்கம் ப்ரம்ஹதத்வத்தை தரும், நெற்பொறி சத்துமாவால் நிர்மாணிக்கப்பட்ட லிங்கம் வியாதியை போக்கும்.

51. ஜல லிங்கம் பிராணிகளுக்கு சாந்தியைத் தரும், எழுதிய லிங்க படம் பல பலனைத் தரும்.

52. பச்ச கற்பூர சந்தனாதி லிங்க பூஜை முதுமையை நீக்கக் கூடியதாகும். இதுவரை பல்வேறு லிங்கங்களையும் அதன் பொருளையும் கூறப்பட்டன லக்ஷணமும் கூறப்படுகிறது.

53. ஆலய கருவறை அளவால் உயர்வு முதலான லிங்கம் அளவுள்ளதாக இருக்க வேண்டும். ஸித்திக்காக முக்யமாகவும் முக்திக்கும் ஒன்றானதாகவும் கூறப்பட்டுள்ளது.

54. எந்த லிங்கங்கள் கைஅளவு முதலாக விதிப்படி உள்ளதோ அவை மோக்ஷத்திற்கும் விதிப்படி வரிசையாக அளவுள்ள அந்த லிங்கங்கள் புத்திக்கும் ஆகும்.

55. லிங்கத்தை வடிவமைப்பதில் கர்ப்பக்ரஹ அளவில் பாதி அதமமாகும். ஐந்து, மூன்று அம்சம் உயர்ந்ததாகும். அதன் நடுவில் எட்டு பாகத்தில் ஒன்பது விதமான லிங்கத்தையும் வைக்கலாம்.

56. அதற்கு கீழே மூன்று மூன்றாக குறைந்ததால் இருக்கும் கற்பக் கிரஹத்தின் அளவு முப்பத்தாறு ஆகும்.

57. கருவறையை மூன்று, நான்கு ஒன்பது என்று பாகமாக பிரித்து ஆலயத்தில் த்வார அளவை விட்டுவிட்டு விசேஷமாக சதுரஸ்ர பீடம் அமைக்கவும்.

58. முன்பு கூறப்பட்ட லிங்கங்களுக்கு பிரமாணம் கூறப்பட்டுள்ளன. ஓர் அங்குலம் முதல் அங்குலம் அங்குலமாகப் பெருக்கி

59. மூன்று விதமான அங்கு அளவுகளால் நூற்றியெட்டு அங்குலம் வரை கூறப்பட்டுள்ளது. ஓர் கையளவு முதல் ஆறங்குல வ்ருத்தியாக

60. ஒன்பது அங்குல கைபிரமாணம் வரை ஹஸ்தமானப்படி லிங்கம் செய்யவும். ஓர் கைக்கு கீழ் அளவுள்ள லிங்கம் சைலலிங்கம் ஆலயத்திற்கு சிறப்பாக ஆகாது.

61. முக்கால் பாக அளவு மரலிங்கமும், உலோக லிங்கம் அரைபாக அளவாகும். ஓர் அங்குல அளவு முதல் விதஸ்தி என்ற அளவு வரை ரத்ன லிங்க அளவாகும்.

62. அந்தந்த செயலுக்கு ஏற்ற ஆயாதி என்ற கணக்குப்படி அளவுள்ள லிங்கம் மங்களத்தை தரும், உச்சாடநாதி விஷயங்களில் சைல லிங்கம் ஓர் முழத்தின் கீழ் இருக்க வேண்டும். (11 வகையான அளவுகளுள் ஒன்றை பின் பற்றி அளவிடுதல் ஆயாதி)

63. லிங்கத்தின் ஆயாமம் என்ற அளவில் ஒரு பாகத்தில் நான்கில் ஒரு பங்கு விஸ்தாரமும் மூன்று கண்ட பாகமும் ஸமமாக செய்து எல்லா சித்தி லிங்கத்தின் விஷயத்திலும் ஏற்க வேண்டும்.

64. கீழ்பகுதி சதுஸ்ரம், நடுவில் அஷ்டாஸ்ரம் மேலே வட்டவடிரமாக இருக்க வேண்டும். அரை நிலவு வடிவமாக தலைப்பகுதி இருக்க வேண்டும்.

65. பூர்வ திக்கில் இஷ்டசித்திக்காக வஜ்ர சிரோ லிங்கமாக பாவிக்கவும். வஜ்ரசரீரத்தை தூணுடன் சேர்த்துவிட்டு

66. லிங்கத்தின் மேல் ருத்திர பாகத்தில் ஐந்து அம்சங்களால் நாற்கோணம், எண்கோணமும் முன்புள்ள வட்டவடிவத்தில் ஏழுகோணம் அமைக்க வேண்டும்.

67. ஆக்னேய பீடத்தில் வன்னி திக்கில் தன் ஸித்தியை பொருட்டு லிங்கத்தை சக்திரூப பிண்டிகையோடு ஸ்தாபிக்க (சக்தி சின்னத்தோடு)

68. ஆக்னே பாக லிங்கத்தால் உக்ரசாந்தி, தேஜஸ், அசுரர் முதலிய சத்ரு நாசம் எதிரியின் வேகத்தை குறைத்தல் முதலியவை ஏற்படும்.

69. ஒன்பது அம்சத்தில் ஐந்து அம்சத்தில் முன்னும் பின்னும் பக்கத்தில் இரண்டு மூன்றால் பிரதான கைகளும் வலது கையில் வ்ருத்தாகாரமாக அக்னி பாகத்தில் விடுபட்டதாகவும்

70. வலது பாகத்தில் தன் சித்திக்காக யாம்ய பீடத்தில் ஸ்தாபிக்கவும். விதியோடு லிங்கத்தின் தலையில் தண்டம் போல் ஸ்தாபிக்க வேண்டும்.

71. குரு தண்டமாக தட்சிண பாகத்தில் (வலது) ஸ்தாபிக்க பவுருஷம், ஆயுள்விருத்தி நரகத்தின் தென் பாகத்தில் இருக்கும் சத்ருக்களுக்கு நாசம்

72. வைசூரி, கலக்கம் நோயை சந்தேகமின்றி அளிக்கிறார். நீளத்தின் இருபத்திரண்டு அம்சத்தில் ஐந்து அம்சங்களால் சதுரச்ரம்

73. அஷ்டாச்சரம், வ்ருத்தம், தசாச்ர ஸஹிதமாக அந்த திக்சாதன ஸித்திக்காக ராக்ஷஸ பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

74. பிண்டிகையில் கத்தி சின்னமிட்டதாகவும் கத்தியை அடையாளமுள்ள பாணத்தையும் ஸ்தாபிக்கவும், சத்ருக்ஷயமும் கீல பேதங்களால் சத்ரு வித்வேஷமும், மோஹனஸித்தியும் அடைவான்.

75. ராக்ஷஸ ஸைன்ய நாசம் மயக்கமும் ராக்ஷசர்களுக்கு மாரி பீடையை பிரவர்திப்பதும் விதிப்படி மந்திரத்துடன் கூடிய பூஜையால் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

76. உயரத்தின் பதினான்கு பாகத்தில் நான்கோணம் பிரம்ம பாகமும், பிறகு சதுரச்ரம் வ்ருத்த ரூபமாக லிங்கமானது இளம் சூர்யகாந்தியுடன் கூடிய தலையுள்ள லிங்கத்தை

77. மேற்கு திக்கில் ஸ்தாபித்து அந்த திசைத்தலைவன் தன்மையை அடைகிறான். அந்த மேற்கு திசையின் பொருட்டு பாச சின்ன மஸ்தகம் அமைக்க வேண்டும்.

78. பிரதிஷ்டை செய்தால் உயர்ந்த அமைதியையும் ஆரோக்யம் செல்வச் செழிப்பு நல்ல அழகுத் தன்மை, நோயின்மையையும் சவுபாக்யத்தையும் சந்தேகமின்றி அடைகிறான்.

79. நீளத்தில் இருபத்தி நான்கு அம்சத்தில் ஏழுபாக விஸ்தாரத்தில் ஒன்பது பங்கிலும் மூன்று பங்கிலும் மத்தியில் ஆறுபாக, ஆறுபாக வ்ருத்தியால்

80. அதன் ஊர்த்வத்தில் வ்ருத்தம் அமைத்து, ருத்ராம்சத்தில் த்ராபுஷம் என்ற சின்னம் சிரஸ் அமைத்து வாயுதிக்ஸ்வாம்ய பலனை அடைய வாயு திக்கில் ஸ்தாபிக்க வேண்டும்.

81. த்வஜ சின்னமுடைய த்வஜ சிரோயுக்தமாக லிங்கம் அமைக்கவும், மந்திரக்ஞன் அந்த லிங்க பூஜையால் உச்சாடன, உத்வேக, விப்ரம ஸித்திகளை அடைகிறான்.

82. சத்ருக்களுக்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்தவும், அவர்களை அழிப்பதையும் சந்தேகமின்றி செய்கிறார். முன்பு கூறப்பட்டுள்ள வாருண லிங்கத்தை ஊர்த்வ சிரசையுடைய வடக்கு திசையின் (யக்ஷம்) என்ற

83. லிங்கத்தை யக்ஷ திக்கில் வடக்குதிக்ஸ்வாம்ய பலனை அடைய பிரதிஷ்டித்து கதைசின்னமுடையதாக வடக்கில் லிங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஸ்வர்ண ப்ராப்தி சுகமும், மிக உயர்ந்த பயனும் ஜயம், தைர்யம், ராஜ்யப்ராப்தி, ப்ரபுத்தன்மையையும் அடைகிறான்.

85. மந்திரஸாந்நித்யத்தை ஸந்தேகமின்றி அடைகிறான். உயரத்தின் பாதியில் ருத்ரன் போல் அமைத்து ஆறு பாகங்களால் பத்மம் அமைத்து

86. பதினாறு அம்சத்தில் எட்டுபாகம் அழகான பக்கங்களால் இரண்டு பாக அதிகரிப்பால் எண்கோணத்தையும் வட்ட வடிவத்தை நடுவில் மூன்று பாகம், உயர்ந்ததாக ருத்ரபாகத்தையும் அமைக்க வேண்டும்.

87. கோழி முட்டையை ஒத்த சிரசையுடைய ஈசான பீடத்தில் லிங்கம் அமைத்து அந்த திசைத்தலைமைப் பலனை அடைய சூலசிரோயுதமாக லிங்கம் அமைக்க வேண்டும்.

88. சூலத்தை ஈசான திக்கில் ஸ்தாபித்தால் பூமியின் அரசபதவியை அடைகிறான். ஞான விக்ஞான மோக்ஷத்திற்காக யோகீசத்தன்மையை தரக்கூடியதாகும்.

89. சிவானுக்ரகத்தால் சவுபாக்கியத்தையும் அதேபோல் ஸாம்ராஜ்ய சித்தியையும் அடைகிறான். உயரத்தின் ஒன்பது பாகத்தில் ஐந்தம்சத்தில் சதுரஸ்ரம் அமைக்க

90. அஷ்டாச்ரமும் முன்போல் விருத்தமும் குடை சின்ன சிரோயுதமாக ப்ரம்மதிக்கில் (ஈசான தட்சிணம்) ஸ்தாபித்து பிரம்ம பதவித்தன்மையை அடைகிறான்.

91. தாமரை சிரஸ்ஸாக பத்ம சின்னத்துடன் பத்மாங்க பீடத்தில் பிரதிஷ்டிக்கவும், ஸாம்ராஜ்ய பலசாதனமும் தேவத்தன்மையையும் அடைகிறான்.

92. இருபத்தி நான்கு பாக லிங்க உயரத்தில் ஐந்து பாக சதுரஸ்ரமும் முன்புபோல் உள்ள நடுவில் வட்ட வடிவத்தில் நீளவட்டமாக தலைபாகத்தை வைத்து

93. காரூட பீடத்தில் அந்த திசைத்தலைவத் தன்மை பலனையடைய ஸ்தாபித்து சக்ராங்கத்தின் சக்ரமஸ்தக லிங்கத்தை

94. ஸ்தாபித்து பாதாள ஸித்தியையும் ரஸாயன ஸித்தியையும் அடைகிறான். லிங்காயாமத்தின் நவாம்சமான ப்ரும்மாம்சத்தில் மூன்று பாகத்திலிருந்து ஏற்படும்.

95. முன்பு கூறப்பட்ட அகலத்தால் விஷ்ணுவையும் சிவனையுமாக இணைத்து செய்வது குற்றக் கூட்டங்களை விடுவிக்கும் ஸித்திலிங்கம் என கூறப்படுகிறது.

96. ஆப்யாதி, தேவலிங்கத்திலோ லோகபாலார்ச்சித லிங்கத்திலோ ஸஹஸ்ர லிங்கம் முன்பு கூறியபடி செய்யவேண்டும்.

97. இந்த லிங்க பிரதிஷ்டை எல்லா காமத்தையும் தரவல்லதாகும், நாவன்மையைத் தரவல்ல லக்ஷணமுடையதாகவும் ஆகும். அர்ச்சாம்சத்தில் (ருத்ரபாகத்தில்) நான்கு பாகத்தில், நீளத்தில் இருபத்தேழாக பிரிக்கப்பட்டு

98. விஷயத்தை அறிந்ததான ஸூத்ரங்களால் அஷ்டோத்ர சதலிங்கம் அமைக்கவும், முன்பு கூறப்பட்ட உயரங்களால் ஸமகண்டமான ஆட்யாதி லிங்கங்களை கல்பிக்க வேண்டும்.

99. குடை, கோழிமுட்டை, பிறை சந்திரன் நீள் வட்டம் போன்ற சிரஸ்ஸையுடையதாக தாராலிங்கம் ஒரு அம்சம், இரண்டு, மூன்று அம்ச கோணங்களால் அமைக்க வேண்டும்.

100. கார்ய சித்தி, புத்திர பாக்யமும் நகரங்களை அடைவது, விருப்ப பயனை அடைவது, இறக்கச் செய்வது, உச்சாடனம், வெருப்புத் தன்மையின் அமைதி வலிமை, பிறரை தன்வசப்படுத்துதல் ஆகியவை பலனாக ஆகும்.

101. வசீகரணம், ஆரோக்யம் விருப்பங்கள், வருத்திப்பது, பணம், சுகம், யக்ஷர், பைசாச, ராக்ஷஸர்களால்மோஹன நிலைநிருத்தல், கொல்லுதல்

102. ஸாதேச, ஈசாந பைரவலிங்க விஷயத்தில் ஆஸூரம் பவுருஷம், தேவத்வம், தேவராஜ்யத்வம், ஸர்வகாம பலனையும் அடைகிறான்.

103. இந்த ஓர் கோணம் முதலான லிங்கங்களில் பலன்களால் ருத்ரபதம் கிடைக்கும், இவ்வாறே கோண வேறுபாட்டளவால் பீடங்களும் ஏற்படுத்தலாம்.

104. லிங்கத்தின் லக்ஷணம் கூறப்பட்டு சிரோபாக அளவுகளை பிரித்து கூறுகிறார். ஒவ்வொருபாக அதிகரிப்பால் எட்டு அம்சத்தில் நான்கு பாகத்தில்

105. பலபேதமாக பத்மம் முதலான சிரோபாக வகைகள் உள்ளன. புண்டரீக சிரஸால் புகழ், தேஜஸ் அதிகமான லக்ஷ்மீகரம் இவைகளை

106. அடைகிறான். ஸ்ரீவத்ஸ சிரஸால் வெற்றி சத்ருவை நாசம் செய்யும் பலனடைகிறான். அந்த சிரோபாகத்தின் நான்கம்ச அதிகரிப்பால் கோழிமுட்டை வடிவசிரஸில்

107. ப்ரஜாதிபதியாகவும் ப்ரஜை வ்ருத்திகரத்தையும் ப்ரஜையையும் அடைகிறான். அந்த சிரோபாக மூன்று பாகத்தின் ஒரு பாகத்தினால் வட்டவடிவமான தலையை உடைய லிங்கம்

108. ஏழு லோக பதவியும், சவுபாக்யமும் ஆயுள் அபிவிருத்தியும் வட்டவடிவ சிரோலிங்க பலமாகும். ஆறுபாக விருத்தியால் ஏற்பட்ட சிரஸ் நீள்வட்ட வடிவமாகும்.

109. மேற்கூறிய லிங்கங்களால் ஸாத்யர்கள், ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள் உயர்ந்த ஐச்வர்யமடைந்தவர்களாகிறார்கள். ஸாதாரண விதியில் இந்த சிரோ லிங்கங்களை உத்தமர்கள் அர்ச்சிக்க வேண்டும்.

110. தன் அபிப்ராயப்படி சொத்தையடைந்து பிறகு குறைவில்லா சிவபதம் அடைகிறான். குடையாளமிட்ட லிங்க பலன்களைக் கூறி வஜ்ராதிகளைப் பற்றி கூறுகிறார்.

111. அர்சனாம்சத்தின் நான்கு பாகத்தில் வஜ்ரபாகம் அமைக்கவும், அர்சாம்சத்தில் பதினோரு பாகத்தில் மூன்றுபாக வட்டத்தில் சக்தி சின்னமாகும்.

112. எட்டாக பிரிக்கப்பட்டு ஒன்றரை அம்சத்தோடு ஆறம்சமாக மூறு பாகங்களால் தண்டமும் எட்டம்சத்தில் ஒன்றரை பாகவர்தநத்தால் கத்தி சிரசும் ஆகும்.

113. ஐந்து அம்சத்தில் பாசம், கொடியும் நான்கம்சத்தால் கதைசிரசும் ஒன்பது அம்சத்தில் ஒன்றரை பாகத்தில் மூன்று பாகத்தில் சூல சிரஸூம் கூறப்படுகிறது.

114. எட்டு, பத்து அம்சத்தில் ஓர் சுற்றுதலால் சக்ர பங்கஜ சிரசும் ஆகும். சிரோலக்ஷணம் கூறி லிங்க அமைப்பு முறை கூறப்படுகிறது.

115. அர்ச்சாம்சத்தின் ஒன்பது பாகத்தில் மூன்று பாகம் அடையாளம் செய்யவேண்டும். அடையாளம் செய்யப்பட்ட அரை பாகத்தில் இரண்டுபாக ரேகையும் அதன் நுனியில் கஜ நேத்திரமும் செய்விக்க

116. திக்ஸாம்யஸித்திக்காக வஜ்ராதி சின்னங்களை மூர்த்தத்தால் செய்யவேண்டும், வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம் த்வஜம்

117. கதை, திரிசூலம் சக்ரம் பத்மமென தசாயுதமாகும். பிருஹ்ம, விஷ்ணு முதலிய தேவர்களின் பதத்தை விரும்பும் த்விஜோத்தமர்கள்

118. அந்தந்த ஆயுதமடையாளமான பீடம், அந்தந்த ஆயுத சின்ன அடையாளமுள்ளதாக லிங்க அமைப்பு செய்யவேண்டும், ஒன்பதாக பிரிக்கப்பட்ட லிங்காம்சத்தில் ஒன்பதம்சத்தில் அடையாளம் செய்யவேண்டும்.

119. சத்ரு தேசத்தில் ஸ்தாபனம் செய்தால் தனக்கும், சத்ருவுக்கும் நாசமேற்படும், வேதையான இரண்டாவது நேத்ரத்தால் நேத்ரரோகாதிகள் ஏற்படும்.

120. மூன்றாவதாக அந்த முகத்தின் சூத்திரத்தினால் நொண்டித்தன்மையும் மரணமுமே ஏற்படும். நான்காவதாக கண்ட சூத்ரத்தினால் எதிரிகளின் உறவினர் அழிவார்கள்.

121. ஐந்தாவதாக ஐந்து பாகத்தினால் எதிரிகளின் வெற்றி ஏற்படும். ஆறாவது பாகத்தினால் புத்ரன் மனைவி நாசமடைவார்கள்.

122. ஹ்ருதய தேசத்தில் அமைப்பதால் ஹ்ருதய சூலரோஹமும், வயிற்று பகுதியில் அமைப்பதால் வயிற்று வலிமுதலான துன்பங்களும் ஏற்படுகின்றன. தொப்புள் பிரதேசத்தில் செய்வதால் எதிரிகளுக்கு பயமும் ஏற்படும்.

123. பூஜையின் ஒன்பதில் ஒருபாக அடையாள கோட்டின் பயன் முறைப்படி கூறப்பட்டது. இங்கு மூன்று பாகத்திலும் ஆறு பாகத்திலும்

124. யவத்தின் நான்கம்சமாக கிரமமாக குறைக்கவோ அதிகரிக்கவோ வேண்டும், பிரித்த தோஷ நிவிருத்திக்காக இவ்வாறு சின்னம் கல்பிக்க வேண்டும்.

125. லிங்கோச்சத்தில் இருபத்தி நான்காம்சத்தில் ஓர் அம்ச பாகம் அகல அளவு ஆகும். சிரோவர்த்தன அளவுபோல் சிகை அளவையும் செய்யவேண்டும்.

126. இந்த்ர திக்கில் கூர்மையான நுனியும், மெலிந்த மத்யமுமாக வஜ்ர சின்னம் ஆகும். பாதி விஷகம்பமும் (உயரமும்), உன்னத மஸ்தகமு முடையதாக சக்தி சின்னம் ஆகும்.

127. தெற்கில் தண்டநுனி ஸ்தானமும், பாசாக்ரமும் டங்கமும் நைருதியில் சக்தியையும் வடக்கில் கதை போன்றும்

128. ஈசான லிங்கத்தில் சூலாச்ரமும் வாயவ்ய லிங்கத்தில் த்வாஜாங்கித மஸ்தகமும் ஸாமான்ய விஷயத்தில் தன் விருப்பத்தையடைய லிங்க உருவமான லக்ஷணம் அமைக்க.

129. அடையாளத்தின் நடுவில் வஜ்ராயுதங்களுடை லக்ஷணம் செய்யவேண்டும், ஸ்தம்பநாதி கிரியைகளில் லோகபாலர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம் அமைக்க வேண்டும்.

130. நவாம்சமான அர்ச்சனை அளவுபாகத்தில் ஏழாவதம்சத்தில் ஆயுத சின்னம் அமைப்பதை செய்யவேண்டும், சிவயோகிகளுக்கு மணி, முத்து பவழங்களால் லிங்கம் செய்ய வேண்டாம்.

131. பாணலிங்கத்திலும், உலோக லிங்க விஷயத்திலும் அதன் பிரகாச அமைப்பு நீளம், அகலம், கனமென்பதான அளவமைப்புகளால் குறைந்திருந்த போதிலும்

132. சுப லக்ஷண அடையாளமுள்ள லிங்கம் ஸர்வசித்தமாகும். பீடத்திற்கும் பிண்டிகைக்கும் லக்ஷணம் கூறப்படுகிறது.

133. லிங்க உயரத்திற்கு ஸமமாக பீடமும், அது எட்டுபாக அளவில் உயரத்துடன் கூடியதாகும். ஐந்திரம், ஆக்னேயம், யாம்யம் ராக்ஷஸம், வாருணம்

134. வாயுதிக், (யாக்ஷம்) வடக்கு, ஈசாநம், ப்ராமம், காருடம் என்று பீடத்தின் பெயர்கள் கூறப்படுகின்றன. பிண்டிகை மூன்று பாதத்தை யுடையதாகும்.

135. பிண்டிகையும் ஐந்த்ராதி பெயர்களையுடையாகும். பீடத்தின் வடிவத்தை கூறுகிறேன், சதுரச்ரம், யோநி, அர்த்த சந்திரன், முக்கோணம், வ்ருத்தம், ஷடஸ்ரம்.

136. பத்மம், அஷ்டாச்ரம், வ்ருத்தம் இவ்வாறு குண்டலக்ஷணப்படி அமைக்கவும். பதினெட்டு பாகத்தில் நான்கு அம்சமாக சுற்றிலும் வெளியில் தள்ளப்படுவதாலும்

137. இரண்டு குணம், வெளிக்கொணர்ந்ததாக திசைகளில் பீட அமைப்பின் பாதி அமைக்கவும். ஸபத்ரமான காரூட பீடம் பற்றி கூறுகிறேன். அவைகளின் பூஷணம் பற்றி கூறுகிறேன்.

138. கிழக்கு திசையில் பாதம்கண்டம் என்ற அமைப்பின்றி நாற்கோணமாக பீடம் அமைத்து அதே பாகத்தில் முறையாக ஒவ்வொன்று பாகமாக யோனி அமைத்து

139. பாஜ்ஜகதி என்ற அளவு கர்ணிகாகண்ட நிர்கமத்தால் இரண்டு பட்டிகை அமைத்து ஆக்னேயபீடம் அமைத்து பதினாறு அம்சத்தில் ஆக்னேய பிண்டிகை அமைக்க வேண்டும்.

140. லிங்க உயர ஒன்பது பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று என்ற அளவுகளாலா பாஜ்ஜகதி என்ற இடமும் கர்ணிகை, கண்டம், இரண்டு பட்டிகையும் அமைக்க வேண்டும்.

141. இதுபோல் யாம்யபீடம் அமைத்து அதன் மேல் யாம்யமாக பிண்டிகை அமைக்க, ராக்ஷஸதிக்கில் எட்டு பாகத்தில் ஒன்று, இரண்டு மூன்றம்சம்களால் முறையாக

142. பாஜ்ஜகதீ என்ற இடம் கர்ணிகா, கண்டம், ராக்ஷஸ லிங்கத்தில் இரண்டு பட்டிகை அமைத்து அதன்மேல் ராக்ஷஸ பிண்டிகை அமைக்கவும். பதினோரு பாகம் ஆன வாருண லிங்கத்தில்

143. ஒன்று, இரண்டு, ஒன்று, மூன்று பாகங்களால் பாஜ்ஜகதீ, கடம் என்ற அமைப்பை செய்யவும், மேற்கூறிய பாகத்திலிருந்து இரண்டு பட்டிகை அளவு வெளிக்கொணர்வதால் கர்ணிகா கண்டம் எனப்படுகிறது.

144. அதற்கு மேல் வருண சம்பந்த பிண்டிகையாகும். பதினான்கு பங்காக்கப்பட்ட வாயவ்ய லிங்க விஷயத்தில் ஒன்று, மூன்று, நான்கு, இரண்டு, இரண்டு ஒன்று ஆகிய பாகங்களால்

145. மேற்கூறியபடி உள்ள அளவுகள் பாஜ்ஜகதி என்ற கும்ப தண்டங்களாகும். ஒவ்வொரு பாக அளவினால் கண்டம் அமைத்து ஒரு பாகத்தை வெளியே செலுத்தி மூன்று பட்டிகையும் அமைத்து செய்வது வாயவ்ய பிண்டிகை ஆகும்.

146. வாருண லிங்கம் போல் யாக்ஷமும், பதினாறு பன்னிரெண்டு தளத்தால் ஜங்க கர்ணிகை அமைத்து கண்டத்தின்மேல் மாறுதலாக

147. (அஷ்டதள) எட்டுதளத்தோடுகூடிய பிண்டிகை அமைக்க, ஈசான லிங்கத்தை பதினோரு அம்சம் செய்து ஒவ்வோர் அம்சங்களால்

148. ஒன்று, மூன்று அம்சங்களாலும், பாஜ்ஜகதீ, கர்ணிகை, களம் அமைக்க, அதன் மேல் இரண்டு பட்டிகையும் அதன்மேல் ஈசான பிண்டிகையும் அமைக்க வேண்டும்.

149. முன்புள்ள அமைப்பின் இருப்பிடத்தை வட்ட வடிவங்களால் செய்வது பிராம்ம பீடம் என்றோ ராக்ஷஸ பீடம் என்றோ ஆகும். அதன்மேல் பிராம்மீ பீடமோ காருட பீடமோ அமைக்க வேண்டும்.

150. பங்கத்யம்சத்தில் மூன்று, இரண்டு ஒன்று, குணங்களால் பாதகும்ப கர்ணிகைகள், ஒரு பாகத்தால் கண்டம், இரண்டுபாக வெளிக்கொணர்வால் இரு பட்டிகை அமைக்க வேண்டும்.

151. பிறகு வைஷ்ணவ பீடலிங்க விஷயம், பிண்டிகாலக்ஷணம் கூறுகிறேன், இருமேகலையோடு ஆக்னேயீ, வைஷ்ணவீ ஐந்த்ரீ பிண்டிகையாகும்.

152. யாம்யா, ராக்ஷஸீ, குபேரலிங்க பீடம், ஈசாநம், ப்ராம்மீ பிண்டிகை த்ரிமேகலையும் வாயுபீடம் ஆறு மேகலையும் வாருணபீடம் ஐந்து மேகலையும் ஆகும்.

153. விஷ்ணு லிங்காம்ச பதினாற பாக உயரத்தில் பிண்டிகையும் பீடவிஸ்தாரமும் மீதிபீடம் சமானம், பள்ளத்தின் வெளிப்பாகம் மேகலையாகும்.

154. வஜ்ரத்தை அடையாளமாக உள்ள பீடம் வஜ்ரமாகும், பீடிகை வஜ்ஜிரியாகும் ஸஹஸ்ர லிங்கத்தினுடைய பீடமானது எல்லா அலங்காரத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

155. கருங்கல் லிங்கத்திற்கு கருங்கல் பீடமும், மண்லிங்கத்திற்கு மண்பீடமுமாகும். மரலிங்கத்திற்கு மரபீடமும், உலோக லிங்கத்திற்கு உலோக பீடமுமாகும்.

156. ரத்னஜ லிங்கத்திற்கு ரத்ன பீடமும், உத்தமமான லோகத்தினாலாவது பீடம் அமைக்கவும். சலலிங்கத்தின் உயரம் பூஜாம்சத்தால் இருமடங்காகும்.

157. லிங்கத்தின் உயரமான பிண்டிகையும் அது லிங்கத்தை சுற்றியதாகவும் இருக்கவும், சூக்ஷ்ம லிங்கத்திற்கு ருத்ர பாகத்தை வ்ருத்தியாகவும் ஸ்தூல லிங்கத்தில் குறைவாக ருத்ரபாகம் செய்ய வேண்டும்.

158. விஷ்ணுவம்சமானது குறைப்பதாகவோ, அதிகரிப்பதாகவோ இல்லை. பிண்டிகையின் ஸமானத்திற்காக குறைத்தோ அதிகரித்தோ செய்யலாம்.

159. சல லிங்க விஷயத்தில் ரத்னஜாதிகளுக்கு மேற்கூறியபடியே ஆகும். பயறு அளவாகவோ, பர்வம் அளவாகவோ அழகாக பிண்டிகை அமைக்கவும். (விரலின் மூன்றில் ஒருபங்கு அளவு பர்வம் எனப்படும்)

160. பிண்டிகையுடன் கூடிய உயரம்தான் லிங்க ஸமான உயரமாகும், ஸூக்ஷ்ம லிங்க விஷயத்தில் எந்த குணமுண்டோ அந்த குணத்தால் பகவான் ஸந்தோஷமடைகிறான்.

161. எல்லா மனிதஜாதி லிங்கங்களுக்கும் பிரகாசஸான்நித்யத்திற்கு அளவுக் கொள்கை ஏற்றுக் கொண்டோ ஏற்றுக் கொள்ளாமலோ இருக்கலாம்.

162. இவ்வாறு மரத்தினாலும், ரத்னங்களாலும் மண் முதலியவைகளாலும் உலோகம் முதலியவற்றாலும் சந்தனம் ஆகிய பொருள்களாலும் லிங்கத்தை அமைத்துக்கொள்ளவும். மனஸ்சிலை விருப்பப் பயனுக்கு உதவாது.

163. முத்துவினால் செய்யப்பட்ட லிங்கம் நல்லவையையே கொடுக்கும், பாணலிங்கம் எல்லா பொருளையும் கொடுக்கும், வேறுமுறையாகவும் ஆற்றில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிடைக்கும் லிங்கத்தையும் பூஜிக்கலாம்.

164. எவ்வாறு மந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் உள்ளதோ அது வரத்தை அளிக்கவல்லதாகும். ரவுத்ர லிங்கத்தில் கைஅளவின் கீழாக இரண்டம்சங்களால் பிரிக்கப்பட்ட பிண்டிகை அமைக்க.

165. கொடூரமான கார்யங்களின் பிண்டிகைக்கு அதிகமாகயவை அளவாக ரவுத்ரபாகம் அமைக்கவும். பிண்டிகை அளவு குறைவாக இருப்பின் அது எதிரியை அழிக்கவல்லதாகும், அதிகமாக இருப்பின்

166. உச்சாடனத்திலும் அமைக்கவும். அங்க ஹீநமாயிருந்தால் வ்யாதியை அதிகரிக்கும், குறைவான லக்ஷணங்களுடன் இருந்தால் பெண்களுக்கு நாசம் ஏற்படும், கர்மாவை பின்தொடர்ந்து பிண்டிகை அமைக்க வேண்டும்.

167. அவ்யத்தலிங்க விஷயம் கூறப்பட்டு வ்யக்தாவ்யக்தம் பற்றி கூறுகிறேன், ஸமலிங்கத்தில் சதுரம் எண்கோணம், வட்டவடிவமாக அமைக்க

168. முன்புகூறிய முகலிங்க விஷயத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்தாக அமைக்கவும். ஐந்து முகத்தில் நான்கு திக்குகளிலும் ஒவ்வொன்றாகவும் நடுபாகத்தில் ஓர் முகத்தையும் அமைக்க வேண்டும்.

169. முன்பு கூறிய விதிப்படி ஒன்று, மூன்று நான்கு முகம் அமைக்கவும், இரண்டு முக லிங்கம் கிழக்குமுகம், மேற்கு முகமாகவும் கல்பிக்க வேண்டும்.

170. நான்கு திக்குகளிலும் ஒவ்வொன்றாக நான்கு முகமும், ஊர்த்வ பாகத்தில் ஐந்தாவது முகமும் அமைக்க, ஒவ்வொரு முகத்திலும் ஜடாமுடி பிரைசந்திரனுடன் கூடிய சிகையும் அமைக்க.

171. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண், கை, கழுத்து பாகம் இவைகள் அமைக்க போகம், மோக்ஷ விருப்பத்திற்காக அழகாக அமைக்க வேண்டும்.

172. பலிபீடத்தை இரண்டு பாகமாக்கி லோகத்தால் நல்ல கெட்டியாக அமைக்கவும். வ்யக்தாவ்யக்தச லிங்கம் கூறப்பட்டு வ்யக்தலிங்கம் கூறப்படுகிறது.

173. குவிந்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவரும், ஸ்படிகத்தை ஒத்தஉருவை உடையவரும் ஐந்து முகமும் பத்துகையும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண் உடையவரும்

174. ஒவ்வொரு முகத்திலும் ஜடையுடன் கூடியவரும், ஜடையில் பிறை சந்திரனை தரித்தவரும் ஐந்து உடலும் இரண்டு பாதமுடையவராகவும் அமைக்கலாம்.

175. கிழக்கு முகம் அழகாகவும், அழகான கன்னமும், புன்சிரிப்பு உடையவராகவும் ஸ்வர்ண நிறமும் 2 கையை உடையவராக கல்பிக்க வேண்டும்.

176. கிழக்கு முகத்தில் வலதுகையில் அக்ஷமாலை, இடபாகத்தில் மாதுளம் பழம் உடையதாக அமைக்கவும், தெற்கு முகம் கருப்பான காந்தியும் பரந்த முகமும் பயங்கரமாகவும்

177. பாம்பினால் கட்டப்பட ஜடா முடியை உடையவரும், அழகான கன்னப் பரதேசத்தை உடையவரும் தொங்குகின்ற மீசை உடையவரும் திரிசூலம் மணியை தரித்த இருகையை உடையவராக அமைக்க வேண்டும்.

178. வடக்கில் உள்ள வாமதேவ முகம், மாதுளம்பூ நிறத்தை உடைய அதிக ஆபரணமுடைய வரும் பெண் உருவைப்போல் அழகை உடையவரும்

179. வலது கையில் நீலோத்பல புஷ்பத்தையும் அமைக்க. மேற்கு முகம், வெள்ளி போல் வெண்மையாகவும் பால வேஷராகவும் தாமரை போன்ற கண் உடையவராகவும்

180. அபய வரதத்துடன் தியானிப்பவர்போல் அமைக்கவும், ஐந்தாவது முகமானது ஸ்படிக காந்தியும் ஸாந்தமாயும் சிரித்த முகத்துடன்

181. கடகமுத்திரையை கையில் உடையதாக மேல்முகமான ஈசானமுகத்தை அமைக்கவும், முகத்தின் நிறத்தை அனுசரித்து முகங்களின் அமைப்பு கூறப்பட்டுள்ளது.

182. பல கலை தொகுப்புடன் கூடியதாகவும் அழகான அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் எல்லா விருப்பத்தை கொடுக்கக் கூடியதாகவும் அமைதியானவராகவும் முற்பத்தியிரண்டு இலக்கண அமைப்பை உடையவராகவும்

183. வாயில்படியை எதிர் நோக்கியதாகவும் ஈசான தேவரின் சரீரத்தை அமைக்கவும், அது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கவல்லதாகும், பிறகு கார்யத்தை அனுசரித்து

184. திவாரங்களையும் அஸ்த்ரங்களையும் அவைகளுக்கு உரிய நிறங்களை உடையதாக செய்யவும், பத்துதாள அளவினால் ஈசான சரீரத்தை அமைக்கவும்.

185. தத்புருஷன் முதலானவர்களின் சரீரங்களை ஈசான தேவ சரீரத்தின் பாதி அளவால் செய்யவும், மேற்கூரிய சரீர அமைப்புகளால் உடலுறுப்புகளின் மேல்பாகமாகவே இருக்க வேண்டும், சரீரத்தின் கீழ்பாகமாக அமைக்க கூடாது.

186. முன்பு கூறப்பட்ட உருவ அமைப்பு அளவு இவைகள் உள்ள ஐந்து சரீரங்களை உடையதாகவும், எப்படி பொருத்தமாய் இருக்குமோ அப்படியே நல்லவைகளை தரவல்லதாகவும் சதாசிவ தேவரை அமைக்க வேண்டும்.

187. அல்லது கீழ்கூறியபடி இவ்வாறாகவும் தியானிக்கலாம். அறிவு வடிவம் மேலே அழகான முகம் மூன்று கண் பத்துகை உடையவராகவும்

188. ஜடையை கிரீடமாகவும் பிறை சந்திரனை தரித்தவரும், பாம்பை பூணூலாக தரித்தவரும் புலித்தோலை ஆடையாக உடையவராகவும்

189. நர்த்தன ரூபமாகவும் எல்லா அபீஷ்டங்களை கொடுக்க கூடியதும், சிரித்த முகமுடைய வராகவும் ஸ்ரீகண்டரைப் பற்றி கூறப்பட்டு வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

190. மூன்று கண் பதினாறு கையும் இரண்டு பாதம் உடையவராகவும், ஜடையையே கிரீடமாக உடையவரும் சிரஸில் கருவூமத்தம்பூ உடையவராகவும்

191. பலவர்ண ஆடைகளை உடையவரும், ஜடைகளால் அலங்கரிக்கப்பட்டவரும் மேலே தூக்கிய வலது காலை உடையவராயும் அழகான ஆயுதங்களை உடையவராகவும்

192. சிரித்து வளைந்த முகம், இடது காலை உடையவரும் வ்ருஷபம், கொடி, கேடயம், முன்டசிரஸ், அக்னி, ரம்பம் போன்ற கத்தியும்

193. தோகை, யானை இவைகளை இடது கையிலும், எட்டுகைகளை உடையவராக ஸ்ரீகண்டர் கூறப்பட்டுள்ளது. பத்துகையில் திரிசூலம், நாக ஹஸ்தம், பரசு பாசம் இவைகளையும்

194. கதை, தீபம் உடுக்கையும், அபயஹஸ்தமும், நாகாபரணமுடையவரும், இரு குண்டல அலங்காரமும்

195. பாதத்தில் சலங்கையை தரித்தவராகவும், எல்லா லக்ஷணங்களுடன் கூடியவராகவும் ஸ்கந்தரையும் கவுரியையும் இடதுபாகம் உடையவராகவும்

196. இவ்வாறு ஊர்த்துவ தாண்ட மூர்த்தியை தியானிக்கவும், வேறுவித ரூபமாகவும் கூறப்படுகிறது. பலவித ஆயுதங்களோடு இருபது கை உடையவராகவோ

197. பலவித ஆயுதமுடைய பதினெட்டு கைஉடையவராகவும், வலது பாதம் இடது முழங்கால் பாகம் வரை தூக்கியதாகவும் இடதுபாதம்

198. சிறிது வளைந்ததாகவும், இடது கையோ, வலது கையோ நீட்டப்பட்டதாகவும் மற்றொருகை அபயமாகவோ இரண்டு கை மழு அக்னி உடையதாகவோ

199. மழுவின்றி சூலமோ, மற்றொரு கையில் உடுக்கையோ அக்னியின்றி மானையோ உடையவர் காலருத்ரராவர்.

200. மூன்று கண், நான்கு கை, கொடூர மானவரும் சிறிய கத்தியும் கபாலம் வரதம் அபயம் இவைகளை உடையவர் வாமருத்திரராவார்.

201. இந்த வாமருத்ர ரூபமே கத்தியின்றி சூலத்தோடு கூட பீமராகவும் பயத்தைப் போக்க கூடியவராகவும் இருப்பவர் அகோர ருத்திரராவார்.

202. மூன்று கண், நான்கு கை தித்திப் பல்லுடன் கூடிய முகம் மகர குண்டலத்துடன் ஜடையை மகுடமாக கூடியவரும்

203. வில்லும், அம்பும், மான், மழுவுடன் கூடியவராகவும் பூதசிரசின் மேல் இடது பாத தளமுடையவராகவும்

204. அல்லது பத்மபாதுகைகளை பக்த சிரஸின் மேல் வைத்திருப்பவராகவோ இடது பாகத்தில் கவுரியை உடையவரும், சந்திரப்ரபையை தரித்தவராகவும்

205. எல்லா அபீஷ்ட பலன்களை தருவதாக இருப்பவரும் புஜங்கேச ருத்ரராவார். மூன்று கண், இரண்டு கை, சாந்த முகம் சந்திரனை தரித்த ஜடையையும்

206. வரத, அபயத்துடன் கூடியவராகவும், இடதுபக்கம் பார்வதியோடு கூடியவராக அமர்ந்த கோலமாகவும், நின்ற கோலமாகவும் இருப்பவர் வரத்தை அளிக்க கூடியவராவர்.

207. இடது துடையில் அமர்ந்த தேவியோ இடதுபாக தோளில் அணைத்தவளாகவோ அம்பாளின் வலது தோள், ஈசன் (ஸ்கந்தத்தின்) தோளின் மேல் இருப்பதாகவோ

208. ஸ்வாமியின் கை தேவியின் இடுப்பை தொட்டுக் கொண்டோ இருப்பவர் ஸர்வகாமதராவர், கவுரியும் ஈச்வரனும் நான்கு கைகளுடனும்

209. கபாலம், சூலம், வரதம், அபயம் இவைகளோடு கூடியதும் மூன்று கண் இரு கண்ணாகவோ வளைந்த பாதம் உடையவராகவும்

210. வசீகரமான மூன்றுகண்களை உடையவர்களும் பாதத்தின் அடியில் பைரவரை உடையவராகவும் அந்த பைரவரும், ஒருமுகம் நான்கு முகம் ஐந்து முகம் உடையவராகவோ

211. பைரவர்களோடு இல்லாமலோ தாமரை யின் மேலுள்ளவர்களாகவோ இருப்பவர் பக்தர்களுக்கு காலாந்தகர் என்பவர் ஆகும்.

212. இவ்வாறு காலாந்த ருத்திரைகளை கூறி திரிசூலரும் ஸர்வஸித்தி தருமான அர்த்த நாரீஸ்வரைப் பற்றி வ்ருஷப வாஹனராகக் கூறுகிறார்.

213. இரண்டு கையையோ நான்கு கையையோ வரதம் அபயத்துடன் மான் மழுவுடன் கூடியதாகவோ அல்லது அழகான நெற்றிக்கண்ணை உடையவராகவோ

214. நெற்றிக்கண் இல்லாதவராகவும் இடது பாகத்தில் உள்ள உமாசரீரத்தோடு கூடியவர் அர்த்த நாரீஸ்வரர். ஹரிஹரார்த்த மூர்த்தியோவெனில் ஹரியோடு கூடியிருப்பவர் ஆவர்.

215. நான்கு கை, நான்கு முகம், மூன்று கண் சந்திர சேகரராகவும் சூலம் பங்கஜத்தையோ வரத அபயத்தையோ உடையவராக

216. கபாலம், சூலம் கூடியவராகவும் பத்தபத்மாஸனத்தில் நின்றிருப்பவரும் உக்ரமான பார்வையை உடையவருமாக இருப்பவர் நீலருத்ரர் ஆவார்.

217. மூன்று கண்ணும், நான்கு கையும், வரத அபயமும் மயில்தோகை சாமரத்துடன் கூடியவர் பீமருத்ரர் ஆவார்.

218. மான், அக்ஷமாலையுடன் கூடிய கையாகவோ, பழம் அபயகரமாகவோ வரதாபய கையாகவோ சாந்தரூபம் புன்சிரிப்பு முகமாகவும்

219. ஜடையை மகுடமாக தரித்தவரும், அமர்ந்த நிலையில் இருப்பவரும் விருப்பமான பலன்களை தரக்கூடியவர் ஸர்வசர்வருத்ரராவர் ஆவார்.

220. மூன்று கண் உடையவராகவும் வரதம், அபயம், கபாலம் சூலத்துடன் கூடியகை பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவர் ஸர்வருத்ரர் ஆவார்.

221. மான், சூலத்துடன் கூடிய கை, நான்குகை, பாசம், முண்டத்துடன் கூடியதாகவோ மழு, பாசத்தை தரித்தவராகவோ

222. வரதம், அபயம், பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவராகவும், எல்லோருடைய ஸம்ஸார துக்கம் நாசம் செய்யக்கூடிய பவருத்ரர் என கூறப்பட்டுள்ளது.

223. கபாலம் சூலத்துடன் கூடிய கை, வரதம், அபயத்துடனும் உக்கிரமான தெத்திப் பல்லை உடையவரும் உக்ரமான பார்வையை உடையவர்கள் பதினோரு ருத்திரர்களுடைய லக்ஷணமாகும்.

224. அல்லது மான், மழு, வரதம் அபய ஹஸ்தத்துடன் வெண்மையான ரூபம் உடையவரும், வ்ருஷபத்தின் மேலோ அல்லது பத்மாஸனத்திலோ அமர்ந்திருப்பவர்களாகவும்

225. அந்தந்த திக்பாலக உருவங்களாக கபாலீசர் முதலிய ருத்ரர்கள் உள்ளனர். அந்தந்த திக்பாலக உருவங்களாகவும் பலவித ஆயுங்களோடும் கூடியவர் உக்ரர்கள் எனப்படுவார்கள்.

226. ருத்ர உருவம் உடையவர்கள் அந்தந்த திக்பாலர்களுடன் கூடியவராக இருக்கிறார்கள், அதிகப்படியாக கூறுவானேன், எந்த ருத்ர ரூபம் உடைய தேவர்கள் இருக்கிறார்களோ

227. அவர்கள் அமைதியான குணம் உடையவர்களும் மஹேஸ்வரர்கள் எனும் கூறப்படுகிறார்கள். இவ்வாறு ருத்ரர்களின் அமைப்பு முறை கூறப்பட்டு பிரதிஷ்டை கூறப்படுகிறது.

228. இவ்வாறு ஸ்வாமியின் பெயர் (வர்ணத்தோடும்) நிறத்தோடும் பிந்து, நாதத்தோடும் பதிமூன்றாவது எழுத்தான ஓ என்ற எழுத்துடன் கூடி (ஓங்காரத்துடன் கூடி) நான்காவது வேற்றுமையுடன்

229. மூலமந்திரத்தை கூறவும், ப்ரும்ம மந்திரம் அங்க மந்திரம் மேற்கூறியமந்திரங்களை அனுசரித்து கூறவும். ருத்திரன், ருத்ரமூர்த்தி, சாந்த மூர்த்தி இவர்களுக்கு ஈஸ்வர மந்திரமாகும்.

230. அல்லது முன்பு கூறப்பட்டுள்ள மந்திர முறைகளால் கூறவும், உரிய காலத்தில் அங்குரார்ப்பணம், ரத்ன நியாஸம் நயனோன்மீலனம்

231. பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம், மண்டப ஸம்ஸ்காரம் அந்த மண்டபத்தில் ஒன்பது ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையால் குண்டம் அமைத்தல் முதலியவை செய்யவும்.

232. சில்பியை திருப்தி செய்து, பிராம்மணர்களுக்கு உணவு அளித்து வாஸ்து சாந்தி புண்யாக வாசனம் பிம்ப சுத்தி செய்து

233. ரக்ஷõபந்தனம், ஸ்தண்டில அமைப்பு, சயன அமைப்பு, சயனத்தில் பிம்பத்தை எழுந்தருளச் செய்தல், கும்பபூஜை நைவேத்யங்களை ஸமர்பித்தல்

234. தத்வ தத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்தல், புரசு, வில்வம், ஆல், அசுத்தி, போதிமரம், இவைகளின் சமித்துகளாலும்

235. நாயுருவி அரசு கருங்காலி ஆகியவைகளால் கிழக்கு முதலான குண்டங்களில் ஹோமம் செய்து பிரதான குண்டத்தில் புரசு சமித்தாலும் நெய், அன்னம், எள்ளு (திலம்) இவைகளாலும் ஹோமம் செய்யவேண்டும்.

236. இரண்டாவது நாள் பூர்ணாஹுதி செய்து குருதட்சிணை கொடுத்து மந்திரன்நியாஸம் முறைப்படி செய்து ஸ்நபனமும், நிறைய அன்னநிவேதனம் செய்ய வேண்டும்.

237. உத்ஸவத்திற்கு உரிய தேவர்களுக்கு பொதுமுறையான உத்ஸவத்தை செய்யவும். மற்ற எல்லா பூஜைகளையும் லிங்க ஸ்தாபன முறைப்படி செய்ய வேண்டும்.

238. முகலிங்க பிரதிஷ்டை அதற்கு உரிய முறைப்படி செய்யவும், எல்லா கார்யங்களிலும் அதற்காக கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

239. தனிமையாக எவன் இஷ்டப்பட்ட மந்திரத்தை விருப்பப் பயனை உடைவதாக எண்ணி லிங்கத்தில் ஸ்தாபித்து தனக்கு விருப்பமான நக்ஷத்திரத்திற்கு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

240. ஸ்வாயம்புவம் முதலான லிங்கத்தை அடைந்து ஆபிசாரம் முதலான கர்மாவை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் ஆபிசார பலன் செய்பவனையே சேரும், எப்பொழுதுமே அமைதியை தருவதாகவும், புஷ்டியை தரும், கார்யத்தையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விருப்பத்திற்கேற்ற லிங்க பிரதிஷ்டை முறையாகிய முப்பத்தியேழாவது படலமாகும்.

படலம் 35: பாணலிங்க பிரதிஷ்டையின் முறை...

படலம் 35: பாணலிங்க பிரதிஷ்டையின் முறை...

35 வது படலத்தில், பாணலிங்க பிரதிஷ்டையின் முறை கூறப்படுகிறது. அதில் முதலாவதாக, பாணன் என்ற அசுரனின் வேண்டுதலால் அவனுக்கு பூஜையின் பொருட்டு மஹேஸ்வரனால் 14 கோடி லிங்கம் கொடுக்கப்பட்டது. அவன் அந்த லிங்கங்களை வழிபட்டு காலத்தின் முடிவில் நேபாளம், மற்ற நதியின், மத்யபாகம் மலைகள் இவைகளின் போட்டு விட்டான் என்று. பாண லிங்கத்தின் உற்பத்தி கூறப்படுகிறது. பாண லிங்க விஷயத்தில் கால் அங்குலம் என்ற அளவு விருத்தியால் உளுந்து அளவு வரையிலும் கை அளவு வரையிலுமாக உயரத்தின் அளவு எண்ணப்படுகிறது. அளவின்றி விருப்பபடியும் ஏற்றுக் கொள்ளலாம் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. அகலம், உயரம், விஷயத்தில் அளவு விரும்பதக்கதல்ல என்று அளவு முறை கூறப்படுகிறது. பிறகு ரேகை பிந்து கலப்படம் முதலியவைகள் இல்லாததாகவுமோ, அது உள்ளதாகவுமோ லிங்கத்தை ஏற்றுக்கொள்ளவும் என கூறப்படுகிறது. எல்லா லிங்கத்திலும் பாணலிங்கம் விசேஷம் என கூறப்படுகிறது. கிராமங்களின் ஒரே பூமியின் வெளியிலோ உள்பக்கமோ பாணலிங்கத்திற்கு விமானம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு கருங்கல், மண், உலோகம், நல்லமரம், ரத்தினங்கள் இவைகளால் பாண லிங்கத்திற்கு பீடம் அமைக்கவும் என கூறப்படுகிறது. அந்த பீடமும் எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்வதற்காக ஒரே நிறமாக அமைக்கவும் எனக் கூறி அந்த பீடத்தின் சுற்றளவு அளவு முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு நீர்வீழ்ச்சியில் இருப்பதும் மலைகளில் உண்டானதுமான லிங்கம் பாண லிங்க உருவம் போல் காணப்பட்டால் அந்தலிங்கமானது எல்லா நன்மையையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. ரத்னம் உலோகம், பிருதிவி, சம்மந்த பட்ட லிங்கங்களின் விஷயத்தில் பீடமானது அந்த பொருள் உண்டான பொருளாலோ, மற்ற பொருளாலோ அமைத்தல் நல்லது. அதில் எந்த திரவ்யத்தால் லிங்கம் உள்ளதோ அந்த திரவ்ய சம்மந்தமான பீடத்தை அமைப்பது சிரேஷ்டமாகும் என கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட எல்லா லிங்கங்களின் பிரதிஷ்டை முதலான கார்யங்கள் கூறப்படுகிறது என்று (பிரதிக்ஞை) காணப்படுகிறது. பிறகு சைவலிங்க பிரதிஷ்டையில் உயர்ந்ததான காலமானது, உதாரணமாக காணப்பட்டுள்ளது. அவ்வாறே சலலிங்க பிரதிஷ்டையுடன், பிரதிமாதி பிரதிஷ்டையிலும் நடுத்தரமான காலம் கூறப்படுகிறது.

பாணாதி லிங்கத்தின் விஷயத்தில் அதமமான காலம் விரும்ப தக்கதாகும். இந்த பிரதிஷ்டை விஷயத்தில் முமுக்க்ஷúகளின் விஷயம் விசேஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு வஜ்ரபந்தனம் இன்றி செய்யாமல் பாணலிங்க ஸ்தாபனம் ஆரம்பிக்கவும் என கூறி இந்த லிங்கஸ்தாபன விஷயத்தில் செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. முடிவில் எது கூறப்படாததாக உள்ளதோ அந்த விஷயங்களை லிங்கஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்யவும். நான்காவது தின ஹோமமும் சண்டிகேஸ்வர பூஜையும் இங்கு தேவைஇல்லை என கூறப்படுகிறது. பிறகு ஜீர்ணாதி குறைபாடு உள்ள பாணலிங்கத்தை முறைப்படி கொஞ்சங்கமும் நகர்த்தக் கூடாது. தங்கதகடு முதலான திரவ்யங்களால் கெட்டிப்படுத்தி சாந்தியை அனுஷ்டிக்கவும் என கூறி பாணலிங்க விஷயத்தில் ஜீர்ணோத்தாரண விதியில் செய்ய வேண்டிய பூஜா முறைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு அஷ்டபந்தனம் முதலியவைகள் விடுபட்ட போதிலும் தளவரிசைகள் ஜீர்ணம் ஆன பொழுதிலும் சாந்து பூசும் திரவ்யங்கள் குறைந்த பொழுதிலும், அதற்காக சொல்லப்பட்ட முறையையே அனுஷ்டிக்க வேண்டும் என கூறி அந்தந்த கார்யத்தை அனுசரித்து செய்யவேண்டிய விசேஷமுறை காணப்படுகிறது. ஆலயம் கீழே விழுந்தாலும், பின்னமானாலும், ஸ்வாயம் புவம் முதலிய விஷயத்திலும் இந்த முறையானது. ஸமான மாக கூறப்பட்டுள்ளது. பிறகு ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்களின் விஷயத்தில் மந்திர ஸங்கரம் விரும்பத்தக்க தல்ல என கூறப்படுகிறது. இரத்ன லிங்கம், ஸ்வர்ணம் முதலிய உலோக லிங்கம், மிருத்லிங்கம் சலலிங்கம் அசல லிங்கம் ஆகிய விஷயத்தில் பாணலிங்கம் ஸ்தாபனம் செய்யும் முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முடிவில் சலலிங்கமானது, அங்கம் பிராதாணிகம் என இரு வகைப்படும். அதில் சித்ரம் முதலிய பிரதிமைகளின் பூஜைக்காக அந்தந்த மூர்த்தீயின் முன்பாக பூஜிக்கப்பட்டலிங்கம் அங்கம் என கூறப்படுகிறது. அந்தலிங்கம் இன்றி மற்ற லிங்கங்கள் பிராதானிகம் எனப்படும். அந்த லிங்கங்களின் பூஜை எந்த காலத்தில் எவ்வாறு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நித்யோத்ஸவம் முதற்கொண்டதான அந்த பூஜையானது செய்ய வேண்டும். வேறு ஒரு இடத்தில் நித்யோத்ஸவம் முதலியவை சுத்தநிருத்தம் இவையின்றி மற்றவை முன்போல் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இந்த விதியானது ஆன்மார்த்த பூஜையில் விசேஷமாக கூறப்பட்டுள்ளதாக அறிவிக்கிறார் இவ்வாறாக 36வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பாண லிங்க பிரதிஷ்டையை சுருக்கமாக முறையை கூறுகிறேன். பாணன் என்ற அசுரன் ஆதரவோடு கூறுகிறேன். பாணன் என்ற அசுரன் ஆதரவோடு சித்தி அடையும் பொருட்டு

2. பூஜைக்காக பலவித லிங்கங்களை வேண்டினான். பிறகு மஹேச்வரன் பதினான்கு கோடி லிங்கங்களை அர்ப்பணித்தார்.

3. அவைகளை பூஜித்து கால முடிவில் கீழ்கண்ட ஸ்தானங்களில் ஸ்தாபித்தார். லிங்காத்ரியிலும் காலிகா கர்த்தத்தில் ஸ்ரீ நகரத்தில் கன்யா காச்ரமத்தில்

4. கன்யா தீர்த்தத்தில், நேபாளம், மஹேந்திரம், அமரேச்வரம் மற்றும் நதீமத்யம் பர்வதத்திலும் ஸ்தாபித்தார்.

5. உளுந்து அளவு ஓர் முழ அளவு வரை அவைகளின் அளவு உதாரணமாகும். கால் அங்குல வ்ருத்தியாலோ எதேச்சையான அளவோ ஏற்கப்படவேண்டும்.

6. பாண லிங்கத்திற்கு அகலம் சுற்றளவின் அளவு சொல்லப்படவில்லை. ரேகை, பிந்து, களங்கம் முதலியவை சேர்ந்ததாகவோ இல்லாததாகவோ இருக்கும்.

7. எல்லா லிங்க பூஜைகளுள் பாணலிங்க பூஜை விசேஷமாகும். ஸ்நபநத்தில் ஹோமத்தில் தூப, கந்த புஷ்ப நிவேதனத்திலும்

8. எல்லா கர்மாக்களிலும் ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்தில் ஆலயம் பீட விஷயங்களிலும் நியமம் ஏதும் குறிப்பிடவில்லை.

9. க்ராமாதி லக்ஷணமுள்ள எல்லா பூமிகளுக்கும் வெளியிலோ உள்ளிட்டோ பாண லிங்கத்தின் விமானம் கல்பிக்க வேண்டும்.

10. கற்சிலை, மண், உலோகம், நல்லமரம், ரத்னம் முதலிய திரவ்யங்களால் பீடம் ஏற்படுத்த வேண்டும், ஒரே ஜாதியையுடைய பொருளால் எல்லா விருப்பத்தையுமடைய பீடத்தை அமைத்தல் வேண்டும்.

11. லிங்க உயரத்தின் மூன்றில் ஒரு பாகமோ ஐந்தில் இரண்டு பாகமோ லிங்கத்தின் அடிப்பாக அளவோ லிங்கத்தில் பாதி அளவோ பீடமாகும்.

12. விருப்பப்பட்ட அளவோ, தோண்டப்பட்ட அளவுடன் கூடியோ, நீர்வீழ்ச்சியில் இருப்பதாகவும் பாண லிங்கத்தின் உருவ அமைப்பாகும்.

13. எல்லா சுகத்தையும் கொடுக்க கூடிய இன்னொரு லிங்கத்தை பற்றி அறியவும், மலை முதலானவைகளில் உண்டானவைகளும் பாணலிங்கமென அறிய வேண்டும்.

14. உயரமாக இருக்கும் பாகத்தில் முகத்தை பெருத்ததாகவோ மெலிந்ததாகவோ அழகானதும் உருவமுள்ளதும் மேல் பாகத்தை உடையதாக

15. ரத்ன லிங்கம் கூறப்பட்டு உலோக லிங்கத்திலும் இயற்கையானதோ அல்லது பின்னமானதோ அல்லது சேர்க்கப்பட்டதுமான லிங்கம் சிரேஷ்டமாகும் என அறிய வேண்டும்.

16. ரத்ன லிங்கத்திலும் உலோக லிங்கத்திலும் மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்திலும் மற்ற லிங்க விஷயத்திலும் பிரதிஷ்டை கூறப்படுகிறது.

17. சைல லிங்க பிரதிஷ்டையில் சிரேஷ்டகாலம் கூறப்படுகிறது. சந்திர சேகரர் முதலிய சல லிங்க பிரதிஷ்டையில் மத்ய காலம் கூறப்படுகிறது.

18. பாண லிங்க பிரதிஷ்டையில் அதம காலமாகும். யோகிகளின் லிங்க பிரதிஷ்டையில் எல்லா காலமும் உகந்தது. மாஸம், நக்ஷத்ர, வாராதி விதிகள் சொல்லப்படவில்லை.

19. அது போலவே பாண லிங்க பிரதிஷ்டையிலும் காலங்களை நியமிக்காமல் வஜ்ர பந்தனம் முதலியவைகளை செய்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

20. முன்பு கூறப்பட்டுள்ள விதிப்படி அங்குரார்ப்பணம் செய்யவும். ஒன்பது ஐந்து முதலான ரத்னங்களை வைக்க வேண்டும்.

21. பிண்டிகையின் குழி மத்தியில் தங்கத்தையாவது வைக்கவும். லக்ஷணோத்தாரம் செய்ய வேண்டாம். அதன் ஸ்வய உருவமோ அமைப்பாகும்.

22. ம்ருத்ஜலத்தினால் அஸ்த்ர மந்திரத்தினால் லிங்க சுத்தி செய்து ஜலாதிவாஸம் செய்து ஒன்பது, ஐந்து குண்டம் இவைகளை

23. வேதிகையுடன் கூடியதாக லிங்க அதிவாஸத்திற்காக செய்யவும், க்ருஹம் முதலியவைகளில் வேதிகையின்றி ஸ்தண்டிலத்தில் வைத்து பூஜிக்க வேண்டும்.

24. சில்பி உத்வாஸநம், புண்யாஹ பிரோக்ஷணம், பிராம்மண போஜனம் மெழுகுதல் பூமி பரீøக்ஷ வாஸ்து சாந்தி ஹோமம், தர்பணம் இவைகளைச் பரீøக்ஷ செய்ய வேண்டும்.

25. ஸ்தண்டிலத்தில் சயனத்தை வைத்து முன்பு கூறியதுபோல் பூஜை செய்யவும். ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை எடுத்து பஞ்சகவ்ய சுத்தி செய்ய வேண்டும்.

26. பிம்பத்தை பூஜித்து வஸ்திரம் அணிவித்து ரக்ஷõபந்தனம் செய்யவும். சயனாதி வாஸம் செய்து சிவகும்பம் வர்த்தினியுடன் கூட

27. சூத்ரத்துடனும் வஸ்திரத்துடனும் கூடிய அஷ்டவித்யேச்வர கும்பங்களை தேங்காயுடனும் ஸ்வர்ணத்துடனும், சந்தன ஜலத்துடனும்

28. ஸ்தாபித்து அந்தந்த தேவர்களுடன் கூட பூஜிக்கவும், தத்வதத்வேச்வரநியாஸம், மூர்த்தி மூர்த்தீச்வரந்யாஸம் செய்து சிவாக்னி கார்யம் செய்ய வேண்டும்.

29. ஸமித், நெய், அன்னம், பொறி, எள் இவைகளுடன் கூடி நூற்றி எட்டு ஆவ்ருத்தி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

30. மனோன்மணிக்கு பாதி பாகமான ஐம்பத்தி நான்கு ஆவ்ருத்தியும், அங்க மந்திரங்களால் பூஜித்து ஒரு பாகமும் தத்வதத்வேச்வர மூர்த்தி மூர்த்தீச்வர ஹோமம் செய்ய வேண்டும்.

31. லிங்கத்திற்கு வஸ்திர வேஷ்டனம் செய்வித்து நிவேதனம் ஸமர்ப்பிக்கவும். காலையில் ஸ்நான அனுஷ்டானங்களை செய்து மண்டப பூஜை செய்ய வேண்டும்.

32. லிங்கத்தையும், அக்னியையும் பூஜித்து அகோர மந்திரத்தால் நூறு ஆஹுதி செய்யவும். பஞ்சாங்க பூஷணமும் தட்சிணையும் பெற்று சந்தோஷமுடையவராக

33. முஹூர்த்த ஸமயத்தில் மந்த்ர நியாஸம் செய்யவும். தேசிகர்களுக்கு தட்சிணை ஒன்று முதல் ஒன்பது நிஷ்கம் வரை ஆகும்.

34. ஆஸன மூர்த்தி மூலத்துடன் பூஜித்து மூல மந்திரத்தை சிவனிடம் ஸமர்பிக்கவும், கட தீர்த்தங்களால் தேவன், தேவி இந்த மூர்த்தங்களை அபிஷேகிக்கவும்.

35. நைவேத்ய தூப தீபம் கொடுத்து ஸ்னபநாபிஷேகம் செய்விக்கவும். இப்படலத்தில் கூறாதவற்றை லிங்க ஸ்தாபனப்படி செய்ய வேண்டும்.

36. நான்காவதாக சண்டேச பூஜை ஹோமம் இங்கு கூறப்படவில்லை, அர்ச்சனாங்க விதிப்படி பிரதிதினமும் தேவனை அர்ச்சிக்க வேண்டும்.

37. விக்ரஹங்களின் குறை ஏற்படுதல் சிஷ்ட லிங்க விஷயத்தில் இல்லை, ஸாமான்ய பாண லிங்க விஷயத்தில் ஜீர்ணாதி தோஷ துஷ்டங்களை விதிப்படி மாற்றகூடாது.

38. குறை ஏற்படும் விஷயத்தில் ஸ்வர்ணபட்டங்களால் கெட்டியாக பந்தனம் செய்து சாந்தி செய்யவும். கும்பம், ஸ்தண்டிலம் மண்டலம் பீடங்களிலோ

39. முன்பு ஏற்பட்ட இடத்திலோ கிழக்கு திக் முதலான மண்டபங்களிலோ பரமேஸ்வரனையும் வடக்கு திக்கில் மனோன்மனியையும் பூஜித்து

40. அஷ்டவித்யேச்வர ஸஹிதமாக பூஜித்து கந்தாதி உபசாரங்களாலும் பூஜாகார்யங்கள் முடியும் வரை பஞ்சாங்க பூஷணராயும்

41. பூஜை முடிவில் விஸர்ஜனம் செய்து சாந்தி ஹோமம் செய்யவும், பூஜை ஆரம்பத்திலோ முடிவிலோ ஹோமம் செய்ய வேண்டும்.

42. அஷ்டபந்தனம் விடுபட்ட விஷயத்தில் ஸம்ப்ரோசணமின்றி முன்பு கூறப்பட்டதில் பாதி அளவு ஹோமத்தையோ செய்யவும், லிங்கத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து கும்ப ஸ்தானத்தை செய்யவும்.

43. கும்பத்தில் ஆவாஹித்து கும்ப மந்திரங்களை பூஜிக்கவும். ஜீர்ணோத்தாரண விதியில் ஸ்நபனம் ஏற்றத்தக்கதல்ல.

44. சிவாதி கும்பங்களால் அபிஷேகமோ பிரோக்ஷணமோ செய்யவும். ஹோமாபிஷேக க்ரியை முடிவில் ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

45. சுற்றிலும் மருந்து சாத்தும் கர்மாவில் இந்த விதி கூறப்பட்டுள்ளது. கர்ப்ப கிருஹத்தில் மற்ற இடங்களில் குறை இருந்தாலோ, சுதையில் குறை ஏற்பட்டாலோ

46. சிறிது காலம் நிறுத்தி கர்மா செய்யும் சமயத்தில் பூஜையில்லாமல் இருக்கலாம். ஹோமம் முதலியவை இல்லாமல் லிங்கத்தை பூஜிக்க வேண்டும்.

47. சந்தனம் முதலிய உபசாரங்களால் சாந்தி ஹோமம் செய்யவும். குறைபாடுள்ள இடம் சிறியவை, பெரியவை என அறிந்து மூர்த்தி ஹோமம், திசா ஹோமத்தை செய்ய வேண்டும்.

48. பீடமும் தளவரிசையும் குறைவுபட்டால் தேவனுக்கும் பீடத்திற்கும் ஸ்நபனம் செய்யவும். பீடத்திற்கும் தளவரிசைக்கும் இடையில் உள்ள சேர்க்கையில் கடின தன்மை குறைவுபட்டால்

49. வஸ்திரங்களால் லிங்க பீடத்தை சுத்தி செய்து நிர்மால்ய சோதனம் செய்து அதன் பிறகு அஸ்திர தீர்த்த பிரோக்ஷணமும் ஸ்நபனமும் செய்யவேண்டும்.

50. பலதினங்கள் அபிஷேகம் செய்யாமல் இருந்தால் மஹா ஸ்நபனம் செய்யவும். ராஜ்யம், ராஜா அமைதிக்காக மஹாஹவிஸ், நிவேதனம் செய்யவேண்டும்.

51. கிராமஜனங்களுக்கும், கிராமத்தை சுற்றியுள்ள ஜனங்களுக்கும் கர்த்தாவிற்கும் செய்விப்பவர்களுக்கும் ஆசார்யனுக்கும் சாந்திக்காக மஹாஹவிஸ் கூறப்பட்டுள்ளது.

52. ஆலயம் பின்னமானாலும் கீழே விழுந்தாலும் முன் கூறியபடி பிராயசித்தம் செய்யவேண்டும். சுயம்பு லிங்கங்கலிலும் இது ஸாமான்ய விதியாகும்.

53. சில்பியின்றி விடுபட்ட கர்மாவை ஸம்ப்ரோக்ஷண கர்மாவுடன் சேர்த்து செய்யவும். மற்ற பூஜா விஷயங்கள் பொதுவாக லிங்க பிரதிஷ்டையில் கூறப்பட்டவையாகும்.

54. ஸ்வாயம்புவாதி லிங்கங்களில் மந்திர ஸங்கரம் ஏற்றத்தக்கதல்ல, ரத்னஜ லிங்கத்திலும் இந்த பிரகாரப்படி ஸ்தாபனமாகும்.

55. ஸ்வர்ணம், லோஹஜம் முதலிய சலமூர்த்தியிலும் அசலமூர்த்தியிலும் அங்கங்கள் குறைவு ஏற்பட்டால் முன்பு கூறியபடி ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

56. சலமூர்த்தியானது அங்கம், ப்ராதானிகம் என இருவகைப்படும். சுவற்றிலுள்ள படபிம்பங்களுக்கு அதன் முன்பு பூஜைக்காகவும்

57. செய்யப்பட்ட பூஜை அங்கி எனப்படும். மற்றவை பிராதானிகமாகும் அங்கிகளோவினில் சாஸ்திரத்தில் கூறியபடி எந்தெந்த காலத்தில் பூஜைகள்

58. நித்யோத்ஸவம் முதலானகளாக கூறப்பட்டுள்ளதோ அதன்படி செய்வது அங்கி பூஜையாகும். மற்ற பூஜா விஷயத்தில் சுத்த ந்ருத்தத்துடன் முன்புபோல் நித்யோத்ஸவாதிகளை

59. தவிர்த்து முன்பு கூறியபடி ஆத்மார்த்த பூஜையோடு விசேஷமாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பாணலிங்க பிரதிஷ்டா முறையாகிற முப்பத்தியாறாவது படலமாகும்.

படலம் 34: பீட பிரதிஷ்டையின் முறை...

படலம் 34: பீட பிரதிஷ்டையின் முறை...

34 வது படலத்தில் பீட பிரதிஷ்டையின் முறையானது கூறப்படுகிறது. முதலாவதாக இலக்கண பூர்வமாக பீடஸ்தாபனத்தை கூறுகிறேன் என்பது கட்டளை யாகும் பிறகு லிங்கத்தின் உயரம், அகலம், விஷ்ணு அம்சத்தின் சம உயரம் பூஜாம்சத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான அளவுகள், நிழல் இல்லாமல் இருப்பது எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய தான பொருள், பீடம் லிங்க விஷயத்தில் பீடத்தின் சாதாரண இலக்கணம் கூறப்படுகிறது. பிறகு லிங்க அளவாலும் அங்குல அளவாலும், கை அளவாலும், பீடத்தின் சுற்றளவு கூறப்படுகிறது. இங்கு லிங்க உயரத்திற்கு அதிகமாக பீட அளவானது விரும்பத் தக்கதல்ல என்பது கூறப்படுகிறது. பிறகு மானுஷ ஸ்வாயம் புவாதி லிங்கத்திலும் சலலிங்க விஷயத்திலும் சாதாரணமாக சீரிய முறை கூறப்படுகிறது உலோகம் ரத்தினலிங்கம் விஷயத்தில் பாணலிங்க விஷயத்திலும் சதுரம், வட்டம், ஆனதாகவோ பீடத்தின் உருவம் ஏற்கத் தக்கதாகும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் பீடம் அமைக்கும் முறையில் அகலம், நீளம் அளவு கூறப்படுகிறது. அதில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் உள்ள பீடங்களின் விஷயத்தில் பத்மம் அமைக்கும் முறையில், பத்மத்தின் உயர அகலத்தின் அளவு நிரூபிக்கப்படுகிறது. அதற்கு மேல் ஊர்த்வபத்மம் அதோ பத்மம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு பலவித பிம்பங்களுக்கும் ஒரே பீடம் அமைக்கும் முறை எவ்வாறு செய்யப்படுகிறதோ அப்பொழுது அந்த பீடம் அழகு உள்ளதாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிம்பங்களின் விஷயத்தில் பீட அமைப்பானது வட்ட வடிவமாகவும் நீள் வட்டவடிவமாகவும், பரிதி சந்திரன் போன்றும் தாமரைபூ போன்றும் அமைத்தல் வேண்டும். அமர்ந்திருக்கும் பிம்பவிஷயத்தில் அர்த்த சந்திரா காரமாண பீடமே அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு லிங்க சம்மந்தம் பத்ர பீடங்களின் உயர்வு விஷயத்தில் அழகு கூறப்படுகிறது. என கூறி பத்திர பீடம், பத்மபீடம், ஸ்ரீகரபீடம், சாம்பவபீடம், விஜயபீடம், உமாபீடம், சம்பத்கரபீடம், நந்திகா விருத்த பீடம் ஸ்வஸ்திகபீடம், பூர்ண சந்திரபீடம், ஸ்தண்டிலபீடம், ஸ்வாயம்புவபீடம் இவைகளின் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பீட அங்கங்களின் அதிஷ்டானங்களின் சேர்க்கும் முறை கூறப்படுகிறது.

அங்கு கிருதவாரியோ, வட்டமோ, சதுரச்ரமோ செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகின்றன. பிறகு ஸகள நிஷ்கள பீடங்கள் எல்லா பீடவிஷயத்திலும், அளவு விஷயத்தை கூட்டுவது குறைப்பது என்று முறையும் அறிவிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள மூர்த்தி பீடத்தில் கோமுகம் செய்யும் விதம், அதன் அளவுகள் கூறப்படுகின்றன. ஸகள மூர்த்தங்களின் பீடம் கோமுகம் உள்ளதாகவோ அல்லாததாகவோ கிருதவாரி ஸஹிதமாக உள்ளதாகவோ அல்லாததாகவோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு திருவாசியின் அமைப்பு அவற்றை பீடத்தில் சேர்க்கும் முறை கூறப்படுவது, பிறகு ஆவடையாரில் உமாதேவியும், லிங்கத்தில் ஸதாசிவனும் வசிக்கிறார்கள் அந்த இருவர்களின் சேர்க்கை எங்கு செய்யப்படுகிறதோ அதுவே பிரதிஷ்டை என அறிவிக்கப்படுகிறது. அந்தயோகமும் முதலில் செய்வது பிறகு செய்வது என இருவிதமாகும் அதில் முதலில் செய்வது. லிங்கஸ்தாபன கர்மாவிலே கூறப்பட்டுள்ளது. இரண்டாவது, கிரியை, இப்பொழுது கூறப்படுகிறது. என்று சொல்லி பீடஸ்தாபன முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் முதலாவதாக மானுஷலிங்க விஷயத்தில் பீடமானது ஜீர்ணம் முதலிய தோஷங்கள் ஏற்பட்டால் வேறு பீடத்தை ஸ்த்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அவ்வாறே முன்பு எந்த அளவுள்ளதாக பீடம் இருந்ததோ அந்த அளவு உடையதாகவே பீடத்தை ஸ்தாபிக்க வேண்டும். வேறு வடிவம் உடையதாக ஸ்தாபிப்பதில் குற்றம் ஏற்படும் இவ்விதமே தெய்விக, ஆர்ஷ, பாண, ஸ்வர்யம்புவாதி லிங்க விஷயத்தில் எல்லா இடத்திலும் வட்ட வடிவ பீடமோ அல்லது முன்பு இருந்த உருவத்தை உடைய பீடமோ ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அந்த பீடமும் முன்பு எந்த திரவ்யத்தால் நிர்மாணிக்கப்பட்டதோ அந்த திரவ்யத்தினாலேயோ அதை விட உயர்ந்த திரவ்யத்தினாலேயோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது பிறகு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள படி எல்லா கிரியையும் செய்யவேண்டும். என்ற விசேஷமானது இங்கு கூறப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட முறைப்படி அங்குரார்பணம் செய்து வேதிகை ஸ்நானமண்டபம் குண்டத்துடன் கூடியதாக மண்டபம் ஏற்படுத்தவும். பிறகு விசேஷ பூஜை செய்து பரமேஸ்வரனை ஸ்தோத்ரம்  செய்து அடிக்கடி வணங்குவதை அறிவித்து அடைந்த உத்தரவை உடையவனாக பூஜையை ஆரம்பிக்கவும் என கூறப்படுகிறது.

பிறகு லிங்கத்தின் முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்த்தனி அதை சுற்றிலும் எட்டு கும்பங்களை நூல் முதலியவைகளால் அலங்கரித்ததாக சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்து பிறகு அங்கு செய்யவேண்டிய பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு அவ்வாறு அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறையும் கூறப்படுகிறது. பிறகு லிங்கத்தின் முன்பாக பூஜிக்க பட்ட கும்பங்களை வேறு ஸ்தண்டிலத்தில், ஸ்தாபித்து பிரதிதினமும் நித்ய பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தங்க கோடாலியால் பழுது அடைந்த குற்றத்தால் தோஷம் அடைந்த பீடத்தை அஸ்திமந்திரத்தால் பிரித்து அதில் உண்டான சாந்து பூச்சு முதலியவைகளை ஆழமான ஜலத்தில் போட்டுவிடவும். பிறகு அங்கு பிரதிதினமும் சாந்திஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு லிங்கத்திற்கு மெருகு ஊட்டுதல் முதலியவையும் கஷாயோதக, கோமூத்திர கோசானம் இவைகளால் சுத்தி செய்து பிறகு பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம். இவைகளால் வஸ்திர, புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேறு மண்டபமத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து. அதில் பிண்டிகையை ஸ்தாபித்து அதில் யோனி அங்கமான அடையாளத்தை குறிப்பிடவும் பிறகு மிருத்யுஞ்சய மந்திரத்தை கூறிக்கொண்டு தேன், நெய் இவைகளால் ஸந்தர்பணம் செய்து அவ்வாறே தேன் நெய் கூடிய தாம்பர பாத்திரம், வெங்கல பாத்திரத்தையும், காண்பித்து தான்ய ராசிகளுடன் கூடிய பசு கன்று, கன்யாஸ்திரி இவைகளை மந்திர பூர்வமாக காண்பிக்கவும். பிறகு பீடத்திற்கு சுத்தி செய்வதன் மூலம் வஸ்திரசந்தனம் இவைகளால் அலங்கரித்து (பிராம்மணர்களுக்கு உளவு அளித்தல்) கிராமப் பரட்சிணம் பூர்வமாக ஜலாஸ்ரயமான நதீ முதலிய இடங்களை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது.

பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஜலாதிவாசம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிறகு யாக மண்டபத்தை அடைந்து ஆசார்யன் அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வதன் மூலம் அவனை வழி அனுப்பி பிராம்மணர்களுக்கு உணவு அளித்து பசுஞ் சாணத்தால் மெழுகி புண்யாக வாசனம், வாஸ்த்து ஹோம விதானம் இவைகளால் ஸம்ஸ்காரம் செய்து தோரணம், விதானம், கொடி, தர்பமாலை, புஷ்பமாலை இவைகளால் அலங்கரித்து எல்லா அமைப்பும் கூடியதாக அமைத்து துவாரங்களை அஸ்திரமந்திரங்களால் பிரோக்ஷித்து துவார தேவதை பூஜைகளையும் செய்து மண்டபம் நுழைந்து தன்னை அங்கந்நியாஸ, கரந் நியாஸ, அந்தர்யாகம் முடித்தவராக பாவித்து ஞான கட்க ஹஸ்தத்துடன் செய்யப்பட்ட ஆத்ம பூஜை உடையவராக அஸ்திரகும்ப பூஜையையும் திக் பாலகர்கள் பூஜையையும் செய்து குண்ட அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஜலத்தில் அதிவாசம் செய்யப்பட்ட பிண்டிகைகளை, மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்னாந மண்டபத்தில் மிருத், கஷாய, உதகங்களாலும், பஞ்சாமிருதங்களாலும், தர்ப சந்தன ஜலங்களாலும், ஸ்நாநம் செய்வித்து இரண்டு வஸ்திரம் சாத்தி அதன் கோமுக பாகத்திலோ கழுத்து பாகத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து அதில் தோல் முதலியவைகளால் சயனம் அமைத்து ஆசனம் கல்பித்து பிண்டிகையை வைக்கவும் என்று கோமுகத்தின் சயனாதி வாச விதி கூறப்படுகிறது. பிறகு நூல்வஸ்திரம் இவைகளாலும் கூர்ச்சம் இவைகளாலும் தேங்காய் மாவிலை கூடியதும் நவரத்தினம், ஹேம பங்கஜத்துடன் கூடியதுமான வர்தனீ கும்பத்தை வைத்து அதன் மத்தியில் ஆசனத்துடன் தேவியை சிவந்த புஷ்பங்களால், அர்ச்சிக்கவும் அந்த கும்பத்தை சுற்றி நூல் வஸ்திரம், ஸ்வர்ணம், தேங்காய், மாவிலையுடன் கூடிய தான எட்டு வர்தனிகளில் வாமா முதலிய அஷ்டசித்திகளை பூஜித்து ஸ்தாபனம் செய்யவும் என கூறி அதில் முர்த்தி மூர்த்தீச்வரி நியாஸ முறையும் தத்வதத்வேச்வரி நியாஸ முறையும் பூஜை செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் அந்தர்பலி பஹிர்பலி கொடுக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது.

பிறகு காலையில் ஆசார்யன், மூர்த்திபர்களுடன் கூடி சுத்தமாக அனுஷ்டிக்கப்பட்ட நித்ய கிரியைகளை முடித்து வந்து ஸாமான்யார்க்ய ஹஸ்த்தத்துடன் திவாரதேவதைகளை பூஜித்து, சந்தனம் முதலியவைகளாலும் நைவேத்யங்களாலும் ஆவுடையார், வர்தனியையும் பூஜித்து பூர்ணாஹுதிவரை ஹோமத்தை முடித்து ஆவுடையாரை பலவித வாத்ய, நாட்டிய, கீதங்களுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து கர்பக்கிரஹம் அடையவும் பிறகு லிங்க ஸ்தானபத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஆவுடையாரை லிங்கத்தில் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு பாண லிங்கத்தில் ஆவுடையாரை சேர்க்கும் முறையில் விசேஷமான விதி கூறப்படுகிறது. பீடத்தின் பள்ளத்தில் ரத்தினங்கள் தங்கம் இவைகளை போட்டு முன்பு போல் எல்லாம் அனுஷ்டிக்கவும் என ரத்ன நியாஸ விதி கூறப்படுகிறது. பிறகு அஷ்டபந்தனமோ, திரிபந்தனமோ சேர்த்து புண்யாஹ வாசனம் ஸம்பு ரோக்ஷணம் செய்து சாந்தி கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்யவும். பிறகு பீடத்தில் ஆசன மந்திரத்தால் பூஜிக்கவும். முன்பு லிங்கத்தின் முன்பாக ஸ்தாபிக்கப்பட்ட சிவ கும்பவர்தனியையும் யாகமண்டபத்தில் வாமா முதலிய எட்டு சக்திகளை உடைய கும்பங்களுடன் கூடிய தேவி வர்தனியையும் லிங்கத்திற்கு முன்பாக ஸ்தாபித்து ஜீவன் நியாஸம் செய்து அபிஷேகம் செய்யவும். சந்தனம் முதலியவைகளால் அர்ச்சனை செய்யவும். பிறகு இந்த பூமியில் எந்த காலம் வரைசூர்யனும், சந்திரனும் இருக்கிறார்களோ அந்த காலம் வரை தேவியாகிய உன்னுள் சாந்நித்யமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்ய வேண்டும். பிறகு லிங்கஸ்தாபனத்தில் கூறிஉள்ளபடி பாதி அளவு தட்சிணையை ஆசார்யன் முதலானவர்களுக்கு கொடுக்கவும் பிறகு நான்கு நாள், மூன்று நாள், இரண்டுநாள், ஒரு நாளோ, ஹோமத்துடன் கூடிய விசேஷ பூஜை செய்யவும் நான்காவது தினத்திலோ முதல் தினத்திலோ சண்டிகேஸ்வரர் பூஜை செய்யவேண்டும். பாணலிங்க விஷயத்தில் சண்டிகேஸ்வரர் பூஜை செய்யலாம் என்றும் செய்யக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பீடமுனி ஸம்ஸ்தாபனத்தின் பலன் லிங்கபிரதிஷ்டையின் பலனுக்கு ஸமமாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு 35 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் பீடம் அமைப்பதைப்பற்றி கூறுகிறேன், இலிங்கத்தின் உயரத்திற்கு தக்க விசாலமான பீடம் எல்லா பயனையும் அளிக்கத்தக்கது.

2. இலிங்கத்தின் விஷ்ணு பாகத்திற்கு சமமான உயரமுள்ளதும் ரேகை நிழல்விழும் தோஷமில்லாததும் பூஜைக்கு உகந்த ருத்ர பாகம் வெளியில் தெரிந்து உள்ளதுமான

3. பீடத்தை மனிதன் அமைத்து விட்டால் எதுதான் கைகூடாது, இலிங்கத்தின் உயரத்திற்கு சமமாகவோ லிங்கத்தின் உயரத்தில் பாதியோ

4. இருபத்தேழு அளவுகள் இருபத்தாறுபாக அளவாகவும், லிங்கத்தின் அகலத்தில் மூன்று பங்கு அதிகமாகவோ ஐந்து பங்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

5. மூன்று, ஐந்து பங்குகளின் இடைவெளியில் பிரிக்கப்பட்டதில் இருபத்தியேழு பங்கு அளவாகும், இலிங்கத்தில் அளவை முன்னிட்டு பீடத்தின் அகலம் கூறப்பட்டுள்ளது.

6. பதினைந்து அங்குலம் முதல் கொண்டு ஒவ்வொரு அங்குலமாக கூட்டினாலும், பதினாறு அங்குலம் முதல் இருபது அங்குலம் வரை பீடத்தின் அகலம் இருக்கலாம் என்பதாகும்.

7. அல்லது ஒரு முழம் முதல் ஒன்பது முழம் வரை லிங்கத்தின் பீட அகலம் இருக்கலாம். லிங்கத்தைக் காட்டிலும் அதிகமாக பீடத்தின் அகலம் இருக்க கூடாது.

8. நுனிபாகம் அடிபாகத்திற்கு சமமாக இருக்க வேண்டும், அடிபாக அளவில் குறைவாக இருக்க கூடாது. ஆறு அம்சத்திலிருந்து பதினாறு அம்சம்வரை அடிபாகம் இருக்கலாம்.

9. ஒரு பங்கு நுனி அதிகமான அகலமாகியும் பீடமும் சொல்லப்பட்டுள்ளது. பிரும்ம பாகத்தில் விஷ்ணு பாகத்தின் உயரத்தை

10. நான்கு பாகம்பண்ணி அதில் மூன்று பாகம் பீடத்தின் உயரம் இருக்கலாம், பிரும்ம பாகம் விஷ்ணு பாகம் எட்டு பாகமாக பிரித்தால் ஒன்பது பாக உயரம் என்பதாக ஆகும்.

11. நந்த்யாவர்த்தம் என்ற சிலை விலக்கத்தக்கது, மானுஷ லிங்கத்திலும் இவ்வாறு பீடம் கூறப்பட்டுள்ளது. ஸ்வயம்பு முதலிய லிங்கத்திலும்

12. ஆன்மார்த்த சல லிங்கத்தின் விஷயத்திலும் பொதுவாக சில விதி சொல்லப்படுகிறது. பீடம் லிங்கத்தின் உயர அளவுக்கு சமமாகவோ அரை பங்கு 2 பங்கு அதிகமாகவோ இருக்கலாம்.

13. அகலத்தில் மத்தியின் ஏழு அம்சத்தின் உயரம் பதினேழு மானாங்குல அளவு ஆகும், அடிபாக அளவாக முன்புள்ளபடி ஏற்க வேண்டும்.

14. அகலத்தின் பாதியளவுக்கு ஸமமான உயரத்தையோ அகல சமமான உயரமோ பாதியளவு அதிகமான உயரமோ இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் ஏழாக பிரிக்கப்பட்டதில் உயரம் பதினேழுமானாங்குல அளவாகும்.

15. ஸ்வயம்பு முதலிய லிங்கங்களில் லிங்கத்தின் உயரம் அகலம் பீடத்தில் இல்லாவிட்டால் பீடத்திற்கு தோஷமாக ஆகாது. எல்லாவற்றையும் ஆராய்ந்துதான் பீடம் அமைக்க வேண்டும்.

16. நாற்கோணமாகவோ அல்லது வட்டமாகவோ பீடம் இருக்கலாம். உலோகத்தினாலான லிங்கத்திற்கும் இரத்தினத்தினாலான லிங்கத்திற்கும் பாண லிங்கத்திற்கும் இது பொருந்தும்.

17. திருமேனியின் உயரத்தில் முக்கால் பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ பீட அகலமாகும். நடுவில் பதினாறளவு அம்சம் பீட அளவு ஆகும்.

18. உயரம் பதினேழு பாகமுடையதாகும். நாற்கோணமாகவோ, நீள்சதுரமாகவோ இரண்டு மடங்கு வரையிலும் அதன் நடுவில் முன்பு போலவே பீடம் அமைக்க வேண்டும்.

19. பீடத்தின் நீளம் கூறப்பட்டு அதன் உயரம் கூறப்படுகிறது. அகலத்திற்கு ஸமமான உயரமும் அதன் பாதியோ அதன் இடைவெளிபட்ட அளவோ

20. பத்தில் ஓர்பாகமும், பதினேழு மானாங்குலமும் ஆகும், அகலத்திலிருந்து கால் பாகம் அதிகமாக உயரம் அமைக்க வேண்டும்.

21. நடுவில் எட்டாக பிரிக்கப்பட்டதில் நடுவில் ஒன்பது அளவாக அறியவும். பிம்பத்தின் உயர அளவின் நான்கு பாக அளவு பத்ம பீடத்தின் உயர அளவாகும்.

22. பிம்ப உயரத்தின் எட்டில் ஓர்பாகம் பீடத்தின் உயரமாக கூறப்பட்டுள்ளது. நடுபாகத்தை எட்டாக பிரித்து ஒன்பது உயரமங்குலமாக அமைக்கவும்.

23. நின்ற கோல அமைப்பு பிம்பத்திற்கு பாத தளத்தின் நீள அளவில் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால் பன்னிரெண்டங்குலம் வரை தாமரையின் நுனி அகல அளவாகும்.

24. அமர்ந்திருக்கும் கோலத்தின் தாமரை அகல அளவானது இருபத்தி மூன்று மாத்ரையாகும். அரையங்குலம் முதல் முப்பத்தியாறு கையளவு வரை உயர அளவாகும்.

25. பீடத்தின் மூன்று பாகத்தின் ஓர் பங்கு அதிகமாக அடிப்பாக பரப்பளவு உயர்வாக கூறப்பட்டுள்ளது. நடுவில் பதினாறு பங்காக்கப்பட்ட தில் பன்னிரன்டம்சமின்றி

26. அகலம் ஏழங்குல அளவாகும், அது பத்து விதமாக கூறப்பட்டுள்ளது. மத்தியில் அகலத்திற்கு சமமான நீளமும் இருமடங்காகவோ ஆகும்.

27. எட்டாக பிரிக்கப்பட்டதில் நீளம் ஒன்பதாக கூறப்பட்டுள்ளது, மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை அதன் உயரத்தில் பிரிக்கப்பட்டு

28. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பாகங்களால் மேல்நோக்கிய தாமரையமைப்பைச் செய்யவும், மீதியுள்ள அளவுகளால் கீழ்நோக்கிய தாமரை அமைப்பு மேல்தளம் இன்றி அமைக்க வேண்டும்.

29. நான்கு, எட்டு, பத்து, பன்னிரெண்டு தள அமைப்பாகவோ அழகான உயரத்தை உடையதாக நின்ற கோல பிம்ப அமைப்பின் பீடமாக கூறப்படுகிறது.

30. அதிகமான உயரமுடையதாக ஆஸனத்திற்கு மேல் அமைக்கவும். மூன்று பாகத்திலிருந்து பதினோறு பாகம் வரை நீள அகலமுமோ

31. இரண்டு பக்கங்களிலும் ஒன்று, இரண்டு மூன்று பாகமோ பிரித்து மீதியுள்ள பாகத்தால் நடுவில் பத்ரம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

32. ஸபத்ரம் என்ற அமைப்பாகவோ விபத்ரம் என்ற அமைப்பாகவோ பீடத்தை எல்லா பிம்பங்களிலும் நன்கு அழகாக இருக்கும்படி ஓர் பீடமாகவே அமைக்க வேண்டும்.

33. வட்டம், நீள்வட்டம் அரை வட்டம் இவற்றில் ஓர் அமைப்பு முறையாக தாமரையின் உருவை அமைக்கவும், அதில் அமர்ந்த கோல பிம்பத்திற்கு அரைவட்ட அமைப்பை உடைய பீடம் செய்ய வேண்டும்.

34. லிங்கங்களின் பீட உயரத்திற்கு அழகு கூறப்பட்டுள்ளது, அளவில் பதினாறில் ஓர்பங்கு பாதுகை என கூறப்படுகிறது.

35. நான்கம்சம் ஜகதீ எனப்படும், மூன்றம்சம் குமுதம் எனப்படும். எட்டிதழ் தாமரை ஓரம்சம் மூன்றம்சத்தில் கர்ணம்

36. ஓர்பாகத்தால் பட்டிகையும் இரண்டு பாகத்தினால் மஹாபட்டிகையும் க்ருதவாரி என்பது ஓர் அம்ச அளவால் அமைக்கவும், மேற்கூறிய வகை பத்மபீடம் எனப்படும்.

37. பதினாறாக பிரிக்கப்பட்ட உயரத்தில் இரண்டு பாகம் பாதுகையாகும், ஐந்தம்சம் பத்மம் என்பதாகும். இரண்டுபாகம் வட்ட அமைப்பாகும்.

38. நான்கம்சம் மேல் தாமரையமைப்பையும் இரண்டம்சத்தினால் பட்டிகையும், க்ருதவாரி என்ற அமைப்பு ஓர் அம்சத்தாலும் அமைப்பது பத்ம பீடம் எனப்படும்.

39. இருபத்தியொரு பாகத்தில் மூன்று பாகங்களால் பாதுகை என்ற அமைப்பும் மேலே ஐந்தம்சங்களால் தாமரையும் ஓர் அம்சத்தால் கம்பமும் மேலே மூன்று பாகங்களால்

40. கர்ணமும், ஓரம்சத்தால் கம்பமும் ஆகும். ஐந்து பாகங்களால் மேல் தாமரையமைப்பும், இரண்டம்சங்களால் பங்த்தி என்ற அமைப்பையும் மேலே க்ருதவாரி என்ற அமைப்பை ஓர் பாகத்தால் செய்ய வேண்டும்.

41. பதினாறு பாகமாக பிரிக்கப்பட்ட உயரத்தில் ஒன்றரை பாகம் உடையது பாதுகையாகும், பந்த பாகத்தினால் 4 பாகம் ஜகதீயும், ஒன்றரை பாகத்தால் பத்மத்தின் உயரமும்,

42. ஓர் அம்சத்தால் மேலுள்ள கம்பமும் இரண்டம்சத்தால் குமுதம் என்ற பாகமும் ஆகும். அதற்கு வட்ட வடிவ அமைப்பும் பட்டிகை ஓர்பாக அளவாலும் ஆகும்.

43. இரண்டு அம்ச அளவால் கர்ணமும், பத்மம் என்ற பாகமும் அரையம்ச அளவால் பட்டிகையும் மீதியுள்ள அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்பும் செய்வதால் ஸ்ரீகரம் என்கிற பீடமாக கூறப்பட்டுள்ளது.

44. இருபத்தைந்தாக பிரிக்கப்பட்ட பாகத்தில் ஓரம்சம் பாதுகையாகும், ஓர் பாகத்தால் பத்மமும் அதற்கு வாஜநம் என்ற அமைப்பு ஓர் பாகத்தாலும்

45. நான்கு பாகத்தால் ஜகதீயும் தாமரையின் அமைப்பு மூன்று பாகமும் களம் என்ற பாகம் பாதி பாகத்தாலும் மூன்று பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால் வட்ட வடிவமும்

46. குமுதம் என்ற பத்மம் ஓர் பாகத்தினாலும் வாஜனம் என்ற அமைப்பு ஐந்து பாகத்தினாலும் இரண்டு பாகத்தினாலும் கர்ணம் என்ற அமைப்பும் ஓர் அம்சத்தால் வாஜனமும்

47. தாமரை ஓர் பாகத்திலும் இரண்டு பாகத்தால் மஹாவாஜநமும், ஓர் அம்சத்தால் கம்பமும் பாதியால் க்ருதவாரி என்ற அமைப்பும் கூறப்பட்டுள்ளது.

48. இவ்வாறு சாம்பவ பீடம் அமைக்க வேண்டும். வேறு பீடம் கூறப்படுகிறது. பீடத்தின் உயரத்தை இருபத்தியொன்றாக பிரித்து

49. ஓர் பாகத்தால் பாதுகையும் நான்கு பாகத்தினால் ஜகதீ என்ற அமைப்பாகும். ஓர் பாகத்தால் கர்ணமும், ஓர் பாகத்தால் பத்மமும் மூன்று பாகத்தால்

50. குமுதமும் ஓர் அம்சத்தால் பத்மமும், ஓர் பாகத்தால் வாஜனமும் கர்ணம் இரண்டு பாகத்தாலும் ஓர் பாகத்தால் வாஜனமும் ஓர் அம்சத்தால் பத்மமும்

51. இரண்டு பாகத்தால் மஹாபட்டியும் பத்மம் ஓர் பாகத்தாலும் கம்பம் ஓர் பாகமும், மேலே க்ருதவாரி அமைப்பு ஓர் பாகமாயுள்ளது. விஜயம் என்ற பீட அமைப்பாகும்.

52. பீடத்தை பதினெட்டாக பிரித்து ஓர் அம்சம் பாதுகை எனப்படும், ஒன்றரை பாகம் பத்மமும், கம்பம் ஓர் அம்சமுமாகும்.

53. நான்கு பாகத்தால் ஜகதீயையும் மூன்றம்சத்தால் குமுதமும் ஓர் பாகத்தால், கம்பமும் இரண்டு பாகத்தால் கர்ணம், ஓர் பாகத்தால் கம்பமுமாகும்.

54. இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும், ஓர் பாகத்தால் வாஜநமும் அரை பாகத்தால் க்ருதவாரி என்ற அமைப்புடன் கூடியது உமா பீடம் எனப்படும்.

55. பன்னிரெண்டாக, பிரிக்கப்பட்ட உயர பாகத்தில் ஓர் பாகம் பாதுகை, ஓர் அம்சம் பத்மம் இரண்டு பாகத்தால் ஜகதீயும் பத்மமும் ஆகும்.

56. இரண்டு பாகத்தினால் தாமரையும், கர்ணம் பாகம் அரைபாகமும், அரை பாகத்தால் மேல்பாக தாமரையமைப்பும் குமுதமும், இரண்டு பாகத்தால் பத்மமும் அரைபாக, அரைபாகத்தால்

57. கம்பமும், கர்ணமும் அரைபாக, அரைபாகத்தில் கம்பமும் பத்மமும் அரைபாகத்தினால் மஹா பட்டீயம் மேல்பாகத்தில் ஒன்றரை பாகத்தினால்

58. க்ருதவாரியையும் உடையது (பீடம்) ஸம்பத்கரம் எனக் கூறப்பட்டுள்ளது. பீட உயரத்தின் பதினொன்றாக்கப்பட்டதில் ஓரம்சம் பாதுகையாகும்.

59. ஜகதீ மூன்றம்சமும் கம்பம் ஓர் அம்சமும், கர்ண பாகம் இரண்டு பாகத்தினாலும் ஓர் அம்சத்தால் வாஜநமும் இரண்டு பாகத்தால் மஹாபட்டீயும் ஆகும்.

60. க்ருதவாரி ஓர் பாகத்திலும் அமைப்பது நந்திகாவ்ருத்தம் என்ற பீட அமைப்பாகும். உயரத்தை பதினைந்து பாகமாக்கி அரைபாக அளவு பாதுகம் ஆகும்.

61. அரை பாகத்தினால் கம்பமும், பத்மமும் மூன்றம்சத்தாலும் களம் அரைபாகத்தாலும் ஓர் அம்சத்தினாலும் பத்மம் இரண்டம்சத்தினால் குமுதம் ஓர்பாகம் பத்மம்

62. அரைபாகத்தினால் களமும் மூன்று பாகத்தினால் பத்மமும் ஒன்றரை பாக அளவில் பட்டிகையும், அரையளவால் க்ருதவாரியும் அமைப்பது ஸ்வஸ்திக பீட அமைப்பாகும்.

63. உயரத்தை பதினெட்டாக பிரித்ததில் இரண்டு பாகம் பாதுகை ஆகும். மூன்று பாகத்தினால் பங்கஜமும் பட்டிகை ஓர் அம்சத்தினால் நிர்மாணித்து.

64. ஆறு பாகங்களால் கர்ணமும் வாஜனம் ஓர் பாகத்தினாலும் இரண்டு பாகத்தினால் தாமரையும் கூறப்பட்டுள்ளது.

65. ஓர் பாகத்தினால் க்ருதவாரி அமைப்பதினாலும் பூர்ண சந்திர பீடம் எனப்படுகிறது. உயரத்தை பதினாறு பங்காக்கி ஓர் பாகத்தினால் பாதுகையும்

66. இரண்டு பாகத்தினால் பத்மமும், ஓர் பாகத்தினால் கம்பமும் ஆறு பாகத்தினால் களமும் ஓர் பாகத்தினால் கம்பமும் பத்மம் இரண்டம்சத்தினால் இரண்டு பாகத்தினால்

67. மஹாபட்டீயும் ஓர் பாகத்தினால் மேல் பாகத்தில் க்ருதவாரியும் அமைக்கவும். இவ்வாறுள்ளது ஸ்தண்டில பீடமாகும்.

68. உயரத்தில் பதினெட்டு பங்காக்கி இரண்டு பாகம்  பாதுகையாகும், ஐந்து அம்சம் கம்பமாகும். இரண்டு பாகம் பத்மம் எனப்படும்.

69. ஓர் பாகத்தினால் கம்பம், மற்றவை முன் மாதிரியேயாகும். பத்தொன்பது பாகமான உயரத்தில் இரண்டு பாகத்தினால் பாதுகையும் ஆகும்.

70. ஓர் அம்சத்தினால் கம்பமும், திரும்பவும் இரு பாகத்தினால் கம்பமும், இரு அம்சத்தினால் பத்மமும் கம்பமும் ஆகும், மற்றவை முன்மாதிரியேயாகும்.

71. மேற்கூறிய அமைப்பு ஸ்வயம்புவ பீட அமைப்பாகும். அதிஷ்டான அமைப்புகள் எவை உண்டோ அவை உபபீடங்களாக அமைக்கப்படவேண்டும்.

72. பீட அமைப்பின் மேல் ஒரு பாகம் ஒன்றரை பாக்ததினால் க்ருதவாரியும் இரண்டு பாகத்தினாலும் க்ருதவாரி அமைக்கவும். விருப்பப்பட்ட உயரத்தில் பிரிக்கப்பட்ட அம்சத்தில்

73. ஸமமாக வெளிக்கொணர்ந்து மஹா பட்டிகையை வெளிப்படையாக உள்ளதாக அமைக்கவும். க்ருதவாரி அமைப்பை வட்டமாகவோ நாற்கோண வடிவமாகவோ அமைக்கலாம்.

74. பலவிதி அதிஷ்டான முறைப்படியுடன் கூடியதாகவோ அமைக்கவும். கர்ணபாக அளவை ஏற்று கம்பம் முதலியவைகளில் சேர்க்க வேண்டும்.

75. கர்ணம் என்ற பாகத்தை அதன் அளவுப்படி அமைக்கவும். ஓர்யவை அதிகரிப்பால் எட்டு மாத்திரையளவு வரை கூட்டுவதையும் குறைப்பதையும் செய்ய வேண்டும்.

76. பீடங்களின் எல்லா அமைப்புகளிலும் ஸகளம், நிஷ்களம் சலபிம்பம், அசலபிம்பம், உலோகம், ரத்னஜம், பாணலிங்கம் இவைகளின் அமைப்புகளாலும்

77. கருங்கற்சிலை, மரத்தாலானவை, மண்மயமானவை வேறு வித பொருட்களினாலோ செய்யப்பட்ட விஷயத்திலும் மேற்கூறிய அமைப்புகள் அமைக்கவும். நிஷ்கள பிம்பத்தில் அதனளவுப்படி பீடம் அமைத்தல் வேண்டும்.

78. பீடத்தின் உயரத்தை மூன்று பங்காக்கி அடிபாக அளவினால் கோமுகமும் அதன் பாதியால் நுனியின் அகலமும் எல்லா லிங்கங்களிலும் உரிய அளவாகும்.

79. பீடத்தின் அரைபாக அளவால் பாதசிலையும் மத்தியில் உயரஅளவான பதினேழு அளவாக கோமுகத்தின் அளவாகும்.

80. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி, கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி, கால் பாகம் குறைவாகவோ ஐந்து, மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

81. கோமுகத்வாரம் அடிப்பாகத்திலும் அதன் நுனி கோமுகத்தின் அளவால் முக்கால் பாகம் பாதி கால்பாகம் குறைவாகவோ ஐந்து மூன்று அம்ச அளவாகவோ அமைக்க வேண்டும்.

82. ஏழம்சத்தில் ஐந்து நான்கு, மூன்று பாகமாகவோ நுனியில் அமைக்கவும், ஜலதாரை அமைப்பு கம்பீர அமைப்புள்ளதாகவும் அதே அமைப்பாகவும் இரண்டு பாக அமைப்பாகவோ அமைக்க வேண்டும்.

83. மூலகம்பம், அதற்கு மேல் பத்மமும் இரு கம்பங்களிலும் அதன் மேல்கம்பம் என்ற அமைப்பை ஒன்று, இரண்டு ஒன்று பாகங்களால் முறைப்படி அமைக்கவும்.

84. கோமுகத்தின் கன அளவின் அளவு கூறப்பட்டுள்ளது. கர்ணத்தின் பாதியளவு அதன் அளவாகும். பீடத்தின் உயரத்தை பிரித்து

85. இருபத்தியொன்றாக செய்து நான்கம்சத்திலிருந்து ஓர்பாக அதிகரிப்பால் பத்து பாகம் வரை பீடத்தின் கோமுக அமைப்பாகும்.

86. ஒரே அமைப்புள்ள கோமுகம் உயர்ந்ததாகும். அவ்வாறில்லையெனில் பிளவுபடாததாக அமைக்கவும். உலகானுபவத்தை விரும்புபவர்களுக்கு பிளவு படாத பிண்டிகை லிங்கத்திற்கு விரும்பத்தக்க தல்ல.

87. மற்றவைகள் உயர்ந்ததாக ஆகும். ரத்னலிங்கத்திலும் ஸ்படிகாதி லிங்கத்திலும் ஒரே கல்லாக இருப்பது விரும்பத்தக்கதாகும், அவ்வாறில்லையெனில் பிளவுபட்ட கற்களாலும் அமைக்கலாம்.

88. பிளவுபடுவது அங்க அமைப்புவரை யிலுமோ, மேலுள்ள பாகம் பிளவுபடாததாக இருக்க வேண்டும். கோமுகமூக்குடன் இருப்பது விரும்பத்தக்க தாகும். கீழ்பீடத்திலும் கோமுக அமைப்பு இருக்க வேண்டும்.

89. குற்றமில்லாத பொருட்களாலானதாக கண்டமும், பீடமும் கூறப்பட்டுள்ளன. ஸகளமூர்த்தி பிம்பங்களுக்கு கோமுகமின்றியும் கோமுகத்துடனோ பீடம் அமைக்கலாம்.

90. க்ருதவாரி என்ற அமைப்புடனோ அமைப்பின்றியோ அமைக்கவும். பாணலிங்கம் முதலிய லிங்கங்களுக்கு நாஹ்கோணமோ நீள்சதுரமோ

91. பீடம் அமைத்து அதற்கு மேல் பீடத்தையோ அமைக்கவும். பீடத்தை ஒட்டி சேர்ந்ததாகவோ தனிப்பட்டதாகவோ திருவாசியை அமைக்கவும்.

92. பலவித வாஜநம் மற்ற அமைப்பையுடையதாகவும் முத்து மாலை போல் அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். பலவித புஷ்பங்களுடன் கூடியதாகவும், பலவித அக்னிஜ்வாலையுடன் கூடியதாகவும் அமைக்கவும்.

93. எல்லாவித அலங்காரங்களுடன் கூடியதாயும் விருப்பப்பட்ட முக அமைப்பின் கனத்தை உடையதாயும் அமைக்கவும். பிரமாண்ட அமைப்பு, தோரண அமைப்புடனோ வட்டவடிவமாகவோ நீண்ட வட்டமாகவோ,

94. பிம்பம், லிங்கம் இவற்றை அனுசரித்தோ விருப்பப்பட்ட அளவை உடையதாகவோ பீடம் அமைத்தல் வேண்டும். இவ்வாறு திருவாசியமைப்பு முறை கூறப்பட்டு பீட பிரதிஷ்டை இப்போது கூறப்படுகிறது.

95. பிண்டிகையில் உமாதேவியும் லிங்கத்தில் ஸதாசிவ பெருமானையும் இருப்பதாக தியானித்து இந்த இரு தேவதைகளையும் சேர்த்து அமைப்பது என்பது யாதுண்டோ அது பிரதிஷ்டை எனப்படுகிறது.

96. பிண்டிகைக்கும் லிங்கத்திற்கும் உண்டான சேர்க்கை ஆத்யம் என்றும் பச்சாத்பவம் என்றும் இருவிதமாக கூறப்பட்டுள்ளது. இவைகளில் ஆத்யம் என்பது லிங்கஸ்தாபனத்தையும் பற்றிச் சொல்லும் பொழுது கூறப்பட்டுள்ளது.

97. இரண்டாவதான பச்சாத்பவம் என்பது லிங்க யோகம் பற்றி கூறப்படுகிறது. முன்பு எந்த அமைப்பில் இருந்ததோ அவ்விதமே மறுபடியும் அமைக்கும் பொது இருக்க வேண்டும். அதை மாற்றுவது குற்றம்.

98. மானுஷமான லிங்கத்திற்கு பீடம் சதுரமாகவோ வட்டமானதாகவோ வேறு விதமாகவோ அமைக்கலாம்.

99. தேவர்களால், ரிஷிகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பாண லிங்கம், சுயம்பு லிங்கம் இவைகளுக்குப் பீடம் வட்ட வடிவத்தில் அல்லது முன்புள்ளபடியோ அமைக்கலாம்.

100. முன்னிருந்த பொருளாலேயே அமைக்க வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் உயர்ந்த பொருளாலும் அமைக்கலாம், அதன் க்ரியைகள் லிங்கப்ரதிஷ்டைக்கு சொன்னபடியே செய்தல் வேண்டும்.

101. நான் கூறுவதை பின்பற்றுபவர்களே, கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கு இன்னும் வேண்டிய மற்ற க்ரியைகளும் சொல்லப்படுகின்றன. முன்பு கூறிய முறைப்படி அங்குரார்ப்பணம் செய்தல் வேண்டும்.

102. கோயிலின் முன்போ அல்லது வடக்கிலோ அல்லது தென்கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ முன்கூறிய விதிப்படி யாக மண்டபம் அமைத்தல் வேண்டும்.

103. அதன் நடுவில் லிங்கப் பிரதிஷ்டைக்கு சொன்னமுறைப்படி வேதிகை அமைத்து சுற்றி ஒன்பது குண்டங்களோ அல்லது ஐந்து குண்டங்களோ அல்லது ஒரு குண்டமோ அமைக்க வேண்டும்.

104. எல்லா குண்டங்கலும் மூன்று மேகலைகளுடன் அரசிலை குண்டங்களாகவோ இருத்தல் வேண்டும். அதற்கு முன்பு வடக்கிலோ ஸ்னானத்திற்காக மண்டபம் அமைக்க வேண்டும்.

105. இவ்வாறு ஸ்நான மண்டபம் அமைத்து பிறகு மற்ற க்ரியைகள் ஆரம்பித்தல் வேண்டும். விசேஷ பூஜை செய்து அடிக்கடி வேண்டி வணங்கி

106. பரசிவனைத் துதித்து வணங்கி அவரிடம் இதை தெரிவித்து விடைபெற்று க்ரியையை ஆரம்பிக்க வேண்டும். லிங்கத்தின் முன்பு ஸ்தண்டிலம் அமைத்து சிவகும்பம் வர்தநீயையும்

107. நடுவில் பீடகும்பத்தை வைத்து அதை சுற்றி நூல் சுற்றப்பட்டு வஸ்திரங்களோடும் கூர்ச்சங்களோடும் மாவிலைகளோடும் கூடிய எட்டு கும்பங்களை வைத்து

108. சந்தனம், புஷ்பம், மாலை தூபதீபங்களோடு பூஜித்து புண்யாஹவாசனம் செய்து ஆஸனம் மூர்த்தி மந்திரங்களோடு பூஜித்து

109. லிங்கத்திலிருந்து சிவனை சிவகும்பத்தில் ஆனாஹனம் செய்து மந்திர நியாஸம் செய்யவேண்டும். பீடத்திலிருந்து தேவியை வர்த்தினீ கும்பத்தில் ஆவாஹனம் செய்து நியாஸம் செய்யவேண்டும்.

110. எட்டு வித்யேச்வரர்களை சுற்றிலும் வைத்து சந்தனம் புஷ்பம் நைவேத்யம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜிக்க வேண்டும். அதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

111. மூலமந்திரத்தினால் ஸமித்து, நெய், அன்னம் நெற்பொறி, எள் இவைகளால் ஆயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு திரவ்யத்திலும் நூறு தடவை ஹோமம் செய்ய வேண்டும்.

112. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து இந்த கும்பங்களை வேறு இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வைக்க வேண்டும்.

113. லிங்கத்திலும் கும்பத்திலும் தினந்தோறும் நித்ய பூஜை செய்து வரவேண்டும். தங்க உளியால் அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பீடத்தை எடுத்து

114. ஆழமில்லாத தண்ணீரில் போட்டுவிட்டு அதிலுள்ள சுண்ணாம்பு போன்றவைகளை எடுத்து சாந்தி ஹோமம் நூறு ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.

115. பிறகு பீட பிரதிஷ்டையை செய்ய வேண்டும். அதன் விதிமுறை இப்பொழுது சொல்லப்படுகிறது. அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு பஞ்சகவ்யத்தாலும் மண்களாலும்

116. கஷாயதீர்த்தத்தாலும் பசு மூத்ரம், பசுஞ்சாணம் அஸ்த்ர தீர்த்தம் இவற்றை பிரணவத்துடன் அஸ்திர மந்திரம் கூறி பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

117. வஸ்திர, சந்தன புஷ்பங்களால் பூஜித்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பீடத்தை (பிண்டிகையை) வைக்க வேண்டும்.

118. சந்தனம், புஷ்பம் இவற்றைக் கொண்டு அர்ச்சித்து யோநிரூபமான அடையாளத்தை காண்பிக்க வேண்டும். தேன், நெய் முதலியவைகளால் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் உச்சரித்து கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

119. தாமிரத்திலோ வெண்கல பாத்திரத்திலோ தேன் நெய் முதலியவைகளை வைத்துக் கொண்டு நேத்ர மந்திரத்தை ஸ்பரிசித்துக் கொண்டு திரையிட்டு தங்கத்தால் கண் திறப்பதை செய்ய வேண்டும்.

120. பிறகு ஆசார்யன் திரையை நீக்கி தான்யங்கள், பூர்ண கும்பம் கன்றுடன் கூடிய பசு, கன்யா முதலிய இவற்றை ஹ்ருதய மந்திரத்தைச் சொல்லி கொண்டு தரிசனம் செய்து வைக்க வேண்டும்.

121. முன்புபோல் தேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், சந்தனம் இவைகளால் பூசிக்கவும். கிராமபிரதட்சிணம் செய்து ஜலக்கரையை அடைந்து

122. அங்கு ஸ்தண்டிலம் அமைத்து அதில் பிண்டிகையை வைக்க வேண்டும். முறைப்படி சுற்றி எட்டு திக்பாலகும்பங்களையும் வித்யேஸ்வர கும்பங்களையும் வைக்க வேண்டும்.

123. லம்ப கூர்ச்சம், புதிய வஸ்த்ரம் இவைகளோடு தேவிகும்பத்தை ஜலத்தின் நடுவில் பலகையில் வைத்து

124. நூல் சுற்றப்பட்டு தங்கம் முதலியவையை போட்டு அலங்கரிக்கப்பட்ட எட்டு சக்திகளை அதிதேவதைகளாக கொண்ட எட்டு கும்பங்களை தேவி கும்பத்தை சுற்றி வைக்கவேண்டும்.

125. நான்கு தோரணங்களோடு கூடியதும் விதானங்களோடும் கொடியோடும் கூடியதும் தர்பை, முத்து புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தை அடைந்து

126. எங்கும் பிரகாசமாகவுள்ளதும், ஜ்வலிக்கின்ற காந்தியோடு சூழப்பட்டதும் எல்லாவித லஷணங்களோடும் கூடியதுமான மண்டபத்தை அமைத்தபின் சிற்பியை திருப்தி செய்ரித்து அனுப்பிவிட்டு

127. பிராம்மணர்களுக்கு உணவளித்து கோமேயத்தால் மெழுகி புண்யாகவாசனம் செய்து வாஸ்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

128. ஆசார்யன் 4 வாயில்களை அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷித்து வாயில்களையும் வாயில் அதிதேவதைகளையும் பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகண்டத்தில் நுழைந்து வடக்கு முகமாக நிமிர்ந்து உட்கார்ந்து

129. தன் சரீரத்தை மந்திரமய சரீரமாக ஆக்கிக் கொண்டு ஹ்ருதய, நாபி, பிந்து இவைகளை பூஜைக்கு தகுந்த ஸ்தானங்களாக ஆக்கி தெற்கு ஹ்ருதயத்தில் சிவனை ஆவாஹித்து ஞான கட்கத்தை தரித்துக் கொண்டு

130. ஐந்து அங்கங்களை அலங்கரித்தவராய் கும்பம், அஸ்த்ரம் திக்பாலர்கள் இவர்களை பூஜித்தவராய், அக்னிகார்யம் முடித்து மஹேச்வரியை ஜலாதி வாஸத்திலிருந்து

131. அழைத்து வந்து ஸ்னபந மண்டபத்தில் ஸ்நபநம் வைத்து மண் தீர்த்தம், கஷாயோதகம், பஞ்சகவ்யம், புஷ்போதகம், பத்ரோதகம், பலோதகம்

132. தர்பஜலம், பன்னீர் முதலியவைகளாலும் பஞ்சாமிர்தத்தாலும் மஹேச்வரியை அபிஷேகம் செய்து பிறகு இரண்டு வஸ்திரங்களை உடுத்தி சந்தனம் புஷ்பங்களால் பூஜிக்கவும்.

133. அதன் நாளத்திலோ கழுத்திலோ ரக்ஷõபந்தனம் செய்து பதினாறு மரக்கால் நெல்லால் ஸ்தண்டிலம் அமைத்து

134. அதன் பாதியான எட்டு மரக்கால் அரிசியிட்டு அதில் பாதியான நான்கு மரக்கால் நெல் பொரி இவைகளாலும் ஸ்தண்டிலம் அமைத்து தர்பை, புஷ்பங்கள் இவைகளையும் பரப்பி மான் தோல் முதலியவையை முறைப்படி

135. அல்லது பட்டு வஸ்திரத்தால் அமைத்து படுக்கை கல்பித்து அதில் பிண்டிகையை ஹ்ருதய மந்திரத்தால் சயனம் செய்வித்து

136. இரண்டு வஸ்திரங்களால் பிண்டிகையை மூடிவிடவும். அதன் அருகில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரம் அணிவிக்கப்பட்டு நவரத்னங்களுடன் கூடிய குடத்தில்

137. தங்கத்தாமரையை இட்டு மாவிலை, கூர்ச்சம், தேங்காய் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தை வைத்து அதன் நடுவில் ஆஸனமூர்த்தி மூலத்துடன் சந்தன புஷ்பம் இவைகளால் முறைப்படி தேவியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

138. அதைச் சுற்றிலும் நூல் சுற்றப்பட்டு மாவிலை, தேங்காய், கூர்ச்சம், வஸ்த்ரம் தங்கம் இவற்றுடன் கூடிய எட்டு வர்த்தனீ கும்பங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

139. தேவதா ஸ்வரூபமான வாமாதி சக்திகளை கொண்ட எட்டு கும்பங்களையும் வைத்து சந்தனம், பூக்கள் முதலியவைகளால் பிண்டிகையையும் கும்பங்களையும் பூஜிக்க வேண்டும்.

140. தத்வ தத்வேச்வரிகளையும், மூர்த்தி மூர்த்திச்வரிகளையும் கர்ணபாகம், களபாகம், மேல் கர்ணபாகம் என்பதாகும். தத்வ திரவ்யங்களை ஆத்மத்தவம், வித்யாத்தவம், சிவதத்யம் நியஸிக்க வேண்டும்.

141. க்ரியாசக்தி க்ஞான சக்தி இச்சாசக்தி என்று முன் சொன்ன மூன்று தத்வங்களுக்கும் ஈச்வரிகள் கூறப்படுகிறது. தாரிகா, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்நா, சேதனா பலோத்கடா

142. தாத்ரி, விப்வீ என்று அஷ்டமூர்த்திகளுக்கும் உள்ள மூர்த்தீச்வரிகளையும் பூஜிக்க வேண்டும். பஞ்ச குண்ட பக்ஷம் இங்கு சொல்லாமல் இருந்தால் யூகித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

143. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிமுறைப்படி இங்கு எல்லாம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முறைப்படி பூஜித்து ஹோம கர்மாவை ஆரம்பிக்க வேண்டும்.

144. ஸமித்து, நெய் அன்னம் நெல், பொரி எள், வெண்கடுகு, யவை இவைகளாலும் புரசு, அத்தி, ஆல், அரசு இவைகளை கிழக்கு முதலிய திசைகளிலும்

145. வன்னி, கருங்காலி, வில்வம், நாயுருவி இவைகளை தென்கிழக்கு முதலிய கோணங்களிலும் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் பிரதான குண்டத்தில் ஹோமம் செய்யவேண்டும். பலாசம் முக்கியம் அது எல்லாவற்றிலும் உபயோகிக்கக் கூடியது.

146. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி தேவியின் மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும். அதில் பத்தில் ஒரு பங்கு அங்க மந்திரத்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

147. பிறகு சாந்தி கும்ப ஜலப்ரோக்ஷணம், ஸ்பர்சாஹூதி மற்றும் ஒவ்வொரு குண்டத்திலும் தத்வ தத்வேச்வரிகளை கூறி ஹோமம் செய்ய வேண்டும்.

148. பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூறு தடவை ஹோமம் செய்து விபூதி, தர்பை, எள் இவைகளால் ரøக்ஷயும் செய்து தத்வங்களையும் அவ்வாறே ரக்ஷித்து

149. அந்தர்பலி, ÷க்ஷத்ரபலி இவைகளை செய்து தூக்கி எறிய வேண்டும். பிறகு விடியற்காலையில் ஸ்நானம் செய்து ரித்விக்குகளுடன்

150. ஆசார்யன் நித்யானுஷ்டானம் முதலியவைகளை செய்து சாமாந்யார்க்யத்துடன் திவார பூஜைகளை செய்து மஹேச்வரியை சயனத்திலிருந்து எழுந்தருளச் செய்து

151. சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம் முதலிய இவைகளால் பிண்டிகையையும் வர்த்தினியையும் பூஜித்து

152. அக்னியில் தேவியின் பொருட்டு மூலமந்திர ஹோமம் செய்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தாலும் ஹோமம் செய்து முடிவில் எல்லா குறைபாடுகளையும் நீக்குகின்ற பூர்ணாஹூதியை மூலமந்திரத்தால் செய்ய வேண்டும்.

153. ஸகல வாத்ய கோஷங்களோடும் நாட்யம் பாட்டு இவைகளோடும் ஆலயபிரதட்சிணம் செய்து கர்பகிருஹத்தை அடைவிக்க வேண்டும்.

154. லிங்க பிரதிஷ்டைக்கு சொன்ன விதிப்படி அதை (பிண்டிகையை) ஸ்தாபனம் செய்ய வேண்டும். பாணலிங்கத்திற்கு பிண்டிகா ஸ்தாபனம் செய்ய வேண்டியிருந்தால்

155. மண்டபத்தின் முன் ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாணலிங்கத்தை வைத்து புதிய வஸ்திரங்களால் மூடி கிழக்கிலோ வடக்கிலோ தலையை வைத்து இருக்கச் செய்ய வேண்டும்.

156. (பிண்டிகை) பீடத்தில் உள்ள சுண்ணாம்பு முதலியவற்றை நீக்கிவிட்டு அதே இடத்தில் பீடத்தை வைத்து அதில் லிங்கத்தையும் வைக்க வேண்டும்.

157. எல்லா பீடத்தின் பள்ளத்திலும் ரத்ன கற்களையோ அல்லது தங்கத்தையுமோ வைத்து முன் சொன்னதுபோல எல்லா க்ரியைகளையும் செய்ய வேண்டும்.

158. அதன் பிறகு அஷ்டபந்தனமோ, த்ரிபந்தனமோ செய்து சேர்க்க வேண்டும். புண்யாகதீர்த்த பிரோக்ஷணம், சாந்தி கும்ப தீர்த்தத்தின் அபிஷேகமாகும்.

159. ஆசார்யர், முன் சொன்னபடி செய்து ஆஸன, மூர்த்தி, மூலமந்திரங்களையும் பூஜித்து பீடத்தில் கிரியா சக்தியை நியஸிக்க வேண்டும்.

160. லிங்கத்திற்கு முன் வைக்கப்பட்ட சிவகும்பத்தையும் மற்றொரு வேதிகையில் வைக்கப்பட்டுள்ள வாமாதி நவசக்திகளோடு கூடிய வர்த்தினி கும்பத்தை

161. ஈசனுக்கு முன் வைத்து ஜீவன்நியாஸம் செய்து வர்த்தினீ கும்பத்தையும் வாமாதி எட்டு சக்தி கும்பங்களையும்

162. வேதிகை மத்தியில் வைத்து ஜீவன்யாசம் செய்ய வேண்டும். ஜீவன்யாஸம் மூன்று நிலைகளில் செய்ய வேண்டும். ஆஸனத்தில்

163. லிங்கத்திலும் ஸ்தாபிக்கப்பட்ட கும்பத்திலும் நியாஸம் விசேஷமாக செய்ய வேண்டும். பிறகு ஸ்நபநம் செய்து முடிவில் பஞ்சாமிர்தாபிஷேகம் செய்ய வேண்டும்.

164. கேவலம் சுத்த தீர்த்தத்தாலோ அபிஷேகம் செய்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து பின்வருமாறு பிரார்த்திக்க வேண்டும். ஹே ஈச்வரி சந்திரன் சூர்யன் பூமி இவை

165. உள்ளவரை நீ இங்கு இருந்து அருள்பாலித்து வீற்றிருக்க வேண்டும். லிங்க பிரதிஷ்டையில் சொல்லப்பட்ட அளவிற்கு பாதி தட்சிணை முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

166. நான்கு நாட்களோ, மூன்று நாட்களோ, இரண்டு நாட்களோ ஒரு நாளோ ஹோமத்துடன் கவிசேஷ பூஜையை சிறப்பாக செய்ய வேண்டும்.

167. முன் கூறப்பட்ட சம்பவத்தின் சக்தி மூல மந்திரங்களைச் சொல்லி பாயஸத்தை ஹோமம் செய்ய வேண்டும். நான்காவது தினமோ, முதல் தினமோ சண்ட பூஜை விதிக்கப்பட்டுள்ளது.

168. பாண லிங்கத்தில் இது தேவையில்லை அல்லது இது பற்றி சிந்தித்து செய்யலாம். பீட பிரதிஷ்டைக்கும் லிங்க பிரதிஷ்டையின் பலன் உண்டு.

169. ஒரே விதம் தான், ஏனெனில் இரண்டும் பிரதிஷ்டையாக இருப்பதால் ஒரே விதமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பீடபிரதிஷ்டையாகிய முப்பத்தைந்தாவது படலமாகும்.

படலம் 33: சம்ப்ரோக்ஷண விதி...

படலம் 33: சம்ப்ரோக்ஷண விதி...

33 வது படலத்தில் சம்ப்ரோக்ஷண விதி கூறப்படுகிறது. முதலில் எல்லா தோஷத்தையும் போக்கக்கூடிய ஸம்ப்ரோக்ஷண விதியை கூறுகிறேன் என்பது கட்டளையாம். பிறகு ஸம்ப்ரோக்ஷணமானது ஆவர்த்தம், புனராவர்தம், அநாவர்தம், ஆந்தரிதம், என்று நான்கு விதம் ஆகும் என கூறி அவைகளில் இலக்கணம் அவை செய்யும் முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. முதலில் யாத்ரா ஹோமத்துடன் கூடியது ஆவாத்தமாகும். மற்றவைகள், யாத்ரா ஹோமம் இல்லாதவையாகும். பிறகு அவ்வாறு ஆவர்த்த பிரதிஷ்டையில் லிங்க ஸ்தாபனத்தில் கூறி உள்ளபடி மாசம், பக்ஷம், நட்சத்திரம் ஆகிய எல்லாவற்றையும் நன்கு பரிசித்து கார்யாரம்பம் செய்யவும், அனாவிருத்தம் முதலிய மற்ற சம்ப்ரோக்ஷணங்கள் காலங்களை பரிசிக்காமல் செய்யவேண்டும் என்றதான விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு 34 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தோஷங்களையும் போக்கவல்ல ஸம்ப்ரோக்ஷண முறையை கூறுகிறேன். ஆவர்த்தம், அநாவர்த்தம் புநராவர்த்தம் என்றும்

2. பிறகு ஆந்தரிதகமென்றும் ப்ரோக்ஷணம் நான்கு வகைப்படும். முதன்மையான மூலபாலாயத்திலிருந்து மூலஸ்தானத்தில் மூர்த்தியை ஸ்தாபித்து.

3. ஆவர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு அனாவர்த்தம் கூறப்படுகிறது. தகாதவர்களால் தொடப்பட்டாலும் அல்லது விக்ரகம் விழுந்தாலும்

4. ஒரு மாதகாலம் பூஜை இல்லாவிடினும் தளவரிசை விரிசலடைந்திருந்தாலும் லிங்கம், பீடம் அசைவடைந்திருந்தாலும் செய்யும் கிரியைக்கு அனாவர்த்தமெனப்படும்.

5. மூலஸ்தானத்திலிருந்து மூர்த்தி ஜீவனை பாலாலயத்தில் ஸ்தாபித்து திரும்பவும் முன்னமேயுள்ள மூலஸ்தானத்தில் மூர்த்தி ஜீவனை ஸ்தாபித்து புனராவர்த்தனம் எனப்படும்.

6. உத்ஸவ பிம்பங்கள் ஸகளநிஷ்கள பிம்பங்கள் தேவிபிம்பங்கள் ஆகியவைகளின் ஆயுதங்களாலும் வெடித்து இருந்தாலும் மாற்று வர்ணமடைந்தாலும் உருவத்தின் அங்க பாகம் உபாங்கம் குறைவுற்று இருந்தாலும்

7. தோல் ஆடை குறைவுபட்டாலும் ஆயுதமின்றி ஆபரணங்கள் இன்றியும் பத்மபீடமின்றியும் தளவரிசைகள் தேய்மானமடைந்திருந்தாலும்

8. பீடத்தில் அஷ்டபந்தனம் விடுபட்டு இருந்தாலும் அதற்காக செய்யப்படும் கிரியைக்கு அந்தரிதம் என கூறப்படுகிறது. யாத்ராஹோமத்துடன் கூடியது ஆவர்த்த ப்ரதிஷ்டையாகும். மற்றவைகள் யாத்ராஹோம மின்றி செய்யப்படுவது ஸம்ப்ரோக்ஷணமாகும்.

9. ஹே ப்ராம்மணர்களே! ஆவர்த்த பிரதிஷ்டையில் எல்லாவித மாஸம், பக்ஷம், நக்ஷத்ரம் முதலியவைகளை லிங்கபிரதிஷ்டையில் கூறியுள்ள முறைப்படி செய்யவேண்டும்.

10. மற்ற ப்ரதிஷ்டைகளை திதி, நக்ஷத்ரம் கிழமை, அம்சம் முஹூர்த்த காலம் இவைகளை சோதித்து பார்க்காமல் செய்ய வேண்டும்.

11. பிம்ப அமைப்பு முறை சரிசெய்வது ஜலாதிவாஸம், சயனாதிவாஸம் இவைகள் இன்றி அனாவர்த்த ப்ரதிஷ்டையானது ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்ய வேண்டும்.

12. இவ்வாறு அனாவர்த்தத்தை அறியவும், இங்கு புனராவர்த்தமானது எல்லாம் ஆவர்த்த பிரதிஷ்டை போல் செய்யவும். ஆனால் மூலஸ்தானத்திலிருந்து தருணாலய பிரதிஷ்டை அவ்விடமிருந்து மூலஸ்தான மூர்த்தி ஜீவசேர்க்கையுடன் கூடியதாகும்.

13. ஹே பிராம்மணர்களே! அந்தரித பிரதிஷ்டையை சுருக்கமாக நான் கூறுகிறேன், ரத்ன நியாஸம் நயோன்மீலனம், ஜலாதிவாஸம்.

14. ஹே பிராம்மணர்களே! சயனாதி வாஸநம் முதலிய பிம்ப கிரியைகளினின்றி பிம்பத்தின் எல்லா அவயவத்தையும் புதிய வஸ்திரத்தினால் மூடி

15. முன்பு கூறப்பட்டுள்ள முறைப்படி கும்பந்யாஸம் ஹோமத்தையும் செய்ய வேண்டும், முடிவில் ஸ்நபனம் செய்யவும். மற்ற பூஜை கார்யங்கள் ஸமமானதாகும்.

16. இவ்வாறு பிரதிஷ்டைகளை யார் செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸம்ப்ரோக்ஷண விதியாகிற முப்பத்தி நான்காவது படலமாகும்.

படலம் 32: காம்யயோக விதான முறை...

படலம் 32: காம்யயோக விதான முறை...

32 வது படலத்தில் காம்யயோக விதான முறை கூறப்படுகிறது. அதில் முதலில் மந்திரங்களால் விருப்பப் பூர்த்தியானது ஏற்படுகிறது. மந்திரங்களும் பல விதமாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப் பயனை கொடுப்பதில் ஸாமர்த்யம் உள்ளவையாகும். அதில் ஒன்றான அகோர மந்திரத்தால் செய்யக்கூடிய ஜபம் மிகுந்த தோஷத்தை போக்க வல்லதாகவும் எனக் கூறி அகோர மந்திரம் மூர்த்தி இவைகளின் உருவ வர்ணனை செய்யப்படுகிறது தன்னுடைய சேனையை காப்பாற்றுவதும் பிறரின் படைக்கு பயத்தை உண்டு பண்ணுவது, எதிரியால் ஏவப்பட்ட கார்யத்தை அழிப்பது, எல்லா வியாதியையும் போக்க வல்லது எல்லா தோஷத்தையும் போக்குவதில் ஸாமர்த்யமானது, அண்டியவர்களை  குழந்தைபோல் பாவிப்பது என்று அகோர மூர்த்தியின் மகிமை வர்ணனை காணப்படுகிறது. அது அசிதாங்கம் முதலிய எட்டு தேவர்களால் சூழப்பட்டவர் எனக் கூறி அந்த எட்டு தேவர்களின் சுய உருவம் நிரூபிக்கப்படுகிறது. அந்த மிருத்யுஞ்ய மந்திரம் விளக்கப்படுகிறது. அதில் மிருத்யுஞ்சய மந்திரமே அமிருதேசன் என காணப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் மூர்த்தி உருவம் வர்ணிக்கப்படுகிறது. மிருத்யுஞ்சய மூர்த்திக்கு நான்கு கையும், ஆறு கையும் இருப்பதாக கூறப்படுகிறது. உயிர்களை காப்பாற்றும் விஷயத்தில் இந்த மந்திரத்திற்கு ஸமமானது எதுவும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு மிருத்யுஞ்சய மந்திரம் உபாசிப்பவனுக்கு மிருத்யு ஸம்பவிப்பது இல்லை. அந்த ஆசார்யனை யமன் வலம் வந்து ஸ்தோத்திரம் செய்து பூஜை செய்கிறான். இதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது. மறுபடியும் அந்த ஆசார்யன் கண், வாக்கு பாதம் இவைகளால் நதீ, ஜனங்கள் நந்தவனம் நகரங்கள் இவைகளை சுத்தி செய்கிறான். பயம் அடைந்த பிராணியையும் தன்னையும் அண்டிய மிருத்யுஞ்சய மந்திரம் காப்பாற்றும் மிருத்யுஞ்சய மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிறகு அகோராஸ்திர மூர்த்தி தியாநம் இருவிதமாக நிரூபிக்கப்படுகிறது. முதலில் 8 கை உடையதாகவும் பிறகு 4 கை உடையதாகவும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு அகோராஸ்திர மந்திரவர்ணனை காணப்படுகிறது.

இந்த அகோராஸ்திர மந்திரமானது, பிறரால் ஏவப்பட்ட சக்கரத்தை அழிப்பதிலும் பெரிய வியாதியை போக்குவதிலும், சாந்திகத்திலும், பவுஷ்டிகத்திலும், வஸ்ய, விஷயத்திலும், பிராயசித்த மந்திரம் ஜபிக் கவும் என கூறப்படுகிறது. இந்த மந்திரத்தில் ஜுரம், விஷத்தால் தீண்டப்பட்டவைகளும், நவக்கிரஹ தோஷங்களும் அழிகின்றன. பிறரால் ஏவப்பட்ட ஆபிசாரம் முதலிய கார்யம், மந்திரம் மருந்து முதலியவைகள் எல்லா எந்திரங்களும் அக்கினியில் வெட்டுபூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன என கூறப்படுகிறது. பிறகு பாசுபதாஸ்திரம், சிவாஸ்திரம், க்ஷúகாஸ்திரம், இவைகள் மேல் கூறிய முறைப்படி தியானித்து பூஜிக்கவும் என கூறி பூஜை முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு சிவாஸ்திர ஸ்தானத்தில் பிரத்யங்கிராஸ்திர மந்திரமும், க்ஷúரிகாஸ்த்திர ஸ்தானத்தில் சங்கிராமவிஜய, மந்திரமோ, பூஜிக்கவும் என விசேஷ முறை கூறப்படுகிறது. இவ்வாறே யார் ஜபித்து பூஜிக்கிறானோ அவன் சிவ சமானமாக ஆகிறான். இந்த ஸாதகனுக்கு சாதிக்கக்கூடிய கார்யம் மூவுலகிலும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி ஜபவிதி கூறப்படுகிறது. இது முதலாவதாக இந்த மந்திரத்தினால் (வெற்றி) ஜபத்தை செய்வதில் வாக்சித்தி உண்டாகிறது. மற்ற எல்லா பலன்களும் இந்த மந்திரத்தினால் சித்திக்கப் படுகின்றன என கூறப்படுகிறது. பிறகு தட்சிணாமூர்த்தி மந்திரத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. தட்சிணாமூர்த்தி தியானமும் கூறப்படுகிறது. இதில் தட்சிணாமூர்த்தி முனிவர்களுடன் கூடியவராயும் மஹா விருஷபத்துடன் கூடியவராகவும், நான்குகை மூன்று கண் உடையவராக வர்ணிக்கப்படுகிறது. பின்பு ஸங்கிராம விஜய மந்திர இலக்கணம் நிரூபிக்கப்படுகிறது. இந்த மந்திர மகிமையால் ஆசார்யன் மூவுலகையும் வெற்றி அடைந்தவன் ஆகிறான். இந்த மந்திரம் மந்திர ராஜ தன்மையாக விளக்கப்படுகிறது. பிறகு சூர்யமூர்த்தியின் தியானம் வர்ணிக்கப்படுகிறது.

பிறகு சூர்யனின் கர்பாவரண தீப்தாதி, சத்த்யாவரண சந்திராதி கிரஹாவரண, இந்திரன் முதலிய லோபாலாவரண பூஜை சுருக்கமாக கூறப்படுகிறது. காம்ய விஷயத்தில் ஈடுபட்டவனும்கூட எப்பொழுதும் சூர்யனை தியானிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரத்யங்கிராஸ்திர மந்திரம் கூறப்படுகிறது என கூறி இந்த பிரத்யங்கிராஸ்திர மந்திரம் எல்லா பக்தியையும் கொடுக்க வல்லதும் எல்லா வியாதியையும் கெடுக்க வல்லதும், ஜுரம் அபஸ்மாரம், வைசூரி இவைகளை அழிக்க வல்லதும், காச நோயை போக்க வல்லதும் எதிரிகளால் செய்யப்பட்ட உண்டு பண்ணப்பட்ட வியாதி, படைகளை அழிக்க வல்லதும் நான்கு சேனைகளை உடைய எதிரியை அழிக்க வல்லதும் தன்னுடைய சேனையை காப்பாற்ற வல்லதும் காச நோயை போக்க வல்லதும் எல்லா கர்மாவிலும் சாமர்த்யமானது என்று பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் மகிமை கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர மந்திரத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திரம் 100 எழுத்தை உடையதாகும் என கூறப்படுகிறது. பிரத்யங்கிராஸ்திர தியானம் கூறப்படுகிறது. அந்த பிரத்யங்கிரா தேவியானவள் 4 கைகள் உடையவளாக வர்ணிக்கப்படுகிறது. ஒரே மனதுடன் ஆசார்யன் பிரத்யங்கிரா தேவியை முயற்சியுடன் தியானித்துஎல்லா எதிரிகளையும் அழிக்கிறான் எல்லா ரோகங்களையும் போக்குகிறார் பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை நிவாரணம் செய்கிறான் என்று மந்திரத்தின் தியான பலன் கூறப்படுகிறது. பிறகு வித்யாதர தன்மையை அடைவதற்கும் யட்சினி சித்தியை (உத்ஸாதனம்), பிரிப்பது ராஜயக்ஷமம் முதலிய வியாதியை போக்குவது, வயிற்றுவலி, கண்வலி, விஷம், ஜுரம், ஸர்வ உபத்ரவம், வாதம், உன்மத்தம், ஸ்லேஷ்மம், முதலியவகைகளை போக்குவதற்கும் செய்ய வேண்டிய ஹோமங்கள் நிரூபிக்கப்படுகின்றன. இவ்வாறு 33 வது படல கருத்துச் சுருக்கம் ஆகும்.

1. விரும்பியதை அடையும் முறையை சுருக்கமாக கூறுகிறேன். விருப்பத்தை அடையக்கூடியது மந்திரங்களால் ஏற்படுவதாகும். மந்திரங்களும் பலவாறாக கூறப்பட்டுள்ளன.

2. எல்லா மந்திரங்களும் தகுதியுள்ளவைகளாகும். எல்லா மந்திரங்களும் விருப்பப்பட்ட பலனைக் கொடுக்கக் கூடியதாகும். அவைகளில் அகோர மந்திரம் மிகவும் தோஷத்தை போக்கக் கூடியதாகும். அது கருப்பு நிறமுடையதாகவும்

3. பாம்பினால் கட்டப்பட்ட ஜடாமுடி, கபாலத்தினால் அழகாகவும் அழகான சிவந்த கண்ணை உடையவராகவும், மிகவும் வெண்மையான பற்களை உடையவராகவும்

4. சந்திரனை தரித்தும் அகன்ற முகமும், பாம்பை பூணூலாகவும், பெரிய சரீரமும் பெரிய தித்திப் பல்லும், சலங்கை ஒலி இவைகளோடு கூடியவரும்

5. பெரிய சூலத்தின் நுனியால் குத்தப்பட்டு அழிந்த அசுரனை உடையவரும், கத்தி கேடயம், வில், அம்பு, தலையில்லா பாகம், காலன், சக்தியாயுதம்

6. வரதம், அபயம், கபாலம், பாம்பு, பாசம், ஈட்டி கதை இவைகளையுடைய கைகளை உடையவரும் இரண்டு தித்திப்பல்லை குறுக்காகவும் வாயின் நுனியிலும், பயங்கரமாக வெள்ளையாக தரித்து

7. எப்பொழுதும் தன்னுடைய படையை காப்பவராகவும், பிறர் படைக்கு பயத்தை உண்டு பண்ணவராகவும், எதிரியால் ஏவப்பட்ட கார்யங்களை அழிப்பவராகவும், எல்லா நோய்களையும் போக்குபவராகவும்

8. எல்லா குற்றங்களையும் அழிப்பதில் சிறந்தவராகவும், அடியாரிடம் அன்புள்ளவராகவும் அஸிதாங்கர் முதலான பைரவர்களுடன் சேர்ந்தோ, சேராமலோ இருப்பவர். அகோரமூர்த்தி ஆவர்.

9. அஸிதாங்கர், ருரு, சண்டர் க்ரோதநர், உன்மத்தர், கபாலீ, பீஷணர், ஸம்ஹாரர் என்பதாக எட்டு பைரவர்களாகும்.

10. அவர்கள் நான்கு கை முக்கண், கருப்பு நிறம், மஹாபலராகவும், த்ரீசூலத்தையும், முண்டத்தையும், கூப்பிய கையை உடையவராகவும்

11. அழகிய தித்திப்பல் பயங்கரமானமுகம், தலைவனின் விருப்பப்படி செயலை உடையவராகவும் இருக்கின்றார்கள். ஓம் ஜும்ஸ: என்ற மந்திரமானது ம்ருத்யுஞ்ஜயனுடையதாகும். தேவனும் ம்ருத்யுஞ்ஜயனேயாம்.

12. அந்தம்ருத்யுஞ்ஜயனே அம்ருதேசன் எனப்படுகிறான். முதலில் மறைவான எழுத்தை உடையதாகவோ அல்லாமலோ, ரஸம் முதல் சுக்லம் வரையிலான ஏழு தாதுக்களின் ஏழு எழுத்துடன் கூடியதாகவும்

13. ஹ காரம் என்ற எழுத்தால் சரீரத்தையும், ரஸமென்பதான (எழுத்துக்களான) யம், ரம், லம், வம் (சம், ஷம், ஸம் என்பதான அக்ஷரங்களையும் சேர்த்து முடிவில் ரக்ஷ, ரக்ஷ என்ற பதத்தையும், விருப்பப் பயனின் வாக்யத்தையும் கூற வேண்டும்.

14. முதலில் தேவ தேவச என்ற பதத்தை கூறவும். மூல மந்திரத்தையும் தேவதத்தனின் உயிரை என்ற பதத்தையும் சேர்க்க வேண்டும்.

15. மந்திரத்தின்பீடம் ஜும் என்றும் சரீரம் ஓம் என்றுமாக ஜும்ஸ மந்திரமாகும். மத்தியில் மறைவான மூல மந்திரத்தையோ அல்லது ஒன்பது எழுத்தையோ

16. ஹ காரம் முதலான எழுத்துக்களை கழுத்து, உதடுசம்பந்தப்பட்டதாக யும் ரூம் என்பதாக பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை ஏற்படுத்திக்கொள்ளவும். இந்த மந்திரத்திற்கு ஸமமான வேறு ம்ருத்யுஞ்ஜய மந்திரம் இல்லை என்பதாகும்.

17. அந்த ம்ருத்யுஞ்ஜயர் அம்ருத கலச மத்தியில் இருப்பவராகவும், வெண் தாமரையிலமலர்ந்திருப்பவராகவும், நான்கு கை, முக்கண், ஜடையில் பிறை சந்திரனால் அழகானவராகவும்

18. புலித்தோல் தரித்தவராகவும், பாம்பை மார்பணியாகிய பூணூலாக உடையவரும் த்ரிசூலம், அபயமிவைகளை பக்கவாட்டு கைகளிலும், நடுவிலுள்ள இரண்டு கையில் அம்ருத கலசத்தை தரித்துள்ளார்.

19. ஆறுகை உடையவராக இருப்பின் த்ரிசூலம் அக்ஷமாலை, கபாலம், கெண்டி இவைகளை வலது இடது கைகளிலும், மற்றுமுள்ள இரண்டு கையால் யோக முத்ரையையும் தரித்திருக்கிறார்.

20. உயிர்களைக் காப்பாற்றுவதில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்திற்கு ஸமமான வேறு மந்திரமில்லை. முன்னும், பின்னும் இது போன்ற மந்திரம் உதாஹரணமாக இல்லை என்பதும், வேறு மந்திரம் ஏற்பட்டது, ஏற்படாது என்பதும் உண்மை.

21. மூன்றெழுத்தான ம்ருத்யுந்ஜய மந்திரத்தினால் அம்ருதீகரணமாக்கி உணவளித்தலையும் செய்யவும். ஆகையினால் உடனே அம்ருதமாகிறது. மிருதுவாகவும் ம்ருத்யுவை ஜயித்தவனாகவும் ஆகிறான்.

22. அம்ருதேச தேவ மந்திரத்தினால் நூறு முறை ஜபிக்கப்பட்ட ஜலத்தை எடுத்து அருந்தினால் நிச்சயம் அம்ருதமயமாக ஆகிறான்.

23. ப்ரும்ம வ்ருக்ஷ விறகுகளால் பிரகாசிக்கிற அக்னியில், பாலால் நனைக்கப்பட்டதும், துண்டிக்கப்படாததுமான அருஹம்பில்லை ஹோமம் செய்பவனை ம்ருத்யு அடைவதில்லை.

24. எவனுக்கு உபாஸநனாதெய்வமாக ம்ருத்யுஞ்ஜயர் இருக்கிறாரோ அவருக்கு சீக்ரமாகவே ம்ருத்யு அடைவதில்லை.

25. ஒரு மாதத்திலிருந்து வர்ஷம் முடியும் நூறு ஆவர்த்தியாகவும், இரண்டாவது மாஸத்திலிருந்து இருநூறு ஆவர்த்தியாகவும், ஒவ்வொரு மாதமும் ஜபம் செய்வதால்

26. அந்தஸாதகனை காலன் (யமன்) வலம்வந்து நமஸ்கரித்து, பூஜித்து செல்கிறான் என்பதில் ஸந்தேஹ மில்லை என்னால் கூறப்பட்டது உண்மையாகும்.

27. ஜபம் செய்த அந்தஸாதகன், கண்ணால், வாக்கால், பாதத்தினால், கையினால், நதீ, ஜனங்கள், நந்தவனம், பட்டணங்களை சுத்தப்படுத்துகிறான். ஸந்தேஹமில்லை.

28. பயந்த பிராணிகளையும், தன்னையும், தன்னை அடைந்தவர்களையும் ரக்ஷிப்பது பற்றி திரும்பவும் கூறுவானேன். பீஜாக்ஷர தொகுப்பை யுடைய அகோராஸ்த்ரத்தை கூறுகிறேன்.

29. வெட்டப்பட்டமைபோல் கறுப்பானவராகவும், சிவந்த வஸ்திரத்தை தரித்தவராகவும், எட்டு கைகளையுடையவராகவும் மேல் நோக்கிய கேசம், தித்திப் பல்லை உடையவராகவும்

30. அந்த தித்திப்பல்லும், கீழுதட்டை ஒட்டியதாகவும் பிரகாசிக்கிற நெருப்பு போன்ற கண்ணை உடையவராகவும், சலங்கை மாலையால் விளங்குபவராயும், கால் கொலுசையுடையவராகவும்

31. ஏழு ஆயுதங்களையுடையவராயும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராயும், வெண்மையான பூணூலைத் தரித்தவராயும், சிவந்த புஷ்பங்களாலலங்காரமாயும்

32. தரிக்கப்பட்ட தேளை கழுத்து மாலையாக அலங்கரிக்கப்பட்டவராயும், இடுப்பு, வயிறு, கழுத்து, காது, ஹ்ருதயம், கை, தோள்பட்டையாக மிவைகளிலும்

33. பாதங்களிலும், கைகளிலும் ஆக பதினான்கு ஸர்பங்களால் பிரகாசிக்கிறவராயும் பத்மா ஸனத்திலிருப்பவராயும், முக்கண்ணையும், பயங்கரமான உருவத்தையுடையவராயும்

34. மற்றும் சூலத்தின் அடிபாகம், வேதாளம், கத்தி உடுக்கை இவைகளை வலக்கையில் தரிப்பவராயும், இடது கையில் சூலத்தின் நடுபகுதி

35. மணி, கேடயம், கபாலம் இவைகளையும், எதிரியை அழிப்பதில் நோக்கமுடையவரையும், இடது காலை முன்பாக வைத்தவராயும் அகோரமூர்த்தியை தியானித்து பூஜிக்க வேண்டும்.

36. த்யானம் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. பிராம்மணர்களே முறைப்படி கேளும் ஆயிரம் சூர்யம் போல் பிரகாசிப்பவரும், சிரேஷ்டமான அகோராஸ்திர தேவர்

37. பிரகாசிக்கிற பற்களை உடையவராகவும் அழகானமுகம், கழுத்தை உடையவராகவும், முக்கண், மின்னல் போன்ற பிரகாசமான நாக்கு ஒளியுள்ள புருவம், மீசை சிரஸ்பாகமிவைகளையும்

38. ஸர்ப பூணூலும், சூலம், கத்தி, சக்தி, உலக்கை இவைகளை தரித்தும், நான்குமுகம், நான்கு கையையுடையவராகவும், பிரகாசிக்கிற சந்திரனை சிரஸில் தரித்திருப்பவரும்

39. பெருத்த சரீரமாயும், ஆடிக்கொண்டும், பாம்பை அணிகலன்களாகவும் இருந்து, அசுரர்கள் கர்வமுடையவர்களாயிருப்பின் அவர்களை அடக்குபவராயும் இருப்பர்.

40. ப்ரஸ்புர ஸ்புர என்ற மந்திரபதம், ஹ்ருதய மந்திரமாக கூறப்பட்டுள்ளது. கோர கோரதர என்பது சிரஸ்மந்திரமாக கூறப்பட்டுள்ளது.

41. பிறகு தநுரூப என்பது சிகாமந்திரமாக கூறப்பட்டுள்ளது. சடப்ரசட என்ற மந்த்ரபதம் கவச மந்திரமாகும்.

42. கஹ கஹ வம மந்தய என்றும் காதய, காதய என்ற மந்திரம் நேத்ரத்ரய மந்திரம் ஆகும்.

43. அகோராஸ்த்ராய, ஹும்பட் என்று நான்கு வேற்றுமையுடையயாக கூறவும் இவ்வாறு ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை கிரஹிக்கவும். ஓம் என்று முதலிலும் நம: என்பதாகவும் கூற வேண்டும்.

44. பிறரால் ஏவப்பட்ட சக்ரத்தை அழிக்கும் ஸமயத்திலும், பெரிய வியாதியால் பீடிக்கப்பட்ட போதிலும், சாந்திகம், பவுஷ்டிகம், பிறரை வசீகரிக்கும் கார்யங்களிலும் பிராயச்சித்தத்திலும் உபயோகிக்க வேண்டும்.

45. மிகுதியாக கூறுவானேன். பயமேற்பட்ட போது இந்த மந்திரத்தினால் ஜ்வரம், க்ருஹங் களால் ஏற்பட்டதும், விஷக்கடிகளும் அழிகின்றன.

46. மற்றவர்களால் ஆபிசாரம் முதலிய கார்யம் மந்திரம், மருந்து இவைகளை சிறந்ததான மந்திரங்கள் அக்னியில் விட்டில் பூச்சி விழுந்து அழிவதுபோல் அழிகின்றன.

47. அவ்வாறே பாசுபதாஸ்திரம், சிவாஸ்த்ரம், க்ஷúரிகாஸ்த்ரம் இவைகளை முறைப்படி தியானித்து பூஜித்து ஜபிக்க வேண்டும்.

48. அகோர தேவனை பூஜித்து அதன் முன்பாக அஸ்திரத்தை பூஜிக்கவும். தெற்கில் அகோர தேவனும், மத்தியில் ஸதாசிவரையும் பூஜிக்க வேண்டும்.

49. விசேஷமாக ஸதாசிவனின் தென்முக மண்டலத்தில் அகோர தேவரை பூஜிக்கவும். நான்கு திசைகளிலும் நான்கு அஸ்திரங்களான சிவாஸ்த்ரம்

50. அகோராஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம், க்ஷúரி காஸ்த்ரம் இவைகளை பூஜித்து அவைகளின் இடை வெளியைச் சுற்றிலும் அஸ்த்ர ஜாதிகளை பூஜிக்க வேண்டும்.

51. சிவாஸ்த்ரத்தை விட்டுவிட்டு அவ்விடத்தில் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரத்தை பூஜிக்கவும். க்ஷúரி காஸ்த்ர மத்தியில் ஸங்க்ராமவிஜய மந்திரத்தையோ பூஜிக்க வேண்டும்.

52. இவ்வாறாக யார் பூஜை செய்கிறானோ அவன் எனக்கு ஸமமானவனாக எண்ணப்படுகிறான். மூவுலகில் அவனால் சாதிக்கமுடியாத விஷயங்கள் ஏதுமில்லை.

53. இவ்வாறு கூறப்பட்டது உண்மையே, அதை முயற்சியுடன் காப்பாற்றப்படவேண்டும். ஸாதகத்தலைவன் விசேஷமாக காக்கவேண்டும்.

54. தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தின் சொல்முறை விளக்கம் கூறப்படுகிறது. அந்த மந்திரத்தினால் வாக்ஸித்தியும், வெற்றியின் ஏற்பாடும் விளங்குகிறது.

55. அந்ததட்சிணாமூர்த்தி மந்திர திருவருளினால் மற்ற எல்லா பயன்களும் கிடைக்கின்றன. ஓம் நமோ பகவந் என்ற வாக்யத்தை விளிவேற்றுமையாக கூறவும். ஓம் நமோ பகவந்

56. தட்சிணாமூர்த்தி என்பதையும் அவ்வாறே விளிவேற்றுமையுள்ளதாகவும் கூறவும். தட்சிணாமூர்த்தே! மேதாம், ப்ரயச்ச ஸ்வாஹா என்பதாக மூல மந்திரம் கூறப்பட்டுள்ளது.

57. ஹ்ருதயம் முதலானவைகளுக்கு ஸ்வரம் என்பதான உயிர் எழுத்துக்களிலிருந்து கிரஹணம் செய்யக்கூடியதாக கூறப்பட்டு நம: ஸ்வாஹா, வஷட், ஹும், பட் என்பதாகவும் கூறவும்.

58. ஸ்படிகம்போல் வெண்மையானவரும், மலர்ந்த முகத்தை யுடையவராயும் கங்கையையும், சந்திரனையும் சேர்ந்ததான சுருட்டி முடியப்பட்டதான கேசத்தையுடையவராயும்

59. புலித்தோலையணிந்தவரும் நான்கு கைகளையுடையவராயும், வெண்மையான ஸ்படிக மாலையையும், க்ஞான முத்ரையை வலது பாகக்கைகளிலும்

60. இடதுகையில் தாமரையையும், வஹ்நியையும் தரித்தோ அல்லது வரத, அபயமுத்திரை தரித்து புஸ்தகத்தோடு கூடியதாகவோ நினைத்து, முக்கண்ணையுடையவராகவும்

61. மஹாவ்ருஷபத்துடன் கூடியவராயும், ரிஷிக்கூட்டங்களுடன் கூடியவராயும் உள்ள தேவதேவேசனைத் தியானித்து எல்லா கார்யங்களை நிறைவேற்றலாம்.

62. ய என்ற எழுத்தின் முடிவான ர வும், ஹ காரமும், ஆறாவது உயிரெழுத்தான ஊவும், பதினான்காவது உயிரெழுத்தான ஒள வும் ம் என்பதாகவும் கூறலாம். ஹ்ரூம், ஹ்ரௌம்

63. மாறுபட்ட முகத்தையுடையவரான பைரவரை வேறுவிதமாக கூறலாம். மேலே ரேபம் என்பதான ர என்ற எழுத்துடன் கூடியது பைரவ பீஜ எழுத்தாகும். (ப்ரைம்)

64. இந்த மந்திரமானது ஸங்கிராம விஜயம் என்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தின் மஹிமையால் மூவுலகையும் வெற்றிபெற்றவனாகிறான்.

65. மூவுலகிலும் எந்த சிறிய தன்மையான கார்யம் எந்த ஒருவனால் மந்திர ராஜ, மந்திரமின்றி செய்யப்படுகிறதோ, அந்த கார்யம் ஸித்திக்கப்படுவதில்லை.

66. தாமரையிலமர்ந்து, சக்தியுடன் இதயத் தாமரையிலுள்ளவரும், ஒளிதருபவரான பாஸ்கரன் என்றும், கையில் தாமரையையுடையவராயும், நான்கு முகமும், மிகவும் சிவந்த நான்கு சக்திகளால் வ்யாபித்த திசையையுடையவராயும், பாதி உடலுடைய அருணன் மேல் அமர்ந்தவரும், மங்களகரமானவரும், அபயம், வரதம், அக்ஷ்மாலை, கபாலஹஸ்தம் பாசாங்குசம் தரித்தவராயும், க்ரஹக் கூட்டங்களால் நமஸ்கரிக்கப்பட்டவரும், கட்வாங்க ஆயுதமுடையவருமான சூர்யனை நமஸ்கரிக்கவும்.

67. ப்ரும்மமந்திர, அங்கமந்திரங்களை முறைப்படி எடுத்துக்கொள்ளவும். விஸ்தாரம் முதலிய நான்கு சக்திகளை நான்கு முகத்திலும் பூஜிக்க வேண்டும்.

68. ஹ்ருதயம் முதலான மந்திரங்களை ஆக்னேயம் முதலான திசைகளில் போகாங்கமாக பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் நேத்ரமந்திரத்தை பூஜிப்பது கர்பாவரணமாக கூறப்பட்டுள்ளது.

69. அதற்கு வெளியில் தீப்தா முதலிய சக்திகளும் அதற்கும் வெளியில் கிரஹங்களையும் அதனின்றும் வெளியில் முறையாக லோகபாலகர் களையும் பூஜிக்கவும்.

70. விருப்பத்தையடைவதற்கும் சூர்யனை பூஜிக்கலாம். ஹே ப்ராம்மணர்களே! சுருக்கமாக ப்ரத்யங்கிராஸ்த்ர மந்திர முறையை கூறுகிறேன்.

71. எல்லா பக்தியையும் கொடுக்கவல்லதும், எல்லா நோயையும் போக்க கூடியதும் ஜ்வரம், வலிப்பு போன்ற நோய், வைசூரி இவைகளை அழிக்கக் கூடியதும் காசநோயை போக்க கூடியதும்

72. எதிரியின் கார்யத்தாலேற்பட்ட வ்யாதிக்கூட்டத்தை அழிக்கவல்லதும் நான்குவிதமான படையுடன் கூடிய எதிரியை அழிக்கவல்லதும், உயர்ந்ததும்

73. தன்னுடைய படையை காப்பாற்றுவதும் எல்லா கார்யங்களிலும் தகுதித் தன்மை உள்ளதாகவும் இருக்கிறது.

74. பிறகு ஸிம்மவதனே, மஹாவதனே என்றும் மஹாபைரவி, ஸர்வசத்ரு

75. கர்மவித்வம்சினீ பரமந்திரசேதினீ, ஸர்வ பூததமனீ என்றும்

76. ஸர்வபூதாந்பந்த பந்த என்றும்ஸர்வ விக்னாந் சிந்தி சிந்தி என்றும்

77. சர்வதுஷ்டாம் பக்ஷபக்ஷ என்றும்

78. ஜ்வாலாஜிஹ்வே, கராளதம்ஷ்ட்ரே என்றும்

79. ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நம: என்று ஸ்வாஹா என்பதாகவும் ப்ரத்யங்கிராஸ்த்ரமந்திரம் கூறப்பட்டுள்ளது.

79. இந்த ப்ரத்யங்கிராஸ்த்திர மந்திரம் நூறு எழுத்தை உடையதாக கூறப்பட்டுள்ளது. முதலில் உள்ள ஏழு எழுத்து ஹ்ருதயம் என்றும் பதினைந்து எழுத்து சிரஸ்ஸிற்காகவும்

80. அதன்பிறகு பத்து எழுத்து சிகைக் காகவும், கவச மந்திரம் ஏழு எழுத்தாகவும் ஆகும். அவ்வாறே ஏழு எழுத்து நேத்ரமந்திரமும் முப்பத்தி நான்கு எழுத்துக்களால் அஸ்திர மந்திரமும் ஆகும்.

81. பதிமூன்று எழுத்தை உடையது காயத்ரி மந்திரமாயும், ஏழு எழுத்து ஸாவித்ரி என்ற மந்திர வடிவுமாகும். நம: ஸ்வாஹா, வஷட், வெளஷட், ஹும் பட் என்பதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை கூற வேண்டும்.

82. த்யானம்: ஸிம்மம் போன்ற முகம், பயங்கரமான தித்திப்பல், நெருப்பை போன்ற பிரகாசிக்கின்ற மேல் நோக்கிய கேசம், கருப்பு மை போன்ற நிறம், உருண்டையான மூன்றை கண்ணையும்

83. வலது கையில் சூலாயுதம் உடுக்கை யையும் தரித்துக்கொணடும், இடது இரண்டு கையால் முண்டபாதி உடல், தளிரையும் தரித்துக்கொணடும்

84. அட்டஹாஸ சிரிப்பு சத்தங்களால் கர்ஜித்துக்கொணடும் சத்தம் செய்துகொணடும், கருப்பு வஸ்திரம் தரித்துக்கொண்டும் நரம்புடன் கூடிய மாம்ஸத்தை வாயில் வைத்து நடனத்தை செய்பவளுமாக

85. உகந்ததாக முத்துக்களாலான அணிகலன்களை எல்லாமணிந்தவளும் மான்தோலை தரித்திருப்பவளாயும், தேவர்களால் பைரவி என்ற பெயரை உடையவளாக பூஜிக்கப்பட்டு

86. ஒருமைப்பாடுடைய மனதால் தேவியை தியானித்து எல்லா எதிரிகளையும் அழிக்கவும், எல்லா நோய்களையும் அழிக்கவும், பிறரால் ஏவப்பட்ட மந்திரங்களை போக்கவும்,

87. படிப்பில் சிறந்தவனாக விளங்க காரகிலையோ, தாமரைக்கேசங்களாலோ சிறந்த சாதகன் ஹோமம் செய்யக்கடவன்

88. கடம்பபூவின் மொட்டுக்களால் ஹோமம் செய்தால் யக்ஷிணீ தேவதைகள் சித்தியடைகிறார்கள். தினை, வாழை பூவினால், நோயால் பீடிக்கப்பட்டவன் ஹோமம் செய்யவும்.

89. அரளி புஷ்பத்தை நெய், தேன் இவைகளுடன், கருங்காலி முதலான ஸமித்துக்களால் ஹோமம் செய்வதால் விரைவில் ஆரோக்யத்தை உண்டுபண்ணக் கூடியதாக ஆகும்.

90. வெண்கடுகு, முத்து, கொள்ளு இவைகளோடும், பால் பாயாஸம் இவைகளால் ஹோமம் செய்தால் அந்த நிமிடமே பொறுமையுள்ளவனாகிறான்.

91. கருவூமத்தம் புஷ்பம், கருங்காலி சமித்துடனும், கருநீலக்கல், நெய் இவைகளால் ஹோமம் செய்வதால் ஸ்தம்பநாசித்தியும், அபிசாரத்திலிருந்து விடுபட

92. செந்தாமரை புஷ்பம், அதே அளவு செஞ்சந்தனம், காராம்பசு நெய், பால் இவைகளால்

93. பத்தாயிரம் ஆவர்த்திஹோமம் சீக்ரம் விடுவிக்கப்படுகிறான். எருமை நெய் வெள்ளெருக்கு, கழுதைப்பால்

94. செந்தூரப்பொடி, சிகப்பு புஷ்பம், கரிக்கட்டை இவைகளால் ஒரு லக்ஷம் ஆவர்த்தி ஹோமம் செய்வதால் அந்த குலத்தை மேன்மைப்படுத்தியவனாகிறான்.

95. குங்குமப்பூ, கோரோசனை, பருத்திக் கொட்டை, குங்குலியம், மூங்கில் சமித்து இவைகளால் ஹோமம் செய்தால் எதிரிகளின் அழிவு ஏற்படுமென் பதில் சந்தேகமில்லை.

96. வேப்பம்பூ, நெல், வேப்பெண்ணை, வெள்ளையருகின் பால், பாதரஸம் இவைகளை ஹோமம் செய்யவும்.

97. அரசனின் காசநோய் முதலிய நோயைப் போக்கடிக்க மேற்கூறியபடியே ஹோமம் செய்யவும், எண்ணை நெய்யுடன் சேர்த்து, அருஹம்பில்லையும் நெய்யுடன் சேர்த்து

98. வெண்பட்டு, ஹவிஸ், நெற்பொறி, த்ரிமது ரத்துடன் ஹோமம் செய்தால் வயிற்றுவலி சம்பந்த நோய்களை போக்க காரணமாகும். சுக்கு, திப்பிலி, மிளகுகளால்

99. அக்னிஸித்திப்பதற்கு அக்னி பீஜ மந்திரங்களால் ஹோமம் செய்யவும். கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, பால், நெய்

100. தேனினாலும் நேத்ர மந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். விஷக்கடியைப் போக்குவதற்கு மாவிலைகளால் ஹோமம் செய்யவும்.

101. நெய்யினால் பச்சையாக உள்ள மாவிலைகளை ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினால் ருத்ர சாந்தி மந்திரத்தினாலும் எல்லா இடையூறுகலை போக்குவதற்கு ஹோமம் செய்யவும்.

102. துணிமணிகளால் காச நோயைப் போக்குவதற்கு, கடுகுகளால் ஜலதோஷத்தைப் போக்குவதற்கும், பித்த வ்யாதியை போக்க குளுர்ச்சியான சந்தனம் முதலிய பொருட்களால் ஹோமம் செய்யவேண்டும்.

103. மேற்கூறிய பொருட்களை ஆயிரம், பத்தாயிரம், லக்ஷம், மூன்றுலக்ஷம் என்ற எண்ணிக்கை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விருப்பத்தையடையும் முறையாகிற முப்பத்தி மூன்றாவது படலமாகும்.